ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 ayyasamy ram

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 ayyasamy ram

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 ayyasamy ram

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

வரிசையாய் எறும்புகள்
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

மலைகளின் நகரம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 பழ.முத்துராமலிங்கம்

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க ஓர் உன்னத பூஜை!

View previous topic View next topic Go down

உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க ஓர் உன்னத பூஜை!

Post by krishnaamma on Fri Mar 21, 2014 9:07 pmபதினாறு வகையான செல்வங்கள், பலப் பலவிதமான வசதிகள் என்று எல்லாமும் கிடைத்திருந்தாலும் அத்தனையையும், அனுபவிக்க வேண்டுமானால் பிணி இல்லாத உடலும், குறைவில்லாத ஆயுளும் அவசியம்.குறை ஏதும் இல்லாத நிறைவாழ்வு வாழ கும்பிட வேண்டிய கடவுள்ல முக்கியமானவர், தன்வந்திரி. புராணங்கள் அவரை மருத்துவக்கடவுள்னே சொல்லுது. எல்லா வகையான மருந்துகளுக்கும் அவரே அதிபதி.

மகாவிஷ்ணுவே உலகத்துல எல்லாமுமாக இருக்கறதாகச் சொல்லுவாங்க. ஒவ்வொண்ணுலயும் வெவ்வேற வடிவத்துல இருக்கற எம்பெருமான், மருந்துகள் எதுவானாலும் அதுல தன்வந்திரி அம்சத்துல நிறைஞ்சிருக்கிறதா விஷ்ணு புராணம் சொல்லுது.
பாற்கடல் கடையப்பட்ட சமயத்துல அதுலேர்ந்து அமுத கலசத்தை எடுத்துக்கிட்டு வெளிப்பட்டவர்தான் தந்வந்திரி பகவான். ஒரு கையில் அமுதம் நிரம்பிய கலசம் எடுத்துக்கிட்டு வந்த இவர், தன்னோட மற்ற மூன்று கைகள்ல மருந்துக் கலவம், மூலிகைச் செடிகள், அட்டைப் பூச்சி இவற்றை ஏந்திவந்தாராம். மற்ற எல்லாம் சரி, அட்டைப்பூச்சி எதுக்கு?

பகவானோட கையில இருக்கிற அட்டைப்பூச்சிக்கு ஜலவ்ஹான்னு பேர். சாதாரணமா அட்டைப்பூச்சி ரத்தத்தை உறிஞ்சும்னு தெரிஞ்சிருக்கும். பெருமாபாலான நோய்கள் வரக் காரணம் ரத்தம் கெட்டுப் போவதுதான்னு சொல்வாங்க. அதோட, ஆறாத ரணங்கள், நாட்பட்ட காயங்கள், ரத்தக்கட்டுகள்ல கெட்ட ரத்தம் இருக்கும்.

வேண்டாத அந்தக் கெட்ட ரத்தத்தை இந்த அட்டைப் பூச்சி உறிஞ்சி எடுத்துக்கிட்டு, நல்ல ரத்தம் உருவாகக் காரணமாக இருக்கும். அதனால உடல்நலம் சீக்கிரமே சீராகும் என்பது ஐதிகம். சுஸ்ருதர்தான் ஆயுர்வேத மருத்துவத்தோட ஆரம்பக்கர்தான்னு சொல்வாங்க. பல நூறு வருடங்களுக்கு முன்பே அவர் அறுவை சிகிச்சையெல்லாம்கூட செய்திருக்கார். அந்த சமயத்துல ரத்தம் உறைஞ்சுடாம பாதுகாக்கவும், தீய ரத்தத்தை உறிஞ்சி எடுக்கவும் அட்டைப் பூச்சிகளைத்தான் பயன்படுத்தினா பண்டைக்கால மருத்துவக் குறிப்புகள்ல ஆதாரம் இருக்கு.
கரங்கள்ல என்ன ஏந்திவந்தால்தான் என்ன, பகவானோட கருணைப் பார்வை பட்டாலே போதுமே, எந்த வியாதியாக இருந்தாலும் விலகி ஓடிடும் இல்லையா?தட்சனோட சாபத்தால பிறை நிலவா, குறை மதியா தேய்ஞ்சுகிட்டு இருந்த சந்திரன், சிவபெருமானோட அறிவுரைப்படி பாற்கடல்ல முழுகிட்டு, அது கடையப்பட்ட சமயத்துல மறுபடியும் முழுநிலவா தோன்றினானாம்.

மகாலட்சுமி, தன்வந்திரி, சந்திரன் மூணு பேரும் பாற்கடல்ல இருந்து தோன்றியவங்க. அதனாலதான் வெள்ளிக்கிழமைகள்ல மருந்து சாப்பிடத் தொடங்கக் கூடாது. (அதாவதுநீண்டகாலம் எடுத்துக்க வேண்டிய சிகிச்சைக்காக மருந்து, மாத்திரை சாப்பிடறதை வெள்ளிக் கிழமையில ஆரம்பிக்கக்கூடாது). அமாவாசை, பௌர்ணமின்னு சந்திரனோட தொடர்புடைய நாட்கள்ல பிணிகளின் தாக்கம் அதிகமா இருக்கும்னெல்லாம் ஜோதிட ரீதியாகவும்கூட சொல்லப்படும். நிலவுக்கும், நோய்களுக்கும், மனநிலைக்கும் சம்பந்தம் இருக்குன்னு அறிவியல் அறிஞர்கள்கூட சொல்றாங்க.எத்தகைய உடல்நலக் குறைவாக இருந்தாலும், குலதெய்வம், விநாயகர், இஷ்டதெய்வத்தைக் கும்பிட்டுட்டு தன்வந்திரியை நம்பிக்கையோட பூஜித்தா, விரைவிலேயே நிவாரணம் கிட்டும் என்பது நிச்சயம்.ஆரோக்கியமான ஆனந்தமான வாழ்வுக்கு அருளக்கூடிய தன்வந்திரியை எப்படி பூஜிக்கிறது?
தன்வந்திரி பூஜையை செய்ய வியாழக்கிழமை ஏற்ற நாள். மகா விஷ்ணுவோட அம்சம் என்பதால புதன் கிழமையும் செய்யலாம். இவருக்கு உகந்த நிவேதனம் பால்பாயசம், வெண்ணெய், அர்ச்சிக்க உகந்தது துளசி, குங்குமம், சந்தனம்.
பொதுவா தன்வந்திரி பூஜை செய்யறதால உடல்நலம் சீராகும் என்பதால யாருக்காவது உடல் நலம் சரியில்லாத சமயத்துல நாள், கிழமை பார்க்காம அவங்களுக்காக செய்யலாம். அதேசமயம் வருடம் ஒருமுறை தொடர்ந்து ஏழு வாரம் இந்த பூஜையை செய்யறதால உங்க குடும்பத்தல உள்ளவங்க ஆரோக்யம் சீராகவும், சிறப்பாகவும் இருக்கும். இந்த பூஜையை எந்த மாதமானாலும் தொடங்கலாம். ஆனால், வளர்பிறையில் நல்லதொரு திதி தினத்தில அமையக்கூடிய புதன்கிழமையில ஆரம்பிக்கணும்.

(வடநாட்டுல இதை தீபாவளி சமயத்துல ஐப்பசி மாதத்துல ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் செய்யற வழக்கம் இருக்கு).
அன்றைய தினம் அதிகாலைல எழுந்து நீராடிட்டு குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தின் முன்னால நெய்தீபம் ஏற்றி வைத்து மனதாரக் கும்பிடுங்க (தன்வந்திரி பூஜை செய்யற அன்னிக்கு விளக்கை நெய்விட்டு ஏத்தறது நல்லது. இயலாதபட்சத்துல நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்).பூஜையறையில சுத்தமான இடத்துல ஒரு கோலம் போட்டு, அதன்மேல நல்ல மணைக்கட்டை ஒன்றைப் போடுங்க. மணையிலும், கோலம் போடணும். இந்தக்கோலங்களை அரிசி மாவால போட்டு, மஞ்சள் தூளை நடுவுல தூவறது நல்லது.

மணையில நடுவுல சின்னதா ஒரு நுனிவாழை இலையை, நுனி வடக்கு பக்கம் இருக்கறமாதிரி போட்டு, அதன் நடுவுல கொஞ்சம் நெல்லை பரப்புங்க. சுத்தமான பித்தளை அல்லது செம்புக் கலசத்தை அந்த நெல்லுக்கு நடுவுல வையுங்க.
நல்ல தண்ணீரை அந்த செம்புல பாதியளவுக்கு ஊற்றுங்க. கொஞ்சமா பச்சை கற்பூரம், ஒரு துளி ஜாதிபத்திரி, சில துளசி இலைகளை செம்பு நீர்ல போடுங்க.

வழக்கமா கலசத்து மேல மாவிலையும் தேங்காயும் வைப்பாங்க. ஆனா இந்த பூஜையில தேங்காயோட தாமரை மலரையும் வைக்கிறது நல்லது. அதிலும் அந்தத் தாமரை மலரோட தண்டு கொஞ்சம் நீளமானதா இருந்து, அதை செம்பின் உள்ளே இருக்கற நீரைத் தொடர மாதிரி வைக்கிறது இரட்டிப்பு நல்லது.

இப்படி அமைக்கப்பட்ட கலசத்துக்கு அமிர்தகலசம்னு பேர். கலசத்தை அமைச்சதும், செம்புக்கு சந்தன குங்குமம் இட்டு, கொஞ்சம் பூப்போடுங்க.

இந்த அமைப்புக்கு முன்னால ஒரு வெற்றிலையில மஞ்சளால சிறு பிள்ளையார் பிடிச்சு வைச்சு அவருக்கும் பொட்டுவெச்சு பூ போடுங்க.

"பிள்ளையாரப்பா, எந்தத் தடையும் இல்லாம இந்த பூஜையை செய்து முடிக்க அருள்புரியணும்'னு வேண்டிக்கிட்டு தெரிஞ்ச பிள்ளையார் துதியைச் சொல்லுங்க. தூப தீபம் காட்டி, சிறிதளவு வெல்லம் அல்லது அவல் நிவேதனம் செய்யுங்க.
அடுத்ததா, தன்வந்திரி பகவானை மனதார கும்பிட்டு, நீங்க அமைச்சிருக்கிற அமிர்த கலசத்துல எழுந்தருளும்படி வேண்டிக்குங்க.
ஓம் அலைகடல் உதித்தாய் போற்றி
ஓம் அருள்நிறை தெய்வம் போற்றி
ஓம் விஷ்ணுவின் வடிவே போற்றி
ஓம் அமுதகலசக் கரத்தோய் போற்றி
ஓம் நாரணன் உருவே போற்றி
ஓம் நலம் யாவும் தருவாய் போற்றி
ஓம் மூலிகைக் கரத்தாய் போற்றி
ஓம் முதன்மை வைத்தியனே போற்றி
ஓம் தண்ணொளி தெய்வம் போற்றி
ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி

அப்படின்னு பதினொரு முறை சொல்லுங்க.
அடுத்ததா,

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வாமய விநாசனாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணவே நமஹ


இந்தத் துதியை பதினொரு தடவை சொல்லுங்க.

அல்லது, வாசுதேவனின் வடிவானவரே, அமுத கலசம் ஏந்தியவரே, எல்லாப் பிணிகளையும் போக்குபவரே, தன்வந்திரியே உம்மை வணங்குகிறேன்.இந்த தமிழ் அர்த்தத்தை மனதார பதினொரு தடவை படியுங்க. தன்வந்திரி துதிகள் ஏதாவது தெரிஞ்சா அவற்றையும் சொல்லுங்க.ஊதுபத்தி, சாம்பிராணி, தசாங்கம்னு உங்களால இயன்ற தூபம் காட்டுங்க. அடுத்து கற்பூர தீபம் காட்டிட்டு பால்பாயசம் அல்லது வெண்ணெய் நிவேதனம் செய்யவும்.

இப்போ மறுபடியும் தன்வந்திரி பகவானை மனதார கும்பிட்டு, "கலசத்துல தங்கி இருக்கும் தன்வந்திரி பகவானே, இப்போதிலிருந்து எங்க வீடு முழுக்க உங்க அருள் வியாபிச்சு இருக்கணும். வந்த நோய் தீரவும், இனி எந்தப் பிணியும் வாட்டாம இருக்கவும் பரிபூரணமா அருளணும்!' என்று வேண்டிக்குங்க.

அதுக்கப்புறம் அமிர்த கலச அமைப்பை லேசாக வடக்குப் பக்கம் நகர்த்துங்க. பூஜை முடிஞ்சுது.கலசத்துல இருக்கற தீர்த்தத்தை உங்க வீட்டுல இருக்கற எல்லோரும் சிறிதளவு உட்கொள்ளுங்க. தலையிலும் தெளிச்சுக்குங்க. மீதத்தை வீடு முழுக்க லேசா தெளிச்சுட்டு, கடைசியா ஏதாவது செடி இருந்தா அதுல ஊற்றுங்க. அல்லது கால்படாத இடத்துல ஓரமா ஊற்றிடுங்க. கலச செம்பை அப்படியே கவிழ்த்து வைச்சுடுங்க. மறுநாள்தான் அதைத் துடைத்தோ, கழுவியோ எடுத்து வைக்கணும். தாமரையை வாசல் படிமேல் சொருகி வைக்கலாம்.

இந்த பூஜையை தொடங்கறதுக்குதான் நல்ல திதி, தினம் பார்க்கணும். பிறகு அடுத்தடுத்து வர்ற ஏழு புதன், அல்லது வியாழக்கிழமைகள்ல இந்த பூஜையை செய்யுங்க. பெண்களால முடியாத சூழல் வந்தா குடும்பத்துல உள்ள யாராவது செய்யலாம். உடல்நலக் குறைபாடு உள்ளவங்க யாருக்காகவாவது இந்த பூஜையை செய்தா, ஒரே ஒருமுறை எந்த தினத்துல வேணும்னாலும் செய்து, அந்த தீர்த்தத்தை உடல்நலக் குறைவு உள்ளவர்களுக்கு சிறிது கொடுக்கலாம்.முக்கியமான விஷயம், தன்வந்திரி பூஜை செய்யும் தினத்துல உங்களால இயன்ற அளவு ஏழை நோயாளிகள் யாருக்காவது உதவறதுதான். வாராவாரம் முடியலைன்னாலும் ஏழாவது வாரம் மட்டுமாவது உதவுங்க. உங்க குடும்பம் ஆனந்தமா, ஆரோக்யமா இருக்கும்!

- காசிவாசி குருஸ்ரீ காளிதாஸ் மகரிஷி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க ஓர் உன்னத பூஜை!

Post by விஸ்வாஜீ on Sat Mar 22, 2014 8:19 am


காலை வணக்கம்,எனக்கு தேவையான பதிவு

நன்றி அம்மா
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1334
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum