ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 T.N.Balasubramanian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 SK

தமிழ்த்துறை வாழ்த்து
 VEERAKUMARMALAR

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உயிர் மயக்கம் வேண்டாம்!

View previous topic View next topic Go down

உயிர் மயக்கம் வேண்டாம்!

Post by சாமி on Sun Feb 02, 2014 4:58 pm

உயிருடன் உயிர் ஒன்றாது' என்ற தலைப்பில் வெளியான (15.12.2013) கட்டுரையில் இந்தவாண்டு, கடந்தவாண்டு, குறைந்தவளவில் என்று பேசுதல் எழுதுதல் தொடர்பான தடை-விடைகள் பற்றிய விளக்கமளித்தல் கடனாகின்றது.

ஒரே சொல்லில் இரண்டு உயிரெழுத்துகள் இணைந்தொலித்தல் தமிழில் எவ்வகையானும் இல்லையென்பதில் இன்றளவும் மாற்றமில்லை. பகுதி, விகுதி, இடைநிலை என்பவற்றின் சேர்க்கையிலும், இரண்டு சொற்களை இணைத்தொலிக்கும் போதும் உயிரும் உயிருமாக எதிர்ப்படும்போது அவை மூன்று வகையாகப் பயன்படுகின்றன.

முதலாவது, நிலைமொழி உயிர் நீங்குதல், அது அன் ஐ -அதனை, அது ஐ -அதை, அது இல்லை - அதில்லை, இரவு இல்-இரவில், களவு இயல்-களவியல், கடுகு அளவும் - கடுகளவும் எனக் காண்க.

இரண்டாவது, ஆயிரம் அத்து ஒன்று - ஆயிரத்தொன்று, அந்த ஆள் -அந்தாள், சென்ற ஆண்டு - சென்றாண்டு என்றாதல் எண்ணுக.

சென்ற ஆண்டு எனப் பிரித்துப் பேசும்போது உயிரும் உயிரும் ஒட்டி நிற்றலாகக் கொள்ளுதல் முற்றும் பிழையாகும். அதன்படி நாய் ஓடியது, நல்லது அல்ல, அந்தாள் எனப் பேசுதலும், எழுதுதலும் கூடாதெனத் தடை விதிக்க வேண்டுமா? அஃதியலுமா? அந்த ஆள் - அந்தவாள், சென்ற ஆண்டு - சென்றவாண்டு எனப் பேசினாலும் எழுதினாலும் கேட்பார்க்கும், படிப்போர்க்கும் குழப்பம் ஏற்படாதா?

வருமொழி உயிர் நீங்குதலை தொல்காப்பியர்,

"ஆறன் உருபின் அகரக் கிளவி
ஈறாகு அகரமுனைக் கெடுதல் வேண்டும்''

"அத்தின் அகரம் அகரமுனை இல்லை'' என விதிவகையாகவும்,

"முந்துகிளந் தன்ன மேற்கிளந் தன்ன முற்கிளந் தன்ன''

என, உடம்படு புணர்த்தலாகவும் கூறுகின்றார்.

"கற்றதனால் ஆய பயன்
உப்பமைந் தற்றால் புலவி
நாடிழந்த ததனினும் நனியின்னாது''


என்றாற்போலும் இலக்கிய வழக்குகளும் காண்க.

மூன்றாவது, இடையில் ஒரு மெய் தோன்ற, அதனுடன் வருமொழி உயிரிணைதல். இவ்வாறாகும் மெய்கள் பலவாதலும், அவற்றை வகைப்படுத்துதல் அரிதாகலும் எண்ணிய ஆசிரியர்,

""எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்''


எனப் பொதுவாகக் கூறிச்சென்றார். நிலைமொழி இறுதி யாதாயினும் வருமொழி முதல் உயிராகுங்கால் இடையில் அவற்றை உடம்படுக்கும் மெய்யொன்று கொள்ளுதல் தவிர்க்க வேண்டுவதல்ல - என்பதே நூற்பாவின் கருத்தாகும். ஆனால், தொல்காப்பிய உரையாளரான இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், "உயிர்முன் உயிர் என்றாகுங்கால் இடையில் உடம்படுமெய் தோன்றும். அவையாவன யகரமும், வகரமும். இ, ஈ, ஐ - முன் யகரமும், ஏனைய உயிர்முன் வகரமும், ஏ-முன் இரண்டும் தோன்றும்' என வரையறுத்துக் கூறிவிட்டனர். பசியில்லை, ஈயென, மழையில்லை எனவும்; நல்லன வெல்லாம், கல்லா வொருவன், அதுவன்று, பூவொன்று, நன்றே யென்றான், நன்றோ வென்றான் எனவும் காண்க. எ, ஓ - இரண்டும் மொழியிறுதியாக அமைதல் மரபல்ல. ஏகாரம் வகர உடம்படுமெய் பெறும் சொல்லாட்சி காண்டல் அரிதாகின்றது.

ஆனாலும், தொல்காப்பியத்திலேயே, அறிவன், இறைவன், தலைவி, முனைவன், அறிவர், தலைவர் என்றாற் போல, இ, ஐ-முன் வகர உடம்படுமெய்யும் தோன்றுகிறது. மாயோன், ஆயிருதிணை என்பனவாக ஆகாரத்தின் முன் யகர மெய்யும் இடம்பெறுகின்றது. அன்றியும் முனைஞர், அறிநர், பொருநர், ஆகுந, தகுந, சொல்லுந என்றிவையும் பரவலாகின்றன.

இவற்றுள் ஞர், நர், ந என்பவற்றைத் திணை, பால் விகுதிகளாக நன்னூலாரும் கூறவில்லை. அவற்றில் ஞகர, நகர மெய்களை உடம்படுமெய்யல்லாத பிறவாகக் கொள்ளுதற்குரிய விதி தொல்காப்பியத்தில் யாண்டுமில்லை. ஆக, மெய்முன் உயிர் என்னுமிடத்தும் உடம்படுமெய் தோன்றும் சொல்லாட்சிகளும் பழைமையாகின்றன. தொல்காப்பியர் எல்லா மொழிக்கும் எனவும், உடம்படுமெய் எனப் பொதுமையாகவும் கூறியதன் நுட்பமும் இதுவே யென்பதுணர்க.

இவ்வளவும் ஆராய்ந்துணரமாட்டாத உரையாளர், எல்லா மொழிக்கும் என்பதை உயிர்முன் உயிர் எனவும், உடம்படுமெய்யாவன யகர, வகரமாகும் இரண்டு எனவும் கொண்டு அதனையும் அரைகுறையாகக் கூறியமை முதற்கோணலாயிற்று. முந்தைய இலக்கியங்களைத் தாமே ஆராய்ந்துணரமாட்டாத நன்னூலார், உரையாளர் கருத்தை அப்படியே நூற்பா வாக்கியமை முற்றுங்கோணலாயிற்று.

இலக்கணமாவது, மக்கள் வழக்கு, செய்யுள் வழக்கு இரண்டிலும் அமைந்துள்ள மரபுகளை வகை தொகைப்படுத்தித் தெளிவுறுத்துவதன்றி, அவற்றைப் புறந்தள்ளுவதல்ல. மக்களும், புலவோரும் பழைய சொல்லாட்சிகளில் சிலவற்றைத் தவிர்த்தல் இயல்பாகலாம். அதுவே, பழையன கழிதல் எனப்படும். அவ்வாறே, மொழி என்னும் கட்டமைப்பைச் சிதைக்காதன மட்டுமே புதியன புகுதலாக இலக்கண ஆசிரியரால் ஏற்கத்தக்கனவாகும்.

இலக்கண ஆசிரியர் தம் காலம் வரையுமாகும் வழக்குகள் அனைத்தையும் உளப்படுத்துதலின்றி, அவற்றுள் சிலவற்றைப் புறந்தள்ளுதல், இலக்கணம் என்பதன் இலக்கணத்தை மறுதலித்தலாகும். எனவே, உடம்படுமெய்களை விதந்தோதுதலில் நன்னூலார் செய்த குழப்பம் முற்றுந்தவறாதல் தெளிக.

எதிர்வரும் தலைமுறையர்க்கு தொல்காப்பியம் மறந்து, நன்னூல் மட்டுமே கொண்டு தமிழ் பயிற்றும் தகவின்மையை மாற்றிக்கொள்ளுதல் தவிர்க்கொணாக் கடனெனக் கொள்க. - புலவர் சா.பன்னீர்செல்வம் தினமணி
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: உயிர் மயக்கம் வேண்டாம்!

Post by myimamdeen on Sun Feb 02, 2014 5:14 pm

   
avatar
myimamdeen
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 392
மதிப்பீடுகள் : 130

View user profile http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum