ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நன்றி
 wannie

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

'மாதங்களில் நான் மார்கழி'
 ayyasamy ram

மரணத்தை வெல்லும் மார்கழி
 ayyasamy ram

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 ayyasamy ram

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 ayyasamy ram

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 ayyasamy ram

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 ayyasamy ram

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 ayyasamy ram

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 ayyasamy ram

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 KavithaMohan

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 KavithaMohan

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பஞ்சாங்கம்

View previous topic View next topic Go down

பஞ்சாங்கம்

Post by சிவா on Mon Mar 31, 2014 12:40 am

• மூன்று வகையான பஞ்சாங்கங்கள் உள்ளன. அவை வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கணிதப் பஞ்சாங்கம், எபிமெரிஸ் பஞ்சாங்கம் ஆகும்.

• வாக்கியப் பஞ்சாங்கம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ரிஷிகளால் கணித்து சொல்லப்பட்ட சூத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவது.

• திருக்கணிதப் பஞ்சாங்கம் என்பது கோள்களின் பாதையில் ஏற்படும் இயக்கநிலை வித்தியாசத்தைக் கணக்கில்கொண்டு கணிக்கப்படுவது.

• எபிமெரிஸ் பஞ்சாங்கம் என்பது மேல்நாட்டு முறைப்படி கணிக்கப்படுவது.

• பஞ்சாங்கத்தின் உதவியுடனே தினசரி நாள்காட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் ஜோதிடக் கலைக்கு பஞ்சாங்கமே அடிப்படை ஆகும்.

• பஞ்சாங்கத்தின்படி ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயத்தில் இருந்தே ஆரம்பம் ஆகிறது.

• சூரியன், சந்திரனின் இயக்கத்தை கணக்கில் கொண்டே பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது.

• சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்குச் செல்லும் நாள்தான் தமிழ் மாதப் பிறப்பாகும். அதாவது சித்திரை மாதம் பிறப்பு அன்று மேஷ ராசிக்குள் சூரியன் வரும் நாள். அடுத்த ராசியான ரிஷபத்திற்கு வரும் பொழுது வைகாசி மாதப் பிறப்பாகும்.

• ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்தின்போது நடப்பில் இருக்கும் நட்சத்திரம், திதி, யோகம், கரணம் முதலியவையே பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டிருக்கும்.

மேலும் குறிப்பிடப்பட்ட நேரமும் நட்சத்திரம், திதி முதலியவை முடியும் நேரமே ஆகும்.

பஞ்சாங்கம் என்ற சொல்லுக்கு ஐந்து அங்கங்கள் என்று பொருளாகும். அவை:

1. வாரம்: வாரம் என்ற சொல்லிற்கு கிழமை எனப் பொருள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு கிழமைகளே வாரம் ஆகும்.

2. திதி: திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம். சூரியனும் சந்திரனும் ஒரே பாதையில் இணைந்து இருந்தால் அமாவாசை திதி ஆகும். ஒன்றுக்கொன்று நேர் எதிராக இருந்தால் பௌர்ணமி திதி ஆகும்.

திதிகள் மொத்தம் 30. இவை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அமாவாசை முதல் பௌர்ணமி வரையில் வளர்பிறை திதி அல்லது சுக்லபட்ச திதி. அவை மொத்தம் 14 ஆகும்.

பௌர்ணமி முதல் அமாவாசை வரையில் தேய்பிறை திதி அல்லது கிருஷ்ணபட்ச திதி. அவை மொத்தம் 14.

இவற்றுடன் அமாவாசை, பௌர்ணமி ஆகிய இரண்டும் சேர்த்து 30 ஆகும்.

வளர்பிறை, தேய்பிறை எனப் பிரிக்கப்பட்டாலும் பெயர்களே ஒன்றுதான். பிரதமை முதல் சதுர்த்தசி வரையிலான 14 பெயர்களுக்கு முன்னும் வளர்பிறை தேய்பிறை என்று சேர்த்துச் சொல்லுவார்கள்.

(குறிப்பு - திதிகளின் பெயர்கள்: பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி அல்லது அமாவாசை).

3. நட்சத்திரம்: நட்சத்திரங்கள் மொத்தம் இருபத்தி ஏழு ஆகும். சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ அந்த நட்சத்திரமே அன்றைய நாளின் நட்சத்திரமாகும். அந்த நட்சத்திரமே அந்த நேரத்தில் பிறந்த அனைவருக்கும் ஜென்ம நட்சத்திரம் ஆகும்.

(குறிப்பு - நட்சத்திரங்களின் பெயர்கள்: அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகும்).

4. யோகம்: யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்பது பொருள். வான் மண்டலத்தில் சூரியன் செல்லும் தூரத்தையும், சந்திரன் செல்லும் தூரத்தையும் கூட்டினால் யோகம் கிடைக்கும். யோகங்கள் மொத்தம் இருபத்தி ஏழு ஆகும்.

(குறிப்பு - யோகங்களின் பெயர்கள்: விஷ்கம்பம், ப்ரீதி, ஆயுஷ்மான், சௌபாக்யம், சோபனம், அதிகண்டம், சுகர்மம், திருதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வ்யாகாதம், ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வ்யதீபாதம், வரியான், பரிகம், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுக்கிலம், பிராம்ஹம், ஐந்திரம், வைதிருதி).

5. கரணம்: கரணம் என்பது திதியில் பாதி ஆகும். அதாவது ஒரு திதிக்கு இரண்டு கரணங்கள். இவை சரகரணங்கள், ஸ்திர கரணங்கள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

கரணங்கள் மொத்தம் 11 ஆகும். இதில் ஏழு கரணங்கள் சர கரணங்கள். இவை சுழற்சி முறையில் மாறி மாறி வரும். 4 கரணங்கள் ஸ்திர கரணங்கள் எனப்படும். இவை அமாவாசை ஒட்டிய நாள்களில் மட்டும் நடப்பில் இருக்கும்.

அதாவது அமாவாசைக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தசியின் இரண்டாம் பாதி, அமாவாசை முழுவதும், மறுநாள் வரும் வளர்பிறை பிரதமையின் முதல் பாதி வரை ஸ்திர கரணங்கள் 4 நடப்பில் இருக்கும். மற்ற ஏழு கரணங்களும் பிற நாள்களில் சுழற்சி முறையில் வரிசைப்படி வரும்.

(சரகரணங்களின் பெயர்கள்: பலம், பாலவம், கௌலவம், தைதுலை, கரஜை, வணிஜை, பத்திரை. ஸ்திரகரணங்கள்: சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் ஆகும்).

-கே. பார்வதி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பஞ்சாங்கம்

Post by NEWTAMILNESAN on Mon Mar 31, 2014 3:46 pm

நல்ல தகவல்.. நன்றி
avatar
NEWTAMILNESAN
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: பஞ்சாங்கம்

Post by krishnaamma on Sun Apr 06, 2014 9:36 pm

நல்ல தகவல் சிவா புன்னகை நன்றி !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பஞ்சாங்கம்

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 22, 2014 12:55 pm

கே. பார்வதிக்கும் சிவாவுக்கும் நன்றி !

‘திதி’ என்ற தமிழ்ச் சொல்லிலிருந்தே ‘தேதி’ என்ற சொல் வந்தது என்று நான் எனது ஆய்வுநூல் ஒன்றில் எழுதியுள்ளேன் !

 :நல்வரவு: அருமையிருக்கு 
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2362

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: பஞ்சாங்கம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum