ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இனிய தீபாவளி
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 M.Jagadeesan

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

View previous topic View next topic Go down

மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by M.M.SENTHIL on Thu May 01, 2014 1:55 pm

மேஷம்
மேஷம்:உழைப்பால் உயர விரும்புபவர்களே! சிறிது முன்கோபம் இருக்கிறது, அதை மட்டும் விட்டொழித்தால் மிகவும் நல்ல பெயர் எடுப்பீர்கள். தற்போதைய கிரகங்கள் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. பொருளாதார வளமும், பெண்களால் அனுகூலமும் கிடைக்கும். இருந்தாலும் அவ்வப்போது பொருள் இழப்பும், சிறுசிறு உடல் உபாதைகளும் ஏற்படலாம். பிள்ளைகளால் ஏற்பட்டிருந்த பிரச்னை நீங்கும்; தீயோர் சகவாசம் முற்றிலும் ஒழியும். குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் வந்தாலும் மகிழ்ச்சியான சூழ்நிலையே நிலவும். முயற்சிகளால் அனுகூலம் உண்டு.

மாத பிற்பகுதியில் பொருள் விரயமும் வேலையில் சுணக்கமும் ஏற்படலாம். ஆனாலும், எந்தப் பிரச்னையையும் முறியடிக்கும் வல்லமையைப் பெறுவீர்கள். குடும்பத்தில் வசதிகள் தொடரும். ஆடம்பர பொருட்கள் சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். சற்று சிரத்தை எடுத்தால் நிறைய சாதனைகள் செய்யலாம். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உத்யோகஸ்தர்கள், கடந்த காலம்போல் அனுகூலமான பலனை எதிர்பார்க்க முடியாது. வேலைப்பளு அதிகரிக்கும்.

பரிகாரம்: ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தைச் சொல்ல சொல்ல வடிவேலனின் அருளால் அனைத்து நன்மைகளும் நடக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: 15, 16 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by M.M.SENTHIL on Thu May 01, 2014 1:56 pm

ரிஷபம்

ரிஷபம்:அனைவரையும் நேர்மையால் கவர்ந்து இழுப்பவர்களே! பல்வேறு திருப்பங்களுடன் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறப்போகிறீர்கள். சிற்சில குழப்பங்கள் வந்தாலும் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். பொருளாதார வளம் அதிகரிக்கும். காரிய அனுகூலம் கிடைக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். தடைபட்டு வந்த திருமண சுப நிகழ்ச்சி கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள்.

குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் அனைத்தும் படிப்படியாக மறையும். தம்பதிகளிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிரிந்தி ருக்கும் குடும்பம் ஒன்று சேரும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமை மேம்படும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம் கிடைக்கும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். படித்து, வேலை தேடித் தவிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு கடந்த காலத்தை விட சிறப்பான காலகட்டமாக இந்த மாதம் அமையும்.

பரிகாரம்: பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியே நமஹ’ என்ற மந்திரத்தைச் சொல்லுங்கள். லக்ஷ்மியின் அருளால் தங்கு தடையின்றி காரியங்கள் நடந்தேறும்.

சந்திராஷ்டம தினங்கள்: 17, 18 ஆகிய நாட்களில் ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போடாதீர்கள்.

அதிர்ஷ்ட நாட்கள்: 3, 4..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by M.M.SENTHIL on Thu May 01, 2014 1:57 pm

மிதுனம்

எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பவர்களே! அனைத்து நன்மைகளும் கிடைக்கும். பல துறைகளில் முன்னேற்றம் அடைவீர்கள். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் சிறப்படையும். முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் அதை முறியடிக்க ஐந்தில் இருக்கும் சனி உதவுவார். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். சுப நிகழ்ச்சிகளில் தடை ஏற்பட்டாலும் குரு 12ம் ஸ்தானத்தில் உலவுவதால் தெய்வ நம்பிக்கையால் அனைத்தும் சுபமாகும். உத்யோகஸ்தர்கள் தொடர்ந்து பொறுப்புடன் உழைத்தால் செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரணையுடன் நடந்து கொள்ளவும்.

உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பார்கள். பணவரவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். அதேநேரம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்டதூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படலாம். கலைஞர்கள் சீரான திசையில் செல்வார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். ஆனாலும், அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணப்புழக்கம் கடந்த காலத்தைவிட அதிகமாகவே இருக்கும்.

பரிகாரம்: சக்தியை வழிபாடு செய்யுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தைச் சொல்லுதல் நலம் பயக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 19, 20 ஆகிய தேதிகளில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம்.

அதிர்ஷ்ட நாட்கள்: 5, 6..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by M.M.SENTHIL on Thu May 01, 2014 1:57 pm

கடகம்

இயல்பிலேயே தலைமை தாங்கும் பண்புடையவர்களே! உங்கள் பராக்கிரமம் வெளிப்படும். அரசு காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள், மருத்துவர்கள், ரசாயனத் துறையினர், விஞ்ஞானிகள் ஆகியோர் தங்கள் துறைகளில் வளர்ச்சி காண்பார்கள். நிலம், வீடு, மனை, வாகன சேர்க்கையோ அல்லது அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.மாணவமணிகள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். கலைத்துறையினரின் எண்ணங்கள் ஈடேறும். சமுதாய நலப் பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவியும்.

வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் தரும். பணநடமாட்டம் சீராக இருந்து வரும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை சிலருக்கு ஏற்படும். தம்பதியருக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். கூட்டுத் தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் அதிகம் லாபம் பெறுவார்கள். பிள்ளைகளால் சந்தோஷமுண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும். தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது அவசியமாகும். தெற்கு, தென் கிழக்கு திசைகள் அனுகூலம் தரும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் சசிசேகராய நமஹ’ என்ற மந்திரத்தைச் சொல்வதால் நினைத்த காரியங்கள் இனிதே நடந்தேறும்.

சந்திராஷ்டம தினங்கள்: 21, 22 ஆகிய தேதிகளில் இரவுப் பயணத்தின்போது உடைமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நாட்கள்: 7, 8..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by M.M.SENTHIL on Thu May 01, 2014 1:58 pm

சிம்மம்

எடுத்த காரியத்தில் உறுதியாக இருப்பவர்களே! தைரியமாக உங்கள் வேலைகளை செய்வீர்கள். உஷ்ண சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம்; கவனம் தேவை. தம்பதியரிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் மனைவி வழி உறவினர்களுடன் மிகுந்த எச்சரிக்கையுடன் பேசுங்கள். முயற்சிகளில் தடைகள் வந்தாலும் குரு பகவானின் வல்லமையால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும், வீண் அலைச்சலும் ஏற்படலாம்.

தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறுசிறு வாக்குவாதங்கள் வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். எனினும் வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களின் ஆலோசனையின்பேரில் செய்வீர்கள். பிரச்னைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். மாணவக் கண்மணிகளுக்கு படிப்பில் நிதானமும் கவனமும் தேவை.

பரிகாரம்: சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது நன்மையைத் தரும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் சந்திரசேகர ருத்ராய நமஹ’ என்ற மந்திரத்தைச் சொல்வதால் நன்மைகள் நடந்தேறும்.

சந்திராஷ்டம தினங்கள்: 23, 24, 25 ஆகிய தேதிகளில் வீண் வாக்குவாதத்தை தவிர்த்தல் நல்லது.

அதிர்ஷ்ட நாட்கள்: 9, 10, 11..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by M.M.SENTHIL on Thu May 01, 2014 1:58 pm

கன்னி

உழைப்பின் மேன்மையை உலகிற்கு சொல்பவர்களே! பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் உன்னத நிலையை அடைவீர்கள். குடும்பத்தில் முன்னேற்றமும், சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பணவிரயமும் காரியத் தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்னையையும் முறியடிக்கும் வல் லமை உங்களுக்கு வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வெகு எளிதாக அடைவீர்கள். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும், அவற்றைத் திறமையாக சமாளிப்பதோடு, சில அனுகூலமான நிகழ்வுகளும் ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாகச் செய்து முடிக்கலாம்.

உத்யோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்யேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். ஆனாலும், பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள் ஆலோசனைகளில் ஈடுபடலாம். வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயர், துர்க்கையை வழிபடுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் நமோ வெங்கடேசாய நமஹ’ என்ற மந்திரத்தைச் சொல்வதால் ஸ்ரீவெங்கடேசரின் அருள் கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 26, 27 ஆகிய தேதிகளில் வாகனங்களை மெதுவாக இயக்கவும்.

அதிர்ஷ்ட நாட்கள்: 12, 13..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by M.M.SENTHIL on Thu May 01, 2014 1:59 pm

துலாம்

யாரையும் எளிதில் நம்பிவிடாமல் ஆராய்ந்து பேசுபவர்களே! வாழ்க்கை வளம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் கூடும். வேலை செய்யும் இடத்தில் வரும் பிரச்னைகளை உடன் வேலை செய்வோர் ஆதரவால் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் அன்பு நீடிக்கும். உறவினர் வகையிலும் கூட மனஸ்தாபம் உருவாகலாம். அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம்.

சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம். தீவிர முயற்சிகளின் பேரில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மைகள் பல நடக்கும். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்; கூடவே அலைச்சலும் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம்.

பரிகாரம்: நவகிரக ராகு, சனிக்கு விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் நவக்ரஹதேவதாப்யோ நமஹ’ என்ற நவகிரக மந்திரத்தைச் சொல்வதால் அனைத்தும் நன்மையாகவே நடக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29 ஆகிய நாட்களில் வாகனத்தில் எரிபொருள் இருக்கிறதா, ஏதேனும் அலுவலக வேலையை செய்வதற்கு மறந்து விட்டோமா என்று யோசிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நாட்கள்: 15, 16..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by M.M.SENTHIL on Thu May 01, 2014 1:59 pm

விருச்சிகம்

எதிலும் நேர்படப் பேசுபவர்களே! வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும். பல்வேறு முன்னேற்றங்களை பெறலாம். உங்கள் முயற்சிகளில் வெற்றியையும், பொருளாதார வளத்தையும் பதினொன்றாம் இடத்தில் இருக்கும் ராகு அள்ளித் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்னைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும்; அவர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும். மாதக் கடைசியில் புதிய சொத்துகள் வாங்க நேரம் கைகூடி வரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆனால், அதற்காக சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம். உத்யோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர். வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம்.

பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு உதவுங்கள்; கோபத்தை விலக்குங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் வடிவேலவா போற்றி போற்றி’ என்ற மந்திரம் நலம் பயக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 5, 30, 31 ஆகிய தேதிகளில் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். வேலைகளை தள்ளிப்போடாதீர்கள்.

அதிர்ஷ்ட நாட்கள்: 17, 18, 19..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by M.M.SENTHIL on Thu May 01, 2014 2:01 pm

தனுசு

எதிலும் தெய்வ நம்பிக்கையுடன் போராடுபவர்களே! குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும் என்றாலும் சிற்சில பிரச்னைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். அதேபோல் உறவினர் வகையிலும் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும், வருமானத்தில் எந்தக் குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.

சிலர் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திக்கலாம். சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும், உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால், பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழும் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம்: திருமுருகனை வழிபடுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீகுருப்யோ நமஹ’ என்ற குரு மந்திரத்தைச் சொல்ல சொல்ல குருமார்களின் அருளால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 6, 7.

அதிர்ஷ்ட நாட்கள்: 20, 21 ஆகிய தேதிகளில் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.
.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by M.M.SENTHIL on Thu May 01, 2014 2:01 pm

மகரம்

அடுத்தவரின் உணர்வுகளை உள்வாங்கி யோசிப்பவர்களே! பலவிதமான பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை பொறுத்தவரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு உத்யோகம், தொழில், வியாபார விஷயமாக ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப் புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை கூடும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

குடும்பத்தில் தம்பதியரிடையே இருந்து வந்த பிரச்னைகள் சுமுகமாகும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும்போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்யோன்யமாக இருப்பர். உத்யோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

பரிகாரம்: அய்யனார் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீபிரம்ம விஷ்ணு ஸரஸ்வத்யை நமஹ’ என்ற மந்திரத்தைச் சொல்வதால் அனைத்து காரியங்களிலும் வெற்றிகள் குவியும்.

சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10 ஆகிய தேதிகளில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம்.

அதிர்ஷ்ட நாட்கள்: 22, 23, 24..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by M.M.SENTHIL on Thu May 01, 2014 2:02 pm

கும்பம்

எதிலும் முழுமையான ஈடுபாடு காட்டி உழைப்பவர்களே! மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரணையாக நடந்து கொள்வர். தடைகளை முறியடித்து காரியத்தில் வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள். கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும்.

குழந்தை பாக்யம் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பொதுவாக உங்கள் உடல்நலன் சிறப்பாக இருக்கும். எப்போதாவது சளி மற்றும் மார்புத் தொல்லை வரலாம், கவனம் தேவை. உத்யோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நிறைவேறும். உடன் பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும் உண்டு. சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.

பரிகாரம்: திருமாலையும், மஹாலக்ஷ்மியையும் வழிபடுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் கைலாசவாசினே நமஹ’ என்ற மந்திரம் நன்மை தரும்

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12 ஆகிய தேதிகளில் இரவு நேரத்தில் வாகனத்தை சுயமாக இயக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நாட்கள்: 1, 2, 28..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by M.M.SENTHIL on Thu May 01, 2014 2:02 pm

மீனம்

நட்புக்காக உதவிகள் பல புரிபவர்களே! வீடு, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் தடை என்று இருந்துவந்த நிலை மாறும். தாயாருடன், தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதுப்பிக்கப்பட்ட உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மையும் தைரியமும் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் நல்ல உயர்கல்விக்கான உறுதியான அடித்தளம் அமையும். பிள்ளைகள் வளர்ப்பில் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன்-மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும், கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும்போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்கச் செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம்.

பரிகாரம்: லக்ஷ்மி பூஜை செய்யுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ’ என்ற மந்திரம் சிறப்புகள் தரும்.

சந்திராஷ்டம தினங்கள்: 13, 14 ஆகிய தேதிகளில் எதற்கும் முன்பணம் கொடுக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நாட்கள்: 29, 30, 31..

நன்றி: http://astrology.dinakaran.com/
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by கிருஷ்ணா on Thu May 01, 2014 3:20 pm

பதிவுக்கு நன்றி செந்தில்   
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 218

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by krishnaamma on Thu May 08, 2014 7:48 pm

பதிவுக்கு நன்றி செந்தில் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by ஈகரையன் on Thu May 08, 2014 7:57 pm

முதலில் பகிர்வுக்கு நன்றி.

இதை படிக்காமல் இருந்தால் எந்த விதமான எதிர்பார்ப்பும் இருக்காது. படித்த பின்னர் ?

அருமையிருக்கு இப்பிடியே போட்டு கொழப்பி வுடுங்க செந்தில் அண்ணே!  அருமையிருக்கு
avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by விஸ்வாஜீ on Thu May 08, 2014 8:01 pm

நன்றி நண்பரே
நான் இதுவரை ராசி பலன் படித்ததில்லை, உங்கள் மூலமாக
இப்போதுதான் முதல்முறையாக படிக்கிறேன். அனைவருக்கும் நல்ல
செய்தியாக உள்ளது.
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1334
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by M.M.SENTHIL on Thu May 08, 2014 10:12 pm

ஈகரையன் wrote:[link="/t109898-topic#1062251"]முதலில் பகிர்வுக்கு நன்றி.

இதை படிக்காமல் இருந்தால் எந்த விதமான எதிர்பார்ப்பும் இருக்காது. படித்த பின்னர் ?

அருமையிருக்கு இப்பிடியே போட்டு கொழப்பி வுடுங்க செந்தில் அண்ணே!  அருமையிருக்கு


குழம்பி நிற்பருக்கு எதுவும் குழப்பமே.
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by ஜாஹீதாபானு on Fri May 09, 2014 4:09 pm

நான் ராசிபலன் நம்புவது இல்லை அய்யோ, நான் இல்லை avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29946
மதிப்பீடுகள் : 6929

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by krishnaamma on Fri May 09, 2014 6:37 pm

ஈகரையன் wrote:[link="/t109898-topic#1062251"]முதலில் பகிர்வுக்கு நன்றி.

இதை படிக்காமல் இருந்தால் எந்த விதமான எதிர்பார்ப்பும் இருக்காது. படித்த பின்னர் ?

அருமையிருக்கு இப்பிடியே போட்டு கொழப்பி வுடுங்க செந்தில் அண்ணே!  அருமையிருக்கு

சூப்பராக இருந்தால் நமக்குத்தான் என்று எடுத்துக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் யாருக்கோ என்று நினைத்து விட்டுவிடுங்கள். இது தான் என் பாலிசி புன்னகை
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by T.N.Balasubramanian on Fri May 09, 2014 6:48 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t109898p15-topic#1062451"]நான் ராசிபலன் நம்புவது இல்லை அய்யோ, நான் இல்லை 

ராசி பலன்கள் பொத்தம் பொதுவான பலன்களை கூறும் . சிலருக்கு சில சமயம் பொருந்தும் சிலருக்கு பொருந்தாது . பட்டும் படாத அறிவுரைகளே ஆக்ரமிக்கும் .

குஷ்வந்த் சிங் illustrated weekly இல் ஆசிரியராக இருந்த காலத்தே, ஜோசிய பகுதி அளித்து வந்த ஜோசியர் தவிர்க்க முடியா காரணங்களால் ஒரு மாதம் விடுப்பில் இருக்க , சிங் அவர்களே ஜோசியம் எழுதி வந்தார் . நல்ல வரவேற்பு. ரொம்பவும் சரியாக இருப்பதாக புகழ் உரைகள் .
விடுப்பில் இருந்த வந்த ஜோசியருக்கோ ஒரே ஆச்சர்யம் . எப்படி சிங் சமாளித்தார் என வினாவ , சிங் " கஷ்டம் ஒன்றும் இல்லை ,ரெண்டு மாதத்திற்கு முன் நீங்கள் போட்ட பதிவுகளையே சிறிது தேதிகள் மாற்றி ,ராசிகளை மாற்றி பதிவிட்டேன் .பொதுவான அறிவுரைகளை எழுதினேன் . நானும் தலை சிறந்த ஜோசியன் ஆகிவிட்டேன் " என்றார் .

ரமணியன் @ஜாஹீதாபானு
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20568
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

Re: மே மாத ராசி பலன்கள் - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by கிருஷ்ணா on Sat May 10, 2014 9:36 am

நல்லபலன் சொன்னதால் நம்புகிறேன்.  புன்னகை 
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 218

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum