ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழரின் தொன்மை
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

புதிய சமயங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 ரா.ரமேஷ்குமார்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

ஒரு சந்தேகம்??
 மூர்த்தி

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

View previous topic View next topic Go down

'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by vasudevan31355 on Wed Jan 22, 2014 1:47 pm

நாம் தமிழர்களாய் இருந்தாலும், தமிழ்த் திரைப்படப் பாடல்களை கேட்டு ரசித்தாலும் இசைக்கு மொழி ஒரு தடை இல்லை அல்லவா! தமிழ்த் திரைப் படங்களைப் போல இந்தித் திரைப்படங்களிலும் அருமையான இசை அமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். உதாரணமாக நௌஷாத், ராமச்சந்திரா, எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், லஷ்மிகாந்த் பியாரிலால்,கல்யாண்ஜி ஆனந்த்ஜி, சலீல் சௌத்ரி என்ற அற்புதமான இசையமைப்பாளர்கள் தங்கள் அபாரத் திறமையால் நம் காதுகளுக்கு தேன் பாய்ச்சி இருக்கிறார்கள். பாடகர்களை எடுத்துக் கொண்டால் முகமத் ரபி, கிஷோர் குமார், மன்னாடே, முகேஷ், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, சுரய்யா, ஷம்ஷத் பேகம், நூர்ஜஹான், கீதா தத்  என்ற அற்புதமான குரல்வளம் கொண்ட பாடகர்கள் இன்றும் தங்கள் குரலால் நம்மைக் கட்டி ஆளுகிறார்கள். இத்தகைய பழைய இந்திப் பாடல்களை நாம் பார்த்து அல்லது கேட்டு மகிழும் போது அதன் சுகமே அலாதியாய் இருப்பதை உணரமுடியும். கால இயந்திரத்தில் அந்த பாடல்கள் வெளியான கால கட்டத்திற்கே நாம் பயணிப்பது போன்ற சுகமான அனுபவம் இந்தத் திரியின் மூலம் நமக்குக் கிட்டும் என்பது நிச்சயம்.

அத்தகைய புகழ் பெற்ற இந்தித் திரைப்படப் பாடல்களை இந்தத் திரியில் வீடியோ வடிவில் நாம் காணலாம்.

முதலில் 1973-இல் வெளியாகி இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கிய ராஜ்கபூரின் 'பாபி' திரைப்படத்தில் இருந்து மிகவும் புகழ் பெற்ற இப்பாடலைப் பார்த்து மகிழ்வோம்.
ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா இருவரின் இளமைத் துள்ளலில்  அப்போதைய இளைஞர்களை பைத்தியம் பிடித்து அலையை வைத்த காதல் காவியம் 'பாபி'. இசை ஓவியம். ராஜ்கபூர் அவர்களின் சொந்தக் காவியம். லஷ்மிகாந்த் பியாரிலால் இசையமைப்பில் ஷைலேந்திர சிங் என்ற பாடகர் பாடிய 'Main Shayar To Nahin ... Magar Ae Haseen'  என்ற இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்காதவர்களே அப்போது இல்லை எனலாம்.

இது பற்றிய அன்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.  

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by சின்னக் கண்ணன் on Wed Jan 22, 2014 2:37 pm

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று..ம்ம் தொடர்க உம் தொண்டு..நன்றி வாசு சார்..
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by subasu on Wed Jan 22, 2014 5:36 pm

நன்றி அண்ணா
avatar
subasu
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 57
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by vasudevan31355 on Thu Jan 23, 2014 9:49 am

@subasu wrote:நன்றி அண்ணா

நன்றி சகோதரரே!
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by சின்னக் கண்ணன் on Thu Jan 23, 2014 10:19 am

அந்தக் கால இந்திப் பாடல்கள் என்று பார்த்தால் வரிசையில் நிறைய வருகின்றன..கிஷோர் குமார் - ஜிந்தகி ..யஹ கல் க்யாஹோ.. பாடல்..அப்புறம் நா கோயி உமங்க் ஹை நாகோயி தரங்க் ஹை..பின்... அச்சா து ஹம் சல் தே ஹோ..
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by vasudevan31355 on Thu Jan 23, 2014 10:25 am

அடுத்து 'ஆராதனா' என்ற இமாலயப் புகழ் பெற்ற இந்திப்படப் பாடல் ஒன்றைப் பார்த்து மகிழலாம். 24 அக்டோபர் 1969-இல் வெளிவந்த இந்தப் படம் இசையாலும், அற்புதமான நடிப்பாலும், அருமையான திரைக்கதையாலும், இந்தியாவையே புரட்டிப் போட்டது என்றால் அது மிகையல்ல. 'ஆராதனா' படத்தின் பாடல்கள் கற்பனைக்கும் எட்டா புகழ் பெற்றவை. ராஜேஷ்கன்னா, ஷர்மிளா தாகூர் ஜோடியைப் பற்றி எப்படி சொல்வது? அத்துணைப் பொருத்தம். இந்த ஷர்மிளா தாகூர் யார் தெரியுமா? முன்னாள் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் பட்டோடி நவாப்  அவர்களின் மனைவி. இப்போது இந்தித் திரைப்பட உலகில் டாப் ஸ்டாராக இருக்கும் சைப் அலிகான் இவர்களின் புதல்வர் ஆவார்.சரி! 'ஆராதனா' பாடலுக்கு வருவோம்.

அழகான பச்சைப் பசேலென்ற மலைப் பிரதேசத்தில் நண்பனுடன் ஜீப்பில் பயணித்தபடி ராஜேஷ்கண்ணா பவனி வர, அருகில் அழகு தேவதையாய் ஷர்மிளா தாகூர் ரயிலில் பயணித்து வர, ரயிலுக்கு அருகிலேயே ஜீப்பில் அமர்ந்தபடி ராஜேஷ்கண்ணா ஷர்மிளா தாகூரை  வர்ணித்தபடி தன் காதலைப் பாடல் வடிவில் பாடி வர, ஜீப்  ஒட்டும் நண்பன் நண்பனின் காதல் பாடலுக்குக்கு ஏற்றவாறு மவுத் ஆர்கன் மூலம் நயமாக இசை தொடுக்க, ராஜேஷ்கண்ணா பாடும் பாடலையும், அவரின் குறும்புகளையும் ஷர்மிளா தாகூர் வெகு அழகான குறும்பும், காதலும் கொப்பளிக்கும் முக பாவங்களுடன் எதிர் கொள்ளும் அழகு ஒன்றிற்காகவே இந்தப் பாடலை ஆயிரம் முறை பார்க்கலாம்.

புகழ் பெற்ற இசை அமைப்பாளர் எஸ்.டி.பர்மன் இசை அமைப்பில், கிஷோர் குமார் அவர்களின் கிறங்க வைக்கும் குரலில் நம் நாடி நரம்புகளையெல்லாம் குளிர்விக்கும் பாடல். இந்தப் பாடலைக் காணும் போது ஏதோ நாமே ஒரு மலைப் பிரதேசத்திற்கு சென்று வந்தது போல ஒரு உணர்வு. உடல், உள்ளம் அனைத்தும் குளிர்ந்து நம் மனம் லேசாகி சந்தோஷக் கடலில் மிதப்பது போன்ற உணர்வை இந்தப் பாடல் தருவதனால்தான் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்ததோ! இன்று வரை அல்ல. உலகம் உள்ள மட்டும் இந்தப் பாடலின் புகழ் அழியாது.

நீங்களும் பார்த்து இன்புறுங்களேன்.

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by vasudevan31355 on Thu Jan 23, 2014 4:55 pm

நன்றி சின்னக் கண்ணன் சார்! அனைத்து சிறப்பான பாடல்களையும் நாம் கண்டிப்பாக கண்டு மகிழலாம்.
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by M.M.SENTHIL on Thu Jan 23, 2014 5:38 pm

 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by M.M.SENTHIL on Thu Jan 23, 2014 5:38 pm

 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by vasudevan31355 on Fri Jan 24, 2014 9:31 am

ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும், ஒரு பாடகி எப்படிப் பாட வேண்டும், ஒரு இசையமைப்பாளர் எப்படி தன் திறமையால் உலகையே கட்டிப் போட வேண்டும் என்பதற்கு உலகிலேயே தலை சிறந்த பாடலாக இந்தப் பாடலைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன். உலகில் நான் கேட்ட பலமொழிப் பாடல்களில் இந்தப் பாடல் ஒன்றைத்தான் நான் எனக்குப் பிடித்த முதல் பாடலாகக் கருதுகிறேன். என் நாடி நரம்பு, ஊன், உயிரெல்லாம் கலந்து என் இரத்த அணுக்களோடு கலந்து போன பாடல். இரவும், பகலும் இந்த பாடல் என்னை பாடுபடுத்தி வருவதைப் போல வேறு ஒரு பாடல் என்னை தொந்தரவு செய்ததில்லை.

இசைக்குயில் லதாவின் குரல் வளத்தை  சொல்வதா...

பாடலில் அவர் கொடுக்கும் ஏற்ற இறக்கங்களை சொல்வதா...

நம் உணர்வுகளை நம் எண்ணங்கள் யாவையும் மறக்கடித்து நம் கவனம் முழுதும் இப்பாடலில் செல்ல காரணமாய் இருந்த இசை அமைப்பாளர் சலீல் சௌத்ரியின் இசை அமைப்பை சொல்வதா...

அமைதியான சூழ்நிலையில் அழகு தேவதையாக சாதனா அமைதியாக புன்னகைத்தபடியே இப்பாடலுக்கு நடிப்பதை சொல்வதா...

இந்தப் பாடலைத் தவிர உலகில் வேறு இன்பம் எதுவும் இல்லை (நடிகர் திலகத்தை தவிர) என்பது போல அவ்வளவு அழகாக இயக்கிய புகழ் பெற்ற இயக்குனர் பிமல் ராய் அவர்களின் திறமையைப் புகழ்வதா... (சிறந்த இயக்குனருக்கான பிலிம் பேர் அவார்ட்)

இந்தப் பாடல் நம்மை படுத்தும் பாட்டை நாம் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியுமா?!

1960-இல் வெளி வந்த 'பராக்' (parakh) என்ற இந்திப் படத்தில் வரும் பாடல்தான் இது. இப்பாடலைப் பற்றி லதா ஒரு முறை பேட்டியில் சொன்னது.

"பிமல் ராய் இப்படத்தை முதலில் பாடல்கள் இல்லாமல்தான் படமாக்க விரும்பினார். சலீல் சௌத்ரியின் திரைக்கதைக்கு ஷைலேந்திரா வசனங்கள் எழுதினார். ஷைலேந்திரா வசனம் எழுதிய ஒரே படம்) திரைக்கதையும், வசனங்களும் மிக நன்றாக அமைந்தது. அதே சமயம் இந்த திரைக்கதைக்கு பாடல்கள் அவசியம் என்பதும் புரிந்தது. சலீலும், ஷைலேந்திராவும் பிமல் ராயிடம் பேசி இப்படத்திற்கு பாடல்கள் அவசியம் என்று அவர் மனத்தைக் கரைத்தார்கள். பிமல் ராயும் அவர்கள் விருப்பத்திற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் நேரம் மிகக் குறைவு. ஒரே நாளில் ஷைலேந்திரா முன்னமேயே எழுதி வைத்திருந்த பாடல்கள் இப்படத்திற்காக உபயோகப் படுத்தப் பட்டன. முதலில் வங்காளத்தில் இப்பாடலும், பின் இந்தியிலும் பாடி பதிவு செய்யப் பட்டது. ஒரிஜினல் வங்காளத்தை விடவும் இந்தி வார்த்தைகளை மிக அழகாகக் கோர்த்து காலத்தால் அழிக்க முடியாத பாடலை எழுதித் தந்தார் ஷைலேந்திரா"

சிறந்த இசையமைப்பிற்காக பிலிம் பேர் அவார்ட் (சலீல் சௌத்ரி) போட்டி, சிறந்த படத்திற்கான பிலிம் பேர் அவார்ட் போட்டி என்று பல சிறப்புகளைக் கொண்ட படம்  'பராக்'.

இப்போது உலகையே மறந்து நம்மையும் மெய் மறக்கச் செய்யும் இப்பாடலைப் பார்த்து கேட்டு மகிழுங்கள். நிச்சயமாகச் சொல்கிறேன். இப்பாடலை ஒரு முறை பார்த்து கேட்டு விட்டீர்களானால் நிச்சயம் மறுமுறை உங்களால் கேட்காமல் இருக்க இயலாது. இசைக்கு இருக்கும் சக்தியை நீங்கள் முழுதுமாக இப்பாடலில் உணர முடியும்.

என் வாழ்நாளிலேயே என் மனங்கவர்ந்த முத்தான முதல் பாடல். முதலில் என் விருப்பமாக. பிறகு உங்கள் விருப்பமாக.

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by பார்த்திபன் on Fri Jan 24, 2014 12:32 pm

@vasudevan31355 wrote:

முதலில் 1973-இல் வெளியாகி இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கிய ராஜ்கபூரின் 'பாபி' திரைப்படத்தில் இருந்து மிகவும் புகழ் பெற்ற இப்பாடலைப் பார்த்து மகிழ்வோம்.
ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா இருவரின் இளமைத் துள்ளலில்  அப்போதைய இளைஞர்களை பைத்தியம் பிடித்து அலையை வைத்த காதல் காவியம் 'பாபி'. இசை ஓவியம். ராஜ்கபூர் அவர்களின் சொந்தக் காவியம். லஷ்மிகாந்த் பியாரிலால் இசையமைப்பில் ஷைலேந்திர சிங் என்ற பாடகர் பாடிய 'Main Shayar To Nahin ... Magar Ae Haseen'  என்ற இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்காதவர்களே அப்போது இல்லை எனலாம்.

இது பற்றிய அன்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.  


இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. முன்பே இப்பாடலைக் கேட்ட ஞாபகம் உண்டு. ரிஷி கபூரின் முகபாவங்களும் ஸ்டைலும் அருமை. நன்றி பகிர்ந்தமைக்கு.
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by veeyaar on Fri Jan 24, 2014 4:38 pm

வாசு சார்
ஈகரையை விட்டு ஒரு அங்குலம் கூட நகர விடாத அளவிற்கு நம்மையெல்லாம் கட்டிப் போடும் வித்தை தங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகி விட்டது. ஹிந்திப் பாட்டுத் திரியை விட்டு நகர முடியுமா என்ன. ஊனோடும் உயிரோடும் சிறு வயது முதலே கலந்து விட்ட இந்த பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தாலே போதுமே,, சாப்பாடு நித்திரை எல்லாம் மறந்தும் பறந்தும் போகுமே...

தொடருங்கள். தங்களைப் பாராட்டத் தோன்றுகிறது. ஆனால் எப்படி ... தெரியவில்லையே...?

எனக்குத் தெரிந்த வழி ஒன்று.. தாங்கள் கொடுத்தால் பதிலுக்கு நான் ஒரு பாட்டைத் தரவேண்டும்..

முயற்சிக்கிறேன்.

மனம் என்னும் மேடை மேலே ... வேதா அவர்களின் இசையில் டி.எம்.எஸ்.சுசீலா குரல்களில் கண்ணதாசனின் வரிகளில் நம்மையெல்லாம் கட்டிப் போட்ட பாடல். என்னதான் இந்தி மெட்டாக இருந்தாலும் அதை வேதா தரும் போது அதனுடைய சிறப்பே அலாதியானது. அந்த வகையில் இந்தப் பாடலின் மூலப் பாடலை இங்கு காண்போமா

ஜப் ப்யார் கிஸி ஸே ஹோதா ஹை என்ற படத்தில் வஹீதா ரஹ்மான் தேவ் ஆனந்த் நடித்த இப்பாடலை இன்னும் நூறாண்டுகள் கழித்துக் கேட்டாலும் அலுக்காது.

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by veeyaar on Fri Jan 24, 2014 4:47 pm

ஏராளமான பாடல்கள் எதைச் சொல்வது.. இந்த குழப்பத்தை மீறி சட்டென்று நம் நினைவுக்கு வரும் ஒரு சில பாடல்களில் அனாரி படப்பாடல்கள் நிச்சயம் இடம் பிடிக்கும். அதுவும் இந்தப் பாடல் நெஞ்சை உருக்கும் வகையில் லதா அவர்கள் பாடியிருப்பார். வாசு சொன்னது போல் என்றென்றும் நினைவில் நிலைத்து விட்ட பாடல்களில் இதற்குத் தனியிடம் உண்டு

இசை சங்கர் ஜெய்கிஷன்
பாடல்கள் ஹர்ஷத் ஜெய்புரி மற்றும் ஷைலேந்திரா
பாடகர்கள் . லதா மங்கேஷ்கர், முகேஷ் மற்றும் மன்னா டே


avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by vasudevan31355 on Sat Jan 25, 2014 3:57 pm

அன்பு வீயார் சார்,

நேற்று இரவு என் தூக்கத்தைக் கெடுத்து விட்டர்களே! 'அனாரி' படத்தின் 'தேரா ஜானா...தில் கி அருமானோ கா லுட் ஜானா' என்று நீங்கள் பதிந்துள்ள அருமையான பாடலைத்தான் சொல்கிறேன். நூடனின் சோகமான நடிப்பு நெஞ்சை விட்டு அகல மறுப்பது ஒரு புறம் இருக்கட்டும். லதாஜியின் அந்த காந்தக் குரல். வார்த்தைகளே இல்லை பாராட்ட. அதுவும் 'கோயி தேக்கே' என்று அவர் ஒரு நீண்ட இழு இழுப்பாரே. என்னத்தச் சொல்ல! சங்கர் ஜெய்கிஷனின் இசை அசத்தலான அசத்தல். ராஜ்கபூர் இந்தப் படத்தின் நாயகன்.

தங்களுக்குத் தெரியாத இந்திப்பாடல்களே இருக்க முடியாது என்பதை அறிந்தவன் நான். தினமும் ஈகரை அன்பர்களின் தூக்கத்தைக் கெடுங்கள் என்பதே நான் தங்களிடம் வேண்டுவது.

அருமையான பகிர்தலுக்கும், புரிதலுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.


Last edited by vasudevan31355 on Sat Jan 25, 2014 4:20 pm; edited 2 times in total
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by vasudevan31355 on Sat Jan 25, 2014 4:19 pm

அடுத்து 'யாதோன் கி பாரத்' திரைப்படத்திலிருந்து நம்மை சொக்க வைக்கும் பாடல். 1973-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படமும் சக்கை போடு போட்டது. தர்மேந்திரா, விஜய் அராரோ, தாரிக், ஜீனத் அமன், நீத்து சிங், அஜித் கான் என்று அனைவரும் பட்டை கிளப்பிய படம். படத்துக்கு இசை தி கிரேட் ஆர்.டி.பரமன். நசீர் ஹுசைன் தயாரித்து இயக்கிய படம். பாடல்கள் சூப்பரோ சூப்பர் ஹிட். இந்தப் படம் எம்ஜியார் இரட்டை வேடத்தில் நடித்து 'நாளை நமதே' என்று தமிழில் வெளி வந்தது. குடும்பத்தை ஒன்று சேர்க்கும் பாடல் வைக்கும் பாணி இப்படத்தின் மூலம் இந்தியத் திரையுலகின் மூலை முடுக்கெல்லாம் பரவியது.தாரிக்கின் அருமையான கிடார் வாசிப்பின் நடிப்பைக் கொண்ட படம்.

இளமை கொஞ்சும் ஜீனத் அமனும், விஜய் அரோராவும் இணைந்து கலக்கிய இனிமை ததும்பும் பாடல். பட்டி தொட்டியெல்லாம் எதிரொலித்த பாடல்.

'சுரா லியா ஹே தும்னே ஜோ தில் கோ' என்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல். முகமது ரபியும், ஆஷா போனஸ்லேவும் தங்கள் அமுதக் குரலால் நம் செவிகளைக் குளிர வைக்கும் பாடல். பார்த்து மகிழுங்கள்.

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by vasudevan31355 on Mon Jan 27, 2014 9:43 am

'ஆப் கி கஸம்' படத்திலிருந்து 'ஜெய் ஜெய் ஷிவ் ஷங்கர்' என்று தொடங்கும் ஒரு உற்சாகமான பாடல். சஞ்சீவ் குமார், ராஜேஷ் கண்ணா, மும்தாஜ், ரஞ்சித், அஸ்ரானி ஆகியோர் நடித்த இப்படத்திற்கு இசை 'அதிரடி மன்னர்' ராகுல் தேவ் பரமன். ராஜேஷ் கண்ணாவும், மும்தாஜும் குதூகலமாக குழுவினருடன் ஆடிப் பாடும் இப்பாடல் அப்போது மிகவும் புகழ் பெற்ற பாடலாகும். இப்பாடலைக் கேட்ட மாத்திரத்தில் எழுந்து நம்மை ஆடச் செய்யுமளவிற்கு அப்படி ஒரு உற்சாகமான பாடல். 1974-இல் வெளிவந்த இப்படம் பாடல்களுக்காகவே நன்றாக ஓடியது. மும்தாஜின் மயக்கும் பேரழகில், ராஜேஷ் கண்ணாவுக்கே உரிய தனித்துவ ஸ்டைலில் இப்பாடல் நம் மனதில் நிரந்தரமாகக் குடி கொண்டதில் வியப்பென்ன!'ஜெய் ஜெய் ஷிவ் ஷங்கர்'

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by S.VINOD on Mon Jan 27, 2014 1:14 pm

இனிய நண்பர் வாசுதேவன் சார்
இனிமையான பாடல்கள் .கண்ணுக்கும் செவிக்கும்விருந்து .

நன்றி நண்பரே
avatar
S.VINOD
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 51
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by S.VINOD on Mon Jan 27, 2014 1:15 pm

avatar
S.VINOD
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 51
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by vasudevan31355 on Tue Jan 28, 2014 8:04 am

வினோத் சார்,

தங்களுக்கு மட்டுமல்ல பல பேருக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்த ஒன்று. அருமையான பாடலை பதிந்ததற்கு நன்றி.
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by vasudevan31355 on Tue Jan 28, 2014 8:18 am

1974-ஆம் ஆண்டு வெளிவந்த 'ஹாத் கி சஃபய்' என்ற படத்தில் இடம் பெற்ற மிக மிக பிரபலமான ஒரு பாடல். வினோத் கண்ணா, ரந்தீர்கபூர், ஹேமாமாலினி, சிமி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இசை கல்யாண்ஜி ஆனந்த்ஜி இரட்டையர்கள்.இப்படத்தில் வினோத் கன்னாவிற்கும், சிமி கர்வாலுக்கும் அற்புதமான டூயட் ஒன்று உண்டு. 'வாதா கரு லே சாஜ்னா' என்று தொடங்கும் இப்பாடலின் இனிமையையும், இசையமைப்பையும் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாது. முகமது ரஃபியும், லதாஜியும் இப்பாடலில் புரியும் விந்தைகளை எப்படி புகழ்வது?

பாடலின் இடையே ஒலிக்கும் கிடாரின் இனிமையை நாள் முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கலாம். நீங்களும் கேளுங்கள்.  

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by vasudevan31355 on Wed Jan 29, 2014 10:55 am

அடுத்து மிகவும் புகழ் பெற்ற 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' படத்திலிருந்து ஒரு சூப்பர் டூப்பர் பாடல். 1971-ஆம் ஆண்டுகளில் ஹிப்பிஸ் ஸ்டைல் உலகமெங்கும் தலை விரித்தாடியது. ஆண்கள் பெண்கள் போல கூந்தல் வளர்த்து கழுத்தில் மாலைகள் அணிந்து கொண்டு நீண்ட பெல்பாட்டம் அல்லது பைஜாமா பனியன் சகிதம் சிகரெட், கஞ்சா புகைத்துக் கொண்டு ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் ஒன்றாக பாடி ஆடிக் கொண்டு, அதுவும் அவர்களது தாரக மந்திரம் 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' சுலோகத்தை உச்சரித்துக் கொண்டு தன்னை மறந்த நிலையில் போதைக்கு அடிமையாகி நாடோடி போல ஆங்காங்கே சுற்றித் திரியும் ஹிப்பியிசம் உலகையே குலுங்க வைத்தது. அதைத் தழுவி இந்தியின் ஸ்டைல் மன்னன் தேவ் ஆனந்த்  'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' என்ற படத்தை எடுத்து மாபெரும் வெற்றி கண்டார். இந்தித் திரை உலகையே புரட்டிப் போட்ட இப்படத்தில் தேவ் ஆனந்துடன் ஜீனத் அமன், மும்தாஜ் இணைந்து நடித்திருந்தனர். சிறு வயதில் காணாமல் போன அன்புத் தங்கை ஹிப்பி கூட்டத்தில் சேர்ந்து வளர்கிறாள். போதைகளுக்கு அடிமையாகி மனம் போன போக்கில் சுற்றுகிறாள். பருவ வயது அடைந்த அவளைத் தேடி அண்ணன் புறப்பட்டு அவளை கண்டு பிடித்து அவள் வாழ்வை சீர்திருத்தி அவளை நல்வழிப்படுத்துகிறான். இதுதான் கதை. தேவ் ஆனந்த் தனக்கே உரித்தான ஸ்டைலில் பின்னி எடுத்திருந்தார். ஜீனத் ஹிப்பி பெண்ணாகவே வாழ்ந்து காட்டினார். பாடல்கள் மிக மிக பிரசித்தம்.

ஜீனத் அமன் படத்தில் ஹிப்பிகளுடன் சேர்ந்து பாடுவதாக வரும் 'தம்மரே தம்' பாடல் அதகளம் செய்தது. இப்பாடலை முணுமுணுக்காதவர்களே அப்போது இல்லை எனலாம். ஆர்.டி.பரமன் இசையில் பாடல்கள் பட்டை கிளப்பின. இப்பாடலை ஆஷா போன்ஸ்லேவும், நம்மூர் உஷா உதூப்பும் இணைந்து எங்கேயோ கொண்டு சென்று விட்டனர். எப்போது கேட்டாலும் தாளம் போட்டு நம்மை இன்ப உலகத்திற்கு அழைத்துச் செல்லும் பாடல். பாருங்கள்.

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by veeyaar on Thu Jan 30, 2014 10:15 am

வாசு சார்
ஏற்கெனவே கூறியது போல், ஹிந்திப் பாடலுக்குள் நுழைந்து விட்டால் உலகமே மறந்து போகும், அப்படிப்பட்ட பாடல்களைத் தேர்ந்தெடுத்து இங்கே பதிவிடுவதன் மூலம் நம் அனைவரையும் அந்நாளைக்கே அழைத்துச் செல்கிறீர்கள்.

இதோ என் பங்கிற்கு

தேரே மேரே சப்னே திரைப்படத்திலிருந்து சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்

ஹே மெய்னே கஸம் .. கேட்டுக் கொண்டே இருக்கலாம்..

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by vasudevan31355 on Thu Jan 30, 2014 10:19 am

ஆஹா! அருமை வீயார் சார்! என்ன ஒரு பாடல். என்னுடைய மனம் கவர்ந்த மும்தாஜ் மற்றும் சற்றே வயது முதிர்ந்த தேவ் ஆனந்தும் இணைந்து கலக்கும் பாடல். லதாவும் கிஷோரும் பட்டை கிளப்பி இருப்பார்கள். அதுவும் லி... லி....என்று இருவரும் இழுக்கும் போது சொர்க்கத்திலே இருப்பது போன்ற உணர்வு.
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by S.VINOD on Thu Jan 30, 2014 10:31 am

avatar
S.VINOD
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 51
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by vasudevan31355 on Thu Jan 30, 2014 11:25 am

1977-இல் வெளிவந்த Hum Kisi Se Kum Nahin படத்திர்லிருந்து ஒரு அற்புதமான பாடல். ஆர்.டி.பர்மன் இசையில் இன்னுமொரு ஹிட் படம். ரிஷி கபூர், காஜல் கிரண், டாரிக் கான், அம்ஜத் கான், ஜீனத் அமன் ஆகியோர் நடித்த இப்படம் இசையில் மட்டுமல்லாது ஓட்டத்திலும் பிய்த்து உதறியது. ஒவ்வொரு பாடலும் மணி மணியான பாடல்கள். 'கியா ஹூவா தேரா வாதா' என்று தொடங்கும் இப்பாடல் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றது. முகமத் ரபியும், சுஷ்மா ஷேர்ஸ்டாவும் இணைந்து பாடும் இப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனது. பின்னாளில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழ்ப் படமான 'காளி கோயில் கபாலி' என்ற படத்தில் 'வெண்ணிலா வெள்ளித் தட்டு' என்று இப்பாடல் தமிழிலும் ஒலித்தது. டாரிக் கான் மேடையில் காஜல் தன் சிறு வயது அனுபவங்களைப் பாட காஜல் அதைக் கேட்டு அதிர்ச்சியடைவது போன்ற பாடல். காஜலுடன் ரிஷி கபூரும் இப்பாடலில் இணைந்து நடித்திருப்பார். என்றும் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடலின் டியூன் அபாரமானது. இப்போது பார்த்து கேட்டு ரசித்து மகிழலாமா?

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum