புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
3 Posts - 3%
prajai
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
1 Post - 1%
Rutu
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
1 Post - 1%
Pradepa
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
18 Posts - 2%
prajai
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
5 Posts - 0%
Rutu
பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_m10பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !


   
   

Page 14 of 26 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20 ... 26  Next

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை




அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :



இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !



திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்







[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Oct 06, 2014 10:25 am

இந்தப் பாடலை இதற்கு முன் கேட்டதே இல்லை டாக்டர் சார், முதன் முறையாக கேட்கிறேன். தந்து உதவியமைக்கு மிக்க நன்றி ஐயா.

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat Oct 18, 2014 4:47 pm

 

         தொகுதி - 6




 

    கே. எஸ் . கோபால கிருஷ்ணன் இயக்கி,




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 M6Zr1vuhQ5ibPwuA6NX3+download(2)




கே. ஆர் . விஜயா அறிமுகம் ஆன :




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 TuAOWpQHTU2FhHWE2eU4+download




" கற்பகம் "  ( 1963 )  திரைப்படம்




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 DsERFaRKSfWcaeYSc7lz+maxresdefault




உருவான கதை !:  





 

    சில படங்கள், தயாரிக்க தொடங்கும் நிலையிலே பிரச்சனைகள்

ஆரம்பம் ஆகிவிடும் !

அப்புறம் ?

"  Going  Steady "  தான் !



சில படங்கள், ஆரம்பிக்கும் போது அமர்க்களமாக ஆரம்பிப்பார்கள்...

ஆனால் ஆரம்பித்த பிறகே பிரச்சனைகள் தொடங்கிவிடும்  !

அப்புறம் படம் வெளிவருவதற்கே " ததிங்கணத்தோம் "

ஆகிவிடும் !





" மேற்கண்ட இரண்டு வகைகளுக்கு ஒவ்வொரு எடுத்துக்காட்டாவது

தரமுடியுமா ? "



என்கிறீர்களா !


சொல்கிறேன் !





  h3]    " பவானி " - இந்த பெயரில் 1957 - 58  ஆம்  ஆண்டு    கள்
இடையில் ஒரு படம் தொடங்கப்பட்டது.

எம்.ஜி.ஆர், எஸ் எஸ் ஆர் , பானுமதி , அஞ்சலி தேவி ஆகியோர்

நடிக்க ஒப்பந்தம் ஆயினர் !

" ஸ்வஸ்திக் பிலிம்ஸ் " என்கிற படக்கம்பனி அந்த படத்தை

தயாரிக்க முயற்சி செய்தது. கவிஞர் கண்ணதானும் அந்த படத்தில்

ஒரு ' பார்னர்' ஆக இருந்தார்.

படத்தை சுமார் 10 வருடங்களாக தயாரிப்பில் இருந்தது.

படம் வளரவே இல்லை !

ஆண்டுகள் உருண்டன !

அப்புறம் ?

பானுமதி - அஞலி தேவி - இவர்களின் 'மார்க்கட்' போய்விட்டதால்

அவர்களை நீக்கி விட்டு - சரோஜாதேவி சேர்க்கப்பட்டார்.....

கூடவே ஜெயலலிதா !
எஸ்எஸ் ஆர் ஐ நீக்கிவிட்டு எஸ் ஏ  அசோகனைப் போட்ட்டார்கள் !


ஒரு வழியாக படம் முடிக்கப்பட்டு அந்த " பவானி" வெளிவரும்போது

" அரச கட்டளை "



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 AcwWtepUQbKnXAlrIvvL+ArasaKattalai



என்று மாற்றப்பட்டு 1967 ஆம் ஆண்டில் வெளிவந்தது !


அப்போது படக்கம்பனி " சத்யராஜ் பிக்சர்ஸ்" என்று மாறியது !


இதிலும் ஒரு குளறுபடி !


என்னவாம் ?



படத்தின்  இறுதியில் எம்ஜிஆர் சரோஜாதேவியை மணந்து கொள்வதாகவும்,

ஜெயலலிதா துறவறம் பூண்டுகொள்வதாகவும் ---


( படத்தில்தான்யா துறவரம்

பூண்டுகொள்கிறார்-  'அரச கட்டளை ' !  )    படம் முடிவடைகிறது !




ஆனால் அப்போது எம்ஜிஆர் சுடப்பட்டதாலும் ,

சரோஜாதேவி உண்மையிலே

வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாலும் -  படம் வெளிவரும்போது

சரோஜாதேவியை " சாகடித்து ' ( ! )  ( படத்தில்தான் ! )  

எம்ஜிஆர் ஜெயலலிதாவுடன்

டூயட் பாடுவதோடு படத்தை ' ஒரு வழியாக்க ' ( ! )  ......

" முடித்து விட்டார்கள் ' !




( அதே  1967 ஆம் ஆண்டில் வெளிவந்த " பவானி " வேறு - அதில்

விஜயகுமாரி - ஜெய்சங்கர் நடித்தது !  )  
[[/h3]    






    " உலகம் சுற்றும் வாலிபன் " - எம்ஜிஆர் இயக்கிய

இந்த படம் , ஆரம்பித்தார் எம்ஜிஆர் 'சட்' என்று !

ஆனால் ஆரம்பித்து என்ன பலன் !

படாத பாடு பட்டார் - படம் வெளிவர !

" என்னென்ன பாடுபட்டார் ? "

என்றா கேட்கிறீர்கள் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Ph008uuQtCZmG9yYfXOw+images





" உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை "

என்கிற பெயரில் ஒரு புத்தகமே வந்துள்ளது !

அவ்வளவு சமாச்சாரங்கள் - அவஸ்தைகள் - கஷ்டங்கள் -

படம் வெளிவருவதற்கு !







 

 சரி, ' கற்பகம் ' படம் இதில்

எந்த வகையைச் சேர்ந்தது ? "


என்கிறீர்களா ?


முதல் வகையைச் சேர்ந்தது !





%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%





     " கற்பகம் "  படத்தின் இயக்குனரைப்

பற்றி முதலில் சொல்லிவிட்டு பின்னர் ....... !




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




 ' இயக்குனர் திலகம் '

K . S  .. கோபால கிருஷ்ணன் :





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 KeUmT4uSI6WtidRuPDqw+Image0018




 தமிழ்த் திரைஉலகில் :


" குட்டைக் கவி "


என்கிற பெயரோடும்    பின்னர் :

" இயக்குனர் திலகம் "

என்கிற பட்டப் பெயரோடும் புகழ் பெற்ற இயக்குனர் :

கே. எஸ். கோபாலகிருஷ்ணன்  !



ஆரம்ப காலங்களில் நாடக மேடைகளில் பல நாடகங்களை

எழுதி மிகவும் புகழ் பெற்றார்.

அப்போது அவர் எழுதிய நாடகங்களை திரைப்படமாக எடுக்க

பலர் முன் வந்தனர்ர்.

ஒரு பட கம்பனி ( ' சரவணபவா பிக்சர்ஸ் ' )   , கே. எஸ். கோபாலகிருஷ்ணன்

எழுதிய " தம்பி "   என்கிற நாடகம் ஒன்றை படமாக முன்

வந்தது.

அப்போது இன்னொரு இளைஞர்  " எதிர்ப்பாராதது "  என்கிற பெயரில்

ஒரு கதையை அவர்களிடம் கொடுத்து படிக்க சொன்னார் !

இரு கதைகளையும் படத்த அந்த பட கம்பனி குழப்பத்தின்

உச்சிக்கே சென்றது !


என்னவாம் ?


இரண்டு கதைகளும் நன்றாகவே இருந்தன - எந்த கதையை படமாக்குவது

என்று அவர்களுக்குத் தெரியவில்லை !


(  இப்போது நம்மிடைய

' முகம் கூட காட்டாமல் '


படங்களை

எடுத்துத் தள்ளும் ' ஆஸ்கார் பில்லிம்ஸ் ' வி. ரவிசந்திரன் அப்போது

இருந்திருந்தால் .......

" இரண்டு கதைகளையும் இரண்டு படங்களாக ஒரே சமயத்தில்

எடுக்கலாம் ! "

என்று சொல்லி அந்த இரண்டு பேர்களையும்

' இன்னும் கதைகளை

கொண்டு வாங்கப்பா ! "  

 என்று துரத்தியிருப்பார் !      )


சரி, அப்புறம் என்னாச்சு ?

அத்தானே ! அத்தை ( அதை ! )  சொல்லத்தானே இந்த கட்டுரை !

" சரவண பவா அண்ட் யுனிடி பிக்சர்ஸ் " என்கிற பெயரில் இருந்த

படக்குழுவினர் நன்றாக ஆராய்ந்து பின்னர் வேறு இளைஞர் கொண்டு வந்த

' எதிர்ப்பாராதது' என்கிற கதையை படமாக்க முடிவு செய்து கே. எஸ். கோபால

கிருஷ்ணனை " U - TURN ' எடுத்து போக்ச் சொன்னார்கள் !


" எதிர்ப்பாராதது" கதையை எழுதிய  அந்த இளைஞர்  யார் தெரியுமா ?



பிரபல திரைப்பட இயக்குனர் : ஸ்ரீதர் !


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 U86GalkOQRiBDrT6mwLt+download(3)




தன் கதையை தேர்வு செய்யப்பட்டதால் , தன்னைப் போன்ற ஓர் இளைஞன்

ஒருவன் ஏமாந்து போவதை ஸ்ரீதர் விரும்பவில்லை !


ஏன் ?


ஏன் என்றா  கேட்கிறீர்கள் !

ஏன் என்றால் ஸ்ரீதர் வாழ்ந்த காலம் , அந்த கால தமிழ்த் திரைப்பட உலகம் !


" என் கூட நீங்கள் உதவியாளர் ஆக உங்களுக்கு விருப்பம் இருந்தால்

என்னுடன் இருங்களேன் ! "


கே எஸ் ஜி யிடம் கேட்டார், ஸ்ரீதர்.


கே எஸ் ஜி ஒத்துக் கொண்டார் !


" நீங்கள் நன்றாக பாடல்களை எழுதுவதாக சொன்னீர்களே !

இந்த ' எதிர்ப்பாராதது ' படத்திலும் பாடல்களை எழுதலாமே ! "

கேட்டார், ஸ்ரீதர், எழுதினார் கே எஸ் ஜி !


" காதல் வாழ்வில் நானே

கனியாத காயாகப் போனேன் "


ஜிக்கி-ஏ- எம் ராஜா  பாடிய இந்த பாடலை எழுதியவர் , கே எஸ் ஜி !

பாடல் சூபர் ஹிட் !


அதற்கப்புறம் ஸ்ரீதர் கதை வசனம் எழுதிய படங்களில் சில பாடல்

களை எழுதினார் கே எஸ் ஜி !


" உன்னழகை கன்னியர்கள் கண்டதினாலே "  - " உத்தம புத்திரன் "


" நாணயம் மனுஷனுக்கு அவசியம் " - " அமர தீபம் "



ஸ்ரீதர் கதை வசனம் எழதிய படங்களில் தெலுங்கு நடிகர் - நடிகையர்களுக்கு

வசனம் சொல்லிக் கொடுக்கும் :


" வாத்தியார் "

ஆக கே. எஸ் . ஜி விளங்கினார் !

எஸ் .வி. ரங்கராவ், அஞ்சலிதேவி, சாவித்திரி போன்றவர்கள்

நல்ல தமிழ் பேசி நடித்தது இந்த ' வாத்தியார்' கே. எஸ். ஜிதான் !


பின்னர் ?


" தெய்வப்பிறவி " படத்திற்கு இவர் தனியாக சென்று பணியாற்ற வாய்ப்பு

வந்தது !

ஸ்ரீதர் அவரை வாழ்த்தி அனுப்பினார் !

பின்னர் :

" படிக்காத மேதை "  பட  வசனம் இவரை உயரத்தில் கொண்டு

போய் விட்டது !


" சாரதா" - இவர் முதலில் இயக்கிய படம் குடியரசுத் தலைவர்

விருதை வாங்கிக் கொடுத்தது !


கே எஸ் ஜியைப் பற்றி விலா வாரியாக பின்னர் ஒரு சமயத்தில்

பார்ப்போமா !


அப்புறம் ?


" கற்பகம் "   படக் கதை !   :



%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%




     ' கற்பகம் ' திரைப்படம்

எப்படி ஆரம்பிக்கப் பட்டது ?




   1962  ஆம்ம் ஆண்டு , கே எஸ் கோபாலகிருஷ்ணன், ஏ. எல் .எஸ்

தயாரிப்பில் உருவான " சாரதா " படத்தை முதன் முதலாக இயக்கி

வெற்றி பெற்றதை சொன்னேன் அல்லவா !

அந்த சமயத்தில் ,  பிரபல பாடலாசிரியர் மருதகாசி, ஒரு சொந்தப் படத்தை

தயாரித்து  அந்த படம் தோல்வியடைந்ததால் , பெரும் நஷ்டத்திற்குள்

உள்ளானார் .

அவர் சொந்தமாக எடுத்த படத்தின் பெயர் :

எஸ் எஸ் ஆர், எம். என். ராஜம், எஸ், வி... சஹஸ்ரநாமம் ஆகியோ

நடித்த :


" அல்லி பெற்ற பிள்ளை "


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Allipettra





அந்த படம் தோல்வியடைந்து இன்னலுக்க்கு ஆளான மருதகாசியை

மீண்டு எள அவரை தன்னுடைய கதை ஒன்றை அவருக்கு கொடுத்து

அதனை படமாக்க கொடுத்தார் , கே. எஸ். ஜி !

கே. எஸ்.ஜி கொடுத்த கதையின் பெயர் :



" தூண்டாமணி விளக்கு "


கே. எஸ் ஜி யின் கதையை வாங்கிப் படித்த மருத காசி,, அந்த கதையை

திரைப்படமாக ஆக்கினால் வெற்றி பெறும் என்று எண்ணினார்.

மருதகாசி தயாரிக்க இருந்த  அந்த படத்தின் கதை வசனத்தை , கே. எஸ்.ஜி

அவர்களையே எழுத வேண்ட்டினார்.


கே.எஸ். ஜீ அதற்கு  சம்ம்மதித்தார்.


படத்திற்கு பூஜை போடப் பட்டது.


யார் யார் அந்த படத்தில் நடிக்க்க இருந்தனர் ?


சிவாஜி கணேசன்,   சாவித்திரி,

ரங்காராவ், எஸ். ஏ . அசோகன்

ஆகியோர் நடிக்க எல்லோருக்கும் அட்வாண் பணமும் கொடுக்கப்

பட்டது.

ஆனால், படம் வளரவில்லை !

என்னவாம் ?

" பாம்பு படம் எடுப்பதும்

தயாரிப்பாளர் எடுப்பதும் .....

ரெண்டும் ஒன்றும்தான் !"


இரண்டு பேர்களும் எப்போது :

" படம் "

எடுப்ப்பார்கள் என்று சொல்ல முடியாது !

ஒரு வேளை மருதகாசி பொருளாதார ரீதியில் அவதிப்

பட்டுக்கொண்டிருப்பதால் படம் நின்று போயிருக்கலாம் !



அப்புறம் என்ன்ன ஆச்சு  ?









 அப்போது  எம்ம்ஜிஆர், கே. எஸ் . கோபாலகிருணனை

தன் வீட்டுக்கு அழைத்தார்.

இருவரும் கீழ்கண்டவாறு பேசிக்க்கொண்டார்கள் !




  எம்ஜிஆர் :



   "  கோபாலகிருஷ்ணன் !  நீங்கள்ள் '  சாரதா '

படத்தை நல்ல  முறையில் இயக்கி உள்ளீர்கள் !

நீங்கள் எனக்காக ஒரு படத்தை இயக்கித்  தரவேண்டும் ! "




கரும்பு தின்ன கூலியா !

" சரி, அண்ணே ! "

மகிழ்வுடன் தலையை ஆட்டினார் கே எஸ் ஜி !


மருதகாசியிடம் கொடூத்து பின்பி நின்றூ போன ::


"  தூண்டாமணி விளக்கு "

கதைய்யை  எம்ஜிஆருக்கு ஏற்ப சற்று மாற்றி :


" கற்பகம் "  


என்று மாற்றி எம்ஜிஆருக்கு படிக்க கொடுத்தார், கே. எஸ் ஜி !


எம்ஜிஆர் அந்த கதையை படித்துப் பார்த்து மகிழ்ந்தார் !

பின்னர் எம்ஜிஆர், கே எஸ் ஜியிடம் கேட்டார்  :




 எம். ஜி. ஆர் :




 " இந்த படக் கதையில் வரும்

'மாமனார் ' வேடத்திற்கு  யாரை நடிக்க வைக்கப் போகிறீர்கள் ? "




   கே. எஸ் .ஜி :



 " அந்த மாமனார் வேடத்திற்கு :

எஸ்.வி.. ரங்காராவ்


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Downloqvq





அவர்களை நடிக்க வைக்கலாம் என்று எண்ணியுள்ளேன், அண்ணே ! "





 
  அதற்கு எம்.ஜி. ஆர் சொன்ன 'ஐடியா' ஐக்

கேட்டு கே.  எஸ்.ஜி மிகவும் அதிர்ச்சி அடைந்தார் !

அப்படி என்ன்ன எம்ஜிஆர் சொல்லிவிட்டார்........ ?





அப்படி என்ன எம்ஜிஆர்  அப்படி  கேட்டுவிட்டார் ?

இதோ, எம்ஜிஆர் சொன்னது :






     " கே. எஸ். ஜி !  அந்த மாமனார் வேடத்திற்கு

ரங்காராவுக்குப் பதில் நாகய்யா ஐப்  போட்டால் நன்றாக இருக்குமே !

முயற்சி செய்து பாருங்களேன் !  "




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Mqdefanjn



கே. எஸ். ஜி கொஞ்சம் கூட அசரவில்லை,

எம்ஜிஆரிடம் ஆணித்தரமாக சொல்லிவிட்டார் :



 " இல்லை அண்ணே ! படத்தின் உயிர் நாடியே அந்த

மாமனார் வேடம்தான் !  அதற்கு மிக்க பொருத்தமானவர் ரங்காராவ்

அவர்கள்தான் ! நாகய்யா வும் சிறந்த நடிகர்தான் , அதில் சந்தேகம்

இல்லை, ஆனால் இந்த படத்திற்கு ரங்காராவ் தான் பொருத்தமானவர் ! "




 எம்ஜிஆர் விட்டுக் கொடுக்கவில்லை !




எம்ஜிஆர் :



 " நாகய்யாவைப் போட்டால் நான் நடிக்கிறேன் !

இல்லையென்றால் இந்த படத்தில் நடிக்க எனக்கு இஷ்டமே இல்லை ! "




கே . எஸ். ஜி :



" மன்னிக்கணும் அண்ணே !  நான் வேறு நடிகரை வைத்து

இந்த படத்தை எடூத்துக்கொள்கிறேன் !  வேறு ஒரு படத்தில் நாம்

இணைந்து பணியாற்றுவோம் ! "






      (  1971 ஆம் ஆண்டு வாக்கில் வெளியான

எம்ஜிஆர் நடித்த " சங்கே முழங்கு "  படத்திற்கு கதை வசனம் :


பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 B0pG9s6NRoqGgHjC7zb4+download(4)




கே. எஸ். கோபாலகிருஷ்ணன் ! )  




தொடரும்....


எம்கேஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat Oct 18, 2014 5:13 pm

" கற்பகம் " உருவான

கதை - தொடர்ச்சி  ...... !

[/center]








 அப்போ , எம்ஜிஆருக்குப் பதில்

யார் நடித்தது ?

வேறு யார் ?

நம்ம ஜெமினி கணேசன் தான் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 8EITQmiSyeMVbN57nSQf+jj






 'கற்பகம்  '  கதாநாயகி :

' புது முகம் ' ( ! )   K . R . விஜயா  





                               




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Jyt8





  " மகளே  உன் சமத்து "  -  இந்த பெயரில் ஒரு படம்

1964 ஆம் ஆண்டில் நீண்ட கால தயாரிப்பில் வெகு தாமதமாகவே

வெளியானது ! '  விஜயபுரி வீரன் ' ஆனந்தன் - ராஜ்யஸ்ரீ - எம்.ஆர் ராதா

ஆகியோர் நடித்த

படம்!

அந்த படத்தில்  ஒரு சிறிய வேடத்தில் நடிக்க வந்திருந்த பெண்ண்ணைஇ

உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் - அந்த படத்தில் நடிக்க வந்திருந்த

எம். ஆர்..  ராதா !!    




" உன் பெயர் என்னம்மா ? "

எம். ஆர்.  ராதா அந்த பெண்ணைப் பார்த்து கேட்டார்.






" தெய்வநாயகி "







சொன்னாள், அந்த பெண் !


" அய்யய்யே ! சுத்த பழங்கால பெயர் ஆக உள்ளதே !

வேறு புதுசா பெயர் வெச்சுக்கோ !

அப்போத்தான் பிழைக்க முடியும் ! "


சொன்னார் எம். ஆர். ராதா !



" நீங்களே  ஒரு நல்ல பெயரை என் பொண்ணுக்கு

வைத்து விடுங்கள் , அண்ண்ணே ! "


சொன்னவர் அந்த பெண்ணின் தந்தை !

" ஏதோ விஜயா - கிஜயா ( ! )  என்னு வச்சிக்கோ ! "

சொன்னார் நடிகவேள் !





இப்படித்தான் ,

" தெய்வநாயகி ' -   கே. ஆர். விஜயா'

ஆன கதை !  பெயரை சூட்டியவர்

எம்.ஆர். ராதா !








பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Dsc06697



 அதன் பின் ?

' தெய்வநாயகி ' ( எ )   கே. ஆர். விஜயா பின்பு :

" விளக்கேற்றியவள் " (1965 )  என்கிற படத்தில் ஒரு சிறிய

வேடத்தில் நடித்தார்......ஆனாலும் ஒன்றும் சுகமில்லை !




   

இந்த பக்கத்தில் இயக்குனர் கே. எஸ். கோபால

கிருஷ்ணன், 'கற்பகம் ' படத்தில் நடிப்பதற்கு ஜெமினி கணேசனை ஒப்பந்தம்

போட்டுவிட்டு,  ' கற்பகம்"  என்கிற கதாபாத்திரத்திற்கு ஒரு புதுமுகத்தை

போடலாம் என்கிற பரிதவிப்போடு ( ! )   ஒரு பெண்ணை தேடிக்

கொண்டிருந்தார் !




" கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கப் போகும் :

" கற்பகம் "

என்கிற படத்திற்கு கதாநாயகியாக நடிக்க ஒரு

புதுமுகம்

தேவை ! "



இப்படி ஒரு விளம்பரம் பத்திரிக்கைகளில் ........

பத்திரிக்கைகள் என்ன பத்திரிக்கை........

" தினத் தந்தி " யில் வெளியானது !.......

என்றுதான் சொல்லவேண்டும் !

அவ்வளவுதான் !

நூற்றுக்கணக்கான பெண்கள் !

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் ஆபிசை முற்றுகை இட்டனர் !




ஆனால் அந்தோ பரிதாபம் !

ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை !

கே. எஸ் . கோபாலகிருஷ்ணன் வாழ்க்கையை வெறுத்து

விட்டார் !





" ஏன் சார் !  அவரை மும்பை பக்கம் போயிருந்தால் நிறைய

" தமில்( ! )  பேசும் "

நடிகைகள் அவருக்கு கிடைத்திருப்பார்களே ! "

என்கிறீர்களா !




அது மெய்தான் !



ஆனால் கே.எஸ்ஜிக்கு  " தமிழ் " பேசும் நடிகை அல்லவா கேட்டார்,

மாறாக " தமில்"    பேசும் நடிகைகள் அல்லவே !




இந்த சமயத்தில்...............!


அச்சுதன் !

இவர் யார் தெரியுமா ?



" சத்தியமாக நமக்கு தெரியாது ! "

என்கிறீர்களா !  உண்மைதான் !



இந்த கட்டுரையை நான் 'எழுதுவதற்கு' முன்னர் எனக்கே கூட

அவர் யார் என்று தெரியாது !

அச்சுதன், ஒரு துணை நடிகர் ஏஜண்ட் !

அந்த அச்சுதன் தான் பல பெண்களை அழைத்து வந்தார் !

ஒரு கட்டத்தில் கே . எஸ். ஜி, அச்சுதனைப் பார்த்து இப்படி

சொல்லிவிட்டார் :



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 1003379






." இதோ பார் அச்சுதா !

இனிமேல் எந்த பெண்ணையும் அழைத்து வராதே !

'கற்பகம்' காரக்டருக்கு யாரும் தகுதி இல்லே ! "


அச்சுதன் அஞ்சவில்லை !

" அண்ணே !  இப்போது இந்த  பெண்ணைப் பார்த்து விடுங்கள்,

அப்புறம் சொல்லுங்கள் !

என்றார் !


கே. எஸ். கோபாலகிருஷ்ணன் வேண்டா வெறுப்பாக விருப்பம் இல்லாமல்

தலையைத் திருப்பி அந்த பெண்ணைப் பார்த்தார் !


அடுத்த நொடி !

கே. எஸ்.ஜி முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது !

முகத்தில் புத்துணர்ச்சி  !

கத்த ஆரம்பித்துவிட்டாஅர் !


" டேய் ! இவளைத்தான் டா தேடிக்கொண்டிருக்கேன் !

இவதான் டா  'கற்பகம் ' !


உற்சாகத்துடன் துள்ளிக் குதித்தார் !



' தெய்வநாயகி' ( எ )  கே. ஆர். விஜயா ' கற்பகம் ' ஆனார் !

அப்போது 'கற்பகம்' த்து......ஹி...ஹி...ஐ மீன் ....கே. ஆர். விஜயாவுக்கு

வயது 17 !





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Downlowuw




 (  'கற்பகம் ' படத்தில் ஒப்பந்தம் ஆன நடிகர் ஜெமினி

கணேசன் , ஒரு தருணத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றில்

தெய்வநாயகியைப் பார்த்து விட்டு பின்னர் அவர்தான் அந்த தெய்வ

நாயகியை கே . எஸ். ஜியிடம் அறிமுகம் செய்து வைத்ததாக

ஒரு தகவல் சில புத்தகங்களில் காணப்படுகிறது ! ! )




&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



' கற்பகம்' உருவான கதை :

சில சுவையான செய்திகள் !






கே. ஆர். விஜயா .






பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Hqdefaojo





" இவள் ஒரு களிமண் !

அதை அழகான்ன அற்புதமான பொம்மையாக

வடித்திருக்கிறேன் !

படத்தைப் பாருன்ங்கள் , இவள் கே. ஆர். விஜயா அல்ல !

'கற்பகம் ! "




சொல்கிறார் : கே. எஸ் .ஜி !


என்னதான் சிறிய , சிறிய வேடங்கள் என பல படங்களில்

கே. ஆர். விஜயா நடித்திருந்தாலும், , கே. எஸ். கோபால

கிருஷ்ணனின் 'கற்பகம் ' தான் அவரை சிறந்த நடிகை என்று

நம்மை அடையாளம் காட்டியது !




(  ஒரு விஷயம் !

அந்த கால கலைஞர்கள் பலர், தாங்கள் அறிமுகம் ஆன படம் என்பதை

மறைத்து விட்டு, மாறாக தாங்கள் மக்களால் பிரபலப் படுத்திய படத்தையே

முதல் படம் என்று சொல்லித் திருந்தனர் !

கே. ஆர். விஜயாவும் அவர்களில் ஒருவர் !


மற்ற எடுத்துக்காட்டுக்கள் சில பேர்களை சொல்லட்டுமா ?

சொல்றேனே !


கே.ஜே. யேசுதாஸ், மலேசியா வாசுதேவன்,

நாகேஷ், வாணி ஜெயராம்,

சரோஜாதேவி, ......என பல பேர்கள் ! )




கே. ஆர். விஜயா :  

களையான முகம்!  கடைந்து எடுத்த சிற்பம் போன்ற தேகம் !

புன்னகையுடன் கூடிய முகம் !

இந்த கே. ஆர். விஜயாவுக்கு " டைட்டில் " ரோல் தந்து

முன்னிலைப் படுத்தி  அந்த புதுமுகத்திடம் நடிப்புத்

திறமைய வெளிக் கொணர்ந்த திறமை கே . எஸ் . ஜி அவர்களையே

சாரும் !



 $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$




   

" பேபி" ஷகிலா !






பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 J72u



இந்த குழந்தை நட்சத்திரமும் ' கற்பகம் "

பட அறிமுகம்தான் !

இந்த குழந்தையும் தமிழ் ரசிகர்களை மகிழ்வித்தார் !

" புது முகம் "  கே. ஆர். விஜயாவை " அத்தை " , " அத்தை "  என

அடிக்கடி அழைத்து படம் முழுக்க வலம் வந்தாள் !

படத்தில் முத்துராமன் - ஷீலா தம்பதியின் மகளாக வரும்

ஷகிலா, பழகுவதோ ஜெமினி கணேசன் - கே. ஆர். விஜயா தம்பதியிடம்

தான் !

எனவே கதைப்படி 'அத்தை' கற்பகம் கூடவே 'ஒட்டி' பழகுவதற்கு,

வசதியாக குழந்தை ஷகிலாவை விஜயாவுடன் நன்றாக பழக

விட்டார்கள் !

விளைவு ?

குழந்தை ஷகிலா , கே. ஆர். விஜயாவுடன் நன்றாக பழகிவிட்டாள் !

எப்போதும் கே. ஆர். விஜயாவுடன் அவள் காணப்படுவாள் !

விளவு ?

படப்படிப்பு சுமார் 6 மாதங்களில் ஷகிலா, விஜயாவுடன் பழகின பிறகு,

ஷகிலாவை அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் !

விளவு ?

குழந்தை ஷகிலா அழுது அழுது முகம் எல்லாம் வீங்கியபடி

கே. எஸ்.ஜி யின் ஆபிசுக்கு அவளின் அம்மா அழைத்து வர , அவள்

அழுது அழுது முகம் வீங்கிக் காணப் படுவதைக் கண்டு அனைவரும்

திடுக்கிட்டனர் !


" என்னம்மா, ஆச்சு, ஷகிலாவுக்கு ? "

கே. எஸ். ஜி கேட்டார் !


" என்னவா !  இந்த பொண்னு அவங்க அம்மாவை நினைச்சு

நினைச்சு அழுது , சார் ! "


ஷகிலாவின் தாயார் சொன்னது !

விளைவு ?

அனைவரும் திடுக்கிட்டுனர் !


" என்னம்மா சொல்றீங்க ! ஷகிலாவின் அம்மா நீங்க தானம்மா! "

அபைவரும் இப்படி கேட்டனர் !


அதற்கு அந்த அம்மா சொன்னது :


" இல்லீங்க!   இந்த ஷகிலா, உங்க படத்திலே நடித்த புதுமுகம்

கே. ஆர். விஜாயா தான் தன் அம்மா என நினைத்து அழுகிறாள்,

அய்யா ! "


விளைவு ?


விளைவா......அனைவரும் வாழ்க்கையே வெறுத்து விட்டனர் !



ஷகிலா, பின்னர் :

" எங்க வீட்டுப் பிள்ளை "

" எங்க பாப்பா "

போன்ற படங்களில் நடித்தாள் !





%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%




எஸ். வி. ரங்காராவ் :








பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Jgqf





படத்தின் உயிர் நாடியே இவர்தான் !

அசல் கிராமத்து பண்ணையார் போன்ற தோற்றம் !

பல பேர்களுக்கு உதவி செய்யும் கருணை கொண்ட உள்ளம் !

தன் பண்ணை நிலங்களை பராமரிக்கும் நல்ல மனிதன்

ஜெமினியை தன் மருமகானாகவே ஏற்றுக்கொள்கிறார் !

தன் மகள் மாடு முட்டி இறந்ததை விட, தன் மருமகன்

அவளை நினைத்து நடைபிணமாக வாழுவத்ஹைப் பார்த்து

மனம் துடிக்கும் பெரியவர் அவர் !

பின்பு, தன் தம்பி மகள் சாவித்திரியை அவனுக்கே மணம்

முடிக்க துடிக்கும் முதியவர் - ரங்காராவ் !

இவர் நடிக்கவில்லை !

அந்த கிராமத்துப் பெரியவர் ஆகவே ஆகிவிட்டார் !




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



ஜெமினி கணேசன் :




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 3ayprvr




அமைதியான நடிப்பு ! மிகை இல்லாத நடிப்பு !

மனைவியை சொற்ப காலத்தில் இழந்தவன் எப்படி இருப்பானோ

அவனப் போன்ற முகம் +  நடிப்பு !

மாமனாரிடம் காட்டும் மரியாதை !

மிக அற்புதமாக நடித்தார் , ஜெமினி கணேசன் !





%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%




நடிகையர் திலகம் சாவித்திரி.




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Yvyyvy




படத்தில் இவருக்கு ஏறக்குறைய இரண்டாவது கதாநாயகி

வேடம் ! எனினும் அதைப் பற்றி சற்றும் கவலைப் படாமல் தான் ஏற்றுக்

கொண்ட பாத்திரத்திற்கு பெருமை சேர்த்தார் !

குழந்தை ஷகிலா தன் மீதூ பாசம் காட்டவில்லை என்கிற சோகத்துடன்,

தாலி கட்டிய கணவன் இறந்து போன முதல் மனைவயின் நினைவாகவே

வாழ்ந்து வருவதைக் கண்டு மனம் புழுங்கும் அருமையான வேடம்,

இவருக்கு !   அந்த பாத்திரத்தின் மனநிலையை மிக  அற்புதமாக

சாவித்திரி வெளிக் காட்டினார் !

அவர், அப்படி மனம் உருகி நடித்த காரணத்தினால், படத்தை

காணும் நமக்கு :

' இந்த ஜெமினிகணேசனும் ஷகிலாவும் சாவித்திரியிடம்

அன்பு காட்டுவார்களா ! '

என்கிற ஏக்கம் பிறக்க வைக்கின்றது என்பது என்னவோ உண்மை !




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



எம் . ஆர் . ராதா.




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Hqdefaepe




படக்கதையின் வில்லன், ஆனால் படத்தை நகர்த்துபவர்

இவரே !   கே. ஆர். விஜயா மாடு முட்டி மடிவதற்கு இவர்தான் காரணம்.

எம். ஆர். ராதாவின் தனித்துவமான வசன 'மாடுலேஷன்' இந்த படத்தில்

மிக 'அழகாக' ( ! )  மிளிருவதை இந்த படத்தில் காணலாம் !

அந்த கால திரைப்படங்களில் எஸ். வி. ரங்காராவும், எம். ஆர்.

ராதாவும் இணைந்து நடித்தாலே அந்த படம் வெற்றி பெறுவது

உறுதி செய்த ஒன்று !

எடுத்துக்காட்டுக்கள் : ' குமுதம் ' , ' பச்சை விளக்கு' போன்ற

படங்கள் !




%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



ஒளிப்பதிவு மேதை : கர்ணன் !

[/h2]



பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Cm8z



' கற்பகம்' படத்தின் வெற்றிக்கு இவரும் ஒரு

காரணம் ! தெளிவான ஒளிப்பதிவுக்கு, அதிலு, கருப்பு - வெள்ளை

திரைப் படத்திற்கு மெருகு ஊட்டுவதில் கர்ணன் வல்லவர் !

பின்னர் இவர் தனக்கென்று ஒரு பாணியில் 'செக்ஸ்' படங்களை

எடுத்துத் தள்ளியதால் ஒளிப்பதிவாளர் கர்ணனின் திறமை

குடத்தில் இட்ட விளக்காகி விட்டது !



1. 'கற்பகம் ' படத்தில் வெளிப்புற காட்சிகளை அதிலும் கிராமத்து

வயல் வெளி - களத்து மேடு '  - போன்றவைகளை மிக

அற்புதமாக கர்ணன் படம் பிடித்தார் !



2. ' புது முகம் ' கே . ஆர் . விஜயா வை அழகான தோற்றத்தில்

அனைத்துத் தரப்பு ரசிகர்களை கவரும் வகையில் படம்

பிடித்து காட்டினார் , கர்ணன் !



3. " மன்னவனே அழலாமா "   பாடல் காட்சியில் , களத்து மேட்டில்

சோகமாக காணப்படும் போது, இறந்து போன தன மனைவி

( கே. ஆர் . விஜயா )  ஆவி வடிவில் வந்து அவரை தேற்றும் பாடல்

காட்சியில் உண்மையிலீயெ அனைவரையும் பயமுறுத்தும்

அளவில் அற்புதமாக படம் பிடித்தார் , கர்ணன் !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 G25c






இந்த காட்சியைப் பார்த்து அவரது குருநாதர் , பிரபல

ஒளிப்பதிவாளர் மாருதி ராவ் :


" டேய் கர்ணா ! உனையிலே பேயைப் பார்த்தமாதிரி மிக

அற்புதமாக படம் எடுத்திருக்கிறாய் ! "


என்று பாராட்டினாராம் !




%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


'கற்பகம் ' படத்தின் பாடல்கள் !





' கற்பகம் ' படத்தைப் பற்றி இன்றளவும் பேசப்படும்

முக்கிய காரணங்களில் இன்றியமையாதது ஒன்று :   அது :

'கற்பக்கம்' படத்தில் இடம் பெற்ற பாடல்கள் !





தமிழ்த் திரைப்படங்களில்

ஒரே பாடகி படத்தில் இடம் பெற்ற அனைத்துப்

பாடல்களையும் பாடின முதல் படம் :

' கற்பாகம் "

பாடகி : பி . சுசீலா !



( வெறும் பாடகர்கள் மட்டும் பாடிய முதல் படம் ?

" ஒரு தலை ராகம் " ( 1980 ) .




மெல்லிசை மன்னர்கள் - வாலி -

பி. சுசீலா - இவர்களால் உருவான பாடல்கள்.......

விரிவாகவே ,,,,,,,,,, பின்னோட்டத்தில் !

[/b]


விரைவில் ...

'கற்பகம்'  படப் பாடல்கள்....

பின்னோட்டத்தில் !





&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



" கற்பகம் " - வெற்றி !




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 V3yd



" கற்பகம் " படம் , 15-11- 1963 ஆம் ஆண்டில் வெளியாகி

பெறும் வெற்றி பெற்றது .

பல இடங்களில் 100 நாட்களைத் தாண்டி ஓடியது !

இயக்குனர் கே. எஸ். ஜிக்கு பெரிய செல்வத்தையும்,

புகழையும் வாரி இறைத்தது !


அந்த பணத்தை வைத்து இயக்குனர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்

சென்னை வடபழனியில் :


" கற்பகம் ஸ்டுடியோ"

என்கிற படப்பிடிப்பு  அரங்கை நிர்மானித்தார் !



அது மட்டுமா !


மத்திய அரசால் 1963 ஆம் சிறந்த படத்திற்கான வெள்ளிப்

பதக்கத்தையும் வாங்கியது, 'கற்பகம் " !





&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&




அடுத்த கட்டுரை :





மணிரத்தினம் -



 பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Lf26nayaka





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Nayagan140


கமல்-





பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 W2pfx


இளையராஜாவின் :





" நாயகன் " (  1987 )




பழைய தமிழ்த்   திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 15 Downlotxt



உருவான  கதை !


விரைவில் !






எம்கேஆர்சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Oct 19, 2014 7:07 am

எம்.ஆர்.ராதாவின் அசத்தலான படம் ஒன்றை போட்டு எங்களை அசத்தி விட்டீர்கள், எங்கிருந்து இவற்றை எடுத்து வருகிறீர்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. தகவல்களுக்கும் தரமான கிடைப்பதற்கிறிய படங்களுக்கும் மிக்க நன்றி டாக்டர் சார்.

தொடரட்டும் உங்களது இந்த அற்புத பணி.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 19, 2014 1:10 pm

தொடர் பதிவிற்கு நன்றி நன்றி



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Tue Oct 21, 2014 10:14 pm

டாக்டர் சார்

1. கற்பகம் படத்திற்காக வாலி எழுதி ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடி ஒரு பாடல் பதிவு செய்யப் பட்டதா..
2. சித்தி படத்தில் இடம் பெற்ற சந்திப்போமா பாடல் கற்பகம் படத்திற்காக பதிவு செய்யப்பட்டதா..

சந்தேகத்தை தெளிவு செய்யுங்களேன்...

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Tue Oct 21, 2014 10:15 pm

என் கேள்விகள் ஒரு புறம்..

உங்கள் கட்டுரை...
என்னவென்று சொல்வது.. இவ்வளவு விரிவாகவும் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதும் கலை சிலருக்கு மட்டுமே வாய்க்கும்...
தங்களுடைய எழுத்துக்க அந்த வலிமை உள்ளது.
பாராட்டுக்கள்..

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 22, 2014 2:11 pm

வீயார் சார், நீங்கள் குறிப்பிடுவது போல் டாக்டர் ஐயா அவர்கள் நிறைய சினிமா சம்பந்தமாக பல அறிய தகவல்களை வைத்திருப்பார் போல் இருக்கிறது. நமக்காக இங்கு அவர் தந்து வருவது நாம் செய்த பலன். அவருக்கு என்றுமே நாம் கடமைப்பட்டிருக்கிறோம். வளர்க அவரது தொண்டு.


mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat Nov 01, 2014 7:31 am

மாணிக்கம் நடேசன் wrote:எம்.ஆர்.ராதாவின் அசத்தலான படம் ஒன்றை போட்டு எங்களை அசத்தி விட்டீர்கள், எங்கிருந்து இவற்றை எடுத்து வருகிறீர்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. தகவல்களுக்கும் தரமான கிடைப்பதற்கிறிய படங்களுக்கும் மிக்க நன்றி டாக்டர் சார்.

தொடரட்டும் உங்களது இந்த அற்புத பணி.
மேற்கோள் செய்த பதிவு: 1097683





அன்புள்ள திரு. மாணிக்க்கம் நடேசன்ன் அவர்களுக்கு,

தங்களின் இரு கடிதங்களுக்கும் நன்றி  !

எனக்கு நேரம் இருக்கும் போதேல்லாம் நிச்ச்சயம்  எழுதுகிறேன்,

மருத்துவப் பணியில் இருக்கும் எனக்கு நேரம் கிடைப்பது

என்பது அரிது.

எனினும் , நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேஎன்.


நன்றி ஐயா,



எம்கேஆர்சாந்தாராம்

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sat Nov 01, 2014 7:33 am

M.M.SENTHIL wrote:தொடர் பதிவிற்கு நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1097721



 நன்றி , திரு. எம். எம். செந்தில் அவர்களே !

எம்கேஆர்சாந்தாராம்



Sponsored content

PostSponsored content



Page 14 of 26 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக