ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 krishnanramadurai

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 ayyasamy ram

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 ayyasamy ram

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை

View previous topic View next topic Go down

சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை

Post by சிவா on Thu May 08, 2014 10:09 am


சிவகங்கை : சிவகங்கையில், நாளுக்கு நாள் மழை அதிகளவில் பெய்து வருவதால், கண்மாய்களுக்கு மழை நீர் சேகரமாகி வருகிறது. விவசாயிகளும் கோடை உழவுகளை தைரியமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அக்னி நட்சத்திரம் துவங்கும் நாள் வரை, மழையின்றி சிவகங்கை மாவட்டமே, வறட்சியில் சிக்கி தவித்தன. இந்நிலையில், அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என, மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், வருணபகவான் மக்கள் மீது கருணை மழை பொழிந்தார். இதையடுத்து, கடந்த 4ம் தேதியில் இருந்தே, தொடர்ந்து 4 நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில், பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், வெயிலின் உஷ்ணம் தணிந்து, அவ்வப்போது "சாரல் மழை'யுடன் பலத்த மழையும் பெய்துகின்றன.

இதனால், பொதுமக்கள் குளிர்ச்சியை உணர துவங்கிவிட்டனர். மாவட்டத்தில், அனைத்து தாலுகாக்களிலும் நல்ல மழை பெய்து வருவதால், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு வரத்து கால்வாய்கள் மூலம், மழை நீர் சேகரமாகி வருகிறது. மேலும், கோடை உழவு பணியை துவக்க ஏதுவாக மழை பெய்துள்ளதால், விவசாயிகள் ஆர்வத்துடன் உழவு பணிகளை துவக்கி வருகின்றனர். முக்கியமாக மாவட்டத்தில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்த நிலையில், நல்ல மழை பெய்துள்ளதால், படிப்படியாக நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். நேற்றைய மழை: நேற்று, மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்புத்தூரில், 47.2 மி.மீ., மழை பதிவானது. காரைக்குடி -27, மானாமதுரை - 24, சிவகங்கை - 35, திருப்புவனம் - 40.8, இளையான்குடி - 19.6, தேவகோட்டை 44.2 மி.மீ., வரை மழை பெய்துள்ளது. இந்த மழை விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 4ம் தேதி முதல் நேற்று வரை ஒட்டு மொத்தமாக, காரைக்குடி -92.2 மி.மீ., மானாமதுரை - 115, சிவகங்கை - 96மி.மீ., திருப்புவனம் -53.2மி.மீ., திருப்புத்தூர் -70.14மி.மீ., இளையான்குடி - 35.8மி.மீ., தேவகோட்டை - 63.8 மி.மீ., வரை பதிவாகியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை

Post by சிவா on Thu May 08, 2014 10:12 am

சேலம் மாவட்டத்தில் 242 மி.மீ., மழை கொட்டி தீர்த்தது : சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

சேலம்: கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், வெயிலின் தாக்கம் குறைந்து, மழையின் வேகம் அதிகரிக்க துவங்கி உள்ளது. நேற்று முன்தினம், இடை விடாது பெய்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் மாவட்டம் முழுவதும், 242.7 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

கடந்த, மார்ச், 20ம் தேதி துவங்கிய கோடை வெயில், ஏப்.,30ம் தேதி வரை அதிகப்படியாவே காணப்பட்டது. லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளர்கள், வெயிலை பொருட்படுத்தாமல், வீதிகளில் அலைந்து ஓட்டு சேகரித்தனர். நாளுக்கு நாள் வெயிலின் அளவு அதிகரித்துக் கொண்டே சென்றதால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.. வேலூர், திருச்சி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில், 40 டிகிரி செல்ஷியசை தாண்டி வெயில் கொளுத்தியது. அனல் காற்று வீசியதால், வீட்டை விட்டு வெளியில் செல்வதற்கே தயங்கினர். இதனிடையே, மே, 4ம் தேதி துவங்கிய, அக்னி நட்சத்திரத்தை கண்டு மிரட்சியடைந்தனர்.ஆனால், இயற்கைக்கு மாற்றாக, வெயிலின் வேகம் குறைந்து, மழையின் தாக்கம் அதிகமானது.

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் முழுவதும், இரு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. விடிய, விடிய மழை பெய்தபடியே இருந்தது. வெயிலில் காய்ந்த மக்களுக்கு, மழை பொழிவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டத்தில், ஆத்தூர், வாழப்பாடி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், இடைப்பாடி, ஏற்காடு, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து கொண்டே இருந்தது. காலையில் விட்டு விட்டு பெய்தபோதும், இரவு நேரத்தில் விடாமல் பெய்து கொண்டே இருந்தது. ஏற்காட்டில் குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவியது.

சேலம் மாநகரப் பகுதியில், கிச்சிப்பாளையம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, மணியனூர், ஐந்து ரோடு, அரிசிபாளையம், குகை உள்ளிட்ட பகுதிகளில், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில், மழை நீர் குட்டை போல் தேங்கி கிடந்தது. பெரும்பாலான மண் சாலைகள், சகதி காடாக மாறியிருந்தது. மழையால், சாலைகள் குண்டும், குழியுமாக மாறியிருந்தன. சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுகள் தெருக்களில் தேங்கியபடி கிடந்தன. தண்ணீர் செல்ல வழியில்லாததால், சாலைகளில் தேங்கியிருந்த நீரில் வாகனங்கள் மிதந்தபடி சென்றன. குடிநீர் பிரச்னையால் தவித்த மக்களுக்கு, தற்போது பெய்து வரும் மழை நிம்மதியை கொடுத்துள்ளது. சேலம் மாவட்டத்தில்,நேற்று காலை 8 மணியுடன் முடிந்த, 24 மணி நேரத்தில் பதிவான மழைப் பொழிவு விபரம்(மி.மீ.,): சேலம் - 34.4, ஏற்காடு - 30.2, வாழப்பாடி - 20.11, ஆத்தூர் - 21.4, தம்மம்பட்டி - 37.2, சங்ககிரி - 24.2, இடைப்பாடி - 29, ஓமலூர் - 17, மேட்டூர் - 29.2, மொத்தம் 242.7. சராசரி மழையளவு - 26.97.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை

Post by சிவா on Thu May 08, 2014 10:14 am

திருச்சியில் கொட்டித்தீர்த்த மழையால் சாலையில் பெருக்கெடுத்த சாக்கடை

திருச்சி: தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடுமையான வெயில் அடித்தது. திருச்சியில், 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் உச் சத்துக்கு சென்றது. சராசரியாக, 104 டிகிரி வெயில் இருந்தது. இதனால், இந்த ஆண்டு அக்னி வெயில் கடுமையாக இருக்கும் என மக்கள் அஞ்சினர்.

மக்கள் அச்சத்தை போக்கும் வகையில், அக்னி வெயில் துவங்கியதிலிருந்து தமிழகம் முழுவதும் சீதோஷன நிலையில் மாற்றம் காணப்பட்டது. ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்தது. திருச்சியிலும் மழை பெய்தது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலையால் தமிழகத்தில் அதிகமான இடங்களில் நேற்று முன்தினம் இரவிலிருந்து மழை பெய்தது. திருச்சியில் நேற்று முன்தினம் இரவிலிருந்து கனமழை பெய்தது. சுற்றுவட்டாரப்பகுதியிலும் மழை பெய்தது. திருச்சி மாநகர மக்கள் வெயிலிலிருந்து தப்பித்தோம் என நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனால், ஒரு நாள் பெய்த இந்த மழையால் பல பகுதியில் மழைநீர் தேங்கியது.

மாநகராட்சி நிர்வாகம் சாக்கடை அடைப்புகளை முறையாக எடு க்காததாலும், முறையற்ற வடிகால் வசதியாலும், மழைநீர் செல்ல வழியின்றி சாக்கடைகள் நிரம்பி, சாக்கடை நீர் சாலையில் பெருக்கெடுத்தன. இதனா ல், சாலையில் சாக்கடை நீருட ன் தேங்கிய மழைநீரை கடந்து செல்ல முடியாமல், மக்கள் அருவெறுப்பு அடைந்தனர். உறையூர், தென்னூர், பீமநகர் பகுதிகளில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் உள்ளே புகுந்தது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்தனர். மழைநீர் தேங்க மாநகராட்சி நிர்வாகமே காரணம் என மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை

Post by சிவா on Thu May 08, 2014 10:15 am

சகதிகாடான தற்காலிக பஸ் ஸ்டாண்ட் : புதுகையில் பயணிகள் கடும் அவதி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தற்காலிக பஸ் ஸ்டாண்டில் மழைநீர் தேங்கி சகதிகாடாக மாறியுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பராமரிப்பு பணிகள் முடிவடைந்தும் தேர்தல் நடத்தை விதிகளை மேற்கோள் காட்டி புதிய பஸ் ஸ்டாண்டை திறக்க மாவட்ட நிர்வாகம் மறுத்துவருகிறது.

புதுக்கோட்டை நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிய பஸ் ஸ்டாண்ட் சீரமைப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் துவக்கியது. இதற்காக அரசு மகளிர் கல்லூரி எதிர்புறம் உள்ள காலிமனையில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு கடந்த, 5 மாதங்களாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கிரஷர் தூள் மற்றும் வேஷ்ட் மண்ணைக் கொண்டு சமப்படுத்தப்பட்டுள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்ட் வெயில் அடித்தால் புழுதி காடாகவும், மழை பெய்தால் சகதி காடாகவும் மாறிவருகிறது.

புதுக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கோடை மழையினால் தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்குள் சாக்கடை கலந்த மழை தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதன்மீது பஸ்கள் ஏறி, இறங்குவதால் மழை தண்ணீர் மண்ணுடன் கலந்து சகதிகாடாக மாறியுள்ளது. சகதியில் இறங்கி பஸ் ஏறுவதில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.புதிய பஸ் ஸ்டாண்ட் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து ஒருமாதம் ஆகியும் தேர்தல் நடத்தை விதிகளை மேற்கோள் காட்டி பஸ் ஸ்டாண்டை திறக்க மாவட்ட நிர்வாகம் மறுத்துவருகிறது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரசு நிர்வாக பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தியும், சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்டை திறக்க மாவட்ட நிர்வாகம் மறுப்பது பயணிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றாண்டு விழாவுக்காக முதல்வர் ஜெயலலிதா வழங்கிய சிறப்பு நிதியிலிருந்து ஒரு கோடியே, 50 லட்சம் ரூபாய் வரை செலவிட்டு நுழைவு வாயில் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய பஸ் ஸ்டாண்ட் சீரமைக்கப்பட்டதால், அமைச்சர்களை வைத்து பிரம்மாண்டமாக விழா நடத்தி பஸ் ஸ்டாண்டை திறப்பதென ஆளுங்கட்சி தரப்பு முடிவுசெய்துள்ளது. மே 28ம் தேதி வரை நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இதையே மேற்கோள் காட்டி பஸ் ஸ்டாண்டை திறக்க மாவட்ட நிர்வாகம் மறுத்துவருவதாக பயணிகள் மட்டுமின்றி கம்யூனிஸ்ட் கட்சியினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். வரும் 10ம் தேதிக்குள் பஸ் ஸ்டாண்டை திறந்து பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவராவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் சின்னத்துரை கூறியதாவது: புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து ஒரு மாதம் ஆகியும், தேர்தல் நடத்தை விதிகளை மேற்கோள் காட்டி பஸ் ஸ்டாண்டை திறக்க மாவட்ட நிர்வாகம் மறுத்துவருவது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது. "தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் அரசு நிர்வாக நடவடிக்கைகள் தொடரலாம்' என, தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தியுள்ளது. இருந்தும் பயணிகள் நலனை கவனத்தில் கொள்ளாமல் பஸ் ஸ்டாண்டை திறக்க மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்துவருகிறது. வரும் 10ம் தேதிக்குள் பஸ் ஸ்டாண்டை திறக்காவிட்டால் பயணிகளை ஒன்றுதிரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை

Post by சிவா on Thu May 08, 2014 10:17 am

மதுரை ! தேங்கும் மழைநீரால் குடிநீரில் கழிவுகள்; மழை பாதிப்பை பார்வையிடாத அதிகாரிகள்

மதுரை : மதுரை மாநகராட்சியின் வார்டுகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் குடிநீர் வினியோகத்தில் கழிவுநீர் கலந்து வருகிறது. மூன்று நாட்களாக மழை பெய்யும் நிலையில், வார்டுகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு மனம் வரவில்லை.

மதுரையில் மழை வந்தாலும் பிரச்னை, வராவிட்டாலும் பிரச்னை. அரைகுறையாய் நிற்கும் 'எதற்கும் உதவாத' மழைநீர் வடிகால் திட்டத்தால் மழைநீர் வீணாகி கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு கேபிள் பதிப்பதற்கு தோண்டப்பட்ட குழிகளும் சரிசெய்யப்படாததால் அத்தனை பள்ளங்களிலும் நீர் தேங்கி நிற்கிறது. பெத்தானியாபுரம் உட்பட சில இடங்களில் வீடுகளுக்குள்ளேயே சாக்கடை கலந்த மழைநீர் புகுந்து பாடாய்படுத்துகிறது. மாநகராட்சி எல்லையில் உள்ள வார்டுகளிலும் இதே நிலை தான். சரிசெய்ய வேண்டிய அந்தந்த வார்டு உதவிப்பொறியாளர்கள், எங்கே இருக்கிறார்கள் எனத்தெரியவில்லை. மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வார்டுகளின் நிலை என்ன? மக்களின் கதி என்ன? என்பதை ஆய்வு செய்ய மாநகராட்சி கமிஷனரோ, உதவி கமிஷனர்களோ, நகர் பொறியாளரோ இதுவரை வரவில்லை. கவுன்சிலர்களோ, 'தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் நாங்கள் வரமுடியாது' என்ற ஒரே பதிலைக் கூறி தப்பிக்கொள்கின்றனர்.

கழிவுநீருடன் கலந்து குடிநீர் இணைப்புகளில் புகுந்த மழைநீர், வினியோகத்தை நாறடித்து வருகிறது. நான்கு நாட்களுக்கு ஒரு முறை வரும் குடிநீரை வைத்து சமாளிப்பதே பெரியபாடு. அதிலும், கழிவுநீர் கலந்து வந்தால் மக்கள் எப்படி தான் சமாளிக்க முடியும்?தேர்தலுக்காக அமைக்கப்பட்ட ரோடுகள் ஆங்காங்கே நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த 'தரமான' ரோடுகளுக்கு அனுமதி அளித்தவர்கள், பரிந்துரைத்தவர்கள், ஒப்புதல் அளித்தவர்கள், ஒப்பந்தம் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கும் அதிகாரிகள் முன்வரவில்லை.தேர்தல் பணிகளால் தான் மாநகராட்சியின் செயல்பாடுகள் முடங்கியிருப்பதாக அனைவரும் நினைத்திருந்தனர். ஓட்டுப்பதிவு முடிந்து அதிகாரிகள் பணிக்கு திரும்பிய பிறகும் மாநகராட்சியின் செயல்பாட்டில் முடக்கம் தொடர்கிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை

Post by சிவா on Thu May 08, 2014 10:19 am

ராமநாதபுரம் ! வாரச்சந்தையில் மழை நீருடன், கழிவு நீர் தேக்கம்; வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வாரச்சந்தையில் மழைநீருடன், கழிவுநீர் தேங்கி நின்றதால் பொருட்கள் வாங்க வந்த மக்கள் துர்நாற்றத்தால் அவதியடைந்தனர். வியாபாரம் பாதித்ததால் வியாபாரிகள் நஷ்டம் அடைந்தனர்.

ராமநாதபுரத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழையால் பாரதிநகர், ஓம்சக்தி நகர், சந்தைக்கடை, நீலகண்டி, கேணிக்கரை, மாரியம்மன்கோயில், அரண்மனை பகுதி, கறிக்கடை சந்து, காய்கறி மார்க்கெட், வாரச் சந்தை உள்பட 25க்கும் மேற்பட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. புதன் கிழமைதோறும் கூடும் வாரச்சந்தையில் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்படாமல் சேறும், சகதியுமாக உள்ளது. கற்கள் நிறைந்து கரடு, முரடான இடங்களில் கடை விரிக்க இயலாமல் வெளியூர் வியாபாரிகள் சிரமம் அடைந்தனர். காலியாக இருந்த இடங்களில் கடை விரிக்கச் சென்றவர்களிடம் அடுத்தடுத்த கடைகாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சந்தைக் கடை உள்புறத்தில் வழக்கமாக கடை விரிப்போர், நுழைவு பகுதி துவங்கி உழவர்சந்தை ரோடு கடைகள் அமைத்தனர். சில வியாபாரிகள் வாரச்சந்தை நடைபாதையில் கடைகள் அமைத்ததால் பொருட்கள் வாங்க வந்த மக்கள் அவதியடைந்தனர். அரசு பஸ்கள், இதர வாகனங்கள் வந்து செல்வதில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

பரமக்குடியை சேர்ந்த வியாபாரி, முருகலட்சுமி: இங்கு அடிப்படை வசதிகள் இல்லை. துர்நாற்ற தண்ணீர் சூழ்ந்த இடத்தில் வியாபாரம் செய்தேன். காய்கறிகளை வாங்குவதற்கு மக்கள் முகம் சுழித்தனர். சேதமடைந்த கடைகளை புதுப்பித்து கொடுத்தால் மழை, வெயிலுக்கு பிரச்னையின்றி வியாபாரம் செய்வோம்' என்றார்.

பரமக்குடி, மளிகை வியாபாரி, செல்வசேகரி: அனைத்து வாரச்சந்தைகளிலும் வியாபாரம் செய்கிறேன். நேற்று இங்கு வியாபாரத்திற்கு வந்தேன். வழக்கமாக நான் கடை விரிக்கும் இடத்தில் மழைநீர் தேங்கி இருந்தது. வேறிடத்தில் கடை அமைக்கச் சென்ற என்னை பக்கத்து கடைக்காரர்கள் தடுத்தனர். ஒரு கடைக்கு ரூ.100 குத்தகை வசூலிக்கின்றனர். எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. சந்தையில் வியாபாரம் செய்ய வந்த காலத்தில் இருந்து இதே நிலை தான் உள்ளது. குண்டும்,குழியுமாக உள்ள இடத்தை சமப்படுத்த வேண்டும்' என்றார். புது பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளுக்காக வாரச்சந்தை செப்பனிடப்படாமல் உள்ளது. கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. வாரச்சந்தையில் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை

Post by ஜாஹீதாபானு on Thu May 08, 2014 4:17 pm

இங்கேயும் 3 நாளாக நல்ல மழைபுன்னகைavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30094
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை

Post by கிருஷ்ணா on Fri May 09, 2014 10:56 am

மழை வந்தாலும் அவதி என்ற செய்திதான், மழை இல்லை என்றாலும் அவதி என்ற செய்திதான்.  சோகம் 
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மழை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum