ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 M.Jagadeesan

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)

View previous topic View next topic Go down

'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)

Post by krishnaamma on Thu Feb 20, 2014 4:00 pm

மேஷம் :பலன் எதிர்பாராமல் சேவை செய்யும் மேஷ ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் சுக்கிரன் பிப்., 25 வரை தனுசு ராசியில் இருந்து நற்பலனைக் கொடுப்பார். புதன் மார்ச் 10ல் இடம் மாறினாலும், மாதம் முழுவதும் நன்மை தருவார். சூரியன் ,செவ்வாய் ஆகியோராலும் நன்மை உண்டாகும். சனி, கேது,ராகு,குரு ஆகியோரால் நற்பலன் கிடைக்காது. சூரியனால் சிறப்பான பலன்களைக் காண்பீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். உடல்நலம் சீராகும். செவ்வாயால் பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். பிப்., 25 வரை பெண்களால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். விருந்து விழா என சென்று வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும்.

எதிரி தொல்லை மறையும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். பணியாளர்களுக்கு நன்மை கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். அதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பிப்.,25-ந் தேதிக்கு பிறகு போட்டி அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சிறப்படைவர். புதிய பதவி கிடைக்க பெறுவர். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்க ஏற்ற காலகட்டம். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.பெண்கள் குடும்பநலனில் ஆர்வம் காட்டுவர். மாணவர்கள் முன்னேற்றம் காண்பர்.

நல்ல நாள்: பிப்., 18,19, 20, 24, 25, 26, 27, 28, மார்ச் 1,2,5,6,9,10,11
கவன நாள்: பிப்., 21, 22, 23
அதிர்ஷ்ட நிறம்: செந்தூரம், பச்சை எண்: 1,5,9
வழிபாடு: சனிக்கிழமை நரசிம்மர் கோயிலுக்குச் செல்லுங்கள். பிப்.,25க்குபிறகு வெள்ளிக்கிழமை அம்மன் கோயிலுக்கும் சென்று வாருங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)

Post by krishnaamma on Thu Feb 20, 2014 4:00 pm

உற்சாகத்துடன் செயலாற்றி வரும் ரிஷப ராசி அன்பர்களே!

வாழ்வில் நன்மை அதிகரிக்கும் மாதம். குரு,சனி,ராகு, சூரியன், சுக்கிரன் ஆகியோரால் நற்பலன் ஏற்படும். மார்ச் 10 ல் புதன் 10-ம் இடத்திற்கு வருவதால், குடும்பநிலை மேம்படும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். பெண்களின் ஆதரவு கிடைக்கும். பொன், பொருள் சேரும். புது முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். செவ்வாய் ராசிக்கு 5ல் இருப்பதால் எதிரி தொல்லை உருவாகலாம்.

உடல் நலம் பாதிக்கப்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. சுக்கிரனால் குடும்பத்தில் வசதி, வாய்ப்பு பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். தம்பதியர் இடையே ஒற்றுமை நீடிக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். மார்ச் 9க்குப் பிறகு வீண்செலவு குறையும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புண்டு. எதிரிகள் பயந்தோடுவர். பணியாளர்களுக்கு மார்ச் 10-ந் தேதி வரை பணிச்சுமை இருந்தாலும், அதற்கேற்ப வருமானம் கிடைக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் காணப்படுவர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ்,பாராட்டு கிடைக்கும். விவசாயிகள் காய்கறி, பழ வகைகள் மூலம் நல்ல விளைச்சலும், ஆதாயமும் காண்பர். புதிய சொத்து வாங்க விடாமுயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்.பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்கு பெறுவர். பிப். 13,14, மார்ச் 12,13ல் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். மார்ச் 9 க்கு பிறகு முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். போட்டியில் ஈடுபட்டு வெற்றி காண்பர்.

நல்ல நாள்: பிப்., 13, 14, 20, 21, 22, 28, மார்ச்1, 2, 3, 4, 7, 8, 12, 13
கவன நாள்: பிப்.,23, 24,25
அதிர்ஷ்ட எண்: 3,7,9 நிறம்: மஞ்சள், செந்தூரம், வெள்ளை
வழிபாடு: கேதுவை வழிபடுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். புதனன்று குல தெய்வத்தை வழிபடுங்கள். பசுவுக்கு உணவளியுங்கள். முருகன் கோயிலுக்கு சென்று வந்தால் நன்மை அதிகரிக்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)

Post by krishnaamma on Thu Feb 20, 2014 4:01 pm

மதிநுட்பத்துடன் செயல்பட்டு வரும் மிதுன ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் கேது நன்மை அளிக்கிறார். புதன் மார்ச் 10 வரை சாதகமாக நிற்கிறார். சுக்கிரன் பிப்., 24க்குப் பிறகு நற்பலன் தருவார். சூரியன், செவ்வாய், குரு,சனி,ராகு ஆகியோரால் நன்மை ஏற்பட வாய்ப்பில்லை. குருவின் 5,7,9-ம் பார்வையால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். வருமானம் கூடும். பெண்களால் மேன்மை உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தம்பதி இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். புதனால், முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை சேரக்கும். செவ்வாயால் வீண்விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. சிக்கனத்தை பின்பற்றுவது அவசியம். பிப்., 24 வரை சுக்கிரன் சாதககமற்று இருப்பதால், பெண்களால் சிரமம் நேரலாம். புதன் மார்ச் 10க்குப் பிறகு சாதகமற்ற இடத்திற்கு செல்வதால், வாக்குவாதம் செய்ய நேரிடும்.

பொறுமை காப்பது நல்லது. சூரியன் 9-ம் இடத்திற்கு செல்வதால் அவப்பெயர் உருவாகலாம் கவனம். தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை. நண்பர்களால் பிரச்னை உருவாகலாம், கவனம். புதிய தொழில் தொடங்க முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். யாரையும் நம்பி பணத்தை கொடுத்து விடாதீர்கள். பணியாளர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். அரசு ஊழியர்கள் சந்தித்த பிரச்னை அனைத்தும் தீரும். கலைஞர்களுக்கு கடின முயற்சியால், புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பிப்.,24க்குப் பின் புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானத்தை காண்பர். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பாராட்டு காண்பர். விரும்பியபடி ஆடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்கள் ஆசிரியரின் ஆலோசனையை ஏற்பது அவசியம். மார்ச் 9க்குப் பிறகு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் படிப்பில் ஆர்வம் குறையும் கவனம்.

நல்ல நாள்: பிப்.,15,16,17,22,23,24, மார்ச்3,4,5,6,9, 10,11,14
கவனநாள்: பிப்.25,26,27 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்: சிவப்பு, பச்சை
வழிபாடு: வியாழக்கிழமை தட்சணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். மார்ச் 9 க்கு பிறகு குல தெய்வத்தை வணங்கி, பாசிப்பயறு தானம் செய்யுங்கள். சூரியவழிபாட்டால் நன்மை உண்டாகும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)

Post by krishnaamma on Thu Feb 20, 2014 4:02 pm

நினைத்ததை சாதிக்க துடிக்கும் கடக ராசி அன்பர்களே!

புதன் மார்ச் 9 க்கு பிறகு நற்பலன் கொடுப்பார். செவ்வாயால் நன்மை உண்டு. மற்ற கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் எதையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியிருக்கும். சனியின் 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைவதால், நன்மை மேலோங்கும். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். செவ்வாயின் சஞ்சாரத்தால், பொருளாதார வளம் சிறக்கும். சுக்கிரனால் பிப்., 24 வரை சோர்வு ஏற்படும். பெண்களால் தொல்லை ஏற்படலாம். ஒதுங்கி இருக்கவும். சூரியனால் அரசு வகையில் அனுகூலம் குறையும். வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

உடல் நலம் பாதிக்கப்படலாம். புதனால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் பிரிவு ஏற்படலாம். மார்ச் 9க்குப் பிறகு தம்பதி இடையே இருந்த பிணக்கு மறையும். ஒற்றுமை உண்டாகும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வர். பிள்ளைகளால் மகிழ்ச்சி, பெருமை சேரும். தொழில், வியாபாரத்தில் லாபம் குறையாது. புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் வேலையில் கவனம் செலுத்தவும். உங்கள் கோரிக்கை நிறைவேறும். போலீஸ், பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் மேன்மை காண்பர்.மார்ச் 9 க்கு அரசுப்பணியாளர்களுக்கு இருந்து வந்த பிரச்சினை நீங்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுக்கிரன் பிப்ரவரி 24க்கு பிறகு, சுக்கிரன் சாதகமாவதால், கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவர். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல், மக்கள் நலனுக்காகப் பாடுபடவேண்டியதிருக்கும். விவசாயிகள் கிழங்கு வகைகள் நிலக்கடலை, காய்கறி, கீரை வகைகள் போன்றவற்றில் அதிக மகசூல் காண்பர். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போகலாம். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. பெண்கள் ஆன்மிகச் சுற்றுலா சென்று மகிழ்வர். மாணவர்கள் சுமாராகப் படிப்பர்.

நல்ல நாள்: பிப்.,13,14,18,19,24,25,26,27, மார்ச் 5,6,7,8, 12,13
கவன நாள்: பிப்., 28, மார்ச்1,2 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: சிவப்பு, பச்சை
வழிபாடு: ராகு,கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ரங்கநாதரை வழிபடுங்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)

Post by krishnaamma on Thu Feb 20, 2014 4:02 pm

மன உறுதியும், செயல்திறமும் மிக்க சிம்மராசி அன்பர்களே!

கிரகங்களில் குரு,சனி,ராகு நற்பலனை வழங்க காத்திருக்கின்றனர். சூரியன், செவ்வாய், ராகு நன்மை தர இயலாதவராக உள்ளனர். சுக்கிரன் பிப்., 9 வரையிலும், புதன் மார்ச் 24 வரையிலும் நற்பலன் வழங்குவர். சனியால் பொருளாதார வளம், தொழில் வளர்ச்சி உண்டாகும். புதனால் எடுத்த காரியம் வெற்றி அடையும். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வர். லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் பிப்., 9 க்கு பிறகு ராசிக்கு 6 ல் இருப்பதால் முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.

சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் பெரியவர்களின் உதவி கிடைக்கும். மார்ச் 24 க்கு பிறகு புதனால், குடும்ப பிரச்னை தலைதூக்கலாம். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். தொழில், வியாபாரத்தில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. செவ்வாய் 2 ல் இருப்பதால் களவு ஏற்பட வாய்ப்புண்டு. பகைவர் தொல்லை உருவாகும். அரசு வகையில் ஆதாயம் இல்லை. வரவு, செலவுக் கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.பணியாளர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். பணிஇடத்தில் செல்வாக்கும் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பிப்., 24க்கு பிறகு, புகழ் பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம். அரசியல்வாதிகள் உழைப்புக்கு ஏற்ப பலன் பெறுவர். விவசாயிகள் மிதமான லாபம் காண்பர். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருப்பது கூடாது. பெண்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியம். பிப்., 20,21ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனமாக பொருள் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர்.

நல்ல நாள்: பிப்.,15,16,17,20, 21, 26,27,28, மார்ச்1,7,8,9, 10,11,14
கவன நாள்: மார்ச் 2,3,4
அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: மஞ்சள், சிவப்பு, பச்சை
வழிபாடு: செவ்வாய்க்கிழமை முருகன், மாரியம்மனைத் தரிசனம் செய்யுங்கள். மார்ச் 9க்கு பிறகு குலதெய்வத்தை வணங்குவது நல்லது. தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)

Post by krishnaamma on Thu Feb 20, 2014 4:03 pm

அனைவரையும் கவரும் இயல்புள்ள கன்னி ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரனால் நன்மை உண்டாகும். புதன், மார்ச் 9 க்கு பிறகு நற்பலனைக் கொடுப்பார். இதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர். தம்பதியரிடையே பாச உணர்வு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.பிப்., 24 க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சூரியனால் பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் சேரும். ஆரோக்கியம் மேம்படும். செவ்வாய் ராசியில் இருந்து, தடைகளை உருவாக்கினாலும், எளிதாக முறியடிப்பீர்கள். சுக்கிரனால் குடும்பத்தில் வசதி வாய்ப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேம்படும். மார்ச் 9க்கு பிறகு, புதிய தொழில் தொடங்க ஏற்ற காலம். தொழிலை விரிவுப்படுத்தும் எண்ணம் நிறைவேறும். பணியாளர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்துவர். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். விரும்பிய பணி, இடமாற்றம் பெறலாம். மார்ச் 24க்கு பிறகு, பணியில் உன்னத பலன்களை எதிர்பார்க்கலாம்.வேலையின்றி இருப்பவர்கள், புதிய வேலை கிடைக்கப் பெறுவர். கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் நல்ல பணப்புழக்கத்துடன் இருப்பர். தலைமையின் ஆதரவால், புதிய பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு பழ வகைகளில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலம் காணப்படவில்லை. வழக்கு விவகாரங்களில் பின்னடைவு ஏற்படலாம். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் கணவர் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறுவர். உங்களால் குடும்பம் சிறப்படையும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது அவசியம். புதன் மார்ச் 9க்குப் பிறகு சாதகமாக இருப்பதால் நல்ல மதிப்பெண் கிடைப்பதோடு, போட்டிகளில் வெற்றியும் காணலாம்.

நல்ல நாள்: பிப்., 13,14,18,19,22,23,28, மார்ச் 1,2,3,9,10, 11,12,13
கவன நாள்: மார்ச் 4,5,6
அதிர்ஷ்ட எண் : 7,9 நிறம்: செந்தூரம், வெள்ளை
வழிபாடு: சிவன், துர்க்கை வழிபாடு நன்மை தரும்.
செவ்வாய், வெள்ளியன்று முருகனையும் வழிபட்டு வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)

Post by krishnaamma on Thu Feb 20, 2014 4:03 pm

கடும் உழைப்புக்கு உதாரணமான துலாம் ராசி அன்பர்களே!

குரு தொடர்ந்து நற்பலன் கொடுப்பார். புதன் மார்ச் 10 வரை நன்மை செய்வார். சுக்கிரன் பிப்., 25ல் மகரத்திற்கு சென்றாலும், மாதம் முழுவதும் நன்மை செய்வார். மற்ற கிரகங்களில், சனிபகவானின் 3-ம் இடத்துப்பார்வை மட்டும் சாதகமான இடத்தில் விழுகிறது. இதன் மூலம் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளமும், குடும்ப மகிழ்ச்சியும், தொழில் விருத்தியும் இருக்கிறது. நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவு மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். புதன் 4-ம் இடத்தில் இருப்பதால் பொருள் சேரும். தேவையான வசதிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் குறையாது. பெண்களால் இருந்து வந்த இடையூறு மறையும். ஆனால், போட்டியாளர்களின் தொல்லைதலை தூக்கும். கவனம். மார்ச் 9க்கு பிறகு, தொழில் ரீதியாக சிலர் தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிய வேண்டியிருக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மார்ச் 9க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டி வரும். விண்ணப்பித்துள்ள சலுகைகளுக்காக அவசரப்பட வேண்டாம். தாமதமாக கிடைக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் தங்கு தடையின்றி கிடைக்கும்.

அரசியல்வாதிகள், உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது. மாணவர்கள், கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெற கடுமையாக பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும். விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானம் பெறலாம். கால்நடை செல்வம் பெருகும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.பெண்கள், குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வீட்டுச்செலவுக்கு போதுமான பணம் இருக்கும்.

நல்ல நாள்: பிப்., 13,14,15,16,17,20,21,24,25, மார்ச் 3,4,5, 12,13,14
கவனநாள்: மார்ச் 6,7,8 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, மஞ்சள் எண்: 4,6
வழிபாடு: தினமும் காலையில் சூரியனை வழிபடவும். முருகன் கோயிலுக்கு சென்று வாருங்கள். இதனால் உடல் நலம் சிறப்படையும்..நவக்கிரகங்களில் ராகு-கேதுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)

Post by krishnaamma on Thu Feb 20, 2014 4:04 pm

என்ன நடந்தாலும் மனம் தளராத விருச்சிக ராசி அன்பர்களே!

கேது,செவ்வாய் மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பர். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். சுக்கிரன் பிப்.,25ல் மகரத்திற்கு சென்றாலும் அவர் மாதம் முழுவதும் நன்மை தருவார். புதன் மார்ச் 9-க்கு பிறகு கும்பத்தில் நின்று குடும்ப நிலையை மேம்படுத்துவார். பொருள் சேரும். உங்கள் முயற்சியில் தடைகள் வந்தாலும், செவ்வாயால் அதை முறியடித்து வெற்றி காணும் வல்லமையை பெறுவீர்கள். பணப்புழக்கம் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும்.கேதுவால் அபார ஆற்றல் பிறக்கும். சுக்கிரனால் மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது கிடைக்கும். பிப்.,24க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.

வீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அரசின் சலுகை கிடைக்கும்.பெண்களால் தொல்லைகள் வரலாம். கேதுவின் பலத்தால் எந்த தொய்வும் ஏற்படாது. பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வேலையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். உங்கள் பொறுப்புகளை வேறுயாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். மார்ச் 9க்கு பிறகு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம், விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். மார்ச் 9க்கு பிறகு, புதன் சாதகமாக இருப்பதால். போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். விவசாயிகள் நல்ல வருவாய் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்குகள் சாதகமான பாதையில் செல்லும். பெண்கள், கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். நகை வாங்குவர். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரும்.

நல்ல நாள்: பிப்ரவரி 15,16,17,18,19,22,23,26,27, மார்ச்5,6,7,8
கவன நாள்: மார்ச் 9,10. சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெள்ளை. எண்: 5,7
வழிபாடு: வியாழக்கிழமை குருவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாள், ராமரை வணங்கி வாருங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)

Post by krishnaamma on Thu Feb 20, 2014 4:04 pm

எதிலும் சாதித்துக் காட்டும் தனுசு ராசி அன்பர்களே!

சனி, ராகு, குருவால் நன்மைகள் தொடரும். சுக்கிரன்,சூரியன் மாதம் முழுவதும் நற்பலன் தருவார்கள். செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். பெண்கள் மூலமாக பொருள் சேரும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால், மார்ச் 9வரை அவப்பெயர் வரலாம். குடும்ப, அலுவலக விஷயங்களில் ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் கவலையும், எதிரிகளால் இடையூறும் வரலாம். குடும்பத்தில் ஆனந்தம் தொடரும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். பிள்ளைகள் வகையில் இருந்து வந்த பிரச்னை மறையும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் அனுகூலம் தரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.

எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். சிலர் வீடு கடைகள் அதிகாரிகளால் சோதனைக்கு ஆளாகலாம். செவ்வாயால் போட்டியாளர்களின் தொல்லை ஏற்படும். பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு.பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருந்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. குரு சாதகமாக இருப்பதால் எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும், போதுமான வருவாயும் கிடைக்கும். புகழ் பாராட்டு பெறுவர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் பொதுவாக சிறப்பான பலனை பெற்று வந்தாலும், புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சற்று முயற்சி எடுத்து படிக்க வேண்டியிருக்கும். சிலருக்கு போட்டிகளில் வெற்றி கிடைப்பது அரிது. விவசாயிகளுக்கு கிழங்கு, நிலக்கடலை, மொச்சை போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்களுக்கு பணவரவும், அக்கம் பக்கத்தினர் அனுசரணையும் உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை.

நல்ல நாள்: பிப்ரவரி 18,19,20,21,24,25,28, மார்ச்1,2,7,8,9, 10,11
கவனநாள்: பிப்., 13,14 மார்ச்12,13 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள். செந்தூரம் எண்: 2,3,9 .
வழிபாடு: முருகன் கோயிலுக்கு சென்று துவரை தானம் செய்தால் உடல் நலம் சிறப்படையும். பைரவர் வழிபாடு தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)

Post by krishnaamma on Thu Feb 20, 2014 4:05 pm

குழந்தைகள் மீது பாசம் கொண்ட மகர ராசி அன்பர்களே!

சுக்கிரன் பிப்ரவரி 25ல் உங்கள் ராசிக்கு இடம் மாறி நன்மை தருவார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால், எந்த ஒரு செயல்பாட்டையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஆனால், குருவின் 9-ம் இடத்து பார்வை கும்பத்தில், உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் விழுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால் தடைகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் வீட்டினுள்ளும், உறவினர் வகையிலும் பிரச்னை வரலாம். மார்ச் 9க்கு பிறகு, அவப்பெயரை சந்திக்க நேரிடலாம். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். குடும்பத்தில், தீவிர முயற்சியின் பேரில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும்.

பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் அதிக வருவாய் காணும். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறுவீர்கள். போட்டியாளர்களின் தொல்லைகள் அவ்வப்போது தலை தூக்கும். மார்ச் 9,10,11ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பணியாளர்கள் வேலையில் அதிக அக்கறை காட்டவும். சிலருக்கு வேலையில் வெறுப்பு வரலாம். சலுகைகளை அதிக சிரத்தை எடுத்தே பெற வேண்டியிருக்கும். இடமாற்ற பீதி மார்ச் 9க்கு பிறகு பிறகு மறையும். எனினும், பணியில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். கலைஞர்களுக்கு போதிய வருமானம், எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டி வரும். மாணவர்களுக்கு சுமாரான நிலைதான் நிலவுகிறது. எனினும், குருவின் 9-ம் இடத்துப்பார்வை சிறப்பாக இருப்பதால், முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. விவசாயிகளுக்கு அதிக செலவு பிடிக்கும். வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும். பெண்களுக்கு குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும். மாத பிற்பகுதியில் ஆபரணங்கள் வாங்க யோகம் கூடி வரும்.

நல்ல நாள்: பிப்., 13,14,20,21,22,23,26,27 மார்ச் 3,4,9,10, 11,12,13
கவன நாள்: பிப்ரவரி15,16,17, மார்ச் 14 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை. எண்: 7.
வழிபாடு: சனிக்கிழமை சனிபகவானுக்கும் வியாழக்கிழமை குருவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ஆஞ்சநேயர் வழிபாட்டால், தடை அகன்று நன்மை கிடைக்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)

Post by krishnaamma on Thu Feb 20, 2014 4:06 pm

குடும்ப ஒற்றுமையை விரும்பும் கும்ப ராசி அன்பர்களே!

குரு, கேது தொடர்ந்து மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார்கள். சுக்கிரன் பிப்., 24 வரை பண வரவு தருவார். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். குருவால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மையும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும். வாழ்க்கையில் வளம் காணலாம். கேதுவால் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றியும், பொருளாதார வளமும் காணலாம். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு தொடரும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் அனுகூலத்தை தரும். பகைவர்களின் தொல்லை மார்ச் 9க்கு பிறகு மறையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பிப்ரவரி13,14 மார்ச் 12,13-ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும்.

மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிப்ரவரி 22,23 சிறப்பான நாட்களாக அமையும். மார்ச் 9க்கு பிறகு, புதனால் பொருள் இழப்பு ஏற்படலாம். இடமாற்றம் காணலாம்.கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். விருது கிடைக்க தாமதமாகும். அரசியல்வாதிகள் சிறப்படைவர். மாணவர்கள் வளர்ச்சி காணலாம். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். போட்டிகளில் வெற்றி காண்பது அரிது. விவசாயிகளுக்கு கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப் படுவர். ஆபரணங்கள் வாங்க யோகம் கூடிவரும். குடும்பத்தோடு கோவில்குளம் என சென்று வருவீர்கள். 9-ந் தேதிகளில் சந்திராஷ்டமம். அப்போது அனாவசியமாக எதிலும்பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிப்ரவரி 22,23 சிறப்பான நாட்களாக அமையும். மார்ச் 9க்கு பிறகு, புதனால் பொருள் இழப்பு ஏற்படலாம். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.

நல்ல நாள்: பிப்.,13,14,15,22,23,24,25,28, மார்ச்1,2,5,6,12, 13,14.
கவன நாள்: பிப்.17,18 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு எண்: 2,6.
வழிபாடு: சூரியன் வழிபாடு நன்மை தரும். துர்க்கை வழிபாடும் நடத்துங்கள். செவ்வாய்க்கிழமை முருகன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)

Post by krishnaamma on Thu Feb 20, 2014 4:07 pm

சோதனைகளை சாதனைகளாக மாற்றும் மீன ராசி அன்பர்களே!

புதன் மார்ச் 9 வரையும், சுக்கிரன் பிப்., 24க்கு பிறகும், மகரத்திற்கு வந்து நற்பலனை தருவர். உங்கள் ராசி நாயகன் குரு என்பதால் அவர் உங்களுக்கு கெடுபலன் செய்ய மாட்டார். மேலும், சனியும், ராகுவும் உங்களுக்கு சாதகமற்ற இடத்தில்தான் உள்ளனர். அதேநேரம் அந்த கிரகங்களை குரு பார்க்கிறது. எனவே கெடுபலனைக் குறைத்துவிடுவார். இந்த கிரகங்களால் உங்களுக்கு எந்த கெடுபலனும் நடக்காது. புதனால் நல்ல பாருளாதார வளம் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த காரியம் வெற்றி அடையும். உடல்நிலை நன்றாக இருக்கும். சூரியனால் உங்கள் முயற்சியில் தடையும், பொருள் விரயமும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும்.சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம்.

செவ்வாயால் கணவன்-மனைவி இடையே மனக்கசப்பு வரலாம். தொழில், வியாபாரத்தில் லாபநஷ்டம் மாறி மாறி இருக்கும். புதிய வியாபாரம் சீராக நடக்கும். அதிக முதலீடு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும். அரசு வகையில் இருந்த தொல்லைகள் மறையும். மார்ச் 9க்கு பிறகு போட்டியாளர்களின் தொல்லை தலைதூக்கும். பிப்., 15,16,17 மார்ச்14ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க தடை ஏதும் இல்லை. மார்ச் 9க்கு பிறகு மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும். புதனும் சாதகமான இடத்தில் இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம். மார்ச் 9க்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. விவசாயிகளுக்கு கால்நடை மூலம் பணப்புழக்கம் கூடும். வழக்கு விவகாரங்கள் கடந்த காலத்தை விட அனுகூலமாக இருக்கும். பெண்களுக்கு அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். ஆடம்பர பொருட்கள் வாங்கலாம்.

நல்ல நாள்: பிப்., 15,16,17,18,24,25,26,27மார்ச் 3,4,7,8,14.
கவன நாள்: பிப்., 19,20. சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட நிறம்: பச்சை வெள்ளை எண்: 1,4
வழிபாடு: விநாயகர் வழிபாடும், பெருமாள் துதியும் உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். ராகு- கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)

Post by M.M.SENTHIL on Thu Feb 20, 2014 4:14 pm

  


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: 'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)

Post by krishnaamma on Thu Feb 20, 2014 4:16 pm

@M.M.SENTHIL wrote:  

நன்றி செந்தில், ஆமாம் நீங்க போன வேலை லாபமா? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)

Post by M.M.SENTHIL on Thu Feb 20, 2014 4:17 pm

@krishnaamma wrote:
@M.M.SENTHIL wrote:  

நன்றி செந்தில், ஆமாம் நீங்க போன வேலை லாபமா? புன்னகை


கிட்டத்தட்ட லாபமென்றே கருதுகிறேன். இன்னும் ஒரு வார காலத்திற்குள் சரியான ஒரு முடிவு கிடைக்கும் அம்மா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: 'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)

Post by krishnaamma on Thu Feb 20, 2014 4:21 pm

@M.M.SENTHIL wrote:
@krishnaamma wrote:
@M.M.SENTHIL wrote:  

நன்றி செந்தில், ஆமாம் நீங்க போன வேலை லாபமா? புன்னகை


கிட்டத்தட்ட லாபமென்றே கருதுகிறேன். இன்னும் ஒரு வார காலத்திற்குள் சரியான ஒரு முடிவு கிடைக்கும் அம்மா.

நல்லது செந்தில்புன்னகை எல்லாம் நலமாக முடிய வாழ்த்துகள் !  அன்பு மலர் 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: 'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum