ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாடல் – கவிதை
 ayyasamy ram

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

பெட்ரோல் குரங்கு!
 ayyasamy ram

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருவேதிக்குடி வேதபுரீசுவரர் கோவில்

View previous topic View next topic Go down

திருவேதிக்குடி வேதபுரீசுவரர் கோவில்

Post by சாமி on Mon May 12, 2014 4:53 pmஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம். கி.பி. 900 ஆண்டில், தஞ்சையை ஆண்ட ஆதித்த சோழன், போரில் தான் பெற்ற வெற்றிகளுக்கு காணிக்கையாக காவிரியின் இருபுறத்திலும் இருந்த ஆலயங்களைப் புதுப்பித்தான். அப்படி புதுப்பிக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றுதான் திருவேதிக்குடி வேதபுரீசுவரர் ஆலயம்.

தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் 10 கி.மீ. அங்கிருந்து 3 கிலோ மீட்டரில் திருவேதிக்குடி கிராமம். சிற்றுந்து அல்லது தானி மூலம் அருள்மிகு வேதபுரீசுவரர் ஆலயத்தை அடையலாம்.

பிரம்மனுக்கு “வேதி’ என்ற ஒரு பெயரும் உண்டு. அந்த வேதியன் பூசித்ததால் வேதிக்குடி. கல்வெட்டுகளில் திருவேதிக்குடி. மகாதேவர் என்றும் இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். அத்துடன் வேதங்களும் இங்கு வந்து வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது.

நவகிரகங்களின் தலைவனை சூரியன் வழிபட்ட தலம். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 13,14.15 ஆகிய தேதிகளில் சூரியன் தன் பொற் கிரகணங்களால் வேதபுரீசுவரரை அர்ச்சிப்பதைக் காணலாம். இங்கு தவம் செய்து தான் பெற்ற பேறு காரணமாக இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் சூரியன் செய்யும் பூசை இது. திருநந்தி தேவரும், மார்க்கண்டேயரும், குபேரனும் வழிபட்ட தலம். எனவே, திருநாவுக்கரசு சுவாமிகள் இத்தல இறைவனை “செல்வப்பிரான்’ என்று சிறப்பித்துப் பாடுகிறார்.

திருமணத் தடை நீங்கும்: திருஞான சம்பந்தர் இத்தலத்தை “இணை வாழை மடுவில் வேறு பிரியாது விளையாட” என்று பாடுகிறார். இங்கு வாளை மீன்கள்கூட தன் ஜோடியுடன் இணைந்து விளையாடுவதாகக் குறிப்பிடுகின்றார். இரண்டாவது பாடலில் “சொற்பிரிவில்லாத மறை” என்கிறார். வேதத்தை கணவன் என்று சொல்வது மரபு. அதற்குண்டான இசையை மனைவி என்று கொள்வதும் மரபு. வேதமும், இசையும் போல இணை பிரியாது வாழலாம் என்பது குறிப்பு.

திருவேதிக்குடியை “கன்னியரோடு ஆடவர்கள் மாமணம் விரும்பி யருமங்கலம் மிக மின்னியலும் நுண்ணிடை நன்மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே” என்கிறார். திருமணம் நன்றாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நாடி வந்து வழிபட வேண்டிய தலம் இது என்பதாம். இத்தகைய சிறப்புமிக்க இத்தலத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் தனித்தனியாக வராமல் தம்தம் தேவியருடன் வந்து வழிபட்டுச் சென்றதாக சம்பந்தப் பெருமான் குறிப்பிடுகின்றார்.

நந்தியெம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் ஒரு பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரத்தில் திருமழபாடியில் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தார் அய்யாரப்பர். அதற்கு திருவேதிக்குடியில் இருந்துதான் வேதியர்களை அழைத்தார். அந்த அளவுக்கு வேதம் செழித்திருந்த ஊர். அய்யாரப்பரின் அழைப்பினை ஏற்று திருவேதிக்குடி வேதியர்கள் சென்று நந்தியெம் பெருமானின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சித்திரை மாதத்தில் புது மணமக்களான நந்தி தேவரையும், சுயசாம்பிகையையும் பல்லக்கில் திருவேதிக்குடி அழைத்து வந்தாராம் அய்யாரப்பர். அதன் நினைவாக சித்திரை மாதத்தில் ஏழூர் வலம் வரும் விழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறுகிறது.

சோழ மன்னன் ஒருவனின் மகளுக்கு திருமணம் நடைபெறாமல் தடைபட்டுக்கொண்டே வந்தது. இங்கு வந்து இறைவன் வேதபுரீசுவரரையும், அம்பாள் மங்கையர்க்கரசியையும் வழிபட திருமணம் கூடி வந்தது. அதனால் அரசி தன் மகளுக்கு பிறந்த மகளுக்கு மங்கையர்க்கரசி என்று பெயரிட்டார். அரசனும் பல திருப்பணிகள் செய்து ஆலயத்தைப் புதுப்பித்தான். எனவே இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாக விளங்குகிறது.

சாதக ரீதியாக திருமணத் தடைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். வரன் அமையவில்லையே என்று மனம் கலங்காமல் திருவேதிக்குடி வந்து வேதபுரீசுவரரையும் மங்கையர்க்கரசியையும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். வீட்டிற்குச் சென்ற பின் கீழ்காணும் திருஞான சம்பந்தர் இயற்றிய பாடலை 48 நாட்களுக்கு பாராயணம் செய்து வந்தால் தடைபட்ட திருமணம் நடக்கும்.

திருமணத் தடை நீக்கும் பதிகம்:
உன்னி இரு போதும் அடி பேணும் அடியார்
தம் இடர் ஒல்க அருளி
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல்
இருந்த துணை வன்தன் இடமாம்
கன்னிய ரொடு ஆடவர்கள் மாமணம்
விரும்பி அரு மங்கலம் மிக
மின்இயலும் நுண்இடை நல் மங்கையர்
இயற்று பதி வேதிகுடியே

சிவனே மருந்து:
திருமணம் நடந்தும் பிரிந்திருப்பவர்கள் நம்பிக்கையுடன் இங்கு வந்து வழிபட மனக்கசப்பு நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். இத்தகைய சிறப்புகள் கொண்ட திருவேதிக்குடி வேதபுரீசுவரர் ஆலயத்திற்குள் நுழைகிறோம். கிழக்கு நோக்கிய சந்நிதி. முதலில் நந்தி மண்டபம். வலதுபுறம் அம்பாள் மங்கையர்க்கரசி சந்நிதி. மூலவர் சந்நிதிக்கு முன்புறம் வேத விநாயகர் சந்நிதி. தலையைச் சற்றே சாய்த்து வேதம் கேட்கும் நிலையில் மெய்மறந்து அற்புதமாக அமர்ந்திருக்கிறார் வேதவிநாயகர்.

மூலவர் வேதபுரீசுவரருக்கு வாழைமடுநாதர் என்ற பெயரும் உண்டு. வாழை மடுவின் நடுவில் தான்தோன்றியாகத் தோன்றியதால் அந்தப் பெயர். மூலவரை தரிசனம் செய்து இடது புறம் பிராகாரத்துக்கு வந்தால் மண்டபத்தை சுற்றி 108 சிவலிங்கங்கள். காணும் இடமெல்லாம் கண்கொள்ளாக் காட்சியாக சிவலிங்கங்கள். இந்த 108 சிவலிங்கங்களை தரிசனம் செய்தால் 108 சிவாலயங்களை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. பிராகாரத்தை வலமாக வந்து வெளியில் மங்கையர்க்கரசி அம்மனை தரிசிக்கிறோம்.

பிரம்மாண்டமான மதில் சுவரும், ராசகோபுரங்களும் இருந்த ஆலயம். காலப்போக்கில் கவனிப்பாரின்றி சிதிலமடைந்து போனது. குடமுழுக்கு நடந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது திருப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum