ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 aeroboy2000

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

வீரக்குமார். ப
 kuloththungan

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 aeroboy2000

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 ayyasamy ram

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 aeroboy2000

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 ayyasamy ram

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்

View previous topic View next topic Go down

பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்

Post by சிவா on Thu May 08, 2014 10:23 amவழக்கறிஞரும் குடும்பநல ஆலோசகருமான ஆதிலட்சுமி லோக-மூர்த்தி

நம் நாட்டை ‘தாய் நாடு’ என்றும், நதிகளை ‘கங்கா, யமுனா, காவிரி’ என்று பெண்ணாகப் பாவிக்கும் அதே சமுதாயம்தான் ரத்தமும் சதையுமான பெண்களை போகப் பொருட்களாகப் பார்க்கிற அவலத்தையும் செய்கிறது. இன்று இந்த தேசத்தின் மூலை முடுக்கிலெல்லாம் பேசப்படும் செய்தியாகிவிட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, நாம் அனைவரும் சேர்ந்து களை எடுக்க வேண்டிய ஒரு விஷச்செடியாக வளர்ந்து நிற்கிறது. பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இவ்வாறு ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால், தவறு இழைத்த கயவனை தண்டிக்க இந்திய தண்டனைச் சட்டத்தைத் தவிரவும், பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை தடுக்கவும், விசாரிக்கவும், நிவாரணம் தரவும் இந்த 2013ம் ஆண்டுச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னோடியாக விளங்கியது உச்ச நீதிமன்றம் Vishaka - Ors vs State Of Rajasthan - Ors வழக்கில் கொடுத்த தீர்ப்பேயாகும். இந்த நிலையை விளக்க சற்று பின் நோக்கி செல்ல வேண்டும். பன்வாரி தேவி என்ற 50 வயது தாண்டிய ஒரு பெண்மணி ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு சமூகப் பணியாளராக பணியாற்றி வந்தார். அவர் மீது உயர்சாதியைச் சார்ந்த ஆண்கள் கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபட்டார்கள். அந்தக் கொடுமையை நிகழ்த்திய அவர்கள், ‘அது இவளைப் போன்றவர்களுக்கு சரியான பாடம்’ என்று கொக்கரித்தார்கள்.

பன்வாரி தேவி செய்த தவறுதான் என்ன?

இந்தச் சமுதாயத்தில் பரவி கிடக்கும் குழந்தைத் திருமணத்தை தடுத்ததுதான். ஒரு நல்ல செயல் செய்ததற்காக தன்னை பாலியல் வன்முறைக்கு பலி கொடுத்தும் கலங்காத அந்த வீர மங்கை, துணிந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு நடத்திய போதும், அந்த பெண்ணுக்கு கீழமை நீதிமன்றத்தில் நீதி கிடைக்கவில்லை. காவல்துறை, மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள் தவறு இழைத்த ஆண்களுக்கு சாதகமாக சாட்சியம் அளித்தார்கள். மனம் தளராத பன்வாரி தேவி, பெண்கள் அமைப்புடன் இணைந்து போராடி, உச்ச நீதிமன்றம் வரை வழக்காடி, வழக்கை வென்றதுடன் பணிக்குச் செல்லும் இந்தியப் பெண்ணினத்துக்கு விடிவெள்ளியாக அமைந்த தீர்ப்புக்கும் வழி செய்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்

Post by சிவா on Thu May 08, 2014 10:25 amஇந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்கியது. அதோடு தீர்ப்பிலுள்ள விதிமுறைகளின்(Guidelines) படி, பாலியல் வன்முறையிலிருந்து பணி செய்யும் பெண்களைப் பாதுகாக்கும் வழிகளுக்கான சட்டம் இயற்றப்படும் வரை, இந்த வழக்கின் தீர்ப்பே சட்டமாகப் பின்பற்றப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

விதிமுறைகள் மனித உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 2(D) மனித உரிமை என்றால் என்ன என்பதை மனதில் கொண்டு...

ஒரு நிறுவனம் அல்லது கல்வி நிலையத்தின் தலைவர் அல்லது அதன் பொறுப்பிலிருப்பவர், பணியின் போது பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான வன்கொடுமைகளைத் தடுக்கவும், விசாரிக்கவும், நிவாரணம் தரவும் வழிவகை செய்வது அவசியம்.

பாலியல் வன்முறை என்பது... உடல்ரீதியாக தொடுதல் முதல் வன்புணர்ச்சி வரை, பாலியல் ஆசைக்கு இணங்கக் கோருதல், பாலியல் ரீதியான பேச்சுக்களும் கேலிகளும், பாலியல் உணர்வைத் தூண்டும்படியான படங்களைக் காட்டுதல், உடலாலோ, பேச்சினாலோ தீய நடத்தையாலோ வன்புணர்வில் ஈடுபடுதல்.

பாலியல் வன்முறையை தடுப்பதற்கான தகுந்த வழிமுறைகளை ஒரு நிர்வாகமோ, நிறுவனமோ ஏற்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.

அரசாங்கம் அல்லது பொது நிறுவன (Public Sector) விதிகளில் பாலியல் வன்முறையை தடுப்பதற்கான சட்டமும் தண்டனையும் இருத்தல் அவசியம். தனியார் நிறுவனமெனில் நிலையான அறிக்கையில் (Standing Orders) குறிப்பிடுவது அவசியம்.

பணியிடத்தில் பெண் ஊழியர் களுக்கு வேலை செய்வதற்கு தேவையான வசதிகள், போதிய ஓய்வு, சுகாதார வசதிகள் செய்து தருதல் அவசியம். எந்தவொரு பெண் ஊழியருக்கும் பணியிடத்தில் தனக்கு போதிய வசதியோ பாதுகாப்போ இல்லை என்று நினைக்கும்படி இருத்தல் கூடாது.

தவறு செய்தவரின் நடத்தை அல்லது செயல் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழோ, வேறு ஏதாவது தனிச் சட்டத்தின் கீழோ தண்டனைக்குரிய குற்ற மென்றால், அந்தச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தகுந்த முயற்சி செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண் தனது பணி மாற்றத்துக்காகவோ, குற்றம் இழைத்தவரின் பணி மாற்றத்துக் காகவோ கோரலாம்.

புகார் கொடுத்ததற்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது எந்த வித காழ்ப்புணர்ச்சியையும் காட்டுவதோ, அவர்மீது தவறான நடவடிக்கை எடுப்பதோ கூடாது.

புகார் பெற்றவுடன் நிர்வாகம் உடனடியாக அவர்களின் விதிகளுக்கு உட்பட்டு விசாரணை மேற்கொள்வது அவசியம்.

புகார் ஏற்புக் குழு அமைத்தல், அதற்கு ஒரு பெண்ணை தலைமை ஏற்கச் செய்தல், அதிலுள்ள பாதி உறுப்பினர்கள் பெண்களாக இருத்தல், மேலும் மூன்றாம் நபராக பாலியல் வன்முறையில் பாதிக்கப் படும் பெண்களுக்கு உதவும் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடுதல், புகாரின் ரகசியம் காத்தல், தேவையெனில் மனநல ஆலோசகரை நியமித்தல் போன்றவை புகார் ஏற்புக் குழுவின் கடமைகளாகும். அரசுக்கு ஆண்டு அறிக்கை சமர்ப்பிப்பதும் அவசியம்.

தொழிலாளிகள் பணியிடத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை பற்றி அவர்கள் கூட்டங்களில் வெளிப்படுத்த அனுமதித்தல்.

பெண் ஊழியர்களின் சட்ட உரிமைகள் பற்றி அறிவிப்புப் பலகையில் அறிவிப்பு வெளியிடுதல்.

நிறுவனத்தைச் சாராத ஒருவரால் தன் நிறுவனத்தைச் சார்ந்த பெண்ணுக்கு ஒருவேளை பாலியல் வன்கொடுமை ஏற்படும் தருணங் களிலும் தகுந்த உதவி செய்தல்.

இத்தீர்ப்பு வழங்கப்பட்ட ஆண்டு 1997. ஆனால், 2012ல்தான் அதற்கான மசோதா (Bill) லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு, சமீபத்தில் ராஜ்யசபாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை தடுக்கவும், விசாரிக்கவும், நிவாரணம் தரவும் இப்போதுதான் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த ‘விசாகா’ வழக்கோடு, இன்னும் இரு வழக்குகளும் குறிப்பிடத்தக்கவை. Apparel Export Promotion Council Vs A.K.Chopra வழக்கின் தீர்ப்பில், பாலியல் வன்முறை என்பது பெண்களுக்கு எதிரான Gender Discrimination என்றும், ஒரு பெண் ஊழியரை மேலதிகாரி உடல்ரீதியாக தவறான எண்ணத்தில் தொடுவதும் பாலியல் வன்முறையே என்றும் கூறப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்

Post by சிவா on Thu May 08, 2014 10:27 amMedha Kotwal Lele Vs Union of India and others வழக்கில் விசாகா வழக்கின் விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்த மாநில மற்றும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையைத் தடுக்கவும் விசாரிக்கவும் நிவாரணம் தரவும் கூடிய சட்டம் 2013...

எந்த ஒரு பணியிடத்திலும் ஒரு பணிக்காக நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ, தினக்கூலியாகவோ, நேரிடையாகவோ ஒப்பந்ததாரர் மூலமாகவோ அமர்த்தப்பட்டு, ஊதியம் பெற்றோ, பெறாமலோ தன்னார்வமாக தொண்டு செய்தோ, பயிற்சிப் பணியாளராகவோ (Trainee/Apprentice) நிரந்தரப் பணிக்கு காத்திருப்பவராகவோ (Probationer) உள்ள அனைவரும், இந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எந்த ஒரு நபர் நிறுவனத்தின் பொறுப்பாளராகவோ, கண்காணிப்பாளராகவோ அந்த பணியிடத்தின் பொறுப்பை தன்னகத்தே கொண்டவராக இருப்பவரே இந்தச் சட்டத்தின் கீழ் பொறுப்பாளராகிறார்.

எந்த வயதைச் சார்ந்த பெண்ணும் - அந்த நிறுவனத்தில் பணிபுரிபவரோ, அந்த நிறுவனத் துக்குள் வந்திருப்பவரோ பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் நிலையில் இருப்பவரை பாதிக்கப்பட்ட பெண்ணாக இந்தச் சட்டம் சொல்கிறது.

வீட்டுவேலை செய்யும் பெண்களும் இந்தச் சட்டத்தின் கீழ் நிவாரணம் கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பணியிடம் என்றால் ஒரு பணியாளர் தன்னுடைய பணி நிமித்தமாக பணியின் போது செல்லக்கூடிய இடங்கள். இதனுள் பணிக்கு வந்து போகும் போக்குவரத்து வாகனமும் அடங்கும். இச்சட்டத்தின் பிரிவு 3 (2)ன் படி பாலியல் வன்முறை பட்டியலில்...

தன் இச்சைக்கு இணங்கும் பட்சத்தில் அவள் பணியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வசதி செய்து கொடுக்க உந்துதல் ஏற்படுத்துதல்.

தன் இச்சைக்கு இணங்காத பட்சத்தில், அவள் பணியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொல்லை கொடுத்தல்.

தன் இச்சைக்கு இணங்காத பட்சத்தில், பெண்ணின் இப்போதைய பணிக்கோ, எதிர்கால பணிக்கோ பங்கம் விளைவிப்பதாக மிரட்டுதல்.

பாதிக்கப்பட்ட பெண் செய்யும் பணியின் இடையே தொந்தரவு செய்தல், பணியில் சிரமம் ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்குதல்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநலம் அல்லது உடல் நலத்துக்குப் பங்கம் ஏற்படக்கூடிய செயலை செய்தல் ஆகியவையும் அடங்கும்.

இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு நிறுவனமோ அதன் உரிமையாளரோ ‘உள்கட்டமைப்பு புகார் குழு’அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 3 ஆண்டுகளுக்கு செயல்படும். குழுவின் தலைவராக அந்நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த பெண் அதிகாரி செயல்படுவார். அந்நிறுவனத்தை சார்ந்த 2 ஊழியர்கள் - பெண்கள் நலத்துக்காக அர்ப்பணித்துக்கொண்ட சமூக ஆர்வலர்கள் அல்லது சட்டம் தெரிந்த நபர்கள் குழுவில் இருப்பது அவசியம். தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஒரு நபர் இக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டும். பாதியளவு அங்கத்தினர்கள் பெண்களாக இருப்பது அவசியம்.

Local Complaints Committee என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க சட்டம் வலியுறுத்துகிறது. உள்கட்டமைப்பு புகார் குழு (Internal Complaints Committee) இல்லாத பணியிடங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் இங்கு புகார் கொடுக்கவும் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்கள் தங்கள் புகாரை தாக்கல் செய்யவும் இது அவசியம். மாவட்ட அலுவலரால் ஒவ்வொரு தாலுகாவிற்கும் புகாரை பெற ஒரு ழிஷீபீணீறீ ளியீயீவீநீமீக்ஷீ நியமிக்கப்படுவார். அவர் புகாரினை Local Complaints Committee‚° 7 நாட்களுக்குள் பரிந்துரை செய்வார்.

இதற்கு சமூக அக்கறை கொண்ட - மிகவும் அறியப்பட்ட ஒரு பெண் தலைவராக நியமிக்கப்படுவார். அந்த தாலுகாவில் பணிபுரியும் ஒரு பெண் உறுப்பினராக செயல்படுவார். மேலும் இரண்டு உறுப்பினர்கள். குறிப்பாக ஒருவர் பெண்ணாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் அங்கம் வகிப்பவர்களாகவும் அவர்களில் ஒருவர் சட்டம் தெரிந்தவராக இருப்பதும் அவசியம். அதிலும் ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவராக இருப்பது அவசியம். 3 ஆண்டுகளுக்கு இந்தக் குழு செயல்படும்.

புகார் செய்யும் முறையும் விசாரணையும்...

பாதிக்கப்பட்ட பெண் தான் பாதிக்கப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் ICC (internal compliants commitee) அல்லது LCC (local complaints commitee) புகார் தாக்கல் செய்ய வேண்டும். புகார் கொடுக்க காலதாமதம் ஆகும் பட்சத்தில் அதற்கான காலவரையறை, அவசியம் இருப்பின் நீட்டிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண் மனநிலை காரணமாகவோ, உடல்நிலை காரணமாகவோ அல்லது அவருக்கு மரணம் சம்பவிக்கும் பட்சத்தில் புகார் தாக்கல் செய்யமுடியாத பட்சத்தில் அவருடைய வாரிசுதாரர் களோ, அவர் சார்பாக யாரேனுமோ தாக்கல் செய்யலாம். புகாரின் மீது விசாரணை தொடங்குவதற்கு முன்னரோ அல்லது விசாரணையின் நடுவிலோ சமரச முயற்சி (Conciliation) மேற்கொள்ள சட்டத்தில் வழிவகை உள்ளது.

எனினும் இந்த சமரசத்தில் பணப் பரிமாற்றம் இருக்கக் கூடாது. ஒருவேளை விசாரணையின் இடையே சமரச முடிவு ஏற்படுமெனில் விசாரணை கைவிடப்படும். எதிராளி நிறுவனத்தின் பணியாளராக இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் பணி விதிகள் பின்பற்றப்படும். இந்த விசாரணை இயற்கை நீதிக்குட்பட்டே நடைபெறும். 90 நாட்களுக்குள் விசாரணை முடிவு பெற வேண்டும். இக்குழு விசாரணை முடிவில் தனது அறிக்கை யினை நிறுவனத்தின் உரிமை யாளருக்கோ, மாவட்ட அலுவலருக்கோ சமர்ப்பிக்க வேண்டும். இந்த விசார ணைக்குழு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடாக எதிராளியின் ஊதியத்திலிருந்தோ பெற்றுத்தர பரிசீலனை செய்ய வேண்டும்.

விசாரணையின் போது பெண்களுக்கு இருக்கும் உரிமைகள்...

பாதிக்கப்பட்ட தனக்கோ, குற்றம் சாட்டப்பட்ட எதிர் தரப்பினரையோ பணிமாற்றம் செய்யக் கோர உரிமை உண்டு. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 மாதங்கள் வரை விடுப்பு கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த விடுப்பு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள விடுப்புகள் அல்லாது கூடுதல் விடுப்பாக கருதப்படும். தவறான புகார் மற்றும் சாட்சியம் அளிக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குறைந்த பட்ச தண்டனை கொடுக்க சட்டம் வழி செய்துள்ளது. விசாரணைக் குழு பாதிக்கப்பட்ட பெண்ணின் மனவலிக்கும் வேதனைக்கும், மன உளைச்ச லுக்கும், பணி மாற்றத்துக்கும், பணி இழப்புக்கும், பாலியல் வன்முறையால் ஏற்பட்ட மருத்துவச் செலவுக்கான இழப்பீட்டுக்கும், எதிராளியின் பொருளாதாரத் தகுதியின் அடிப்படையில் மொத்த தொகையாகவோ தவணை முறையாகவோ பெற்றுத்தர வழி செய்யலாம்.

பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய விவரங்களை வெளியிடுவது அல்லது ஊடகங்கள் வாயிலாக தெரிவிப்பது அல்லது தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெறுவது மறுக்கப்பட்டி ருக்கிறது. Vishaka - Ors vs State Of Rajasthan - Ors வழக்கின் தீர்ப்பில் கொடுக்கப்பட்ட விதிமுறைகளில் பெரும்பான் மையானவை இந்தச் சட்டத்தின் விதிகளில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் விதிகளைப் பின் பற்றாத அல்லது கடமைகளை புறக்கணிக்கும் நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் செயல்படும் குழுக்கள் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்வது அவசியம். இந்தச் சட்டத்தின் கீழ் எழும் வழக்குளை விசாரிக்க முதன்மை குற்றவியல் நீதிபதி அல்லது மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்டிரேட் அந்தஸ்திலுள்ள நீதிபதி விசாரிக்க வழிவகை செய்துள்ளது.

இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னோடி யாக விளங்கிய விசாகா தீர்ப்புக்குப் பிறகு, 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்தச் சட்டம் இயற்றப்பட்டு விட்டாலும் அதற்கான விதிகள் இன்னும் இயற்றப்படாமலேயே இருக்கின்றன. கூடிய விரைவில் அந்த விதிகள் இயற்றப்படாவிட்டால் இச்சட்டத்தினை அமல் செய்வது கடினம். எந்தச் சமுதாயமும் மேன்மை பெற வேண்டு மென்றால் பெண்மையை போற்றுவது அவசியம்.

[thanks] தினகரன் [/thanks]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 22, 2014 8:00 pm

 
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4408
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum