ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

ஏழு நாடுகளின் சாமி
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திரைவிமர்சனம்-மான்கராத்தே

View previous topic View next topic Go down

திரைவிமர்சனம்-மான்கராத்தே

Post by தமிழ்நேசன்1981 on Sat Apr 05, 2014 4:23 pm

மான்கராத்தே- விமர்சனம் !


நான்கு மாதங்களுக்குப் பிறகு குறிப்பிட்ட ஒருநாளில் என்ன நடக்கும் என்பது உறுதியாகத் தெரிந்தால் அதைத் தெரிந்துகொள்கிறவர்கள் மனநிலை எப்படியிருக்கும்? மென்பொருள்துறையில் பணியாற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் மற்றும் அவருடைய குழுவினருக்கு நான்குமாதங்கள் கழித்து ஒரு குறிப்பிட்ட நாளில் என்ன நடக்கும்? என்பது தெரிகிறது.

ஒரு குத்துச்சண்டைப்போட்டியில் ஒருவர் வெற்றி பெறுவார் அவருக்குச் சன்மானமாக இரண்டுகோடி கிடைக்கும் என்கிற செய்தி இவர்களுக்கு மட்டும் தெரிகிறது. அந்த இரண்டுகோடியைக் கைப்பற்ற அவர்கள் செய்யும் செயல்கள்தாம் படம். இயக்குநர் முருகதாஸின் இந்தக்கதையை அவருடைய உதவியாளராக இருந்த திருக்குமரன் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.

வழக்கம்போல வெட்டியாக ஊரைச்சுற்றிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனைப் பிடித்து குத்துச்சண்டை வீரராக்கப் படாதபாடுபடுகிறார்கள் சதிஷ் குழுவினர். சில நேரங்களில் சிரிப்பும் பல நேரங்களில் சலிப்பும் வருகிறமாதிரியான அக்காட்சிகள் படத்துக்குப் பலவீனம். அவர்களுக்குப் பணம் நோக்கம் என்றால் சிவகார்த்திகேயனுக்கு? ஹன்சிகாவைப் பார்த்து அவருடைய அழகில் மயங்கி அவரைக் காதலிக்கத் துரத்தும் சிவகார்த்திகேயனுக்கு ஹன்சிகாவுக்கு குத்துச்சண்டை பிடிக்கும் என்று தெரிந்ததால் அதில் ஈடுபடச் சம்மதிக்கிறார்.

அதன்பின்னர் குத்துச்சண்டை மேடைகளில் நடக்கும் கூத்துகளை ஒரு உண்மையான குத்துச்சண்டை வீரர் பார்த்தால் படக்குழுவினரை முகத்தில் குத்தியே கொன்றுவிடுவார். அவ்வளவு கூத்தடித்திருக்கிறார்கள். கூத்தடித்தே இறுதிப்போட்டிவரை வந்துவிடுகிறார் சிவகார்த்திகேயன். கடைசி கொஞ்நேரம் இருக்கும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்தை வேறுதளத்துக்கு எடுத்துச்செல்கிறது. எதிர்த்துச்சண்டை போடுவது கராத்தே என்றால் அடிபடாமல் தப்பித்து ஓடுவதுதான் மான்கராத்தே.

பெயருக்குப் பொருத்தமாக சவாலிலிருந்து தப்பித்து ஓடுகிற வேடம் சிவகார்த்திகேயனுக்குப் பொருந்தியிருக்கிறது. அவரிடம் நகைச்சுவையை எதிர்பார்ப்பார்கள் என்பதால் கூடுமானவரை நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தே காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். அவற்றை மிக சாதாரணமாகக் கடந்துபோகிறார் சிவகார்த்திகேயன்.

முழுமையான கதாநாயகன் என்று ஆனபின்னும் வில்லன் காலைப்பிடித்து நான் கெஞ்சுவதா? என்று ஆவேசப்படாமல் வில்லனாக நடிக்கும் வம்சியின் காலில் விழுந்து கதறும்போதும், யாழினி என்னை முழுசா நம்புறா அவள நான் ஏமாத்திடக்கூடாது என்று சொல்லியழும்போதும் நம்மைக் கலங்கவைத்துவிடுகிறார் சிவகார்த்திகேயன். இறுதிக்காட்சிகளில் கோபத்தில் துடித்து அழுது ஆவேசப்பட்டு சண்டைபோடும் காட்சிகளிலும் தப்புச் செய்யாமல் தேர்வு பெறுகிறார்.அவரைப் பொறுத்தவரை எம்மாதிரியான வேடங்களையும் ஏற்று நல்லபடியாக நடித்துவிடுவார் என்கிற பெயரைப் பெற்றுவிட்டார். யாழினி என்கிற அழகுதமிழ்ப்பெயர் வைத்துக்கொண்டு நடித்திருக்கும் ஹன்சிகா இந்தப்படத்துக்காகக் கூடுதல் அழகாகிவிட்டாரா? அவர் அழகாக இருக்க ஒளிப்பதிவாளர் சுகுமார் காரணமா? என்று பட்டிமன்றம் வைக்கலாம்.

பாடல்காட்சிகளில் ரசிகர்களைச் சுண்டியிழுக்கிறார். டார்லிங்டம்பக்கு பாடலுக்கு அவர் போடும் ஆட்டம் பெரியவரவேற்பைப் பெறும். அழகு, ஆட்டம் ஆகியனவற்றைத்தாண்டி சிவகார்த்திகேயன் உயிரோடு தனக்கு வேண்டும் என்று துடித்து அழுகிற காட்சிகளிலும் தேர்ச்சி பெற்றுவிட்டார். ஒளிப்பதிவாளர் சுகுமாரும் இசையமைப்பாளர் அனிருத்தும் படத்துக்குப் பெரும்பலங்களாக இருக்கிறார்கள். நாயகனின் அறிமுகப்பாடல், மெல்லிசைப்பாடல், குத்துப்பாடல் என்று வகைக்கொன்றாகப் பாடல்களைப் போட்டு எல்லாவகையையும் ரசிக்க வைத்திருக்கிறார் அனிருத்.

’ஓப்பன் த டாஸ்மாக்’ பாடலில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக கொஞ்நேரம் ஆடியும் இருக்கிறார் அனிருத். அந்தப்பாடலின் நடுவில் ஒரு காட்சியில் இயக்குநர் முருகதாஸ் வந்து சூப்பருப்பு என்கிறார். என்னங்க நடக்குது? குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்திருக்கும் ஷாஜி, என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறுகிறார். தனக்கு என்ன வேடம் என்பதைக்கூட அவர் உள்வாங்கிக்கொள்ளவில்லை போலும். வில்லனாக நடித்திருக்கும் வம்சியும் அவர் மனைவியாக நடித்திருப்பவரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள்.

படத்தில் பெரும்பங்கு வகிப்பவை, சிவகார்த்திகேயனைக் குத்துச்சண்டை வீரராக்க சதிஷ் குழுவினர் பாடுபடுவதும், குத்துச்சண்டை வீரரான பின்பு இறுதிப்போட்டிவரை அவர் முன்னேறுகிற காட்சிகளும்தாம். அந்தக்காட்சிகளைச் சரியாக அமைத்திருந்தால், இது பலமான திரைக்கதையாக இருந்திருக்கும். அவ்விடங்களில் நிறையத் தொய்வு.

முதல்படத்திலேயே புகழ்பெற்ற தொழில்நுட்பக்கலைஞர்கள், பெயர்பெற்ற நாயகன், நாயகி, பெரிய தயாரிப்பு நிறுவனம் ஆகிய எல்லாமே சிறப்பாக அமையப்பெறுவது எல்லோருக்கும் அமையாது. இவ்வளவு அமைந்தும் தன்னுடைய வேலையைச் சிறப்பாகச் செய்யாமல் விட்டிருக்கிறார் இயக்குநர். படம் பெரிய வெற்றி பெற்றாலும் அதற்கான பெருமை இயக்குநருக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே.

மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு கதை எழுதப்பட்டிருந்தாலும், தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிற திருக்குறளையே தன்னுடைய செயல்பாட்டுக்கு ஆதாரமாக நாயகன் காட்டுவது வரவேற்புக்குரியது.

-இணையத்திலிருந்து...நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: திரைவிமர்சனம்-மான்கராத்தே

Post by சிவா on Sat Apr 05, 2014 5:45 pm

விமர்சனத்திற்கு நன்றி, இப்பொழுதுதான் மான் கராத்தே தரவிறக்கம் ஆகிக் கொண்டுள்ளது. முடிந்ததும் பார்க்க வேண்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திரைவிமர்சனம்-மான்கராத்தே

Post by விஸ்வாஜீ on Sat Apr 05, 2014 8:15 pm

@சிவா wrote:[link="/t109155-topic#1056443"]விமர்சனத்திற்கு நன்றி, இப்பொழுதுதான் மான் கராத்தே தரவிறக்கம் ஆகிக் கொண்டுள்ளது. முடிந்ததும் பார்க்க வேண்டும்!

எங்களுக்கு
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1338
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: திரைவிமர்சனம்-மான்கராத்தே

Post by சிவா on Sun Apr 06, 2014 2:46 am

மான் கராத்தே - ரசிக்கும் வகையில் ஏதுமில்லை...! அதில் உள்ளது ஏர் ஆசியா விமான சேவையின் விளம்பரம் மட்டுமே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திரைவிமர்சனம்-மான்கராத்தே

Post by ayyasamy ram on Sun Apr 06, 2014 12:06 pm

குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் காலில் ஷூ அணிந்து, கையில் ஒரு கிளவுஸை மட்டும் எடுத்துக் கொண்டு உடனேயே போட்டிக்காக கியூவில் போய் நிற்க முடியாது.. இதற்கெல்லாம் முறையான சங்கங்கள் உண்டு. அதில் சேர்ந்து குறிப்பிட்ட காலம் பயிற்சி பெற்று.. பயிற்சியாளரின் ஒப்புதல் பெற்ற பின்பு.. திறமைச் சான்றுக்கான முதற்கட்ட போட்டியில் வெற்றி பெற்ற பின்புதான் குத்துச்சண்டை போட்டியாளர் என்ற பெயரே,  அடையாள அட்டையுடன் கிடைக்கும்.


இந்தப் பெயர் கிடைத்த பின்பும் நகர அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் என்று போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொண்டிருந்தால் மட்டுமே தேசிய அளவுக்கே செல்ல முடியும்.. குரும்பப்பட்டியில் நடக்கும் பொங்கல் விழாவில் ஓட்டப் பந்தயம் நடத்தப்படுவது போல, எங்கேயும் குத்துச்சண்டை போட்டியை நடத்திவிட முடியாது.. 


இதற்கான ஆட்களும் குறைவு.. சங்க அமைப்புகளும் குறைவு.. நடுவர்களும் குறைவு.. விதிமுறைகளை மிகச் சரியாகப் பயன்படுத்தவில்லையெனில் உயிருக்கே அபாயம் என்பதால் இந்த விளையாட்டை வெளியிடங்களில் நடத்துவதற்கு ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ்களை வைத்திருக்கிறது அகில இந்திய குத்துச்சண்டை சம்மேளனம்..!


எல்லாவற்றையும் பரணில் தூக்கிப் போட்டுவிட்டு லாஜிக்கை காலில் மிதித்தபடியே சிவகார்த்திகேயன் என்னும் ஹீரோவுக்காக ஒரே நாளில் பயிற்சி எடுத்து.. வீர வசனங்களை பேசியவுடன்.. கேட்டவுடன்.. ரத்த நாளங்கள் துடிக்க மேடையேறி தேசிய சேம்பியனை அடித்து வீழ்த்துவது என்பதெல்லாம் காமெடியாக செய்திருந்தால் ஓகே.. ஆனால் இங்கே சீரியஸாக எடுத்துத் தொலைத்திருக்கிறார்கள். அதனால்தான் இப்படியெல்லாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது..!
-
--உண்மைத்தமிழன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33638
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: திரைவிமர்சனம்-மான்கராத்தே

Post by சிவா on Sun Apr 06, 2014 2:19 pm

உண்மைத் தமிழன் கூறியுள்ளது முற்றிலும் உண்மை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திரைவிமர்சனம்-மான்கராத்தே

Post by தமிழ்நேசன்1981 on Thu Apr 10, 2014 1:47 pm

மான் கராத்தே - சினிமா விமர்சனம்

பாக்ஸிங் ரிங்கில் 'பட்டர்’ பீட்டர் 'கில்லர்’ பீட்டரை 'நாக்-அவுட்’ செய்வாரா என்பதே... 'மான் கராத்தே’!

சாஃப்ட்வேர் நண்பர்கள் சதீஷ் அண்ட் கோ-வுக்கு, ஒரு சித்தர் மூலம் நான்கு மாதத்துக்குப் பிந்தைய செய்தித்தாள் கையில் கிடைக்கிறது. அவர்கள் பணிபுரியும் சாஃப்ட்வேர் நிறுவன திவால் முதல் ஆலங்கட்டி மழை வரை செய்தித்தாளில் பதிவாகி இருக்கும் சம்பவங்கள் அப்படி அப்படியே நடக்கின்றன. அதே செய்தித்தாள் மூலம் குத்துச்சண்டைப் போட்டியில் பீட்டர் என்பவர் இரண்டு கோடி ரூபாய் ஜெயிக்கிறார் என்று தெரிந்துகொன்டு அந்தப் பீட்டரைத் தேடினால்... அது சிவகார்த்திகேயன். பாக்ஸிங் என்றால் என்னவென்றே தெரியாத சிவகார்த்திகேயன் போட்டியில் கலந்துகொண்ட சமயம், இன்னொரு பீட்டரும் என்ட்ரி கொடுக்கிறார். அவர் ஒரே அடியில் எதிராளிகளை 'நாக்-அவுட்’ செய்யும் 'கில்லர்’. இப்போ 'பட்டர்’ பீட்டர் ஜெயிப்பாரா என்பதே கதை!

'பின்னால் நடப்பது முன்கூட்டியே தெரிந்தால்..?’ டைப் ஃபேன்டசி கதையோடு இறங்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் திருக்குமரன். கலகல காமெடி, கலர்ஃபுல் ஒளிப்பதிவு, இன்டர்வெல் ட்விஸ்ட்... என செம ஜோர் ஆரம்பம்தான். ஆனால், ரோலர் கோஸ்டர் சவாரி அடித்திருக்கவேண்டிய பின்பாதி, நொண்டியடித்ததால்... 'ஸ்மால் பஸ்’ ட்ரிப் ஆகிவிட்டது!

பில்டப் இன்ட்ரோக்களுக்குப் பிறகு வழக்கமான 'சினா கானா’வாகச் சிரிப்பு சிக்ஸர் விரட்டுகிறார் சிவகார்த்திகேயன். குறள் சொல்லும் போட்டி, டம்மி பிராக்டீஸ் அத்தியாயங்களில் காமெடி நடிப்பு, பன்ச் பாடி லாங்வேஜ்... என பழகிய பிட்ச்சில் செம ஸ்கோர். என்னா டான்ஸ்மா... பின்றீங்க பிரதர். ஆனால், திரைக்கதை திணறும் பின்பாதியில் கடுப்ஸ் ஏற்றுகிறது பீட்டர் கேரக்டரின் அழுகாச்சி பெர்ஃபாமன்ஸ்.

கொழுக் மொழுக் ஹன்சிகா, செம ஸ்லிம் பேபி ஆகிவிட்டார். அது ஓ.கே. ஆனால், க்ளைமாக்ஸில் நடிக்கத் திணறும் அழகியை, 'நடி... நடி’ என்று நடிக்க வைத்திருக்கிறார்கள். நமக்குத்தான்... என்னா அடி?!

அதிரடி ஆக்ரோஷமான 'கில்லர்’ பாக்ஸராக வம்சி கிருஷ்ணா செம ஃபிட். அதிரடி பாக்ஸருக்கு கருணையான மனைவி என அந்தக் குட்டி போர்ஷன் க்யூட். 'சூப்பர் காமெடி பாஸ். அப்படி ஓரமாப் போய்ச் சிரிச்சிட்டு வந்துடவா?’ என சிவகார்த்திகேயனைக் கலாய்க்கும் போதெல்லாம் ஜாலி ரைடு அடிக்கிறார் சதீஷ்.

'டார்லிங் டம்பக்கு...’, 'மாஞ்சா போட்டுதான்...’ பாடல்களில் ரகளை செய்கிறது அனிருத் இசை. மொத்த கேன்வாஸையும் அழகாகக் காட்டும் சுகுமாரின் ஒளிப்பதிவு, பாடல் காட்சிகளில் எக்ஸ்ட்ரா ரம்மியம்!

பின்பாதியிலும் சிவாவைச் சிரிப்பு ஷோ நடத்தவைப்பதா அல்லது சீரியஸ் க்ளவுஸ் மாட்டுவதா என்பதில் ரொம்பவே குழம்பிவிட்டார்கள் போல! 10 குறள் சொல்லிவிட்டால் ஹன்சிகா பார்சலா? ரெண்டு காமாசோமா பாக்ஸர்களிடம் தப்பித்தால் ஃபைனலுக்குத் தகுதிபெற்றுவிட முடியுமா? சதீஷ் குரூப் வம்படியாகச் சென்று வம்சி மாமனாரிடம் அப்டேட் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா? 18 வருட புரொஃபஷனலிஸத்தை 10 நிமிடக் கோபம் காலி செய்துவிடுமா?

படத்தில் செய்தித்தாள் கிடைப்பது மட்டும்தானே ஃபேன்டசி. பின்தொடரும் அத்தனை சம்பவங்களுமா நம்ப முடியாத 'ஃபேன்டசி’யாக அரங்கேறும்? அடப் போங்க பாஸு!

- விகடன் விமர்சனக் குழுநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: திரைவிமர்சனம்-மான்கராத்தே

Post by சிவா on Thu Apr 10, 2014 5:26 pm

இதுபோல் இன்னும் இரணடு படங்கள் நடித்தால் சிவகார்த்திகேயன் காணாமல் போய்விடுவார்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திரைவிமர்சனம்-மான்கராத்தே

Post by தமிழ்நேசன்1981 on Fri Apr 11, 2014 10:02 am

@சிவா wrote:[link="/t109155-topic#1057529"]இதுபோல் இன்னும் இரணடு படங்கள் நடித்தால் சிவகார்த்திகேயன் காணாமல் போய்விடுவார்!
ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: திரைவிமர்சனம்-மான்கராத்தே

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum