ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 பழ.முத்துராமலிங்கம்

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அப்பம் கேட்ட அரங்கநாதர்

View previous topic View next topic Go down

அப்பம் கேட்ட அரங்கநாதர்

Post by சிவா on Sat May 03, 2014 3:57 pmஆழ்வார்களின் தீந்தமிழ்ப் பாசுரங்களால் பாடல் பெற்ற தலங்கள் பல உள்ளன. ‘காக்கும் கடவுளான திருமால்’ பள்ளி கொண்ட கோலத்தில் திருவரங்கத்தில் காட்சி தருகிறார். அங்கு தொடங்கி, நின்ற கோலத்தில் திருமலை திருப்பதி வரை காட்சி தந்து அருள்புரிகிறார்.

சூட்சும உலகத்தில் உள்ள பாற்கடல், வைகுந்தம் உட்பட நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் நின்றும், நடந்தும், கிடந்தும், அமர்ந்தும் பல்வேறு கோலங்களில் பெருமாள் காட்சி தருகிறார். ஐந்து தலை ஆதிசேஷன் குடை பிடிக்க, பாம்பு மெத்தையில் பள்ளி கொள்ளும் கோலத்திலும் பல்வேறு திருத்தலங்களில் காட்சி தந்து பேரருள் புரிகிறார்.

அவற்றில் ஒன்று தான் ‘திருப்பேர் நகர் எனும் கோவிலடி’.

கோவில் அமைவிடம்

காவிரியின் வடகரையில் உள்ள திருவையாற்றில் இருந்து மேற்கே திருக்காட்டுப்பள்ளி உள்ளது. இங்கிருந்து 10 கி.மீ தூரத்தில் கல்லணை செல்லும் சாலையில் உள்ளது கோவிலடி. திருச்சியில் இருந்து இந்த கோவிலுக்கு செல்வது எளிதாகும். திருச்சியில் இருந்து கல்லணை சென்று அங்கிருந்து திருவாரூர் சாலையில் திருக்காட்டுப்பள்ளிக்கு பயணிக்க வேண்டும். இதன் அருகில் கோவிலடி உள்ளது. இந்த திருத்தலம், தஞ்சை மாவட்டத்தில் வடமேற்கு எல்லையில் உள்ளது.

திருவரங்க நாதரைப் போலவே காவிரி – கொள்ளிடத்துக்கு இடையே பெருமாள் எழுந்தருளி இருக்கிறார். ஆனால் இங்கே மேற்கு நோக்கி காட்சி தருவது சிறப்பாகும். தாயார் சன்னிதி கிழக்கு நோக்கி உள்ளது.

திருக்கோவில் ஒரு மேட்டின் மீது உள்ளது. 20 படிகள் ஏறித்தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். படிகள் ஏறும் போதே நடுவில் கொடி மரம் உள்ளது. கோவிலின் அடிவாரத்தில் இந்த சிறிய ஊர் இருப்பதால் ‘கோவிலடி’ என்று பெயர் பெற்றது.

பஞ்ச அரங்கம் தலம்

பெருமாளின் ‘பஞ்ச அரங்க தலம்’ என்று சொல்லக்கூடிய ஐந்து ஆலயங்களில் இதுவும் ஒன்று.

1. ஆதி ரங்கம்–ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்) – ரங்கநாதர்
2. அப்பால ரங்கம்–திருப்பேர்நகர் (கோவிலடி) – அப்பால் ரங்கநாதர்
3. மத்திய ரங்கம்–ஸ்ரீ ரங்கம் – ரங்கநாதர்
4. சதுர்த்த ரங்கம்–கும்பகே£ணம் – சாரங்கபாணி
5. பஞ்ச ரங்கம்–இந்தளூர் (மயிலாடுதுறை) – பரிமள ரங்கநாதர்

இந்த பஞ்ச ரங்க வரிசையில் பார்த்தால் கோவிலடி ஸ்ரீ ரங்கத்திற்கும் முற்பட்டது என விளங்கும்.

கோவிலடியில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு ‘அப்பால் ரெங்கநாதர்’ என்றும் பெயர் உண்டு. இதற்கான காரணத்தை ஆச்சரியத்தோடு வினவினால், ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு ‘அப்பால்’ இருப்பதால் இப்பெயர் வந்ததாகக் கூறுகின்றனர்.

இந்திரன் வழிபட்டு சாபம் நீங்கிய தலம் என்பதால், இக்கோவில் விமானத்தின் பெயர் இந்திர விமானம். தீர்த்தத்தின் பெயர் இந்திர புஷ்கரணி. தாயாரின் பெயர் இந்திராதேவி எனும் கமலவல்லி ஆகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அப்பம் கேட்ட அரங்கநாதர்

Post by சிவா on Sat May 03, 2014 3:57 pm

தலவிருட்சம்

ஒரு காலத்தில் பலாசமரம் எனும் புரச மரக்காடாக இருந்த இடத்தில் இத்தலம் தோன்றியதால் தலவிருட்சம் பலாச மரமாகிறது. அழகிய செந்நிற பூக்கள் பூப்பதால் ‘எரிதழல் என்றும் காட்டுத்தீப் பூ’ என்றும் வழங்கப்படுகிறது. இதனால் இத்தலம் ‘பலாசவன ஷேத்திரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

அப்பக் குடத்தான்

இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் அப்பம் கேட்ட கதை தெரியுமா?

உபமன்யு என்னும் அரசன், எதற்கெடுத்தாலும் கோபப்படும் துர்வாச முனிவரின் சாபத்துக்கு ஆளானான். சாப விமோசனம் கேட்டு துர்வாசரிடம் வேண்டியபோது பலாச வனத்தில் உள்ள இத்திருக்கோவிலில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் சாப நிவர்த்தியாகும் என்று பரிகாரம் சொன்னார்.

எனவே மன்னன் இவ்வூரில் ஒரு அரண்மனை கட்டி தினமும் அன்னதானம் செய்து வந்தான்.

எதற்கும் ஒரு முடிவு வேண்டுமல்லவா? ஒருநாள் வைகுண்ட நாதனான பெருமாள் வயதான அந்தணர் வேடத்தில் வந்து உணவு கேட்டார். சமைத்திருந்த உணவெல்லாம் தீர்ந்து விட்ட நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் மன்னன் விழித்து உடனே, உலை வைத்து உணவினை மறுபடி தயாரிக்கச் சொன்னான்.

‘இவ்வாறு சமையல் செய்தால் அதிக நேரம் ஆகும், எனக்குப் பசிக்கிறது. எனவே உடனடியாக அப்பம் செய்து கொடு’ என்று சொன்னார் வயதான அந்தணர்.

எளிய முறையில் உடனே தயாரிக்கப்பட்டு குடம் நிறைய அப்பம் முதியவருக்குத் தரப்பட்டது. அவ்வேளையில் முதியவர் வேடத்திலிருந்த ஸ்ரீமத் நாராயணன் காட்சி தந்து, சாப விமோசனம் தந்தார். அன்றிலிருந்து அப்பம் தயாரிக்கப்பட்டு திருமாலுக்குப் படைக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த தலத்தின் பெருமாளுக்கு ‘அப்பக் குடத்தான்’ என்றும் சிறப்பு பெயர் உண்டு.

படையல்

திருவரங்கத்தில் வடை, காஞ்சி வரதராஜருக்கு இட்லி, திருமலை வேங்கடவனுக்கு லட்டு என்பது போல இக்கோவிலடி பெருமாளுக்கு அப்பம் சிறப்பு நிவேதனமாகப் படைக்கப்படு கிறது.

பள்ளி கொண்ட பெருமாளுக்கு அப்பம் எப்பொழுது படைக்கப்படுகிறது? என்று திருக்கோவில் பட்டாச்சாரியாரிடம் கேட்ட போது ஒரு பட்டியலையே தந்து அசத்திவிட்டார்.

பெருமாள் துயிலெழுந்தவுடன் பசும்பால், காலை வெண் பொங்கல், உச்சிப் பொழுதில் தயிர்சாதம், மாலை 5 மணி அளவில் இக்கோவிலில் பெருமாளுக்குப் பிடித்த அப்பமும், புளியோதரையும் படைக்கப்படுகிறது. இரவு சுத்தன்னமும், இளஞ்சூட்டில் காய்ச்சிய அரவணபால்.

இப்படியெல்லாம் ஏற்றுக் கொள்ளும் பெருமாள் எவ்வளவு சுகவாசி பாருங்கள். படுத்துக் கொண்டே நம்மைப் பாதுகாக்கும் பகவான் அல்லவா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அப்பம் கேட்ட அரங்கநாதர்

Post by சிவா on Sat May 03, 2014 3:58 pm

எம பயம் போக்கும் தலம்

இத்திருத்தலத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் தனது ஒரு கரத்தால் மார்க்கண்டேயருக்கு ஆசி கூறுகிறார். எனவே எம பயம் போக்கும் பெருமாளாக விளங்குகிறார். அவரது தலைமாட்டில் அப்பக்குடம் உள்ளது. இக்குடத்திற்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு அதன்மேல் தட்டில் வைத்து அப்பம் நிவேதனம் செய்யப்படுவது தற்போதைய வழக்கமாக உள்ளது.

திருக்கோவிலைச் சுற்றி வரும்போது வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் தும்பிக்கை ஆழ்வார் என்னும், சிறிய பிள்ளையார் கோவிலும் உள்ளது. சாபம் நீங்க இந்திரனுக்கு வழிகாட்டியதால் இவரை ‘வழிகாட்டி விநாயகர்’ ஆக வழிபடுகின்றனர்.

ஆழ்வார் பாடல்கள்

கையிலங்கு ஆழிசங்கன் கருமுகில் திருநிறத்தன்
பொய்யிலன் மெய்யன்தன் தாள் அடைவரேல் அடிமையாக்கும்
செய்யலர் கமலம் ஓங்கு செறிபொழில் தென்திருப்பேர்
பையரவணையான் நாமம் பரவிநான் உய்ந்தவாறே.

என்று திருமங்கை ஆழ்வாரும் மற்றும் பெரியாழ்வாரும், திருமழிசை ஆழ்வாரும், நம்மாழ்வாரும் பாடிப்பரவிய இத்திருத்தலம் 108 திவ்விய தேசங்களுள் 6–வதாக விளங்குகிறது.

நம்மாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்த தலம் இதுதான். அதன் பிறகு மோட்சம் சென்று விட்டார். எனவே இத்திருக்கோவில் அப்பக்குடத்தானை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் எனவும், சாப விமோசனம் கிடைக்கும் எனவும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

தற்போது திருப்பணிகள் நடைபெற்று, குடமுழுக்கு செய்ய வேண்டிய காலகட்டத்தில் உள்ளதால், பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. படத்தில் வரையப்பட்டுள்ள பள்ளி கொண்ட பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயணன் உற்சவருக்கும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ‘உனது கோவிலில் வேலைகள் பூர்த்தி பெற்று, திருக்குடமுழுக்கு விரைவில் நடைபெற வேண்டும்’ என்றும் பெருமாளைப் பிரார்த்தித்துக் கொண்டு வெளியேறுகிறோம்.

அன்பர்களும் ‘அப்பம் உண்ட பெருமாள்’ திருப்பணிகளில் பங்குகொண்டு சேவிக்கலாமே!.

[thanks] டாக்டர் ச. தமிழரசன், தஞ்சாவூர் [/thanks]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அப்பம் கேட்ட அரங்கநாதர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum