ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 ayyasamy ram

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 பழ.முத்துராமலிங்கம்

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மக்கள் அச்சம்... கேரளாவில் மீன் விற்பனை சரிவோ... சரிவு!
 பழ.முத்துராமலிங்கம்

ஏமனை ரத்த சகதியாக்கும் சவுதி - தாக்குதலில் அப்பாவி மக்கள் உடல் சிதறி பலி
 பழ.முத்துராமலிங்கம்

எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
 T.N.Balasubramanian

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
 T.N.Balasubramanian

புதியவர் --சந்தியா M .
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

பால்வெளி மண்டலத்தில் புதிய கருத்துளை: 80 கோடி மடங்கு பெரிய அளவில் உள்ளதாக கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

துப்பாக்கிகளின் காலம்
 Meeran

பதினைந்தே நாள்களில் அறுவடை செய்யக்கூடிய அசோலாவை உற்பத்தி செய்வது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இந்து கலாச்சாரம்
 Meeran

ஏழாம் உலகம் ????ஜெயமோகன்
 Meeran

கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
 பழ.முத்துராமலிங்கம்

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
 ayyasamy ram

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 sandhiya m

தோற்று போனால் வெற்றி கிடைக்குமா ?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 
SK
 
ajaydreams
 

Admins Online

வரதட்சணை ஒழிப்புச் சட்டம்

View previous topic View next topic Go down

வரதட்சணை ஒழிப்புச் சட்டம்

Post by சிவா on Thu May 08, 2014 10:03 amஇந்தியப் பெண்கள் சிலரின் வாழ்வில் திருமணம் என்பது ஒரு எட்டாக்கனியாகவே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது வரதட்சணை என்ற அரக்கன்தான். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சமுதாயத்தில் புரையோடியிருந்த வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கும் வகையில், பெண்களுக்குச் சொத்து உரிமை தர அன்றைய அரசு முடிவெடுத்தது. ‘இந்து வாரிசுரிமை சட்டம் 1956’ இயற்றப்பட்ட போது பெண்களுக்கான சொத்துரிமை ஓரளவுக்குக் கொடுக்கப்பட்டது.

இருப்பினும், இன்று வரை வரதட்சணை கொடுமையால் பெண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். பெண்கள் அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் வரதட்சணையை ஒழிப்பதற்கான சிறப்புச் சட்டம் உருவாக்க குரல் எழுப்பியதின் அடிப்படையில், 1961ல் வரதட்சணை ஒழிப்புச் சட்டம் பல பரிசீலனைகளையும் விவாதங்களையும் தாண்டி இயற்றப்பட்டது. இச்சட்டத்துக்கு இருமுறை சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியப் பெண்களின் நிலை குறித்து விவாதிக்க ஏற்படுத்தப்பட்ட குழு, ‘படித்த இந்திய இளைஞர்கள் வரதட்சணை வாங்குவதை ஒரு அவமானமாகக் கருதாமல், வெட்கமே இல்லாமல் அதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது எந்தவிதத்திலும் நன்மை பயப்பதில்லை’ என்று தெரிவித்தது.

வரதட்சணை என்ற வார்த்தை எந்த ஒரு பொருளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ திருமண பந்தத்தில் ஈடுபடும் ஒரு தரப்பினரிடமிருந்து மற்றொரு தரப்பினருக்கு கொடுக்கப்படுவது, ஒரு தரப்பினரின் பெற்றோரோ, வேறு நபரோ மறுதரப்பினருக்கு திருமணத்தின் போதோ, திருமணம் முடிந்த பின்னரோ கொடுப்பது என்று இச்சட்டத்தின் படி கூறப்படுகிறது. இஸ்லாமிய திருமணத்தின் போது பெண்களுக்கு கொடுக்கப்படும் மெஹர் வரதட்சணை ஆகாது.

வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமே. இதற்கு 5 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை கொடுக்கப்படும். ரூ. 15 ஆயிரம் அல்லது வரதட்சணையாக பெறப்பட்ட பணமோ, பொருளோ அதற்கான மதிப்பீடு - இவற்றில் எது அதிகமோ அது அபராதமாகும். நீதிமன்றம் 5ஆண்டுகளுக்குக் குறைவாக தண்டனை கொடுக்கும் பட்சத்தில், அதற்கான காரணங்களை தீர்ப்பில் தெளிவாக விவரிப்பது அவசியம் என்றும் இச்சட்டம் வலியுறுத்துகிறது.

திருமணத்தின்போது எந்தவித கட்டாயத்தாலோ, வற்புறுத்தலாலோ இல்லாமல், விருப்பத்துடன் கொடுக்கக்கூடிய ஆடை ஆபரணங்கள் போன்றவை - அவரவர் திருமண வழக்கப்படி கொடுக்கக்கூடிய பொருட்கள் வரதட்சணையாகக் கருதப்பட மாட்டாது.

உற்றார், உறவினர் அவரவர் தகுதியின் அடிப்படையில் விருப்பத்துடன் பரிசாக கொடுக்கும் பொருட்கள் வரதட்சணை ஆகாது. திருமணத்தின்போதோ, திருமணத்துக்குப் பிறகோ எந்தவித கட்டாயமும் இல்லாமல் பெண்ணின் பெற்றோரோ, உற்றார், உறவினரோ விருப்பத்தோடு கொடுக்கும் எந்த பொருளும் சீதனமே ஆகும். அப்பொருளுக்கு அந்தப் பெண்ணே முழு உரிமையாளராகிறார்.

ஒரு மணமகனுக்கு அவரவர் திருமண வழக்கப்படி எந்தவித வற்புறுத்தலோ, கட்டாயமோ இல்லாமல் மணமகள் வீட்டாரால் கொடுக்கப்படும் பரிசுப்பொருட்கள் வரதட்சணையாகாது. வரதட்சணை கோருவதே குற்றம்! எந்த ஒரு நபரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பெற்றோரிடமோ, காப்பாளரிடமிருந்தோ, உற்றார், உறவினரிடமிருந்தோ வரதட்சணை கோரி கட்டாயப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமே. இந்தக் குற்றத்துக்கு குறைந்தபட்சம் 6 மாதத்திலிருந்து 2 ஆண்டுகள் வரையிலும், அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் அபராதத்துடன் கூடிய தண்டனையாகக் கொடுக்கப்படும். வரதட்சணை குறித்த விளம்பரத்துக்கான தடைஎந்த ஒரு நபரும் நாளிதழ், பத்திரிகை அல்லது வேறு ஊடகங்கள் வாயிலாக தன் சொத்திலோ, தொழிலிலோ பங்காகவோ, பணமாகவோ தன்னுடைய மகனுக்கோ, மகளுக்கோ திருமணத்துக்காக தருவதாக வெளியிடுவது குற்றமாகும்.

இவ்விளம்பரத்தை அச்சிடுவதோ, பதிப்பிடுவதோ, விநியோகிப்பதோ தண்டனைக்குரிய குற்றமே. இதற்கு 6 மாதத்திலிருந்து 5 ஆண்டுகள் வரை, அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் அபராதத்துடன் கூடிய தண்டனை கொடுக்கப்படும். வரதட்சணை கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் எவ்வித ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டாலும், அதுவும் சட்டப்படி செல்லாத ஒரு ஒப்பந்தமாகவே கருதப்படும்.

திருமணத்தின்போது மணமகளின் சார்பாக வேறொரு நபர் திருமணத்துக்கு முன்னரோ, பின்னரோ அவளுக்குச் சேரவேண்டிய பொருளை (அசையும் மற்றும் அசையாச் சொத்துகள்) பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், அவ்வாறு பெற்றுக்கொண்டதிலிருந்து 3 மாதங்களுக்குள் அந்த மணமகளிடம் ஒப்படைப்பது அவசியம்.

அந்தப் பெண்ணுக்கு ஒருவேளை மரணம் சம்பவிக்கும் பட்சத்தில், அவளுடைய வாரிசுதாரர்கள் அதனைப் பெற்றுக்கொள்ள உரிமை உண்டு. ஒரு வேளை அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் மரணம் சம்பவிப்பின், அவளுக்கு குழந்தை இல்லாமல் இருப்பின், அவளுடைய பெற்றோரிடமோ, குழந்தை இருப்பின் அவர்களிடமோ, காப்பாளரிடமோ ஒப்படைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு உரியவரிடம் உரிய நேரத்தில் பொருளை கொடுக்காத பட்சத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்களிலிருந்து 2 ஆண்டுகள் வரை அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் அபராதத்துடன் கூடிய தண்டனை கொடுக்கப்படும். இந்தத் தண்டனையுடன், நீதிமன்றம் அந்தப் பொருளை குறித்த நேரத்துக்குள் உரியவருக்கோ, அவரது வாரிசுக்கோ திருப்பிக் கொடுக்கவோ அல்லது அதற்கு ஈடான மதிப்பை அபராதமாக பெற்று கொடுப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கவோ சட்டம் வழிவகை செய்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வரதட்சணை ஒழிப்புச் சட்டம்

Post by சிவா on Thu May 08, 2014 10:04 amவரதட்சணை வழக்குகள்

வரதட்சணை வழக்குகளை முதன்மை குற்றவியல் நீதிபதி அல்லது மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்டிரேட் அந்தஸ்திலுள்ள நீதிபதி விசாரிக்க சட்டம் வழிவகை செய்துள்ளது. நீதிமன்றம் தன்னிச்சையாக விவரம் அறிந்தோ, காவல் துறையின் அறிக்கை மூலமாகவோ இவ்வாறான வழக்கை ஏற்றுக்கொள்ளலாம். பாதிக்கப்பட்ட நபரோ, அவரது பெற்றோரோ, உறவினரோ, விவரம் அறிந்த சமூகநல அமைப்போ வழக்கு தாக்கல் செய்யலாம். இவ்வாறான வழக்குகளில் நீதிமன்ற முன்னறிவிப்பு இல்லாமலே காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்ய சட்டம் வழிவகை செய்துள்ளது. இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரே தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் நிரூபணம் செய்ய அவசியம் இல்லை.

வரதட்சணை தடுப்பு அலுவலர் கடமைகள்மாநில அரசுகள் இச்சட்டத்தின் கீழ்வரதட்சணை தடுப்பு அலுவலர்களை நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவர்களின் பணி...

இச்சட்டத்தினை முறையாக அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்வது...

வரதட்சணை கொடுப்பதையோ, வாங்குவதையோ, அதற்காகத் தூண்டுவதையோ தடுக்க முயற்சிகள் மேற்கொள்வது...அவர்கள் பார்வைக்கு வரும் வரதட்சணை கொடுமை குற்றத்துக்கான போதிய ஆதாரங்களை திரட்டுவது... மாநில அரசாங்கம் கொடுக்கும் கூடுதல் பொறுப்புகளையும் திறம்படச் செயல்படுத்துவது...மாநில அரசு வரதட்சணை ஒழிப்பு அலுவலரின் திறமையான செயல்பாட்டுக்காக ஆலோசனை குழு அமைக்கலாம். அது 5 சமூக நல ஆர்வலர்களைக் கொண்ட குழுவாக செயல்படும். ஐவரில் குறைந்தபட்சம் இருவர் பெண்ணாக இருப்பது அவசியம்.

பெண்களை வரதட்சணை கொடுமையிலிருந்து தொடர்ந்து காப்பதற்காக மேற்கூறிய சட்டம் மட்டுமின்றி, இந்திய தண்டனை சட்டமும் திருத்தம் செய்யப்பட்டு 498ஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. இப்பிரிவின்படி பெண்ணுக்கு கணவராலோ, அவருடைய குடும்பத்தாராலோ உடலளவிலோ மனதளவிலோ கொடுமை அல்லது வரதட்சணை அடிப்படையில் வன்கொடுமை நேரிடும் போதும் அது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 3 ஆண்டு கள் வரை சிறைத்தண்டனையோடு அபராதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரதட்சணை கோரி வன்கொடுமைக்கு ஆட்படுத்தப்படும் பெண்ணை தற்கொலைக்குத் தூண்டுவதோ, அவரின் உடல்நலத்துக்கோ, மனநலத்துக்கோ கேடு விளைவிக்கும் செயலோ, வரதட்சணை கேட்டு அந்த பெண்ணையோ, அவரைச் சார்ந்தவர்களையோ துன்புறுத்துதலோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

உதாரணமாக... ஒரு பெண்ணின் திருமணத்தின்போது கொடுத்த சீதனப்பொருட்களை குறை கூறி பேசுவதனால், அந்தப் பெண் மனம் பெரிதளவில் பாதிக்கப்படுவதுகூட இந்தச் சட்ட விதியின் கீழ் குற்றமாகும்.

வரதட்சணை மரணங்கள் தொடர்ந்து நடைபெற்றதால் இந்திய தண்டனைச் சட்டத்தில் 304பி என்ற புதிய பிரிவு இயற்றப்பட்டது. ஒரு பெண்ணின் மரணம் திருமணம் நடந்த 7 ஆண்டுகளுக்குள் துர்மரணமாக - அதாவது, உடல் காயத்தாலோ, உடல் எரிக்கப்பட்டோ அல்லது சாதாரண மரணத்துக்குப் புறம்பான ஒன்றாகவோ இருப்பின், அது வரதட்சணை மரணமாக கருதப்படும். வரதட்சணைக்காக கணவராலோ, அவர் குடும்பத்தாராலோ கொடுமைப்படுத்தப்பட்டதால் மரணம் சம்பவிக்கும் பட்சத்தில் அது தற்கொலையாக இருப்பினும், அது இந்தப் பிரிவின் கீழ் வரதட்சணை மரணமாக கருதப்படும். மேற்கூறிய குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகளிலிருந்து அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வரதட்சணை ஒழிப்புச் சட்டம்

Post by சிவா on Thu May 08, 2014 10:04 am

State of Punjab Vs Kirpal Singh

ஒரு பெண்ணின் கணவரின் தாயாரும் சகோதரியும் அந்தப் பெண், பெண் குழந்தையை ஈன்றதாலும், குறைந்த வரதட்சணை கொண்டு வந்ததாலும் மேற்கொண்ட செயல்கள் அவளை தற்கொலை செய்ய தூண்டியது. அதனால் அந்தப் பெண் மரணமடைந்தார். இவ்வாறான மரணமும் வரதட்சணை மரணம் என்றே எடுத்துக்கொள்ளப்பட்டு, தண்டனை கொடுக்கப்பட்டது.

State of Punjab Vs Iqbal Singh

ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பெண், 3 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். திருமணமானது முதலே, வரதட்சணை கொடுமை இருந்தது. காவல் துறையில் புகாரும் கொடுத்தார். கணவர், தன் நடத்தையை திருத்திக் கொள்வதாக உறுதியளித்ததால், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்தார். இருப்பினும் கணவரிடம் எந்த மாற்றமும் ஏற்படாததால் அந்தப் பெண் இவ்வாறான முடிவுக்குத் தள்ளப்பட்டார். தற்கொலை செய்திருப்பினும் இம்மரணத்தை வரதட்சணை மரணம் என்று எடுத்துக்கொண்டு கணவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

Baldev Krishan Vs State of Punjab

ஒரு இளம் மனைவிக்கு நெருப்புக் காயங்களால் மரணம் ஏற்பட்டு, சமையலறையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவளுடன் அந்த வீட்டில் வசித்து வந்த அவளுடைய கணவர் அந்த மரணத்துக்கு எந்தவிதமான சரியான விளக்கமும் கொடுக்க இயலாததால், சூழ்நிலை சாட்சியால் வரதட்சணை மரணம் என்று நிரூபிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் கணவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

Shanthi Vs State of Haryana

வரதட்சணை கொடுமை மற்றும் மரணத்துக்காக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் இ.பி.கோ 304பி பிரிவின் கீழ் விடுதலை பெற்றாலும், இந்திய தண்டனைச் சட்டம் 498ஏ பிரிவின் கீழ் தண்டனை கொடுப்பதில் எந்தவிதமான தடையும் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

Vidya Devi vs State Of Haryana

திருமணத்தின் முன்னரோ, திருமண வேளையிலோ வலியுறுத்தப்படும் வரதட்சணை மட்டுமன்றி, திருமணம் முடிந்து வெகுநாட்கள் சென்றபிறகும் பொருள் கேட்டு துன்புறுத்துவதும் வரதட்சணை கொடுமையில் அடங்கும் என்று இவ்வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வரதட்சணை என்ற சமூக அவலத்தை சட்டத்துறையும் காவல்துறையும் மட்டுமே இரும்புக் கரங்களால் ஒழித்துவிட முடியும் என்பது பகல் கனவு. இந்தச் சமுதாயம் ஒன்றிணைந்து இந்த அவலத்திலிருந்து விடுபட காவல் துறைக்கும் சட்டத்துறைக்கும் தன் உதவிகளை நல்கினால் மட்டுமே வரதட்சணை இல்லாத ஒரு சமுதாயத்தினை வருங்காலத்தில் உருவாக்கிட முடியும்.

[thanks] தினகரன் [/thanks]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வரதட்சணை ஒழிப்புச் சட்டம்

Post by விஸ்வாஜீ on Thu May 08, 2014 7:38 pm

இந்த சட்டத்தை சிலர் தவறான வழியிலும் பயன்படுத்துகிறார்கள் தல

avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1334
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: வரதட்சணை ஒழிப்புச் சட்டம்

Post by கோ. செந்தில்குமார் on Thu May 08, 2014 9:33 pm

vishwajee wrote:[link="/t110083-topic#1062244"]இந்த சட்டத்தை சிலர் தவறான வழியிலும் பயன்படுத்துகிறார்கள் தல

சிலர் அல்லர். 100 க்கு 95 விழுக்காடு பெண்கள் இந்த சட்டத்தினை தவறாக பயன்படுத்துகிறார்கள். பெண்கள் தனிக்குடித்தனம் போகவே இந்த சட்டத்தினை பயன்படுத்துகிறார்கள். அனைத்து மகளீர் காவல் நிலையங்களில் புகார்களை விசாரிக்காமலேயே தனிக்குடித்தனம் போக சொல்வார்கள். இல்லையேல் வழக்கு பதிவு செய்வேன் - கைது செய்வேன் என்பார்கள். இதற்கு மாண்புறு இந்திய உச்ச நீதிமன்றம் என்ன பெயர் கொடுத்திருக்கிறது என தெரியுமா? ”சட்டப்படியான தீவிரவாதம்” (லீகல் டெரரிஸம்). இந்த சட்டத்தினால் எத்தனையோ இந்திய குடும்பங்கள் அழிந்து போய் இருக்கின்றன. இந்த சட்டத்தினை திருத்த அரசிற்கு உத்தரவிட்டும் அதனை நடுவண் அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை. காரணம் பெண்களின் அனுதாப ஓட்டு கிடைக்க வேண்டுமே... அதனால் தான். இதில் ஒரு வேதனை என்னவென்றால் இச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்படுபவர்களில் முக்கியமானவர்கள் மிகவும் வயதானவர்களும், குழந்தைகளும் தான். ஒருவர் மீது புகார் அளித்தால் குடும்பத்தையே கைது செய்யும் கேவலம் நடக்கிறது. இந்த சட்டத்தினால் பிழைப்பு நடத்தும் துறைகள் என்ன தெரியுமா? காவல் துறை மற்றும் நீதித்துறை ஆகியன தான். இந்த சட்டம் இல்லையெனில் அனைத்து மகளீர் காவல் நிலையங்களில் பிழைப்பே நடக்காது. இதன் மூலம் தான் அனைத்து மகளீர் காவல் நிலையங்களில் வசூல் வேட்டையே நடக்கிறது. நல்ல சட்டம்...! நல்ல நாடு...!! விளங்கிடும்...!!!
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: வரதட்சணை ஒழிப்புச் சட்டம்

Post by சிவா on Thu May 08, 2014 10:14 pm

விஸ்வா மற்றும் கோ.செந்தில்குமாரின் கருத்துகள் ஏற்புடையது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வரதட்சணை ஒழிப்புச் சட்டம்

Post by lakshanika1@gmail.com on Fri May 09, 2014 11:55 am

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப் போல சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் மனமாற்றம் கொண்டால் தவிர இது ஒரு தொடர்கதைதான் ! . . . . . . . . .
avatar
lakshanika1@gmail.com
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 116
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: வரதட்சணை ஒழிப்புச் சட்டம்

Post by விஸ்வாஜீ on Fri May 09, 2014 1:10 pm

@கோ. செந்தில்குமார் wrote:[link="/t110083-topic#1062272"]
vishwajee wrote:[link="/t110083-topic#1062244"]இந்த சட்டத்தை சிலர் தவறான வழியிலும் பயன்படுத்துகிறார்கள் தல

சிலர் அல்லர். 100 க்கு 95 விழுக்காடு பெண்கள் இந்த சட்டத்தினை தவறாக பயன்படுத்துகிறார்கள். பெண்கள் தனிக்குடித்தனம் போகவே இந்த சட்டத்தினை பயன்படுத்துகிறார்கள். அனைத்து மகளீர் காவல் நிலையங்களில் புகார்களை விசாரிக்காமலேயே தனிக்குடித்தனம் போக சொல்வார்கள். இல்லையேல் வழக்கு பதிவு செய்வேன் - கைது செய்வேன் என்பார்கள். இதற்கு மாண்புறு இந்திய உச்ச நீதிமன்றம் என்ன பெயர் கொடுத்திருக்கிறது என தெரியுமா? ”சட்டப்படியான தீவிரவாதம்” (லீகல் டெரரிஸம்). இந்த சட்டத்தினால் எத்தனையோ இந்திய குடும்பங்கள் அழிந்து போய் இருக்கின்றன. இந்த சட்டத்தினை திருத்த அரசிற்கு உத்தரவிட்டும் அதனை நடுவண் அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை. காரணம் பெண்களின் அனுதாப ஓட்டு கிடைக்க வேண்டுமே... அதனால் தான். இதில் ஒரு வேதனை என்னவென்றால் இச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்படுபவர்களில் முக்கியமானவர்கள் மிகவும் வயதானவர்களும், குழந்தைகளும் தான். ஒருவர் மீது புகார் அளித்தால் குடும்பத்தையே கைது செய்யும் கேவலம் நடக்கிறது. இந்த சட்டத்தினால் பிழைப்பு நடத்தும் துறைகள் என்ன தெரியுமா? காவல் துறை மற்றும் நீதித்துறை ஆகியன தான். இந்த சட்டம் இல்லையெனில் அனைத்து மகளீர் காவல் நிலையங்களில் பிழைப்பே நடக்காது. இதன் மூலம் தான் அனைத்து மகளீர் காவல் நிலையங்களில் வசூல் வேட்டையே நடக்கிறது. நல்ல சட்டம்...! நல்ல நாடு...!! விளங்கிடும்...!!!
உண்மை அண்ணா உங்கள் கருத்து 100 சதவீதம் ஏற்புடையது.
நண்பரின் மனைவி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிகிறார்.
அவருக்கு ஐயாயிரம் என பெயர் வைத்துள்ளார்கள்.
இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் வயதானவர்கள்தான்.

avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1334
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: வரதட்சணை ஒழிப்புச் சட்டம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum