ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சின்னச் சின்ன சிந்தனைகள்
 SK

அறிமுகம்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 krishnaamma

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 மூர்த்தி

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 SK

புதிய சமயங்கள்
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

கடவுள் தந்த இருமலர்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 பழ.முத்துராமலிங்கம்

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஏப்ரல் 23: உலக புத்தக தினம் - சிறப்பு பகிர்வு...

View previous topic View next topic Go down

ஏப்ரல் 23: உலக புத்தக தினம் - சிறப்பு பகிர்வு...

Post by Powenraj on Wed Apr 23, 2014 3:35 pm

இன்றைக்கு உலக புத்தக தினம் .ஷேக்ஸ்பியரின் நினைவாக இந்நாளை அப்படி அனுசரிக்கிறோம் .புத்தகங்கள் உலக வரலாற்றை ஏகத்துக்கும் புரட்டி போட்டிருக்கின்றன . அங்கிள் டாம்ஸ் கேபின் நூல் தான் அடிமைகளின் வலிகளை அமெரிக்க உணர்ந்து தன் மனசாட்சியை மறுபரிசோதனை செய்து கொள்ளும் உள்நாட்டு போருக்கு விதையானது .

காமன் சென்ஸ் நூல் தான் அமெரிக்க விடுதலைப்போரை வீறு கொண்டு எழச்செய்த காரணி . அது நாற்பத்தி எட்டு பக்க நூல் ! நோபல் பரிசு பெற்ற ஹெமிங்க்வேயின் புகழ் பெற்ற கிழவனும்,கடலும் நூல் நூறு பக்கங்களுக்குள் தான். பெண்ணியப்பார்வையை தமிழ் மண்ணில் ஆழமாக விதைத்த 'பெண் ஏன் அடிமையானாள்' நூலும் அளவில் சிறிய புத்தகமே !

படிக்கிற நூல் எதுவோ அது மனிதனின் குணத்தையும் மாற்றும். கடையனுக்கும் கடைத்தேற்றம் காந்தியை மகாத்மா ஆக்கியது. நீட்ஷேவின் நெருப்பு வாதங்கள் ஹிட்லரை இனப்படுகொலை செய்யும் வெறியனாக ஆக்கியது !

ஒரு நூல் கிடைப்பதற்கு எத்தனை ஆண்டுகாலம் ஆகிறது ? ஒரு எழுத்தாளன் ஒரு அற்புதமான படைப்பைத்தரவோ அல்லது ஒரு நூலை கண்டேடுக்கவோ எத்தனை ஆண்டுகாலம் ஆகிறது ? சங்க நூல்களை தேடிய உ.வே.சாவுக்கு தன் வாழ்நாளே அவற்றைப்பதிப்பதில் கழிந்தது. மார்க்குவேஸ் பதினெட்டு மாதங்கள் வீட்டுக்குள் தவங்கிடந்து வார்த்தது கடந்த நூற்றாண்டின் தலை சிறந்த நூல் என்று கொண்டாடப்படும் நூற்றாண்டு காலத்தனிமை நாவல். பன்னிரெண்டு வருடங்கள், பதினாறாயிரம் மைல்கள் டிக்கன்ஸ் எங்கெங்கோ தேடித்தந்தது ப்ரோக்கன் தி ஹெல் நூல். அது கிடைத்ததும் "உலகின் மகிழ்ச்சியான மனிதன் நான் தான். இந்த நூலை பதிப்பித்த பின் என் உயிரே போனாலும் கவலையில்லை !" என்றார் அவர்.

டார்வினின் உயிரினங்களின் தோற்றம் நூல் பெருத்த அலைகளை உண்டு செய்தது. அந்த நூல் வெளிவந்தால் கடவுளின் இருப்பும்,மதங்கள் குரிப்பிட்டவையும் கேள்விக்குள்ளாகும் என்பது தெரிந்ததால் பத்தாண்டுகள் வரை அந்த குறிப்புகளை எடுக்காமலே வைத்திருந்தார். மகளின் மறைவுக்கு பின்னரே அந்நூலை வெளியிட்டார். பகுத்தறிவின் சாளரங்கள் மேலும் வெளிச்சமாகின. மார்க்ஸ் தன்னுடைய மூலதனம் நூலை டார்வினுக்கே சமர்ப்பணம் செய்தார்.

நிராகரிப்பு என்பது இன்றைக்கு புகழ் பெற்றிருக்கும் நூல்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது. ஹாரி பாட்டர் நாவலை எழுத ஆரம்பித்தபோது, ஒழுங்கான இடம் கிடையாது, பசியால் வாடி, மன உளைச்சலுக்கு உள்ளானார். காபி கடைகளில் உட்கார்ந்து, பழைய டைப்ரைட்டரில் அடித்தே கதையை முடித்தார். அதைப் பல பதிப்பாளர்களிடம் கொண்டுபோய் நீட்ட, அவர்கள் நிராகரித்தனர். லண்டனின் மிகச் சிறிய பதிப்பு நிறுவனமான ப்ளும்ஸ்பரி, 1,000 பிரதிகளுக்கு 2,250 பவுண்டு தருவதாக ஒப்புக்கொண்டது. நாவல் வந்த வேகத்திலேயே விற்றுத் தீர்ந்தது.

ஹக்கில்பெரி பின் நூலை மார்க் ட்வைன் எழுதிய பொழுது போஸ்டன் நூலகத்துக்குள் அந்நூல் நுழையக்கூடாது என்று சொன்னார்கள். ஜேம்ஸ் ஜாய்ஸ் உலிசஸ் நூலை எழுதிய பொழுது இங்கிலாந்தும்,அமெரிக்காவும் தடை செய்திருந்தன. சேத்தன் பகத்தின் முதல் நாவல் ஆக்ஸ்போர்ட் பதிப்பக எடிட்டர்களால் நிராகரிக்கப்பட்டு ரூபா பதிப்பகத்தால் வெளிவந்து பல லட்சம் பிரதிகள் விற்றது.

அண்ணா மேரி கரோலியின் மாஸ்டர் கிறிஸ்டியன் நூலை மரணம் நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது வாசித்துக்கொண்டு இருந்தார். "இந்த நூலை படித்து முடித்தபின் மரணம் என்னைத் தழுவிக் கொண்டால் பரவாயில்லை !" என்றார் அவர். பகத் சிங் தூக்கு மேடைக்கு கிளம்ப வேண்டிய நேரத்தில் தாமதப்படுத்தினார். "என்ன செய்கிறீர்கள் ?" என்று கேட்கப்பட்ட "ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனுடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் !" என்று சொன்னார் அவர் கையில் இருந்தது லெனின் அவர்களின் அரசும்,புரட்சியும் நூல்.

ஒரு பொய்யான நூல் உலகின் வரலாற்றை மாற்றிப்போட்டது. ஜான் மாண்டேவல்லி எனும் இங்கிலாந்து நபர் 'the travels' நூலில் நாய் தலை உள்ள பெண்கள்,ஒற்றைக்கண் ராட்சதர்கள்,பெரிய நத்தைகள்,முட்டிகளுக்கு நடுவே தொங்கிய விதைப்பைகளை கொண்ட ஆண்கள் ஆகியோரை எல்லாம் கடந்து இந்தியா வந்ததாகவும் அங்கே ப்ரெஸ்டர் ஜான் எனும் கிறிஸ்துவ மதத்தில் நம்பிக்கை கொண்டவர் ஆள்வதாகவும் கதை அளந்திருந்தார். மேலும் முப்பது அரசர்கள்,எழுபத்தி இரண்டு சிற்றரசர்கள்,முன்னூற்றி அறுபது பிரபுக்கள் அவருக்கு கீழ் இருந்ததாகவும் கிளப்பி விட்டிருந்தார். உலகம் உருண்டை,மேற்கில் பயணம் செய்தால் இந்தியாவை அடையலாம் என்று அவர் சொன்னதை நம்பி போன கொலம்பஸ் திசைமாறி அமெரிக்காவில் லேண்ட் ஆனார். பல்வேறு கடல் சாகசக்காரர்கள் நூற்றாண்டுகளுக்கு இந்த பொய்யை நம்பினார்கள்.

இவ்வளவும் படிச்சோம். இதுக்கு மேலே தமிழ் நாட்டில் தெருவுக்கு தெரு மதுக்கடைகள் இருக்கின்றன .புத்தக கடைகள் இருக்கின்றவனவா ?எழுத்தாளனை நாம் கொண்டாடுகிறோமா ?கேரள மக்கள் புத்தக வாசிப்பை மூச்சாக செய்பவர்கள் .எழுத்தாளர்களை மதிப்பவர்கள் ;வாசுதேவன் நாயர் ஞான பீட விருது பெற்ற பொழுது முதல்வர் அந்தோணியின் கார் அவர் வீட்டு முன் வாழ்த்த வந்து நின்றது.அப்படி ஒரு நிலை நோக்கி நம் சமூகம் பயணிக்க வேண்டும்

ஒரு சமூகத்தை கட்டமைப்பதில், மிகப்பெரிய மனிதர்களை உருவாக்குவதில் ,நமக்குள் புது புது தேடல்கள் செய்ய நூல்கள் உதவும். பிள்ளைகளுக்கு வீடியோ கேம்களை வாங்கித்தரும் நீங்கள் நல்ல நூல்களை வாங்கித்தாருங்கள் ;நூலகங்களில் சேர்த்து விடுங்கள் .சிந்திக்க மறுக்கிற சமூகம் என யாரையும் முத்திரை குத்துவதற்கு முன் அந்த சமூகத்தை சிந்திக்க வைக்கும் நூல்கள் சார்ந்து அவர்களை திசை திருப்ப வேண்டிய பொறுப்புணர்வு எல்லாருக்கும் உண்டு

Thanks :vikatan
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum