ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நீ எங்கே என் அன்பே: திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

நீ எங்கே என் அன்பே: திரை விமர்சனம்

Post by சிவா on Mon May 05, 2014 12:40 amபெயர் தெரியாத ஊர், மொழி அறியாத மக்கள் என்று அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத்திற்கு வந்திறங்கும் அனாமிகா (நயன்தாரா), அங்கு பணிபுரியும் தனது கணவர் அஜய் சுவாமிநாதனை (ஹர்ஷவர்தன் ரானே) கடந்த இரண்டு வாரங்க ளாகக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். முதலில் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத போலீஸ், அவளின் கணவரின் சாயலும் ‘பீப்பிள் பிளாசா’வில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப் பட்டுவரும் முக்கியக் குற்றவாளி யான தீவிரவாதி மிலன் தாம்ஜியின் சாயலும் ஒத்துப்போகவே இதைத் துருவ ஆரம்பிக்கிறது. விஷயம் பூதாகரமாகிறது.

இதற்கிடையில், ஹைதராபாத் தெருவில் தன்னந்தனியாக அலைந்து திரியும் அனாமிகாவிற்கு உதவி செய்கிறார் இன்ஸ்பெக்டர் சாரதி (வைபவ் ரெட்டி). அவள் தனது கணவனைக் கண்டுபிடிக்கிறாளா? குண்டுவெடிப்பிற்குக் காரணம் யார்? அவளின் கணவரும் தீவிரவாதியும் ஓரே ஆள்தானா? அனாமிகா தனது கணவருடன் மீண்டும் இணைகிறாளா - என்பது தான் கதை.

2012-ம் ஆண்டு இந்தியில் வெற்றி பெற்ற ‘கஹானி’ என்ற படத்தைத் தழுவி எடுக்கப் பட்ட இத்திரைப் படத்தை அப்படியே ‘காப்பி-பேஸ்ட்’ செய்திருந்தாலே தேறியிருக்கும். ஆனால் புதுமையைச் சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு கதையைக் கந்தாலாக்கியிருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா.

கஹானியின் கதாநாயகியான வித்யா பாலன் அப்பாவி கர்ப்பிணிப் பெண்ணாகக் கொல்கத்தா வில் அலைந்து திரியும்போது ஏற்படும் பரிதாப உணர்வு, காலேஜ் பெண்போல் ஃபேன்ஸி பையைத் தூக்கிக் கொண்டு பட்டையாகக் கண் மையைத் தீட்டிக்கொண்டு அடிக்கடி அழும் நயன்தாராவிடம் ஏற்படவில்லை. சமயத்தில், டிவி சீரியல் ஹீரோயின்களின் ஞாபகம் வந்து போகிறது. தமிழ்த் திரைப்படங்களில் பெண் தெய்வத்தையும் கதாநாயகியையும் ஒப்பிட்டுக் காட்டும் காட்சியை ஒருமுறை காட்டினாலே, ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால், நயன்தாராவைக் காட்டும் காட்சிகளுக்கு நிகராகக் ‘காளி’யைக் காட்டுவதற்கான அவசியம் என்னவென்று புரியவில்லை.

அனாமிகாவின் இயல்பில் ஈர்க்கப்படும் இன்ஸ்பெக்டர் சாரதி அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதும், சாரதிக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வாங்கிப் பார்த்துப் பெண்களின் மனம் பற்றி அனாமிகா கொடுக்கும் லெக்சரும் யதார்த்தத்தை விட்டுத் தள்ளியே நிற்கின்றன.

ஹோட்டல் அறையில் வேலை செய்யும் சிறுவனிடம் ஆங்கிலத் தில் பேசச் சொல்வதும், அனாமிகா வின் மொழியே புரியாத இமாம், அவள் கண்ணீர் வழியப் பேசும் வசனத்திற்கு உருகி உதவி செய்வதுமாக லாஜிக்கே இல்லாமல் மேஜிக் செய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர்.

‘கஹானி’யில் தன் கணவனைத் தேடும்போது அவள் சந்திக்கும் நபர்களின் மத அடையாளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஆனால், இப்படத்தில் அனாமிகா சந்திக்கும் பெரும்பான்மை யான நபர்களை ஏன் இஸ்லாமியர் களாவே காட்ட வேண்டும்? இயக்குநருக்கே வெளிச்சம்.

அனாமிகாவின் ‘சுப்ரபாதம்’ ரிங் டோன், மசூதியின் ஓலி, பின் காளியின் தெய்வீகக் காட்சி என திரும்ப திரும்ப வரும் காட்சிகளில் சலிப்படைந்து படத்தின் முதல் பாதியிலே தியேட்டரை விட்டுக் கிளம்பிவிடுகிறார்கள் ரசிகர்கள். முதல் பாதியின் ஆமை வேகமும் பொறுமையைச் சோதிக்கிறது.

தெலுங்கில் ‘ஆனந்த்’, ‘ஹேப்பி டேஸ்’, ‘லைஃப் இஸ் ப்யூடிஃபுல்’ என ‘மென்மையான’ திரைப்படங்களை இயக்கிய சேகர் கம்முலாவுடன் கூட்டணியில் இருக்கும் எடிட்டர் மார்தாண்ட் கே. வெங்கடேஷ் இந்த விறுவிறுப்பான திரைக் கதைக்கும் அதே பாணியைப் பின்பற்றியிருப்பது படத்திற்குப் பின்னடைவு. இதனைச் சற்றே சமாளித்தி ருப்பது விஜய் சி. குமாரின் யதார்த்தமான ஒளிப்பதிவும் எம்.எம். கீராவாணியின் உயிரோட்டமுள்ள பின்னணி இசையும்தான்.

‘கஹானி’ படத்தில் வசனங்கள் சிறப்பாக அமைந்திருந்தன. தமிழில் சில இடங்களில் பரவாயில்லை. ஆனால் தெலுங்கு, தமிழ், இந்தி என்று மாறும் வசனங்களைக் கேட்கும்போது பொறுமை சோதிக்கப்படுகிறது. போலீஸ் அதிகாரி அனாமிகாவிடம் தவறாக நடக்க முயற்சிக்கும் வசனங்களும், புலனாய்வு அதிகாரி, “இப்படி டிரஸ் போட்டா உன்ன ஏன் கூப்பிட மாட்டாங்க” என்று சொல்வதும் எரிச்சலூட்டுகின்றன. அதற்கு அனாமிகா கொடுக்கும் பதிலடி ஆறுதல் அளிக்கிறது.

‘கஹானி’யில் நாயகியின் பாத்திர வார்ப்பைக் கண்டவர்களுக்கு தமிழில் பாத்திர வார்ப்பு பலவீனமானதாகவே தெரியும். என்றாலும் நயன்தாரா தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். பசுபதியின் நடிப்பும் அப்படியே. வைபவ் படம் முழுவதும் தூக்கத் தில் நடப்பவர்போல நடமாடுகிறார்.

தனியாகப் பார்த்தால் வித்தியாசமான கதை, திருப்பங்கள் கொண்ட திரைக்கதை, நல்ல நடிப்பு, இசை, ஒளிப்பதிவு ஆகிய அம்சங்களைப் பாராட்டலாம். ஆனால் அருமையான திரைக்கதை கையில் கிடைத்தும் அதை நீர்த்துப்போகச் செய்திருப்பதை எப்படிப் பாராட்ட முடியும்?

[thanks] தி இந்து [/thanks]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீ எங்கே என் அன்பே: திரை விமர்சனம்

Post by மாணிக்கம் நடேசன் on Mon May 05, 2014 8:02 am

மாமா அங்கள், நீங்க எங்க அக்கா நெனப்புல தானே இப்படி ஒரு தலைப்புல போட்டிருக்கீங்க. எங்க அக்கா இந்த நயன்தாராவ விட ரொம்ப நல்லவங்க, குணத்தில இமயம் போல சிறந்தவங்க.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum