ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

தமிழரின் தொன்மை
 sandhiya m

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மோடி x ராகுல் இல்லை, அ.தி.மு.க. x திமு.க-தான்!

View previous topic View next topic Go down

மோடி x ராகுல் இல்லை, அ.தி.மு.க. x திமு.க-தான்!

Post by சிவா on Wed Feb 19, 2014 4:40 pmநாடெங்கும் நரேந்திர மோடி அலை வீசுகிறது என்று பா.ஜ.க-வின் கெப்பல்ஸ்கள் அணி 24x7 ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் கூவினாலும், தமிழ்நாடு, பா.ஜ.க. அலை ஏதும் வீசாத குட்டையாகத் தேங்கிக் கிடக்கிறது என்பதுதான் கள உண்மை. தமிழ்நாட்டில் நடக்கப்போகும் மக்களவைத் தேர்தல் மோடியா ராகுலா கேஜ்ரிவாலா என்ற அடிப்படையிலேயே நடக்கப்போவதில்லை, நடக்க முடியவும் முடியாது என்பதே அசலான உண்மை.

தமிழ்நாட்டில் இந்தத் தேர்தலிலும் சட்டப்பேரவை தேர்தல்போல தி.மு.க-வா அ.இ.அ.தி.மு.க-வா என்ற அடிப்படையிலேயே போட்டி நடக்கவிருக்கிறது. இருவரும் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அவர்கள் உட்பட எல்லாருக்கும் தெரியும். ஆனால், டெல்லி ஆட்சியில் செல்வாக்குடன் இருக்கப்போவது யார் என்பதுதான் தேர்தல் களத்தில் இன்று அவர்களுடைய வாழ்வா சாவா பிரச்சினை.

கடந்த ஒரு மாத காலமாக வெவ்வேறு இதழ்களும் ஊடகங்களும் செய்துவரும் கருத்துக் கணிப்புகள், கள நிலவரச் செய்தி அறிக்கைகள், கடந்த காலத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், விருப்புவெறுப்பின்றி அலசும் எல்லோருக்கும் ஓர் உண்மை புரியும். தமிழ்நாட்டில் காங்கிரஸோ பா.ஜ.க-வோ வேறொரு பெரிய திராவிடக் கட்சியுடன் கூட்டு இல்லாமல் அதிகபட்சம் ஒரு சீட்டுக்கு மேல் ஜெயிக்கவே முடியாது. யாருடன் சேர்ந்தால் தங்களுக்கு ஐந்தாறு சீட்டுகளாவது கிடைக்கும் என்று அலசி ஆராய்வதைத் தவிர காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் வேறு வழி இல்லை.

அப்படி அலசினால், பா.ஜ.க-வுக்கு இருக்கும் முதல் சிக்கல், அதனுடன் கூட்டுசேர்வதை தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. என்ற இரு பெரிய திராவிடக் கட்சிகளும் நிறுத்திக்கொண்டு பத்து ஆண்டுகளாகிவிட்டன. இந்த முறையும் அவை யாரும் பா.ஜ.க-வுடன் சேரப்போவதில்லை என்ற நிலையில் பா.ஜ.க-வுக்குக் கூட்டுசேர்ந்துகொள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டால் வேறு திராவிடக் கட்சியே இல்லை.

கடுகுகளும் மிளகுகளும்

ஆனால், ம.தி.மு.க., கட்டெறும்பு தேய்ந்து கடுகு ஆன மாதிரி, தி.மு.க., அ.தி.மு.க. இருவருடனும் மாறி மாறிக் கூட்டுவைத்து விலகி, இன்று சிறு திராவிடக் கட்சியாகவே இருக்கிறது. தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் தமிழகத்தில் மாற்று ம.தி.மு.க-தான் என்று குறைந்தபட்சம் 10 ஆண்டுகளேனும் தனியே போட்டியிட்டு மூன்றாவது அணியை இங்கே உருவாக்க முயற்சித்திருந்தால், ம.தி.மு.க. இவ்வளவு கடுகுக் கட்சியாக இருந்திருக்காது. இப்போது, அதனுடன் பா.ஜ.க. என்ற இன்னொரு அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தும் இன்னொரு கடுகுக் கட்சி, வேறு வழியின்றி சேர்ந்திருக்கிறது.

பா.ஜ.க. என்ற கடுகைவிடக் கொஞ்சம் பெரிய மிளகுக் கட்சிதான் தமிழகத்தில் காங்கிரஸ். பா.ஜ.க-வுக்கு மூன்று நான்கு சதவிகிதம் வரை வாக்குவங்கி இருக்குமென்றால், காங்கிரஸுக்கு இருப்பது அதிகபட்சம் 10. இதுவரை காங்கிரஸுக்கு இருந்துவரும் வசதி என்னவென்றால், 20 முதல் 30 சதவீதம் வரை வாக்குவங்கி வைத்திருக்கும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க-வுடன் மாறி மாறிக் கூட்டுசேர்ந்து, பத்துப் பதினைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு அனுப்பிவிட அதனால் முடிந்திருக்கிறது. இந்த முறை பா.ஜ.க-வுக்குப் பெரிய திராவிட முதுகு கிடைக்காததுபோல காங்கிரஸுக்கும் பெரிய திராவிட முதுகு மட்டுமல்ல, சவாரி செய்ய சிறிய திராவிட முதுகுகூட இதுவரை கிடைக்கவில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மோடி x ராகுல் இல்லை, அ.தி.மு.க. x திமு.க-தான்!

Post by சிவா on Wed Feb 19, 2014 4:41 pm


அ.தி.மு.க-வுக்கே லாபம்

ஆனால், காங்கிரஸ் இந்த முறையும் தப்பித்துக்கொள்ள வசதியாக, பாக்கி இருக்கும் ஒரே அரசியல் சூழல், தி.மு.க-வுக்கு டெல்லியில் அடுத்த ஆட்சியிலும் செல்வாக்கும் பிடிமானமும் தேவை என்ற நிலைதான். இப்போதுள்ள களநிலவர மதிப்பீடுகளின்படி காங்கிரஸ் தனியாகவோ தே.மு.தி.க-வுடன் சேர்ந்தோ நின்றாலும், தி.மு.க. சில சிறு கட்சிகளுடனும், பா.ஜ.க. - ம.தி.மு.க. - பா.ம.க. என்று கூட்டுசேர்ந்தும் போட்டியிட்டாலும், அந்தப் பலமுனைப் போட்டியில் அ.தி.மு.க-வுக்கே அதிக லாபம். அ.தி.மு.க-வுக்கு பெரிய எதிர்ப்பலை எதுவும் இல்லை. மொத்தம் 40 இடங்களில் அ.தி.மு.க. அணி 30 முதல் 35 வரை இடங்களை அடைந்துவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

அப்படி நடந்தால், தி.மு.க-வுக்கு இரட்டை இழப்பாகிவிடும். தங்களுக்கு டெல்லி அரசியலில் எந்தச் செல்வாக்கும் இல்லாமல் போவது மட்டுமல்ல, தங்களின் எதிரிக் கட்சியான அ.தி.மு.க. டெல்லி ஆட்சியில் பங்கேற்கும் நிலையையும் சந்திக்க வேண்டிவரும். ஜெயலலிதா வசம் 30-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்களானால், அவர் மூன்றாவது அணி ஆட்சி அமைத்தாலும் செல்வாக்கோடு இருப்பார். பா.ஜ.க. ஆட்சி அமைத்தாலும் அவர் தயவு தேவைப்படும். காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்புக் குறைவானாலும், அது வெளியிலிருந்து ஆதரிக்கக்கூடிய மூன்றாவது அணி ஆட்சியில் அ.தி.மு.க. இருக்கும். இப்படிப்பட்ட நிலைமை ஏற்படுவது தி.மு.க-வுக்குப் பெரும் சிக்கலாகும்.

ஆனால், தி.மு.க., காங்கிரஸுடனும் விஜயகாந்தின் தே.மு.தி.க-வுடனும் கூட்டணி அமைத்தால், களமதிப்பீடுகளின்படி மொத்தம் 40 இடங்களில் அந்த அணி சரிபாதி இடங்கள் வரை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. இதன்படி ஜெயலலிதாவின் அணிக்கு 20 முதல் 25 இடங்கள் மட்டுமே கிடைக்கும். அப்போது, டெல்லியில் ஜெயலலிதாவின் செல்வாக்கு ஓங்கி, தங்கள் தரப்பு முற்றிலும் பலவீனமாகிவிடாமல் காப்பாற்றும் வசதி தி.மு.க-வுக்குக் கிடைக்கும். இதுதான் கள யதார்த்தம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மோடி x ராகுல் இல்லை, அ.தி.மு.க. x திமு.க-தான்!

Post by சிவா on Wed Feb 19, 2014 4:41 pm

தயக்கத்தின் காரணம்

எனினும், இத்தனை நாள் ஒன்றாக இருந்த தி.மு.க-வும் காங்கிரஸும் இப்போது கூட்டணி அமைக்கத் தயங்கிக்கொண்டிருப்பதன் காரணம் என்ன? கட்சியில் அடுத்த தலைவராக அடையாளம் காட்டப்பட்டுவிட்ட ஸ்டாலின்தான், இந்தத் தயக்கத்தின் பிரதான காரணம் என்று தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஸ்டாலினின் தயக்கத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பை விட, தி.மு.க-வின் உட்கட்சிப் பிரச்சினையே காரணம் என்று கருதலாம். தி.மு.க-வின் சார்பில் டெல்லிக்கு எம்.பி-க்களாக அனுப்பப்பட்டு அமைச்சர்களாக்கப்பட்ட அழகிரி, தயாநிதி, அமைச்சர் வாய்ப்பை நூலிழையில் இழந்த கனிமொழி எல்லோருமே கலைஞர் குடும்பத்தினர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க-வுக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கனிமொழியும் ஆ. ராசாவும் முக்கியக் குற்றவாளிகளாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இன்று கட்சியை முழுக்கவும் தன்வசம் கொண்டுவந்துவிட்ட ஸ்டாலினுக்கு, டெல்லி அரசியல்தான் தி.மு.க-வின் சரிவுகளுக்குக் காரணம் என்றும், அந்தச் சரிவுகளில் முக்கியப் பங்காளிகளாக இருப்போர் எல்லாருமே குடும்ப அரசியலிலும் தனக்கு எதிரிகள் என்றும் தோன்றுவதில் வியப்பில்லை. எனவே, டெல்லி அரசியலை ஓரங்கட்டிவிட்டு, மாநில அளவில் மட்டுமே தி.மு.க. கவனத்தைக் குவித்து அடுத்த மூன்றாண்டுகளும் வேலை செய்தால், தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வலிமை பெற முடியும் என்று அவர் கணக்கிட்டிருக்கலாம். டெல்லி ஆட்சியில் தி.மு.க-வுக்கு இந்த மூன்று ஆண்டுகள் செல்வாக்கு இல்லாமல் போனால் குடிமுழுகிவிடப்போவதில்லை. வழக்குகளில் சிக்கியிருக்கும் கனிமொழி, தயாநிதி போன்றோருக்குத்தான் அந்தக் கவலை இருக்க வேண்டும், கட்சிக்கு இதில் இனி பாதிப்பு வராது என்பது இந்தக் கணக்கின் தொடர்ச்சி.

ஆனால், நடைமுறையில் டெல்லி ஆட்சியில் தி.மு.க-வுக்கு இதுவரை இருந்துவரும் செல்வாக்கை, பிடியை அது இந்த முறை இழந்தால், அந்தப் பிடி ஜெயலலிதாவிடம் போய்விட்டால், ஸ்டாலின் நினைப்பதைவிடப் பல மடங்கு கூடுதலான பாதிப்புகளையே தி.மு.க. அடைய நேரிடும். இந்த உண்மை ஸ்டாலினுக்குப் புரியாவிட்டாலும் கலைஞருக்குப் புரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில்தான் காங்கிரஸ் காத்திருக்கிறது. தங்களுடன் தி.மு.க-வைக் கூட்டணி சேரவைக்க விஜயகாந்த் என்ற துருப்புச் சீட்டை காங்கிரஸ் பயன்படுத்துகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மோடி x ராகுல் இல்லை, அ.தி.மு.க. x திமு.க-தான்!

Post by சிவா on Wed Feb 19, 2014 4:42 pm

டெல்லிக்குப் போவாரா ஸ்டாலின்?

தி.மு.க-வுக்குள் இந்த நெளிவுசுளிவுகளைப் புரிந்துவைத்திருக்கும் அனுபவசாலிகள், ஸ்டாலினின் உட்கட்சி குடும்ப அரசியலா, வெளியே எதிரிக் கட்சியைச் சமாளிக்கும் பொது அரசியலா என்ற ஹாம்லெட் கலக்கத்துக்குத் தீர்வாகச் சில யோசனைகளைப் பேசிவருகிறார்கள். டெல்லி அரசியல் தி.மு.க-வைச் சரிவுக்குத் தள்ளியது என்றால், அதிலிருந்து ஸ்டாலின் ஒதுங்குவதற்குப் பதிலாகத் தானே இறங்க வேண்டும் என்பது அந்தத் தீர்வு. காங்கிரஸுடனும் தே.மு.தி.க-வுடனும் கூட்டணி அமைத்துவிட்டு, ஸ்டாலின் தானே மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு டெல்லிக்குச் சென்றால்தான், டெல்லியில் ஜெயலலிதா அமைக்கும் வியூகத்தையும் நேரடியாகச் சந்திக்க முடியும்; குடும்ப உறுப்பினர்களின் வசம் டெல்லி தி.மு.க. இல்லாமல் அதையும் தன் பிடிக்குள் வைத்திருக்க முடியும் என்பது இந்தப் பார்வை. எப்படியும் தமிழகச் சட்டப்பேரவையில் அடுத்த மூன்றாண்டுகளுக்கு வெளிநடப்புகள் செய்வதைத் தவிர செய்ய வேறு அரசியல் பணிகள் இல்லை! ஒருவேளை, மத்தியில் தி.மு.க. ஆதரவுடன், மூன்றாம் அணியோ காங்கிரஸோ ஆட்சி அமைத்தால், அதில் ஸ்டாலின் அமைச்சராகவும் ஆகிவிடலாம். மத்திய அமைச்சராக அழகிரி செய்த சாதனையிலிருந்து மாறுபட்டு, ஸ்டாலின் சாதித்துக்காட்டினால், அடுத்த அரசியல் பாய்ச்சலுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது இந்தக் கணக்கு. இப்படிப்பட்ட கணக்குகளை நம்பியே காங்கிரஸ் காத்திருக்கிறது.

ஆனால், இப்போதைக்குக் களத்தில் தன் கைதான் ஓங்கியிருக்கிறது என்று மிகுந்த நம்பிக்கையுடன் ஜெயலலிதா இருக்கிறார். அவர் கை ஓங்கினால், டெல்லியில் தேவைப்பட்டால், தேர்தலுக்குப் பின் காங்கிரஸைவிட தங்களுக்கே அவர் சாதகமாக இருப்பார் என்ற கணக்கில் பா.ஜ.க-வும் நம்பிக்கையுடன் இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மக்களவைத் தேர்தல் என்பது மோடி x ராகுல் தேர்தல் அல்ல. தி.மு.க x அ.தி.மு.க. முடிவு செய்யும் தேர்தல்தான்.

ஞாநி, மூத்த பத்திரிகையாளர், சமூக-அரசியல் விமர்சகர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மோடி x ராகுல் இல்லை, அ.தி.மு.க. x திமு.க-தான்!

Post by T.N.Balasubramanian on Wed Feb 19, 2014 5:57 pm

தேமுதிகா வை கூட்டணியில் சேர்த்துக் கொள்வது பூனையை மடியில் வைத்துக்கொண்டு சகுனம் பார்ப்பது போல். இவரால் கெடுதல் மிக வருமே அன்றி பலன் கிடைக்காது. தன்னால்தான் கூட்டணி கட்சிகள் ஜெயித்தன என்று பீத்தல்காந்த்தாக மாறுவார். இவர் கட்சி BJP இல் சேர்ந்து ,இவரும் 2/3 இடத்தில் தேர்வு செய்யப்பட்டு , BJP ஆட்சி பிடித்து இவருக்கு ஒரு மந்திரி பதவி கிடைத்தால் ------------------------நீங்க என்ன நினைகிறீங்க ன்னு எழுதுங்களேன் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21489
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: மோடி x ராகுல் இல்லை, அ.தி.மு.க. x திமு.க-தான்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum