புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_m10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_m10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10 
4 Posts - 27%
சிவா
எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_m10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_m10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10 
310 Posts - 42%
heezulia
எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_m10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_m10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_m10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_m10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_m10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_m10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10 
6 Posts - 1%
prajai
எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_m10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10 
5 Posts - 1%
manikavi
எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_m10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_m10எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங்


   
   
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Aug 08, 2012 11:28 pm

நூறு வருடங்களுக்கு முன்பு அடிமை விடுதலைச் சாசனத்தில் கையெழுத்திட்ட ஒரு மாபெரும் அமெரிக்கரின் சிலையின் நிழலில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். அநீதியால் வாடிய லட்சக்கணக்கான நீக்ரோக்களுக்கு கலங்கரை விளக்கமாக காட்சியளித்தது இந்த சாசனம். அவர்களது அடிமைத்தன இரவின் விடியலாக அமைந்தது அந்த சாசனம். ஆனால் நூறு வருடங்கள் கழிந்த பிறகும் நீக்ரோ விடுதலையாகவில்லை. நூறு வருடங்கள் கழித்த பின் நீக்ரோவின் வாழ்க்கை ஒதுக்குதலினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மாபெரும் செல்வக்கடலின் நடுவே வறுமைத்தீவில் நீக்ரோ வாழ்கிறான்; தனது சொந்த நாட்டிலேயே அகதியைப் போல் உணர்கிறான். நாம் இத்தகைய அவமானகரமான சூழ்நிலையைப் பற்றி விவாதிக்கவே இங்கு வந்துள்ளோம்.

ஒருவகையில் பார்த்தால் நாம் ஒரு காசோலையைப் பணமாக்குவதற்காக தேசத் தலைநகருக்கு வந்துள்ளோம். நமது குடியரசின் தந்தையர் அரசியல் சாசனத்தின் அருமையான வார்த்தைகளை எழுதியபோது, விடுதலை சாசனத்தை எழுதிய போது எல்லா அமெரிக்கனுக்கும் உரிமையுடைய ஒரு பத்திரத்தில் கையெழுத்திட்டார்கள். எல்லா மனிதர்களுக்கும்- கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் வாழ்வு, விடுதலை, மகிழ்ச்சியைத் தேடுதல் ஆகியவற்றுக்கான உரிமைகள் அளிக்கப்பட்டன. தனது கறுப்புக் குடிமகன்களைப் பொறுத்த வரை அமெரிக்கா இந்த வாக்குறுதியிலிருந்து தவறிவிட்டது. இந்த புனிதமான கடமையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அமெரிக்கா தனது கறுப்பின குடிமகன்களுக்கு ஒரு திவாலான காசோலையைக் கொடுத்தது.

நீதியின் வங்கி திவாலாகி விட்டது என்பதை நாங்கள் நம்ப மறுக்கிறோம். இந்த தேசத்தின் வாய்ப்புக் கருவூலத்தில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் நம்ப மறுக்கிறோம். எனவே இந்தக் காசோலையை, விடுதலை என்னும் செல்வத்தையும், நீதியின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் இந்தக் காசோலையைப் பணமாக்குவதற்காக இங்கே வந்துள்ளோம்.

அமெரிக்காவின் தீவிரத் தேவை இது என்ற அவசரத்தை நினைவூட்டுவதற்காக நாம் இங்கே வந்துள்ளோம். இது ஆடம்பரத்தில் ஈடுபட்டு, படிப்படியாகச் செல்வது என்னும் மயக்க மருந்தை உட்கொண்டு சொகுசில் மயங்க வேண்டிய நேரமல்ல. மக்களாட்சியின் வாக்குறுதிகளை உண்மையாக்க வேண்டிய நேரம் இது. ஒதுக்கல் என்ற இருட்டுப் பள்ளத்தாக்கில் இருந்து விடுபட்டு, இனநீதி என்னும் ஒளிமிக்க பாதையில் செல்ல வேண்டிய நேரமிது. இன ஒதுக்கல் என்னும் புதைகுழியில் இருந்து நமது தேசத்தை மீட்டெடுத்து, சகோதரத்துவம் என்ற பலமிக்க பாறையின் மீது நமது தேசத்தை நிலைநிறுத்த வேண்டிய நேரமிது.

அனைத்து கடவுளின் மக்களுக்கும் நீதியை உண்மையாக்க வேண்டிய நேரமிது. இந்த அவசரத்தைக் கண்டுகொள்ளாமல் விடுவது இந்த தேசத்தைப் பெரும் ஆபத்தில் சிக்க வைக்கும். நீக்ரோக்களின் இந்த வெயில்காலம், நீதியையும், விடுதலையையும் கொண்ட வசந்த காலம் வருவதற்கு முன் கடந்து போகப் போவதில்லை. 1963 ஒரு முடிவல்ல- ஆரம்பம்.

நீக்ரோவுக்கு ஒரு குடிமகனின் உரிமைகள் அளிக்கப்படும் வரையில் அமெரிக்காவில் அமைதியைக் காண முடியாது. நீதியின் ஒளி வரும் வரைக்கும் கலகத்தின் சுழல்காற்று, நமது தேசத்தின் அடித்தளத்தை ஆட்டங்காண வைக்கும்.

நீதி அரண்மனையின் இற்றுப்போன வாயிலில் நின்று கொண்டிருக்கும் எனது சக மக்களுக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். நமது உரிமைகளைப் பெறும்போது நாம் தவறான செயல்களைச் செய்து குற்றவாளிகளாகக் காட்சியளிக்கக் கூடாது. வெறுப்பும், கசப்பும் கலந்த கோப்பையிலிருந்து பருகி நாம் நம் சுதந்திர தாகத்தைத் தணித்துக் கொள்ள வேண்டாம்.

நமது போராட்டம் கண்ணியத்துடனும் கட்டுப்பாடுடனும் நிகழ வேண்டும். நமது போராட்டங்கள் வன்முறையை நோக்கிச் செல்வதற்கு இடங்கொடுத்தலாகாது. நாம் ஆயுத பலத்தை ஆன்ம பலங்கொண்டு எதிர்ப்பதன் மூலம் இன்னும் வலிமையடைவோம். நாம் எல்லா வெள்ளைக்காரர்களையும் வெறுப்புடன் பார்க்கலாகாது. இன்று நம்முடன் இருக்கும் வெள்ளைக்காரச் சகோதரர்கள் அவர்களின் வருங்காலம் நம்முடைய வருங்காலத்துடன் பிணைக்கப்பட்டதை உணர்ந்திருக்கிறார்கள்.

நமது சுதந்திரம் அவர்களுடைய சுதந்திரத்துடன் பிணைக்கப்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நாம் தனியாக நடக்க முடியாது. நாம் நடக்கும் போது முன்னேறி நடப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். நாம் பின்னால் திரும்பிப் பார்க்க முடியாது. சமூக உரிமை கோருபவர்களிடம் சிலர் கேட்கிறார்கள், "எப்பொழுது நீங்கள் திருப்தி அடைவீர்கள்?". நீக்ரோ போலீசாரால் சொல்லவொண்ணா கொடுமைக்கு ஆளாக்கப்படும் போது எங்களால் திருப்தியடைய முடியாது.

பிரயாணக் களைப்பால் களைத்திருக்கும் எங்கள் உடல்கள் வழியிலிருக்கும் பயண விடுதிகளில் களைப்பாற அனுமதிக்கப்படாமலிருக்கும் போது எங்களால் திருப்தியடைய முடியாது.

நீக்ரோவின் வாழ்விடங்கள் சின்ன ஒதுக்கலிடங்களிலிருந்து பெரிய ஒதுக்கலிடங்களாக மட்டும் மாறிக் கொண்டிருக்கும் போது எங்களால் திருப்தியடைய முடியாது. "வெள்ளைக்காரர்களுக்கு மட்டும்" என்று சொல்லும் சின்னங்களால் எங்களது குழந்தைகளின் மனிதத்தன்மையும், கண்ணியமும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது எங்களால் திருப்தியடைய முடியாது.

இல்லை. எங்களுக்குத் திருப்தியில்லை. நீதி நீரோடையைப் போல் உருண்டோட வேண்டும்; நேர்மை நதியைப் போலப் பாயந்தோட வேண்டும். இவை நிகழாமல் எங்களால் திருப்தியடைய முடியாது.

சிலர் ஏகப்பட்ட விசாரணைகளுக்கு ஆளாகியே இங்கே வந்திருக்கிறீர்கள். சிலர் குறுகிய சிறை அறையிலிருந்து இங்கே வந்திருக்கிறீர்கள். விடுதலைக்கான தேடலின் காரணமாக நொறுக்கப்பட்டு காவல்துறை அடக்குமுறைக்கு உள்ளான பலர் இங்கே வந்துள்ளீர்கள். நீங்கள் பலன்தரக்கூடிய துன்பங்களை அதிகமாக அனுபவித்துள்ளீர்கள்.

இத்தகையே துன்பங்களே நமது மீட்சிக்கு வழி தரும் என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள். மிசிசிப்பிக்குப் போங்கள், அலபாமாவுக்குப் போங்கள், தெற்கு கரோலினாவுக்குப் போங்கள், ஜார்ஜியாவுக்குப் போங்கள். வடக்கின் நகரங்களில் இருக்கும் நமது சேரிகளுக்கும், ஒதுக்கலிடங்களுக்கும் போங்கள். இந்நிலை மாறும் என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள். கவலைப் பள்ளத்தாக்கில் தொலைந்து விடாதீர்கள்.

நான் உங்களுக்குச் சொல்கிறேன் தோழர்களே, இன்றும் நாளையும் நாம் துன்பங்களை சந்தித்தாலும் எனக்கு ஒரு கனவு உண்டு. அமெரிக்கக் கனவில் வேர்பிடித்திருக்கும் ஒரு கனவு அது. ஒரு நாள் நமது தேசம் எழும்; அதன் கொள்கைகளின் உண்மையான பொருளின்படி நடந்து கொள்ளும் என்ற கனவு எனக்கு உண்டு. "எல்லா மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற சுய நிரூபண உண்மையை ஏற்றுக் கொள்கிறோம்."


ஜார்ஜியாவின் செம்மலை மேல், அடிமைகளின் மகன்களும், அடிமைகளின் சொந்தக்காரர்களின் மகன்களும் சகோதரத்துவம் என்ற மேசையில் ஒன்றாக அமர்வார்கள் என்ற கனவு எனக்கு உண்டு. அநீதியின் வெப்பத்தாலும், அடக்குமுறையின் சூட்டினாலும் தாக்கப்பட்டிருக்கும் மிசிசிப்பி மாநிலங்கூட ஒரு நாள் நீதியின் சோலையாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

எனது நான்கு குழந்தைகளும் நிறத்தால் அல்லாமல் குணத்தால் மதிக்கப்படும் நாட்டில் ஒரு நாள் வாழ்வார்கள் என்ற கனவு எனக்கு உண்டு. மிகத் தீவிரமான இனவெறியர்களுள்ள அலபாமாவில் ஒருநாள் கறுப்பின சிறுவர் சிறுமியர், வெள்ளைக்காரச் சிறுவர் சிறுமியருடன் சகோதரத்துவத்துடன் கைகோர்த்துக் கொள்வார்கள் என்று ஒரு கனவு எனக்கு உண்டு.

எனக்கு இன்று ஒரு கனவு உண்டு. பள்ளங்களெல்லாம் உயர்த்தப்படும்; மலைகள் குன்றுகளெல்லாம் சமமாகும்; கரடுமுரடானவை சமமாகும்; கோணலானவை நேராகும். நமது கடவுளின் மகிமை வெளிப்படும். உயிருள்ள எல்லாரும் அதைக்காண்பார்கள். இது தான் நமது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடன் நாம் தெற்குக்குப் போகிறோம். இந்த நம்பிக்கையுடன் கவலை என்னும் மலையிலிருந்து நம்பிக்கை என்னும் பாறையைப் பெயர்த்தெடுப்போம். இந்த நம்பிக்கையுடன் நமது தேசத்தின் சச்சரவுக் குரலை சகோதரத்துவத்தின் இனிய இசையாக மாற்றுவோம். இந்த நம்பிக்கையுடன் நாம் இணைந்து பணிபுரிவோம்; இணைந்து இறைவனிடம் கோருவோம்; இணைந்து போராடுவோம்; இணைந்து சிறைக்குப் போவோம்; இணைந்து நமது விடுதலைக்காக எழும்பி நிற்போம். ஒரு நாள் நாம் விடுதலையடைவோம் என்ற நம்பிக்கையுடன்.

அந்த நாளில் நாம் அமெரிக்க தேசிய கீதத்தைப் புது அர்த்தத்துடன் பாட முடியும். அமெரிக்கா ஒரு மாபெருந் தேசமாக வேண்டுமானால் இது நடந்தே தீர வேண்டும். நியூ ஹாம்ப்ஷயரின் மலைமுகட்டிலிருந்து விடுதலை முழக்கமிடட்டும்; நியூயார்க் மலைமுகட்டிலிருந்து விடுதலை முழங்கட்டும்; பென்சில்வேனியா மலைகளிலிருந்து விடுதலை முழங்கட்டும்; கொலராடோவின் பனிபடர்ந்த சிகரங்களிலிருந்து விடுதலை முழங்கட்டும்; கலிபோர்னியா மலைச்சரிவுகளிலிருந்து விடுதலை முழங்கட்டும்.

அது மட்டுமல்ல. ஜார்ஜியாவின் கல்மலையிலிருந்து சுதந்திரம் முழங்கட்டும்; டென்னசி மலையிலிருந்து சுதந்திரம் முழங்கட்டும்; மிசிசிப்பியின் ஒவ்வொரு மலையிலிருந்தும் மடுவிலிருந்தும் சுதந்திரம் முழங்கட்டும். எல்லா மலைகளிலிருந்தும் சுதந்திரம் முழங்கட்டும்.

ஒவ்வொரு நகரத்திலிருந்தும், ஒவ்வொரு குடிசையிலிருந்தும், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் சுதந்திரம் முழங்குவதை நாம் அனுமதிக்கும் போது தான் நமது வேறுபாடுகளை நாம் மறந்து கைகோர்த்து, "இறுதியில் விடுதலை பெற்றோம்; இறுதியில் விடுதலை பெற்றோம்; இறைவனே, இறுதியில் விடுதலை பெற்றோம்" என்று பாடமுடியும்.




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 08, 2012 11:43 pm

28 ஆகஸ்ட் 1963 அன்று மார்ட்டின் லூதர் கிங் ஆற்றிய இந்த 17 நிமிட உரை 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த 100 அமெரிக்க உரைகளில் தலைசிறந்ததாகத் தேர்வு பெற்றுள்ளது.

வழங்கியதற்கு மிக்க நன்றி திரு ரங்கராஜன்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Aug 09, 2012 12:38 am

பகிர்வுக்கு நன்றி நண்பரே! எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் 224747944

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 09, 2012 9:26 am

சூப்பருங்க அருமை தோழா .. நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 05, 2014 6:04 pm

நேற்று ஏப்ரல் 4 மார்ட்டின் லூதர் கிங் நினைவு தினம்!

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Apr 05, 2014 10:10 pm

இஸ்ரேலில் ஒரு தெருவின் பெயர் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது

எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் Mlk



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81978
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 05, 2014 10:24 pm



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 06, 2014 8:31 am

எனக்கு ஒரு கனவு உண்டு - மார்ட்டின் லூதர் கிங் 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக