புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_m10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10 
54 Posts - 59%
heezulia
வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_m10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_m10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10 
3 Posts - 3%
Barushree
வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_m10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_m10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10 
2 Posts - 2%
cordiac
வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_m10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10 
2 Posts - 2%
prajai
வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_m10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_m10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_m10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_m10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10 
181 Posts - 56%
heezulia
வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_m10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_m10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_m10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10 
12 Posts - 4%
prajai
வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_m10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_m10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_m10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10 
2 Posts - 1%
cordiac
வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_m10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_m10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10 
1 Post - 0%
Geethmuru
வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_m10வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வதைபடுதே வளர் இளம் பருவம்???!!!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Mar 04, 2014 10:33 pm

எந்த சமூகத்தில் பெண்கள் சுதந்திரமாகவும் சம உரிமைகளோடும் வாழ்கிறார்களோ, அந்த சமூகத்தில் தான் நல்ல தலைமுறை உருவாகும் என்பார்கள். இலக்கியங்களிலும் புராணங்களிலும் பெண்களை உச்சத்தில் வைத்துப் போற்றுகிற நம் சமூகத்தில் யதார்த்த நிலை மிகவும் சோகமயமானது. குழந்தைப்பருவம் தொட்டு முதுமை வரை எல்லா நிலைகளிலும் வஞ்சிக்கப்படுகிறார்கள் பெண்கள். குடும்பத்திலும் சமூகத்திலும் உருவாகும் எல்லா அழுத்தங்களும் பெண்களையே பெருமளவில் பாதிக்கிறது.



மதுரையைச் சேர்ந்த லிட்டில்ஸ் குழந்தைகள் மைய’மும் சமகல்வி இயக்கமும் இணைந்து நடத்தியுள்ள ஒரு ஆய்வு - வளர் இளம் பருவத்தில் உள்ள பெண்களின் அவல வாழ்க்கையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. கல்வி மறுக்கப்படுதல், வேலை செய்ய நிர்பந்திக்கப்படுதல், குடும்பம் மற்றும் பணிச்சூழலில் பாலியல் முறைகேடுகள், இளவயது திருமணம், குடிகாரக் கணவனிடம் அல்லல்படுதல் என குழந்தைத் தன்மை மாறாத வளர் இளம்பெண்கள் எதிர்கொள்ளும் வெளிச்சம் படாத துயரங்களை அந்த ஆய்வு பதிவு செய்திருக்கிறது.

வளர் இளம் குழந்தைகளின் வறுமையை புரிந்து கொள்ளுதல் என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு தமிழகத்தின் 25 மாவட்டங்களில் 2,436 வளர் இளம்பருவக் குழந்தைகளை இலக்காகக் கொண்டு நடந்தது. அதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார் ஆய்வை ஒருங்கிணைத்த லிட்டில்ஸ் குழந்தைகள் மைய நிர்வாக அறங்காவலர் பர்வதவர்த்தினி. “சில நோக்கங்களை வரையறுத்துக் கொண்டே இந்த ஆய்வை நாங்கள் மேற்கொண்டோம். வளர் இளம் குழந்தைகளின் பிரச்னைகளுக்கு பள்ளி இடை நிற்றலே பிரதான காரணமாக இருக்கிறது. அதற்கான சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் காரணங்களை கண்டறிவதும், வளர் இளம் குழந்தைகளுக்காக அறிவிக்கப்படும் நலத்திட்டங்களில் உள்ள பிரச்னைகளை கண்டறிவதுமே அந்நோக்கங்கள்.

நாங்கள் சந்தித்த வளர் இளம்பருவப் பெண்களில் 112 பேருக்கு படிப்பை இடைநிறுத்தி விட்டு 16 - 17 வயதுக்குள் திருமணம் முடிந்து விட்டது. இவர்களில் பெரும்பாலானவர்கள் 8ம் வகுப்பு வரை படித்திருக்கிறார்கள். அருகில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இல்லாததால் பெற்றோர் படிப்பை நிறுத்தி விட்டு திருமணம் செய்து வைத்து விட்டதாக இப்பெண்கள் சொல்கிறார்கள். பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் டாய்லெட், குடிநீர் வசதி இல்லை. தனியார் பள்ளிகள் வானளாவிய கட்டுமானங்களோடு வளர்ந்து நிற்கிற இக்காலத்தில் அரசுப்பள்ளிகளில் அத்தியாவசியத் தேவையான டாய்லெட்டுகள் கூட இல்லாதது அவலத்தின் உச்சம். அப்படியே இருந்தாலும் ஆசிரியர்கள் மட்டுமே டாய்லெட்டை பயன்படுத்துகிறார்கள். மாணவர்கள் திறந்த வெளியையே பயன்படுத்த வேண்டியிருப்பதால் பல பெண்கள் படிப்பை கைவிட்டுள்ளார்கள்.

கல்விச்சூழலும் படிப்பை இடை விட காரணமாக இருக்கிறது. குறிப்பாக ஆங்கிலம்... 25 மாவட்டங்களில் சந்தித்த 1,760 குழந்தைகளில் பலர் ஆங்கிலத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பள்ளியை விட்டு நின்றதாகச் சொல்கிறார்கள். பரம்பரையாகத் தொடரும் ஏழ்மையான சூழலை மாற்றி வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு மாற்றும் சக்தி கல்விக்குத்தான் உண்டு. அதிலும் பெண்களுக்கு கல்வி ஆயுதம் போலத்தான். ஒரு ஆண் கற்றுக்கொள்வது அவனது தனிப்பட்ட ஆளுமைக்கு மட்டுமே பயன்படும். ஒரு பெண் கற்றுக்கொள்ளும் கல்வியோ, அந்தப் பெண்ணின் மூலம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் பயன்படும். ஆனால், கிராமத்துப் பெண்கள் வாழ்க்கை பழைய மாதிரியே இருக்கிறது. வளர்ச்சி பற்றிய கணக்கெடுப்புகள் எல்லாமே நகர்புற வெளிச்சங்களிலேயே செய்யப்படுகின்றன.

எந்த வெளிச்சமும் படாமல் இருட்டுக்குள் ஆழ்ந்து கிடக்கிற கிராமத்துப் பெண்களின் வாழ்க்கை எந்த கணக்கெடுப்புக்குள்ளும் வராமல் மறைந்து போகிறது. வளர் இளம் பெண்கள் பள்ளியை விட்டு இடை நிற்பது அவர்கள் வாழ்க்கையில் தொடர் விளைவுகளை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் தலித் குடும்பங்களில்தான் பள்ளி இடை நிற்றலும், இளவயது திருமணங்களும் அதிகம் நடக்கின்றன. நானும் எங்க வீட்டுக்காரரும் வேலைக்குப் போனாத்தான் ரெண்டு வேளையாவது சாப்பிடலாம். காலம் கிடக்குற கிடையில வயசுக்கு வந்த பிள்ளையை வீட்டுல தனியா விட்டுட்டுப் போக முடியுமா? அதிலயும் எங்கள மாதிரி ஆட்களுக்கு எது நடந்தாலும் கேட்பார் இல்லை.
-
வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கதுக்கு காலத்தோட எவன் கையிலவாவது புடிச்சுக் கொடுத்துட்டா புள்ள பாதுகாப்பா இருக்கும். நமக்கும் நிம்மதி... என்றார் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தாய். எல்லா குடும்பங்களிலுமே அப்பா குடிகாரராக இருப்பது பெருஞ்சோகம். பல குடும்பங்களில் இந்த குழந்தைகளின் வருமானத்தில்தான் குடும்பமே ஓடுகிறது. பீடி சுற்றவும், பாக்கு பொட்டலம் மடிக்கவும், கரும்பு வெட்டவும், பூப்பறிக்கவும் போகிறார்கள். காலை 6 மணிக்குக் கிளம்பினால் மாலை 6 - 7 மணிக்குத் திரும்புகிறார்கள். ‘சுமங்கலித் திட்டம்’ என்ற பெயரில் நடக்கும் நவீன கொத்தடிமைத் திட்டத்திலும் வளர் இளம் பெண்கள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட வருடங்கள் வேலை செய்தால் இறுதியில் திருமணத்துக்கு உதவும் வகையில் ஒரு தொகை தருவதாக ஆசை காட்டி அழைத்துச் செல்கிறார்கள். அவர்களின் உழைப்பைச் சுரண்டி, அடக்குமுறைகளுக்கு உட்படுத்தி, இறுதியில் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி உதவித்தொகையையும் வழங்காமல் ஏமாற்றி அனுப்புகிறார்கள். பல பெண்கள் சூபர்வைசர்கள், சக பணியாளர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். ‘காதல்’ என்ற பெயரில் ஏமாற்றப்படுகிறார்கள். வேலை செய்யும்போது, கைகளை இழந்த பெண்களும் உண்டு. சிலர் தற்கொலை கூட செய்து கொண்டுள்ளார்கள். மறுக்கப்படுகிற கல்வி, உழைப்புச் சுரண்டல், அத்துமீறல்கள் என வளர் இளம் பெண்கள் மீதான வன்முறை நீள்கிறது. பெரும்பாலான பெண்கள் காலை உணவை சாப்பிடுவதில்லை... இரண்டு வேளை உணவுதான்.

முன்பு பழங்கஞ்சி சாப்பிட்டு விட்டுச் செல்வார்கள். இப்போது எல்லோருமே ரேஷன் அரிசியை நம்பித்தான் இருக்கிறார்கள். அந்த அரிசியில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் சாப்பிட முடியாது. அதனால் காலை சாப்பாடு ‘கட்’ ஆகிவிடுகிறது. வேலை செய்யும் இடத்தில் 11 மணிக்கு வழங்கப்படும் டீ, வடையை நம்பித்தான் செல்கிறார்கள். பெண்களுக்கு வளர் இளம் பருவம் மிகவும் முக்கியமானது. இத்தருணத்தில்தான் உடலில் பெருமளவு மாற்றங்கள் ஏற்படும். திருமண வாழ்க்கையை எதிர்கொள்ளவும், முதுமையை எதிர்கொள்ளவும் தகுந்த சக்தி கிடைப்பதும் இத்தருணத்தில்தான். 3 வேளையும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டிய பருவம். ஆனால், இரண்டு வேளை உணவு. அதிலும் என்ன கிடைக்கிறதோ அதுதான்... இதனால் உடல்நிலை வெகுவாக பாதிக்கப்படுகிறது. வெகு எளிதில் நோய்கள் தொற்றுகின்றன.

தமிழக அளவில் வளர் இளம்பெண்களுக்கு எதிராக சூழல் நிலவுவது சேலம் மாவட்டத்தில்தான். திண்டுக்கல்லில் ஆதிவாசி பெண் குழந்தைகள் பெரிய அளவில் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதிக அளவில் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. திருநெல்வேலியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த வளர் இளம்பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டு நாயக்கர் சமூகப் பெண்களுக்கு அதிக பாதிப்பு நிலவுகிறது. கொடைக்கானல் பகுதியில் பளியர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெற்றோரிடம் பேசினோம்... மத்தவங்களைப் போல இல்லைங்க... எம்புள்ளைய நல்லா பெரிய படிப்பு படிக்க வச்சுப்புட்டோம்... என்று பெருமையாகச் சொன்னார்கள். சரி... பட்டப்படிப்பை எட்டிப்பிடித்து விட்டார்கள் என்ற எண்ணத்தில் என்ன படித்திருக்கிறாள் என்று கேட்டேன். அஞ்சாம் வகுப்பு முடிச்சிட்டா என்றார்கள். அந்த ஊரில் ஐந்தாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கூடம் இல்லை. இப்படித்தான் இருக்கிறது வளர் இளம்பெண்களின் வாழ்க்கைச்சூழல்.

நாங்கள் சந்தித்த பெரும்பாலான வளர் இளம்பெண்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். வேலைக்குச் செல்லும் எல்லோருக்குமே தலைவலி, இருமல், சளி பிரச்னைகள் இருக்கிறது. மாதத்துக்கு இருமுறையாவது காய்ச்சலுக்கு உள்ளாகிறார்கள். சத்துக்குறைவு காரணமாக மாதவிடாய் பிரச்னைகள் இருக்கிறது. ஓவர் பிளீடிங்கால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் நோய் தொற்று ஏற்படுகிறது. அது திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கையையும் பாதிக்கிறது. குழந்தைகள் சத்துக்குறைவாக பிறக்கின்றன. இந்த வளர் இளம்பெண்களின் கணவன்மார்கள் பெரும்பாலும் குடிகாரர்களாக இருப்பது அடுத்த சோகம்.பள்ளியில் இருந்து இடைநின்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் வளர் இளம்பெண்கள் பற்றி அரசாங்கத்திடம் எந்த பதிவுகளும் இல்லை.

இடை நிற்கும் குழந்தைகள் பற்றி பள்ளிகள் எந்த பதிவேட்டையும் பராமரிப்பதில்லை. 18 வயது நிறைவடையாததால் தொழிலாளர் நலத்துறையும் இவர்களை பதிவு செய்வதில்லை. அதனால் எந்த புள்ளிவிவரங்களிலும் இடம்பெறாத, எந்த அடையாளமும் இல்லாத குடிமக்களாகவே இக்குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுக்கென தீட்டப்படுகிற திட்டங்கள் இவர்களைச் சென்றடைவதே இல்லை. இச்சூழலில் வளரும் குழந்தைகள் நிச்சயம் சமூகத்திற்கு எதிரானவர்களாகவே உருவாவார்கள். அவர்களை சரிவர பராமரித்து கல்வி அளித்து வழிகாட்டாமல் தெருவில் விட்டுவிட்டு, அவர்கள் குற்றம் செய்யும்போதுஅதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இது பெரும் அநீதி. இளம் தலைமுறைக்குச் செய்கிற துரோகம்.குழந்தைகளுக்கான வயது வரையறை இங்கே ஒன்றுபோல இல்லை.

அதுவே வளர் இளம்பருவக் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது. சர்வதேச அறிக்கைகள் ‘18 வயது வரை குழந்தைகளே’ என்று சொல்கின்றன. இந்தியாவில் ஒவ்வொரு சட்டமும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் 14 வயதையே கட்டாயக் கல்விக்கான வரம்பாக நிர்ணயிக்கிறது. இளம் சிறார் நீதிச்சட்டமோ ‘18 வயது வரை குழந்தைகளே’ என்கிறது. திருமணச் சட்டம் ஆண்களுக்கு 21 வயதையும் பெண்களுக்கு 18 வயதையும் இறுதி செய்கிறது. ‘16 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுரங்கங்களில் பணியாற்றலாம்’ என்கிறது இந்திய சுரங்கச்சட்டம். குழந்தைத் தொழிலாளர் முறைப்படுத்துதல் சட்டம் ‘14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் வைக்கக் கூடாது’ என்கிறது. தொழிலாளர் சட்டம் ‘18 வயது வரை குழந்தைகளே’ என்கிறது. இந்தக் குழப்பம் ஆண், பெண் இருபாலரின் வளர்ச்சியையுமே பாதிக்கிறது.

15 வயதில் ஒரு குழந்தையை பணிக்கு அமர்த்தினால் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டப்படி குற்றமில்லை. ஆனால், அந்தக் குழந்தைக்கு தொழிலாளர்களுக்கான அங்கீகாரமோ, பாதுகாப்போ கிடைக்காது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களையே அந்தச் சட்டம் தொழிலாளர்களாக அங்கீகரிக்கிறது. முதலில் இந்த முரண்பாடுகளை நீக்கி 18 வயது வரை குழந்தையே என்று அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும். அந்த அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். இந்தியாவில் வளர் இளம்பருவக் குழந்தைகளின் உண்மை நிலை குறித்த விரிவான அறிக்கை வெளியிடப்பட வேண்டும். இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை திருத்தி 6 முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச அருகாமைப் பள்ளியில் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்.

வெறும் எண்களாகக் கூட புலப்படாத வளர் இளம் பருவக் குழந்தைகள் குறித்த புள்ளிவிவரங்கள் அனைத்துத் துறைகளிலும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் மக்கள்தொகை கணக்கெடுப்பில் 14 முதல் 18 வயது வரை உள்ள வளர் இளம் குழந்தைகள் குறித்த தகவலை முறையாக சேகரிக்க வேண்டும். இக்குழந்தைகளை கையாளவும் பயிற்றுவிக்கவும் ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் வழங்க வேண்டும்...



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 05, 2014 3:57 pm

வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! 103459460 வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 05, 2014 6:13 pm

வருத்தம்த்தான் வருக்கிறது இந்த விஷயத்தை அரசு அக்கறையோடு முனைப்போடும் செயல்படவேண்டியிருக்கிறது தமிழகத்தில் நிறையா NGO க்கள் உள்ளது அவர்களும் இந்த விழயத்தில் அக்கறை காட்டினால் விரைவில் இந்த நிலை மாறலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் வதைபடுதே வளர் இளம் பருவம்???!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக