ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 SK

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 SK

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 T.N.Balasubramanian

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

ஆதார் காட்டுங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 ayyasamy ram

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உடலும் உள்ளமும் நலம்தானா! பெண்களூக்கான அசத்தல் அட்வைஸ்!

View previous topic View next topic Go down

உடலும் உள்ளமும் நலம்தானா! பெண்களூக்கான அசத்தல் அட்வைஸ்!

Post by சிவா on Sat Mar 08, 2014 12:19 amகுடும்பத்தில், மகள், மனைவி, சகோதரி, தாய், பாட்டி என்று எந்த வடிவத்தில் இருந்தாலும், பெண் பெருமைக்குரியவள். அழகு, செயல், நளினம், கூர்ந்த அறிவு இவற்றுடன் இயற்கை தந்திருக்கும் 'தாய்மை’ என்னும் பெருங்கொடை.

பிறந்தது முதல் பெண் கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கிய வழிமுறைகள், எச்சரிக்கை விதிமுறைகள், எதிர்கொள்ளும் சவால்கள் எக்கச்சக்கம்.  இன்று, எல்லா வயதுப் பெண்களின் சூழ்நிலைக்கு ஏற்ப பிரச்னைகளும் சவால்களும் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. வீடு, குழந்தைகள், வேலை என எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்து வாழ்வது முக்கியமாகிவிட்டது!

''எந்தப் பிரச்னை வந்தாலும், அதை எதிர்கொள்ளவும், சமாளித்து முன்னேறவும், அடிப்படைத் தேவை ஆரோக்கியம். இந்த ஆரோக்கியத்துக்கான விழிப்பு உணர்வும், அக்கறையும் குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்க வேண்டும். அந்த வயதிலிருந்தே அம்மாதான் ஆரோக்கியப் பாடத்தைக் கற்பிக்க வேண்டும்'' என்கிறார், சென்னை சாய் விமன்’ஸ் கிளினிக்கின் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் தீபா தியாகராஜமூர்த்தி.

பெண்களின் ஆரோக்கியத்துக்கு அவர் தரும் அசத்தல் அட்வைஸ் இதோ...
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் நலம்தானா! பெண்களூக்கான அசத்தல் அட்வைஸ்!

Post by சிவா on Sat Mar 08, 2014 12:19 am

பள்ளிப் பருவம்

உணவின் முக்கியத்துவம், சரியான உணவுப் பழக்கம் இவற்றைக் குழந்தையில் இருந்தே சாதத்துடன் கலந்து குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். அதோடு, 'பெர்சனல் ஹைஜீன்’ எனப்படும் அந்தரங்க ஆரோக்கியத்தின் அவசியத்தை அவசியம் கற்பிக்க வேண்டும்.

அந்தரங்க உறுப்புகளின் சுத்தம், அந்நிய ஆண்களோடு பழகும் விதம், 'குட் டச், பேட் டச்’ போன்ற விஷயங்களைக் குழந்தைக்குக் கற்பிக்க வேண்டிய தருணம் இதுதான். உணவுப் பழக்கம், அளவு மீறிய வளர்ச்சி இவற்றால், பெண் பருவம் அடைவது 8, 9 வயதிலேயே தொடங்கிவிடுகிறது.

இதனால், இனப்பெருக்க உறுப்புகள் குறித்தும், பூப்பெய்துதல், மாதவிலக்கு போன்றவை குறித்தும் குழந்தைக்கு விளக்கிச் சொல்லவேண்டியது தாயின் கடமை. பல சிறுமிகள், பள்ளியில் பாத்ரூம் சுத்தமாக இல்லை என்று, மாதவிலக்கு நாட்களில் 'நாப்கின்’ மாற்றாமலேயே இருக்கின்றனர்.  இதனால் பல தொற்றுகள் ஏற்படலாம். தினமும் மூன்று அல்லது நான்கு முறையாவது நிச்சயம் நாப்கின் மாற்ற வேண்டியது மிக அவசியம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் நலம்தானா! பெண்களூக்கான அசத்தல் அட்வைஸ்!

Post by சிவா on Sat Mar 08, 2014 12:20 am

டீன் ஏஜ் பருவம்

இந்த வயதில் பொதுவாகக் காணப்படும் உடல் பிரச்னை, தேவையற்ற ஊளைச்சதையும், உடல் பருமனும்தான். இதற்கான விழிப்புஉணர்வு அதிகரித்து வந்தாலும், நல்ல உணவுப் பழக்கத்தை நடைமுறையில் கொண்டுவர முடியவில்லை. பிள்ளைகள் சாப்பிடும் உணவு அதிகம். ஆனால், செய்யும் வேலை குறைவு. எடை அதிகரிக்கும்போது, அதன் பக்கவிளைவுகளான சினைப்பை நீர்க்கட்டி (பி.ஸி.ஓ.டி.), அதைத் தொடர்ந்து ஒழுங்கற்ற மாதவிலக்கு என்று ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும்.

இதன் விளைவு உடல் பருமன். மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடுகிறது.  பெண் குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே, சரியான உணவுப்பழக்கத்தை கற்பிப்பதன் மூலம் உடல் எடையைச் சீராக வைத்திருக்கலாம். இதனால், மாதவிலக்கு ஒழுங்காக வருவதுடன், பிற்காலத்தில் வரும் பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

ஜங்க் ஃபுட், சிப்ஸ், நூடுல்ஸ் மற்றும் பேக்கரித் தயாரிப்புகளைத் தவிர்த்து, மாலை ஸ்நாக்ஸ்க்கு பால், பழங்கள், கடலை, பொரி, சுண்டல் என்று மாற்றினாலே, ஆரோக்கிய உணவுப் பழக்கத்துக்கு 'பிள்ளையார் சுழி’ போட்டுவிட்டதாக அர்த்தம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் நலம்தானா! பெண்களூக்கான அசத்தல் அட்வைஸ்!

Post by சிவா on Sat Mar 08, 2014 12:20 am

வேலைக்குச் செல்லும் காலம்

இந்த நூற்றாண்டில், வேலைக்குச் செல்கிற  இளம்பெண்கள் பலர். வேலை நிமித்தம், நகரங்களுக்கு நகரும் பெண்கள், ஹாஸ்டலிலோ, தோழிகளுடன் வீடு எடுத்தோ தங்குகிறார்கள். வீட்டில் உண்ட கொஞ்சநஞ்ச ஆரோக்கிய உணவும், வெளியே தங்கும்போது இன்னும் மோசமாகிவிடுகிறது. வேளைக்குச் சாப்பிடுவது இல்லை. முக்கியமாக, காலை உணவை உண்பதே இல்லை. இரவு வெகு நேரம் விழித்திருப்பது, லேட்டாக எழுந்திருப்பது, குளித்துவிட்டு சாப்பிடாமல் ஓடுவது, தாங்க முடியாத பசியில் மதியம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது... இதெல்லாமே உடல் பருமன், அசிடிட்டி போன்ற பிரச்னைகளுக்குத்தான் வழிவகுக்கும்.  அதீத வேலைப்பளு, அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், குறிப்பிட்ட இலக்கை அடைய, வெறி பிடித்த மாதிரி இரவும் பகலும் வேலை செய்தல், இரவு நேரப் பணி - என்று வாழ்க்கைமுறையும் உணவுமுறையும் மொத்தமாக மாறிவிடுகின்றன. எல்லாவற்றிலுமே அவசரம்!

ரிலாக்ஸ் செய்துகொள்ள கண்டிப்பாக வேறு ஏதேனும் ஒரு விஷயத்தில் மனதைச் செலுத்தலாம்.  இசை, நடனம், நீச்சல், தோட்டம், பயணம்... இப்படி ஏதேனும் ஒரு விஷயத்துக்கு நேரம் ஒதுக்கலாம். மனதுக்கு அமைதி,  உடலுக்கும் பயிற்சி கிடைக்கும். தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படும். மனதையும் உடலையும் ஆசுவாசப்படுத்தும் பயிற்சிகள்தான் அவசியம் தேவை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் நலம்தானா! பெண்களூக்கான அசத்தல் அட்வைஸ்!

Post by சிவா on Sat Mar 08, 2014 12:21 am

மனைவி என்ற பதவி

இருப்பதிலேயே மிக அதிகமான சவாலான கட்டம் இது.  ஒரு பக்கம் அலுவலகம், வேலை... இன்னொரு பக்கம் கணவர், குழந்தை, குடும்பம்... இரண்டையும் சமாளித்து பேலன்ஸ் செய்வதில் திணறிவிடுகின்றனர்.  அதனால் ஏற்படும் மன அழுத்தம், ஆரோக்கியத்தை அச்சுறுத்துகிறது. தவிர, தினமும் நீண்ட தூரப் பயணம், இரவு திரும்ப நெடுநேரம் ஆவதால், வீட்டில் சமைக்க முடியாமல் ஹோட்டலில் சாப்பாடு என இன்றைய வாழ்க்கை முறை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. ஹோட்டல் உணவில், சுவைக்காக சேர்க்கப்படும் நெய், மசாலா, செயற்கை மணமூட்டிகளால், உடம்பு இஷ்டத்துக்குப் பெருக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவும் ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. சிலருக்கு வேலையை முன்னிட்டு, கருத்தரித்தலும் தள்ளிப்போகிறது. உட்கார்ந்தே வேலை பார்ப்பதால்,  முதுகு வலி, இடுப்பு வலி மற்றும் 'போஸ்ச்சர் ரிலேட்டட்’ பிரச்னைகள். பால், தயிர், மோர் அதிகம் எடுக்காததால், நடுத்தர வயது வரும் முன்னரே கால்சியம் குறைபாடும் அதனால் எலும்புகள் வலுவிழத்தலும் ஆரம்பிக்கிறது.

உடல், ஆரோக்கியத்துக்கென இந்தப் பெண்கள் எந்த முயற்சியும் எடுப்பது இல்லை. 24 மணி நேரத்தில் கொஞ்சமே கொஞ்சம் நேரம் அதற்கென ஒதுக்கினால், உடலுக்கும் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

ஊட்டமான உணவு, உடற்பயிற்சி, கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் எலும்புப் பிரச்னைகளைச் சமாளிக்கலாம்.

குழந்தை பெற்ற தாயாக இருப்பின், குறைந்தபட்சம், ஆறு மாதங்களாவது தாய்ப்பால் கொடுக்கவேண்டியது அவசியம். இது குழந்தைக்கு ஊட்டத்தைத் தரும் என்பதுடன், தாய்க்கு மார்பகப் புற்றுநோய் வரும் ஆபத்தையும் குறைக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் நலம்தானா! பெண்களூக்கான அசத்தல் அட்வைஸ்!

Post by சிவா on Sat Mar 08, 2014 12:21 am

மெனோபாஸ் கட்டம்

மெனோபாஸ் ஆக, சராசரி வயது 50தான் என்றாலும், இந்தியப் பெண்களுக்கு அதற்கு முன்னரே வந்துவிடுகிறது. இந்த வயதில் கால்சியம், வைட்டமின் மாத்திரைகள் அவசியம் தேவை. கால்சியம் மாத்திரைகள் அதிகம் எடுத்தால் கிட்னியில் கல் வரும் என்பது தவறான நம்பிக்கை. நாம் எடுக்கும் சிறு அளவுக்கெல்லாம், கட்டாயம் கல் வராது.

பெண்கள் கடைப்பிடிக்க:

போதுமான தூக்கம்தான், நிம்மதியான ஓய்வு. நம்முடைய ஹார்மோன்களுக்கென்று ஒரு ரிதம் உண்டு. சில ஹார்மோன்கள் அதிகாலையிலும் சில ஹார்மோன்கள் இரவிலும் சுரக்கும். எனவே, சரியான நேரத்தில் படுத்து, சரியான நேரத்தில் எழுதல் நல்லது.

யாருமே குடும்பத்தினருக்கென 'தரமான நேரம்’ (Quality time) ஒதுக்குவது இல்லை. ஆரோக்கியத்தின் ஆணிவேரே குடும்பத்தினருடன் கழிப்பதுதான்.  வாரத்தில் ஒரு நாள், எந்தவிதமான நவீன மின்னணு சாதனமும் (Gadgets) பயன்படுத்தாமல், குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியில் செல்வது, வீட்டில் எல்லோருமாக கூடிப் பேசி இளம்வயதில் நடந்த விஷயங்களைப் பகிர்ந்து வாய்விட்டுச் சிரிக்கலாம். அழுத்தத்தை விரட்டும் அருமருந்தும் ஆரோக்கியத்தின் அச்சாணியும் அதுதான்!

- பிரேமா நாராயணன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் நலம்தானா! பெண்களூக்கான அசத்தல் அட்வைஸ்!

Post by சிவா on Sat Mar 08, 2014 12:22 am

தடுப்பு ஊசி.. அவசியம் தேவை!

 கல்யாண வயதில் உள்ள பெண்களுக்கு: திருமணத்துக்கு முன்பே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு ஊசி (Cervical Cancer Vaccine) போடுவதற்கான சரியான வயது இது. இந்தத் தடுப்பு ஊசியை ஒரு பெண், தாம்பத்திய உறவை ஆரம்பிப்பதற்கு முன்னரே போடவேண்டும். 3 டோஸ்களாக, ஆறு மாதத்தில் இதைப் போட்டுக் கொள்ளலாம்.

மார்பகப் புற்றுநோய்க்கான சுய பரிசோதனையை, ஒரு மருத்துவரிடம் முறையாகக் கேட்டு அறிந்துகொண்டு, அதை மாதம் ஒரு முறை வீட்டில் செய்துகொள்ள வேண்டும். 20 வயதிலிருந்து இதை ஆரம்பிக்கலாம்.

45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், 3 வருடங்களுக்கு ஒரு முறை 'மேமோகிராம்’ பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

மெனோபாஸ் பருவத்தில் இருக்கும் பெண்கள், 'பாப்ஸ்மியர் என்னும் பரிசோதனை அல்லது 'லிக்விட் பேஸ்டு சர்வைகல் ஸைட்டலஜி’ (Liquid based cervical cytology) போன்ற எளிய பரிசோதனைகளை, 3 வருடங்களுக்கு ஒரு முறை செய்துகொள்வது நல்லது. இதன் மூலம் கேன்சருக்கு முன்னோடியான செல்களைக் கண்டுபிடித்து, சிகிச்சை அளித்து, சரிசெய்துவிடலாம்.

நீரிழிவு, ரத்த அழுத்தம், தைராய்டு, புற்று நோய் - போன்ற மரபுரீதியான பிரச்னைகள் குடும்பத்தில் யாருக்காவது இருந்தால், 'நமக்கும் வர வாய்ப்பு இருக்கிறதா?’ என்பதை, உரிய நேரத்தில் பரிசோதனைகளை செய்துகொண்டால், நோய்களை வரும் முன் தடுத்திடலாம்.

விகடன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உடலும் உள்ளமும் நலம்தானா! பெண்களூக்கான அசத்தல் அட்வைஸ்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum