ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில
 Meeran

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ரயில் நிலையங்களில் எல்.இ.டி., விளக்குகள்:தெற்கு ரயில்வே
 ayyasamy ram

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 ayyasamy ram

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 ayyasamy ram

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 ayyasamy ram

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
 ayyasamy ram

திருச்சி: போக்குவரத்து அதிகாரி வீட்டில் 223 சவரன் நகை பறிமுதல்
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிரம்மன் - திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

பிரம்மன் - திரை விமர்சனம்

Post by சிவா on Sat Feb 22, 2014 4:41 amநடிகர் : சசிகுமார்
நடிகை : லாவண்யா திரிபாதி
இயக்குனர் : சாக்ரடீஸ்
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
ஓளிப்பதிவு : ஜோமோன் டி ஜான் / பைசல் அலி

சிறு வயதிலிருந்தே சினிமாவில் பெரிய இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருகின்றனர் சசிகுமாரும், அவருடைய நெருங்கிய நண்பரான நவீன் சந்திராவும். இதில் நவீன் சந்திரா மட்டும் சென்னையில் சென்று பெரிய இயக்குனராகிவிடுகிறார்.

சசிகுமார் கோயம்புத்தூரிலேயே ஒரு பழைய தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். இதே தியேட்டரில் இவருடைய நண்பன் சந்தானமும் ஆபரேட்டராக பணிபுரிகிறார். நஷ்டத்துடன் இயங்கும் அந்த தியேட்டரை கஷ்டப்பட்டு நடத்தி வரும் சசிகுமார், ஒருநாள் நாயகி லாவண்யா பார்த்ததும் காதல் வயப்பட்டு விடுகிறார். இந்நிலையில், நாயகியின் அண்ணனையே தனது தங்கைக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இதனால், இருவரும் நெருங்கி பழக வாய்ப்பு அதிகமாகிறது.

இருவரும் காதலித்து வரும் நிலையில், ஒருநாள் தியேட்டருக்கு வரிகட்ட வேண்டிய சூழ்நிலை வருகிறது. அதை கட்ட சசிகுமாரிடம் பணம் இல்லை. அதனால், சென்னையில் பெரிய இயக்குனராக இருக்கும் தனது நண்பனிடம் சென்று உதவி கேட்கலாம் என்று சென்னை கிளம்பி வருகிறார்.

சென்னைக்கு வரும் சசிகுமாருக்கு எதிர்பாராத விதமாக ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. முற்றிலும் அனுபவமே இல்லாத சசிகுமாருக்கு சூரி உதவி செய்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய நண்பனான நவீன் சந்திரா தன்னுடைய கதையை படமாக எடுக்க விரும்புகிறான் என்று தெரிந்ததும் தனது நண்பனுக்காக அந்த கதையை விட்டுக் கொடுக்கிறார் சசி.

நண்பனுக்காக விட்டுக்கொடுத்த மகிழ்ச்சியில் சொந்த ஊர் திரும்பும் சசிகுமாருக்கு அங்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. தனது காதலியான லாவண்யாவுக்கும், நண்பன் நவீன் சந்திராவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விடுகிறது. நட்புக்காக தனது காதலையும் துறக்கிறார் சசி.

நட்புக்காக இயக்குனர் கனவு, காதல், தியேட்டர் என எல்லாவற்றையும் இழந்த சசிகுமாரின் வாழ்க்கை என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.

இதுவரையிலான படங்களில் கிராமத்துப் பாணியில் நடித்து வந்த சசிகுமார் இந்த படத்தில் நகரத்துவாசியாக வருகிறார். படம் முழுக்க துறுதுறுவென நடித்திருக்கிறார். காதல், நகைச்சுவை, அடாவடி என அனைத்து அம்சங்களையும் சிறப்பாக செய்திருக்கிறார். தனது முந்தைய படங்களைப்போல இப்படத்திலும் நட்புக்கே முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கிறார். ஆனால், நட்புக்காக கிடைக்கிற பணத்தையெல்லாம் விட்டுக்கொடுப்பது கொஞ்சம் ஓவர்தான்.

நாயகி லாவண்யா அழகாக இருக்கிறார். சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழியில் இன்றைய இளைஞர்கள் விழுவார்கள் என்பது மட்டும் நிச்சயம். நடிப்பிலும் ஓகேதான். தமிழில் ஒரு ரவுண்டு வரலாம்.

முதல்பாதியை கலகலப்பாக நகர்த்தத சந்தானம் மிகவும் உதவியிருக்கிறார். இவரது ஒன்லைன் காமெடி சூப்பர். இரண்டாம் பாதியில் சென்னை வரும் சசியுடன் சூரி சேர்ந்துவிடுகிறார். சினிமாவில் வாய்ப்பு தேடுபவராக வரும் சூரியும், சசியும் சேர்ந்து செய்யும் அலப்பறை இரண்டாம் பாதியை கலகலக்க வைக்கிறது.

ஒரே படத்தில் ஆசை, காதல், நட்பு, தியாகம் என எல்லாவற்றையும் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சாக்ரடீஸ். ஆனால், அதை திரைக்கதையில் சரியாக சொல்ல தடுமாறியிருக்கிறார். இன்றைய தியேட்டர்களின் நிலைமையை அழகாக எடுத்துக் கூறியதற்காக பாராட்டலாம். அதேபோல், சசிக்கும், தியேட்டருக்கும் உண்டான பிணைப்பை அழகாக காட்டியிருக்கிறார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. பின்னணி இசையும் ஓகே ரகம்தான். ஜோமோன் டி ஜான் ஒளிப்பதிவில் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகள் அற்புதமாக இருக்கின்றன.

மொத்தத்தில் ‘பிரம்மன்’ மாற்றம் தேவை.

மாலைமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரம்மன் - திரை விமர்சனம்

Post by சிவா on Sat Feb 22, 2014 4:43 am

சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

வெயில் பட ஹீரோ மாதிரி இந்தப்பட ஹீரோவும் சினிமா தியேட்டரில் தன் வாழ்க்கையை தேடுபவர் தான். அந்த சாயல் வராமல் இருக்க தாவணிக்கனவுகள் பின்பாதி சாயலை மிக்ஸ் பண்ணி எம்.சசிகுமாரின் பிராண்ட் நட்பு, காதல், தியாகம் எல்லாவற்றையும் சேர்த்தால் பிரம்மன் கதை ரெடி.

ஹீரோ பழைய சினிமா தியேட்டரை லீசுக்கு எடுத்து ஓட்டிட்டு இருக்கார். தியேட்டர்ல கூட்டமே வர மாட்டேங்குது. புதுப்படம் தர மாட்டேங்கறாங்க, பழைய படத்துக்கு மக்கள் வர மாட்டேங்கறாங்க. 5 லட்சம் ரூபாய் கடன் ஆகிடுச்சு. சின்ன வயசுல சினிமாக்கனவோட இருந்த சக நண்பன் இப்போ சினிமாவுல புகழ் பெற்ற இயக்குநர்.அவரை சந்திச்சா உதவி கிடைக்கும்னு சென்னை கிளம்புறார்.

சென்னையில எதிர்பாராத விதமா ஹீரோவுக்கு, இயக்குநர் ஆகும் வாய்ப்பே கிடைச்சுடுது. அவரோட கதையை நண்பனுக்காக விட்டுத்தர்றார். காதலியையும் விட்டுத்தர தயார் ஆகறார். கடைசி வரை தான் யார்னு நண்பன் கிட்டே சொல்லவே இல்லை. உண்மை தெரிஞ்ச நண்பன் என்ன முடிவெடுக்கிறான் என்பதே கதை.

இதுவரை கிராமிய மனம் கமழும் படங்களிலேயே நடிச்சு வந்த எம்.சசிகுமார் முதன் முறையாக தைரியமாக நகர கதைக்கு மாறி இருக்கார். பெருசா மாற்றம் தெரியல. தங்கச்சி செண்ட்டிமெண்ட், அம்மா, அப்பாவிடம் பாசம் காட்டுவது அக்மார்க் எம்.ஜி.ஆர் பார்முலாக்கள் வழக்கம் போல் உண்டு. நண்பன் சம்பந்தப்பட்ட வசனங்களுக்கு தியேட்டரில் கை தட்டல் அள்ளுது (இன்னும் எத்தனை நாளுக்கு இதை வெச்சே ஓட்டுவாரோ..?). டூயட் காட்சிகளில் ராஜூ சுந்தரத்தின் தயவில் யதார்த்தமான, கண்ணை உறுத்தாட நடன அசைவுகள். முதன் முறையா பாரீன் லொக்கேசன்ல ஆட்டம்.

ஹீரோயின் புதுமுகம் லாவண்யா த்ரிவேதி. இவர் 2006ல் மிஸ் உத்தர்காண்ட் ஆக தேர்வானவர். மாடலிங்க் துறையில் கொடி கட்டிப்பறந்தவர், சிக் ஷாம்புவின் மாடல். 2012 ல் தெலுங்குப்படத்தில் அறிமுகம் ஆனவர். இஷா கோபிகர் முக அழகு சாயல், தமன்னாவின் முக பாவனைகள் இரண்டையும் கலந்து கட்டி அடித்த நீள் வட்ட நிலா முகம் . பிரமாதமாக நடிக்கா விட்டாலும் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என பட்சி சொல்லுது (இந்த பட்சிக்கு வேலையே இருக்காதா? எப்போ பாரு எதையாவது சொல்லிட்டே இருக்குமா?) இவருக்கு கண்களும், உதடுகளும் சின்னதாக இருந்தாலும் ரசிக்க வைக்கும் நளினங்கள் தான்.

படத்துக்கு பலம் சேர்க்கும் சந்தானம் படத்தின் கதையோடு ஒன்றிய காமெடி செய்கிறார். மொத்தப்படத்திலும் 24 ஜோக்ஸ் தான் சொல்றார் என்றாலும் அப்ளாஸ் அள்ளுறார் .

சூரி, பின் பாதி கதையில் தான் வர்றார். வழக்கம் போல் ஓவராக மொக்கை போடாமல் சுமாராக மொக்கை போடுகிறார்.

எம் சசிகுமார்-ன் நண்பராக வரும் நான் ஈ புகழ் சுதீப் ஒரு கல்லூரியின் கதை ஆர்யா மாதிரி பாடி லேங்குவேஜில் அடக்கி வாசிக்கிறார்.

படத்தில் வசனம் செம ஷார்ப். பின் பாதி திரைக்கதையில் தான் தடுமாறி விட்டார்கள். செயற்கையான சம்பவங்கள், வலிந்து திணிக்கப்பட்ட நண்பன் செண்ட்டிமெண்ட், காதலியை விட்டுத்தரும் ஒட்டாத தியாகம் எடுபடவில்லை. ஆனாலும் சந்தானம் காமெடிக்காகவும், எம்.சசிகுமாருக்காகவும் ஒரு முறை பார்க்கலாம்.

சி.பி.கமெண்ட்: ''பிரம்மன்'' - நேர்த்தியான முன் பாதி, சந்தானம் காமெடி, செயற்கையான நம்ப முடியாத பின் பாதி, நச் வசனம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரம்மன் - திரை விமர்சனம்

Post by சிவா on Sat Feb 22, 2014 4:45 am

ஒட்ட வெட்டிய முடி, வெட்டாமல் விட்ட தாடி என, மிகச் சாதாரண தோற்றத்துடன், திறமையை மட்டும் மூலதனமாக வைத்து,  திரையுலகில் இயக்குநராகவும், நடிகராகவும் முன்னணிக்கு வந்தவர் சசிகுமார்.

அவரது முதல் படம் ‘சுப்பிரமணியபுரம்” படத்தில் நட்பின் ஒரு கோணத்தைக் காட்டி வெற்றி பெற்றவர் தொடர்ந்து தனது ஒவ்வொரு படத்திலும் நட்பின் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டி அவற்றையும் வெற்றிப் படங்களாக மாற்றிக் காட்டியிருக்கின்றார்.

அந்த வரிசையில் “பிரம்மன்” படத்திலும் தனது பால்ய நண்பனுக்காக -அவனது வெற்றிக்காக தனது புகழையும் ஏன் காதலியையும் கூட தியாகம் செய்யும் சிறந்த நண்பனாக வந்து மீண்டும் வெற்றிக் கொடி நாட்டியிருக்கின்றார் சசிகுமார்.

படத்தின் கதை

நவீன யுகத்தில் தமிழகத்தின் ஊர்களில் – அந்த ஊரின் மக்களோடும் வாழ்க்கையோடும் இரண்டறக் கலந்துவிட்ட திரையரங்கங்களின் சோக முடிவு ஏற்கனவே ‘வெயில்’ படத்தில் விரிவாகக் காட்டப்பட்ட ஒன்றுதான் என்றாலும் இந்தப் படத்திலும் அப்படிப்பட்ட ஒரு திரையரங்கத்தைப் பின்னணியில் வைத்து நகைச்சுவைத் தோரணங்களைக் கட்டியிருக்கின்றார்கள்.

கூடவே சந்தானத்தின் கலாய்ப்பும் சேர்ந்தால் கேட்க வேண்டுமா? சசிகுமாரும் சந்தானமும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் – அதோடு சேர்ந்து வளரும் சசிகுமாரின் காதல், அவரது குடும்பப் பின்னணி, தங்கை பாசம், தங்கையின் காதல் என முதல் பாதித் திரைக்கதை விரிகின்றது.

இரண்டாவது பாதியில், வரி கட்ட முடியாமல் மூடப்படும் நிலைமைக்கு ஆளாகும் திரையரங்கைக் காப்பாற்ற சென்னைக்கு படையெடுக்கின்றார் சசிகுமார். அந்தத் திரையரங்கை வைத்து சினிமா கற்று, புகழ் பெற்ற சினிமா இயக்குநராக விளங்கும் தனது பால்ய நண்பனைப் பார்த்து உதவி கேட்க முயற்சிகள் எடுக்கின்றார்.

பிரிந்து போன தனது பால்ய நண்பனைக் கண்டுபிடிக்கும் சசிகுமார், ஏற்கனவே புகழின் உச்சத்தில் திரைப்பட இயக்குநராக இருக்கும் அவனுக்குத் தெரியாமலேயே அவன் மேலும் புகழ் பெறவும் வாழ்க்கையில் முன்னேறவும் உதவிகள் புரிகின்றார். இந்த இடத்தில்தான் இயக்குநரின் மாறுபட்ட சிந்தனையோடு திரைக்கதையும் சூடுபிடிக்கின்றது.

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நண்பனிடம் தன்னை யாரென்று சொல்லாமலேயே அவனுக்கென்று சில தியாகங்கள் செய்கின்றார் சசிகுமார். இறுதியில் தனது காதலியையே தியாகம் செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்படும்போது அவரது முடிவு என்ன, அவரது நண்பன் அவரை எப்படிக் அடையாளம் கண்டு கொள்கின்றான் என்பதையெல்லாம் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

முக்கால் வாசிப் படத்திற்குப் பின்னர் சசிகுமாரின் வழக்கமான நட்பு முகத்திற்கு இன்னொரு கோணத்தில் இயக்குநர் சாக்ரடீஸ், திரைக்கதை வடிவம் கொடுத்து பாராட்டு பெறுகின்றார்.

படத்தின் பலம்


சென்னை செல்லும் சசிகுமாருக்குப் பொருத்தமான நண்பன் கதாபாத்திரமாக, துணை இயக்குநராக வாய்ப்பு தேடி அலையும் சூரியைப் பொருத்தி படத்தின் பின்பாதியிலும் நகைச்சுவைப் பகுதிக்கு சாமர்த்தியமாக செழுமையேற்றியிருக்கின்றார் இயக்குநர் சாக்ரடீஸ்.

சந்தானத்துக்கு இணையான நகைச்சுவையை தனது சினிமா அலம்பல்கள் மூலம் காட்டியிருக்கின்றார் சூரி. ஆனால் சந்தானமும் சூரியும் சந்திப்பது போன்ற காட்சிகள் இறுதிவரையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதாநாயகி லாவண்யா திரிபாதி, முன்னாள் உத்தரகாண்ட் மாநில அழகியாக அழகிப் போட்டியில் வெற்றி பெற்றவராம். அதனால் அழகாகவும் இருக்கின்றார். டப்பிங் குரல் என்பது தெளிவாகத் தெரிகின்றது. தொடர்ந்து கவனம் செலுத்தினால் வாய்ப்புகள் கிடைக்கலாம்.

பால்ய நண்பனாக வரும் புதுமுகம் நவீன் சந்திராவும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கின்றார்.

படத்தின் முன்பாதியில் வரும் சசிகுமாரின் தங்கையின் காதல் படலமும் சிரிப்பை வரவழைக்கின்றது. நெக்லஸ் பார்த்ததும் தங்கை மனம் மாறுவதும், தாலி கட்டும் நேரத்தில் அபூர்வ ராகங்கள் ரஜினிகாந்த் பாணியில் பழைய காதலன் திருமண மண்டபத்தில் நுழைவதும் கலகலப்பூட்டுகின்றது. ஏதோ பரபரப்பாக நடைபெறப் போகின்றது என எதிர்பார்த்தால் அதையும் நகைச்சுவையாக முடித்து வைத்திருக்கின்றார் இயக்குநர்.

படத்தின் பின்பாதியில் காட்டப்படும் சினிமா தயாரிப்பு காட்சிகள் யதார்த்தத்தோடு படமாக்கப்பட்டிருக்கின்றது. சசிகுமாரின் சினிமாக் கதையை தயாரிப்பாளர்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது இயக்குநரின் திறமைக்கு சான்று.

படத்தின் பலவீனங்கள்

சசிகுமாரை சில காட்சிகளில் வழக்கமான ஹீரோவாகவும், வெளிநாட்டுப் பாடல்களோடும் காட்ட முற்பட்டிருப்பது செயற்கைத் தனமான திணிப்பாகத் தெரிகின்றது. கதையோடும் ஒட்டவில்லை.

பாடல் காட்சிகளில் சசிகுமாரை, அவரது காலணி, முகம் என தனித்தனியாக  ஹீரோத்தனமாக காட்ட முற்பட்டிருக்க வேண்டியதில்லை. அப்படியெல்லாம் காட்டப்படாமலேயே முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் அவர் என்பதை அவரும் அவரை வைத்து இயக்குபவர்களும் மறந்துவிடாமல் இருப்பது நல்லது.

வெளிநாட்டு பனிப்பிரதேச பாடல்களில் கூட சசிகுமாரோடு நான்கு ஆண்கள் ஆடுவதை இன்னும் எத்தனை படங்களில் காட்டிக் கொண்டிருக்கப் போகிறார்களோ? சசிகுமார் நீங்களுமா?

முதல் காட்சிகளில் சில கதாபாத்திரங்கள் பற்றியும், சில சம்பவங்கள் பற்றியும் சசிகுமார் விவரிப்பது போரடிப்பதோடு, ஏற்கனவே அவை பல படங்களில் நாம் பார்த்த காட்சிகளாகவும் இருக்கின்றன.

திரையரங்கை வாடகைக்கு எடுத்து வெற்றிகாண முயலும் சசிகுமாரை தந்தையாக வரும் பட்டிமன்றம் புகழ் கு.ஞானசம்பந்தன் பாராட்டாமல் ஒவ்வொரு காட்சியிலும் திட்டுவதும் பொருத்தமானதாக இல்லை.

படத்தின் சண்டைக் காட்சிகள் கூட வேண்டுமென்றே திணிக்கப்பட்டதுபோல் தெரிகின்றன. அதிலும் ஆந்திராவில் சசிகுமார் நண்பர்களோடு தெலுங்குப் படம் பார்க்கும் போது ஏற்படும் சர்ச்சையால் இடம்பெறும் சண்டை தேவையில்லாத திணிப்பு.

படத்தின் தலைப்பு பொருத்தமில்லாத ஒன்று என்றாலும், அதனை வலுக்கட்டாயமாக இறுதிக்காட்சியில் சசிகுமாரின் நண்பன் கூறுவதாக அமைத்திருப்பதிலும் செயற்கைத்தனம் மிளிர்கின்றது.

படத்தின் மற்ற சிறப்பம்சங்கள்

கொஞ்ச காலம் காணாமல் போன பத்மப் பிரியா ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக, பெருத்த உடம்புடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.

சில வித்தியாச நகைச்சுவைகள் குபீர் சிரிப்பை வரவழைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கல்லூரி விரிவுரையாளரிடமே விளக்கம் சொல்லி சசிகுமார் காதல் கடிதம் கொடுப்பது ரசிக்கும்படி இருக்கின்றது. அழகான விரிவுரையாளரிடம் சந்தானமும் கடிதம் கொடுப்பதும் நல்ல கலாய்ப்பு.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையமைப்பு தெலுங்குப் படத்தை ஞாபகப்படுத்துகின்றது. சில பாடல்களில் சசிகுமாருக்கு பொருந்தாத பின்னணிப் பாடகரைப் போட்டுப் பரிட்சை செய்து பார்த்திருக்கின்றார்கள்.

இருந்தாலும், தொடர்ந்து நட்பின் பல்வகைப் பரிமாணங்களைத் தனது திரைப்படங்களில் பரிமாறி வரும் சசிகுமாருக்காகவும், வித்தியாச திரைக்கதைக்காகவும், நகைச்சுவைக் காட்சிகளுக்காகவும் ‘பிரம்மனை’ தைரியமாக திரையரங்குக்குச் சென்று பார்க்கலாம்!

-இரா.முத்தரசன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரம்மன் - திரை விமர்சனம்

Post by M.M.SENTHIL on Sat Feb 22, 2014 2:38 pm

மிக தெளிவான விமர்சனங்கள். நன்றி அண்ணா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: பிரம்மன் - திரை விமர்சனம்

Post by யினியவன் on Sat Feb 22, 2014 4:22 pm

படம் விறுவிறுப்பு இன்றி இழு இழுன்னு இழுத்துச்சுavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பிரம்மன் - திரை விமர்சனம்

Post by சிவா on Sat Feb 22, 2014 7:17 pm

பிரம்மன் திரைப்படத்தை ஆன்லைனில் பார்க்க:

இங்கு அழுத்தவும்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரம்மன் - திரை விமர்சனம்

Post by Muthumohamed on Sun Feb 23, 2014 12:04 am

விமர்சன தகவலுக்கு      
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: பிரம்மன் - திரை விமர்சனம்

Post by ayyasamy ram on Mon Mar 03, 2014 10:58 pm


-
  
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35116
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: பிரம்மன் - திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum