ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

View previous topic View next topic Go down

தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா on Sat May 10, 2014 8:39 am

தங்க ஆபரணங்கள்… சீர், பிறந்த வீட்டின் பெருமை சொல்லும் அடை யாளம், ஸ்டேட்டஸ் சிம்பல், சென்ட் டிமென்ட், அன்பு பரிசின் நினவுச் சின்னம், அழகு என்று நம் கலா சாரத்திலும், வாழ்விலும் நம் கூடவே ஒட்டி உறவாடும் உலோக உறவுகள் என்று சொன்னால், அது மிகையில்லை!

தங்கம், வெள்ளி, பிளாட்டினம், முத்து, பவளம், வைரம் என அவற் றில் நம் பயன்பாடுகளின் பட்டிய லும் நம் வசதி, பொருளாதாரம் கார ணமாக நீண்டுகொண்டே இருக்கிறது. வீட்டில் கஷ்டமான சமயங் களில் ஆபத்பாந்தவனாக கைகொடுத்துக் காப்பாற்றுவதுகூட இந்த நகைகள்தான். இன்னொருபுறம், இந்த ஆபரணங்களுக்காக பணம் செலவழிப்பது சிறந்த முதலீடாகவும் இருக்கிறது. இப்படி வாழ்க்கை முழுக்க நம் கூட வரும் இந்த நகைகளை எப்படிப் பார்த்துப் பார்த்து வாங்க வேண்டும், பாராமரிக்க வேண்டும் என்று உங்களுக்கு குறிப்பு சொல்கிறது இந்தப் புத்தகம்.

தங்கத்தின் தரம் நிரந்தரமாக இருக்க..!

விண்ணைத் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது தங்கத்தின் விலை. இருந்தும் கிராமில் தொடங்கி கிலோக்கள் வரை அனைவரும் பொருளாதார நிலைக்கேற்ப தங்கம் சேர்க்கத்தான் விழைகின்றனர். தங்க நகைகளை வாங்கும்போது, அதன் தரத்தை உறுதி செய்வதற்காக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? ஜஸ்ட் ஹேவ் எ லுக்!

1. தங்கத்தின் தூய்மையில்தான் அதன் தரம் இருக்கிறது. இந்தத் தூய்மையின் சதவிகிதத்தை குறிக்கிறது ‘டச்’ அளவீடு. 24 கேரட் தூய தங்கம் என்பது 100 டச்.

2. தூய்மையான தங்கத்தில் (100 டச்) நகைகள் செய்ய முடியாது. அதனுடன் செம்பு சேர்த்து, 22 கேரட்டில்தான் செய்வார்கள். அதாவது அதிகபட்சம் 88 அல்லது 90 டச் வரை.

3. அடிக்கடி விளம்பரங்களில் கேட்கும் வார்த்தை ’916′ கோல்ட். அப்படி என்றால்…? ’916′ என்பது மேலே சொன்ன ’22 கேரட்’ தங்க நகைகளைக் குறிக்கும் அடையாளச் சொல். 91.6% தூய்மையான தங்கம் என்பதுதான் இதன் அர்த்தம்.

4. பொதுவாக ’916′, ’22′ கேரட் என்ற குறியீடுகள் ’90 டச்’ வரையுள்ள தங்க நகைகளைக் குறிக்கும் அடையாள வார்த்தை. ’916 கே.டி.எம்’, ’916 ஹால்மார்க்’ என்ற குறியீடுகள் ’92 டச்’ தரத்தைக் குறிக்கும் அடையாள வார்த்தை. ’92 டச்’தான் நகைகளுக்கான உச்சபட்ச தரம்!

5. ‘கே.டி.எம்’ நகைகள் என்பது, செம்புக்குப் பதிலாகப் பயன் படுத்தப்படுகிற ஒரு வகை பொடியைக் குறிக்கும் சொல். இந்த ‘கே. டி.எம்’ பொடியை பயன்படுத்தி நகையை வார்க்கும்போது, அதன் பெரும் பகுதி காற்றில் கரைந்து விடுவதால், அது நகையுடன் குறைந்த அளவே கலக்கும்; அதனால் ஒரு நகையில் தங்கத்தின் சதவிகிதம் அதிக அளவு இருக்கும் என்பதுதான் இதன் சிறப்பு.

6. ‘ஹால்மார்க்’ எனப்படுவது தரத்தை நிர்ணயிக்கும் முத்திரை! இ ந்த முத்திரை, ஒரு நகையில் ’92 டச்’ தூய தங்கம் இருக்கிறது என்ப தை உறுதிசெய்யும்.

7. பொதுவாக, தங்க நகைகளில் இந்த ’22 கேரட்’, ’916′, ‘ஹால்மார்க் முத்திரை’ போன்றவை பொறிக்கப்பட்டிருக்கும். அவற்றை வைத் துதான் நகையின் தரத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் வாங்கும்போது இந்த அடையாளங்கள் குறிக்கப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்த்து விடுங்கள்.

8. ’22 கேரட்’, ‘கே.டி.எம்’ போன்ற குறியீட்டு வார்த்தைகளை, நகை தயாரிக்கும் யாரும் பொறித்து விடமுடியும் என்பதால், ஜாக்கிரதை.

9. ‘ஹால்மார்க்’ முத்திரையை நகை தயாரிப்பவர்களோ, அந்நியர்களோ பொறித்துவிட முடியாது. ‘ஹால்மார்க்’ என்பது அரசு நிறுவனம் தரும் முத்திரை என்பதால், அந்த முத்திரையுள்ள நகை கள் நம்பிக்கைக்கு உரியன என்கிறார்கள், இத்துறையில் உள்ள நிபுணர்கள்.


Last edited by சிவா on Sat May 10, 2014 8:40 am; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா on Sat May 10, 2014 8:40 am

நகையை மாற்றுகிறீர்களா..?

ஏற்கெனவே நம்மிடம் உள்ள பழைய நகையை நகைக் கடையில் விலைக்கு கொடு த்துவிட்டு புது நகை வாங்குவது, அல்லது அந்த நகையை உருக்கி, புது நகை செய்வது போன்றவை நம்மிடம் நிலவும் பழக்கங்கள். அப்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்…

10. பொதுவாக, ஒரு மாடல் தங்க நகையை அழித்துவிட்டு, வேறு மாடல் நகையை செய்யும்போது நஷ்டம் ஏற்படும்தான். ஏனெனில், தங்கத்துடன் கலந்திருக்கும் செ ம்பு, நகையை உருக்கும்போது வேஸ்ட்டாகி விடும். அதைத்தான் ‘கழி வு’ என்கிறார்கள்.

11. அவ்வப்போது வருகிற டிசைனை அப்டேட் செய்து போட வேண் டும் என்ற ஆவல் உள்ளவர்கள், ‘ஹால்மார்க்’ நகைகளை வாங்கி, விருப்பப்படும்போது மாற்றிக் கொள்ளலாம்.

12. எல்லா கடைகளிலும் ஹால்மார்க் நகைகளை, அன்றைய சந்தை மதிப்பின்படி எடுத்துக் கொள்வார்கள். கழிவும் குறைவு.

13. எந்த ஊரில், எங்கு நகை வாங்கினாலும் பில், கியாரண்டி கார் டுகளைப் பத்திரப்படுத்துங்கள். சமயத்துக்கு அது உதவும்… எல் லா வகையிலும்.

14. நகையை மாற்றிவிட்டு புதிய நகை எடுக்க நினைப்பவர்கள், முன்பு அந்த நகையை வாங்கிய அதே கடையில் அதைச் செய்வ துதான் சரியான முடிவு. ஏனென்றா ல், அங்குதான் சரியான மதிப்பிலான தொகை கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

15. நகையை விற்றுவிட்டு பணமா கப் பெறுவது அவ்வளவு எளிதல்ல. வேறு நகைகளை வாங்கிக் கொள்ளச் சொல்லித்தான் வலியுறுத்துவார் கள். அதேசமயம், வாங்கிய கடையி லேயே கொடுக்கும்போது பணமாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கிராமு க்கு 8-10 ரூபாய் வீதம் கழித்துவிட்டு, மீதத் தொகையை கணக்கிட்டு பணம் தருவார்கள்.

16. ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளை வாங்கும்போது, எந்தக் கடையில் வாங்குவது என்ற சரியான முடிவில்தான் அதன் தரம் உள்ளது. நல்ல கடைகளைத் தேர்வு செய்வது முக்கியம். கட்டாயம் ‘பில்’களைப் பத்திரப்படுத்தவும்.

17. கவரிங் நகைகளில் கூட ’22 கேரட்’, ‘கே.டி.எம்’ முத்திரைகளைப் பொறித்து ஏமாற்றி விற்பவர்களும் உண்டு. சரி, எப்படிக் கண்டுபிடிப்பது அதன் தரத்தை..? தங்கத்தை கண்டறிய சிறந்த வழி… உரை கல்லில் உரசப்பட்ட தங்கத்தில், நைட்ரிக் அமிலத்தை லேசாக வைக்கும்போது… அது மின்னி நுரைத்தால், நல்ல தங்கம். பச்சையாக நுரைத்து வந்தால்… சந்தேகமே இல்லாமல் கவரிங்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா on Sat May 10, 2014 8:41 am

தங்க ஆபரணங்களைப் பாதுகாக்க..!

ஆபரணங்கள் புதிதாக வாங்கியபோது இருந்த பொலிவு, எப்போதும் நீடித்திருக்க, அதற்கான பராமரிப்பை நாம் கொடுத்தாக வேண்டும். அதற்கு…

18. தங்க நகைகளை அணிந்து, கழற்றி வைக்கும்போது, சோப்பு நுரையில் நன்கு அலசி, மென்மையான காட்டன் துணியில் துடைத்து பத்திரப்படுத்தி வைத்தால் எப்போதும் பொலிவுடன் இருக்கும்.

19. அதேபோல, அதிக நாட்கள் நகைப் பெட்டியில் வைத்த நகைகள் செம்மை நிறம் படிந்தோ… பச்சை நிறம் படிந்தோ காட்சி அளிக்கலாம். அதை, பெட்டியிலிருந்து எடுத்து அப்படியே அணியாமல், சோப் நுரையில் அலசி அணிந்தால், ‘புத்தம் புது மலரே’ என பொலிவாக இருக்கும்.

20. அன்றாட பயன்பாட்டுக்கு எப்போது ம் போட்டிருக்கும் வளையல், கம்மல் போன்ற நகைகள் பாலிஷ் மங்கி காணப்படும். அவற்றை உடனடி யாக பளபளக்க வைக்க ஷாம்புவினால் கழுவலாம். அல்லது, பூந்திக்கொட்டையை தண்ணீரில் ஊற வைத்து, அந்தத் தண்ணீரில் கழுவி, மென்மையான துணியால் துடைக்க… ‘தகதக’வென மின்னும்.

21. எப்போதாவது ஒருமுறை அணியும் ஆரம், நெக்லஸ், கல் வளை யல் போன்ற நகைகளை ஒன்றோடு ஒன்று உரசாமல், வளையாமல், அதற்காக கொடுக்கப்பட்டுள்ள நகைப் பெட்டிகளில் தனித்தனியாக வைப்பது சிறந்தது.

22. நகைகளை அலுங்காமல், குலுங்காமல் வைக்க நகைப் பெட்டி இல்லை அல்லது இருப்பவை போதவில்லை… பீரோவில்தான் வைக்க வேண்டும் என்ற நிலை. என்ன செய்வது..? நகைகளை ‘பனியன்’ மாதிரியான காட்டன் துணியில் சுற்றி, பீரோ லாக்கரினுள் வைக்கலாம். பத்திரமாக இருக்கும்.

23. நகைப் பெட்டியில் வைத்தாலும்கூட, அடிக்கடி எடுத்துப் பயன்படுத்தாத நகைகளை இப்படி துணி சுற்றி, அந்தப் பெட்டிக்குள் வைத்தால் பளபளப்பு குறையாது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா on Sat May 10, 2014 8:41 am

வெள்ளி கொலுசு மணி..!

நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். அரைஞாண் கயிறு, கொலுசு, மெட்டி என குழந்தை பிறந்ததிலிருந்து ஒட்டி உறவாடும் இந்த வெள்ளி நகை களை எப்படி தரம் பார்த்து வாங்குவது, மாற்றுவது, பராமரிப்பது..?

24. தங்கத்திலிருக்கும் ‘ஹால்மார்க்’ மாதி ரியா ன முழு நம்பகத்தன்மையை ஏற்படு த்தும் பொதுவான முத்திரைகள், வெள்ளி நகைகளுக்கு இல்லை. ஆகையால், அவற்றை நம்பிக்கையான கடைகளில் வாங் குவது நல்லது.

25. வெள்ளி ஒரிஜினலா என எப்படிக் கண் டறிவது..? நைட்ரிக் அமிலம், தூய வெள் ளியின் மீது படும்போது நுரைத்தால் அது நல்ல வெள்ளி.

26. வெள்ளி நகையை வெண்மையான சுவரில் தேய்க்கும்போது கறுப்புக் கோடு விழுந்தாலும், அது 100% வெள்ளிதான். அதற்காக, அடிக்கடி தேய்த்தால் வெள்ளி வீணா கிவிடும்!

27. வெள்ளி நகைகள், 80 டச் தரத்தில் கிடைத்தால் அது வெரிகுட் வெள்ளி.

28. பெரும்பாலும் வெள்ளிக் கொலுசுகள் 60 டச் தரத்தில்தான் கிடைக்கும். ஆனால், விலையோ 80 ‘டச்’ அளவுக்கானதாக இருக்கும். காரணம், 20 சதவிகிதம் இதில் சேதாரமாகவே போய் விடும். இனிமேல் வாங்கும்போது இதையெல்லாம் விசாரித்து தெளிவு பெற்று வாங்குங்கள்.

29. வெள்ளியை மாற்றி, வேறு வெள்ளி நகை வாங்க முடி வெடுத்தால், முன்பு எந்தக் கடையில் அதை வாங்கினீர்களோ… அங்கே யே விற்றால் சரியான விலை கிடைக்கும்.

30. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையான அடையாள வார்த்தைகள் வெள்ளி நகைகளில் பொறிக்கப்படுகின்றன. அதனால், நகைகளை வாங்கிய ஊரிலேயே விற்றால்தான் அதற்கான விலை கிடை க்கும்.

31. வெள்ளி நகை வியாபாரங்களில் ஊரு க்கு ஊர் பல சூட்சமங்கள் உள்ளன. தமிழ கத்தின் மேற்கு மாவட்டங்களில் பெரும் பாலான நகைக் கடைகளில் வெள்ளி கொ லுசை வாங்கும்போது திருகாணி யுடன் சேர்த்து எடை போடுவார்கள். ஆனால், அதே கடையில் திரும்ப விற்கு ம்போது திருகாணியைக் கழற்றி விட்டு எடை போடுவார்கள். ஏனென்றால், அங்கு திருகாணிகள் பெரும்பாலும் வெள்ளியில் செய்யப்படுவதில்லை என்பதே காரணம். இனி, இதையும் கவனி த்தே கொலுசு வாங்குங்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா on Sat May 10, 2014 8:41 am

பராமரிப்பு:

32. ‘வெள்ளி நகையை என் தங்கை அணிந்தால் கறுத்துப் போகாமல் அப்படியே இருக்கிறது. அதுவே நான் அணிந்தால்… கறுத்து விடுகிறது’ – இப்படி பல சந்தர்ப்பங்களில் கேள்விப்பட்டிருக்க முடியும். இது அந்த நகையை அணிந்திருப்பவரின் உடல் வெப் பத்தைப் பொறுத்தது. உடல் வெப்பம் அதிகமாக இருந்தால், வெள்ளி கறுக்கும். குளிக்கும்போது வெள்ளி நகைகளையும் குளிப்பாட்டினால்… கறுப்பழகி, வெள்ளையழகியாகலாம்.

33. வெள்ளி நகைகள் கறுத்துப் போனால் பல் துலக்கும் பேஸ் ட்டினால் கழுவலாம்; கடுமையான அழுக்கு ஏறி இருந்தால், பூந்திக்கொட்டை ஊற வைத்த நீரில் கழுவலாம்.

34. தயிர், எலுமிச்சம் பழம் போன்றவையும்கூட, அழுக்கை சுத்தமாக நீக்கும். ஆனால், இவற்றை அடி க்கடி உபயோகித்தால், அவற்றில் உள்ள அமிலம் வேதி வினைபுரிந்து, வெள்ளியைக் கரைக்கக்கூடும்.

35. வெள்ளி, நொடியில் பளபளக்க வேண்டுமா…? வீட்டில்இருக்கும் மென்மையான திருநீறைப் போட்டு மெள்ளத் தேய்த்தால்… விரும்பிய ரிசல்ட் கிடைக்கும்.

வெள்ளிப் பாத்திரங்கள்

பிறந்த வீட்டு சீதனமாகவோ, வீட்டு விசேஷங்களுக்கு கிஃப்ட்டாகவோ வந்த வெள்ளிப் பாத்திரங்களை காலத்துக்கும் பத்திரமாக பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டும் அல்லவா..? கூடவே, குழந்தைக்கு ஆசையாக சோறு ஊட்ட கிண்ணம், ஸ்பூன், டம்ளர், பூஜை சாமான்கள் என வெள்ளியில் வாங்கும்போது, தரம் குறையாமல் பார்த்து வாங்க வேண்டும் அல்லவா..?

36. வெள்ளி நகைகளைப் போலவே பாத்திரங்களையும் நம்பிக்கையான கடையில் வாங்க வேண்டும். வாங்கும்போது, அதில் சீல் இருக்கிறதா என கண்டிப்பாகப் பார்த்து வாங்குவது விலை கொடுத்து வாங்கும் காசுக்கு நல்லது.

37. வெள்ளிப் பாத்திரங்கள் பொலிவிழக்காமல் இருக்க வேண்டு மானால், கண்டிப்பாக ஸ்டீல் பீரோவிலோ… ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் மற்றும் பித்தளை பாத்தி ரங்களுடன் கலந்தோ வைக்காமல் இருப்பது நல்லது.

38. நியூஸ் பேப்பர் அல்லாத மற்ற பேப்பர்கள், பிரவுன் கவர் பேப்பர்களில் சுற்றி வைக்கலாம்.

39. பாட்டி காலத்து மரப்பெட்டி இருந்தால், அதைத் தூக்கி எறிந்துவிட வேண்டாம். அதற்குள் வெள்ளிப் பாத்திரங்களை பத்திர ப்படுத்தி வைக்கலாம். மர பீரோவில் வைப்பது மிகச்சரியான சாய்ஸ்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா on Sat May 10, 2014 8:42 am

கல் நகை வாங்குவோர் கவனத்திற்க்கு!

எத்தனை நகைகளை அள்ளி அள்ளி அணிந்தாலும் ஒரே ஒரு கல் நகை அணிந்தால், அது மற்ற நகைகளையும் ‘டாப்’பாகத் தூக்கிக் காட்டும் என்பதுதான் ஜொலிஜொலிக்கும் கல் நகைகளின் சிறப்பு. அதை வாங்குவதில் இருக்கும் சூட்சமங்கள், சென்ட்டிமென்ட்களைப் பார்ப்போமா..?

40. பொதுவாக, கல் நகைகள் வாங்குவதற்கு பெரும்பாலானவர்கள் தயங்குவார்கள். காரணம், தங்க நகையின் மொத்த எடையில் நான்கில் ஒரு பங்கு எடையை இந்தக் கற்களே நிரப்பி விடும் என்பதால், விற்கும்போது சிரமம்.

41. பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் வளையல், தோடு, மூக்குத்தி, நெக்லஸ் போன்றவற்றில் பயன்படுத்தப்படுவது அமெரிக்கன் டயமண்ட் (ஏ.டி. கல்) எனப்படும் கற்கள்தான். இது கொஞ்சம் எடை அதிகமுள்ளது, பளபளப்பும் அதிகமுள்ளது என்பதால்தான் இதைப் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள்.

42. ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் பெரும்பான்மையான நவரத்தின கற்கள் நம்மூரில் கிடைப்பவைதான். அதில், நொய்யல் நதிக் கற்கள் புகழ் வாய்ந்தவை.

43. நவரத்தினக்கற்களை வாங்கும்போது பழக்கப்பட்ட, தெரிந்த கடைகளில், முழு விளக்கங்களையும் கேட்ட பின்பு, வாரன் டியுடன் வாங்குவதே புத்திசா லித்தனம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா on Sat May 10, 2014 8:42 am

வைரக்கற்கள்:

44. வைரங்களின் நிறம், தரம், அது கிடை ப்பதில் இருக்கும் தட்டுப்பாடு… இவையே அவற்றின் விலையை நிர்ண யிக்கின்றன.

45. வைரக்கற்களும் ‘கேரட்’ அளவால் மதிப்பிடப்படுகின்றன. உதாரணமாக, 200 மில்லி கிராம் என்பது ஒரு கேரட், 2 மில்லி கிராம் ஒரு சென்ட். இந்த அளவின் அடிப்படையில்தான் வைரங்கள் மதிப்பிட ப்படுகின்றன.

46. ஒரு சென்ட் வைரம், பொதுவாக 2 முதல் 6 ஆயிரங்கள் வரை விற்கப்படுகிறது.

47. வைரத்தைப் பதித்திருக்கும் நகை, அல்லது அதைப் பிணைத்திருக்கும் நகையின் பிணைப்பு உறுதியாக உள்ளதா என்பதைப் பார்ப்பது முக்கியம். பிணைப்பு அறுந்தால் வைரம் அதோகதிதான்.

48. வைரம் உள்ளிட்ட கற்கள் விஷயத்தில் பல சென்டிமென்ட்கள் உள்ளன. அவற்றில் நம்பிக்கை உள்ளவர்கள், வைரம் வாங்குவதற்கு முன் உங்கள் ராசிக்கு அது சரியானதா என்பதை தெரிந்து வாங்கவும். நம்பிக்கை இல்லாதவர்கள் கோ அஹெட்!

பராமரிப்பு:

49. சாதாரண கல் நகைகளை, எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது கழற்றி வைத்து விட்டால், எண்ணெய் இறங்கி அதன் ஷைனிங் டல்லாகிவிடுவது தவிர்க்கப்படும்.

50. ஒருவேளை கற்களின் ‘ஷைனிங்’, ‘ஐயே’ என்று முகம் சுளிக்கும் அளவுக்கு குறைந்திருந்தால், அதை மாற்றிவிடுவதுதான் சிறந்த வழி.

51. கல் நகை, வைர நகைகளை உபயோகித்த பின்பு, அதற்கான பிரத்யேகப் பெட்டிகளில் மட்டுமே வைக்க வேண்டும். அதிலும் மென்மையாக வெல்வெட் துணியில் வைப்பதுதான் மிக முக்கியம்.

52. வைரம் உறுதியானது என்பதால் பராமரிக்க எளிதுதான். ஆனால், வைரத்தோடு கண்ணாடி உரசாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

53. வைரமானாலும் சாதாரணக் கற்களானாலும் தினசரி உபயோகத்துக்கு கல் நகைகளை பயன்படுத்தக் கூடாது. மோதிரங்கள்..? ஒகே… பயன்படுத்தலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா on Sat May 10, 2014 8:43 am

முத்தான முத்தல்லவோ!

நவரத்தினங்களில் நாம் அதிகம் பயன்படுத்துவது முத்துதான். இதன் வெண்மை நிறம், அழகு, விலை உள்ளிட்ட காரணங் களுக்காக இது ‘பெண்களின் சாய்ஸாகி’, முத்து மாலை, முத்து ஜிமிக்கி, முத்து வளையல் என பல ரூபங்களில் வசீகரிக்கிறது. அதை தரமானதாக வாங்க மற்றும் அதே தரத்துடன் பாதுக்காக்க…

54. முத்து வலிமையானது; அதன் தரத்தை எளிதில் கண்டுபிடிக்க வழி… வாயில் வைத்து கடிக்கும்போது மிகக் கடினமாக இருந்தால்… அது ஒரிஜினல். கொஞ்சம் நொறுங்குவது போல் இருந்தாலும் அது போலி!

55. முத்தைக் கடித்துப் பார்க்க எந்தக் கடைக்காரரும் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதால், வாரன்டி கொடுக்கும் கடைகளில் முத்தை வங்குவதுதான் நல்லது.

பராமரிப்பு:

56. முத்து நகைகளை தினசரி பயன் பாட்டுக்கு பயன்படுத்தினால் சீக்கிரம் அது பொலிவை இழந்து விடும் என்பதால் சிறப்புத் தருணங்களில் மட்டும் பயன்படுத்தலாமே!

57. முத்து நகைகளை உபயோகித்த பின், மென்மையான காட்டன் துணியில் பொதித்து வைத்தால் எப்போதும் அதே பொலிவுடன் இருக்கும்.

58. முத்து நகைகளின் மீது எந்த ஒரு திரவ வேதிப்பொருளும் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

59. தயிர், எலுமிச்சைச் சாறு போன்றவை முத்தின் மீது பட்டால், அதன் பொலிவு உடனடியாக மறையும். சரும அழகுக்காக தயிர், எலுமிச்சைச் சாறு போன்றவற்றை முகத்தில் தேய்ப்பவர்கள்… முத்து கம்மல், வளையல் போன்றவற்றைக் கழற்றி வைத்துவிட்டு, அந்த வேலையைச் செய்யலாம்.

60. முத்து நகைகளை அதிக வெப்பமான இடத்தில் வைக்கக் கூடாது. வறண்ட பகுதி, முத்துக்கு எதிரி! உலர்ந்த, நிழல்மிக்க இடங்களில் வைக்க வேண்டும்.

61. முத்து நகைகளை எளிதில் சாயம் போகும் தன்மையுள்ள பேப்பரிலோ துணி யிலோ வைத்தால் அதன் நிறம் மங்கும் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும்.

62. முத்தை அதிக உராய்வு படாமல் பாது காக்க வேண்டும். இல்லையெனில் தேய் ந்து, அழகை இழந்து விடும்.

63. முத்துக்களைக் கண்டிப்பாக தூய பட்டு நூலில் மட்டுமே கோக்க வேண்டும். வேறெந்த நூல் மற்றும் உலோகக் கம்பிகளைப் பயன்படுத்தினாலும், அதன் நீண்ட ஆயுளுக்கு கியாரன்டி இருக்காது.

64. பெர்ஃப்யூம் ஸ்ப்ரே பயன்படுத்துபவர்கள், அது முத்தின் மேல் நேரடியாகப் படாமல் பயன்படுத்த வேண்டும். அல்லது ஸ்ப்ரே பயன்படுத்திய பிறகு, முத்து நகைகளை அணியலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா on Sat May 10, 2014 8:43 am

பவளம்… கவனம்!

நவரத்தினங்களில் முத்துக்கு இணையாகப் பயன்படுத்தப்படுவது பவளம். இதன் மயக்கும் சிவப்புக்கு மயங்கியே இதை அணிபவர்கள் பலர். இந்தச் சிவப்பு பவளங்களைப் பார்த்து வாங்குவதும், பராமரிப்பதும் இப்படித்தான்…

65. பவளத்தின் தரத்தை எப்படி அறிந்து கொள்வது என்பதுதான் அதை வாங்கும்போது வரும் முதல் கேள்வி. ஆழந்த சிவப்பு நிறம் உடைய பவளங்கள்தான் ஒரிஜினல்.

66. குறைந்த விலையில், பவளம் கிடைத்தால் அது டூப்பு பவளம். தரமான பவளத்தின் விலை அதிகம்.

67. முழுமையான ஃபினிஷிங் இல்லாமல், அங்கங்கு குழிகள், ஓட்டைகளோடு இருப்பதை வைத்தே டூப் பவளம் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்!

68. பவளத்தின் தரத்தை உறுதி செய்ய ஓர் உபாயம் இருக்கிறது. அதாவது, சுத் தமான பாலில் பவளத்தைச் சிறிது நேரம் போட்டு வைக்க, பாலின் நிறம் மாறாமல் அப்படியே இருந்தால்… அது போலி. பாலின் நிறம் கொஞ்சம் இளஞ்சிவப்பாக மாறினால்தான் அது ஒரிஜினல்!

69. சில நாட்களுக்கு தொடர்ந்து பவள நகையை போட்டுக் கொண்டிருக்க, உங்களுக்கு ஜுரம் வருகிறது. அப்போது அதன் நிறமும் டல்லாகிறது. அப்படி யானால் அது போலிதானே?! இல்லவே இல்லை. இதுதான் சூப்பர்-ஒரிஜினல் பவ ளம். உடலின் அதிகப்படியான சூடு காரணமாக ஒரிஜினல் பவளத்தில் வேதிவினை மாற்றம் ஏற்படு வதுதான் காரணம்.

பராமரிப்பு:

70. பவள நகைகளின் மேல் பெர்ஃப்யூம் படுவதும், அதன் பொலிவை பாதிக்கும்.

71. முத்தைப் போலவே பவளத்தையும் மென்மையான துணியில் வைத்தால், பொலிவை இழக்காமல் அப்படியே இருக்கும்.

72. பவளத்தால் ஆன மணி உள்ளிட்டவை, மற்ற உலோகத்தால் ஆன நகைகளுடன் உரசுவது போல் தொடர்ந்து பயன்படுத்தினால், சீக்கிரம் பவளம் பாழாகிவிடும். எனவே, அப்படி அணிவதை தவிர்த்து விடலாமே..!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா on Sat May 10, 2014 8:44 am

பிளாட்டினப் பிரியர்களுக்கு!

தங்கத்தைவிட காஸ்ட்லியானது பிளாட்டினம். அதைப் பற்றி தெரிந்து கொள்வோமா..?

73. தங்கத்தைவிட, விலை அதிகமான பிளாட்டினத்துக்கு, இந்தியாவில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. பிளாட் டினம் வாங்குவது என்று முடிவு செ ய்து விட்டால், அதிகம் பேர் வாங்கு கிற, நம்பிக்கையான, பெரிய கடை களில் வாங்குவதே நல்லது.

74. வெள்ளியைப் போல்… ஆனால், வெள்ளியைவிட அழகானது பிளாட்டினம். வெண்மை நிறத்தில் இருக்கும். நிறம் மங்கலாக இருந்தால், அது டுபாக்கூர்!

75. ஒரிஜினல் பிளாட்டினம் நகைகளில் ‘பிடி’ (றிஜி) என்ற முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். ‘பிளாட்டினம் கில்ட் இந்தியா’ என்கிற அமைப்பு இந்த முத்திரையைக் கொடுக்கிறது.

76. சம எடையுள்ள தங்கம், பிளாட்டினம் நகைகளை கையில் வைத்து ஃபீல் பண்ணும்போது, பிளாட்டினம் நகை கூடுதல் எடையுடன் இருப்பது போல் உணர்வோம். ஆனால், எடை மெஷினில் சரிபார்க்கும்போது இரண்டின் எடையும் சமமாக இருக்கும். இதுதான் பிளாட்டினத்தின் சிறப்பு!

77. பிளாட்டின நகையில் ‘பிடி-95′ என்று பொறிக்கப்பட்டிருந்தால், அதுதான் ஹை ஸ்டாண்டர்டு பிளாட்டினம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா on Sat May 10, 2014 8:44 am

கவரிங்!

தங்க நகைகளைப் பயன்படுத்த முடியாத நேரங்களில், அதைப் போலவே ஜொலிஜொலிக்கும் கவரிங் நகைகள்தான் கைகொடுக்கும். இதிலும் விதம்விதமான வளையல், செயின், ஆரம், நெக்லஸ், கம் மல், மோதிரம் என அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டி ருக்கி ன்றன. காசு கொடுத்து வாங்கும் அந்த நகை களுக்கும் கொடுக்க வேண்டும்தானே கவனம்?!

78. ‘தங்கம் மாதிரியே இருக்குதே இந்த கவரிங்… எப்படி?’ என் பவர்களுக்கு… செம்பு நகைகளின் மேல் தங்க முலாமை சரியான விகிதத்தில் கலந்து பூசுவதில்தான் இந்த நகைகள் அந்த ஜொலிஜொலிப்பை பெறுகின்றன.

79. எத்தனை கிராம் தங்கம், முலாமாகப் பூசப்படுகிறது என்பதில்தான் கவரிங் நகையின் தரமும் விலையும் இருக்கிறது.

80. இன்று இதன் சந்தை, எதிர்பாராத விதமாக விரிவடைந்து ள்ளதால், அரை கிராம், 1 கிராம், 2 கிராம், 4 கிராம் என பலவகை கோட்டிங்களில் கவரிங் நகைகள் கிடைக்கின்றன. நம் வசதிக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.

81. இதன் கோட்டிங் அளவுதான், அதன் பள பளப்புத் தரத்தை நிர்ணயிக்கும். உதார ணமாக, அரை கிராம் கோட்டிங் நகைகள்… 6 மாதம், 1 கிராம் கோட்டிங் நகைகள்… 1 வருடம் என அதன் கோட்டிங் அளவே, அதன் பளபளப்புக்கான ஆயுளை நிர்ண யிக்கும்.

82. அரை கிராம் கோட்டிங் நகையை எப் படி அடையாளம் காணுவது…? அதில் 500 என்று சீல் பொறிக்கப்பட்டு இருக்கும். அதே போல, ஒரு கிராம் கோட்டிங் நகை களில் 1000 என்றும், 2 கிராம், 4 கிராம் நகைகளில் முறையே 2, 4 எனவும் பொறி க்கப்பட்டிருக்கும்.

83. கவரிங் நகைகளில் போலிகள் அதிகம் புழங்கும் என்பதால், பெயர் பெற்ற கடைகளில் வாங்குவதுதான் சிறந்த வழி. அதுவும் கியாரன்டியுடன் வாங்குவது ரொம்ப நல்லது.

84. பேன்ஸி ஸ்டோர்களில் மிகக்குறைவான விலைகளில் கியாரன்டி இல்லாமல் கிடைக்கும் கவரிங் நகைகள், மைக்ரோ கவரிங் வகை நகைகள். இவற்றை அணிந்த ஒரு வாரத்தில்கூட கறுத்து விடலாம் என்பதால் வாங்குவதற்கு முன் யோசியுங்கள்.

85. கவரிங் நகைகள் கறுத்து விடுவதோடு மட்டுமல்லாமல், சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கி, அணியும் இடத்தில் புண்கூட உண்டாகும். எனவே, கூடுதல் ஜாக்கிரதை உணர்வு தேவை!

பராமரிப்பு:

86. கவரிங் நகைகளை அணிபவர்கள், அவற்றைத் தொடர்ந்து அணியாமல், தேவைப்படும் சமயங்க ளில் மட்டும் அணிந்தால் சீக்கிரம் கறுக்காது.

87. பயன்படுத்திய பின்பு, உப்பு இல்லா த நல்ல தண்ணீரில், சோப் போடாமல் கழுவி, ஈரம் போகத் துடைத்து மென் மையான துணி, அல்லது பேப்பரில் வைத்தால்… பொலிவுடன் இருக்கும்.

88. கவரிங் நகைகளை அணியும் சமயங்களில் அதன் மேல் உப்பு தண்ணீர், வியர்வை படாமல் பார்த்துக்கொண்டால் நீண்ட நாட்கள் கறுக்காமல் இருக்கும்.

89. பயன்படுத்திக் கொண்டிருக்கும் கவரிங் நகை கறுக்க ஆரம் பித்தால், உடனே மாற்றுவதுதான் நல்லது. பாலிஷ் போட்டாலும் நீண்ட நாள் உழைப்பதற்கு உத்திரவாதம் இல்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா on Sat May 10, 2014 8:45 am

ஃபேஷன் ஜுவல்லரி…

டீன்-ஏஜ் யங்ஸ்டர் மட்டுமில்லை… இள வயது அம்மாக்களும் இப்போதெல்லாம் ஃபே ஷன் ஜுவல்லரி நகைகளை அழ கழகாக அணிந்து வலம் வருகிறார்கள். அவர்களுக்காக…

90. பெரும்பாலான ஃபேஷன் நகைகள் கல் வைத்துதான் செய்யப்பட்டிருக்கும். அந்த நகைகளை அணியும்போது, அவை மற்ற நகைகளுடன் உராயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சீக்கிரம் உடைந்து போகாமல் இருக்கும்.

91. ஸ்டோன் நகைகள் அதிகம் பயன்படுத் துவோர், கையில் எப்போதும் சிறியதாக கம் டியூப் (பசை) வைத்திருப்பது நல்லது. கல் உதிர்ந்து விழும்போது உடனே ஒட்டிக்கொள்ள வசதியாக இருக்கும்.

92. நெக்லஸ் வாங்கும்போது கடைகளில் அதற்கான சிறப்பு பாக்ஸில்தான் போட்டுக் கொடுப்பார்கள். அதிலேயே அந்த நெக்லஸை வைத்திருந்தால்தான், அதன் வடிவம் மாறாமல் இருக் கும். இல்லையென்றால் முறிந்து, பயன்படுத்த முடியாதபடி வீணாகும்.

93. நெக்லஸ் செயின், ஹ¨க்கில் இருக்கும் கோல்டன் கோட்டிங், வெயில் காலத்தில் வியர்வைக் கசிவால் சிலருக்கு கழுத்தில் அலர்ஜியை உண்டாக்கலாம். அதைத் தவிர்க்க, அதன் மேல் நெயில் பாலிஷை (நெயில் கலர்) தடவ, அந்த பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். கவரிங் நகையென்றாலே அலர்ஜி ஏற்படும் என்பவர்கள், ஆசைக்குகூட அதைப் போடாமல் தவிர்ப்பதுதான் நல்லது.

94. ‘ஸ்டெட்’ எனப்படும் கம்மல் நகைகள் அதிகம் பயன்படுத் துபவர்கள், அதை ஒரு அட்டையில் ஓட்டை போட்டு அதில் பொருத்தி வைத்துவிட்டால், சரியான சமயத்தில் ஜோடியாக எடுத்துக் கொள்ள முடியும்.

95. வளையல்கள் அதிகம் வைத்திருப்பவர்கள், வளையல் ஸ்டாண்டுகளில் மாட்டி வைத்து விட்டால் ஜோடி மாறாமல் அவசரத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா on Sat May 10, 2014 8:45 am

வொயிட் கோல்ட்…

இன்றைய இளைஞர்களின் பெரு விருப்பமாக இருப்பது வொ யிட் கோல்ட். இதில் மோ திரம், பிரேஸ்லெட் போ ட்டுக் கொள்வது அவர்களின் ஃபேஷன். சரி, அது என்ன வொயிட் கோல்ட்..?

96. தங்கத்தின் மீது வெள்ளை நிற கோட்டிங் கொடுத்து செய் யப்படும் நகைகள்தான், வொயிட் கோல்ட் நகைகள். வெள்ளை நிற கோட்டிங்கில் நிக்கல், துத்தநாகம், பல்லேடியம் என்ற உலோகங்கள் கலக்கப்படுகின்றன.

97. ஒரு நகையில் தங்கம், மற்ற உலோகங்கள் எத்தனை சதவிகிதம் கலக்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்துதான், இந்த ஒயிட் கோல்ட் நகையின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, 14 கேரட் வொயிட் கோல்ட் நகை என்றால், அதில் 58.3% தங்கம் இருக்கும். மீதி இருப்பவை மற்ற உலோகங்களால் ஆன கோட்டிங்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா on Sat May 10, 2014 8:47 am

பச்சை மரகதமே…பச்சை மரகதமே!

நவரத்னங்களில் முத்து, பவளம், வைரத்துக்கு அடுத்தபடியாக மரகதக் கல்லும் பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கல்லின் மகத்துவம்…

98. மரகதக்கல்லின் மனம் கவரும் பச்சை வண்ணம்தான் அதன் சிறப்பு. ஜோதிடத் தில் நம்பிக்கை உள்ளவர்கள், அதன் குணம் பற்றி தெரிந்த பின்பு ராசிக்கு ஏற்ப அணி ந்து கொள்வது நல்லது. நம்பிக்கை இல்லாதவர்கள்.. இதன் அழகு நிறத்துக்காக அணியலாம்.

99. ஒரிஜினல் மரகதக்கல் பளபளப்புடனும் சரியான ஃபினி ஷிங்கிலும் கிளாரிட்டியுடனும் இருக்கும். செயற்கையாகத் தயாரிக்கப்படும் கல்லில் கிளாரிட்டி மங்கலாக இருக்கும்.

100. இதையும் ‘கேரட்’ குறியீட்டால்தான் அளவிடுகிறார்கள். இதன் தரம், கிளாரிட்டி, ஃபினிஷிங் அடிப்படையில் இதன் விலை. ஒரு கேரட் 200 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை தரத்தைப் பொறுத்து வேறுபடும்.

உங்கள் நகைகள் உங்களுக்கான சொத்து, அடையாளம். அதை கட்டிக் காப்பாற்றுங்கள்

[thanks] கதிரவன்.காம் [/thanks]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா on Sat May 10, 2014 8:51 am


தங்கத்தின் தரம்

தங்கத்தின் தரம் கேரட் (KARAT) என்ற அலகால் அறியப்படுகிறது. சுத்தமான தங்கம் என்பது 24 கேரட் ஆகும். அதாவது 99.9%. முதலீட்டுக்காக தங்கம் வாங்குபவர்கள் 24 கேரட் தங்க கட்டியாக வாங்குவார்கள். இதனை கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது. நகை செய்ய வேண்டுமெனில் தங்கத்துடன் சில உலோகங்களை சேர்த்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அதன் தரம் 22 கேரட், 18 கேரட் தங்கமாக மாறுகிறது. இது தான் ஆபரணத் தங்கமாகும்.

24 கேரட் என்பது 99.9%
22 கேரட் என்பது 91.6%
18 கேரட் என்பது 75.0%
14 கேரட் என்பது 58.5%
10 கேரட் என்பது 41.7%
9 கேரட் என்பது 37.5%
8 கேரட் என்பது 33.3%

ஹால்மார்க்:

நாம் வாங்கும் தங்கம் 22 கேரட்டா அல்லது 18 கேரட்டா என்று எப்படி தெரிந்து கொள்வது. இதற்குதான் ஹால்மார்க் முத்திரை உதவுகிறது.

ஹால்மார்க் தர சான்றிதழை வழங்குவது யார்?

இந்திய அரசின் தர கட்டுப்பாடு அமைப்பான “பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு ” (Bureau of Indian Standards) என்ற அமைப்பு தான் ஹால்மார்க் முத்திரையை வழங்குகிறது. இதைத்தான் BIS முத்திரை பதித்த நகைகள் என்றும் கூறுவார்கள். இந்த முத்திரை கொடுப்பதற்கு நாடு முழுவதும் பல டீலர்களை லைசென்ஸ் கொடுத்து நியமித்திருக்கிறார்கள். இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும். நகை கடை உரிமையாளர்கள், பொற்கொள்ளர்களிடமிருந்து வாங்கிய நகைகளை இந்த டீலர்களிடம் கொடுத்து தரத்தை பரிசோதிக்கின்றனர். அவ்வாறு பரிசோதிக்கும் நகைகள் 22 கேரட் எனில் 91.6% ஹால்மார்க் முத்திரையும், 18 கேரட் எனில் 75% ஹால்மார்க் முத்திரையும் தருகின்றனர்

கவனிக்க வேண்டிய விஷயம்:

ஹால்மார்க் முத்திரை உள்ள நகை என்ற விவரம் மட்டும் போதாது, அதற்கு கீழே அந்த நகையின் தரம் எவ்வளவு என்பதயும் (91.6% or 75%) குறிப்பிடப்பட்டிருக்கும். அது தான் முக்கியம்.

நகை வாங்கும்போது 22 கேரட் என வாங்கிவிட்டு, விற்கப் போகும்போது 18 கேரட் என தெரிய வந்தால் உடனடியாக பி.ஐ.எஸ். அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த அலுவலகம் இருக்கிறது. தரம் குறைவாக இருக்கும் நகையை அவர்கள் பரிசோதித்து புகார் உறுதி செய்யப்பட்டால் அந்த ஹால்மார்க் முத்திரை வழங்கிய டீலரின் லைசென்ஸை உடனடியாக ரத்து செய்வார்கள்.

எந்த கடையில் நகை வாங்கினோமோ அந்தக் கடை கண்டிப்பாக நஷ்டஈடு வழங்கியாக வேண்டும். ஒருவேளை நஷ்ட ஈடு தர மறுத்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். சின்ன மோதிரமோ, காதில் அணியும் தோடோ அனைத்து நகைகளிலும் இந்த ஹால்மார்க் முத்திரை இருக்கும். ஹால்மார்க் முத்திரை வழங்கும் ஒவ்வொரு டீலருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளத்துடன் கூடிய முத்திரை இருக்கும். இந்த முத்திரையை வைத்து அதை வழங்கிய டீலரை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by சிவா on Sat May 10, 2014 8:54 am


தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்

உலக மக்கள் அனைவராலும் மிகவும் விரும்பக்கூடிய மற்றும் விலைமதிப்பற்ற உலோகம் தங்கமாகும். தங்கம் அனைவரும் அணியக்கூடிய ஒரு அற்புதமான நகை, அது மட்டுமல்லாமல் பணவீக்கம் மற்றும் சந்தையில் ஏற்படும் வீழ்ச்சி போன்றவற்றை ஈடுகட்டவும் உதவும். இதன் மற்றோரு முக்கிய பண்பு என்னவென்றால், இதை உலகம் முழுவதும் எளிதாக விற்க முடியும்.

இந்தியர்கள் தங்கத்தை தூய்மை மற்றும் செல்வ வளமையின் சின்னமாகவே நினைக்கிறார்கள். நீங்கள் தங்க நகைகள் வாங்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள் வருமாறு.

1. தங்கம் வாங்கும் போது அதன் தூய்மை, தரம் மற்றும் விலை போன்றவற்றை ஆராய்ந்து வாங்க வேண்டும்.

2. தூய்மை - தங்கத்தின் தூய்மையை கேரட் எனப்படும் அலகால் தெரிந்து கொள்ளலாம்.தூய தங்கம் மிகவும் மிருதுவானது என்பதால் தங்க நகைகளாக பயன்படுத்த முடியாது.எனவே வெள்ளி, செம்பு,நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்ற கலவையை தங்கத்துடன் சேர்ப்பதால் நகைகள் வலிமையுடனும் நீண்ட நாள் பயன்படுத்துவதாகவும் உள்ளது. பொதுவாக 18கே, 22கே அல்லது 24கே என தங்கத்தின் தூய்மையை அளவிடலாம்.

3. விலை-தங்க நகைகளின் விலை தங்கத்தின் தூய்மை, அதனுடன் சேர்க்கப்பட்டுள்ள கலவை, அதன் வேலைப்பாடுகள், செய்கூலி போன்றவற்றை பொறுத்து உறுதி செய்யப்படும்.

4. நிறம் - மஞ்சள் நிற தங்கம்,வெள்ளை நிற தங்கம் மற்றும் ரோஸ் தங்கம் என தங்கத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. நீங்கள் தங்கத்தை பல நிறங்களின் கலவையாக பெற விரும்பினால், வேறுபட்ட இரண்டு நிறங்களின் கலவையை பயன்படுத்தலாம். சுத்தமான தங்கத்துடன் மற்ற உலோகத்தை கலப்பதால், வேறுபட்ட நிறங்கள் கொண்ட தங்கத்தை பெறலாம். பலாடியம் மற்றும் வெள்ளி போன்ற வெள்ளை உலோகங்களை கலப்பதால் வெள்ளை நிற தங்கம் உருவாகிறது. இது பெரும்பாலும் அமெரிக்காவில் திருமண நகைகளாக பயன்படுகிறது. தங்கத்துடன் செம்பு கலப்பதால் மென்மையான பிங்க் நிறம் கொண்ட ரோஸ் தங்கம் கிடைக்கிறது. பச்சை, ஊதா மற்றும் கருப்பு போன்ற நிறங்களிலும் தங்கம் தயாரிக்கப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதும் மஞ்சள் நிற தங்கம் அனைவராலும் கவரப்படுகிறது. மேலும் இதுவே உயர்ந்த மற்றும் விலைமதிப்பற்ற ஒன்றாகும்.

5. அடையாளங்கள் - இந்தியா உட்பட்ட பல நாடுகளில் ஒவ்வொரு தங்க நகைகளும் கேரட் அல்லது அதன் தூய்மையை ஒரு தெளிவான முத்திரையால் குறிப்பிடுகிறார்கள்.இந்த அடையாளங்கள் ஹால்மார்க் திட்டத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. பிரபலமான தங்க நகை கடைகள் அவர்களது முத்திரை மற்றும் அடையாள முத்திரைகளை அவர்களே தங்க நகைகளில் முத்திரையிடுகின்றனர். இந்திய அரசாங்கம் பிஐஎஸ் எனப்படும் ஒரு தனி அமைப்பை உருவாக்கியுள்ளது. பிஐஎஸ் ஹால்மார்க் திட்டம் எனப்படும் சர்வதேச ஹால்மார்க் திட்டத்தையும் உருவாக்கியுள்ளது. பிஐஎஸ் எனப்படும் ஹால்மார்க் திட்டத்தின் கீழ் தங்க நகைகளுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. பிஐஎஸ் சான்றிதழ் பெற்ற நகை கடைகள் தங்களது நகைகளை பிஐஎஸ் ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற மையத்திலிருந்து பெறலாம்.

6. நகை கடைகளின் நற்பெயர்- தங்கத்தை ஒரு நம்பிக்கையான கடையில் தான் வாங்க வேண்டும். அந்த நகை கடையுடன் ஒரு நீண்ட கால உறவு இருக்க வேண்டும். நம்பகத்தன்மை மற்றும் போலி இல்லாத, நிரூபிக்கப்பட்ட தங்கம் கொண்ட கடைகளாக இருக்க வேண்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by கிருஷ்ணா on Sat May 10, 2014 11:19 am

 சாமானியர்கள் நைட்ரிக்அமிலம் வாங்கி வைத்துக்கொள்ள முடியுமா? அப்படியே வைத்திருந்தாலும் கடைக்கார்ர் நகைமீது ஊற்ற விடுவாரா? புன்னகை 
வெள்ளிக்கொலுசு அணிந்து கடல் நீரில் கால் வைத்தால் கறுத்த கொலுசு நல்ல வெள்ளி நிறம் வரக்கண்டிருக்கிறேன். அதன் வேதிவினை தெரியாது.
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 218

View user profile

Back to top Go down

Re: தங்கம் மற்றும் ஆபரணங்கள் - பயனுள்ள தகவல்கள் தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum