ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 பழ.முத்துராமலிங்கம்

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 பழ.முத்துராமலிங்கம்

ஏர்செல் நிறுவனம் திவால்
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 SK

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'!

View previous topic View next topic Go down

கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'!

Post by சாமி on Thu Mar 27, 2014 6:14 pmமலை கிராமங்களில் இருந்து பெரிது பெரிதாக உடைத்து எடுத்து வரப்பட்ட கருங்கல் பாறைகள் ஒரு புறம். ஓலைக் கொட்டகையால் அமைக்கப்பட்ட கல் தச்சர்களுக்கான பட்டறை மறு புறம். பாளம்பாளமாக அறுக்கப்பட்ட கல் தூண்களில் சிற்பம் வடிக்கும் சிற்பிகள். அருகே சாரக்கட்டைகளின் ஊடாக சிற்ப வேலைப்பாடுகளுடன் வளர்ந்து வரும் கற்றளி.. விடாது கேட்டுக் கொண்டிருக்கும் சிற்பிகளின் உளிஓசை.. இந்த காட்சி, ஊர்தோறும் ஆலயங்கள் கட்டிய பண்டைய மன்னர்கள் காலத்திற்கே நம்மை இட்டுச்செல்கிறது. ‘முழுவதும் கருங்கற்களாலேயே கட்டப்படும் கற்றளியா..? அதுவும் இந்த காலத்திலா.?’ ஆச்சரியப்பட வைக்கிறதா...? வாருங்கள்! திண்டிவனம் அருகில் உள்ள கிராமத்திற்கு...

அன்னம்புத்தூர்! பெயரே ஊரின் பழைமையைச் சொல்கிறது. அந்த அழகிய கிராமத்தின் பசுமையான வயல்வெளிகளுக்கு மேற்கில் ஓர் ஏரிக்கரை. அதனையொட்டி மிகப்பெரிய மண்மேடில் மண்டிக் கிடக்கும் செடிகொடிகளுக்கு மத்தியில் வெட்டவெளியில் தன்னந்தனியே ஒரு பிரம்மாண்ட சிவலிங்கம். (சுமார் 5 அடி உயரம்) கவனிப்பாரின்றி வெய்யிலிலும் மழையிலும் காய்ந்து கொண்டிருந்தது. உள்ளம் கசிந்த ஊர்ப் பெரியவர்கள் சிலர், அடர்ந்து வளர்ந்த செடி கொடிகளை அப்புறபடுத்தி தினமும் பூசித்துவந்தனர்.. வழிபாடுகள் தொடர மெள்ள மெள்ள பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானது. வழிபாட்டுக்கு வசதியாக மண்மேட்டை இன்னும் துப்புரவாக்கி விரிவுபடுத்தலாம் என்று அங்கிருந்த கற்களையும் முட்களையும் உடைந்த கல் தூண்களையும் அகற்றினர். அப்படி அப்புறப்படுத்திய சிதிலமடைந்த சில கல் துண்டுகளில் பழங்கால வரிவடிவில் கல்வெட்டுக்கள் இருப்பதைக் கண்ட விவரமறிந்த பக்தர் ஒருவர் தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆச்சரியமூட்டிய தகவல்கள்

அங்கு வந்த இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டாய்வாளர்கள் (டாக்டர் ராஜவேலு, ரகு, அழகேசன்) சிவலிங்கம் இருக்கும் மண்மேட்டையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஆய்வு செய்தனர். மிகவும் சிதிலமடைந்து உடைந்து போன கல்வெட்டுக்களைப் படியெடுத்துச் சென்றனர். முடிவில் அவர்கள் சொன்ன தகவல் அன்னம்புத்தூர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதிட்டானத்தின் குமுதவரியில் இருந்த இந்தக் கல்வெட்டு முதலாம் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் சுமார் கி.பி1008ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியுடன் துவங்கும் இந்த கல்வெட்டு, ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் (பல்லவர்களை வென்று கைப்பற்றிய தொண்டை நாடு) கிடங்கில் நாட்டைச் (தற்போதைய திண்டிவனம்) சேர்ந்த அன்னம்புத்தூரில் உள்ள நிதீசுவரர் ஆலய வழிபாட்டிற்கு ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காக ஊருக்கு வடக்கே நிலம் கொடையாக வழங்கியதைக் குறிப்பிடுகிறது. இந்த ஆலயத்தின் மூலவர் பெயர் நிதீசுவரர் என்பது தெளிவாகிறது.

மேலும் மண்மேட்டின் கீழ்ப்பகுதியில் காணப்படும் செங்கல் கட்டுமான அமைப்பு பல்லவர் காலக் கட்டிடக் கலையைக் காட்டுகிறது. கிடைக்கப்பட்ட விநாயகரின் சிற்பமும் பல்லவர்கள் காலத்தைச் சார்ந்ததே. ஆக சோழர்கள் காலத்திற்கு முன்பே பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்பதும் பல்லவர்களை வென்று பின்னர் வந்த சோழர் ஆட்சியில் முதலாம் ராஜராஜ சோழன் இந்த சிவாலயத்தின் மீது பக்தி கொண்டு ஆலயத்தை புணரமைத்து திருப்பணிகள் செய்திருக்கலாம் என்பதும் தெரியவருகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோயில். முதலாம் ராஜராஜ சோழன் திருப்பணிகள் செய்த கோயில். நிதிகளுக்கு அதிபதியான குபேரன் இங்கு வந்து ஈசனை வழிபட்டு அட்டநிதிகளையும் பெற்ற கோயில். எனவே இங்குள்ள மூலவர் நிதீசுவரர் என்ற திருநாமம் பெறுகிறார். பொய் சொன்ன பிரம்மனின் பாவத்தைப் போக்கி, அவரது தலையெழுத்தையே மாற்றி எழுதிய மகேசுவரன் அருளும் கோயில். (பிரம்மனும் விஷ்ணுவும் சிவனாரின் அடிமுடியை தேடிச் சென்றனர். அப்போது முடி தேடிச் சென்று தோற்றுப்போன பிரம்மன், முடியைக் கண்டேன் என்று பொய் சொன்னதால் பெற்ற பாவத்தை தீர்க்க இங்கு வந்து ஈசனை வழிபட்டதாகவும் அன்னமூர்த்தி, அன்ன வாகனன் என்றெல்லாம் பெயர்கொண்ட பிரம்மனின் பாவத்தை போக்கிய தலம் அமைந்த இடமாதலால் இந்த ஊருக்கு அன்னம்புத்தூர் என்று பெயர் அமைந்ததாக சொல்கிறது சோழ மன்னனின் கல்வெட்டு.)

தொல்லியல் துறை ஆய்வுகளின் இந்தச் செய்தி, அன்னம்புத்தூர் மக்களிடம் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது. இத்தனைச் சிறப்புகளை பெற்ற இந்த ஈசனை இப்படி வெட்டவெளியிலா இருக்கவைப்பது? மளமளவென செயலில் இறங்கினர் ஊர்மக்கள். மண்மேட்டில் இருந்த நிதீசுவரரை முதலில் அருகில் குடிசையில் அமர்த்தினர். உடனடியாக ஒரு திருப்பணிக் குழுவை அமைத்து ஆலயத்தை மீளக்கட்டுமானம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

‘அந்த ஈசனே நமக்கு துணை நிற்பான்’ என்று அந்த மகேசுவரன் மேல் பாரத்தை போட்டுவிட்டு கருங்கல் கற்றளியாகவே ஆலயம் அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

ஊர் பொதுமக்கள், உறவினர்கள், நண்பர்கள், விவரமறிந்து நிதீஸ்வரரை தரிசிக்க வரும் பக்தர்கள் என ஓவ்வொருவரும் மனமுவந்து அளிக்கும் பொருளுதவியால் ஆலயம் இன்று கனகம்பீரமான கற்றளியாக எழுந்து வருவதாக மனம் உருகிச் சொல்கிறார்கள் திருப்பணிக்குழு அன்பர்கள்.

இத்தனைத் தொன்மையும் புராதனச் சிறப்பும் வரலாற்றுப் பின்னணியும் கொண்ட இந்தத் தலத்தின் மகிமையை அடுத்தடுத்த தலைமுறைக்கும் சென்று சேர்க்கும் நோக்கத்துடன் களம் இறங்கியிருக்கிறார்கள் அன்னம்புத்தூர் கிராம மக்கள். புதிதாக ஆலயங்கள் கட்டுவதைவிட நமது நாட்டில் வழிபாடில்லாமல் எண்ணற்ற ஆலயங்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. அவற்றை மறுகட்டுமானம் செய்து வழிபாட்டிற்கு திறந்து வைப்பதே மிகப் பெரிய புண்ணியம். (திஹிண்டுதமிழ்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum