ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..?

View previous topic View next topic Go down

தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..?

Post by சிவா on Tue Mar 11, 2014 4:47 pm'பதினாறு வயதுக்குட்பட்டவர்கள், இதயம் பலவீனமானவர்கள் படத்தைப் பார்க்க வேண்டாம்’ என்கிற அறிவிப்பு இல்லை. இருட்டோ இருட்டில், ஓபனிங் ஷாட் வைக்கவில்லை. சின்ன வெளிச்சத்தில் மோப்ப நாய் ஓடுவதைக் காட்டவில்லை. கேமராவில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இல்லை. ரெயின் கோட், தலையில் தொப்பி சகிதம் ஓர் உருவம் மழையில் நனைந்தபடி நடந்துவரவில்லை. 'வீல்ல்ல்’ என அலறல் சத்தத்துக்கு 'டி.டி.எஸ். எஃபெக்ட்' கொடுக்கவில்லை. முத்தக் காட்சியோ... மொத்தமாக இல்லை. இத்தனை 'இல்லை’களுடன், ஒரு த்ரில்லர் படத்தைக் கொடுத்ததற்காகவே, புதுமுக இயக்குநர் ரமேஷ§க்கு சல்யூட் வைக்கலாம்!

கதாநாயகன் துப்பறிவாளன். அவனைச் சுற்றி நடக்கும் கொலைகளை மையமாகக்கொண்டு கதை நகர்கிறது. கொலைகளை செய்தது யார், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மோசடி செய்கிறார்களா, அவர்களுக்கு உடந்தையாக இருப்பது யார், அதை கதாநாயகன் எப்படி கண்டுபிடிக்கிறான்..? இது மாதிரியான பல மர்ம முடிச்சுகளை அடுக்கிக்கொண்டு த்ரில்லாக நகரும் திரைப்படம் 'தெகிடி’. சத்தமில்லாமல் வந்து, பலரையும் பேசவைத்திருக்கிறது படம்!

படத்தின் பெயருக்கான அர்த்தம் தொடங்கி, படம் எழுப்பியிருக்கும் அதிர்ச்சி வரை பேச, 'தெகிடி’ இயக்குநர் ரமேஷை சந்தித்தபோது, தன் மனைவிக்கு முதலில் மரியாதை செய்தார்!

''நான், பக்கா சென்னைக்காரன். சின்ன வயசுல இருந்தே சினிமா மேல காதல். ஐ.டி கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தப்போ, கலைஞர் டி.வி 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் கலந்துகிட்டேன். டைட்டில் வின்னர் ஆனேன். என்னோட ஏழு குறும்படங்களுமே சமூகத்துக்கு ஏதாவது கருத்து சொல்ற மாதிரிதான் இருக்கும். அதனால, முதல் திரைப்படத்திலும், கருத்து சொல்ல நினைச்சேன்.

பெரும்பாலானவங்க, 'கல்யாணத்துக்கு முன்னயே கேரியரை ஸ்ட்ராங் பண்ணிக்கணும்'னு நினைப்பாங்க. என்னோட கனவு வாழ்க்கையே, கல்யாணத்துக்குப் பிறகுதான். மனைவி ஹரிப்ரியா, அந்தளவுக்கு ஆதரவு. 'தெகிடி’ படத்துக்கு தயார் செய்த மூணு மாதிரியான கதைகளையும் மனைவிகிட்டதான் முதல்ல பேசினேன். அவங்கதான் மெருகேத்திக் கொடுத்தாங்க. என்னோட குறும்படங்களைப் பார்த்துட்டு, 'இது சரியில்ல, அது சரியில்ல’னு நிறைய திருத்தங்களை சொல்லியிருக்காங்க. ஆனா, 'தெகிடி’ பார்த்துட்டு சின்ன திருத்தத்தைக்கூட சொல்லல. அப்பவே பாதி ஜெயிச்ச மாதிரி ஆயிடுச்சு. ஒவ்வொரு கலைஞனுக்கும் பக்கபலமே மனைவிதான். அதேமாதிரி என் வெற்றிக்கும் ஹரிப்ரியாதான் காரணம்'' என்ற ரமேஷ்,

''விட்டா அவங்கள பத்தியே இந்த பேட்டி முழுக்க சொல்லிட்டே போவேன்... கொஞ்சம் படம் பத்தியும் பேசலாம்!'' என்று பூரிப்பு மாறாமல் தொடர்ந்தார்.

''படம் பார்த்த எல்லோரும் கேட்கிற கேள்வி, 'இதுமாதிரி இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் மக்களை ஏமாற்ற வாய்ப்பிருக்கா?’ என்பதுதான். மனைவிக்குத் தெரியாமல் கணவனும், கணவனுக்குத் தெரியாமல் மனைவியும் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து, அதன் காரணமாக ஏமாந்தது, பாதிக்கப்பட்டது நிறையவே செய்தித்தாள்களிலும், இணையத்திலும் படிச்சுருக்கேன். குறிப்பா, வடஇந்தியாவுல இந்த மாதிரியான சம்பவங்கள் அதிகம் நடந்திருக்கு. இதிலிருந்தே என்னோட படத்துக்கான கருவை உருவாக்க ஆரம்பிச்சேன்.

அதேமாதிரி தினம் தினம் தெரியாத நம்பர்களில் இருந்துவரும் போன்கால்கள், எனக்கு இன்னொரு முடிச்சை கொண்டு வந்து கொடுத்துச்சு. 'சார், நான் இன்ஷூரன்ஸ் கம்பெனியில இருந்து பேசறேன்’னு ஒரு கால் வரும். இன்னொரு கால், 'நாங்க அனாதை ஆசிரமத்துல இருந்து பேசறோம்... ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா’னு கேட்பாங்க. 'ஈ.சி.ஆர் பக்கத்துல பிளாட்ஸ் இருக்கு வேணுமா?’னு போன் பண்ணிக் கேட்பாங்க.

இப்படி தினம் தினம் வரும் தேவையில்லாத போன்கால்கள், எனக்குள்ள நிறைய கேள்விகளை கேட்க வெச்சுது. யார் இவங்க, எப்படி இவங்களுக்கு நம்ம நம்பர் தெரியும்னு நமக்கு புரியாது. ஆனா, நமக்குத் தெரியாமலே நம்ம நம்பரை யாரோ ஒருத்தர்கிட்ட வாங்கறது நிச்சயம். அந்த ஒருத்தர் யார்... அது நம்ம கம்பெனியா, இல்ல வேற யாராவதானு குழம்பிப் போவேன். அதையே கருவா எடுத்துகிட்டு கற்பனை கதையை ரெடி பண்ணினேன். அதுதான் 'தெகிடி’.

இன்ஷூரன்ஸ் பிடிக்கிறதுக்கு முன்ன ஆயிரம் போன் கால்ஸ் வரும். ஆனா, பாலிஸி போட்ட பிறகு, ஒரு கால் கூட பண்ணிச் சொல்ல மாட்டாங்க. இது என் வாழ்க்கையிலும் நடந்துச்சு. இந்த மாதிரி நான் சந்திச்ச, கேள்விப்பட்ட விஷயங்களோட கற்பனைதான் 'தெகிடி’. படம் பார்த்த பிறகு, பாலிசி போடுறது பத்தின பயம் வந்திருக்கறதா நிறைய பேர் சொன்னாங்க. சொல்லப் போனா பாலிசி போட்டவங்களைவிட, போடாதவங்களுக்கான விஷயம்தான் என் படம். ஒவ்வொருத்தருக்குமே பாலிசி போடுற உரிமை இருக்கு. அது நல்லதும், அவசியமானதும்கூட. ஆனா, படத்துல நான் சொல்ல வர்ற கருத்து பாலிசியைப் பத்தினது மட்டும் இல்ல. நம்மோட பர்சனல் தகவல்கள் நமக்கே தெரியாமல் அடுத்தவங்களால திருடப்படுதுங்கிறதுதான்.

போன் நம்பரில் ஆரம்பித்து, நம்மைப் பத்தின எந்தத் தகவலும் அடுத்தவங்களுக்கு போகாமல் இருந்தாலே போதும்... நமக்கு வரும் ஆபத்தை தடுத்துடலாம். முகம் தெரியாத நம்பர்ல இருந்து யாராவது கால் பண்ணினா, எரிச்சலோட அவாய்ட் பண்றதைத்தான் அதிகபட்சமா நாம செய்றோம். ஆனா, எத்தனை பேர், நம்ம நம்பர் அவங்களுக்கு எப்படிப் போகுதுனு யோசிச்சு விசாரிக்கிறோம்? இந்த மாதிரி தற்காப்பு விழிப்பு உணர்வு வேணும்னுதான் 'தெகிடி' மூலமா சொல்றேன்.

'த்ரில்லர்' படம்னு முடிவு பண்ணின பிறகு, ரெகுலரா இல்லாம, வித்தியாசமா, குடும்பத்தோட பார்க்கிற படமா இருக்கணும்னு தெளிவா இருந்தேன். படத்துல காதலை சொல்றதைக்கூட லேட்டாதான் காட்டியிருப்பேன். ஆடியன்ஸுக்கு அவங்களோட காதல் புரியும்... ஆனா, சொல்லிப்பாங்களானு எதிர்பார்த்துட்டே இருப்பாங்க. எதிர்பார்க்காத நேரத்துலதான் ஹீரோ லவ் சொல்வான். பொதுவா நிறைய பொண்ணுங்க, கண்மூடித்தனமா ஆண்களை நம்புவாங்க. ஒரு கட்டத்துல ஏமாத்தினது தெரிஞ்சாலும் உடனே மன்னிச்சு ஏத்துப்பாங்க. என் படத்தில் அதையும் உணர்த்தியிருக்கேன்'' என்ற ரமேஷ்...

''சுத்தமான தமிழ் வார்த்தைதான் 'தெகிடி'. பகடை, சூது, விளையாட்டு, தாயம்... இப்படி நிறைய அர்த்தங்களை சொல்லிட்டே போகலாம். பொதுவா ஒரு படத்தோட தலைப்புக்கு ஓர் அர்த்தம்தான் இருக்கும். என் படத்துக்கு இதில் நீங்க எந்த அர்த்தத்தை எடுத்துக்கிட்டாலும், பொருத்தமா இருக்கும். பிளான் பண்ணின மாதிரி 45 நாள்ல முடிச்சோம்னா, அதில் படத்துக்காக கஷ்டப்பட்ட எல்லோருக்குமே முக்கியப் பங்கு இருக்கு. படத்தை பாருங்க... கண்டிப்பா ஏதோ ஒரு விதத்துல அலர்ட்டா இருக்கணும்னுங்கிற ஃபீலோட வெளிய வருவீங்க!''

- ஒரு ஃபீலிங்குடன் சொன்னார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..?

Post by சிவா on Tue Mar 11, 2014 4:47 pm

''அலர்ட்னஸ் அவசியம்!''

''படத்தில் வருவதைப் போல் உண்மையாகவே நமக்குத் தெரியாமல் நம் பெயரில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து, வேறு யாராவது அதை அனுபவிக்க வழியிருக்கிறதா?'' என்ற கேள்வி... படத்தைப் பார்த்த, கேள்விப்பட்ட அத்தனை பேரின் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது... திகிலுடன்!

இந்தக் கேள்வியை, சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் ஸ்ரீதரன் முன் வைத்தபோது... ''படத்தில் வருவதைப் போல் ஏமாற்றுவதற்கு நிச்சயமாக வழி இல்லை. முதலில், நமக்கே தெரியாமல் நம் பெயரில் பாலிசி போட முடியாது. நம்முடைய அடையாளங்கள், கையெழுத்து இல்லாமல் சாத்தியமில்லை. அப்படியே போட்டாலும் உறவினர்கள் அல்லாதவர்கள் ஆக்ஸிடென்ட் பாலிசி போடவே முடியாது. தனிநபர் பாலிசி போடும்போது, வாரிசுதாரர் (Nominee) ரத்த சொந்தமாக இருக்க வேண்டும். ரத்த சொந்தம் அல்லாதவர் வாரிசுதாரராக இருக்க முடியாது. அப்படியிருக்க, பாலிசி போட்ட ஒருவர் இறந்த பிறகு, ரத்த சொந்தம் அல்லாதவர் நிச்சயமாக அவருக்கான பணத்தை அனுபவிக்கவே முடியாது. ஒருவேளை மைனராக இருப்பவருக்கு பாலிஸி எடுக்கும்போது, வாரிசுதாரராக இருப்பவர் மைனராக இருக்க முடியாது. பாதுகாவலர்தான் வாரிசுதாரராக இருக்க முடியும். அவரும் ரத்த சொந்தமாகத்தான் இருக்க வேண்டும். மைனராக இருந்து, உறவுகள் யாருமில்லாத சமயத்தில், குடும்ப வழக்கறிஞர் வாரிசுதாரராக இருக்க முடியும். மற்றவருக்கு வாய்ப்பே இல்லை'' என்ற ஸ்ரீதரன்,

''அதேசமயம், இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கான விதிமுறைகள் அத்தனை அழுத்தமாக பின்பற்றப்படுவதில்லை. யார் வேண்டுமானாலும் எடுத்துவிட முடியும் என்கிற நிலையில் இருப்பதை மறுப்பதற்கில்லை. அடையாள அட்டைகளை போலியாக தயாரிப்பது, போலியாக கையெழுத்து போடுவது இதெல்லாமே சாத்தியம்தான். எனவே, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதற்கு நேரில் செல்வது போல, இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட நபர் நேரில் வரவேண்டும் என்றிருக்கும் விதியை, கட்டாயம் கடைபிடிக்கச் செய்ய வேண்டும். ஆகமொத்தத்தில் படத்தில் சொல்ல வருவதுபோல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை'' என்றார்.

விகடன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..?

Post by T.N.Balasubramanian on Tue Mar 11, 2014 5:02 pm

போகலாமா ,வேண்டாமா என தெகிடி உருட்டவேணாம் .
படித்தால் , பார்க்கவேண்டிய படம் போல் தெரிகிறதே.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20851
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

Re: தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..?

Post by சிவா on Tue Mar 11, 2014 5:23 pm

தெகிடி: திரை விமர்சனம் - இந்து

முற்றிலும் புதுமையான கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்துத் திரில்லர் வகைப் படத்தைத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரமேஷ். குற்றவியல் படிப்பு, துப்பறியும் களம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு விறுவிறுப்பான திரில்லரைத் தந்திருக்கிறார். கதையோடு ஒன்றிய காதலையும் இணைத்திருக்கிறார்.

கிரிமினாலஜி படித்த வெற்றிக்கு (அசோக் செல்வன்) தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. ஒரு நபரைப் பற்றிய தகவல்களைத் திரட்டும்படி இவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது உள்படப் பல நிபந்தனைகளுடன் வெற்றி களத்தில் இறக்கப் படுகிறான்.

குறிப்பிட்ட நபர் யார், அவர் என்ன வேலை செய்கிறார், அவர் பொழுதுபோக்கு, குடும்பப் பின்னணி, நடமாட்டங்கள் எனப் பல தகவல்களை யும் திரட்டிக் கொடுக்கிறான். நிறுவனம் பாராட்டுகிறது. மேலும் சில அசைன்மென்ட்கள் கொடுக்கப்படுகின்றன. ஒரு அசைன்மென்டின் போது அவன் சந்தேகத்துக்குரிய முறையில் மது (ஜனனி) என்னும் பெண்ணின் கண்ணில் பட்டுவிடு கிறான். அவளைப் பார்த்ததும் பிடித்துப் போவதால் அவளிடம் தன்னைப் பற்றிய தப்பபிப்ராயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று மெனக்கெடுகிறான்.

எதிர்பாராத திருப்பமாக அவளையே வேவு பார்க்கச் சொல்லி நிறுவனம் உத்தரவிடுகிற்து. வெற்றி வேலையை ஆரம்பிக்கிறான். ஆனால் பணியின் நிபந்தனையை மீறி அவளோடு பழகி நெருக்கமாகிறான். இதை எப்படிச் சமாளிப்பது என்று கவலைப்படும் நேரத்தில் அதைவிடவும் பெரிய பிரச்சினையை அவன் எதிர்கொள்ள நேர்கிறது.

அடுத்தடுத்து விழும் கொலைகளும் அவற்றின் பின்னணியும் வெற்றியைச் சிக்கலில் மாட்டிவிடுகின்றன. தன் காதலியின் உயிருக்கு ஆபத்து என்பதும் தெரியவருகிறது. தன்னையும் காப்பாற்றிக்கொண்டு காதலியையும் காப்பாற்றிக் கொலைகளின் மர்மத்தையும் கண்டுபிடிக்க அவன் போராடு கிறான்.

இதுபோன்ற சஸ்பென்ஸ் திரில்லர்களில் கொலை செய்யப்படும் நபர்கள் பெரிய மனிதர்களாக இருப் பார்கள். அவர்களுக்கு எதாவது பின்புலம் இருக்கும். ஆனால் இங்கு கொல்லப்படுவது எந்த பின்புலமும் இல்லாத சாதாரண மக்கள். இந்த முடிச்சினை நேர்த்தியாகக் கோர்த்துச் சிக்கல் இல்லாமல் அவிழ்த் திருக்கிறார் இயக்குநர். ஒரு கட்டம் வரையிலும் அடுத்தடுத்த சம்பவங்கள் யூகிக்க முடியாதபடி நிகழ்கின்றன. கொலைக்குப் பின்னால் இருக்கும் மர்மம் விலகும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது.

ஆனால், மர்மம் வெளிப்பட்ட பிறகு கதையின் போக்கை எளிதாக யூகிக்க முடிகிறது. காவல் துறையின் கையில் விஷயம் போன பிறகும் நாயகன் தனி ஆவர்த்தனம் வாசிப்பது நம்பும்படி இல்லை. குற்ற வலையின் கண்ணிகள் விரிந்துகொண்டே போவது ஒரு கட்டத்தில் அலுப்பூட்டுகிறது. தவறு செய்தவர் தன் தவறை நியாயப் படுத்திக் கடைசிக் காட்சியில் வசனம் பேசுகிறார். பார்வையாளர்கள் கொட்டாவி விடுகிறார்கள்.

அப்சர்வேஷன் என்பதற்கான விளக்கம், துப்பறிவதன் உத்திகள் ஆகியவை நன்றாக இருக்கின்றன. சில இடங்களில் வசனங்கள் நன்றாக உள்ளன.

அசோக் செல்வனின் நடிப்பு கதைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. காமெடி கலந்த குணசித்திர வேடத்துக்குக் காளி நன்றாகப் பொருந்துகிறார் அவரது பாடி லாங்க்வேஜ் நன்றாக இருக்கிறது. சில இடங்களில் மட்டுமே ஜனனிக்குத் தன் நடிப்புத் திறனைக் காட்ட வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை முழுமையாகக் கோட்டை விட்டிருக்கிறார்.

பாடல்கள் வேகத் தடைகளாக அல்லாமல் கதையோடு சேர்ந்து பயணிக்கும் காட்சிகளின் தொகுப்பாக இருப்பது நல்ல விஷயம். ஆனால் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா மெட்டுகளுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். பின்னணி இசையில் சில இடங்களில் தேவையில்லாமல் அல்லது தேவைக்கதிகமாக ஓசை எழுப்புகிறார்.

தினேஷ்கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நேர்த்தி. குறிப்பாக இருட்டுக் காட்சிகள். வலுவான கதை முடிச்சு, விறுவிறுப்பான திரைக்கதை, தேவையான அளவு சஸ்பென்ஸ் என இத்தனை விஷயங்கள் இருந்தாலும் படத்தோடு ஒன்றச் செய்யும் அம்சம் முழுமை யாகவில்லை. மர்ம முடிச்சு அவிழ்ந்த பிறகு கதையை வளர்த்தாமல் இருந்திருக்கலாம்.

தெகிடி என்றால், வஞ்சம், சூது, ஏமாற்றுதல் என்றெல்லாம் பொருளாம். ஏமாற்றுவதைப் பற்றிய படம் ஏமாற்றவில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..?

Post by பாலாஜி on Tue Mar 11, 2014 7:18 pm

நல்ல படம் ...  சூப்பருங்க 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..?

Post by சின்னக் கண்ணன் on Wed Mar 12, 2014 11:44 am

Sidney sheldon ன் Doomsday conspiracy யின் இன்ஸ்பிரேஷன் - அல்லது கான்செப்ட் மட்டும் எடுத்துக்கொண்டு(the hunter, the hunted) மிக மென்மையாக, கொஞ்சம் மெல்ல மெல்ல சுவாரஸ்யப்படுத்தி திகில்கொடுக்க்ப் பார்த்திருக்கிறார்கள் தெகிடி படத்தில்..

வைத்த கண் வாங்காமல் பார்க்க முடிகிறது..பாடல்களும் ஹிட் இல்லாவிட்டாலும் நாட் பேட் ரகம்.. சாமர்த்தியமான் ஸ்க்ரீன் ப்ளே..முக நூலில் ஒரு நண்பர் சொன்னது போலக் கொஞ்சம் தெரிந்த முகங்களைப் போட்டிருக்கலாம். ஜெயப்ப்ரகாஷ் மீது மதிப்பு படத்துக்குப் படம் கூடிக் கொண்டே போகிறது..அவருக்கு இன்னும் கொஞ்சம் காட்சிகள் வைத்திருக்கலாம்..பாலச்சந்தரின் பட்டறை கிருஷ்ணன் (சிந்து பைரவியில் ஜட்ஜ் வீட்டு டிரைவர்) ஒரு காட்சியில் வரும்போது அசாத்திய குண்டாக இருக்கிறார்..உடல் நிலை சரியில்லையா..

ஜனனியின் கண்களில் ஏனோ குறும்பு மிஸ்ஸிங்க்.(பாகன் ஸ்ரீகாந்தோடு நடிக்கையில் ஷீ வாஸ் ஓகே) ஹீரோயினின் தோழிகளை மட்டும் குட் லுக்கிங்க் ஆகப் போடும் த.சி.வழக்கம் இதிலும் உண்டு..ஹீரோவின் நண்பர் கொஞ்சம் மெகானிக்கல்.. ஷைலேஸ் என்ற ரோலில் நடித்திருதவர் பரவாயில்லை..

ரிவ்யூஸ் பார்க்காமல் படம் பார்க்கக் கூடாது என்ற விரதம் கொண்டு பல நாட்க்ள் ஆகிவிட்ட்து.. நல்ல வேளை கதையை - சஸ்பென்ஸை எந்த விமர்சகரும் சொல்லவில்லை என்றாலும் கொஞ்சம் எளிதில் ஊகிக்க முடிகிறது..(அட்லீஸ்ட் நான்)

அசோக் செல்வன் - வில்லாவை விட இதில் இம்ப்ரூவ்மெண்ட் நிறைய.. அவ்வப்போது மாதவனின் சாயல் தெரிகிறது..

ஆனால் நல்ல த்ரில்லர் முயற்சி.. இன்னும் நிறைய படங்கள் இந்த டீம் தரவேண்டும்
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..?

Post by M.M.SENTHIL on Wed Mar 12, 2014 12:08 pm

விரிவான, தெளிவான விமர்சனம், பார்க்க முயற்சிக்கிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum