ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில
 Meeran

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ரயில் நிலையங்களில் எல்.இ.டி., விளக்குகள்:தெற்கு ரயில்வே
 ayyasamy ram

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 ayyasamy ram

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 ayyasamy ram

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 ayyasamy ram

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
 ayyasamy ram

திருச்சி: போக்குவரத்து அதிகாரி வீட்டில் 223 சவரன் நகை பறிமுதல்
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை
அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


Last edited by mkrsantharam on Wed May 14, 2014 8:02 am; edited 1 time in total
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down


Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sat Sep 06, 2014 5:32 pm

@மாணிக்கம் நடேசன் wrote:டாக்டர் ஐயா, உங்களது இந்த தொகுப்பு நன்றாகவே சூசூசூசூடு பிடிகிறது, படித்து முடித்து, பதிவும் செய்துக் கொண்டேன். மிக்க நன்றி டாக்டர் ஐயா.   அருமையான இத்தொடரை தொடருங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1085485

   அன்பு மிக்க திரு . மாணிக்க நடேசன் அவர்களுக்கு ,


என்ன மாதிரியான ' எக்ஸ்பிரஸ் ' வேகத்தில்  பதில் கடிதம்

போடுகிறீர்கள் !

அபாரம் !


மொத்தம் உள்ள 4 பகுதிகளில் 2 பகுதிகள் மட்டும் தான் இப்போது

கொடுத்துள்ளேன் !

இன்னும் 2 பகுதிகள் தருவதற்குள் ......உடனே மடல்

போட்டு விட்டிர்கள் !

நன்றி !

இதோ ! மிச்சம் உள்ள 2 பகுதிகள் !

முழுவதும் படித்துவிட்டு மடல் எழுதுங்கள் !


நன்றி !


எம்கே ஆர் சாந்தாராம்

avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Sat Sep 06, 2014 5:37 pm

நன்றி டாக்டர் ஐயா, உங்களது வரிகளில் வைரம், எழுத்துகளில் ஏற்றம். படிக்க படிக்க பரவசம், ஒளி விளக்காக ரம்மிய வார்த்தைகள், தொகுப்புக்கு துணையாக படங்கள், பிரமாதம் டாக்டர் ஐயா.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4233
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sat Sep 06, 2014 5:40 pm

 ' யார் இந்த நிலவு '

பாடலுக்கு  நடித்தவர் :

நடிகர் திலகம் :


   [/center]
' யார் இந்த நிலவு ' பாடலைக் கேட்டார் நடிகர் திலகம் .

யோசனையில் ஆழ்ந்தார் !


" இந்த பாடலுக்கான படப்பிடிப்பை எப்போ வெச்சிக்கலாம்,

கணேசன் ? '- கேட்டவர் பீம்பாய் !

(  " பீம் பாய் "   உடன் சிவாஜி பாய் ! )


இயக்குனர் ஏ. பீம்சிங்  ஐ  இப்படித்தான் அழைப்பார், நடிகர் திலகம் !

நடிகர் திலகம் பதில் பேசவில்லை !


" நாளைக்கு  வைத்துக்கொள்ளலாமா... ? "

- பீம் பாய் !


யோசனையுடன் தலையை ஆட்டிவைத்தார், நடிகர் திலகம் !

மறுநாள் ....எல்லாம் ரெடி !

எப்போதும் முதல் ஆளாக வந்து ஆஜர் ஆகும் நடிகர் திலகம்

வரவில்லை !

பீம்சிங் வியப்படைந்தார் !' இன்னிக்கு ஷூட்டிங்  வேண்டாம், நாளைக்கு

வைத்துக் கொள்ளலாம் ! '

சிவாஜி தரப்பில் இருந்து போன் வந்தது !இரண்டாம் நாளில் படப்பிடிப்பு ரெடி !

' இன்னிக்கு வேண்டாம் '  

- சிவாஜி !இப்படி  பல நாட்கள் நடிகர் திலகம் தலையை ஆட்டி விட்டு,

படப்பிடிப்புக்கு வராமல் அவரே தள்ளிப் போட்டு விட்டார்.


அனைவருக்கும் ஆச்சர்யம் !

ஏன் ?

இதுவரை நடிகர் திலகத்தால் ஒரு படப்பிடிப்பு தள்ளிப் போனதோ

'கான்சல்' ஆனதோ என்று யாரும் குறை சொன்னதே இல்லை !


இப்படியே  சில நாட்கள்  சிவாஜி கணேசன் இந்த பாடலுக்கு

நடித்துக் கொடுக்க வராமல் 'டேக்கா' கொடுத்து வந்தார் !ஒரு நாள்......

படப்பிடிப்புக்கு வந்தார், நடிகர் திலகம் !

" யார் அந்த  நிலவு "   படப் பிடிப்பு  நடந்தது.....

மிகப் பிரமாதமாக நடித்து கொடுத்தார் , நடிகர் திலகம் !பின்பு , தான் இந்த பாடலுக்கான படப்பிடிப்பை தளிப்

போட்டதற்கான  காரணத்தை சொன்னார் !


இதோ !
"  யார் இந்த நிலவு " பாடலைக் கேட்டேன்,

கவிஞர் அற்புதமாக எழுதிவிட்டார்!

விசு அற்புதமாக 'டியூன்'  போட்டார் !

டி எம் எஸ் அற்புதமாக பாடிவிட்டார் !

இப்போ நான் இந்த பாடலில் நடித்துக் காட்டவேண்டும் !


இவர்கள் மூன்று பேர்களையும் நான் ' பீட் '  செய்யவேண்டும் !பாடல் காட்சியில் நான் நடிக்கும் போது இவர்களை 'பீட் ' பண்ணி

நடக்க வில்லை என்றால் நான் நிற்க முடியாது !


எப்படி இவங்களை மிஞ்சுறதுன்னு வீட்டிலே மண்டையை

உடைச்சுக்கிட்டேன் !

சட்டுன்னு ஒண்ணும் பிடிபடலை !

அதான் இந்த பாட்டுக்கு என்ன ஸ்டைலில் நடிக்கணும் என்று

முடிவு பண்ணும் வரை வேணுடும் என்றுதான் 'ஷூட்டிங்க் ' ஐ

தள்ளிப் போட்டுவிட்டேன் ! "


எல்லோரும் வியப்பால்  வாயடைத்து நின்றார்கள் !
ஒரு பாடலாசிரியரையும்,

இசையமைப்பாளர்களையும்,

பாடகரையும்

மிஞ்சிக் காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு மாபெரும் கலைஞன்

அதைப் பற்றி சில நாட்கள் சிந்தித்து பின்பு நடித்தது என்பது

அன்று நிலவிய :


ஆரோக்கியமான போட்டிக்கு  எடுத்துக்காட்டு !


மெல்லிசை மன்னர், இந்த பாடல்காட்சியில் நடித்த

நடிகர் திலகத்தைப் பற்றி சொல்கிறார் :
"


நினைச்சா  மாதிரியே எங்களை அந்த சீன்லே சிவாஜி 'பீட்'

பண்னிட்டார்னு சொல்லணும் !

வாயிலே ஸ்டைலாக சிகரெட் ஐக் கவ்வி கடைசி வரை

அதை எடுக்காமலேயே  .... அதே சமயம் வார்த்தைகளுக்கு

தெளிவாக  ' லிப் மூவ்மெண்ட் ' கொடுத்து .....அடடா !

அது சிவாஜி ஒருவரால் முடியும் ! "    

அதனால்தான்  இந்த பாடல் இன்று வரை

பேசப்படுகிறது !


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 ' யார் அந்த நிலவு ? '

பாடல்  எப்படி ?


பொதுவாக  பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்


களை ' இது சிவாஜி பாடல் ' ,  ' இது எம்ஜிஆர் பாடல் ',


' இது கண்ணதாசன் பாடல் ' , ' இது வாலி பாடல் '


என்று  ' ஆட்களை பிடித்து '  ( ! )    அதற்கேற்ப  தரம் பார்த்து

ரசிக்கும் மனோ பாவம் எனக்கு இல்லை !"அப்போ  எப்டி ? "


படியுங்கள் !

1. ' யார் அந்த நிலவு ' பாடலில் முதலில் வரும் இசை :


பியானோ  இசை !


இந்த பியானோ இசைக் கருக்கும் , மெல்லிசை மன்னர்களுக்கும்

ஒரு நெருங்கிய ' மாமான் - மச்சான் '  உறவு உண்டு !


எப்டி ?


இவர்களுடைய குருநாதர் சி. ஆர். சுப்புராமனே  ஒரு பியானோ

பிரியர் !   அவர் இசையமைத்த  அநேக பாடல்களில் சுப்பராமன்

பியானோ வைப் பயன்படுத்தி பாடல்களை இசையமைத்திருப்பதை

நாம் இப்போதும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம் !


மெல்லிசை மன்னர்களும் அதே மாதிரியா பியானோ  பிரியர்கள்தான் !


எப்போவும்  ஆர்மோனியத்தை பயன்படுத்தி  'டியூன் ' அமைக்கும்

மெல்லிசை மன்னர் சில சமயங்களில் பியானோவை வைத்தும்

டியூன் அமைத்ததுண்டு !

'அன்பே வா ' படத்தில் இடம் பெற்ற புகழ் பெற்ற பாடலான :

" ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் "

பாடலை மெல்லிசை மன்னர் பியானோ வை பயன்படுத்தித்தான்

டியூன் போட்டதாக  கவிஞர் வாலி ஒரு புத்தகத்தில் எழுதி

உள்ளார் !


மெல்லிசை மன்னர்கள் பியானோ  இசைக் கருவியைப்

பயன்படுத்தி பல நூற்றுக்கணக்கான பாடல்கள் வந்துள்ளன.

எல்லாப் பாடல்களுமே ' மெலடி ' ரகத்தை சேர்ந்தவை - எல்லாமே

உயர்ந்த ரசனையைக் கொண்டவை  !

வேறு எந்த இசையமைப்பாளர்கள் யாருமே இவர்கள் பியானோவை

பயன்படுத்திய மாதிரி இத்தனை வகை பாடல்களை இசையமைத்ததே

இல்லை என்றே சொல்லலாம் !  சரி, இவர்கள் ஏன் பியானோ வை பயன்படுத்தி இத்தனை பாடல்களை

இசையமைத்தார்கள் ?


அதெல்லாம் , சிதம்பர ரகசியம் இல்லை.....எல்லாம்

பியானோவின் ரகசியம்தான் !

என்ன ரகசியம் ?

எல்லா விதமான ரசனைகளையும் வெளிப்படுத்தி  பாடல்களை

ரசிக்கும்படியும் , இனிமையான தாகவும் வெளிப்படுத்த

பியானோ இசைக்கருவியால் முடியும் என்பதை அவர்கள் தீர்க்கமாக

நம்புவதால் இருக்கலாம் ! 

   

  சரி , இவர்கள்  பியானோவைப் படுத்தி இசையமைத்த

பல பாடல்களில் எனக்கு பிடித்த  10  பாடல்களையும் அந்த பாடல்கள்

ஏன் எனக்கு மிக மிக பிடித்திருக்கின்றது என்பதையும் கீழே

தந்திருக்கிறேன், ......

அந்த  10 பாடல்களையும்  நீங்கள் கேட்டு ரசிப்பதற்கும் ' லின்க்'

கொடுத்துள்ளேன் .....' டவுண் லோட் ' செய்து கேட்டு மகிழவும் !  
]

1. "  என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப்

பார்வையிலே ! "


" வெண்ணிற ஆடை "ஓர் ஆடவனை மனப்பூர்வமாக காதலிக்கும் ஓர் இளம்பெண் , தன்

பிறந்த நாளில் , தான் காதலிப்பதை பியானோ  வாசிக்கும்

அவனே  பல பெரியவர்கள்  - பெற்றோர்கள் உட்பட - முன்னிலையில்

இலைமறைவு காயாக சொல்லுகின்ற இனிமையான பாடல் !

சுசீலா மற்ற பாடகர்கள் " பீட் " செய்கிறார்களோ இல்லையோ

இந்த பாடலில் பியானோ அவரை மிஞ்சப் பார்க்கும் வகையில்

இசையமைப்பு  சுப்பர் !  

முக்கியமாக சுசீலா  " ஹம்மிங் " கொடுக்கும் போது,

பியானோவும் அவருடன் போட்டி போடுவதை கேட்கவும் !


கொசுறு தகவல் :

இந்த பாடல் காட்சியில் பியானோ வாசிக்கும் விரல்கள்

மெல்லிசை மன்னருடையது !


பாடல் :http://picosong.com/93yb
[/color]  

2 . "  பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ நாடகம்

தொல்லையோ ! "   - சோகம்  - ' புதிய பறவை ' - பி . சுசீலா .
" பார்த்த ஞாபகம் இல்லையோ ' - சோகம் -  இந்த பாடலில் சுசீலா

மட்டுமா பாடுகிறார் ?

கூடவே  பியானோ வும் பாடுகிறது !

பாடலின் பாதி பாகுதியை ஆக்கிரமிப்பது இந்த பியானோ இசை

தான் !

அது மட்டுமா, படத்தில் கோபாலுக்கு - அத்தான் - நடிகர் திலகத்தை

மேலும் திகைப்பை ஏற்படுத்த  இயக்குனர் தாதா மிராசிக்கு இந்த

பியானோ இசைதானே பயன்படுகிறது !

ஆக, கதையில் திகைப்பையும் விறுவிறுப்பை கூட்டுவதற்கும் பியானோ

பயன்படுகிறது அல்லவா !


பாடல் :

http://picosong.com/9YQG%%%%%%%%%%%%%%%%%%%%%%5

 3. " மனிதன் என்பவன் தெய்வமாகலாம் "

' சுமைதாங்கி ' - பி . பி . எஸ்

இந்த பாடலைக் கேளுங்கள் ,  தத்துவப் பாடல் - அதிலும் படத்தின்

நாயகனுக்கு வாழ்க்கையில் வேலை கிடைக்காத விரக்தி ---

இவைகளை அந்த பியானோ இசை எவ்வளவு ஆறுதலாக இசையைத்

தருகிறது,கேளுங்கள் !

படத்தில் இந்த பாடல் காட்சியை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அந்த

இரவு நேர மெரினா - எட்வர்ட் எல்ல்லியட்ஸ்  - கடற்கரைய்யின் அழகை

இந்த பியானோ இசை அதிகரிக்கின்றது என்பதில் சந்தேகமேஇல்லை !பாட்டு :

http://picosong.com/93bA
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

4. "அன்று வந்ததும் அதே நிலா,இன்று வந்ததும்

இதே நிலா ! "    - மகிழ்ச்சி -  ' பெரிய இடத்துப் பெண் "  - டி . எம் . எஸ் -

பி. சுசீலா.சோகத்திற்கே  பியானோ பயன்படுகிறது என்றால் காதலுக்கு

கேட்கவா வேண்டும் !

மேற்கத்திய ' ரோமாண்டிக் ' ' மூட்'  உடன் ஒரு பாடலை

இசையமைக்க மிகப் பொருத்தமான இசைக் கருவி -  பியானோதான் !

பாடல் முழுவதும் டி எம் எஸ் - சுசீலா வுடன் முழுவதும் பியானோ

இசை வியாபித்து உள்ளதை நீங்கள் இந்த பாடலைக் கேட்டால்

உணரலாம் !பாடல் :

http://picosong.com/93QV@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

5. கண் போன போக்கிலே கால் போகலாமா ! "

-" பணம் படைத்தவன் - டி எம் எஸ் .இது ஒரு சுத்தமான தத்துவ பாடல்.

என்ன மாதியான இசை ?

" பாண்டு " வாத்திய கோஷ்டி யின் இசை !

அந்த மாதிரியான இசையில் எப்படி பியானோ , வயலின் ,

அக்கார்டின் போன்ற இசைக் கருவிகளை புகுத்தி ஓர் இசை வெள்ளத்தை

நமக்கு அளித்துளனர், நம் மெல்லிசை அமைப் பாளர்கள் !

அதுவும் படத்தில் மேற்கண்ட இசைக் கருவிகளை பயன்படுத்தி

எம்ஜிஆர் மிக

அழகாக வெள்ளை கோட் - சூட்  அணிந்து   பாடுவது

மிக ரம்மியமாக இருக்கும் !


பாடல் :
http://picosong.com/9eC6&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&6. " கன்னி வேண்டுமா  கவிதை வேண்டுமா , கதைகள்

சொல்லட்டுமா ! "


" பச்சை விளக்கு "பி பி எஸ் -எல் ஆர் ஈஸ்வரிபொதுவாக ஒரு பாடலில் :

பல்லவிக்கும் -  சரணத்திற்கும்

இடையே ஓர் இடைவெளி இருப்பது சகஜம்தான் , அது அவசியமும் கூட!

ஆனால் இந்த பாடலில் பாருங்கள்.......

பல்லவிக்கும் - சரணத்திற்கு இடையில் .....

ஏகப்பட்ட .....இடைவெளி - ஏறக்குறைய 32  வினாடிகள் !

காரணம் ?

எல்லாம் ....இந்த மெல்லிசை மன்னர்கள் பியானோ இசையின்

மேல் அதிக செல்லம் ( ! )  கொடுத்ததினால் !

மிக நீளமான பியானோ மற்றும் ' எலக்டிரிக்' கிட்டார் இசை

கொண்ட பாடல் !

கேட்டுக்கொண்டே இருக்கலாம் , அவ்வளவு அருமை !


பாடல் :http://picosong.com/9eCZ $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


 7. " பாடுவோ பாடினால் ஆடத் தோன்றும் "

கண்ணன் என் காதலன் " - டி எம் எஸ் - மெல்லிசை மன்னர்

தனித்து இசையமைத்த படம் .
'பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் ' - என்கிற கருத்தை

வலிறுத்தும் பாடல்.  பாடும் டி எம் எஸ் அவர்களை விட பியானோ

இசை தலை தூக்கும் மிகச் சிறந்த பாடல் !

இந்ந்த பாடலை நான் இங்கே சேர்த்ததன் காரணம் ?

சொல்லாமல் எங்கே போவேன் !

மேற்கத்திய இசைக்கருவியான பியானோ நம் நாட்டு இசைக்

கருவிகளுடன் எப்படி ஐக்கியமாகிறது என்பதை நிரூபிக்கும்

பாடல் இது !

பியானோவுடன் தபேலா எப்படி போட்டி போடுகின்றது

என்பதை இந்த பாடல் விளக்கும் !பாடல் :  


http://picosong.com/9eCa################################################

 8. " சொர்கத்திலே முடிவானது , சொந்தத்திலே

உறவானது ! "    - " லலிதா " - எஸ் பி பி - வாணி ஜெயராம் - மெல்லிசை

மன்னர் தனித்து இசையமைத்தது .பியான்னோ வுடன் மற்ற இசைக்கருவிகள் மட்டும் இணைவதில்லை,

" கைத் தட்டல் " ஓசை கூட இணைவதாலும் அற்புதமாக

இருக்கும் என்பதை நிரூபிக்கும் பாடல் !

கைதட்டல் ஒலிவுடன் பியானோ இசை ஒலிப்பதைக் கேட்டால்

இன்பமாக இருக்கின்றது !


பாடல் :


http://picosong.com/9eP9&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&9. " எனக்கொரு காதலி இருக்கின்றாள் , அவள்

ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் ! "


" முத்தான முத்தல்லவோ "   -  எஸ் பி பி வுடன் மெல்லிசை

மன்னர் - தனித்து இசையமைத்த படம்.
 

இந்த பாடலில் பியானோவுடன் போட்டி போடுவது - வயலின் உடன் !

பாடலைக் கேளுங்கள் , உங்களுக்கு புரியும் !


பாடல் :http://picosong.com/9ePm


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

10 . " மல்லிகை ...ஓய் ....மாங்கனி , தேன் மொழி , காதலி

என்றெல்லாம் கூறுவார் கேளடி ! "


" பவானி " (  1967 )  - எல் . ஆர் . ஈஸ்வரி - மெல்லிசை மன்னர்

தனித்து இசையமைத்தது !எல் ஆர் ஈஸ்வரிவுடன் இணைந்து பாடுவது அவ்வளவு

எளிது அல்ல !

டி எம் எஸ் வுடன் ஈஸ்வரி பாடினால் அவரைப் பிடித்துத்

தள்ளி 'மைக்' ஐ பிடுங்கி பாடுவாராம் !

எஸ் பி பி வுடன் பாடும்போதும் , அவரின் பாடு படு

திண்டாட்டம்தான் !

ஈஸ்வரிவுடன் சுசீலா பாடினாலும் அவரோடு போட்டி

மனப்பான்மைவுடன் பாடுவாராம் .


பியானோவுடன் ஈஸ்வரி பாடினால் ?

ஈஸ்வரியின் பாடு திண்டாட்டம்தான் !

இந்த பாடல்லைக் கேளுங்கள் , உங்களுக்கு

விளங்கும் !பாட்டு :  


http://picosong.com/9ePM

 %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
   
[பின் குறிப்புக்கள்             1. மிக சிரமப் பட்டுத்தான் எனக்குப் பிடித்த

பல நூறுபாடல்களில் 10   பாடல்களை நான் தேர்ந்தெடுத்தது !2. மேற்கண்ட பாடல்களில் நான் பியானோ இசையின் பெருமைகளை

மட்டும் பீய்த்து  சொன்னேன் .....மற்ற அம்சங்கள் - பாடல் வரிகள் ,

பாடகர்கள் , மற்ற இசை - இவை எல்லாம் ......பிறகு

எழுதுகிறேன் !
3. மெல்லிசை மன்னர் என்றால் ....எம் . எஸ் . விஸ்வவாதன் !

அப்போ டி. கே ராமமூர்த்தி அவர்களை எப்படி நான் எழுதுவேன் ?


" மெல்லிசை மன்னர் டி கே ராமமூர்த்தி !
4. மற்ற இசையமைப்பாளர்கள் பாடல்களில் பியானோ

பாடல்கள் இல்லையா ?

உண்டு ! உண்டு ! உண்டு !

அவைகளைப் பற்றி பிறகு !

     "  பியானோ இசையில் அமைந்த பாட்டுக்கள்

உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ ? "


என்றா கேட்கிறீர்கள் ?


...ஹி....ஹி  .... ஹி  .. மெய் தாங்கோ !  

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

[/color]    


   சரி, ' யார் அந்த நிலவு   '  -  பாடலில்

பியானோ இசை எப்படி ?'

தொடரும் ....


எம்கே ஆர் சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sat Sep 06, 2014 5:59 pm

[/color]    
 

   சரி, ' யார் அந்த நிலவு   '  -  பாடலில்

பியானோ இசை எப்படி ?' அந்த கால திரைப்படப் பாடலகளின் ஆரம்ப இசையை

கேட்டாலே அது எந்த பாடல் என்பதை அறிந்து கொள்வோம் !

எடுத்துக்காட்டு ஒன்று வேண்டுமா ?


வேகமான வயலின் களின் இசையுடன் பாடல் ஆரம்பித்து,

அக்கார்டின் இசையுடன் பாடல் வேகம் பிடிக்கும் போதே நீங்கள்

சொல்லிவிடலாம் , அந்த பாடல் : " உலகம் பிறந்தது எனக்காக , ஓடும்

நதிகளும் எனக்காக்க " என்கிற " பாசம் " திரைப் பாடல் என்பதை !


' சாந்தி' யின் ' யார்  அந்த நிலவு ' பாட்டும் அந்த மாதிரியான ரகம்தான் !


பாடல் ஆரம்பிக்கும் போது ஒலிக்கும் பியானோ இசை சிறியதாக

இருந்தாலும் அதில் இனிமை அதிகம் !

மறக்க முடியாத அந்த இசையைக் கேட்டாலே :

" ஓ ! ' யார் அந்த நிலவு ' பாடல் வந்து விட்டது ! '

என்பதை அறிந்த கொள்ளலாம் !

   


மற்ற இசைக் கருவிகள் .
 பியானோவுக்கு அடுத்த படி மெல்லிசை மன்னர்கள்

அதிகம் பயன்படுத்து இசைக் கருவி :

வயலிகள் !

மெல்லிசை மன்னர்களுக்கெ உரிய அட்டகாசமான வயலின் இசையைக்

கேட்டாலே அதூ மெலடி ரகட்த்தை சேர்ந்ததாகவே இருக்கும் !

ஒன்று அல்ல இரண்டு  வயலின் கள் அல்ல, 40 அல்லது 50 வயலிங்அளை

அவர்கள் பாயன்படுத்துவார்கள் !


இந்த பாடலில்அவர்கள் பயன்படுத்தும் வயலின் கள்  அதிகம் !

இந்த மாதிரிய்யான வயலின் கள்  ஆர்ப்பரிக்கும் இசை மெல்ல்லிசை

மன்னர்களின் பல பாடல்களில் கேட்ட்கலாம் - ஆனால் அவை பாடலில்

வெவ்வேறு  சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதை நாம் கேட்கலாம் !

இந்த பாடலில் ஒலிக்கும் வயலின் களின் இசை தனீ ரகம் !
இந்த பாடலில் மெல்லிசை மன்னர்கள் வேறு சில வட இந்திய

இசைக் கருவிகளை பயன்படுத்தியும் உள்ளனர்......அவைகளையும்

எழுதினால்  இந்த கட்டுரை நீள்ள்ள்ள்ளும் !  

 

    "  யார் அந்த நிலவு " பாடலில்


டி எம் எஸ்  எப்படி பாடுகிறார்?     


   

  டி. எம். எஸ் அவர்கள் , தன துணைவியாருடன் எடுத்த படம் .

, டி எம் எஸ் அவர்கள் நம்மை விட்டு

மறையும் முன் கட்டுரை ஆசிரியர் ,

அவரை சந்தித்த போது எடுத்த படம் . )     
ஏற்கனவே ' வந்த நாள் முதல் '  பாடல் மூலம்

தனக்கு மேற்கத்திய பாணியில் பாடவரும் என்பதை நிரூபித்த

டி எம் எஸ், இந்த பாடலிலும் அதே மாதிரியான உத்தியை கையாள

எண்ணினார், மெல்லிசை மன்னரும் அதைத்தான் விரும்பினார்.


ஆனால் , முதலில்  டி எம் எஸ்  இந்த பதிய முயற்சிக்கு ஆதரவு

தருவதற்கு சற்று தயங்கினாராம்.

''அந்நியமான பாடலை நம் மீது இவர்கள் திணிக்கிறார்களே !

என்று அவர் நினைத்திருக்கலாம்.

ஆனால் மெல்லிசை மன்னர்ர் அவ்வாரை விடுவார, என்ன !

டி எம் எஸ் விடம் கெஞ்சிக் கூத்தாடி அவாரைப் பாடச்  சொல்லி

கேட்ட பின்னர்தான் டி  எம் எஸ்  பாடினார் !

மற்ற பாடல்களைப் போல இல்லாமல்

" ஸ்லோ பிட்ச்ச்" இல்  -- அதாவது - நம்மிடம் நெருங்கி வந்து

பாடுவது போன்ற பாணி !


இந்த " ஸ்லோ பிட்ச்"  பாணியில்ல் மேற்கத்திய இசையில் :


JIM  REEVES ,

CLIFF  RICHARDS

போன்ற பாடகர் கள்   பாணியில் இந்த பாடலை டி எம் எஸ் பாட

வேண்டும்  என்று மெல்லிசை மன்னர் விரும்பினார் !


ஜிம் ரீவ்ஸ்  பாடல் எப்படி இருக்கும் ??
இப்படித்தான் இருக்கும் !

 

 
" யார் அந்த நிலவு ? "

ஜிம் ரீவ்ஸ்  தமிழில் பாடினால் எப்படி இருக்குமோ அப்ப்படியே

பாடினார், நம்ம  தமிழக டி எம் எஸ் அண்ணாச்சி !
b] [/b]
நன்றாக படியுங்கள் !

மெல்லிசை மன்னர்கள் மேல் நாட்டு இசையின்

" பாணி'  - அதாவது  - CONCEPT  - மட்டுமே எடுத்துக் கொண்டார்கள்,

மாறாக  " காப்பி ' அடிக்கவில்லை !

( இன்று நடப்பதே வேறு, இன்று நம் மக்கள் மேல் நாட்டு இசையை

மட்டும் அப்படியே காப்பி அடிப்பதும் இல்லாமல், மெல்லிசை  மன்னரின்

' நினைத்தாலும் இனிக்கும் ' - ' சம்போ சிவ சம்போ "  ( ' சலீம் ' )

போன்ற பாடலையும்  அப்படியே 'காப்பி' அடிக்கின்றனர் ! )
டி எம் எஸ்  பாடலை அற்புதமாக பாடினார்ர் !

எடுத்துக்காட்டாக, அந்த ' ஹம்மிங் ' !

அந்த  ' ஹம்ம்மிங்' அவர் பாடும் போது, படத்தில் நடிகர் திலகம்

காட்ட வேண்டிய :

வெறுப்பு,,

சலிப்பு,

கோபம்,

ஆகியவைகளை வெளிப்படுத்துவதையும் நீங்கள் கேட்கலாம் !

ஆனால்ல், பாடல் வரிகளை அவர் பாடும் போது ஆங்கிலேயே

பாடல் முறைப் படி எந்த வித உணார்ச்சியையும் காட்டாமல்

பாடுவதை நீங்கள் கேட்கலாம் !
மொத்தத்தில் , டி எம் எஸ் அவர்கள் பாடிய இந்த பாடல்

அந்த கால தமிழ்த் திரைப்பட உலகுக்கே புதுசு என்றே

சொல்லலாம் !

  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !


                                                                                                                                             
1965 ஆம் ஆண்டில் வெளி வந்த ' சாந்தி' திரைப்

படத்தின் விளம்பரங்களைப் பார்த்தால் சிவாஜி கணேசனின்

மாறுபட்ட தோற்றம் ஒன்றை காண்பீர்கள் !

சற்று சாந்தாற்போல் சிவாஜி சோகத்துடன் காணப்பட்ட

போஸ்டர் !

சிவாஜி கணேசனின் அந்த தோற்றத்தைப் பார்த்தாலே அது

' சாந்தி' பட ' ஸ்டில்' என்பதை கண்டு கொள்ளலாம் !


( அந்த கால படங்களில் நடிகர்களின் தோற்றங்கள்ளை வைத்தே

அது எந்த பட போஸ்டர் என்றே சொல்லலாம் !

சிவாஜி பட ' ஸ்டில்' என்றால் சொல்லவே வேண்டாம் ! )


நடிகர் திலகம் இந்த ' யார் அந்த நிலவு' பாடல் காட்சியில்

நடிப்பதற்கு மிகவும் மெனக் கெட்டார் !
1. இந்த பாடலுக்கான  படப்பிடிப்பை சில நாட்களை தள்ளிப்

போட்டார் !

சிவாஜி கணேசனின் இந்த செயல் அவரைப் பொருத்த வரையில்

மிகவும் வித்தியாசமானது !2. கவிஞர் கண்ணதாசன், டி எம்  எஸ் , மெல்லிசை மன்னர்கள்,-

இவர்களை " தோற்கடிக்க " - மற்றும் தான் ' கெலிக்க '

என்னென்ன வழி முறைகளை கையாளலாம் என்று யோசிக்கவே

சில நாட்களை எடுத்துக்கொண்டார் !3. தலையை 'சிலுப்பி' க்கொண்டார் !  தலை முடியை கலைத்துக்

கொண்டார் !  இதுவும் நடிகர் திலகத்திற்கு புதுசு !


4. ' டெரிலின்' ஷர்ட் !  அந்த காலத்தில் மிகவும் பிரபலம் !

அந்த 'டெரிலின் ஷர்ட்' ஐ அணிந்து கொண்டார் !
5. சட்டையின் மேற்புற பட்டன் களை போட்டுக்கொள்ளாமல்

விட்டார் !
( ' அஞ்சான்'  படத்தில் நம்ம ( ! )   சமந்தா  தன் சட்டைக்கு போட்டுக்

கொள்ளாமல் விட்ட பட்டன் களை இங்கே ஒப்பிட

வேண்டாம் !
நடிகர் திலகம் அப்படி செய்தது - நடிப்புக்காக !

சமந்தா அப்படி செய்தது - கவர்ச்சீக்கு- சீ...சீ... கவர்ச்சிக்கு !

6.  அப்பறம் அந்த சட்டையை அவர் ' இன் ' பண்ணிக்கொண்ட அழகு !7. அப்புறம் அவரின் 'தல' !  நான் அஜித்  ஐ சொல்லவில்லை, நடிகர் திலகத்தின்

தலை நேராக வைத்திருந்தால் - அது தலை !

ஒரு 25 டிக்ரி  சாய்த்து அவர் தலையை வைத்திருந்தால் , அது ' தல' இல்லாமல்

பின் என்னவாம் !

பாடலின் முக்கால் வாசி பகுதி அவர் தலையை சாய்த்து பாடினார்....

ஏன் அப்படி பாடினார் ?

சோகத்தை வெளிப்படுத்தவே அவர் இப்படி செய்திருக்கலாம் !

8. வலது கையை  அவர் ' பாண்ட்' பாக்கட் இல் வைத்துக் கொண்டார்,

இடது கையை அவர் எதற்கு பயன்படுத்தினார் ?

' வெண் சுருட்டு' வைத்துக் கொள்ள !

அவர் சிகரட் பிடித்துக்கொண்டிருக்கும் " ஸ்டைல்லை"  பார்த்

திருக்கிறீர்களா ?

பொதுவாக விரல் இடுக்குகளில் சிகரட் ஐ பலர் பிடித்துக்

கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம் !

ஆனால் நடிகர் திலகம் அவர்களோ சுருட்டு பிடிப்பவர்கள்

வைத்திருப்பவர்களைப் போன்று :


" ஆள் காட்டி விரல்  &   கட்டை விரல் "

இந்த இரண்டு விரல்களிலும் சிகரட் பிடித்திக் கொண்டு

நடப்பது நடிகர் திலகத்திற்கு உரிய ஸ்டைல் !

( ஒரு ரகசியம் சொல்லட்டுமா !

எனக்கு புகை பிடிக்க சுத்தமாக பிடிக்காது !

" Passive  Smokers "  ஆகக் கூட இருக்க பிடிக்காது !  )  9. அப்புறம் சிவாஜியின் ஆக்ஷன் !


வாயில் சிகரட் ஐ புகைத்துக் கொண்டு , வலது கையை 'பாண்ட்' உள்

நுழைத்துக் கொண்டு ....

சோகமாகமோ

' Depression '  - ஆக வோ

' என்ன நடக்குமோ' என்கிற அதீத ஆவலோ

பரிதாபமாகமோ

வாழ்க்கையை வெறுத்துப் போகும் நிலையிலோ

சிறுது கோபமாகவோ

சிறிது பொறுமை இழந்தவராகவோ

........................போன்ற உணர்ச்சிகளில் எவை எவை உடன் அவர் நடந்து வருகிறார் ( ! )

என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலையிலோ.....

நடந்து வந்து பின்னர் வாயில் புகைக்கும் சிகரட் ஐ எடுத்து பாடும்

' ஸ்டயில்! '   .......அப்பப்பா !   இனிமேல் என்னால் வர்ணிக்கவே

முடியாது ! அம்பேல் !


கையில் சிகரட் , வாயில் பாட்டு !  

பாட்டு இல்லாத சமயத்தில் வாயில் சிகரட் !

இப்படி ' என்னவோ... நடிகர் திலகமே பாடுகிறாரோ'

என்கிற  சந்தேகத்துடன் நாம் பாடலைப் பார்க்க்கிறோம் !10. அவர் விரக்தியின் எல்லையில் இருப்பதை காட்டும் போது

நடிகர் திலகம் இலேசாக தோளை குலுக்கிக் கொள்வது

பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் !
11. இறுதியாக சிவாஜி கணேசனின் நடை !

அவர் எப்படிப் பட்ட மனநிலையில் நடக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள

முடியாத மாதிரி அவர் ' நடத்தை ' அற்புதம் ஆக அமைதுள்ளது !12, மொத்தத்தில் பாடல் காட்சியில் மற்றவர்களை

பின்னுக்கு தள்ளி விட்டு

முன்னிலை வந்து வெற்றி கொள்கிறார் நடிகர் திலகம் !   சரி, கண்ணதாசன் , டி எம் எஸ் ,

மெல்லிசை மன்னர்கள் , நடிகர் திலகம் - இந்த

நால்வர் கூட்டணியில் வென்றவர் யார் ?

நான் சொல்லட்டுமா !   பாடல் காட்சியில் - விடியு வில்

தனித்து நின்று வெல்கிறார் - கலைக் குரிசில் !


இசைத் தட்டில் - ஆடியோ வில்

கூட்டணி அமைத்து ( ! )

வெல்கிறார்கள் -  டி எம் எஸ் - கண்னதாசன் -

மெல்லிசை மன்னர்கள் டீம் !


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% ' சாந்தி '   திரைப்படம் பற்றிய பல

சுவையான தகவல்கள் ......

....பின்னோட்டத்தில் எழுதுவேன் !'
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%   ' சாந்தி "

' யார் அந்த நிலவு '

  டி எம் எஸ் -  பாடிய பாடல் :
மூன்று வடிவங்களில் தருகிறேன் !
   1. " யார் அந்த நிலவு "


- திரைப்பட  வடிவம் !

திரைப்பட வடிவத்தில் இரண்டு சரணங்கள் மட்டுமே

உள்ளன :


இந்த வடிவத்தில் இபோது நான் எழுதிய கட்டுரையை

டி எம் எஸ் அவர்களே சுருக்கமாக சொல்லிய பிறகு

பாடல் ஆரம்பம் ஆவதைக் கேளுங்கள் !
http://picosong.com/9qxJ
2. " யார் அந்த நிலவு "

இசைத் தட்டு வடிவம் - 78 RPM   இரு பக்க இசை !

இரண்டு பக்கமும் !

 பழைய 78 ஆர் பி எம் இசைத்தட்டில் மூன்று

சரணங்களை கவிஞர் எழுதியுள்ளார் !

படத்தில் இடம் பெறாத  3 வது சரணம் இதுதான் !

' வாழ்வது போலவே பாவனை காட்டும் நெஞ்சமே !

கண் வாராதிருந்தால் நிம்மதியாவது மிஞ்சுமே !

அய்யகோ !  கானலை நீர் என நினைத்தாயே

உன் ஏழை நெஞ்சில் உண்மை ஏதென அறிவாயே !
http://picosong.com/9qt3 

 3 .  " யார் அந்த நிலவு "78 ஆர் பி எம் ' சுத்தி கரிக்கப்பட்ட '  

சுத்தமான இரைச்சல் இல்லாத ஒலிப்பதிவில் !

இரு பக்க பாட்டு !


வாழங்கியவர் : பேராசிரியர் கந்தசாமி அவர்கள் !

அவருக்கு நாம் நன்றி சொல்வோம் !
http://picosong.com/9exLவிடியோ :

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


     


அடுத்த கட்டுரை : 

' இயக்குனர் திலகம் '

கே. எஸ் . கோபாலகிருஷ்ணனின்" கற்பகம் "  ( 1963 )திரைப்படம் உருவான கதை !


எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by ராஜா on Sun Sep 07, 2014 1:24 pm

  படிக்க ஆரம்பித்தவுடன் நிறுத்தமுடியவில்லை , முழு பகுதியையும் படித்துவிட்டு தான்  அலுவலகத்தில் ஒரு சில தொலைபேசி அழைப்புகளை எடுத்தேன்.

இடையில் டிஎம்எஸ் ஐயாவை பார்த்ததும் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது .... சோகம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Sun Sep 07, 2014 1:51 pm

டாக்டர் ஐயா, உங்களது இத்தொடர் மேலும் மேலும் வளர வேண்டும். என்னைப் போல பலருக்கு தெரியாத செய்திகளை தந்து வரும் உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. பாராட்டை விரும்பாத உங்களை பாராட்டித் தான் ஆக வேண்டும். பழம்பாடல் விரும்பிகளுக்கு இது போய் சேர வேண்டிய சிறந்த தகவல். நன்றி டாக்டர் ஐயா.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4233
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Sun Sep 07, 2014 6:55 pm

டாக்டர் ஐயா,  உங்களது இத்தொடர் மேலும் மேலும் வளர வேண்டும். என்னைப் போல பலருக்கு  தெரியாத செய்திகளை தந்து வரும் உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. பாராட்டை விரும்பாத உங்களை பாராட்டித் தான் ஆக வேண்டும். பழம்பாடல் விரும்பிகளுக்கு இது போய் சேர வேண்டிய  சிறந்த தகவல்.  நன்றி டாக்டர் ஐயா.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4233
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by veegopalji on Tue Sep 09, 2014 7:10 pm

@மாணிக்கம் நடேசன் wrote:டாக்டர் ஐயா, உங்களது இந்த தொகுப்பு நன்றாகவே சூசூசூசூடு பிடிகிறது, படித்து முடித்து, பதிவும் செய்துக் கொண்டேன். மிக்க நன்றி டாக்டர் ஐயா. அருமையான இத்தொடரை தொடருங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1085485
avatar
veegopalji
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by veegopalji on Tue Sep 09, 2014 7:17 pm

டியர் டாக்டர் சார்: எதிர் நீச்சல் திரைப்படத்தில் வரும் "என்னம்மா பொன்னம்மா" பாடலை இசைமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்கள் என்றும் வி குமார் அல்ல என்றும் எதை வைத்துச்
சொல்கிறீர்கள்? மெல்லிசை மன்னர் ஏதாவது பேட்டியில் அப்படிச் சொன்னாரா அல்லது அந்தப்
பாடலின் இசையமைப்பை வைத்து நீங்களாக அனுமானம் செய்ததா...? எனக்குத் தெரிந்த வரையில்
அந்தப் பாடலையும் இசையமைத்தது வி குமார்தான் என்று தோன்றுகிறது. காரணம், அந்தப் பாடலில்
வரும் தாள சங்கதிகள் மற்றும் பின்னணி இசையில் மெல்லிசை மன்னர்களின் ஸ்டைல் இல்லவே இல்லை.
avatar
veegopalji
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by veegopalji on Tue Sep 09, 2014 7:19 pm

@mkrsantharam wrote:

 " சாந்தி " ' யார் அந்த

நிலவு " ........................தொட்ர்ச்சி !


     

 சரி, " யார் இந்த நிலவு ? "

பாடலின் சிறப்பம்சங்கள் என்ன ? "

என்றா கேட்கிறீர்கள் ? 

 அந்த சிறப்பம்சங்கள்ளை நான் பட்டியலிடும்

முன்னர் , இந்த பாடல் , ' சாந்தி '  படத்தில்  இடம் பெற்ற கதையின்

சூழ்நிலையை  ( SITIUATION )   உங்களுக்குத் தெரியவேண்டும் !
அதற்கு.......

" சாந்தி" திரைப்படத்தின் கதையையும் ஓரளவு

தெரிந்து வைத்திருந்தால் நலம் !
%%%%%%%%%%%%%%%%%%%%%%%


    " சாந்தி "

கதை சுருக்கம் :


   நடிகர் திலகமும் , எஸ் . எஸ் . ஆரும் இணை  பிரியாத நண்பர்கள் ! " வாழ்ந்து பார்க்கவேண்டும் , அறிவில் மனிதன்

ஆகவேண்டும் ! "   என்கிற பாடலை அவர்கள் பாடி மகிழ்கிறார்கள் !


   அந்த பாடலை அவர்கள் கல்லூரி நாட்களில்

பாடி மகிகிறார்கள் !

அப்போது......

ஊரில் , எஸ் எஸ் ஆருக்கு திருமண ஏற்பாடு நடக்கின்றது !

அந்த ஊரில் தோழிகள் இருவர் :

தேவிகா - விஜயகுமாரி !

இந்த இருவரில் விஜயகுமாரி  இரு விழிகளை இழந்தவர்.

" தனக்கும் திருமணம் நடக்குமா ? "   என்று ஏங்கும்

தன்னுடைய பார்வை இல்லாத தோழியான தேவிக ,

விஜயகுமாரிக்கு  ஆறுதல்

சொல்லி பாடுகிறார் :


 " ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் !

வீடெங்கும் மாவிலைத் தோரணம் ! "

தேவிகா  பாடும் பாட்டு ! விஜயகுமாரியின் சித்தப்பாவாக வரும்

' சூபர்' வில்லன் ( ! )   எம் . ஆர் . ராதா, அவர் விழிகளை இழந்தவர் என்கிற

உண்மையைச் சொல்லாமல் , எஸ் . எஸ் . ஆருக்கு  பெண் கொடுக்கிறார் !
சரி, அப்போ  தேவிகா ' செட் அப் ' யாரூ ? "

என்றா கேட்கிறீர்கள் !

வேறு யார் , நம்ம நடிகர் திலகம்தான் !

   " நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் !

நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் ! "

பாடலை தேவிகா பாட , அதற்கு  ' விசில்' அடிக்கிறார் நடிகர் திலகம் !


   

 தான் மணக்கப் போகும் பெண் இரு விழிகளை

இழந்தவர் என்கிற உண்மையை அறியாத எஸ் . எஸ் . ஆர்,  தான் பார்க்காத

எதிர்கால மனைவுக்கு.....' காதல் கோட்டை '  - அஜித் - தேவயானை

' ஸ்டைலில்'   கடிதங்களில்  கவிதைகளை எழுதி மகிழ்கிறார் !

 

   " செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு

சேதியை நான் கேட்டேன் ! "   பாடலை அங்கே  எஸ் எஸ் ஆர் பாடுவார்,

அதற்கு  'எசப் பாட்டு' விஜயகுமாரி இங்கே பாடுவார் !

தன் மனைவிக்கு  விழிகள் இரண்டும் இல்லை

என்று எஸ் எஸ் ஆர் க்கு தெரியாமல்  எம் ஆர் ராதாவின் சூழ்ச்சியால்

திருமணம் நடந்து விடுகிறது.
விஷயம் பின்பு அதாவது , திருமணம் ஆனபிறகு , அறிந்து கொண்ட

எஸ் எஸ் ஆர்  கோபம் கொள்கிறார்,  தான் ஏமாற்றப்பட்டதை

அறிந்து மனைவியை ஏறிட்டும் பார்க்காமல் அவரது ஒரே பொழுது போக்கான

காட்டில் மிருகங்களை வேட்டையாட  வெளியேறுகிறார்.


 " செந்தூர் முருகன் கோவிலிலே "

சோகப் பாடலை விஜயகுமாரி பாடுகிறார் !


 

   விஷயம் அறிந்த  நடிகர் திலகம் , காட்டுக்குள்

சென்று  எஸ் எஸ் ஆரை சந்தித்து அவருக்கு ஆறுதல் சொல்கிறார்.

எப்படி ?


" உனக்கு திருமணம் ஆன பிறகு உன் மனைவிக்கு  கண்களை

இழந்திருந்தால் உன்னால் என்ன  செய்ய முடியும் ? அப்படி

நினைத்து நீ இந்த பெண்ணுக்கு வாழ்வு கொடு ! "

என்கிறார் சிவாஜி.


ஆனால்  இந்த அறிவுரையை  எஸ் எஸ் ஆர் கேட்கவில்லை, தொடர்ந்து

காட்டிலேயே தங்கிவிடுகிறார் !
இந்த சமயத்தில் விஜயகுமாரிக்கு  கண் ஆபெரேஷ நடக்கிறது !

ஆபெரேஷன் வெற்றி !

விஜயகுமாரிக்கு பார்வை வந்துவிட்டது !

தன் கணவனைப் பார்க்க மிகவும் விரும்புகிறார் , விஜயகுமாரி !இந்த  நேரத்தில்.......


புலி ஒன்று தாக்கி  எஸ் எஸ் ஆரை இழுத்துச் சென்றுவிட்டது அந்த

களீபரத்தில்  எஸ் எஸ் ஆர்  இறந்து விட்டார் என்கிற சேதி ஊரில்

அடிபடுகிறது !


" எஸ் எஸ் ஆர்  மரணத்திற்கு  சிவாஜிதான் காரணம் ! "   என்கிற

செய்தியை  ஊரில்  பரப்புகிறார் எம் ஆர் ராதா !


மேற்படி  செய்தியை பயன்படுத்தி  :

' சிவாஜியை, விஜயகுமாரியின் கணவனாக நடிக்க வேண்டும்,

இல்லையென்றால்  எஸ் எஸ் ஆர் மரணத்திற்கு சிவாஜிதான் காரணம்

என்று  சிவாஜியை பயமுறுத்து கிறார், ராதா !

வேறு வழி இன்றி  தன் நண்பனின் மனவிக்காக , கணவன் மாதிரி

நடிக்க ஆரம்பிக்கிறார் நடிகர் திலகம் !சிவாஜியின் மனநிலை எப்படி இருக்கும் ?
இந்த சூழலில்  விஜயகுமாரியின் உண்மையான கணவன்

ஆன எஸ் எஸ்  ஆர் உயிருடன் ஊருக்கு  திரும்புகிறார்!

தன் மனைவிவுடன் தன் உயிர் நண்பன் " குடும்பம் "  நடத்துவதை

அறிந்து  மனம் வருந்துகிறார் !இந்த சேதியை சிவாஜி அறிந்து கொண்டு மனம் வருந்துகிறார் !சிவாஜியின் மனநிலை எப்படி இருக்கும் ?
இந்த ' கண்ணராவி' யை  தேவிகாவும் காண்கிறார் !

தேவிகா  அறிந்து விட்டதை  சிவாஜி அறிந்து மனம்

வருந்துகிறார் !சிவாஜியின் மன நிலை எப்படி இருக்கும் ?


 

   " யார் அந்த நிலவு "

பாடல்  இந்த சூழலில்தான் நடிகர் திலகம்

பாடுகிறார் !

இப்போது, ' யார் இந்த நிலவு '

பாடல் படத்தில் இடம் பெற வேண்டுமான, சும்மா கானா பாலா

மாதிரி ஒருவரை அழைத்து வந்து ' கெக்கே - பிக்கே '  என்று

' துள்ளல் இசை ' என்று  படு நாகரீகமாக  சொல்லிக்

கொள்ளும் ' டப்பாங்குத்து ' பாடலைப் போட்டால் அது

நன்றாகவா இருக்கும் !கதையின்  இந்த சூழ்நிலைக்கு , நடிகர் திலகம் ஏற்றிருக்கும்

கதாபாத்திரத்தின்  மன நிலையை அந்த பாடல்

வெளிப்படுத்தவேண்டும்......சரி, அந்த கதாபாத்திரத்தின்  மனநிலை என்ன ?


சொல்றேன்!
1. தன் நண்பனின் மனைவுக்கு கணவன் ஆக , நிர்பந்த சூநிலையில்

நடிக்க வேண்டும்....

அது  :      


குற்ற உணர்வு  (  GUILTY   CONSCIOUS  )  
2. தான் ஏற்றுக்கொண்டிருக்கும் சூழ்நிலையை தான் காதலிக்கும்

பெண்ணுக்கு  தெரியவந்தால்    அதனால் ஏற்பட்ட :


அச்சம் - பய உணர்வு .
3.  தன்  வாழ்க்கை இப்படி  ஆகிவிட்டதே  என்கிற


சோகம் .

4. அதனால்  ஏற்படும்


விரக்தி
5. தன் நண்பனுக்கு விஷயம் தெரிந்தால் தன்னை தவறாக

எண்ணுவானே  என்கிற :


ஆதங்கம்

6. ஆக  மொத்தத்தில் , ' தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே ,

இன்னும் இதைவிட  என்ன ஆகணும் ! '

என்கிற :


 அலட்சியம் !


இந்த  மாதிரியான

உணர்ச்சிக் கலவை யை அந்த பாடலில்

வெளிப்படுத்த வேண்டும் !


இயக்குனர்  ஏ  பீம்சிங் க்கு  அந்த பாடலை

தான் நினைத்தபடி வெளிக்கொண்டு வர நினைத்தார்.அதில் வெற்றி கண்டாரா ?


வெற்றி கண்டார்,  பாடலும் வெற்றி ! ஆனால் , தான் நினைத்தவாறு ஒரு பாடலைத்

தர அவர் மட்டும் எண்ணிவிட்டால் அது நடக்காது.....

பாடலை  உருவாக்கும் :

" தாய்மார்கள் " ( ! )

அத்தான்,

1. பாடலாசிரியர்

2. இசையமைப் பாளர்

3. பாடகர்

4.  மற்றும்

பாடல் காட்சியில் நடிப்பவர் !


மேற்கண்டவர்கள் :

அதாவது :


1. பாடலாசிரியர் : கண்ணதாசன்,


2. இசையமைப்பாளர்கள் : மெல்லிசை மன்னர்கள்


3. பாடகர் : டி  எம் எஸ்


4. நடிகர் : நடிகர் திலகம் .....

இவர்களின் ' ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத.....

ஆனால்.....ஆரோக்கியமான  பொறாமை இல்லாத

போட்டியால்  பாடல் வெற்றி பெற்றது !எப்படி ?


சொல்றேன்     ஜாலி

   " யார் அந்த நிலவு "

பாடலை எழுதிய : கவிஞர்

கண்னதாசன் :
   " படகோட்டி "  பாடல்களுக்குப் பிறகு எம்ஜிஆர் இன்

அனைத்துப் படங்களுக்கும் பாடல்களை எழுதியர் :கவிஞர் வாலி !

( தேவர் மற்றும் ஜி என் வேலுமணி படங்களுக்கு மட்டும் இதற்கு

விதிவிலக்கு !  கண்ணதாசன் தான் பாட்டு எழுதுவார் ! )

எனவே, கண்னதாசன் நிறைய சிவாஜி படங்களுக்கும் மற்ற

நடிகர்கள் படங்களுக்கும் பாடல்களை எழுதி குவித்தார் !

அதிலும் சிவாஜி படங்களுக்கு - அதிலும் - " ப'  பட இயக்குனர்

பீம்சிங் இயக்கும் படங்களுக்கு அதிக கவனம் செலுத்தி பாடல்

களை எழுதி குவித்தார் !" சாந்தி " படத்தில் " யார் அந்த நிலவு " பாடலுக்கான

சூழ்நிலையை இயக்குமர் பீம்சிங் இடம் இருந்து கேட்டு அறிந்து

பின்னர் அழகு தமிழில் சொற்களை அமைத்து பாடலை

எழுதினார் !ஒண்ணும் வாணாம் !  ( சென்னை தமிழ் ! )

படத்தைப் பார்க்கவேண்டாம் !

பாடகரின் குரல் வளத்தில் கவனம் செலுத்த வேண்டாம் !

இசையமைப்பில் கவனம் செலுத்த வேண்டாம் !வெறும் பாடல் வரிகளை மட்டும் கேட்டாலே போதும் ,

'சாந்தி '  படத்தின் கதையமைப்பை நீங்கள் புரிந்து

கொள்ளமுடியும் !  எடுத்துக்காட்டுக்கள் :


" மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை "

இந்த வரிகளைப் படித்தாலே 'சாந்தி ' படத்தின்

கதை போக்கை ஓரளவு நாம் புரிந்து கொள்ளமுடியும் !" காலம் செய்த கோலாம் இங்கு நான் வந்த வரவு ! "
மேற்கண்ட  வரிகளைப் படித்தாலே படத்தில்

நடிகர் திலகத்தின் சூழ்நிலை  புரிய வரும் !"  உன் கோவிலின் தீபம் மாறியதை  நீ அறிவாயோ ! "


" தீபம் மாறியது " என்பது  எதனைக் குறிக்கின்றது என்பது உங்களுக்கு

புரியும் !இப்படி வெறும் வார்த்தைகளால்நாகரீகமாக  எளிதாக சொல்ல முடியாத  

" கணவன் - மனைவி "   சமாச்சாரத்தை பாடல் வரிகளைக்

கொண்டே மிக அழகாக விளக்கிய பெருமை கவியரசர்

கண்ணதாசனையே சாரும் !  


 ' யார் இந்த நிலவு '

பாடலுக்கு இசை : மெல்லிசை மன்னர்கள் :
 மெல்லிசை மன்னர்களின் பாடல்களுக்கும் மற்ற இசையமைப்

பாளர்களின் பாடல்களுக்கும் இருக்கும் :

 ஒரே  ஒரு வித்தியாசம்

என்ன தெரியுமா ?


சொல்றேன் !


" மெல்லிசை மன்னர்களின் ஒவ்வொரு பாடலும் அவர்கள் இசையமைத்த

வேறு எந்த பாடல்களுடன் ஒப்பிடாமல்

தனித்து

விளங்குவது தான் அந்த வித்தியாசம் !


( இந்த 'மேட்டரை' பின்னர் வேறு சமயத்தில் விரிவாக

சொல்கிறேன் ! )
" யார் இந்த நிலவு " பாடலும் இப்படித்தான், அவர்களின் ஏனைய

பாடல்களையும் தனித்தும்  இணை இல்லாததாகவும்

சிறந்து விளங்குகிறது !


முதலில் இந்த பாடல் இடம் பெறும் ' சிடுவேஷன்' ஐ கூர்ந்து கவனித்த

இசையமைப்பாளர்கள் , இந்த  பாடலுக்கு இசையமைக்க

மேலை நாட்டு இசை பாணியை பின்பற்றி இசையமைத்தால்

நல்லது என்று முடிவு எடுத்தார்கள் !


சரியாரைப் பாட வைப்பது ?

 இதில் என்ன குழப்பம் , ஸ்வாமி !

அந்த கால கட்டத்தில் நடிகர் திலகத்திற்கு பின்ணனி கொடுப்பவர் :

டி எம் எஸ்  தானே !


அதில்தானே குழப்பம் , ஸ்வாமி !


' என்னய்யா அந்த குழப்பம் '  ?

என்கிறீர்களா ?

" டி எம் எஸ் அவர்களுக்கு மேற்கத்திய பாணியில் பாட இயலுமா ? "

என்பதுதான் மெல்லிசை மன்னர்களுக்கு

குழப்பம் !

எனினும் வேறு பாடகரை வைத்து , தாங்கள் நினைப்பது போல்

மேற்கத்திய பாணியில் இந்த பாடலை தங்களால் பாட

வைத்து பாடலை வெற்றி பெற முடியும் !


ஆனால்.......நடிகர் திலகம் அதற்கு உடன்படாவிட்டால் ?


" விச்சு !   திரைப்படங்களில் என் பாடலுக்கு டி எம் எஸ் பாடினால்தான்

அது நான் பாடுவதாக நம் ரசிகர்கள் எண்னுவார்கள் !

அப்படி டி எம் எஸ் பாடாமல் வேறு ஒருவரை வைத்து பாடினால்,

படத்தைப் பார்க்கும் போது அந்த பாடலை நான் பாடுவதாகவே

ரசிகர்கள் நினைக்கமாட்டார்கள் , மாறாக அந்த பாடகர் பாடுவதாகவே

ரசிகர்கள் நினைப்பார்கள் ! "


சொன்னவர் நடிகர் திலகம் !" ஒரு நாளிலே உறவானதே ! "

டி எம் எஸ் - சுசீலா பாடிய ' சிவந்த மண் ' படப் பாடலை மெல்லிசை

மன்னர் முதலில் சுசீலாவுடன் பாடவைத்த பாடகர் :

பால முரளி கிருஷ்ணா !

மேற்கண்ட பாடகர் பாடிய பாடலைக் கேட்டுத்தான் நடிகர் திலகம்

மேற்கண்ட வசனங்களை மெல்லிசை மன்னரிடம் நடிகர் திலகம்

சொன்னாராம் !


மெல்லிசை மன்னர் ரொம்ப ரொம்ப கடுப்பாகித்தான் பால முரளி

கிருஷ்ணாவை நீக்கி விட்டு டி எம் எஸ் வைத்து பாடவைத்தாராம் !" சர்த்தான் ஸ்வாமி !   அந்த  பாடல் ' சிவந்த மண் ' படம் - 1970

வெளிய்யீடு !  ' சாந்தி ' படம் - 1965  படம் தானே ! "என்கிறீர்களா ?


சொல்றேன் !


" சபாஷ் மீனா " படம் .  சந்திரபாபு அந்த படத்தில் இரட்டை வேடங்களில்

பின்னிப் ' பெடல் '  எடுத்துக்கொண்டிருந்தார்..... சிவாஜி கணேசனுக்கு

அந்த படத்தில் சொல்லிக்கொள்ளும்படி எந்த பெயரையும் கொடுக்கும்

சந்தர்ப்பம் இல்லை !

இதனை இந்த படத்தின் இசையமைப்பாளரிடம் (  டி . சலபதி ராவ் )

சொல்லிப் புலம்பினார்,

நடிகர் திலகம் !


" இந்த படத்தில் உங்களுக்கு பேர் வாங்கித் தரும் அளவுக்கு ஓர்

அழகான ' டூயட் ' பாடலைத் தரப் போகிறேன், ஆனால் பாடலைப்

பாடப் போகிறவர்  டி எம் எஸ் இல்லை, வேறு பாடகரை  தேர்வு செய்ய

நீங்கள் எனக்கு  சுதந்திரம் தரவேண்டும், சம்மதமா ? "சிவாஜியிடம் கேட்டவர் டி . சலபதி ராவ் !


" சரி ! "

வேண்டா வெறுப்பாக தலையை ஆட்டினார் நடிகர் திலகம் !

அந்த பாடல்தான் :


" காணா இன்பம் கனிந்தது ஏனோ ! "சுசீலாவுடன் சிவாஜிக்கு குரல் கொடுத்த  பாடகர் :


டி . ஏ. மோதி !

பாடல் சூபர் ஹிட் !இன்னொன்று :


" குங்குமம் " படத்தில் " சின்னஞ்சிறிய வண்னப் பறவை எண்ணத்தை

சொல்லுதம்மா ! "

பாடல் !  இந்த பாடலை எஸ். ஜானகியுடன் பாடியவர் :

சீர்காழி கோவிந்தர ராஜன் !

ஆனால் நடிகர் திலகம்  அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை !

டி எம் எஸ் ஐ பாடச் சொல்லி இசையமைப்பாளர் கே . வி .

மகாதேவனிடம் சொல்லிவிட்டார் !

வேறு வழி !

சீர்காழி யை  விலக்கி விட்டு டி எம் எஸ் ஐ பாட வைத்தார்கள் !

சீர்காழிக்கு  , சிவாஜி மேல் செம கடுப்பு !" ஐயா ! நீங்கள் எல்லோருக்கும் உணவு பறிமாருங்கள் !

ஆனால் எச்சில் உணவைப் பறிமாற வேண்டாம் ! "
நடிகர் திலகத்திடம்  , சீர்காழியார் சொன்ன வார்த்தை !

நடிகர் திலகம் அவரை சமாதானப் படுத்த  பெரும்

சிரமப் பட்டாராம் !' கதை ' இப்படி இருக்க , மெல்லிசை மன்னர்கள் எப்படி

டி எம் எஸ் ஐ மாற்ற துணிவார்கள் !


அழகான, இனிய பியோனா  இசையுடன் .....வேகமாகவும்

இல்லாமலும், அதே சமயத்தில் மிகவும் மந்தமான கதியில்

இல்லாமலும்......துன்பமான பாடலும் இல்லாமலும் அதே சமயத்தில்

சோகம் மற்றும் தத்துவப் பாடலும் ஆக இல்லாமலும்,

பாடகர் சிரிக்காமலும் , அழாமலும் .....அதே சமயத்தில் ரசிகர்கள்

' டம் ' அடிக்க தியேடரை விட்டு வெளியே போகாமலும்....

மிகுந்த ' மெலடி'  வுடன் பாடலை  மிகவும் நேர்த்திவுடன்

இசையமைத்தார்கள் !


இந்த பாடல் இன்றும் வாழ்கிறது !


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$' யார் இந்த நிலவு ! '

பாடலைப் பாடிய

டி எம் எஸ் !
 சொன்னால் நம்புவீர்களோ இல்லையோ

எனக்குத் தெரியாது.....

டி எம் எஸ் முதலில் திரைப்படப் பாடல்களை பாட வரும் போது

அவர் ' காமடி '  - நகைச் சுவை  பாடல்களை மட்டும் பாடுவதறு

அழைத்தார்களாம் !


பின்னர் " தூக்கு தூக்கி " படம் மூலமாக  கிராமியப் பாடல்களைப்

பாடுவதில் வல்லவர்  என்று அறியப்பட்டார் !


அப்புறம் ?


" அம்பிகாதி " படம் மூலம் டி எம் எஸ் மிகச் சிறந்த கர்நாடக இசைப்

பாடகர் என்கிற பெயரை தக்க வைத்துக் கொண்டார் !இந்த நிலையில் " பாவ மன்னிப்பு " படத்தில் " வந்த நாள் முதல் "

பாடலைப் பாட யாரைப் போட்டு பாடவைக்கலாம் என்று மெல்லிசை

மன்னர்கள் மண்டையை போட்டு குடைந்து கொண்டார்கள் !

முதலில் ஜி. கே. வெங்கடேஷ் ஐ வைத்துப் பாட வைத்தார்கள் !

" சரி , இந்த ஆள் நம்ம சிஷ்யன் , படத்தில் சோகப் பாடலுக்கு

இவர் பாடியதை வைத்துக் கொள்ளலாம், ஆனால்

குழந்தையை சைக்கிளில் வைத்து சிவாஜி பாடும் பாட்டை

யாரை வைத்துப் பாட வைப்பது ? "


மீண்டும் மண்டை  +  குடைச்சல் +  கொண்டார்கள் !


பின்னர் வந்தார் டி . ஏ . மோதி !

பாடினால்....' வந்த நாள் முதல் '....

" ச்....ச் ... செ....ச் "    - அத்தான் " உச் " கொட்டினார்கள் அனைவரும் !" அண்ணே !  நீங்க யார் யாரையோ வைத்து பாட வைக்கிறீர்கள் !

எனக்கு இந்த பாடலைப் பாடுவதற்கு 'சான்ஸ்' கொடுங்கள் !

ஊதித் தள்லிவிடுகிறேன் ! "


சொன்னவர் டி எம் எஸ் - மெல்லிசை மன்னரிடம் !


" ஐயா ! இந்த " வந்த நாள் முதல் " பாட்டு மேற்கத்திய பாணி !

இது உங்களுக்கு பாட வருமா என்று எங்களுக்கு தயக்கம்.....

அத்தான்.... ! "


சற்று தடுமாற்றத்துடன் டி எம் எஸ் விடம் சொன்னார் மெல்லிசை

மன்னர் !


" ' சான்ஸ்'  ஐ எனக்கு கொடுத்துப் பாருங்கள் , அண்ணே ! "

---- டி எம் எஸ்  !


டி எம் எஸ் பாடினார் !

" வந்த நாள் முதல் ",........... !

பாடல் சூபர் ஹிட் !


டி எம் எஸ் ஆவர்களின் புகழ் இப்படி பரவி இருக்க ...

" யார் இந்த நிலவு " பாடலை  டி எம் எஸ் தவிர வேறு எவர்

நன்றாக பாடியிருக்க முடியும்...

சொல்லுங்கய்யா !  

தொடரும் ....
எம்கே ஆர் சாந்தாராம்
மேற்கோள் செய்த பதிவு: 1085482
avatar
veegopalji
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by veegopalji on Tue Sep 09, 2014 8:02 pm

குலேபகாவலி படத்தில் இடம் பெற்ற "மயக்கும் மாலை பொழுதே நீ போ போ" பாடலை திரையிசைத் திலகம்
கே வி மகாதேவன் பாகேஸ்வரி ராகத்தில் அமைத்திருப்பார். இந்த ராகத்தில் அமைந்த அனைத்துப் பாடல்களுமே உள்ளத்தைத் தொடும். உதாரணத்திற்குச் சில - நிலவே என்னிடம் நெருங்காதே [ராமு - எம் எஸ் விஸ்வநாதன் ], கானா இன்பம் கனிந்ததேனோ [சபாஷ் மீனா - டி ஜி லிங்கப்பா], கலையே என் வாழ்க்கையின் [மீண்ட சொர்க்கம் - ஏ எம் ராஜா], கொலுசே கொலுசே [பெண் புத்தி - சந்திரபோஸ்] மற்றும் வெண்ணிலவே வெண்ணிலவே [மின்சார கனவு - ஏ ஆர் ரஹ்மான்]. இந்தப் பாடல்களில் சில இடங்களில் பிற ராகங்களின் இழையையும் சேர்த்து இசையமைக்கும் போது அதன் விளைவே அற்புதமாக இருக்கும். இந்தப் பாடல்களுக்கெல்லாம் ஒரு முன்னோடி பாடல் ஒன்று ஹிந்தியில் உள்ளது. அதுதான் சி ராமச்சந்திரா இசையமைத்த அனார்கலி திரைப்படத்தில் ஹேமந்த் குமார் மற்றும் லதா மங்கேஷ்கர் பாடிய
ஜாக் தர்த் எ இஷ்கே ஜாக்" என்ற அற்புதமான பாடல். இந்தப் பாடலைத் தழுவியே கேவிஎம் "மயக்கும் மாலை பொழுதே" பாடலை இசையமைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். உங்களுடைய விபரமான கட்டுரைகள் அற்புதம்! இதற்காக நீங்கள் மிகவும் சிரமப்பட்டு செய்திகளைச் சேகரித்து எழுதியிருப்பதைப்
படிக்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள் !
avatar
veegopalji
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Wed Sep 10, 2014 8:15 am

வீகோபால்ஜி சார், உங்களது இந்த சிறப்பான விளக்கத்திற்கு மிக்க நன்றி, நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களையும் இங்கு தரலாம அல்லது அதற்கான லிங்காவது தாருங்கள்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4233
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by M.Saranya on Wed Sep 10, 2014 2:15 pm

அருமையான பதிவு
நன்றி ஐயா
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Thu Sep 11, 2014 8:15 am

@ராஜா wrote:  படிக்க ஆரம்பித்தவுடன் நிறுத்தமுடியவில்லை , முழு பகுதியையும் படித்துவிட்டு தான்  அலுவலகத்தில் ஒரு சில தொலைபேசி அழைப்புகளை எடுத்தேன்.

இடையில் டிஎம்எஸ் ஐயாவை பார்த்ததும் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது .... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1085599

   அன்பு மிக்க திரு . ராஜா சார் !   தங்களின் மடலுக்கு

மிக்க நன்றி !

நான் டி எம் எஸ் அவர்களை பல முறை சந்தித்து பேசி

உள்ளேன், ஒவ்வொரு  தடவையும் அவர் உற்சாகத்துடன்

பேசுவார். பாட்டு என்றாலே அவர் உற்சாகம் அடைந்து விடுவார் !

மிக மிக சுவையாக பேசுவார் - சில சமயங்களில் :

"  Off  The  Record "

ஆக பேசுவார், " வெளியே சொல்லாதே "

என்கிற எச்சரிக்கையோடு !

அவரது பாடல்களைப் பொருத்தவரை எதைப் பற்றி

பேசினாலும் விளக்கம் சொல்லுவார் - நாம் குறுக்கே பேசினாலும்

அதனை பொருட்படுத்த மாட்டார் !


விரைவில் அவரது சந்திப்புக்களை நேரம் வரும் போது

நிச்சயம் எழுதுகிறேன் !

அவரது பேச்சுக்களை நான் எழுதுவதை நீங்கள் படித்தால்,

அவரின் பேச்சின் சுவையை படித்து இன்புறுவீர்கள் !


டி எம் எஸ் அவர்கள் பேசியதை வீடியோ படங்களாகக்

கூட தருகிறேன்.


நன்றி, ராஜா சார் !

எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by ராஜா on Thu Sep 11, 2014 11:35 am

மிக்க நன்றி ஐயா , நேரம் கிடைக்கும் பொது டிஎம்எஸ் ஐயாவை சந்தித்த சுவராஸ்யமான தகவல்களை பகிருங்கள்  ஆவலுடன் இருக்கிறோம்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Thu Sep 11, 2014 4:31 pm

@மாணிக்கம் நடேசன் wrote:டாக்டர் ஐயா,  உங்களது இத்தொடர் மேலும் மேலும் வளர வேண்டும். என்னைப் போல பலருக்கு  தெரியாத செய்திகளை தந்து வரும் உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. பாராட்டை விரும்பாத உங்களை பாராட்டித் தான் ஆக வேண்டும். பழம்பாடல் விரும்பிகளுக்கு இது போய் சேர வேண்டிய  சிறந்த தகவல்.  நன்றி டாக்டர் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1085624
தங்களின் மடலுக்கு நன்றிகள் பல , திரு.

மாணிக்கம் நடேசன் அவர்களே !

பழைய திரைப் படப் பாடல்களை நாம் மற்க்கக் கூடாது

என்பது மட்டும் அல்ல, அவை நம் அடுத்த தலை முறைகளுக்கு

அவைகளை கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்கிற

எண்னமும் எனக்கு உள்ளது !

தொடர்ந்து படியுங்கள் !

எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Fri Sep 12, 2014 7:59 am

@veegopalji wrote:டியர் டாக்டர் சார்:  எதிர் நீச்சல் திரைப்படத்தில் வரும் "என்னம்மா பொன்னம்மா" பாடலை இசைமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்கள் என்றும் வி குமார் அல்ல என்றும் எதை வைத்துச்
சொல்கிறீர்கள்?  மெல்லிசை மன்னர் ஏதாவது பேட்டியில் அப்படிச் சொன்னாரா அல்லது அந்தப்
பாடலின் இசையமைப்பை வைத்து நீங்களாக அனுமானம் செய்ததா...?   எனக்குத் தெரிந்த வரையில்
அந்தப் பாடலையும் இசையமைத்தது வி குமார்தான் என்று தோன்றுகிறது.  காரணம்,  அந்தப் பாடலில்
வரும் தாள சங்கதிகள் மற்றும் பின்னணி இசையில் மெல்லிசை மன்னர்களின் ஸ்டைல் இல்லவே இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1086022


   அன்புள்ள திரு . கோபால்ஜி  அவர்களுக்கு ,


' மெல்லிசை மாமணி ' திரு . வி. குமாரின்  சில  பாடல்களைக் கேட்டால்

அசல் மெல்லிசை மன்னரின் பாடலைப் போன்றே நினைக்கத்

தோன்றும் !

வி . குமார் அவர்களின் திறமை அந்த மாதிரியான உயர்ந்த

  திறமை  கொண்டது !  
கீழ் காணும் பாடல்களைக் கேட்டாலே உங்களுக்கு புரிந்து விடும் ,

கீழ் காணும் இந்த பாடல்கள் அசல் மெல்லிசை மன்னர் இசையமைத்த

பாடல்கள் மாதிரியே தோன்றும் , ஆனால் .....


அவை :" மெல்லிசை மாமணி " வி. குமார் அவர்கள் இசையமைத்தவை !1. " நேற்று நீ  சின்ன பப்பா ! இன்று நீ அப்பப்பா ! "


' மேஜர் சந்திரகாந்த் ' ( 1965 )   - டி எம் எஸ் - சுசீலா

http://picosong.com/9ள்ட்Q


   

      2. " ஒரு  நாள் வருவாள் மம்மி ,  வாழ்ந்திருப்போம் அதை நம்பி ,

அன்னையின் வடிவம் மம்மி மம்மி ! "" வெள்ளி விழா "   - டி . எம் எஸ் - சுசீலா

http://picosong.com/9Laj


3. " என்னதான் பாடுவதோ , நான் எப்படித்தான் ஆடுவதோ ! "


" நாணல் "   - பி . சுசீலா


http://picosong.com/9LU4


4. " முத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ ! "


டி. எம் எஸ் - ஸ்வர்ணா ( திருமதி . வி. குமார் )


" புத்திசாலிகள் " ( 1968 )http://picosong.com/9LHRவி . குமார் அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுத எனக்கு ஆசை !

பிறகு எழுதுகிறேன் ![  b]  [/b]
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

   " எதிர் நீச்சல் " (  1968 )  படத்திற்கு இசையமைத்தவர்

வி. குமார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் .


ஆனால் :


" என்னம்மா பொன்னம்மா "


பாடலுக்கு இசையமைத்தவர் :


மெல்லிசை மன்னர்தான் !


( நான் ' மெல்லிசை மெல்லிசை மன்னர் ' என்று எழுதுவதற்கு

பதிலாக " மெல்லிசை மன்னர்கள் ' என்று எழுதிவிட்டேன் - அவர்களின்

படத்தைப் போடுவதற்காக ! )     ஆதாராம் :


" எதிர் நீச்சல் "  படத்தின் " டைட்டில் " ஐப் பார்த்தாலே

விளங்கும் :
 அந்த  " டைட்டில் "  இல்  முதலில் :
என்று வரும் !பின்பு அடுத்த  " கார்ட் " இல்  இப்படி வரும் :

எதையும் ஆதாரம் இல்லாமல் கொடுத்து நான் சார்ந்திருக்கும்

இணைய தளத்திற்கு  களங்கம் செய்ய எனக்கு மனம் வராது !

அப்படி தெரியாமல் நான் தவறு செய்தாலும் அதனை உணர்ந்து

பிறகு மன்னிப்பும் கேட்க தயங்க மாட்டேன் !
மிக்க நன்றி , திரு. கோபால்ஜி சார் !

எம்கே ஆர் சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Fri Sep 12, 2014 11:39 am

அன்புள்ள டாக்டர் ஐயா,  புத்திசாலிகள் - முத்தம் முத்தம் பாடலுக்கு மிக்க  நன்றி  பல ஆண்டுகளாக இப்பாடலை பல தளங்களில் தேடினேன்,  நல்ல தரத்தில் நீங்கள் தந்து விட்டீர்கள். நன்றிகள் பல டாக்டர் ஐயா. கிடைக்காத புதையல்களை தரும் ஈகரைக்கும் எனது நன்றி,

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4233
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Tue Sep 16, 2014 5:25 pm

@veegopalji wrote:குலேபகாவலி படத்தில் இடம் பெற்ற "மயக்கும் மாலை பொழுதே நீ போ போ" பாடலை  திரையிசைத் திலகம்
கே வி மகாதேவன் பாகேஸ்வரி ராகத்தில் அமைத்திருப்பார்.  இந்த ராகத்தில் அமைந்த அனைத்துப் பாடல்களுமே உள்ளத்தைத் தொடும்.  உதாரணத்திற்குச் சில  - நிலவே என்னிடம் நெருங்காதே [ராமு - எம் எஸ் விஸ்வநாதன் ], கானா இன்பம் கனிந்ததேனோ [சபாஷ் மீனா - டி ஜி லிங்கப்பா], கலையே என் வாழ்க்கையின் [மீண்ட சொர்க்கம் - ஏ எம் ராஜா], கொலுசே கொலுசே [பெண் புத்தி - சந்திரபோஸ்]  மற்றும் வெண்ணிலவே வெண்ணிலவே [மின்சார கனவு - ஏ ஆர் ரஹ்மான்].  இந்தப் பாடல்களில் சில இடங்களில் பிற ராகங்களின் இழையையும் சேர்த்து இசையமைக்கும் போது அதன் விளைவே அற்புதமாக இருக்கும்.  இந்தப் பாடல்களுக்கெல்லாம் ஒரு முன்னோடி பாடல் ஒன்று ஹிந்தியில் உள்ளது.  அதுதான் சி ராமச்சந்திரா இசையமைத்த அனார்கலி திரைப்படத்தில் ஹேமந்த் குமார்  மற்றும் லதா மங்கேஷ்கர் பாடிய
ஜாக் தர்த் எ இஷ்கே ஜாக்" என்ற அற்புதமான பாடல்.  இந்தப் பாடலைத் தழுவியே கேவிஎம் "மயக்கும் மாலை பொழுதே" பாடலை இசையமைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.   உங்களுடைய விபரமான கட்டுரைகள் அற்புதம்!  இதற்காக நீங்கள் மிகவும் சிரமப்பட்டு செய்திகளைச் சேகரித்து எழுதியிருப்பதைப்
படிக்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.  வாழ்த்துக்கள் !  
மேற்கோள் செய்த பதிவு: 1086042   திரு. மாணிக்கம் நடேசன்


 

 அன்புள்ள திரு. மாணிக்கம் நடேசன் ,


திரு . கோபால்ஜி  சார்பாக அந்த பாடல்களை நான்

தரலாம் இல்லையா ?இதோ :

1. " காணா இன்பம் கனிந்ததேனோ "


" சபாஷ் மீன "    டி . எ  . மோதி - சுசீலா


இசை : டி . ஜி . லிங்கப்பா :


http://picosong.com/9mdL2. " நிலவே என்னிடம் நெருங்காதே "

" ராமு " - பி பி எஸ் -  மெல்லிசை மன்னர்

http://picosong.com/9mrU
 
   

  3. " கலையே என் வாழ்க்கையில் திசை மாற்றினாய் "


ஏ எம் ராஜா  , " மீண்ட சொர்க்கம் "

இசை : டி . சலபதி ராவ்

( ஏ எம் ராஜா அல்ல )
http://picosong.com/9mU8

     4. " கொலுசு கொலுசு "


படம் : " பெண் புத்தி முன் புத்தி "( வெறும் " பெண் புத்தி " அல்ல ! )

எஸ் பி பி - ஷைலஜா

இசை : சந்திரபோஸ்


http://picosong.com/9mdG


5 . " வெண்ணிலவே வெண்ணிலவே "

" மின்சார கனவு "

ஹரிஹரன் - சாதனா - ஏ ஆர் ரகுமான்
http://picosong.com/9mGW

   

  இந்த மாதிரி பாடல்களுக்கு

முன்னோடி :" ஜாகி தக ஏக "


படம் :  " அனார்கலி " ( 1953 )  - இந்தி


பாடியவர்கள் : ஹேமந்த் குமார் - லதா மங்க்கேச்க்கர்

இசை : சி . ராமசந்திராhttp://picosong.com/9mUbஎம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Mon Sep 22, 2014 8:18 am

      " சாந்தி "  ( 1965 ) - திரைப்படம் :

பின்னோட்டம் !  
 
   " சாந்தி " திரைப்படத்தின்

முடிவு - அத்தான் - ' கிளைமாக்ஸ் ' எப்படி ?  
 

   தன் உயிர் நண்பன் எஸ் எஸ் ஆர் இன்

கண் பார்வை இல்லாத மனைவிக்கு கணவன் ஆக நடிக்க

( கதையில் )   சிவாஜி நடிக்க துளி கூட சம்மதம் இல்லை,

அதனால்தான் மனம் உடைந்து " யார் அந்த நிலவு ' "

பாடலை பாடினார் என்று சொன்னேன் அல்லவா !இந்த  இடைவேளையில்........


தன் உண்மையான கணவன் எஸ் எஸ் ஆர் தானே தவிர , சிவாஜி

கணேசன் அல்ல என்பதை விஜயகுமாரி , தேவிகா மூலம் ( என்று

நினைக்கிறேன் )  அறிகிறார்.....துடிதுடித்துப் போகிறார்.இந்த ' கேப்' இல் , தான் இறந்து விட்டதாக அனைவரும் எண்ணி விட்ட

நிலையில்தான் , தன் மனைவி விஜயகுமாரி , சிவாஜி கணேசனை

மணந்து கொண்டிருக்கக்  கூடும் என்கிற யூகத்தில்  அவர்களிடம்

இருந்து எஸ் எஸ் ஆர் பிரிந்து சென்றுவிடுகிறார்.


உண்மையை முழுவதும் அறிந்த விஜயகுமாரி, தன் கணவனாக

சிவாஜி கணேசன் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும்

அறிந்து துடித்துப் போகிறார்.


முடிவு ?


என்ன பண்றது.....யாராவது மண்டையைப் போட்டால்தானே

படம் முடியும் !


விஜயகுமாரி கடலில் ஓடிப்போய் மூழ்கி  இறந்து விடுகிறார்,

இதனை அறிந்து எஸ் எஸ் ஆரும் அப்படியே கடலில் மூழ்கி

இறந்து போய்விடுகிறார் .சிவாஜியும் , தேவிகா வும் மீண்டும் இணைகிறார்கள் !


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
" சாந்தி " திரைப்படம்

தணிக்கையில் சிக்கி பின்னர்

வெளியான  ' கதை!'குடும்ப உறவில் சிக்கல் !

1. விழிகளை இழந்த ஒரு பெண்ணுக்கு தாலி கட்டுகிறான்

ஒருவன் - அவள் விழிகளை இழந்தவள் என்பதை தெரியாமல் !2. கணவன்  இறந்து விட்டதால் அவருக்குப் பதில் வேறு  ஒருவன்

கணவன் ஆக அந்த பெண்ணிடம் நடித்துக் கொண்டிருக்கிறான் ! " சாந்தி " திரைப்படத்தின் மையக் கருத்தான :


" குடும்ப உறவு சிக்கல் ' ஐ

ஏற்கமுடியாது என்று தணிக்கைத் துறை அனுமதி மறுக்கப்பட்டு

...விளைவு....

படத்தை தடை செய்து விட்டார்கள் !


1965 ஆம் ஆண்டில்  உச்சத்தில் இருக்கும் 'சூபர் ஸ்டார்'

சிவாஜி கணேசன் படத்திற்கு தடை என்றால் சும்மாவா !

கோபத்தின் உச்சிக்கே போனார்கள் சிவாஜி ரசிகர்கள் !

எப்படி ?

எனக்குத் தெரியாது, ஸ்வாமி, திரு. வியார் மற்றும் திரு.

வாசுதேவன் போன்ற  சிவாஜி ரசிகர்களைத் தான்

கேட்கவேண்டும் !


பணத்தை வாரி இறைத்து படத்தைத் தயாரித்த ஏ எல் ஸ்ரீனிவாசன்

அதிர்ச்சி அடைந்தார் !


படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் தலையில் கை

வைத்துக் கொண்டார்கள் !படத்தை மறுபடியும் தணிக்கைக்குச் சென்று படத்தை " வெளி" க்

கொண்டு முயற்சி எடுத்தார்கள்......

வேலைக்கு ஆகவில்லை !


விஷயம் சிவாஜி கணேசன் காதுளுக்குச் சென்றது !

ஏ எல் எஸ் வும்  சிவாஜியும் ' உட்கார்ந்து '  பேசினார்கள் !


ஒரு முடிவுக்கு வந்தனர் !


என்ன முடிவு ?படத்தை பெருந்தலைவர் காமராஜ் அவர்களுக்கு போட்டுக்

காட்டலாம் என்பதுதான் அந்த முடிவு ! 

காமராஜ் , திரைப்படங்களைப் பார்க்கும் வழக்கம் உள்ளதா ?


உள்ளது !


" ஏழைப்பங்காளன் " ( 1963 )  - இந்த படத்தில் :

ஜெமினி கணேசன் மற்றும் ராகினி நடித்தது.

இந்த படத்தைத் தயாரித்தவர் ஒரு காங்கிரஸ் அபிமானி,

" ஏழைப் பங்காளன் "  என்கிற பெயரையே அவர் , கர்ம வீரர் காமராஜ்

ஐ மனதிற்கொண்டே  வைத்தாராம் !

" ஏழைப் பங்காளன் " படத்தை எடுத்த அவர் , அந்த படத்தைப் பார்க்க

வருமாறு காமராஜ் அவர்களை

' வலிச்சிக்குனு' - அத்தான்- இழுத்துக் கொண்டு ( ! )

வந்தாராம் !


" எழைப் பங்காளன் ' படத்தைப் பார்த்தார் காமராஜ்

படத்தைப் பார்த்த அவர் வெளியே வந்தார்....

' விடு விடு/ என்று நடந்தார்....

காரை நோக்கி வந்தார்.....

கார் கதவு திறக்கப் பட்டது....

காரின் உள்ளே செல்ல தயாரானார்.....


" படம் எப்படி இருந்திச்சு, அண்ணாச்சி....ஒண்ணும்

சொல்லாமல் போறீங்களே ? "

- கேட்டவர் தயாரிப்பாளர் !காமராஜ் அவரை நோக்கினார்.....சொன்னார் :" அதெல்லாம் நடிக்க வேண்டியவங்க நடிச்சத்தான்

நல்லா இருக்கென்னேன் ! "காமராஜ் ஏன் அப்படி சொன்னார் ?


" ஏழைப்பங்காளன் " படத்தில் ஜெமினிக்குப் பதில்

எம்ஜிஆர்  நடித்திருந்தால்  நன்றாக

இருந்திருக்கும் என்று காமராஜ் நினைத்தார் ! -


 (  காமராஜ் -  நடிகர் திலகத்துடன் :

ஜே பி சந்திரபாபு  , மெல்லிசை மன்னர் ,

மற்றும் எம்ஜிஆர்  ஆகியோரும்  இங்கே உள்ளனர் !

எம்ஜிஆரின் " என் கடமை ' ஷூட்டிங்க் இல் எடுத்த படம் ? )  
சரி, " சாந்தி " திரைப்படத்தைக் காண காமராஜ்

வந்தார்ரா ?

வந்தார் ! படத்தைப் பார்த்தார் !

படத்தைப் பார்த்துவிட்டு காமராஜ் அடித்த " கம்மெண்ட் " இதுதான் :" படம் நன்றாகத்தானே இருக்கிறது...

இதற்கு ஏன் தடை விதித்தார்கள் ? "படத்தயாரிப்பாளர் ஏ எல் ஸ்ரீனிவாசன் பெருமூச்சு விட்டார், கூடவே

நடிகார் திலகமும் கூட !

   காமராஜ் - சிவாஜி - ஏ. எல். ஸ்ரீநிவாசன் )  

அதன் பின் ?

" சாந்தி " திரைப்படத்திற்கு மறு தணிக்கை நடந்தது !

இறுதியில் படத்தை வெளியிடுவதற்கு அனுமதி கொடுத்தார்கள் !


" சாந்தி " திரைப்படம் " சாந்தி " தியேடரிலே வெளியாகி வெற்றி பெற்றது !


குறிப்பு : " சாந்தி " திரைப்படத்தின் கதை வசனத்தை எழுதியவர் :

எம் . எஸ் . சோலைமலை.

( இவர் ' பாவமன்னிப்பு ' , ' பாகபிரிவினை ' படங்களுக்கு கதை

வசனம் எழுதியவர் ! )  


 " ஒருவனுக்கு ஒருத்தி ! "

இது நமது தமிழ்நாட்டில் நிலவியுள்ள தர்மம் .

ஒரு பெண்ணுக்கு தாலி கட்டியவன் மட்டும்தான் கணவன்

ஆக இருக்க முடியும் .

காணாமல் அல்லது இறந்து போன கணவனுக்கு வேறு ஒருவன்

கணவனாக நடிக்க முடியாது., நடிக்கவும் கூடாது  .

அப்படி நடித்தால் அந்த பெண்ணின் கற்புக்கு களங்கம்

ஏற்படுத்தியதற்கு சமம்..


இப்பாடிப்பட்ட தர்மசங்கடமான கதையை படமாக்கி எடுத்ததற்காக

படத்தின் இறுதிக் காட்சியில் :


சீர்காழி கோவிந்தரராஜன் குரலில் :

ஒரு பெண்ணுக்கு இரண்டு கணவன் களை காட்டியதற்காக

" மன்னிப்பு "

கேட்கும் பாணீயில் ( ! )   ஒரு பாடலை அமைத்து

படத்தை முடித்திருந்தனர் !


ஆனால் இன்று நம்மை சுற்றியிருக்கும் சமுதாயத்தில்

இந்த படத்தின் கதையை விட மோசமான நிகழ்ச்சிகளை நாம்

தினம் தினம் செய்தித்தாள்களில் படிக்கிறோம் !

இன்றைய தமிழ்த்திரைப்படக் கதைகளிலும் இந்த கதையை விட

மோசமான நிகழ்ச்சிகளை அமைத்து வெளிவருவதை நாம்

காண்கிறோம் !
எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Mon Sep 22, 2014 8:50 am

நல்ல விளக்கம் டாக்டர் சார். கர்மவீரர் பார்த்து கருத்து சொல்லும் அளவுக்கு இப்படம் கொண்டு சொல்லப்பட்டுள்ளது மிக சுவராசியமான செய்தி. நன்றி டாக்டர் சார்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4233
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by M.Saranya on Mon Sep 22, 2014 10:27 am

மிகவும் சோகமான முடிவு இக்கதையில். எல்லா நிழழ்வுகளும் சுவாரஸ்யமாக உள்ளது ஐயா. அடுத்த படம் பற்றி எப்போது பதிவிடுவீர்கள் ஐயா. காத்திருக்கிறேன்.
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by ராஜா on Mon Sep 22, 2014 11:06 am

ஆனால் இன்று நம்மை சுற்றியிருக்கும் சமுதாயத்தில்

இந்த படத்தின் கதையை விட மோசமான நிகழ்ச்சிகளை நாம்

தினம் தினம் செய்தித்தாள்களில் படிக்கிறோம் !

இன்றைய தமிழ்த்திரைப்படக் கதைகளிலும் இந்த கதையை விட

மோசமான நிகழ்ச்சிகளை அமைத்து வெளிவருவதை நாம்

காண்கிறோம் !
உண்மை தான் ஐயா , இன்றைய திரைப்படங்களில் வரும் கதையமைப்பு மிக மோசம் அதைவிட கொடுமை தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களின் கதை சோகம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by விஸ்வாஜீ on Mon Sep 22, 2014 11:59 am

தலைவர் காமராசரைப் பற்றி படித்தாலே மனம் மகிழ்கிறது. இன்று உண்மை நிகழ்வை
படமெடுக்கிறேன் என்ற போர்வையில் மிக மோசமான படங்கள் வந்துகொண்டுதான்
இருக்கிறது எந்தவிதமான தடையுமில்லாமல் .
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1339
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Dr.S.Soundarapandian on Fri Sep 26, 2014 1:55 pm

அரிய செய்திகள் அத்தனையும் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4475
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum