ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 SK

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

ஆதார் காட்டுங்க....!!
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 Dr.S.Soundarapandian

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 SK

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 Dr.S.Soundarapandian

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 Dr.S.Soundarapandian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

திரைப் பிரபலங்கள்
 heezulia

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 மூர்த்தி

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

239 பயணிகளோடு மாயமான விமானம்

Post by பாலாஜி on Sat Mar 08, 2014 1:46 pm

First topic message reminder :

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.

மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.

MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


--வெப்துனியா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down


Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by அருண் on Sun Apr 13, 2014 3:59 pm

இன்னும் என்ன புரியாத புதிராவே இருக்கு!
கூடிய சீக்கிரம் விமானம் என்ன ஆனது பயணிகள் என்ன ஆனார்கள் என்று தெரிந்தால் நல்லா இருக்கும்.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Mon Apr 14, 2014 2:40 pm

எம்.எச்.370: கடல் தரை பரப்புக்கு ஆளில்லா நீர்மூழ்கி செல்கிறது

தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி மாயமானதாக கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் முயற்சியில், தற்போது ஆளில்லா நீர்மூழ்கி பயன்படுத்தப்பட இருக்கிறது.

இது குறித்து தேடல் பணியை மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய கடற்படையின் தலைமை தளபதி ஆங்கஸ் ஹூஸ்டன் கூறுகையில், “ கடந்த ஆறு நாட்களாக கடலுக்கு அடியிலிருந்து பதிவாகி வந்த சிக்னல்கள் நின்றுவிட்டது. இது கடலுக்கு அடியில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் என்று நாங்கள் கருதுகிறோம்.

38-ம் நாளான இன்று விமானத்தை தேடும் முயற்சியில், கடலுக்கு அடியில் கருப்புப் பெட்டியை தேடும் பணியில் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் ஈடுபடுத்தப்பட உள்ளது.

கடலின் அடியில் தரைப் பரப்பில் இந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் ஏதும் இருக்கிறதா என்று தேடும் முயற்சியில், புளூபின் 21 என்ற ஆளில்லா நீர்மூழ்கி இன்று மதியத்திற்குள் பயன்படுத்தப்படும். இந்த ஆளில்லா நீர்மூழ்கியுடன் சைட் ஸ்கேன் சோனார் கருவி இணைக்கப்படும். இந்த கருவி ஒலி வடிவில் வெளியாகும் சப்தங்களை கொண்டு அதன் படத்தினை உருவாக்கி வெளியிடும் தொழில்நுட்பம் கொண்டது. ஆளில்லா நீர்மூழ்கியுடன் கடலின் தரைப் பரப்பிற்கு இந்த கருவி சென்றடைய 16 மணி நேரம் ஆகும், அடுத்த இரண்டு மணி நேரங்களில் இவை தனது பணிகளை மேற்கொள்ளும்.

இது வரை, விமானத்தின் கருப்புப் பெட்டி ஒலிப்பதிவுக் கருவிகளிலிருந்து வரும் சிக்னல்களை கவனித்து அதைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில், கப்பலால் இழுத்துச் செல்லப்பட்ட கருவிகளே பயன்படுத்தப்பட்டு வந்தன.

இன்று முதல் ஆஸ்திரேலிய பாதுகாப்புக் கப்பலான, 'ஓஷன் ஷீல்ட்' தனது இழுவைக் கருவி மூலம் தேடும் முயற்சியை நிறுத்திக்கொள்ளும். இனி ஆளில்லா நீர்மூழ்கியான, புளூபின் 21 இந்த தேடல் வேலையை மேற்கொள்ளும்.” என்று அவர் கூறினார்.

கடந்த சில நாட்களாக 'சோனார்' நீர்முழ்கி இயந்திரத்தில் சில இடைவேளைகளில் பதிவான சிக்னல்கள் தற்போது நின்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கருப்புப் பெட்டியின் பேட்டரி காலாவதி ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அந்த விமானம் ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடல் பகுதியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட 8 நாடுகளின் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by T.N.Balasubramanian on Sat Apr 19, 2014 7:09 pm

அதிசயம் நடக்கலாம்.. விமான தேடுதலில் முக்கிய கட்டம் வந்துவிட்டது: மீண்டும் மலேசிய அமைச்சர்
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளோம் என்று அந்த நாட்டு போக்குரத்து அமைச்சர் ஹிஸ்முதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். 239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மார்ச் 8ந் தேதி திடீரென மாயமானது. இதுவரை விமானம் என்ன ஆனது, அதிலிருந்த பயணிகளின் கதி என்ன என்பது குறித்த மர்மம் விலகவில்லை. இதுகுறித்து மலேசிய அமைச்சர் லிஸ்முதீன் ஹூசைன் இன்று கூறுகையில், இன்றும் நாளையும் நடைபெறும் தேடுதல் பணிகள் முக்கிய கட்டத்தை எட்டிவிட்டது என்பதை உலகுக்கு உணர்த்துவோ. உலகம் எங்கும் உள்ள மக்கள் அதிசயம் நடக்க வேண்டிக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார். ஆஸ்திரேலிய கடற்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மர்மப்பொருள் கடலுக்கு அடியில் இருப்பது போன்ற தகவல் கிடைத்திருந்தது. ஆனால் அதுகுறித்த தேடுதலில் எந்த பொருளையும் கண்டெடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் மேற்கு கடலோர பகுதியில் விமானம் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ள நிலையில் மலேசிய அமைச்சரின் பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

நன்றி :தட்ஸ் தமிழ்
ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21550
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Tue Apr 22, 2014 4:44 pm

அரசாங்கம் எதை மறைக்கிறது? மீண்டும் வினவுகிறார் அன்வார்

விவகாரத்தில் அரசாங்கம் எதையோ மூடிமறைப்பதாக எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் தொடர்ந்து குறைகூறி வருகிறார்.

அப்படிச் சொல்லிச் சொல்லியே அவர் அரசியல் லாபம் தேட முயல்வதாக அரசாங்க அதிகாரிகள் குற்றம்சாட்டியபோதும் அன்வார் விடாமல் அதைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

“எவ்வளவு காலத்துக்குத்தான் தகவலை வெளியில் சொல்லாமல் வைத்துக்கொள்ளப் போகிறார்கள்? எதற்குப் பயப்படுகிறார்கள்?”, என்று அன்வார் நேற்றிரவு ஈப்போ ரீபோர்மாசி பேரணியிலும் அதே கேள்வியை மீண்டும் தொடுத்தார். .

“எது திருடப்பட்டது, எது சீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது? (பிரதமர்) நஜிப் அப்துல் ரசாக், தயவு செய்து சொல்ல வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டதாக பிகேஆர் கட்சி நாளேடான கெஅடிலான் கூறிற்று.

பெய்ஜிங் சென்ற அவ்விமானத்தில் கொண்டுசெல்லப்பட்ட சரக்குகளின் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

எம்ஏஎஸ் இதுவரை, அதில் நான்கு டன் மங்குஸ்தான் (Mangosteen) பழமும் 200கிலோ கிராம் lithium-ion மின்கலங்களும் ஏற்றிச் செல்லப்பட்டதை மட்டுமே வெளியில் தெரிவித்துள்ளது.

முழு சரக்குப் பட்டியலை வெளியிட அது மறுத்து விட்டது. கேட்டால் விசாரணை நடப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Tue Apr 22, 2014 11:54 pm

மோசமான வானிலை மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி நிறுத்தம்

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.

சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ தீவுக்கு 250 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட தகவல் வெளியானது முதல், இதுவரை பல்வேறு முரண்பட்ட தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன. மலேசிய விமானம் MH370 மாயமாய் மறைந்து போய் இன்றோடு 45 நாட்கள் ஆகின்றது.

இதுவரை எட்டு நாடுகளின் மீட்பு படைகள் இரவு பகலாக கடலின் அனைத்து பகுதிகளிலும் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால், விமானத்தை தேடும் பணியை நிறுத்தப்போவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

விமானத்தின் கருப்புப்பெட்டியின் பேட்டரி செயல் இழக்கும் காலம் ஆகிவிட்டதாலும், கடல்பகுதியில் தற்போது வானிலை மிகவும் மோசமாக இருப்பதாலும், தேடும் பணி நிறுத்தப்படுவதாக மீட்பு படையினர் கூறியுள்ளனர். மேலும் இதுவரை கடல்பகுதியை அலசிவிட்டதாகவும், இந்திய பெருங்கடலில் 4000 அடி ஆழம் வரையிலும், சுமார் 50,000 சதுர கி.மீ பரப்பளவில் தேடுதல் பணியை முடித்துவிட்டதாகவும் கூறிய மீட்புப்படையினர்கள், தேடுதல் வேட்டையில் தோல்வி அடைந்துவிட்டதாக கூறினர்.

மேலும் MH370 விமானம் கடலில் விழுந்ததா? என்பதே உறுதியாக தெரியாத நிலையில் இனிமேலும் கடலில் தேடிக்கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இருக்கபோவதில்லை என்று தாங்கள் முடிவெடுத்து இருப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர். மலேசிய அரசும் தேடுதல் பணியை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Wed Apr 23, 2014 9:25 amஇதுவரை எட்டு நாடுகளின் மீட்பு படைகள் இரவு பகலாக கடலின் அனைத்து பகுதிகளிலும் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால், விமானத்தை தேடும் பணியை நிறுத்தப்போவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.


அது அவ்வளவு தான் அதை தேடி கண்டு பிடிப்பது என்பது இனி மேல் இயலாத காரியம் ..மீண்டும் தேட சென்று பணத்தை விரயம் செய்வதை விட அதை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கலாம்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by கிருஷ்ணா on Wed Apr 23, 2014 4:58 pm

பாதிக்கப்பட்டவர்களே எங்களுக்கு பணம் வேண்டாம்,விமானம் கடலில் விழுந்துவிட்டது அல்லது விபத்துக்குள்ளாகிவிட்டது என்பதற்கு ஏதாவதொரு ஆதாரம் கொடுங்கள் எனக் கூறும்பொழுது என்ன செய்ய முடியும். அவர்கள் கேட்பதும் நியாயம்தானே.
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Wed Apr 23, 2014 6:47 pm

@கிருஷ்ணா wrote:[link="/t108708p150-mh370#1059566"]பாதிக்கப்பட்டவர்களே எங்களுக்கு பணம் வேண்டாம்,விமானம் கடலில் விழுந்துவிட்டது அல்லது விபத்துக்குள்ளாகிவிட்டது என்பதற்கு ஏதாவதொரு ஆதாரம் கொடுங்கள் எனக் கூறும்பொழுது என்ன செய்ய முடியும். அவர்கள் கேட்பதும் நியாயம்தானே.

அது கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டு விட்டது ..இதற்கு மேலும் வதந்திகளை நம்புவது முட்டாள்தனம்..

உறுதி செய்வது என்பது இயலாத காரியம் ..மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் ..

ரோல்ஸ் Royce என்ஜின் தகவல் மற்றும் satellite feed மூலம் கிடைத்த தகவலின் படி விமானம் கடலில் தான் விழுந்தது
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by கிருஷ்ணா on Thu Apr 24, 2014 1:08 pm

உறுதி செய்வது இயலாத காரியம் என்றால், எப்படி உறுதி செய்யப்பட்டது. ஆதாரம் தர இயலாது ஆனால் உறுதியாக கூறுகிறேன் என்றால் எப்படி நம்புவது. அதைதான் உறவினர்கள் கேட்கின்றனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றால், நம்பக்கூடிய ஆதாரம் தாருங்கள் என்கிறார்கள். ஏன் முன்னுக்குப்பின் முரணான செய்திகளை வெளியிடுகிறார்கள். ஏன் முழு சரக்குப்பட்டியலைக் கூற இயலவில்லை. சந்தேகப்படுமாறு நடந்து கொள்வோம் ஆனால் சந்தேகப்படக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம். உறவினர்களை இழந்தவர்கள் இழந்தோமா இல்லையா என தவிப்பது முட்டாள்தனம் அல்ல, உயிரோடு இருக்கமாட்டார்களா எனும் நப்பசையாகத்தான் எனக்குத்தோன்றுகிறது.
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Thu Apr 24, 2014 3:45 pm

சரியாகக் கூறியுள்ளார்கள் கிருஷ்ணா.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by பாலாஜி on Thu Apr 24, 2014 7:49 pm

@கிருஷ்ணா wrote:[link="/t108708p150-mh370#1059670"]உறுதி செய்வது இயலாத காரியம் என்றால், எப்படி உறுதி செய்யப்பட்டது. ஆதாரம் தர இயலாது ஆனால் உறுதியாக கூறுகிறேன் என்றால் எப்படி நம்புவது. அதைதான் உறவினர்கள் கேட்கின்றனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றால், நம்பக்கூடிய ஆதாரம் தாருங்கள் என்கிறார்கள். ஏன் முன்னுக்குப்பின் முரணான செய்திகளை வெளியிடுகிறார்கள். ஏன் முழு சரக்குப்பட்டியலைக் கூற இயலவில்லை. சந்தேகப்படுமாறு நடந்து கொள்வோம் ஆனால் சந்தேகப்படக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம். உறவினர்களை இழந்தவர்கள் இழந்தோமா இல்லையா என தவிப்பது முட்டாள்தனம் அல்ல, உயிரோடு இருக்கமாட்டார்களா எனும் நப்பசையாகத்தான் எனக்குத்தோன்றுகிறது.

ஆமோதித்தல்
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Thu Apr 24, 2014 9:22 pm

@கிருஷ்ணா wrote:[link="/t108708p150-mh370#1059670"]உறுதி செய்வது இயலாத காரியம் என்றால், எப்படி உறுதி செய்யப்பட்டது. ஆதாரம் தர இயலாது ஆனால் உறுதியாக கூறுகிறேன் என்றால் எப்படி நம்புவது. அதைதான் உறவினர்கள் கேட்கின்றனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றால், நம்பக்கூடிய ஆதாரம் தாருங்கள் என்கிறார்கள். ஏன் முன்னுக்குப்பின் முரணான செய்திகளை வெளியிடுகிறார்கள். ஏன் முழு சரக்குப்பட்டியலைக் கூற இயலவில்லை. சந்தேகப்படுமாறு நடந்து கொள்வோம் ஆனால் சந்தேகப்படக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம். உறவினர்களை இழந்தவர்கள் இழந்தோமா இல்லையா என தவிப்பது முட்டாள்தனம் அல்ல, உயிரோடு இருக்கமாட்டார்களா எனும் நப்பசையாகத்தான் எனக்குத்தோன்றுகிறது.

எந்த மாதிரியான ஆதாரம் எதிர்பார்க்கிறீர்கள் ..?

ரோல்ஸ் Royce என்ஜின் தகவல் மற்றும் satellite feed மூலம் கிடைத்த தகவலின் படி விமானம் கடலில் தான் விழுந்தது

மேலும் AUV -க்களால் 11000 அடி ஆழம் வரை தான் செல்ல முடியும் ..ஆனால் விமானம் விழுந்த இடம் அதை விட ஆழமான பகுதி . மேலும் கடலடி நீரோட்டத்திலும் அடித்து செல்லப்படும் வாய்ப்புகளும் அதிகம்.

கார்கோ விபரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது

1. 3 முதல் 4 டன் வரை மங்குஸ்தீன் பழம்
2. எளிதில் தீப்பற்றக் கூடிய Lithium ion Batteries

இவை அனைத்தும் ICAO விதிமுறைப்படி பரிசோதிக்கப்பட்டு தான் விமானத்தில் ஏற்றப்பட்டது ..

மீண்டும் ஒரு முறை... வதந்திகளை நம்ப வேண்டாம்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by கோ. செந்தில்குமார் on Thu Apr 24, 2014 10:20 pm

அறிவியல் வளர்ந்த இந்த நவீன யுகத்தில் காணாமல் போன ஒரு விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மிகவும் கேவலமான விடயம்...!
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Thu Apr 24, 2014 10:38 pm

@கோ. செந்தில்குமார் wrote:[link="/t108708p150-mh370#1059735"]அறிவியல் வளர்ந்த இந்த நவீன யுகத்தில் காணாமல் போன ஒரு விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மிகவும் கேவலமான விடயம்...!

கடலுக்கு அடியில் மலை இடுக்குகளில் 11000 அடி ஆழத்தில் இருப்பதை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை ..

இதில் கேவலப்பட என்ன இருக்கிறது ...?
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Thu Apr 24, 2014 11:57 pm

 ஆப்கானிஸ்தானில் எம்எச்370 விமானமா? ஆராயும்படி பயணிகளின் குடும்ப உறுப்பினர் வேண்டுகோள்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 24 – காணாமல் போன எம்.எச். 370 விமானம் ஆப்கானிஸ்தானில் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்று அவ்விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்ப உறுப்பினர்கள் மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முன்னதாக மர்மமான முறையில் காணாமல் போன மலேசிய அரசாங்கத்திற்கு சொந்தமான எம்.எச்.370 விமானம் தெற்காசிய நாடுகளில் ஒன்றான ஆப்கானில் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்று ரஷ்ய உளவுத் துறை நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் அவ்விமானத்தை ஆப்கானிஸ்தானில் தேடுமாறு மலேசிய அரசாங்கத்திற்கும், இடைக்கால போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுடினுக்கும் பிரதமருக்கும் கடந்த ஏப்ரல் 14இல் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இந்தியப் பெருங்கடலில் சமிக்ஞைகள் கிடைக்கப் பெற்றதையடுத்து அங்கு தீவிர தேடும் பணியில் ஆஸ்திரேலியா நாட்டினரும் அனைத்துலக குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.

எம்.எச்.370 விமானம் காணாமல் போய் 47 நாட்கள் ஆகியும் எந்தவொரு தடயமும் இதுவரை கிடைக்கவில்லை.

இதனிடையே, காணாமல் போன எம்.எச்.370 விமானத்தை தேடுவதற்கு அரசாங்கம் அனைத்துலக குழு ஒன்றை நியமித்துள்ளதாக இடைக்கால போக்குவரத்து துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by கிருஷ்ணா on Fri Apr 25, 2014 12:55 pm


கோலாலம்பூர், ஏப்ரல் 25- MH370 விமானத்தின் பயணிகள் இறந்து விட்டதாக உறுதி செய்ய மலேசியா தயாராக இல்லை என பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
“நான் பிறகு அறிவிப்பேன். தற்போதைக்கு பயணிகளின் உறவினர்களின் உணர்வுகளைக் கருத்தில்கொள்கிறேன். உறுதியான ஓர் ஆதாரம் கிடைக்காதவரை அவர்கள் அந்த செய்தியை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கமாட்டார்கள்” என CNN செய்தியாளர் ரிச்சர்ட் குவெஸ்டுடனான நேர்க்காணலின் போது பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் இவ்வாறு தெரிவித்தார்.
MH370 விமானம் காணாமல் போன விவகாரம் தொடர்பாக அரசாங்கம் அடுத்தவாரம் பூர்வாங்க அறிக்கை ஒன்றை வெளியிடும் என்றும் பிரதமர் நஜீப் அந்த நேர்க்காணலின் போது தெரிவித்தார்.

அதே அறிக்கை ஏற்கெனவே ஐ.நா சபைக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் பிரதமர் கூறினார்.
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Sat Apr 26, 2014 10:10 pm

எம்.எச் 370: 50வது நாளாக முன்னேற்றமின்றி தொடரும் தேடல்

நடுவானில் மாயமான எம்.எச். 370 மலேசிய விமானத்தை தேடும் பணி இன்றுடன் 50-வது நாளாக எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் தொடர்கிறது.

இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் நொறுங்கி விழுந்திருக்கலாம் என்ற யூகத்துடன் ஆஸ்திரேலிய கடற்படையுடன் அமெரிக்க கடற்படை விமானம் ஒன்றும் தேடலில் ஈடுப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தேடல் இன்றுடன் 50-வது நாளாக எந்த முன்னேற்றமும் இன்றி தொடர்ந்து வருகிறது.

உலக நாடுகளின் தேடுதல் வேட்டை:

ஆஸ்திரேலிய கடற்படையின் கூட்டு நிறுவனமான ஜே.ஏ.சி.சி. (JACC) தளபதி ஆங்கஸ் ஹவ்ஸ்டன் தலைமையில், தொடர்ந்து மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.

உடைந்த பாகங்கள் போன்ற சில உதிரிப் பாகங்கள் தெற்கு இந்திய கடலில் காணப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் தேடல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக கறுப்புப் பெட்டியின் சிக்னல்கள் சில இடைவேளைகளில் அதே இடத்தில் பதிவானதை அடுத்து அங்கு அமெரிக்காவின் சோனார், இங்கிலாந்தின் பிளு பின் - 24 போன்ற கருவிகள் சிக்னலை பதிவு செய்து, பின்னர் அந்த பகுதிக்கு தேடல் வட்டம் சுறுக்கிகொள்ளப்பட்டது.

கறுப்புப் பெட்டி செயலிழந்தது

விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டுபிடிக்கும் முயற்சியில்,அமெரிக்க கணித வல்லுனர்களும் ஈடுபட்டுனர். தேடலில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் மிகவும் நம்பிக்கைக்குரிய தகவல் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படை கப்பல் கேடயம் இரண்டு மணி நேரத்தில் இரண்டுக்கும் அதிகமான சிக்னல்களை கண்டறிந்துள்ளது. கடல் பரப்பிலிருந்து சரியாக 4,500 மீட்டர் கீழே இந்த சிக்னல் கருவியில் பதிவானது.

இருப்பினும் கறுப்புப் பெட்டியின் சிக்னலை ப்ளுபின் - 21 என்ற கருவியால் நெருங்க முடியவில்லை. இந்த நிலையில் கறுப்புப் பெட்டியிலிருந்து வெளியான சிக்னல்கள் திடீரென நின்றது. கருப்புப் பெட்டியின் பேட்டரி ஒரு மாததிற்கு மட்டும் செயல்படும் பின்னர் அது காலாவதி ஆக விடும் என்ற நிலையில், சிக்னல் பதிவு நின்ற நிகழ்வு பெறும் பின்னடைவாக கருதப்பட்டது.

இதனை அடுத்து, ஆஸ்திரேலியாவின் பிரதமர் டோனி அபாட், "காணாமல் போன விமானத்திற்கு என்ன ஆனது என்பதை கண்டறியும் பணியை எமது நாடு கைவிடப் போவதில்லை.

எம்.எச்-370 விமானத்திற்குள்ளே என்ன நடந்தது என்பதை கண்டறிய முடியுமா என்பதில் நாங்கள் நம்பிக்கையற்ற நிலையிலேயே உள்ளோம்" என்றார்.

தேடலுக்கு முட்டுக்கட்டை:


தேடலில் மேற்கொள்ளப்பட்ட தொடக்கம் முதல் தற்சமயம் வரை தெற்கு இந்திய பெருங்கடலில் அடிக்கடி நிகழ்ந்த வானிலை மாற்றம், புயல் சின்னம் போன்ற காரணத்தால் எம்.எச்.370 மலேசிய விமானத்தை தேடும் பணி பல முறை நிறுத்தப்பட்டது. கறுப்புப் பெட்டி இருப்பதாக கணிக்கப்பட்ட கடற்பரப்பின் தரைப்பரப்பிற்கு ஆளில்லா நீர்மூழ்கி அனுப்பப்பட்டது, முதன் முறை பாதையிலிருந்து விலகி பாதி வழியில் கடல்மட்டத்திற்கு வந்த அந்த இயந்திரம், மீண்டும் திட்டமிடப்பட்டு தரைப்பரப்பிற்கு அனுப்பப்பட்டது.

இந்த ஆளில்லா நீர்மூழ்கி 7 முறை ஆழ்கடலுக்குள் சென்றும் தகவல்கள் ஏதும் கிடைக்காத நிலையில், டைட்டானிக் கப்பலின் பாகங்களை தேட பயன்படுத்தப்பட்ட அதிநவீன உத்திகளை இந்த தேடலுக்கு பயன்படுத்த ஆஸ்திரேலிய கடற்படை நிறுவனம் திட்டமிட்டுவருகிறது.

இந்த நிலையில் இந்திய பெருங்கடலின் 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த புதிய தேடுல் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதில் 8 நாடுளின் 10 கப்பல்கள், 8 விமானங்கள், 49 ஆயிரம் சதுர கிலோமீட்டரில் இடைவேளைகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேடல் இன்றுடன் 50- வது நாளாக எந்த ஒரு உறுதியான தகவலும் இன்றி நீடிக்கிறது.

புளுபின்21-நீர்மூழ்கி மூலம் ஆழ்கடலிலும் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. விமான தேடுதல் குறித்து மலேசிய அரசு இதுவரை எந்த தகவலையும் வெளியிட வில்லை. இதனால் எம்எச் 370 விமான பயணிகளின் உறவினர்கள் அனைவரும் கோபத்தில் உள்ளனர். இதை தொடர்ந்து மலேசிய பிரதமர் நிஜாப் ராசாக் விமானம் காணாமல் போனதற்கான காரணம் அதை தேடும் பணி கூறித்த நிலவரம் குறித்து அடுத்தவாரம் அறிக்கை வெளியிடப்படும் என கூறி உள்ளார்.

இது குறித்து அவர், ‘’மலேசிய அரசு மற்றும் ஐ நா சர்வதேச விசாரணைக்குழு நிபுணர்கள் தயாரித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியிடக்கூடிய வாய்ப்பு உள்ளது. சர்வதேச விசாரணைக்குழு தாங்கள் சேகரித்த தகவல்களை அடுத்த வாரம் பொதுமக்களுக்கு வெளியிடுவார்கள்’’ என்றார். விமானத்தில் சென்ற பயணிகளின் உறவினர்கள் மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்டதை அடுத்து மலேசிய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by விஸ்வாஜீ on Sat Apr 26, 2014 10:30 pm

காணாமல் போன விமானத்தை பற்றிய செய்திகள் இங்கு வந்தால்
தெரிந்து கொள்ள முடிகிறது. விமானத்தை பற்றிய செய்திகள்
நாளேடுகளில் வருவதில்லை
நன்றி
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1339
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Thu May 01, 2014 5:45 am

மாயமான விமானம் தொடர்பாக முதல் கட்ட அறிக்கை நாளை வெளியீடுகிறது மலேசியா

மாயமான விமானம் தொடர்பான மிகவும் எதிர்பார்க்கப்படும் முதற்கட்ட அறிக்கை நாளை வெளியிடப்படும் என தெரிகிறது.

கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ந்தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், பல்வேறு நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

விமானம் மற்றும் அதன் கறுப்பு பெட்டியை தேடும் பணியில், அமெரிக்காவின் புளூபின்-21 என்ற நீர்மூழ்கி ரோபோவும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த ரோபோ 14 முறை நீருக்குள் சென்று தகவல்களை சேகரித்து வந்தது. எனினும் விமானம் குறித்தோ, அதன் கறுப்பு பெட்டியை குறித்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் விமானத்தை தேடும் பணி நடைபெறும் பகுதியில் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தொடங்கப்பட்டது. விமானம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், மாயமான விமானம் தொடர்பாக முதல் கட்ட அறிக்கையை நாளை மலேசியா வெளியீடுகிறது.இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்த போக்குவரத்து துறை அமைச்சர் ஹிசாமுதின் ஹிசான் தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Fri May 02, 2014 5:20 am

மாயமான மலேசிய விமானம்: பயணிகளின் உறவினர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்

கோலாலம்பூர்: மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, மார்ச், 8ல், சீனாவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் மாயமானது. 239 பேருடன் சென்ற விமானம், இந்திய பெருங்கடலில், ஆஸ்திரேலியா அருகே, விழுந்திருக்கலாம், என்ற நம்பிக்கையில், தேடும் பணி நடக்கிறது.

விமானத்தில் பயணத்தவர்களுடைய, உறவினர்கள், கோலாலம்பூரில் உள்ள ஓட்டல்களில் தங்கியுள்ளனர். உறவினர்களை பற்றிய தகவல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் அங்கு தங்கியுள்ளனர். இதற்குரிய செலவை, மலேசியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் ஏற்றுள்ளது.

மாயமான விமானம் குறித்து, இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.எனவே, உறவினர்கள் வீணாக இங்கு காத்திருக்காமல், வீடுகளுக்கு திரும்பி செல்லும்படி, மலேசியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

'உடனடியாக வீடுகளுக்கு திரும்பி செல்லும் உறவினர்களுக்கு, விபத்தில் மறைந்த பயணிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படும்' என, மலேசியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, விமானம் மாயமானது குறித்த முதல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Sat May 03, 2014 6:07 am

காத்திருக்கும் உறவினர்கள் அலறல், அழுகை, ஆவேசம்!

காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் பீஜிங் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். ஏர்லைன்ஸ் திடீரென அவர்களை வீட்டிற்குச் செல்லுமாறும் விமானம் குறித்த தகவல்களை வீட்டிலிருந்தே தெரிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியது. இதனால் உறவினர்கள் ஆவேசத்தில் கூச்சலிட்டு, அலறி, அழுது தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

"நாங்கள் என்ஙே செல்வது?" என்கிறார் ஒரு உறவினர். "எங்கள் குடும்பத்தவர்களை யார் மீட்டுக் கொடுப்பார்கள்?" என்று மற்றவர்களும் உணர்ச்சிவசப்பட்டு மனம் உடைந்து அழத் தொடங்கியுள்ளனர்.

பீஜிங் விடுதியில் காணாமல் போன விமானப் பயணிகளை மலேசிய ஏர்லைன்ஸ் லிடோ என்ற விடுதியில் தங்க ஏற்பாடுகள் செய்திருந்தது. அதாவது மார்ச் மாதம் முதல் இவர்கள் இங்குதான் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த உதவி மையத்தை மூடுவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் விமானம் குறித்த எந்த ஒரு உருப்படியான தகவலையும் மலேசிய அரசால் அளிக்க முடியவில்லை. இதனையடுத்தே உறவினர்களை விடுதியை காலி செய்து வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. பில் பழுத்து விடும் என்ற நிலையிலேயே விமான நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

மலேசியன் ஏர்லைன்ஸ் சி.இ.ஓ. இந்த அறிவிப்பை வீடியோ மூலம் வெளியிட்டபோது ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. பிறகு சீஅன் மொழிபெயர்பாளர் வந்து புரிய வைத்துள்ளார்.

தேடுதல் பணி தொடரும் பயணிகளை ஒருநாளும் மறந்து விடமாட்டோம் என்று சீஅன் மொழிபெயர்ப்பாளர் கூறிய பிறகே லிடோ விடுதியில் அமைதி திரும்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உறவினர்கள் உடைந்து போனதற்குக் காரணம் சீனாவின் சில இடங்களில் இன்னமும் இன்டெர்னெட் வசதி இல்லை, செய்தித் தொடர்புகளும் மிகவும் தாமதமாகவே வந்து சேர்கின்றனர்.

மலேசிய ஏர்லைன்ஸ் உயிர்ழந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை கொடுக்கத் தொடங்கிவிட்டது. சர்வதேச உடன்படிக்கைகளின் படி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 1,50,000 டாலர்கள் முதல் 1,75,000 டாலர்கள் வரை கொடுக்கவேண்டும், குடும்பத்தினர் மேலும் இழப்பீடு கோரி வழக்கு தொடரலாம். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Sat May 03, 2014 6:15 am

மலேசிய விமானப் பயணிகளுக்கு இறுதிச் சடங்கு: உறவினர்கள் அறிவிப்பு

கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பிய ஒரு மணி நேரத்தில் மாயமாக மறைந்தது.

ஆஸ்திரேலியாவின் தலைமையின் கீழ் எட்டு நாடுகள் விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் 50 நாட்களுக்கும்மேல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. இருப்பினும் பலன் எதுவும் கிட்டாத நிலையில் தேடுதல் வேட்டையை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும், வரும் வாரங்களில் ஆழ்கடல் பகுதியில் தேடுதல் வேட்டையைத் தொடங்க தீர்மானித்துள்ளதாகவும் ஆஸ்திரேலியாவின் தேடுதல் ஒருங்கிணைப்பு மையம் கடந்த 30-ம் தேதி தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து பீஜிங்கிலும், கோலாலம்பூரிலும் ஆதரவு மையங்களில் காத்திருக்கும் உறவினர்களை உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளுமாறும், ஆதரவு மையங்களை தாங்கள் மூட இருப்பதாகவும் மலேசிய அரசு அறிவித்துள்ளது.

அந்நாட்டு துணை வெளியுறவுத்துறை அமைச்சரான ஹம்சா சைனுதின் காணமற்போன பயணிகளின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட உலக மக்கள் இதற்கான விடையை எதிர்பார்ப்பதாகவும், இதற்கான ஒரு அறிக்கை வெளிவர வேண்டிய தருணத்திற்காக அனைவரும் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனினும், பயணிகளின் உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஊர்களுக்குத் திரும்பச்சென்று இந்த பதில்களுக்காகக் காத்திருக்குமாறும் அவர் கூறினார்.

தேடல் நிகழ்வுகள் குறிப்பிட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும் என்றும், தகுதியானவர்களுக்குத் தகுந்த இழப்பீடு அளிக்கப்படும் என்றும் மலேசிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பீஜிங் மையத்தில் உள்ள சில குடும்பங்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பியுள்ள நிலையில் சிலர் வெளியேற மறுக்கின்றனர். சில பயணிகளின் உறுப்பினர்கள் இந்த வார இறுதியில் அவர்களுக்கான இறுதி சடங்குகளை செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

எட்டு வாரங்கள் கடந்த நிலையில் காணாமற்போன பயணிகளுக்காக நடத்தப்படும் முதல் சடங்கு நிகழ்வுகள் இவையாகும் என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Mon May 05, 2014 1:53 am


எம்எச்370 – தீராத சர்ச்சையும் சந்தேகமுமாகத் தொடரும் டன் கணக்கான மங்குஸ்தீன், கல்லியம் மின்கல சரக்குப் பட்டியல்

காணாமல் போன எம்.எச். 370 விமானம் குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து, அந்த அறிக்கையிலிருந்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

எம்எச் 370இல், 4,566 டன் மங்குஸ்தீன் பழங்கள் ஏற்றப்பட்டன என அறிக்கையோடு இணைக்கப்பட்டிருந்த சரக்குப் பட்டியல் தெரிவிக்கின்றது.

அந்த மங்குஸ்தீன், சரக்கு விவரப் பட்டியலின்படி அதன் மதிப்பு வெ.51,367.50 என்றும் அதை மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் பெய்ஜிங்கிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு அனுப்பும் வகையில் பதிவு செய்திருந்தார் என்றும் அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

ஆனால், மங்குஸ்தீன் பழங்களோ நீண்ட நாட்களாக வைக்க முடியாத தன்மை கொண்டவை. பருவ காலப் பழமான இந்தப் பழம் மார்ச் மாதத்தில் மலேசியாவில் கிடைக்காது – அதுவும் டன் கணக்கில் கிடைக்காது என்பதுதான் அனைவருக்கும் எழுந்துள்ள முதல் சந்தேகம்.

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லியல் மின்கலம் குறித்த சர்ச்சைகள்

அத்துடன் கல்லியம் மின்மயத் துகள் (Lithium ion) மின்கலங்கள் (பேட்டரிகள்) 200 ஏற்றப்பட்டிருந்தன என்றும் சரக்குப் பட்டியல் விவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றின் எடை 2,453 டன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 200 மின்கலங்கள் அவ்வளவு எடையைக் கொண்டிருக்காது என்றும் தகவல் ஊடகங்கள் சந்தேகம் கிளப்பியுள்ளன. இதனால் இவற்றோடு வேறு பொருட்கள் ஏதும் சேர்க்கப்பட்டிருந்ததா, என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

அந்த கல்லியம் மின்மயத்துகள் மின்கலங்களின் மதிப்பு வெ.32,082,48 என்றும் அவை சீக்கிரம் தீப்பிடிக்கக் கூடிய அபாயமுள்ள பொருள் என்பதால் அவை கவனமாக கையாளப்பட வேண்டும் எனும் எச்சரிக்கை வாசகங்களோடு அவை ஏற்றப்பட்டன என்றும் சரக்குப் பட்டியல் விவரம் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில்தான், இந்த சரக்குகளை ஏற்றியிருந்த எம்.எச். 370 விமானம் கடந்த மார்ச் 8இல் அதிகாலை 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குப் புறப்பட்ட போது காணாமல் போனது.

இதனால், சரக்குப் பட்டியலில் குறிப்பிடப்பட்டபடி உண்மையிலேயே மங்குஸ்தீன் பழங்களும் கல்லியம் மின்கலங்களும் ஏற்றப்பட்டனவா, அல்லது வேறு பொருட்கள் மறைமுகமாக ஏற்றப்பட்டனவா –

அப்படி ஏற்றப்பட்டிருந்தால் அந்த மர்மப் பொருட்கள் என்ன –

அந்த பொருட்களுக்கும், விமானம் காணாமல் போனதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா –

என்பது போன்ற சந்தேகங்களும், சர்ச்சைகளும் இன்னும் தொடர்கின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by பாலாஜி on Mon May 05, 2014 1:17 pm

மர்மம் என்று விலகும் என்றே தெரியவில்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Sun May 11, 2014 4:42 am


எம்.எச்.370 : இந்தியப் பெருங்கடலில்தான் விழுந்ததா? துன் மகாதீரும் கேள்வி எழுப்புகிறார்!


எம்.எச். 370 விமானத்தைப் பற்றி இதுவரை வாய் திறக்காமல் மௌனம் காத்து வந்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தற்போது தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

மாஸ் நிறுவனத்தின் காணாமல் போன விமானம் எம்எச் 370 அதன் பயணத்தை உண்மையிலேயே இந்தியப் பெருங்கடலில் முடித்துக்கொண்டதா என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தனது வலைத் தளப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவ்வளவு பெரிய விமானம் பல துண்டுகளாக உடையாமல் அப்படியே ஆழ்கடலில் மூழ்க முடியுமா என டாக்டர் மகாதீர் இன்று வெளியிட்ட தனது வலைப்பதிவில் கேட்டுள்ளார்.

“கண்ணாடி, அலுமினியம், டைட்டானியம், கூட்டுப் பொருட்களினால் ஆன கனமான அவ்விமானம் கடலினுள் மூழ்கி உடையாமல் இருக்குமா?” என்றும்,

“கடல் அமைதியாக இருந்தால்கூட அந்த விமானம் உடைந்திருக்கும். ஆனால், அந்த விமானம் உடையாமல் அப்படியே மூழ்கியிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. அது சாத்தியமா?” என்றும் மகாதீர் கேள்விக் கணைகள் தொடுத்துள்ளார்.

“ஆனால், இது நாள்வரை அவ்விமானம் உடைந்ததைக் குறிக்கும் அறிகுறி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்றார் துன் மகாதீர்.

போயிங் நிறுவனமும் காரணமா?


எம்எச்370 காணாமல் போன விஷயத்தில் அவ்விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கு எதிராகவும் துன் மகாதீர் குறைகூறலைத் தொடக்கியுள்ளார்.

அவ்விமானத்தின் தகவல் தொடர்பு சாதனம் செயலிழந்து போனதற்கு அவ்விமானத்தைத் தயாரித்த நிறுவனத்தைப் பொறுப்பாக்க வேண்டும் என்றும் விமானம் காணாமல் போன விஷயம் தொடர்பில் அது மௌனம் சாதிப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

“இவ்விஷயத்தில் போயிங் மிகவும் அமைதியாக உள்ளது. தனது விமானத்தில் தகவல் தொடர்பு முறையும் விமான இருப்பிடத்தை கண்காணிக்கும் முறையும் எப்படி செயலிழக்கக்கூடும் என்பது குறித்து அந்நிறுவனம் விளக்கம் ஏதும் தரவில்லை” என்றும் துன் மகாதீர் தனது வலைப் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவ்விமானத்தைக் கண்டுபிடிக்கும் வரை, அதன் தகவல் தொடர்புத் துறை எவ்வாறு செயலிழந்தது என்பதைத் தீர்மானிக்கும் வரை போயிங் விமானங்கள் பயணம் செய்ய ஆபத்தானவை என அனைவரும் முடிவெடுக்க வேண்டும் என்றும் தனது வாதத்தை தனது கட்டுரையில் துன் மகாதீர் முன் வைத்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum