ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குண்டலினி என்றால் என்ன?

View previous topic View next topic Go down

குண்டலினி என்றால் என்ன?

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sun Jan 26, 2014 9:00 pm

குண்டலினி ஒரு நுட்பமான ப்ராண சக்தி. இது கண்ணினால் பார்க்கக் கூடிய உடலுறுப்பு அல்ல.
குண்டலினி சூட்சும பௌதிக சக்தி.

இதன் உறைவிடம் முதுகில் உள்ள தண்டுவடம் என்கின்றனர் சில யோகிகள் தொப்புளுக்கும், தண்டுவட ( முதுகெலும்பு ) அடிபாகத்துக்கும் நடுவே உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
குண்டலினி எல்லோருக்கும் கைவசப்படும் மாந்திரீகம் அல்ல. அது ஒரு ப்ராண சக்தி.
யோகிகள் முதுகெலும்பில் ( தண்டுவடத்தில் ) 3 'நாடிகள்' ( பாதைகள் ) உள்ளன. இவை - சூர்ய, சந்திர, சூட்சும நாடிகள். குண்டலினி சக்தி இந்த 3 நாடிகளில் மூலமாக இயங்குகிறது என்கின்றனர். நாடிகளின் வழியே பிராண வாயு இயங்குகிறது.

குண்டலினியை எழுப்பினால், அது கீழ் மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு தலையில் உள்ள உச்சி மூலாதாரத்தை அடைந்து விட்டால் பல சித்துக்கள், ஆற்றல்கள் கைவசப்படும் என்று யோகிகள் நம்புகின்றனர்.

குண்டலினி மேலெழும்பும் பாதைகள் :

உசுப்பி எழுப்பப்பட்ட குண்டலினி, சூட்சும நாடி மூலம் அல்லது முதுகெலும்பு மையப் பகுதியின் வழியே மூளையை அடைகிறது. இங்கு எது பரம்பொருளுடன் சேர்கிறது. ஒரே தடவையாக உடனேயே குண்டலினி கீழிருந்து மேல் தாவி விடாது. வழியில் ஒவ்வொன்றாக 6 சக்கரங்கள் உள்ளன. இவற்றை கடக்க வேண்டும். முன்பே இரண்டு மூலாதாரங்கள் கூறப்பட்டன. கீழ் மூலாதாரத்திலிருந்து எழுப்பப்பட்ட குண்டலினி, ஆறு 'சக்கரங்கள்' வழியே மேல் நோக்கி பயணிக்கிறது. இந்த 'சக்கரங்கள்' தாமரை மலராக கருதப்படுகின்றன. மேலெழும்பும் பாதையிலுள்ள ஒவ்வொரு தாமரையும், ஒரு ஆன்மீக படியை தாண்டி வருவதை குறிக்கும். ஒரு அடையாளமாக, கற்பனையில் உருவகப்படுத்தப்படுகின்றன.

ஆறு மலர்கள் :

அடி மூலாதாரத்திலிருப்பது (தண்டுவடத்தின் அடிபாகம்) சிகப்பு நிற தாமரை, சிகப்பு வண்ணமாக, 4 இதழ்கள் உடையதாக நினைக்கப்படுகிறது. இந்த நிலையை அடைந்த மனிதருக்கு ஞாபக சக்தியும், உள்மனதை கட்டுப்படுத்தும் திறனும் கிட்டும். இந்த நிலை அடைந்தவுடன் மொட்டு போலிருக்கும் தாமரை மலரும்.
இரண்டாவது சக்கரத்தில் 6 இதழ்கள் உள்ள குங்கும சிவப்பு மலர். இங்கு இருப்பது மனிதரின் மிருக வெறி - பிறப்புறுப்புகளில் உறைவது. இந்த 'வெறியை' ஆன்மிக சக்தியாக மாற்றும் சக்தி, இரண்டாவது சக்கரத்தை அடைந்தவர்களுக்கு ஏற்படும்.
தொப்புளில் இருப்பது மூன்றாவது சக்கரம். இது தாமரை மிகுந்த சிவப்பு வண்ணத்துடன் 10 இதழ்களாக இருக்கும். இந்த இடம் வந்தவுடன் உலகின் இன்பங்கள், லௌகிக சாதனைகள் நமக்கு முழுதிருப்தியை தராது என்ற உண்மை புலப்படும். இந்த மூன்றாவது இடத்தில் தான் குண்டலினி சாதகர்கள் கவனமாக இருக்க வேண்டும். இங்கு கீழே தள்ளும் வாயு பலமாக இருப்பதால் குண்டலினி முறைகளை சரியாக கடைப்பிடிக்காதவர்கள் கீழே தள்ளப்படுவார்கள். இதற்கு மேல் 4 வது கட்டத்தை அடைந்து விட்டால் இந்த பயம் இல்லை. அதன் பிறகு மேல்நோக்கி பயணம் தான்.
இதயமே நான்காவது சக்கரம். 12 இதழ்கள் உள்ள நீல நிற தாமரை இதன் அடையாளம். இந்த நிலையில் அமைதி, உலகத்தில் உள்ள அனைவரின் மேல் அன்பு இவை ஏற்படும்.
ஐந்தாவது சக்கரம் கழுத்து 16 இதழ்களுடைய பழுப்பு தாமரை இதன் சின்னம். அழகு, நல்லகுணம், உண்மை இந்த குணங்கள் இந்த இடத்தை அடைந்த யோகிகளுக்கு உண்டாகும். இந்த நிலை தூய்மையான நிலை.
ஆறாவது நிலை, கண் புருவங்கள். இந்த சக்கர தாமரை 2 இதழ்கள் உள்ள வெண் தாமரை. இங்கு யோகிகளுக்கு முழுமையான ஞானம் ஏற்படும்.
இந்த ஆறு சக்கரங்களுக்கு அப்பால் உள்ளது, முன்பு சொன்ன "சஹஸ்ராரம்" என்ற மூலாதாரம். சஹஸ்ராரம் என்றால் ஆயிரம் தாமரைகள், தூய்மையான, சிறந்த வெண்மை நிறத்தை உடையவை. இங்கு தான் குண்டலினி பரம் பொருளுடன் சேர்ந்து சமாதியடைகிறது. ஒவ்வொரு யோகியின் லட்சியம் இந்த சமாதி தான். இந்த நிலை அனுபவிக்க வேண்டியது. வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

குண்டலினியை  யோகக்கலையை மட்டும் அப்பியாசித்து சஹாஸ்ராரத்திற்கு ஏற்றி விட முடியாது ! இரண்டாவது மூன்றாவது சக்கரத்தில் குண்டலினி இருக்கும்போது தனக்குள் இருக்கும் பலகீனங்கள் பூதாகரமாக பொங்கி வந்ததை அடக்க முடியாமல் அவைகளுடன் போராடி சிராய்ப்பதும் கீழே விழுவதும் (இங்கு கீழே தள்ளும் வாயு பலமாக இருப்பதால் குண்டலினி முறைகளை சரியாக கடைப்பிடிக்காதவர்கள் கீழே தள்ளப்படுவார்கள். ) - சரியாக கடைபிடித்தாலும் கீழே விழாமல் இருக்கமுடியாது எதிலே கீழே விழுகிறோமோ அது நமக்குள் இருக்கும் பாவப்பதிவு - எனவே அதற்காக கடவுளிடம் தாழ்மையோடு பிராத்தித்து நம்மை உணர்ந்து தெளிந்தால் மட்டுமே அடுத்த முன்னேற்றம் சத்தியம் !

இரண்டாம் மூன்றாம் நிலையை கடருவதற்கு நமக்கு உண்டாகும் அனுபவங்களே ஞானமாகவும் பரிணமிக்கும் !

முக்கியமாக கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது என்பது இதைதான் ! இந்த நிலையில் தான் நமது அஹம்பாவம் எல்லாம் ஒடுங்கி தாழ்மை - கடவுளிடம் சரணடைதல் வந்தாகவேண்டும் ! அத்வைதமும் துவைதமும் இங்கு மத்வத்திற்கு வந்தாகவேண்டும்

முக்கியமாக மூன்றாவது சக்கரத்தில் ஆவி மண்டல சக்திகளுடன் இடை பட்டாக வேண்டும் ! அப்போது கடவுள் ; தேவர்கள் மற்றும் அசுரர்கள் பற்றிய அனுபவத்தெளிவு உண்டாகும் !


மனித சரீரத்தில் உள்ள பலகீனங்கள் அல்லது இச்சைகள் ஒவ்வொன்றிற்கும் அதை துண்டி விடும் ஒரு ஆவி மண்டல சக்தி பின்புலத்தில் இருப்பதை கண்டறிவதும் - ஆவி மண்டல சக்திகளை இனம் கண்டு பிரித்தரிவதுமான தெளிவு உண்டாகும்

நம்மை விட உயர்ந்த ஆற்றலுள்ள ஆவி மண்டல சக்திகள் அனைத்தையும் கடவுள் என்று எடுத்துக்கொண்டு ; அதற்கு அடிமையாகும் பலரை உணரமுடியும் ! அல்லது இவைகளில் ஒன்றை கண்டு விட்டு கடவுளைக்கண்டு விட்ட மாகா பெரிய ஆள் நான் என அலட்டித்திரியும் சிலரையும் நாம் காண முடியும் ! சில சித்துக்களை கைவல்யப்படுத்திக்கொண்டு பொன் பொருள் கூட்டம் சேர்த்துக்கொண்டு முன்னேறாமல் போன பிரபலங்களையும் காண முடியும் !

இவை எல்லாவற்றையும் தெளிந்து தன்னை தெளிந்து தனது பலகீனங்களை கடந்து சத்வத்தில் நிலைக்கும் போது மட்டுமே நான்காம் நிலைக்கு செல்லமுடியும் ! கடவுள் ; தேவர்கள் ; அசுரர்கள் ; மதங்கள் மற்றும் வேதங்கள் பற்றிய தெளிவும் சரீரத்திற்கு சற்குரு சிவன் மற்றும் ஆத்மாவிற்கு சற்குரு நாரயனனைப்பற்றிய தெளிவு கிடைக்கும்

இந்தப்படித்தரங்களில் போதிய முன்னேற்றமில்லாமல் இரண்டாம் நிலையைக்கடக்காதவர்கள் பலர் ஏதாவது ஒரு சித்தரிடம் நின்று கொண்டு அல்லது குருவிடம் நின்று கொண்டு அல்லது ஒரு மதத்தில் நின்று கொண்டு அவர்கள் அடைந்த அனுபவங்களில் உண்டான உபதேசங்கள் அல்லது பாடல்களை நுனிப்புல் மேய்ந்து கொண்டு அவைகளை உணராமலேயே உணர்ந்து விட்டதாக மனப்பாடம் செய்து ஒப்பித்துக்கொண்டு காலம் கடத்துகிறார்கள் ! அதில் பெரிய ஆபத்து என்னவென்றால் எல்லாவற்றையும் தெளிந்து கடவுளை நெருங்கி விட்டதாக மாயத்திற்குள் விழுந்து கிடப்பதுதான் !

தங்களுக்கு தெரிந்ததை அலட்டித்திரிவதில் அவர்களுக்குள்ளிருந்து பொங்கும் ஆர்வம் மாற்று கருத்துகளை உள்வாங்குவதை தடை செய்து விடுகிறது ! இந்த மாயை அவர்கள் அடுத்த படியை அடையாதபடி கட்டி வைத்து விடுகிறது !!  

இதற்கு ஒரே தீர்வு - வழி - விசாரம் செய்து கொண்டிருப்பது ! வள்ளலார் சுட்டிய இறுதி கட்டளை ! நான் ஆண்டவரோடு மீண்டும் வரும் வரை விசாரம் செய்து கொண்டிருங்கள் என்பதுதான் !

ஆன்மீக வட்டாரத்தில் யாராவது மாற்றுக்கருத்துகளை முன் வைத்தால் அதை முதலாவது கேட்டுக்கொள்வது ! நமக்கு தெரிந்ததை தவிர மற்ற விசயங்களுக்கு  காதை அடைத்துக்கொள்ளாமல் அவைகளை கேட்டு வைத்துக்கொள்வது . மெதுவாக அவைகளுடன் விசாரம் செய்வது ! இதுவே ஞானப்பெருமை என்ற மாயையை கடரும் வழி !!
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: குண்டலினி என்றால் என்ன?

Post by ayyasamy ram on Mon Jan 27, 2014 4:47 am

-
மன நிம்மதி எங்கு கிடைக்கிறதோ அங்கு
மனம் லயிக்கிறது...
-
குண்டலினி எழுப்புவது என்பது எல்லாம்
தகுந்த குரு இல்லாமல் தானே செய்ய
முயற்சிக்க கூடாது...
அது விபரீதத்தில் முடியும்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32475
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: குண்டலினி என்றால் என்ன?

Post by ayyasamy ram on Mon Jan 27, 2014 4:49 am

வாழ்வெங்கும் நிம்மதியுடன் வாழும் மனிதர் இவர்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32475
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: குண்டலினி என்றால் என்ன?

Post by T.N.Balasubramanian on Mon Jan 27, 2014 4:16 pm

நல்ல பயனுள்ள பதிவு கிருபா . புரியும்படியான தகவல்கள்.  நன்றி  நன்றி 

A.Ram கூறியபடி தேர்ந்த குரு அவசியம். நன்றி 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: குண்டலினி என்றால் என்ன?

Post by ராஜா on Mon Jan 27, 2014 4:34 pm

@ayyasamy ram wrote:குண்டலினி எழுப்புவது என்பது எல்லாம் தகுந்த குரு இல்லாமல் தானே செய்ய
முயற்சிக்க கூடாது...அது விபரீதத்தில் முடியும்...

பெருசா ஒன்னும் விபரீதம் ஏற்படாது , புன்னகைஸ்வாதிஸ்நானம் என்னும் இரண்டாம் சக்கரத்தை தொட்டவுடனே தங்கள் உடலிலும் மனதிலும் ஏற்பட்டிருக்கிற மாற்றத்தை புரிந்துகொள்ள முடியாமல் எதோ ஆகிவிட்டது என்று பைத்தியம் பிடித்தவர்கள் ஏராளம் என்று கேள்விபட்டுள்ளேன்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குண்டலினி என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum