ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 SK

2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 பழ.முத்துராமலிங்கம்

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 ayyasamy ram

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 ayyasamy ram

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 ayyasamy ram

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 ayyasamy ram

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 anikuttan

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 anikuttan

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 ayyasamy ram

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 ayyasamy ram

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ayyasamy ram

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 ayyasamy ram

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 ayyasamy ram

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 T.N.Balasubramanian

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 krishnaamma

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 krishnaamma

குருப் 2 தேர்வுக்கு IMPACT IAS ACADAMY 2018(general english & general Tamil)
 thiru907

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 ayyasamy ram

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 ayyasamy ram

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 ayyasamy ram

மதித்திடுவோம் மாதர் தம்மை
 SK

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - அடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா? மோடி மீது சந்திரபாபு புகார்
 M.Jagadeesan

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை!
 T.N.Balasubramanian

மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ., வுக்கு எதிராக 19ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
 M.Jagadeesan

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
 SK

காலம் உருக்குலைத்தாலும் எங்கள் காதல் மாறாது என்கிறதா இந்த மனித எலும்புக் கூடுகள்?
 SK

படமெடுத்த பாம்பை ஆத்திரத்தில் கடித்துத் துப்பிய விவசாயி!
 பழ.முத்துராமலிங்கம்

விமானத்தில் இருந்து மழையாக பொழிந்த தங்கம் - வைர குவியல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான முறையில் சிக்ஸர்... இது நியூசிலாந்தில் நடந்துள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

Video: ரசிகர்களை அதிர வைக்கும் Afridi-யின் Catch!
 SK

வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
 SK

வட தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
 SK

விஜய்யும் ரஜினியும் படைத்த சாதனைகள்; வேறெவரும் இடம்பெறவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் முதன்முறையாக தமிழ்
 பழ.முத்துராமலிங்கம்

தினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அதிமுக தரப்பு மனு
 SK

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்
 ரா.ரமேஷ்குமார்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
 ரா.ரமேஷ்குமார்

அரிசியில இருக்கற கல்லை நல்லா பொறுக்கினா என்ன?
 krishnaamma

ஒரு பக்கக் கதை - தலைவர்
 krishnaamma

நான் மலரோடு தனியாக...
 krishnaamma

தாத்தா கதாபாத்திரத்தில் பேரன்
 krishnaamma

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு
 SK

அமெரிக்காவில் நடைமேடை பாலம் இடிந்து விபத்து: பலர் சிக்கியுள்ளதாக தகவல்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மோடியும் முகமூடியும்! பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள்

View previous topic View next topic Go down

மோடியும் முகமூடியும்! பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள்

Post by சிவா on Sun Apr 13, 2014 6:33 am

'பாரத் மா கா ஷேர் ஆயா!’ (பாரத அன்னையின் சிங்கம் வருகிறது) என்ற முழக்கம், 'பாரத் மாதா கீ ஜே’ என்பதையே தூரமாக, ஓரமாக ஒதுக்கித் தள்ளிவிட்டது. மகாராணா பிரதாப், சிவாஜி, சாணக்யா, விவேகானந்தர்... என்ற உதாரணப் புருஷர்களையே உச்சரித்து, அதனுடைய கலிகால வார்ப்பாகத் தன்னையே காட்டிக்கொள்கிறது அந்தக் குரல். 'இன்று காங்கிரஸ் ஒரு பிரிவினைவாத சக்தி. வாக்குக்காக ஒவ்வொன்றையும் பிரித்து வைத்துள்ளது. நான் வளர்ச்சி என்ற தளத்தில் இந்தியாவை ஒன்றுபடுத்த விரும்புகிறேன். என் முழக்கம் இந்தியாவுக்கே முன்னுரிமை’ என்கிறது.


வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை வாங்கித் தந்ததைவிட புதிய பெருமை எதையும் சேர்த்துக்கொள்ளாத காங்கிரஸ் கட்சியைப் பார்த்து, 'காங்கிரஸிடம் இருந்து இந்தியாவை விடுதலை செய்வோம்’ என்கிறது அந்தக் குரல். இந்தியா, இந்தியா என்று பேசுவதையே காங்கிரஸிடம் இருந்து தட்டிப் பறித்து, 'இந்தியாவுக்கு வாக்களியுங்கள்’ என்று நரேந்திர மோடி படத்தைப் போட்டு விளம்பரம் செய்ததில் ஆரம்பித்தன வித்தைகள்!


குஷ்பு ஜாக்கெட் மாதிரி மோடி குர்தா பிரபலம் ஆகிவிட்டது. பி.சி.சர்க்கார் வைத்திருப்பது மாதிரி அவரிடம் மந்திரக்கோல் இல்லை. ஆனால், ஏக இந்தியாவையும் ஒரே நாளில் ஏற்றம் செய்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பை எகிறவைக்கத் துடிக்கிறார்கள். ராஜீவ் காந்தி வரும்போதும் அவரது கழுத்துப்பட்டி பட்டன் போட்ட கோட் 'நவீன இந்தியன்’ மாடலை நம் முன் நிறுத்தியது. மன்மோகன் பிரதமர் ஆகும்போதும், 'பொருளாதார மேதை ஒருவரின் கைகளால் இந்தியா சுபிட்சம் அடையும்’ என நம்பவைக்கப்பட்டது. இதோ வளர்ச்சியின் நாயகனாக, இப்போது நரேந்திர மோடி வாக்கு கேட்கிறார்.


அத்வானி 'தீவிரவாதி’யாக இருந்தபோது, மிதவாதியான வாஜ்பாயை நடத்தி அழைத்து வந்தார்கள். இப்போது அத்வானி மிதவாதியாக இருக்கும்போது, 'தீவிரவாதி’யான நரேந்திர மோடியை நாலு கால் பாய்ச்சலில் ஓடவிடுகிறார்கள். இந்த இடைப்பட்ட 15 ஆண்டு காலத்தில் மதத்தின் மார்க்கெட்டிங் வேல்யூ கூடியிருக்கிறது என்பதன் அடையாளம் இது. அதனை அறுவடை செய்யவே நரேந்திர தாமோதர்தாஸ் மோடி வருகிறார்.


நாளை அல்ல, இன்றைய பிரதமரே அவர்தான் என்று நம்பவைக்கப்பட்ட நரேந்திர மோடியின் பலவித பிம்பங்கள் இதோ:


1. காங்கிரஸ் வெறுப்பும் எதிர்ப்பும்!


காங்கிரஸ் கட்சி வாங்கி வைத்திருக்கும் அளவுக்கு அதிகமான வெறுப்பு, நரேந்திர மோடிக்கு நன்மை. ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், ஆதர்ஷ், நிலக்கரி... என, பணம் விளையாடிய இடங்களில் எல்லாம் கைகள் விளையாடியதால்தான் காங்கிரஸ் மீதான கசப்பு அதிகமானது. விலைவாசி, சீரான விகிதத்தில் இல்லாமல் எகிறியது. பெட்ரோல், டீசல் விலையை நினைத்து நினைத்துக் கூட்டினார்கள். புதிய பொருளாதாரக் கொள்கையால் உய்விக்க வந்திருப்பதாகச் சொன்ன மூன்று பொருளாதார மேதைகளால் (மன்மோகன், ப.சி., மான்டேக்சிங் அலுவாலியா) ரூபாயின் மதிப்பு வீழ்ந்ததுதான் மிச்சம்.


புதிய வேலைவாய்ப்புகள் இல்லை. இருந்த வேலைவாய்ப்பும் பறிபோனது. அந்நிய அச்சுறுத்தல் மிக மிக மோசம். காஷ்மீருக்குள் காலாற நடந்து வந்து தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். சீனா, நமது எல்லைகளையே தனது நாடு என்கிறது. தமிழக மீனவர்களைக் கொல்வதற்காகவே சிங்கள கடற்படைக்குச் சம்பளம் தரப்படுகிறது. இது எதையுமே கேட்காத காங்கிரஸ் மீதான எதிர்ப்பு, எதிரில் இருக்கும் இன்னொருவர் மீதான பாசமாகத்தானே மாறும்?


மோடிக்கு விழப்போகும் ஓட்டுக்களில் பாதி, காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுக்கள். காங்கிரஸை ஒழிக்க வேண்டும் என்பதற்காக விழப்போகின்றவை!


2. 'மிலிட்டரி ரூல் வேணும் சார்!’


'அரட்டை அரங்கம்’ ஆரம்பித்து 'நீயா..? நானா?’ வரை உற்றுக் கவனித்தால் தெரியும். இந்த நாட்டைப் பற்றி கோபம் கொப்பளிக்கப் பேசும் இளைஞர்கள் கடைசியில், 'நம்ம நாட்டுக்கு எல்லாம் ஜனநாயகம் சரியா வராது... மிலிட்டரி ரூல் வேணும் சார். நம்ம நாட்டை ஒரு சர்வாதிகாரி ஆளணும் சார்!’ என்பார்கள். அதற்குச் சுற்றிலும் உள்ள இளைஞர்கள் கைதட்டுவார்கள். இன்று இருக்கக்கூடிய பெரும்பாலான மாணவர்களுக்குத் தெரிந்த பெரிய அரசியல் இதுதான். எல்லா சர்வாதிகாரிகளும் உயிர் விளையாட்டுப் பிரியர்கள் என்ற வரலாறு தெரியாமல் சொல்லப்படுபவை இவை.


'பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது என்றால், இங்கு ஆட்சி நடத்துபவர்களிடம் வீரம் இல்லை; சிங்களக் கடற்படை கொல்கிறது என்றால், நம் மீது பயம் இல்லை’ என்றெல்லாம் மோடி பேசுவது இன்றைய மாணவர்களை, புதிய வாக்காளர்களை ஈர்க்கிறது. சுமார் 1,200 பேர் படுகொலை செய்யப்பட்ட 2002-ம் ஆண்டு குஜராத் நிகழ்வையேகூட, 'மதக் கலவரங்களை அடக்க எடுக்கப்பட்ட யுத்த நடவடிக்கை’ என்று இந்த இளைஞர்கள் நம்பவைக்கப்பட்டார்கள். 'சண்டை போடு, வெற்றிகொள்’ என்ற சினிமா மனோபாவத்தின் பிம்பமாக நரேந்திர மோடி இன்றைய இளைய தலைமுறை முன் நிறுத்தப்படுகிறார். அதனால்தான் அவர் பாட்னாவில் பேசுவதை 'லைவ்’ ஆக நெட்டில் மதுரையில் உட்கார்ந்து கல்லூரி மாணவர்கள் கவனிக்கிறார்கள்!


3. குஜராத் கனவு!


எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதான். 2002-ல் ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, குஜராத்தை இந்தியாவின் சொர்க்கபுரியாக மாற்றிவிட்டார் என்ற நினைப்பு, நாடு முழுவதும் விதைக்கப்பட்டது. குஜராத்திகள் பிறப்பால் தொழில் சமூகத்தினர். பிரிட்டிஷ் ஆட்சி கிழக்கு இந்தியக் கம்பெனி மூலமாக வர்த்தகம் செய்த காலத்திலேயே தொழிற்சாலைகள் தொடங்கியது இந்தப் பகுதியில்தான். ''மோடி, நன்கு சுழலும் தங்கச் சக்கரத்தைப் பெற்றார். அதை நிறுத்தாமல் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருப்பதுதான் மோடியின் சாதனை'' என்றார் சமூகவியலாளர் தீ பாங்கர் குப்தா. இதனை அமர்த்தியா சென் ஏற்றுக்கொள்ளவில்லை. ''குஜராத்தில் புதிய தொழிற்சாலைகள் வந்திருக்கின்றன.

நிறைய சாலைகள் அமைத்திருக்கிறார்கள். கட்டுமானப் பணிகள் வேகமாக நடக்கின்றன. ஆனால், ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை இதை வைத்து மட்டுமே அளவிட முடியாது. 1,000 குழந்தைகள் பிறந்தால் மருத்துவ வசதி இல்லாமல் அதில் எத்தனை குழந்தைகள் குஜராத்தில் இறந்துபோகின்றன என்பதைப் பாருங்கள். அது கேரளாவைவிட மூன்று மடங்கு அதிகம். அதேபோல் கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் கேரளா, தமிழ்நாடு, இமாசலப் பிரதேசத்தை விடவும் குஜராத் பின்தங்கித்தான் இருக்கிறது'' என்கிறார் சென். மோசம், மிக மோசம் என்பதையே ஒவ்வொரு மாநிலமும் தங்கள் ஸ்டேட்டஸாக வைத்திருந்ததால் ஏற்பட்ட சலிப்பு, 'குஜராத் முன்னேறிவிட்டதோ... அதே ஃபார்முலா இந்தியாவுக்கும் பொருந்துமோ!’ என்ற நப்பாசை நம்பிக்கையை வளர்த்துவிட்டது!


4. தொழிலதிபர்களின் அதிபர்!


இந்தியத் தொழில் துறை வர்க்கம், தனக்குச் சாதகமான பிரதிநிதியாக மோடியைக் கணிக்கிறது. 'குஜராத்தில் தொழில் முதலீடு செய்யுங்கள்’ என்று மோடி அழைப்பதைப் போல வேறு எந்த மாநில முதல்வரும் அழைக்கவில்லை என்பது மட்டுமல்ல; அடிமாட்டு விலைக்கு நிலங்களையும், 0% வட்டியுடன் நிதி உதவியும் வேறு எந்த மாநிலமும் தர முன்வரவில்லை என்பதும் காரணம். சலுகைக்கு மேல் சலுகைகள் வழங்குவதன் மூலமாக பல்வேறு தொழிற்சாலைகளை மாநிலத்துக்குள் கொண்டுவரும் தந்திரத்தை மோடி கடைப்பிடிக்கிறார். இது தொழில் அதிபர்களுக்குச் சாதகமான அம்சம். ஒரு காலத்தில் பெரு முதலாளிகள் தரப்பு, அனைத்து இந்திய தேசியத்தைக் கட்டமைத்தது போலவே இப்போதும் இணைந்து செயல்பட்டு, மோடிக்கு ஆதரவு தருகிறது!


5. மோடித்துவா!


'நான் ஓர் இந்து தேசியவாதி. இன்னும் எளிதில் புரியும்வகையில் சொல்ல வேண்டுமானால், நான் இந்து என்பதால் இந்து தேசியவாதி’ என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டவர் நரேந்திர மோடி. இந்தியா என்பது பன்முகத்தன்மைகொண்டது. இந்தியாவின் பெருமை என்பதே வேற்றுமையில் ஒற்றுமைதான். ஆனால், 'இங்கு இருப்பது ஒரே ஒரு தேசியம்தான். அது இந்து தேசியம், அதுதான் இந்திய தேசியம்’ என்று சொல்லக்கூடிய தத்துவத்தின் பிரதிநிதியாக நரேந்திரமோடி தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதைப் பெருமையாக நினைக்கிறார். தனிப்பட்ட மோடி எப்படிப்பட்டவராகவும் இருக்கலாம்.

ஆனால், பன்முகத்தன்மைகொண்ட இந்தியாவின் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறவர், தன்னைப் பச்சையாக 'இந்து தேசியவாதி’ என்று அழைத்துக்கொள்வது சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலானது. சட்டம்-ஒழுங்கு கெடுமானால் நிம்மதி இழக்கக்கூடியவர்கள் பெரும்பான்மையினரும்தான். காங்கிரஸ் கட்சியை இந்திய நாட்டுப்பற்று காப்பாற்றுவது போல, தங்களை இந்து மதப்பற்று காப்பாற்றும் என்று மோடி நினைக்கலாம். ஆனால், மக்கள் நலன் சாராத இந்த மாயமாத்திரைகள், விரைவிலேயே அவலமாகக் கிழிந்து தொங்கும். அயோத்தி அலையில் 1999-ல் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க-வை 2004-ல் வீட்டுக்கு அனுப்பியவர்கள் 'இந்துக்கள்’தானே தவிர... சிறுபான்மையினர் அல்ல. இந்து பிம்பம் ஆட்சிக்கு வரப் பயன்படலாம். ஆட்சியை எப்போதும் காப்பாற்றாது என்பதற்கு உதாரணம்... வாஜ்பாய்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மோடியும் முகமூடியும்! பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள்

Post by சிவா on Sun Apr 13, 2014 6:34 am

6. தான், தான் மட்டுமே!

அரசியல் என்பதே, ஒருவரை வீழ்த்திவிட்டு இன்னொருவர் அதிகாரத்தை அடைவதுதான். அதைப் பச்சையாக, பட்டவர்த்தனமாக நடத்துபவராக நரேந்திர மோடி இருக்கிறார்.

சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு அத்வானி ரத யாத்திரை புறப்பட்டபோது, அதனை ஏற்பாடு செய்கிற பொறுப்பில் இருந்தவர் நரேந்திர மோடி. 23 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவம்தான் மோடியை குஜராத்துக்கு அறிமுகம் செய்தது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான 'ஏக்தா யாத்ரா’ என்ற ஒற்றுமை யாத்திரையை முரளி மனோகர் ஜோஷி நடத்தியபோது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மோடி முகம் அறிமுகம் ஆனது. இன்று மோடியால் வீழ்த்தப்பட்டுக்கிடப்பவர்கள் யார்? அதே அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும்தான். அத்வானியிடம் இருந்து 'பிரதமர் வேட்பாளர்’ என்ற மகுடத்தைப் பறித்து, ஜோஷியிடம் இருந்து அவருடைய தொகுதியைப் பறித்து மோடி ஆடியது தவறான ஆட்டங்கள். 'மோடி இல்லாவிட்டால் பா.ஜ.க. ஆட்சிக்கு வர முடியாது’ என்ற பிம்பத்தை உருவாக்கி, மற்ற தலைவர்கள் அனைவருக்குமே அவர்கள் பயப்படும் தொகுதிகளை ஒதுக்கி நரேந்திர மோடி செய்த வேலைகள், நரசிம்மராவ் காலத்தில்கூட காங்கிரஸில் நடக்காதவை.

மோடியை அரசியலுக்கு அழைத்து வந்தவர் சங்கர் சிங் வகேலா. இவர் தனது புல்லட்டில் எப்போதும் மோடியை உட்காரவைத்துக் கொண்டு குஜராத்தை வலம் வருவார். 1995-ம் ஆண்டு தேர்தலில் குஜராத் சட்டமன்றத்தை பா.ஜ.க. கைப்பற்றியபோது சங்கர் சிங் வகேலாதான் முதல்வராக இருந்திருக்க வேண்டும். ஆனால், அத்வானியிடம் இருந்த தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வகேலாவைத் தடுத்து கேஸுபாய் படேலை முதல்வர் ஆக்கினார் மோடி. கேஸுபாய் படேலை வாழ்த்தி... வகேலாவைக் கட்சியைவிட்டுத் துரத்தி... இத்தனையும் அத்வானி ஆசீர்வாதத்துடன் நடத்தினார் மோடி. 2002-ம் ஆண்டு குஜராத் படுகொலையால் தலைகுனிந்த பிரதமர் வாஜ்பாய், முதல்வர் மோடியைப் பதவி விலகச் சொன்னபோதும் தடுத்தவர் அத்வானி. ஆனால், அந்த அத்வானியின் பிரதமர் கனவைக் காவு வாங்கினார் மோடி!

பா.ஜ.க. ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் மோடி ஒரு பக்கமும், மற்ற அனைவரும் இன்னொரு பக்கமும் சக்கரத்தைச் சுழற்றுவார்கள். ஏனெனில், இரண்டாம் நபரோடு அரவணைக்கும் ஆளாக மோடி இல்லை!

7. சிறுபான்மையினர் சினம்!

இந்தியப் பிரிவினைக்குப் பின் நடந்த மிகப் பெரிய மதவெறிப் படுகொலை 2002-ல் குஜராத்தில்தான் நடந்தது. குஜராத் எப்போதும் அமைதிப் பூங்காவாக இருந்தது இல்லை. 1969-ல் 512 பேரையும், 1985-ல் 300 பேரையும், 1992-ல் 152 பேரையும் பலிவாங்கிய குஜராத், 2002-ல் சுமார் 1,200 பேரை (அரசுக் கணக்கின்படி!) புதைத்தது. கரசேவகர்கள் வந்த ரயில்பெட்டிக்குத் தீ வைக்கப்பட்டதால், எதிர்வினையாக இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று விளக்கம் சொன்னாலும், அரசும் போலீஸும் நினைத்திருந்தால், அந்தச் சாவுகளில் பாதியைத் தடுத்திருக்கலாம். 'எல்லாம் முடியட்டும்; இரண்டு நாட்கள் காத்திருப்போம்’ என்று கை கட்டி வேடிக்கை பார்த்தது மோடி அரசு. 'ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் நடந்தது என்பதால் எப்படிச் சமாளிப்பது என்று அவருக்குத் தெரியவில்லை’ என்று விளக்கம் சொல்கிறார்கள்.

'காரில் போய்க்கொண்டு இருக்கிறோம். ஒரு நாய்க்குட்டி மீது நம் கார் மோதி அது இறந்துவிடுகிறது. அப்போது நாம் வருத்தப்படுகிறோம் அல்லவா? அது போன்றதுதான் 2002-ம் ஆண்டு நிகழ்வும்’ என்று இப்போது சமாளிக்கத் தெரிந்தவருக்கு போலீஸைப் பயன்படுத்தத் தெரியாதா? 'ஒன்றின் எதிர்வினை இன்னொன்று’ என்று நியாயப்படுத்தினார் மோடி. இஸ்லாமியர் களையே தன்னுடைய பிராண்ட் அம்பாஸிடர்களாக மோடி நியமித்து பிரசாரம் செய்தாலும், அந்த மக்கள் மனதில் பயமும் பீதியும் படிந்திருப்பது மோடியின் உண்மையான சொரூபம் தெரியும் என்பதால்தான்!

மேலும், என்கவுன்டர் என்ற பெயரால் சிறுபான்மையினரைக் கொன்று தீர்த்த சம்பவங்கள் ரத்தம் உறையவைக்கின்றன. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 32 போலீஸ் உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும் அதிலிருந்து ஜாமீனில் வந்தவர்கள், ஒரு மாநில முதலமைச்சரையே குற்றம் சாட்டுவதும் இதுவரை இந்தியா பார்க்காதது!

8. மர்மங்களின் மனிதர்!

'நான் ஒரு திறந்த புத்தகம்’ என்று எல்லா அரசியல்வாதிகளும் சொல்லிக்கொள்வார்கள். ஆனால், யாரும் திறக்க முடியாத புத்தகமாக மோடி இருக்கிறார். திருமணம் செய்துகொள்ளாதவராக அவரைக் காட்டுகிறார்கள். 13 வயதில் ஜசோதாபென் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர் இவர் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு இரண்டு ஆண்டுகாலம் இமயமலைக்குப் போய்விட்டு, குஜராத் திரும்பினாலும், 32 ஆண்டுகள் தனது சொந்த வீட்டுக்கே வராமல்போனதால் அந்தப் பந்தம் அப்படியே அறுந்தது என்றும் சொல்லப்படுகிறது.

அந்தப் பெண் ஒரு பள்ளியின் ஆசிரியையாக வேலை பார்த்துள்ளார். மோடி, முதல்வர் ஆன பிறகு அவர் யார் பார்வையிலும் படாமல் மறைத்துவைக்கப்பட்டார். அவரை 2002-ம் ஆண்டுக்குப் பிறகு பேட்டி எடுக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். இன்று வரை அவரது இருப்பு, மறைமுகமாக இருக்கிறது. சமீபத்தில்தான் மாதுரி சோனியின் கதை பிரபலமானது. அந்தப் பெண்ணை 62 நாட்கள் குஜராத் உளவுத் துறை வேவு பார்த்தது, ஆந்திர சினிமாக்களை மிஞ்சும் ரியல் மசாலா.

மோடி அரசால் வஞ்சிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஐ.பி.எஸ். அதிகாரிகளான குல்தீப் ஷர்மா, ஸ்ரீகுமார், வன்சரா, சஞ்சீவ்பட், ராகுல் ஷர்மா, ரஜ்னீஷ் ராய் போன்றவர்கள் சொல்லும் கதைகள் பதற்றமானவை.

மோடிக்கு அடுத்த இடத்தில் இருந்த, 'அவருக்கு அடுத்து இவர்தான்’ என்று சொல்லப்பட்ட, அத்வானி மற்றும் அருண் ஜெட்லி ஆசீர்வாதம் பெற்ற குஜராத் வருவாய் துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா, திடீரென ஒருநாள் செத்துக்கிடந்த மர்மம் எத்தனையோ ஆண்டுகள் ஆகியும் இன்னும் விலகவில்லை!

9. கொள்கை என்ன?

'காங்கிரஸிடம் இருந்து விடுதலை’ என்று மோடி முழங்குகிறார். ஆனால், காங்கிரஸில் இருந்து பா.ஜ.க. எந்த வகையில் மாறுபட்டது என்பதை இன்று வரை விளக்கவே இல்லை. மாற்றம், வளர்ச்சி என்று மையமாகப் பேசுகிறாரே தவிர, தன்னுடைய கொள்கை, ஆட்சி நடத்தும் வழிமுறை பற்றி பேசவே இல்லை. புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தி 24 ஆண்டுகள் கடந்துவிட்டன. பொருளாதாரமும் நிதியும் கோமாவில்தான் கிடக்கின்றன. இதே பொருளாதாரக் கொள்கையைத்தான் (1998-2004) பா.ஜ.க. ஆட்சியும் பின்பற்றியது.

ஒரு காலத்தில் சுதேசி, சுதேசி என்று அதிகம் பேசியது பா.ஜ.க-தான். இன்று அதை மறந்தும் சொல்வது இல்லை. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அமல்படுத்தத் துடித்தது காங்கிரஸ் என்றால், 26 சதவிகிதம் முதலீடு வரலாம் என்றது பா.ஜ.க. அரசு. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக்கு வசதியான வழிமுறைகளை பா.ஜ.க. ஆட்சியே பாதைபோட்டுக் கொடுத்தது. காங்கிரஸும் ஆ.ராசாவும் அதற்குள் புகுந்து புறப்பட்டார்கள். லோக்பால், லோக் ஆயுக்தா பற்றி மோடி தெளிவுபடுத்தவில்லை. 'பலவீனமான பிரதமராக இருப்பதால் அண்டை நாடுகள் மிரட்டுகிறது’ என்கிறாரே தவிர, மோடியின் வெளியுறவுக் கொள்கை இன்னும் சொல்லப்படவில்லை. அண்டை நாடுகளுடன் சண்டைக்கு நிற்கப்போகிறோம் என்றால் ராணுவச் செலவு அதிகமாகி, இந்தியாவின் கடன் இரண்டு மடங்கு ஆகும் என்பதைத் தவிர பயன் இருக்காது.

மேடையில் ஏறுகிறார்; கையை வீசுகிறார்; கர்ஜிக்கிறார்; காற்றில் கலக்கிறது வார்த்தைகள். ஆனால், எதுவுமே மனதில் நிற்கவில்லை. வளர்ச்சி, மாற்றம் என்ற வாய்மொழி வார்த்தைகள் மட்டும் போதாதே!

10. யார் பிரதமர்?

இதில் என்ன சந்தேகம்? பா.ஜ.க-வுக்குப் பெரும்பான்மை கிடைத்தால், மோடிதான் பிரதமர். தனிப்பெரும்பான்மையை பா.ஜ.க. அடைய முடியாமல் போனால் மற்ற கட்சிகளின் ஆதரவைத் தேட வேண்டி வரும். அப்போது? 'நரேந்திர மோடியைத் தவிர வேறு யாரை முன்மொழிந்தாலும் நாங்கள் ஆதரிக்கத் தயார்’ என்று கட்சிகள் நிபந்தனை விதிக்கும். அப்போது பா.ஜ.க. என்ன முடிவு எடுக்கும்? ஆர்.எஸ்.எஸ். என்ன அறிவுரை சொல்லும்? இதை எதிர்பார்த்துத்தான் 87 வயதிலும் அத்வானி, காந்தி நகரில் நிற்கிறார். ராஜ்நாத் சிங், ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்றவர்கள் மோடியை சகித்துக்கொண்டு சும்மா இருக்கிறார்கள்.

இப்படி ஒரு சூழ்நிலை உருவாகுமானால் மோடி என்ன மாதிரியான முடிவு எடுப்பார் என்பதைக் கணிப்பது கஷ்டம். மோடி போன்ற ஒரு கேரக்டர் பிரதமர் ஆகிறார் என்பதை நினைத்தால், பலருக்கும் பயமாக இருக்கிறது. அவர் பிரதமர் ஆக முடியாமல்போனால் என்ன ஆகும் என்று யோசித்தால், அந்தப் பயம் இன்னும் அதிகமாகிறது!

விகடன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மோடியும் முகமூடியும்! பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள்

Post by ராஜா on Sun Apr 13, 2014 1:42 pm

அநியாயம் கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் ?! என்று யாராச்கும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள்.

மோடிக்கு ஓட்டு போடணுமா இல்ல வேறு எந்த நல்லவருக்கு ஓட்டு போடணும்  அநியாயம் 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மோடியும் முகமூடியும்! பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள்

Post by சாமி on Mon Apr 14, 2014 9:04 am

@ராஜா wrote:[link="/t109388-topic#1058173"]அநியாயம் கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் ?! என்று யாராச்கும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள்.

மோடிக்கு ஓட்டு போடணுமா இல்ல வேறு எந்த நல்லவருக்கு ஓட்டு போடணும்  அநியாயம் 

விகடனுக்கு 'மோடி' மேல் அப்படி என்ன கோபம்னு தெரியல ராஜா...

ஜூனியர் விகடன் இதழில் 'குஜராத்தில் ஜூவி' என்ற தொடர் வந்து கொண்டிருக்கிறது. அந்தக்கட்டுரையை நாம் படித்தோமானால் குஜராத் வளர்ச்சி அடையவில்லை அப்படியே வளர்ந்திருந்தாலும் அது தானாக வந்ததுதான் என்ற நோக்கில் புள்ளிவிவரங்களுடன் எழுதப்படுகிறது.

இந்த 'அறிவுஜூவிகள்' உள்ளூர் விசயங்களை மட்டும் ஏனோ புள்ளிவிவரங்களுடன் எழுதத் துணிவதில்லை.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மோடியும் முகமூடியும்! பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள்

Post by ayyasamy ram on Mon Apr 14, 2014 10:04 am

மது விலக்கு அமுலில் உள்ள மாநிலம்
குஜராத்...
-
அங்கு தினக்கூலியாக ரூ 500 சம்பாதிக்கும்
ஒருவர், தன் செலவுக்காக ரூ50 எடுத்துக்கொண்டு
மீதியை மனைவிடம் தருகிறார்..!
-
இலவச திட்டங்கள் ஏதும் அறிவிக்காமல் அங்கு
மோடி ஜெயித்தது எப்படி..?
-
காலம்தான் பதில் சொல்லும்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34953
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: மோடியும் முகமூடியும்! பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள்

Post by krishnaamma on Mon Apr 14, 2014 10:43 am

@ராஜா wrote:[link="/t109388-topic#1058173"]அநியாயம் கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் ?! என்று யாராச்கும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கள்.

மோடிக்கு ஓட்டு போடணுமா இல்ல வேறு எந்த நல்லவருக்கு ஓட்டு போடணும்  அநியாயம் 

வரும் .....ஆனா வராது என்று சொல்வது போல இருக்கே நீங்க சொல்றது புன்னகை
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: மோடியும் முகமூடியும்! பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள்

Post by ராஜா on Mon Apr 14, 2014 10:52 am

@சாமி wrote:
இந்த 'அறிவுஜூவிகள்' உள்ளூர் விசயங்களை மட்டும் ஏனோ புள்ளிவிவரங்களுடன் எழுதத் துணிவதில்லை.
எழுதுனா அப்புறம் "ஆட்டோ" வரும் , உடன்பிறப்புகள் வந்து பத்திரிகை அலுவலகத்தில் "போகி" கொண்டாடுவார்கள் என்ற பயம் தான் காரணம் @சாமி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மோடியும் முகமூடியும்! பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள்

Post by krishnaamma on Mon Apr 14, 2014 10:57 am

@ராஜா wrote:[link="/t109388-topic#1058268"]
@சாமி wrote:
இந்த 'அறிவுஜூவிகள்' உள்ளூர் விசயங்களை மட்டும் ஏனோ புள்ளிவிவரங்களுடன் எழுதத் துணிவதில்லை.
எழுதுனா அப்புறம் "ஆட்டோ" வரும் , உடன்பிறப்புகள் வந்து பத்திரிகை அலுவலகத்தில் "போகி" கொண்டாடுவார்கள் என்ற பயம் தான் காரணம் @சாமி

சிரி சிரிசிரி சிரிசிரி சிரி
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: மோடியும் முகமூடியும்! பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள்

Post by பாலாஜி on Mon Apr 14, 2014 5:53 pm

@ராஜா wrote:[link="/t109388-topic#1058268"]
@சாமி wrote:
இந்த 'அறிவுஜூவிகள்' உள்ளூர் விசயங்களை மட்டும் ஏனோ புள்ளிவிவரங்களுடன் எழுதத் துணிவதில்லை.
எழுதுனா அப்புறம் "ஆட்டோ" வரும் , உடன்பிறப்புகள் வந்து பத்திரிகை அலுவலகத்தில் "போகி" கொண்டாடுவார்கள் என்ற பயம் தான் காரணம் @சாமி

ஆமோதித்தல்
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மோடியும் முகமூடியும்! பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள்

Post by T.N.Balasubramanian on Mon Apr 14, 2014 7:38 pm

எந்த ஒரு அரசியல்வாதியின் வாழ்விலும் கறைபடாத காலகட்டங்கள் மிக குறைவு.
அரசியல்வாதி ஆவதற்கு முன் அவர்கள் ( மரியாதை நிமித்தம் , "அவர்கள் " இல்லை. ஆண் அரசியல்வாதி /பெண் அரசியல்வாதி என்ற இருபாலாருக்கும் பொருந்தும். ஆகவே பன்மையில் விளிக்கபட்டது) ஒரு சராசரி மனித பிறவி. சமுக ஆசாபாசங்களுக்கு அடிமையனாவர்கள்தான். கரை படிந்த பக்கங்கள் பல பலருக்கும் உண்டு. கரை படிதல் ஒரு அத்தியாவசியமான தகுதி ஆகிவிட்டது.
நான் அறிந்து தன் குழந்தைகளுக்காக சொத்து சேர்க்காதவர் ,காந்திஜி பிறந்த அக்டோபர் 2இல் பிறந்த லால் பகதூர் சாஸ்த்ரி அவர்கள் (மரியாதை நிமித்தம்), காந்திஜி பிறந்த தினத்தில் மறைந்த கர்மவீரர் காமராஜர் அவர்கள் (இவரை தூற்றிய கழகத்தார் , இன்று கொழிக்கிறார்கள்) ,மற்றும் அறிஞர் அண்ணா அவர்கள்.இவர் வாரிசுகளின் நிலைமை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21451
மதிப்பீடுகள் : 8148

View user profile

Back to top Go down

Re: மோடியும் முகமூடியும்! பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum