புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_m10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10 
46 Posts - 47%
heezulia
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_m10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_m10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_m10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_m10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_m10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_m10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_m10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_m10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_m10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10 
17 Posts - 2%
prajai
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_m10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_m10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_m10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10 
5 Posts - 1%
Jenila
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_m10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_m10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_m10ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 20, 2014 4:08 am


சலசலத்து ஓடும் ஒரு சிற்றாற்றின் கரையில் இருக்கிறது அந்த ஆசிரமம். பரந்த நிலப்பரப்பு. அங்கொன்றும் இங்கொன்றுமாக அழகிய கட்டிடங்கள். நிலத்திற்கு அழகு சேர்க்க வாழை, தென்னை, பலா, மா என்று காய்த்துத் தொங்கும் மரங்கள். நிலவளமும், நீர்வளமும் நிறைந்த அந்த பூமியில், மனவளத்தை நலப்படுத்துவதற்காக ஆசிரம தலைவரின், ஞானாசிரியரின் குரலில் தேவாரம் இசைத் தட்டாக ஒலிக்கிறது. போற்றித் திருத்தாண்டகப் பாடல்

"வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளிர்த்தாய் போற்றி'

என்ன ஊற்று? எங்கிருந்து வருகிறது? எங்கு செல்கிறது? எதை யார் ஒளிக்கிறார்கள். சிந்தனை தொடர்ந்தது. பாகவதர் பாடிக் கொண்டு இருக்கிறார். என்ன வேகத்தில் ஸ்வரங்கள் வந்து விழுகின்றன. இவ்வளவு வேகமாக கற்பனை செய்து ராகம் மாறாமல் தாளம் பிசகாமல் பாடமுடியுமா? அவரை உள்ளிருந்து என்ன இயக்குகிறது? நமக்கு ஏன் இந்தக் கற்பனையோ, வேகமோ, இனிமையோ குரலில் இல்லை? ஒவ்வொருவரும் தங்கள் முயற்சி தங்கள் அறிவு ஆற்றல் அதனால் இந்த நிலைக்கு உயர்ந்தோர் என்கிறார்கள். நிச்சயமாக முயற்சி திருவினையாக்கும். ஆனாலும் ஊற்றாக உள்ளிருந்து கற்பனை பெருக இறையருள் வேண்டும்.

செம்பை வைத்தியநாத பாகவதர் புகழ்பெற்ற வித்வான். பல ஆண்டுகளாக முன்னணியில் இருக்கும் சங்கீத மேதை... அவருடைய போதாத காலம், ஒரு நாள் குரல் எழும்பவில்லை. சப்தமே வரவில்லை. எந்த வைத்தியருக்கும் புரியாத நிலை. ஆனந்த வெள்ளமாக பாய்ந்த சங்கீதம் மெள்ள ஓலமாகிவிட்டது. ராஜநடை பாகவதர் தளர்நடை தாத்தா ஆகிவிட்டார்.

பட்டினத்தார் பாடியது போல் என் செயலால் ஆவது இனி ஒன்றில்லை என்பது புரிகிறது. ஆட்டுவித்தார் யாரொருவர் ஆடாதாரே, பாட்டுவித்தால் யாரொருவர் பாடாதாரே. இத்தனை நாள் நானா பாடினேன். என் உள்ளிருந்து குருவாயூரப்பன் இயக்கினான். அவன் விரும்பினால் குரல் வரும். என் சங்கீதம் பூராவும் அவனுக்கே அர்ப்பணம் என சங்கல்பம் செய்கிறார். இது நடந்த விஷயம். மெதுவாக குரல் வருகிறது. பணத்திற்காக அவர் கடைசி வரை பாடவே இல்லை. குருவாயூரப்பன் புகழை பாடுவதே வாழ்க்கை நெறி ஆகிவிட்டது.

மனிதர்கள் பேசுவதைக் கேட்கலாம். சிறிய வயதில் ஒருமுறை படித்தால் எனக்க போட்டோ காபி மாதிரி மனதில் பதிந்துவிடும். வயது இப்பொழுது 70. படிக்க, படிக்க மறக்கிறது. புத்தகத்தை திறந்து வைத்தால், உடனே நினைவிற்கு வருகிறது என்கின்றனர் பலர். அந்த "என்னுடைய அறிவு என்னுடைய புத்தி' எங்கே போயிற்று? வானத்தை வில்லாக வளைப்பேன், மலையை கயிராக திரிப்பேன், கடல கைக்குட்டையில் அடக்குவேன் என்ற வீர வசனங்கள் ஒரு கட்டத்தில் அடங்கி விடுகின்றன. என்கு கோபம் வந்தால் நான் மனிதனாக இருக்க மாட்டேன் என்று சிலர் பெருமை பேசுகின்றனர். மனிதனாக பிறந்தவன், நாயாக குலைப்பேன், சிங்கமாக சீறுவேன் என்பது பெருமையா? நம் பேச்சில் இந்த குறையெல்லாம் இருப்பதால் தான் இறைவன் புகழைப் பாடு. தற்பெருமை பேசாதே. பேச்சைக் குறை என்கின்றனர் பெரியோர்.

"ஊற்றாக உள்ளே' இருக்க வேண்டியது இறைவனிடம் பக்தியும், அதனால் தோன்றிய ஒழுக்கமும்தான், பொறாமையும், கோபமும் அல்ல. நமக்கு சமமானவர், நெருங்கி பழகுபவர், உறவினர் நம்மைவிட சிறிது மேம்பட்டு இருந்தால் கூட பொறாமை வந்து விடுகிறது. எனக்குக் கோபம் வரும். கத்துவேன் என்றெல்லாம் சொல்பவர்கூட எனக்கு உன்னிடம் பொறாமை என்று கூற வெட்கப்படுவர். நம்முடைய குணங்களைக் கூறுவதென்றால் கோபம், பொறாமை, தற்பெருமை என்று வரிசையாக அசுர குணங்களைத்தான் கூறமுடியும். இதை உணர்ந்து தான் சுந்தரர் இறைவா நீ என்னுடன் கலந்தாய், உன்னையே எனக்குத் தந்துவிட்டு என்னை எடுத்துக் கொண்டாயே என்று மறுகுகிறார். தந்தது உன்தன்னை கொண்டது என் தன்னை சங்கரா யார் கொலோ சதுரர் என்று வியப்பாக பேசுகிறர். நம்முள்ளே ஊற்றாக என்ன பெருகுகிறது என்பதை புரிந்து கொண்டால் இறைவனை எங்கும் காண்போம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 20, 2014 4:09 am

ஒருவனிடம் பொருள் இருந்தால் அவனிடம் இருக்கும் வசதிகள் நமக்கும் வேண்டும் என்று நினைத்தால் அழுக்காறு தோன்றுகிறது. பொருள் உடையவன், தற்பெருமை பேசி, ஆடம்பரமாக வாழ்ந்தால் நம் பொறாமை அதிகரிக்கிறது. அந்த செல்வந்தன் குபேரனாக இருக்கட்டுமே, அவனுடைய புண்ணிய பலனை அவன் செல்வமாக அனுபவிக்கிறான். இறைவன் அவனிடம் பணமாக வெளிப்படுகிறான் என்ற பாவனை வந்துவிட்டால் பொறாமைக்கு இடம் ஏது? விபூதி யோகத்தில் கீதையில் பகவான் வித்தோசோ யக்ஷ ரக்ஷஸாம் என்கிறார். உலகில் பெரிய செல்வந்தனாக, குபேரனாக நான் இருக்கிறேன் என்கிறார்.

சிலர கூறுகின்றனர். வாழ்க்கை ஏற்ற இறக்கங்களுடன் கூடிய ஒரு சக்கரம். சக்கரம் என்பது வட்டம் அல்லது பூஜ்யம். பூஜ்யம் என்பது ஒன்றுமில்லை என்பதன் மறுபெயர். வாழ்க்கையே பூஜ்யம். கூட்டி கழித்து பார்த்தால் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என்று துவேஷமாக பேசுகின்றனர் இவர்களைத்தான் இல்லை இல்லை என்று சொல்லுகின்ற ஏழைகள் என்று சிவவாக்கியரைப் போல பாடவேண்டும்.

இந்த வெறுப்பு, துவேஷம் போகத்தான் பகவான் நான் எல்லாமாக நிறைந்திருக்கிறேன் என்கிறார். பூஜைக்கு உகந்த மாதமாக மார்கழியாக நான் இருக்கிறேன். வண்ண வண்ண மலர்களை ரசிக்கிறாயே? அந்த மலர்களாக, அந்த மலர்களைச் சொரியும் வசந்த காலமாக நான் இருக்கிறேன். மாஸானம் மார்க சீர்ஷோகம். ருதுனாம் குளமாகர என்கிறார். அதையே தான் கண்ணதாசன், மாதங்களில் மார்கழி, மலர்களில் மல்லிகை என்று மொழி பெயர்த்துவிட்டார். வெறுப்பு அதிகமாகி, நல்லதே செய்யாமல் வெட்டிப் பொழுதாக பகடை ஆடுகிறாயா (அல்லது சீட்டாடுகிறாயா) நான் அந்தப் பகடைக் காயாகவும் இருக்கிறேன் என்கிறார். த்யூதம் சலயதாமஸ்மி என்கிறார். சலயதாம் என்பது வஞ்சகர்களை குறிக்கிறது. தீயவனிடமும் நான் இருக்கிறேன். அவனையும் வெறுக்காதே என்பது குறிப்பு.

நாவுக்கரசர் போற்றித் திருதாண்டகத்தில் ஊற்றாகி உள்ளே ஒளிர்த்தாயே போற்றி என்று பாடுகிறார். ஒளிர்ந்தால் என்று பாடவில்லை ஒளித்தாய் என்றால் எதை ஒளித்து வைக்க வேண்டும்? ஒளிந்தாய் என்றால்தான் இறைவனே ஒளிந்து கொண்டிருப்பதாக பொருள்படும். நாம் யார் என்பதை இறைவன் ஒளித்து வைத்த விட்டார். மாயையாக இந்த உலகம்தான் உண்மை என்பதை நினைந்து வாழ்கிறோம். நாமே அந்த பிரம்மம், இறைவன் என்பதை நம் சிற்றறிவிற்கு மறைத்து விட்டு, உடலும், உடல் சார்ந்த யோகங்களுமே வாழ்க்கை என்பதாக வாழ்கிறேன். மேலிருந்து ஓர் அன்பான கை நம்மை நோக்கி நீள்கிறது. இந்த மனிதக் கூட்டத்தில் முட்டி மோதி தள்ளாடி, சிக்கித் தவிக்கும் நம் கைகளை சற்று உயர்த்தினால் கூட அவன் தூக்கி விடுவான். அழிவற்ற ஆனந்த நிலை அடைவோம் என்பதை நம் அறிவிற்கு ஒளித்து விட்டானே அதுதான் உள்ளே ஒளித்தாய் போற்ற என்பது.

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி என்றும் அப்பர் ஸ்வாமிகள் பாடுகிறார். மின் விளக்குகளில் சீரயல் செட் என்பது ஒருவகை. நிறைய குட்டி குட்டி விளக்குகள். அனைத்தும் ஒரு மின்கம்பி மூலம் கோர்க்கப்பட்டு, ஒரு ஸ்விட்சை போட்டவுடன் அனைத்தும் ஒளிவிடும். இடையில் ஒரு பல்ப் கெட்டு விட்டால் அதை நீக்கி வேறு மாற்றுவோம். அதே மாதிரி தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் மூச்சு காற்று இயங்குகிறது. காற்று போனால் உயிர் இறக்கிறது. புது உயிர் தோன்றுகிறது. பிரபஞ்சம் முழுவதும் காற்று வியாபித்திருக்கிறது. இறைவன் அந்தக் காற்றாக எங்கும் வியாபிக்கிறார். அதனால் தான், பகவான் "யச்சாபி சர்வ பூதானாம் பூஜம் ததஹம்' என்கிறார். எல்லா உயிரினங்கக்கும் நான் தான் ஆதாரம் என்பது பொருள்.

மணிவாசகரின் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. வைகையில் வெள்ளம் வந்துவிடுகிறது. மதுரை நகரமே கலங்கித் தவிக்கிறது. வீட்டிற்குள் ஒருவர் வெள்ளத்தை அடைக்க தரையை உயர்த்த வர வேண்டும் என்று ராஜா அரிமர்த்த பாண்டியன் கட்டளை இடுகிறான். ஒவ்வொருவருக்கும் எந்த இடம் என்று வேறு நிர்ணயம் செய்கிறார்கள். தனித்து வாழும் சிவபக்த மூதாட்டி வந்தி பாட்டி. அவளுக்கு கரை அடைக்க உதவ யாருமில்லை. பாட்டி பதறுகிறாள். சிவனார் கூலியாளாக வருகிறார். கூலி என்ன தெரியுமுா? பாட்டி விற்கும் பிட்டில் உதிர்ந்தது அவருக்கு. பாட்டி வயிறாற பிட்டு தருகிறாள். இறைவனின் லீடை பிட்டு, கைப்பிடிக்குள் அடங்கவே இல்லை. வைகை நீர் வெள்ளமும் தானே அடங்கவில்லை. பாட்டி அலுக்காமல் அள்ளி அள்ளி தருகிறாள். சிவனார் உண்கிறார். உண்ட களைப்பு உறங்குகிறார். வைகைக் கரையில் வந்தியின் பாகம் மட்டும் அடைபடவில்லை. காவலர் மன்னனிடம் கூற, சினந்த மன்னன் சிவனார் மீது பிரம்பை வீசுகிறான். என்ன விநோதம்? அந்த அடி அனைத்து உயிர்களின் மீதும் விழுகிறது. அதற்கு மன்னனும் விலக்கல்ல.

திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் பாடுகிறார். "எந்தன் மேல் பட்டது எந்தன் மேல் பட்டது இது என அதுஎன அமைச்சரும் மக்களும் பேச, அசரீரி ஒலிக்கிறது. அரசனே "மணிவாசகர் நீ நல்வழியில் சேர்த்த பொருளை இறைப்பணிக்காக, என் பணிக்காக செலவிட்டார். அவர் சிறைப்பட்டதால் வைகையில் வெள்ளத்தை ஏவி உன்க அவர் பெருமையை புரிய வைத்தேன்' என்றது. நமக்கு அசரீரி முக்கியமல்ல. இறைவன் மேல்பட்ட அடி எல்லா உயிர்களின் மீதும் பட்டது என்பதுதான். இறைவன் எங்கும் உறைவதால் எல்லா இடத்திலும் அந்த பிரம்படி உணரப்பட்டது. யாதுமாகி நிற்பதால் எங்கும் இறைவனைக் கண்டு உயிர்களை நேசிக்க வேண்டும். அதைத் தான் பாரதியா எளிமையாக அருமையாக பாடுகிறார்.'

காக்கை குருவி எங்கள் ஜாதி
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்க நோக்க களியாட்டம் பார்க்கும்
இடமெல்லாம் நானின்றி வேறில்லை

விஞ்ஞான அறிவுடையவன் நான். எதையும் பரிசோதித்து பார்த்துதான் ஒத்துக் கொள்வேன். தெருவில் ஆட்டோ ஓடுகிறது. பஸ் ஓடுகிறது. ஆட்டோவும், பஸ்ஸும் இருக்கின்றன. முப்பரிமாணம் ஏற்றுக் கொள்கிறேன். அதே மாதிரி கடவுளையும் காட்டு. நீ பாட்டிற்கு எங்கும் கடவுள், எதிலும் கடவுள் என்றால் எப்படி என்கின்றனர் சிலர். நாவுக்கரசர் பாடுகிறார். பாலில் நெய் இருக்கிறது. பார்க்கவா முடிகிறது. பாலை தயிராக்கி, கடைந்து வெண்ணெயை திரட்டி உருக்கினால் தான் நெய் வருகிறது. உன் மனதை புடம் போட்டு, கடைந்து, உருக்கு, எங்கும் கடவுளை காண்பாய் என்கிறார்.

அரணிக் கட்டையில் இருக்கும் நெருப்பு கண்ணுக்கு முதலில் தெரிகிறதா? தொடர்ந்து இரண்டு கட்டைகள் உரச உரச தானே தீப்பொறி கிளம்புகிறது. உன் மனதை உரசிப் பார். உன் குணங்களை உரசி புடம் போடு என்கிறார். மறைய நின்றுளான் மாமணி ஜோதியன் ஒளிரும் மணி. முதலிலேயே ஒளி இருக்கிறதா மணியில்? அதைச் செதுக்கி செதுக்கி கோணங்களை உண்டாக்கி, வேண்டாத பாகத்தை வெட்டியெறிந்து நெறிப்படுத்தினால் தானே, சாணை பிடித்தால் தானே மணிக்கு ஒளி வருகிறது. உன் மனதில் வேண்டாமல் புகுந்த களையான அசுரகுணங்களை செதுக்கி எறி. இறை ஒளி உன்னிடம் தோன்றும். நீயும் எங்கும் இறைவனை காண்பாய் என்கிறார்.

[thanks] கோமதி ராஜ்குமார்[/thanks]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக