ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 ayyasamy ram

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 ayyasamy ram

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 ayyasamy ram

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

வரிசையாய் எறும்புகள்
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

மலைகளின் நகரம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 Dr.S.Soundarapandian

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 பழ.முத்துராமலிங்கம்

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஸ்ரீவில்லிபுத்தூர் !!

View previous topic View next topic Go down

ஸ்ரீவில்லிபுத்தூர் !!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Fri Apr 11, 2014 2:45 amதிரேதா யுகத்தில் சீதையாக அவதரித்த ஆத்மா – பூமியின் வியாபகம் !!

பூலோகத்தில் அதர்மம் பெருகியபோது அதை சீர் செய்து மீண்டும் தர்மத்தை நிலைநாட்ட நாராயணன் ஸ்ரீராமராக அவதரித்த போது தேவர்கள் வானரர்களாக தமிழகத்தின் சுருளிமலை தொடர்பான மேற்கு தொடர்ச்சி மலையில் அவதரித்தனர்

நாராயணன் பூலோகத்தை நேசித்து அதை சரி செய்ய வந்ததால் பூமியின் வியாபகம் சீதையாக அவதரித்தது அவளே பூமி !

தவங்கள் யோகங்கள் மூலமாக சித்திகளை அடைந்து அசுர ஆவிகளுடன் இணக்கம் வைத்து அவைகளின் உபதேசங்களையும் வழிநடத்துதலையும் பெற்றுக்கொண்டவர்கள் அரக்கர்கள் எனப்பட்டனர் இவர்களின் தலைமையிடமாக ராவனேஸ்வரனின் இலங்கை இருந்தது
இவர்கள் தாங்கள் பெற்ற வரங்களால் தங்களை ஈஸ்வரர்கலாக அறிவித்துக்கொண்டனர் பூலோகத்தில் பாவங்கள் அடாவடிகள் அதிகரித்தன பக்தியோகம் பின்னுக்கு தள்ளப்பட்டு சித்துக்களுக்காக யோகசாதனைகள் செய்வது அதிகரித்த போது அதை பரிகரித்து கடவுளை நோக்கிய பக்தியோகத்தை ஸ்தாபிக்கவும் ; நவீன நாத்திகவாதம் என்ற விசத்தை மறைத்துக்கொண்டு – கடவுள் நம்பிக்கை அற்ற ஆன்மீக மார்க்கமாக சித்தம் ; யோகம் ; தவம் ; காயகல்பம் ; உடற்பயிற்சி என்னும் பெயரில் மாயைகள் பரவுவதை வெல்லும் பக்தியோக மார்க்கத்தால் இறைபேரரசை நிறுவவும் பூமிக்கு ஸ்ரீராமர் வந்தார் ! ஏறக்குறைய 3000 ஆண்டுகள் ராமராஜ்ஜியம் தர்மத்தோடு நடந்தது

பாவிகளின் பலனை அவர்களின் சந்ததியினரே அறுப்பார்கள் அல்லது தீர்த்து வைப்பார்கள் என்பது கடவுளின் கணக்கு ! ராவனேச்வரனின் கணக்கை தீர்க்க அவனுக்கு மகளாகவே சீதை அவதரித்தார் ராவண சம்காரத்திற்கு காரணமாக இருந்தார் அத்தோடு பூலோகவாசிகளின் பாவங்களுக்கு பிராயசித்தமாக அப்பிறவியில் இன்னல்களை மட்டுமே அனுபவித்து பூமியின் மடியிலேயே தஞ்சமடைந்தார் – பூமி பிளவுண்டு அவரை ஏற்றுக்கொண்டது அந்தளவு சோக வாழ்வே அவர் அனுபவித்தது

அவதாரங்களே ஆனாலும் பாவபுண்ணிய கணக்கை அனுபவித்துதான் தீர வேண்டியுள்ளது அல்லது சகலருக்கும் பொறுப்பேற்று அனுபவிக்க வேண்டியுள்ளது

அந்த சீதை என்ற ஆத்மா முழுமையடையாமலேயே அந்தப்பிறவி முடிந்ததால் ; சீதை முழுமையடைய - தன் மணாளனை பாடி துதிக்க – சூடிக்கொடுத்து சுடர்க்கொடியாக வலையவந்து மகிழ ஒரு பிறவி எடுக்க வேண்டியிருந்தது
அதற்கு அவர் தேர்ந்து கொண்ட இனம் தமிழ் ! தேர்ந்து கொண்ட மொழி தமிழ் ! ஆதி மனித சமுகம் தமிழ் என்பதால் அந்த தமிழ் சூத்திர பெண்ணாகவே பிறந்து பிராமண சுழலில் வளர கடவுள் ஏற்பாடு செய்தார் !

இந்தியாவின் 90 சதவீத சைவத்தலங்களும் ; வைணவத்தலங்களும் தமிழகத்திலேயே ஏன் உள்ளன ?

ஏனென்றால் வேதங்களும் ஆதியிலே தமிழில் தான் இருந்தன ! தென்னாடுடைய சிவனே ஆதி குரு ! கிரதங்கள் மறுவி வட இந்திய மொழிகள் உருவானபோது இந்தியாவின் சகல மொழிகளையும் சமப்படுத்தி சமஸ்கிரதம் என்ற பாஷையை திராவிட ஞானிகளே உருவாக்கினர்

சமஸ்கிரதம் இன்றைய பிராமண ஜாதியினரின் மொழி அல்ல ! அவர்களின் வீடுகளில் யாரும் பேசுவதில்லை ! ஆனால் அவர்கள் அதை மனப்பாடம் செய்து ஒப்பிக்க பழக்கப்படுத்தப்பட்டனர் ! அதை உருவாக்கியவர்கள் அதை மறந்த போது மனப்பாடம் செய்தவர்கள் தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ள அம்மொழியை பயன்படுத்திக்கொண்டனர் அவர்களின் முன்னோர்கள் செய்த பெரும் பாவம் தமிழிலிருந்த வேதங்களை – ஓலைசுவடிகளை அழித்தது ! அவர்களின் கணக்கை பெரியாரிடம் அடைந்து தீர்ந்தார்கள் ! இனி அவர்கள் மன்னிக்கப்படுவார்களாக !!

தமிழையும் சமஸ்கிரதத்தையும் இணைத்து பயன்படுத்தாமல் ஆன்மீக நுணுக்கங்களை – மெய் ஞானத்தை உணரவே முடியாது ! கலியுக முடிவுக்கு முன்பு உலகில் வர உள்ள சமரச வேதம் தமிழிலிருந்தே புறப்பட்டு உலகை மூழ்கடிக்கப்போகிறது !

அதுபோல சீதையும் முழுமையடைய – ஒளி சரீரம் பெற்று மரணமில்லா பெரு வாழ்வு பெற தமிழச்சியாகவே பிறந்தார் ! அக்குழந்தையை பெரியாழ்வார் கண்ண்டெடுக்கும் படி ஒப்படைக்கப்பட்டது !

கோதை என பெயர் வைக்கப்பட்டாலும் ; இன்றைக்கு ஆண்டாளாக ஓவியப்படுத்தப்படுகிற லட்சணமாக அவர்கள் இல்லை ! அது ஓவியம் ! சராசரி தமிழ்ப்பெண்ணாக – கருப்பாக உயரமாக அவர்கள் இருந்திருக்கவேண்டும் கோவிலில் நான் தியானித்தபோது அப்படிப்பட்ட ஒரு நபராகவே உணர்ந்தேன் எழுந்து சென்று கர்ப்பகிரகத்தின் முன்பு நின்று கொண்டு பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன் அப்போது ஸ்ரீவி - யின் வணிகப்பெருமகன் ஒருவர் மாலைகள் கொண்டு வந்து அலங்காரம் செய்ய சொன்னார் மாலைகள் சூட்டி ஆண்டாளுக்கு கிளிகள் ஒன்றல்ல பல அங்கும் இங்கும் குத்தி அழகு பார்த்தார்கள் !

எளிமையும் லட்சணமும் உள்ள அழகை யாரும் அதிக அலங்காரம் செய்வதில்லை ! சுமாரனவர்களுக்கே அதிக அலங்காரம் !! கிளியை சேர்த்து வைப்பதும் அதற்கே ! பூமியின் அம்சம் சூத்திர தமிழ்ப்பெண்ணாகவே வெளிப்படுத்திக்கொண்டு வளையவந்தது ! ஆழிக்கினறில் தன்னை அழகு பார்த்தது ! சூடி கொடுத்தது ! அது ஏற்றுக்கொள்ளப்பட்ட மகிழ்ச்சியில் அந்தக்கோவிலில் துள்ளிகுதித்தது சுற்றி சுற்றி வந்தது !

முப்பதே முப்பது பாடல்கள் மட்டுமே பாடினார்கள் ! அதில் அவர்கள் தமிழை ஆண்டார்கள ! தமிழ் சொல்லாட்சியும் மகிமையும்தான் என்ன ?

இன்றைக்கு பிரபலமான கவிஞர்கள் கூட ஆரம்ப நாட்களில் தத்து பித்தென காதல் கவிதைகளை கணவு கண்டு உளறி பயிற்சி செய்த பின்பே கொஞ்சம் தேறி வந்தார்கள் ஆனால் அப்படி எந்த பயிற்சியும் இல்லாமல் ; பட்டர்களின் குடும்ப சூழலில் மட்டுமே வளர்ந்த ஒரு அபலைப்பெண்ணால் எதுகை மோனை ; ஆழ்ந்த தமிழ்ப்புலமை ; நயமும் இனிமையும் கொஞ்சும் வார்த்தைகளில் பக்திப்பெருக்கை எப்படி வெளிக்கொணர முடிந்தது ! ஏனென்றால் இவைகள் அருளில் நிறைந்து வெளிப்பட்டவை ! மனித முயற்சியில் வந்தவை அல்ல ; அருட்பொழிவால் வெளிவந்த ஞானப்பொக்கிஷம் !

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக துயிலெழுப்பும் அவர் ; தலைவனின் மனைவியை போற்றி அவரை வெளியே அனுப்புக என கேட்கும் விதத்தை பாருங்கள் :

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

19அவரைப்பிரிய உனக்கு மனமே வருவதில்லை ; தூங்கச்செய்து பக்கத்திலேயே வைத்துக்கொள்கிறாயே நியாயமா ? ஏழை ஆய்ச்சிறுமிகள் வந்து காத்துக்கிடக்கிறோமே ? ஒருவகையில் சக்களத்தியிடம் இவ்வளவு பக்குவமாக பேச முடியுமா ?

அப்புறம் இருவரையுமே சேர்த்தே எழுப்புகிறார் :
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

20


அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

22

அதிகாலையில் காலடியில் காத்துக்கிடக்கிறோம் ; எங்களைப்பாருங்களேன் எங்கள் சாபம் தீர்ந்து போகுமல்லவா ?

புகழும் விதம் பாருங்கள் “

அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

24
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

29

மார்கழி விரத்தத்தில் மிக முக்கியமான நாள் வைகுண்ட ஏகாதசி ! விரத முடிவு நாள் ! குடும்ப விளக்குகலாகிய பெண்கள் 26 நாளளவும் விரதம் இருந்து அதிகாலை நீராடி கோவிலில் சென்று சேவித்து விரதத்தை நிறைவு செய்யும் மரபு ஆண்டாள் மூலமாக தோற்றுவிக்கப்பட்டது
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

27

அப்போது குடும்பத்தாராலும் உடன்பிறந்தவர்களாலும் சீர் வழங்கப்பட்டு கைவரவம் செய்யப்பட்டார்கள் !

என் அம்மா நித்திரையடையும் வரை என் மனைவி ஏங்க அத்தைக்கு கூடாரவள்ளி சேலை எடுக்கணுங்க என்பார்கள் ஆகா என நானும் ஏற்றுக்கொள்வேன் ராமநவமி பாட்டி என நக்கலடித்தாலும் ஆளுக்கு முதலில் சேலை கொடுத்து ஆசியை பெற்றுக்கொள்வார்கள் !!
வைகுண்ட ஏகாதசி அன்று சீர் பெறும் பட்டியலாக அப்பாடல் இருந்தாலும் – உலக மக்களால் கடைபிடிக்கப்பட்டாலும் அதன் ஞானம் வேறு !!

கூடாரவள்ளி சேலை அல்ல ; கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் !!


கலியுக முடிவில் கல்கி வந்து அக்கிரமக்காரர்கள் அனைவரையும் அழித்து சத்திய யுகத்தை நிறுவுவார் ! நியாயத்தீர்ப்பு நியாயத்தீர்ப்பு என நாம் பயமுறுத்திக்கொண்டிருக்கிறோம் ! அது உலகத்திற்காக !

கடவுளின் உள்ளார்ந்த அன்பை அனுபவித்தவர்கள் அறிவார்கள் அவர் யாரையும் அழிக்கவே போவதில்லை என்று !

இறைத்தூதர் இயேசுவும் இதைக்குறிப்பிட்டுள்ளார் :
மத்தேயு 18:14 ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் (கடவுளின்) சித்தமல்ல.

அவர் ஏற்ற காலத்தில் அசுரர்களை இணக்கப்படுத்தி அடக்கி நல்வழிப்படுத்துவார் ஏனெனில் தேவர்களும் அசுரர்களும் நாராயணனிளிருந்து தோன்றியவர்களே !!

அசுரர்களும் அவர்களின் ஆதிக்கத்தில் உள்ள தீயவர்களும் இடறல்கள் கொடுப்பதாலேயே நல்லவர்கள் மேலும் தூய்மை பொறுமை அடைகிறார்கள் நல்லவர்கள் பக்தர்களுக்குள் இருக்கும் கூடா இயல்புகள் வெளியரங்கமாக்கப்பட்டு அவை கடரப்படுவதால் ஞானமாக பரிணமிக்கிறது

ஆன்மீக வாழ்வின் ஆரம்ப நாட்களில் இடறல்கள் – அசுர ஆதிக்கங்கள் அதிகமாக உலட்டினாலும் காலப்போக்கில் அவை வெல்லப்பட்டு சமாதானம் ஒவ்வொரு பக்தனுக்கும் உண்டாகும் அந்த நிலை பக்தியினாலும் தாழ்மையினாலும் ஞானத்தினாலும் மட்டுமே சாத்தியமாகும்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் அதை அருளுவார் !!

உலகியல் மக்கள் அதை ஒரு கதையாக ஆக்கிக்கொண்டனர்

அசுரர்களை யாராலும் வெல்ல முடியவில்லை ! வைகுண்ட ஏகாதசி அன்று நாரயணனிளிருந்து ஒரு மோகினி தோன்றினாள் அதைப்பார்த்து அசுரர்கள் மயங்கி நின்றனர் அப்போது நாராயணன் அவர்களை அழித்து விட்டார்
அவளே துர்கா ! துக்க நிவாரணி காமாட்சி !

நாராயணன் எத்தகைய அசுரர்களையும் இணக்கப்படுத்துவார் !
பக்தர்களின் வாழ்விலும் அருளியல்பு அதிகரிக்கும் போது கூடாரை இனக்கப்படுத்தும் தன்மை உண்டாகும் ! அந்த இயல்பை வைகுண்ட ஏகாதசி அன்று வேண்டி பெற்றுக்கொள்ளவேண்டும் !!ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum