ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 ரா.ரமேஷ்குமார்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 gayathri gopal

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

239 பயணிகளோடு மாயமான விமானம்

Post by பாலாஜி on Sat Mar 08, 2014 12:16 pm

First topic message reminder :

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.

மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.

MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


--வெப்துனியா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down


Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by T.N.Balasubramanian on Mon Mar 17, 2014 1:52 pm

Quote " மேலும் இந்திய பெருங்கடலில் Diego garcia என்னும் ஒரு தீவு உள்ளது இங்கு மக்கள் அதிகமாக யாரும் வசிப்பதில்லை .மேலும் அதை யார் நிர்வகிக்கிறார்கள் என்பது கூட பெரும் குழப்பமாகத் தான் இருக்கிறது ..அமெரிக்காவின் கடற்படையா அல்லது ஆங்கில அரசா ..?

ஒரு வேளை MH 370 கடத்தப்பட்டிருந்தால் அங்கு தரை இறங்கவும் வாய்ப்புகள் அதிகம்"

தமிழகத்தில் உள்ள சிலர் , தங்கள் நிதி போட்டு , தீவுகள் வாங்குவதாக கேள்வி.
தமிழருக்கு சொந்தமானதாக இருக்குமோ இந்த டிகோ கார்சியா தீவு?
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21535
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by பாலாஜி on Mon Mar 17, 2014 2:20 pm

@T.N.Balasubramanian wrote:Quote " மேலும் இந்திய பெருங்கடலில் Diego garcia என்னும் ஒரு தீவு உள்ளது இங்கு மக்கள் அதிகமாக யாரும் வசிப்பதில்லை .மேலும் அதை யார் நிர்வகிக்கிறார்கள் என்பது கூட பெரும் குழப்பமாகத் தான் இருக்கிறது ..அமெரிக்காவின் கடற்படையா அல்லது ஆங்கில அரசா ..?

ஒரு வேளை MH 370 கடத்தப்பட்டிருந்தால் அங்கு தரை இறங்கவும் வாய்ப்புகள் அதிகம்"

தமிழகத்தில் உள்ள சிலர் , தங்கள் நிதி போட்டு , தீவுகள் வாங்குவதாக கேள்வி.
தமிழருக்கு சொந்தமானதாக இருக்குமோ இந்த டிகோ கார்சியா தீவு?
ரமணியன்

ஆமாம் நானும் கேள்விப்பட்டுயிருக்கின்றேன் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Mon Mar 17, 2014 2:54 pm

@பாலாஜி wrote:
@T.N.Balasubramanian wrote:
தமிழகத்தில் உள்ள சிலர் , தங்கள் நிதி போட்டு , தீவுகள் வாங்குவதாக கேள்வி.
தமிழருக்கு சொந்தமானதாக இருக்குமோ இந்த டிகோ கார்சியா தீவு?
ரமணியன்

ஆமாம் நானும் கேள்விப்பட்டுயிருக்கின்றேன் ...

அதோட ஒரிஜினல் ஓனர் இங்கிலாந்து தான் ..ஆனால் அமெரிக்கா அங்கு ஒரு சில ரகசிய பரிசோதனைகள் மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைக்க இங்கிலாந்து அரசுக்கு வருடம் தோறும் பணம் கொடுத்து வருகிறது ..ஆனால் கடந்த 2005 வரை அந்த தீவு அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது .. இப்போதும் அங்கு அமெரிக்காவின் ஒரு கடற்படைத் தளம் செயல்படுகிறது ..

அந்த தீவு ஒரு போதும் விற்பனைக்கு வராது ..அப்படி வந்தால் அமெரிக்கா அல்லது இந்தியா அதை வாங்கி விடும்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by பாலாஜி on Mon Mar 17, 2014 4:14 pm

@SajeevJino wrote:
@பாலாஜி wrote:
@T.N.Balasubramanian wrote:
தமிழகத்தில் உள்ள சிலர் , தங்கள் நிதி போட்டு , தீவுகள் வாங்குவதாக கேள்வி.
தமிழருக்கு சொந்தமானதாக இருக்குமோ இந்த டிகோ கார்சியா தீவு?
ரமணியன்

ஆமாம் நானும் கேள்விப்பட்டுயிருக்கின்றேன் ...

அதோட ஒரிஜினல் ஓனர் இங்கிலாந்து தான் ..ஆனால் அமெரிக்கா அங்கு ஒரு சில ரகசிய பரிசோதனைகள் மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைக்க இங்கிலாந்து அரசுக்கு வருடம் தோறும் பணம் கொடுத்து வருகிறது ..ஆனால் கடந்த 2005 வரை அந்த தீவு அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது .. இப்போதும் அங்கு அமெரிக்காவின் ஒரு கடற்படைத் தளம் செயல்படுகிறது ..

அந்த தீவு ஒரு போதும் விற்பனைக்கு வராது ..அப்படி வந்தால் அமெரிக்கா அல்லது இந்தியா அதை வாங்கி விடும்

மேலதிக தகவலுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by டார்வின் on Tue Mar 18, 2014 5:18 pm

மலேசிய விமானம் வெடிக்கவோ, விபத்துக்குள்ளாகவோ இல்லை : ஐ.நா. தகவல்

மாயமாகி 10 நாட்களுக்கும் மேல் ஆன மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், எந்த இடத்திலும் வெடித்துக் சிதறவோ, விபத்துக்குள்ளாகவோ இல்லை என ஐ.நா. தெரிவித்துள்ளது.

வியன்னா நாட்டைச் சேர்ந்த நியூக்ளியர் டெஸ்ட் பேன் ட்ரீட்டி அமைப்பு நடத்திய தேடுதல் பணியில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜராக் அறிவித்துள்ளார்.

விமானம் விபத்துக்குள்ளாகவில்லை என்பதை, சுமார் 3 முதல் 4 தொழில்நுட்ப முறைகள் மூலம் உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விமானம் வெடித்து சிதறி இருப்பதற்கோ, நீரில் மூழ்கி இருப்பதற்கோ ஆதாரங்கள் ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின் மூலம், விமானம் விபத்துக்குள்ளாகவில்லை என்பதை கூறலாம். ஆனால், அதுவும் முற்றிலும் உறுதியாகக் கூற இயலாது என்று குறிப்பிட்டுள்ளார்.
thinakaran
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by டார்வின் on Tue Mar 18, 2014 5:20 pm

காணாமல் போன மலேசிய விமானத்தை இயக்கிய விமானியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், புதிய திருப்பமாக, 5 வேறுபட்ட நாடுகளின் ஓடுதளங்களில் விமானத்தை இயக்குவதற்கான சாப்ட்வேர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேசிய காவல்துறையினர் நடத்திய சோதனையில், இந்தியா, இலங்கை உள்ளிட்ட 5 நாடுகளில் உள்ள விமான நிலையங்களின் ஓடு தளங்களில் விமானத்தை இயக்குவதற்கான தனித்தனி சாப்ட்வேர்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனால், விமானத்தை திட்டமிட்டி விமானி கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.
thinamani
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Tue Mar 18, 2014 7:11 pm

@டார்வின் wrote:மலேசிய விமானம் வெடிக்கவோ, விபத்துக்குள்ளாகவோ இல்லை : ஐ.நா. தகவல்
வியன்னா நாட்டைச் சேர்ந்த நியூக்ளியர் டெஸ்ட் பேன் ட்ரீட்டி அமைப்பு நடத்திய தேடுதல் பணியில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜராக் அறிவித்துள்ளார்.

விமானம் விபத்துக்குள்ளாகவில்லை என்பதை, சுமார் 3 முதல் 4 தொழில்நுட்ப முறைகள் மூலம் உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விமானம் வெடித்து சிதறி இருப்பதற்கோ, நீரில் மூழ்கி இருப்பதற்கோ ஆதாரங்கள் ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
thinakaran

என்னை பொறுத்தவரை CTBTO - விடம் நிலத்திலோ அல்லது நிலத்தின் ஆழத்திலோ அல்லது கடல் மற்றும் கடல் ஆழத்தில் ஏதாவது வெடிப்பு ஏற்பட்டால் கண்டுபிடிக்கும் வசதிகளே உள்ளன ..ஆனால் 10000 அடிக்கு மேல் வெடிப்பு ஏற்பட்டால் அதை உணரும் கருவிகள் அதனிடம் இல்லை .

மேலும் அதன் நம்பகத் தன்மையும் மிக மிக குறைவு ..DPRK அணு ஆயுத சோதனை நடத்திய போது அவர்களால் சரியாக அதை கண்டுபிடிக்கவில்லை . USGS தான் சரியாக கணித்துக் கூறியது
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Tue Mar 18, 2014 10:32 pm

@டார்வின் wrote:காணாமல் போன மலேசிய விமானத்தை இயக்கிய விமானியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், புதிய திருப்பமாக, 5 வேறுபட்ட நாடுகளின் ஓடுதளங்களில் விமானத்தை இயக்குவதற்கான சாப்ட்வேர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேசிய காவல்துறையினர் நடத்திய சோதனையில், இந்தியா, இலங்கை உள்ளிட்ட 5 நாடுகளில் உள்ள விமான நிலையங்களின் ஓடு தளங்களில் விமானத்தை இயக்குவதற்கான தனித்தனி சாப்ட்வேர்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனால், விமானத்தை திட்டமிட்டி விமானி கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.
thinamani

சுத்த மடத்தனம்

ஒரு professional கமர் -இடம் சிறப்பான gaming -க்காக அவர் சுமார் 3 அல்லது நான்கு display மற்றும் wheel டிரைவ் , ஜாய் ஸ்டிக் போன்ற பல உபகரணங்கள் வைத்திருப்பார்கள் ..அதற்காக அவர்கள் எல்லோரும் விமானம் கடத்துபவர்களோ அல்லது சிறந்த ஒரு கார் றேசராகவோ அல்லது சிறந்த ஒரு ஸ்பெஷல் Force ஆகவோ இருக்க முடியாது

அவர் வைத்திருந்தது ஒரு flight simulator அதோடு அதில் 5 விமான ஓடு பாதைகள் ..விமானிகள் இவ்வ்வுலகில் எங்கு வேண்டும் என்றாலும் அவர்களால் தரை இறங்க முடியும் .ஜஸ்ட் லைக் ஒரு கார் ஓட்டுபவர் மாதிரி ..கார் ஓட்ட தெரிந்தால் உலகில் உள்ள எந்த சாலையிலும் அவரால் ஓட்ட முடியும் .

மேலும் இங்கு யாராவது காது அல்லது battlefield கேம் விளையாடி இருந்தால் தெரியும் ..அவாரல் உலகில் உள்ள பல இடங்களின் உண்மையாகவே போரிடுவது போல தோன்றும் ..நிஜத்திலும் அப்படி தான் இருக்கும் .

எனது நண்பர் Capt.Mukunt Pathik கிடம் இதை பற்றி கேட்ட போது எனது கருத்து சரியே என்றார்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Wed Mar 19, 2014 10:43 am

@SajeevJino wrote: சுத்த மடத்தனம்

ஒரு professional கமர் -இடம் சிறப்பான gaming -க்காக அவர் சுமார் 3 அல்லது நான்கு display மற்றும் wheel டிரைவ் , ஜாய் ஸ்டிக் போன்ற பல உபகரணங்கள் வைத்திருப்பார்கள் ..அதற்காக அவர்கள் எல்லோரும் விமானம் கடத்துபவர்களோ அல்லது சிறந்த ஒரு கார் றேசராகவோ அல்லது சிறந்த ஒரு ஸ்பெஷல் Force ஆகவோ இருக்க முடியாது

அவர் வைத்திருந்தது ஒரு flight simulator அதோடு அதில் 5 விமான ஓடு பாதைகள் ..விமானிகள் இவ்வ்வுலகில் எங்கு வேண்டும் என்றாலும் அவர்களால் தரை இறங்க முடியும் .ஜஸ்ட் லைக் ஒரு கார் ஓட்டுபவர் மாதிரி ..கார் ஓட்ட தெரிந்தால் உலகில் உள்ள எந்த சாலையிலும் அவரால் ஓட்ட முடியும் .

மேலும் இங்கு யாராவது காது அல்லது battlefield கேம் விளையாடி இருந்தால் தெரியும் ..அவாரல் உலகில் உள்ள பல இடங்களின் உண்மையாகவே போரிடுவது போல தோன்றும் ..நிஜத்திலும் அப்படி தான் இருக்கும் .

எனது நண்பர் Capt.Mukunt Pathik கிடம் இதை பற்றி கேட்ட போது எனது கருத்து சரியே என்றார்
நானும் இதையே தான் நினைத்தேன் , பொதுவாக ஒரு துறையில் வல்லவராக இருப்பவர் அந்த துறையின் அனைத்து சிறு சிறு விஷயங்களிலும் கூட நிபுணத்துவம் பெறுவதற்காக தினமும் எதையாவது படித்துக்கொண்டே இருப்பர். இந்த விமானியும் அதைப்போல இருந்திருக்க கூடும்.

இந்த ஒருவிஷயத்தை மட்டும் வைத்து அந்த விமானியை சந்தேகபடுவது முட்டாள்தனம்.

ஆனால் செய்திதாள்களில் வரும் செய்திகளைபடிக்கும்போது மலேசியா அரசு எதையோ மறைப்பது போல தெரிகிறது, உண்மை எப்போ வெளியே வருமென்று தெரியவில்லை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by யினியவன் on Wed Mar 19, 2014 11:08 am

@ராஜா wrote:உண்மை எப்போ வெளியே வருமென்று தெரியவில்லை
வரூஊஊம் ஆனா வராஆஆஆஆதுavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Fri Mar 21, 2014 2:23 am

“பயணிகளின் உறவினர்களை பேச விடாமல் தடுப்பது ஏன்?” – செய்தியாளர்கள் கொந்தளிப்பு

விமானம் மாயமான விவகாரத்தை மலேசிய அரசாங்கம் கையாளும் விதம், மீண்டும் உலகளவிலான ஊடகங்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

காரணம் மாயமான விமானத்தில் பயணித்த சீனாவைச் சேர்ந்தவர்களின் உறவினர்களை, செய்தியாளர்களிடம் பேச காவல்துறை அனுமதிக்க மறுத்ததோடு, அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துச் சென்றுள்ளனர்.

காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கை கண்டு அந்நிய நாட்டு செய்தியாளர்கள் பலர் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்துள்ளனர்.

டென்மார்க்கை சேர்ந்த டிவி2 செய்தியாளர் பெஞ்சமின் கர்ஸ்டெயின் மலேசியாகினி இணையத்தளத்திடம் கூறுகையில், “சீன பயணிகளின் உறவினர்கள் மிகவும் விரக்தியடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் பேசுவது தடுக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்த செயல் அவர்களைப் பாதுகாக்கவா? அல்லது செய்தியாளர்களிடம் எதுவும் தெரிவித்துவிடக்கூடாது என்பதற்காகவா?… நிச்சயம் இது மலேசியாவிற்கு அவப் பெயரை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிராக காவல்துறையினரின் இந்த செயல் அமைந்துள்ளதாகவும் பெஞ்சமின் குறிப்பிட்டுள்ளார்.

சீனப் பயணிகளின் உறவினர்கள் சிலர் நேற்று கேஎல்ஐஏ விமான நிலையத்தில் உள்ள சமா சமா தங்கும் விடுதிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒரு தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அதனை அறிந்த செய்தியாளர்கள் அந்த அறைக்கு வெளியே முற்றுகையிட, காவல்துறை அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து நகரும் படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும், பயணிகளின் உறவினர்களோடு பேச முயன்ற சில செய்தியாளர்களிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த செய்தியாளர்கள் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன விமானம் பற்றி இன்னும் உறுதியான தகவல்கள் தெரியாத நிலையில் பயணிகளின் உறவினர்களிடம் பேச விடாமல் தடுக்கப்பட்டது ஏன்? என்று செய்தியாளர்களிடையே சந்தேகம் வலுத்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Fri Mar 21, 2014 2:25 am

விமானத்தின் பொருட்கள்தான் என்பது உறுதியானால் பயணிகளின் உறவினர்களை மாஸ் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லும்!

ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் கடலில் மிதக்கும் பொருட்கள் காணாமல் போன மாஸ் விமானம் சம்பந்தப்பட்டவை என்பது உறுதியானால், பயணிகளின் உறவினர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல மாஸ் விமான நிறுவனம் தயாராகி வருகின்றது.

காணாமல் போன விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு மாஸ் எப்போதுமே முக்கியத்துவம் வழங்கும் என்று குறிப்பிட்ட மாஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அகமட் ஜவுஹாரி யாஹ்யா, ஆஸ்திரேலியா கடல் பகுதியில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டால், பயணிகள் மற்றும் பணியாளர்களின் உறவினர்களை ஆஸ்திரேலியாவுக்கு மாஸ் அழைத்துச் செல்லும் என உறுதியளித்தார்.

பயணிகளுக்கு நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் தேடுதல் குறித்த விளக்கங்கள் தரப்படுகின்றன என்றும் அகமட் ஜவுஹாரி குறிப்பிட்டார்.

தகவல்கள் பயணிகளுக்குத்தான் முதலில் தெரிவிக்கப்படும்….

இதற்கிடையில், தேடுதல் வேட்டையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டால், தகவல்கள் ஏதும் கிடைத்தால் முதலில் பயணிகளுக்குத்தான் தெரிவிக்கப்படும் என்று இடைக்கால போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் தெரிவித்துள்ளார்.

கடும் மன உளைச்சலுக்கும் சோகத்துக்கும் ஆளாகியுள்ள பயணிகளின் குடும்ப உறுப்பினர்களை சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல என்றும் அதனால்தான் பிரெஞ்சு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு இலாகாவின் அதிகாரிகளைத் தாங்கள் வரவழைத்ததாகவும் ஹிஷாமுடின் கூறினார்.

கடந்த 2009ஆம் ஆண்டில் விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் 447இன் விமானப் பாகங்களும், அந்த விமானத்தின் கறுப்புப் பெட்டியும் சுமார் 2 வருடங்களுக்குப் பின்னர்தான் கடலுக்கடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்த 228 பேரும் மரணமடைந்தனர்.

இடைப்பட்ட இரண்டு ஆண்டு கால இடைவெளியில் அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்பத்தினரை பிரெஞ்சு அதிகாரிகள் எவ்வாறு சமாளித்தார்கள், எப்படி தொடர்புகளை அணுக்கமாக வைத்திருந்தார்கள் போன்ற அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அவர்கள் தற்போது கோலாலம்பூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடனும் தான் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக ஹிஷாமுடின் கூறியுள்ளார்.

சீனாவில் உள்ள பயணிகளின் உறவினர்களோடு முன்னாள் மசீச தலைவரும் சீனாவுக்கான மலேசியப் பிரதரின் சிறப்புத் தூதருமான ஓங் கா திங் தலைமையில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் ஹிஷாமுடின் அறிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ayyasamy ram on Fri Mar 21, 2014 2:59 am

 
-
பயனுள்ள பகிர்வு
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35080
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by அருண் on Sun Mar 23, 2014 7:47 pmமலேசிய விமானத்தின் பாகங்கள் காணப்படுவதாக ஆஸ்திரேலியா மீண்டும் உறுதி
பெர்த், மார்ச் 23

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலிய விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன. இரு தினங்களுக்கு முன் 24 மீட்டர் நீளம் மற்றும் 5 மீட்டர் நீளமுள்ள விமானத்தின் பாகங்கள் போன்ற பொருட்கள் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் மிதப்பதாக ஆஸ்திரேலிய செயற்கோள் அனுப்பிய படங்களில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

ஆஸ்திரேலிய மற்றும் இந்திய நாட்டின் விமானங்கள் தேடும் பணியில் ஈடுபட்டுவந்தன. தற்போது விமானம் குறித்து மேலும் ஒரு நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. மரத்தாலான மெத்தை போன்ற பொருன் ஒன்றும், பெல்ட்களும் விமானத்தை தேடும் பகுதிகளில் இன்று கண்டதாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை போலவே பிரான்ஸ் நாடும் இந்திய பெருங்கடலில் விமான பாகங்கள் போன்ற பொருட்கள் மிதக்கும் செயற்கைகோள் புகைப்படத்தை மலேசியாவிற்கு அனுப்பிள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை மலேசிய அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர். வெகு விரைவில் விமானம் குறித்த தவகல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Mon Mar 24, 2014 2:40 am


விமானத்தில் ‘லித்தியம் பேட்டரிகள்’ இருந்தது அம்பலம்!

மாயமான MH370 விமானத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய அல்லது வெடிக்கக்கூடிய பொருள் ஏதாவது இருந்ததா? என்ற கேள்விக்கு இதுவரை மறுத்த வந்த மாஸ் நிறுவனம் நேற்று ‘அபாயகரமான பொருட்கள்’ இருந்ததை ஒப்புக்கொண்டது.

இதனால் மீண்டும் ஊடகங்களின் கவனம் விமானத்தின் கார்கோ (கொண்டு சென்ற பொருட்கள்) மீது திரும்பியுள்ளது.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மாஸ் நிறுவனத்தின் தலைவர் அஹமட் ஜாவ்ஹாரி யாஹ்யா, விமானத்தில் லித்தியம் ஐயான் பேட்டரிகள் (lithium-ion batteries) இருந்ததை உறுதிப்படுத்தினார்.

நான்கு நாட்களாக விமானத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இல்லை என்றும், 3 அல்லது 4 டன் மங்கூஸ்டீன் பழங்கள் தான் இருந்ததாகவும் கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், லித்தியம் ஐயான் பேட்டரிகள் அளவில் பெரியவை அல்ல என்றும், அனைத்துலக விமானப் போக்குவரத்து இலாகாவின் (The International Civil Aviation Organisation) விதிமுறைகளின் படி, அந்த பேட்டரிகள் முறையான அனுமதியோடு தான் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் ஜாவ்ஹாரி தெரிவித்தார்.

லித்தியம் பேட்டரியால் ஏற்பட்ட விமான விபத்துக்கள்

அமெரிக்காவைச் சேர்ந்த கூட்டரசு விமானப் போக்குவரத்து நிர்வாகம் (Federal Aviation Administration) வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கடந்த 1991 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதியில் இருந்து 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி வரையில்,லித்தியம் பேட்டரிகளை கொண்டு சென்றதால் 141 விமான விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றது.

லித்தியம் பேட்டரியில் ஏற்பட்ட தீப்பொறி பரவி மொத்த விமானமும் எரிந்த இரண்டு சம்பவங்களும் இதில் அடக்கம்.

அண்மையில், ஆசியான ஏர்லைன்ஸ் விமானம் 991 மற்றும் யுபிஎஸ் ஏர்லைன்ஸ் விமானம் 6 இவை இரண்டும் முழுவதுமாக எரிந்ததற்குக் காரணம் லித்தியம் பேட்டரியில் ஏற்பட்ட தீ தான் என்று கண்டறியப்பட்டது.

எனவே, மாயமான MH370 விமானத்திலும் லித்தியம் பேட்டரிகள் கொண்டு செல்லப் பட்டுள்ளதால், அது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

விமானத்தில் லித்தியம் பேட்டரி இருந்ததா என்ற கேள்வியை சிஎன்என் (CNN) செய்தி நிறுவனம் கடந்த மார்ச் 14 ஆம் தேதி எழுப்பியது. ஆனால் அதிகாரிகள் விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் குறித்து அப்போது பதிலளிக்க மறுத்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by பாலாஜி on Mon Mar 24, 2014 2:49 am

என்ன நடந்தது என்றே தெரியவில்லையே ..

239 பயணிகளின் உறவினர்களின் நிலை கவலைக்கு உரியது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ayyasamy ram on Mon Mar 24, 2014 8:40 am

.
விமானத்தின் கருப்புப் பெட்டி பேட்டரிகள் 30 நாள்கள்
மட்டுமே இயங்கும். அதன்பின் பேட்டரிகள் செயலிழந்து
சிக்னல் கிடைக்காது.

எனவே, இன்னும் 15 நாள்களுக்குள் கருப்புப் பெட்டியை
கண்டுபிடிக்க வேண்டும்,

இல்லையெனில் ஆழ்கடலில் அதனை தேடுவது மிகவும்
கடினம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35080
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ஜாஹீதாபானு on Mon Mar 24, 2014 3:21 pm

@பாலாஜி wrote:என்ன நடந்தது என்றே தெரியவில்லையே ..

239 பயணிகளின் உறவினர்களின் நிலை கவலைக்கு உரியது

சோகம்சோகம்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30094
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Mon Mar 24, 2014 3:25 pm


தொழில்நுட்பக் கோளாறு: மாஸ் MH066 விமானம் ஹாங்காங்கில் அவசரமாக தரையிறக்கம்!

நேற்று இரவு 11.37 மணியளவில், கோலாலம்பூரில் இருந்து தென் கொரியாவின் இன்சியானை நோக்கி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் (MH066) விமானம் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஹாங்காங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இது குறித்து மாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானத்திற்கு மின் சக்தியை வழங்கும் ஜெனரேட்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. எனினும், துணைநிலை சாதனத்தில் இருந்து மின் சக்தி விமானத்திற்கு தொடர்ந்து கிடைத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் ஹாங்காங்கில் தரையிறக்கப்பட்டது குறித்து கருத்துரைத்துள்ள அந்நாட்டு விமான நிலையப் பிரதிநிதி, தகவல் கிடைத்த 30 நிமிடங்களில், விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதை அவசரமாக தரையிறக்கப்பட்டதாகக் கருத முடியாது. ஆனாலும் அவசரகால நடவடிக்கைகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 6.50 மணிக்கு தென் கொரியாவின் இன்சியானில் தரையிறங்க வேண்டிய விமானம், ஹாங்காங்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால், அதில் இருந்த 271 பயணிகளும் வேறு ஒரு மாற்று விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி, 239 பேருடன் மாயமான மாஸ் MH370 விமானத்தினை தேடும் பணி நடைபெற்று இன்று வரையில் நடைபெற்று வருகின்றது.

இதனிடையே, நேற்று முன்தினம் நேபாள் காட்மண்டு விமான நிலையத்தில் இரவு 10.45 மணியளவில் தரையிறங்கிய மாஸ் விமானம், ஓடும் பாதையில் வாத்துக் கூட்டத்தினை மோதியுள்ளது.

இந்த சம்பவத்தில் விமானத்திற்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Mon Mar 24, 2014 6:02 pm

விமானத்தை தேடும் பணியில் இந்தியாவின் அதிநவீன விமானங்கள்

புதுடில்லி: இந்திய பெருங்கடல் பகுதியில், மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில், இரண்டு இந்திய விமானங்கள் ஈடுபட்டுள்ளன.

மாயம் : மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, இம்மாதம், 8ம் தேதி, சீன தலைநகர், பீஜிங் நோக்கி புறப்பட்ட விமானம், மாயமானது. வியட்னாம் எல்லை பகுதியில் சென்ற போது, தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்த இந்த விமானத்தில், 239 பேர் பயணித்துள்ளனர். இதில், ஐந்து இந்தியர்களும் அடக்கம்.

மலேசியா, இந்தியா உள்ளிட்ட, 26 நாடுகள், விமானத்தை தேடிக் கொண்டிருக்கின்றன. இந்த விமானத்தை இயக்கிய விமானி, இவ்விமானத்தை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் ஒருபக்கம் உள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து, 2,500 கி.மீ., தொலைவில், உடைந்த விமானத்தின் பாகம் மிதப்பதாக, ஆஸ்திரேலிய கடற்படை விமானத்தில் பறந்த வீரர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, நார்வே கப்பல் உள்ளிட்ட சில நாடுகளின் கப்பல்களும், விமானங்களும், உடைந்த பாகத்தை தேடிக் கொண்டிருக்கின்றன.

செயற்கைக்கோள் : இதே பகுதியில், உடைந்த பொருள் ஒன்று மிதப்பதை, சீன செயற்கைக்கோள் படம் எடுத்து அனுப்பியிருந்தது. இதே போல், பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோளும், நேற்று, இதே பகுதியில், ஒரு பொருள் மிதப்பதை படம் எடுத்துள்ளது. இந்த படம், மலேசிய விமானத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் சார்பில், கண்காணிப்பு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானமும், விமானப்படையின் அதிநவீன விமானம் ஒன்றும், மலேசியாவின், சுபாங் விமான நிலையத்திலிருந்து, தேடும் பணியை துவக்கியுள்ளன. குறைந்த வெளிச்சத்திலும் பொருட்களை கண்டுபிடிக்கத்தக்க சாதனங்கள், இந்த விமானங்களில் உள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by அருண் on Mon Mar 24, 2014 6:11 pm

மாஸ் நிறுவனம் உண்மையில் என்ன நடந்தது என்று. மறைக்காமல் கூறினால் மட்டுமே சீக்கிரம் கண்டு பிடிக்க முடியும். அது வரை புரியாத புதிராவே இருக்கும்.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Mon Mar 24, 2014 6:40 pm

இந்நிலையில், இந்தியாவின் சார்பில், கண்காணிப்பு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானமும், விமானப்படையின் அதிநவீன விமானம் ஒன்றும், மலேசியாவின், சுபாங் விமான நிலையத்திலிருந்து, தேடும் பணியை துவக்கியுள்ளன. குறைந்த வெளிச்சத்திலும் பொருட்களை கண்டுபிடிக்கத்தக்க சாதனங்கள், இந்த விமானங்களில் உள்ளன.

இந்திய நேவி தனது P8I என்னும் விமானத்தை தேடுதல் பணியில் ஈடுபடுத்தி உள்ளது ..இது எதிரி நீர்மூழ்கிகளை கண்டு பிடித்து அழிக்கவும் கடற்பரப்பின் மேல் இருக்கும் கப்பல்களை கண்டறியவும் இது பயன் படுகிறது ..இதனால் 1000 அடி ஆழத்தில் உள்ள பொருளையும் கண்டுபிடிக்க முடியும்

IAF தனது C130J விமானத்தை பயன்படுத்துகிறது இதில் குறிப்பிடும் படியான தேடும் கருவிகள் இல்லை என்றாலும் ..இதிலுள்ள IRST தொழில்நுட்பம் படங்களை எடுத்து analysis செய்வதில் சிறந்தது ..

இரண்டு விமானங்களுமே அமெரிக்காவில் தயாரானவை
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Mon Mar 24, 2014 11:12 pm

“MH370 விமானம் இறுதியாக இந்தியப் பெருங்கடலில் முடிவு” – நஜிப் அறிவிப்பு

மாயமான மலேசிய விமானம் MH370 குறித்து பிரதமர் நஜிப் துன் ரசாக் சற்று முன்னர் (மார்ச் 24, இரவு 10.00 மணி) புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் (PWTC) முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்தார்.

நஜிப் கூறியதாவது:-

“இதுவரை நடந்த தீவிர விசாரணையின் முடிவில், மலேசிய விமானம் MH370 தனது வழக்கமான பாதையில் இருந்து விலகிப் பறந்து, இறுதியாக இந்தியப் பெருங்கடலோடு முடிவுற்றிருக்கிறது என்று தெரியவந்துள்ளது.”

“பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் (Air Accidents Investigation Branch – AAIB), அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, விமானம் சென்ற பாதையை கண்டறிந்ததில், இறுதியாக விமானம் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பறந்து இந்தியப் பெருங்கடலின் நடுவே முடிவடைந்திருக்கின்றது என்று தெரிவித்துள்ளனர். இப்படி ஒரு சோதனையை அவர்கள் இதற்கு முன் செய்தது இல்லை”

“பயணிகளின் உறவினர்களுக்கு இது ஒரு மிகவும் கடினமான நேரம் என்பதை உணர முடிகிறது. அவர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு துயரமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். இருப்பினும் மிகவும் சோகத்துடனும், வருத்தத்துடனும் இந்த செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம். எனவே ஊடகங்கள் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது குறித்த மேல் விபரங்கள் நாளை அறிவிக்கப்படும்” இவ்வாறு நஜிப் தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Mon Mar 24, 2014 11:13 pm

MH370 இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்தது! ஒருவர் கூட உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை!

மலேசிய விமானம் MH370 இந்தியப் பெருங்கடலுக்குள் சென்றுவிட்டது என்ற செய்தியைத் தொடர்ந்து, அதில் இருந்த 239 பயணிகளும் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் மற்றும் பெய்ஜிங்கில் கடந்த 17 நாட்களாக, சொந்தங்களை எதிர்பார்த்துக் காத்திருந்த உறவினர்களிடம், மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் மாஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது:-

“MH370 விமானம் இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்து மூழ்கி விட்டது உறுதியாகியுள்ளது. அதில் பயணம் செய்த 239 பேரில் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை. இது குறித்து மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பார். விமானம் கடலுக்குள் சென்றதற்கான ஆதராங்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். இந்த சம்பவத்திற்கு மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றது” இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நஜிப் சற்று முன்னர் (மார்ச் 24, இரவு 10 மணி) விமானம் இந்தியப் பெருங்கடலோடு முடிவுற்றதாக அறிவித்தார்.

இந்த செய்தியைக் கேட்டதும் சீனாவின் பெய்ஜிங்கில் இருந்த உறவினர்களில் சிலர் தங்களது தலையில் அடித்துக் கொண்டு கதறியுள்ளனர். சிலர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று சீனாவைச் சேர்ந்த ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Tue Mar 25, 2014 11:40 am

சோகம் சோகம் புத்திக்கு தெரிந்திருந்தும் எத்தவது அதிசயம் நடந்திருக்கிறதா என்று மனம் ஏங்கிகொண்டிருந்தது


அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் , இந்த விபத்தில் உயிரிழந்த அப்பாவி பயணிகள் & விமான ஊழியர்கள் அனைவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
 அழுகை  அழுகை  அழுகை 

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum