ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

புராணங்களும், அறிவியலும்!

View previous topic View next topic Go down

புராணங்களும், அறிவியலும்!

Post by சிவா on Mon Feb 24, 2014 12:47 pm

புதியவை கண்டுபிடிக்கப்படவேண்டும் என்றால் கனவு காணுங்கள் என்கிறார் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். கனவு காண்பதன் அடிப்படையே கற்பனையில் பிறப்பதுதானே? நமது புராணங்களும் இதிகாசங்களும் வெறும் கற்பனையில் தோன்றியவையே என்று ஒரு சிலர் வாதிடுவது உண்டு. ஆனால் புராணங்களிலும் நமது தமிழ் இலக்கியங்களிலும் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளைக் காண்கிறபோது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

நேரடி ஒளிபரப்பு

எங்கேயோ நடக்கும் விளையாட்டுப் போட்டிகள், கோவில் கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தொலைக்காட்சிகள் இன்று உடனுக்குடன் நேரடியாக ஒளிபரப்புச் செய்கின்றன. இந்த விஞ்ஞான வினோதத்தை வீட்டுக்குள் இருந்தபடியே நாமும் அனுபவித்து வருகிறோம். நேரடி ஒளிபரப்பு நிகழ்வதைப் போன்ற காட்சியை நமது புராணங்களும் அன்றே சொல்லியிருக்கின்றன. சிவபெருமானுக்கும், இமவான் மன்னனின் மகள் பார்வதிக்கும்  இமயமலையில் உள்ள கைலாயத்தில் திருமணம் நடக்கிறது. சீரும் சிறப்புமாக நடந்த அந்தத் திருமணத்தை அகத்திய முனிவர் பொதிகை மலையில் இருந்தபடியே பார்த்துப் பரவசப்பட்டாராம். வடகோடியில் நடந்த ஒரு நிகழ்ச்சியை, தென்கோடியில் இருந்து ஒருவர் உடனுக்குடன் கண்டதும், உள்ளம் களிப்படைந்ததும் நேரடி ஒளிபரப்பு போன்றது அல்லாமல் வேறென்ன?

ஆதிரை என்பவளின் கணவன் சாதுவன் வியாபாரம் நிமித்தமாக நண்பர்களுடன் சேர்ந்து கடல் பயணம் மேற்கொள்கிறான். திடீரென்று கப்பல் மூழ்கிவிடுகிறது. ஆபத்திலிருந்து தப்பித்த சாதுவன், நாகர்கள் எனப்படும் ஆதிவாசிகள் வாழும் ஒரு தீவில் கரையேறு  கிறான். சாதுவனைப் போலவே ஆபத்திலிருந்து தப்பித்த அவனது நண்பர்களில் சிலர் ஊர் திரும்புகின்றனர். சாதுவன் கடலில் மூழ்கிவிட்டதாக ஆதிரையிடம் தெரிவிக்கின்றனர். கணவர் இறந்த பின்பு தான் மட்டும் வாழ்ந்து பயனில்லை என்று மனம் வெதும்பி தீக்குளிக்க முயற்சிக்கிறாள் ஆதிரை.

அப்போது வானத்திலிருந்து ஓர் அசரீரி கேட்கிறது. உன் கணவன் சாகவில்லை, பத்திரமாகத் திரும்பிக் கொண்டிருக்கிறான் என்கிறது அக்குரல். அசரீரியின் வார்த்தையை நம்பிய ஆதிரை, தீக்குளிப்பதை நிறுத்துகிறாள். சாதுவனும் உயிருடன் திரும்புகிறான். இந்த அசரீரியின் வாக்கு எந்தத் தொடர்பும் இல்லாமல் ஒருவர் மற்றவருடன் உரையாட முடியும் என்கிற அறிவியல் உண்மையை உள்ளடக்கியதாகவே தென்படுகிறது. வயர்லெஸ், செல்போன் கருவிகள் வழியாக இன்று நாம் பேச்சுக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், எந்தவிதக் கம்பித் தொடர்பும் இல்லாமல் அன்று அசரீரியின் குரலை ஆதிரை கேட்டு ஆறுதல் அடைந்ததற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லையே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புராணங்களும், அறிவியலும்!

Post by சிவா on Mon Feb 24, 2014 12:47 pm

அணு

அணுவைப் பிளக்க முடியும், அதன்மூலம் ஆற்றலைப் பெறமுடியும் என்கிற கருத்தெல்லாம் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் காலத்துக்குப் பின்னரே உலகில் வலுப்பெற்றது. ஆனால் தமிழ் மூதாட்டி அவ்வையார், அணுவைத் துளைத்து, எழுகடலைப் புகட்டி என்று பாடி அணுவைத் துளைக்க முடியும், அதைப் பிளக்கவும் முடியும் என்கிற உண்மைகளையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே புட்டுப் புட்டு வைத்து விட்டாரே? ராமாயணத்தில் வரும் ஒரு கிளைக்கதையும் அணுவின் தன்மை பற்றிய செய்திக்கு பெரும் ஆதாரம் சேர்ப்பதாக அமைகிறது. புராண காலத்திலேயே அணுக் கொள்கை புழக்கத்தில் இருந்திருக்கிறது என்பதற்கு இவற்றை விட வேறென்ன சான்று வேண்டும்?

அணு குறித்த மேலும் ஒரு வியப்பூட்டும் தகவலும் நமக்குக் கிடைத்திருக்கிறது. மகாபாரதச் சண்டை நடந்த இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதிசயம் என்னவென்றால், அந்த இடத்தில் இப்போதும் கூட கதிரியக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். கதிரியக்கம் வெளிப்படுவதால், அணு ஆயுதங்கள் போன்ற சண்டைக் கருவிகள் மகாபாரத யுத்தத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் யூகிக்கப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புராணங்களும், அறிவியலும்!

Post by சிவா on Mon Feb 24, 2014 12:48 pm

வான்வெளிப் பயணம்

ராவணன் சீதையைக் கவர்ந்து சென்று விடுகிறான். சீதையைக் கவர்ந்த இடத்துக்கு ராமனும், லெட்சுமணனும் வருகிறார்கள். அங்கே தேர்ச்சக்கரங்களின் தடம் மட்டுமே தென்படுகிறது. தடம் போகும் திசையில் இருவரும் நடக்கிறார்கள். சிறிது தூரத்தில் தடம் மறைந்து விடுகிறது. அப்படியானால் தேர் என்னவாயிற்று? ஒன்று பூமிக்குள் புதைந்திருக்க வேண்டும் அல்லது வானத்தில் பறந்திருக்க வேண்டும். ராவணன் சீதையை இலங்கைக்குக் கடத்திச் சென்றது ஊர்ஜிதமாகிவிட்டதால், தேர் பூமிக்குள் புதைய வாய்ப்பேயில்லை. வான்வெளிப் பயணம் மட்டும்தான் ஒரே வழி. அப்படியானால் சிறிது தூரம் ஓடி, பின் மேலெழும்புகிற மாதிரியான வடிவமைப்புடன் ராவணின் தேர் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே ‘ரன்வே’யில் ஓடி பின் ‘டேக் ஆப்’ ஆகிற தற்கால கனரக விமானங்களுக்கெல்லாம் முன்னோடியாக ராவணின் தேர் இருந்திருக்கிறது என்று சொல்லலாம் அல்லவா?

ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்தவரும் கூட அந்தச்  சிந்தனை தனக்கு மட்டுமே சொந்தம் என பெருமையடித்துக் கொள்ள முடியாது. சீவக சிந்தாமணியில் உலவும் கதாபாத்திரமான சச்சந்தனுக்கும் அதில் பங்குண்டு. ஆபத்துக்காலத்தில் தப்பிப்பதற்காக தனது மனைவிக்கு சச்சந்தன் ‘மயில் பொறி’ என்னும் வாகனத்தைப் பரிசளிக்கிறான். ஹெலிகாப்டரைப் போலவே அந்த மயில் பொறியும் நின்ற இடத்திலிருந்து ‘ஜிவ்’வென்று வானத்தில் எழும்பும் இயக்கத்தைப் பெற்றதுதானாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புராணங்களும், அறிவியலும்!

Post by சிவா on Mon Feb 24, 2014 12:49 pm

கண் மருத்துவம்

மருத்துவம் இன்று மலையளவு வளர்ந்திருக்கிறது. மனிதனை அப்படியே நகல் எடுத்துத் தரும் குளோனிங் வரை முன்னேறியிருக்கிறது. மண்ணை விட்டுப் போனாலும் கண்ணை விட்டுச் செல்வோம் என்கிற கோஷம் தற்காலத்தில் உலகில் வலுப்பெற்றிருக்கிறது. ஒருவரது கண்ணை மற்றவருக்குப் பொருத்த முடியும் என்கிற மருத்துவ வளர்ச்சியே அதற்குக் காரணம்.

உலகின் முதல் கண் மருத்துவர் யார் தெரியுமா? சாட்சாத் கண்ணப்ப நாயனார்தான். அவர்தான் முதன்முதலில் கண் மாற்றும் அறுவைச் சிகிச்சையை உலகில் அறிமுகப்படுத்தியவர். கண்ணப்ப நாயனார் சிவபெருமானின் தீவிரத் தொண்டர். சிவனுக்கு தொண்டு செய்வதையே பெரும் பாக்கியமாகக் கருதுபவர். ஒருநாள் சிவலிங்கத்தின் கண்ணிலிருந்து ரத்தம் வழிவதைப் பார்த்துவிடுகிறார். நெஞ்சம் பதறிவிடுகிறார். செய்வதறியாது நின்ற கண்ணப்பரின் மனதில் ஓர் எண்ணம் தோன்றுகிறது. தனது கண்களைப் பிடுங்கி எடுத்து சிவபெருமானின் முகத்தில் ஒட்டுகிறார். உடனே விக்கிரகத்தில் ரத்தம் வழிவது நின்று விடுகிறது. முதல் கண் மாற்று அறுவைச் சிகிச்சை பற்றிய இந்த செய்தி கண்ணப்ப நாயனார் புராணத்தில் வருகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புராணங்களும், அறிவியலும்!

Post by சிவா on Mon Feb 24, 2014 12:49 pm

அண்டங்கள்

மேலும் பல்வேறு புராணங்களும் வெளிப்படுத்தும் ஒரு தகவல், வான்வெளியில் 1008 கோடி அண்டங்கள் உள்ளன என்பதுதான். விஞ்ஞானி கலிலியோ காலத்தின் பின்பே வான்வெளி ஆய்வுகள் உலகில் தீவிரப்படுத்தப்பட்டன. டெலஸ்கோப் அல்லது செயற்கைக்கோள் இன்றி அன்றே எப்படி அண்டங்களைப் பற்றி ஆராய்ந்தார்கள் என்பது புதிராகத்தான் உள்ளது. பூலோக மனிதர்கள் வானலோகம் சென்றதாகவும், வானலோகத் தேவர்கள் பூலோகம் வந்ததாகவும் புராணங்கள் கூறுவது நம்பும்படியாகவா உள்ளது என்று கேட்கலாம். இன்று நிலவில் காலடி வைத்து விட்டானே மனிதன்? செவ்வாய்க் கிரகம் செல்வதற்கும் முயற்சி எடுத்து விட்டானே?

புராணங்களில் வரும் செய்திகளெல்லாம் உண்மையாகி வருவதைப் பார்த்தால், பூலோக மனிதரும், வானலோகப் பிறவிகளும் சந்தித்துக்கொள்ளும் நிலை வரலாம். அப்போது இரு தரப்பினரும் சேர்ந்து விருந்துண்ணும் வைபவங்கள் வானத்தையும் வையத்தையும் தூள் பரத்தலாம்!

தினத்தந்தி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புராணங்களும், அறிவியலும்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum