ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 சிவனாசான்

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இறைவன் பாதங்கள் படிந்த திருக்கச்சூர் திருக்கோயில்

View previous topic View next topic Go down

இறைவன் பாதங்கள் படிந்த திருக்கச்சூர் திருக்கோயில்

Post by சிவா on Sat Mar 29, 2014 11:07 pm

தொண்டை நாட்டில் உள்ள திருத்தலங்களில் திருக்கச்சூர் சிறப்பான இடத்தைப் பெற்று விளங்குகிறது. சென்னை - செங்கற்பட்டுச் சாலையில் சிங்கபெருமாள் கோயிலுக்கு மேற்கே ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் 2 கி.மீ. சென்றால் இத்திருக்கோயிலை அடையலாம்.

சிறப்புகள்: திருக்கச்சூர் திருத்தலம் பலவகையில் சிறப்புப் பெற்ற தலமாக விளங்குகிறது. பாற்கடலை தேவர்களும் - அசுரர்களும் கடையும்பொழுது அமுதம் திரண்டு வருவதற்காகத் திருமால் கச்சப (ஆமை) வடிவில் இருந்து சிவபெருமானை வழிபட்டதாகத் தல வரலாறு கூறுகிறது. இப்புராண வரலாற்றை எடுத்துக்காட்டும் வகையில் இக்கோயில் தியாகராஜர் சன்னிதி முன்னர் உள்ள மண்டபத்தூண் ஒன்றில் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

ஆலயக்கோயில்: இறைவன் எழுந்தருளியுள்ள கோயில்களைப் பற்றி திருநாவுக்கரசர் பெருமான் தமது திருஅடைவுத் திருத்தாண்டகத்தில் குறிப்பிடும்போது கரக்கோயில், ஞாழற்கோயில், கொகுழக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என்ற பல வகையான கோயில்களைக் குறிப்பிடுகிறார். இத்தலம் "ஆலக்கோயில்' எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. சுந்தரர் பெருமான் தமது திருப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "கச்சூர் ஆலக்கோயில் அம்மானே' என்றே போற்றுவதைக் காணலாம். கல்வெட்டுகளிலும் "திருஆலக்கோயில் உடையார் நாயனார்' என்றே குறிப்பிடுகிறது.

வரலாற்றுச்சிறப்பு: இக்கோயிலில் 80க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலுக்கு அளிக்கப்பெற்ற கொடைகள், அமைக்கப்பட்ட நந்தவனங்கள், அளிக்கப்பெற்ற திருமேனிகள் போன்ற பல வரலாற்றுச் செய்திகளைக் கல்வெட்டுகள் அளிக்கின்றன. முதலாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், சம்புவராயர்கள், விருப்பண்ண உடையார், நரசிங்கராயர் போன்ற மன்னர்கள் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் இவ்வூர் "ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக்களத்தூர் கோட்டத்துச் செங்குன்ற நாட்டு நித்தவிநோத நல்லூர் என்னும் திருக்கச்சூர்' என்று குறிப்பிடப்படுகிறது.

உபயவிடங்கர்: தொண்டை நாட்டில் தியாகராஜர் சன்னிதிக்கும் வழிபாட்டிற்கும் சிறப்புப் பெற்ற தலங்களாக - திருவொற்றியூர், திருவான்மியூர், திருக்கச்சூர் திருக்கோயில்கள் விளங்குகின்றன. இந்த மூன்று தலங்களிலும் தேவர்களும் - முனிவர்களும் விடங்கப் பெருமானான - சோமாஸ்கந்த மூர்த்தியான - தியாகராஜரைத் தரிசிக்க வேண்டினார்கள். இறைவன் தரிசனம் அளித்தார். இம்மூன்று தலங்களும் "உபயவிடங்கத்தலங்கள்' என்ற சிறப்புடன் வழிபடப் பெறுகின்றன. திருக்கச்சூரில் தியாகராஜர் "அமுதத்தியாகர்' என்ற சிறப்புப் பெயருடன் விளங்க அவருக்கான வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

விருந்திட்ட ஈசன்: தானத்தில் சிறந்தது அன்னதானம் ஆகும். இறைவனது அடியார்களுக்கு அன்னம் அளிப்பது மிகவும் சிறபபானதாகும். நமது சமய வரலாற்றில் இறையடியார்களுக்கு அன்னம் படைத்துச் சிறப்புப் பெற்றவர்களில் திருமங்கையாழ்வார், இளையான்குடி மாறநாயனார், அமர்நீதி நாயனார், அப்பூதி அடிகள், மூர்க்க நாயனார், கலிகம்ப நாயனார், இடங்கழி நாயனார், வள்ளலார் பெருமான் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

தனது அடியார்கள் பசியால் துன்பப்பட்டபொழுது இறைவன் தானே அவர்களுக்காக உணவு பெற்று வழங்கியதும் உண்டு. திருச்சிக்கு அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி கோயிலில் திருநாவுக்கரசருக்காகக் கட்டமுது பெற்று அளித்தார். சுந்தரர் பெருமானுக்குச் சீர்காழிக்கு அருகில் உள்ள திருக்குருகாவூர் திருத்தலத்திலும், திருக்கச்சூர் திருத்தலத்திலும் உணவு பெற்று வழங்கியதைத் திருமுறைகள் எடுத்துக் கூறுகின்றன.

சுந்தரர் பெருமான் திருக்கழுங்குனறம் கோயிலை வழிபட்டுப் பின்னர் திருக்கச்சூர் திருத்தலம் வருகிறார். இறைவனை வணங்கிய பின்னர் இறைவன் கருணை வேண்டிப் பசியால் அங்கே அமர்ந்திருக்க, இறைவன் தனது அடியாருக்காக வீடு தோறும் சென்று உணவு பெற்றுச் சுந்தரரின் பசியைப் போக்கினார். இறைவனது இந்த அருட்செயலைச் சுந்தரர் பெருமான் தமது திருப்பதிகப் பாடல்களில் போற்றுவதைக் காணலாம்.

முதுவாய் ஓரி கதற முதுகாட்டு
எரிகொண்டால் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவி சூடும்
மலையான் மகள் தன் மணவாளா
கதுவாய்த் தலையில் பலநீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமாறு இதுவோ கச்சூர்
ஆலயக்கோயில் அம்மானே
- 7ம் திருமுறை, பாடல் 1

இந்நிகழ்ச்சி பெரியபுராணத்தில் ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்திலும் விரிவாகக் கூறிப்படுகிறது.

இதனால் இங்கு எழுந்தருளி அருள்புரியம் இறைவனை இரந்திட்ட ஈசன், விருந்திட்ட ஈசன் என்றெல்லாம் போற்றுகின்றனர். தனி சன்னிதியும் இக்கோயிலில் .ள்ளது. சுந்தரர் பெருமானுக்காக இறைவனது திருவடிகள் படிந்த திருக்கச்சூர் திருத்தலம் வழிபாட்டுச் சிறப்புடையதாகும்.

இறை அடியார்களின் பசியைப் போக்க இன்று பலதிருக்கோயில்களில் அன்னதானம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இத்தலத்தில் எழுந்தருளி அருள்புரியம் இறைவி அஞ்சனாட்சி அம்மன் என அழைக்கப்பட்டுச் சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது. மேலும் இக்கோயிலில் அம்மன் சன்னதிக்கு அருகில் ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இத்தலத்தின் தல மரமாக ஆலமரம் விளங்குகிறது.

திருக்கோயிலின் அமைப்பு
: கிழக்கு நோக்கிய திருக்கோயில் எதிரே விநாயகர் கோயிலும், கச்சூர் ஏரியும் அமைந்துள்ளது. கோபுரம் இல்லாத நுழைவாயில், கோபுரம் எழுப்புவதற்கு இறை அன்பர்கள் முயற்சி எடுக்கலாம். நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் அமைந்துள்ளது. தெற்குப் பகுதியில் அமைந்துள்ள தியாகராஜ மண்டபம் வழியே இறைவன் சன்னதிக்குள் நுழைகிறோம். எதிரில் தெற்கு நோக்கி அம்பாள் சன்னதி அமைந்துள்ளது. இறைவன் சன்னதியில் முன்புறம் சாளரம் (ஜன்னல்) அமைந்துள்ளது. இதன் வழியே இறைவனைத் தரிசித்தல் சிறப்பு. இறைவன் எழுந்தருளியுள்ள கருவறை விமானம் கஜபிருஷ்ட (தூங்கானை மாடம்) வடிவில் அமைந்துள்ளது.

ஞானவிநாயகர்: இரண்டாவது திருச்சுற்றில் தென்மேற்கில் ஞானவிநாயகர் சன்னிதி அழகிய சிற்பங்களுடன் காட்சி அளிக்கிறது. விமானத்தில் பூதகணங்கள் வாழைப்பழம் - பலாப்பழத்தைத் தாங்கிய நிலையில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. தூண்களில் விநாயகர், கஜசம்கார மூர்த்தி, இராசிசக்கரம் போன்ற பல அழகிய சிற்பங்களுடன் இச்சன்னிதி விளங்குகிறது. இச்சன்னதியின் முன்மண்டப விதானத்தின் (கூரை) பக்கங்களில் சுந்தரர் வரலாற்றுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் தொடர் சிற்பமாகக் காட்சி அளிக்கிறது. சுந்தரர் வரலாற்றுடன் இத்தலம் தொடர்பு கொண்டு விளங்குவதால் இச்சிற்பங்கள் இங்கே இடம் பெற்றிருக்க வேண்டும். திருக்கச்சூர் ஞானவிநாயகர் சன்னிதி தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

இச்சுற்றில் தொடர்ந்து முருகன் சன்னிதி, விருந்திட்ட ஈசன் சன்னிதி, பைரவர் சன்னிதி ஆகியவை அமைந்துள்ளன.

மலைமேல் மருந்து:
இவ்வூரில் கோயிலுக்கு அருகே உள்ள சிறிய குன்றின் மீது மருந்தீசர் கோயில் அமைந்துள்ளது. இம்மலையை ஒளஷதகிரி எனவும், இறைவனை ஒளஷதீசுவரர் எனவும் அழைக்கின்றனர். இறைவியை அந்தக நிவாரணி, இருள் நீக்கித்தாயார் எனவும் அழைத்துப் போற்றுகின்றனர். இக்குன்றில் மருத்துவ குணம் உடைய மூலிகைகள் இருப்பதாகக் கூறுகின்றனர். மேற்கு நோக்கிய இறைவன் சன்னிதி. வாயில் முன் மண்டபத் தூண்களில் விநாயகர், பட்டினத்தார், வள்ளலார், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரது சிற்ப வடிவங்கள் காணப்படுகின்றன. தூண் ஒன்றில் சுந்தரரை நோக்கியவாறு கையில் அமுதுடன் காட்சி தரும் இறைவனது சிற்பம் சிறப்பானது.

இறைவன் சன்னிதிக்கு வடக்குப் புறத்தில் சண்டிகேசுவரர் சன்னிதி உள்ளது. இதில் நான்கு முகம் உடைய சதுர்முக சண்டிகேசுவரர் வடிவத்தை வழிபடுவது மிகவும் சிறப்பானது.

இக்கோயிலில் உள்ள கொடிமரத்தின் அருகிலிருந்து மக்கள் பக்தியுடன் மண் சேகரித்து எடுத்துச் செல்கின்றனர். இது மருத்துவக் குணம் உடையதாகக் கருதப்படுகிறது. நோய் வாய்ப்பட்டவர்களும் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோயிலில் எழுந்தருளிய இறைவனை "மலைமேல் மருந்தே' எனச் சுந்தரர் பெருமான் போற்றுகின்றார்.

மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக்கோயில் அம்மானே
பாடல் - 5

விழாக்கள்: இக்கோயிலில் மாதந்தோறும் விழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் சிறப்பானது. தியாகராஜரை "தொட்டில் பல்லக்கில்' வீதி உலா எடுத்து வருவது சிறப்பு அம்சமாக விளங்குகிறது.
பல சிறப்புகள் கொண்டதும் இறைவன் திருவடிகள் பட்ட திருத்தலமாகிய திருக்கச்சூர் ஆலக்கோயில் இறைவனை வழிபடுவோம்! நலமடைவோம்!!

- கி. ஸ்ரீதரன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum