ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 T.N.Balasubramanian

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ayyasamy ram

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம்

View previous topic View next topic Go down

மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம்

Post by சிவா on Wed May 14, 2014 6:08 pmஎப்போதாவது அபூர்வமாக வரும் மிக சிறந்த கதையம்சம் கொண்ட படங்களின் வரிசையில், ‘மெய்யழகி.’

ஜெய்குவேதனி சிறுமியாக இருக்கும்போதே அவருடைய அம்மா ஒரு தம்பியை பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்து போகிறார். அப்பா ஒரு குடிகாரர். தம்பியை தன் கழுத்தில் தொட்டில் கட்டி வளர்க்கிறார், ஜெய்குவேதனி. ‘ஆட்டிஸம்’ பாதித்த சிறுவனாக வளர்கிறான், தம்பி பாலாஜி. வாயில் எப்போதும் எச்சில் ஒழுக, கையையும் கால்களையும் இழுத்துக்கொண்டு நடக்கும் பாலாஜியை ஊரில் உள்ள மற்ற சிறுவர்கள், ‘ஜொள்ளு’ என்று கேலி–கிண்டல் செய்கிறார்கள்.

அக்கா ஜெய்குவேதனி மட்டும் தம்பி பாலாஜி மீது பாசமழை பொழிந்து, கண்ணுக்கு கண்ணாக வளர்க்கிறார். தம்பிக்காக, திருமண வாழ்க்கையை தியாகம் செய்கிறார். ஜெய்குவேதனியின் அழகையும், வசீகர உடற்கட்டையும் பார்த்து, அந்த ஊரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் பண்ணையார் அருண்மொழிவர்மன் ஆசைப்படுகிறார். அனுபவிக்க துடிக்கிறார். அவருடைய வலையில் சிக்காமல் தப்புகிறார், ஜெய்குவேதனி.

அருண்மொழிவர்மன் தனது கடைசி அஸ்திரமாக, ஒரு ஜோதிடரை ‘செட்–அப்’ செய்து, மனைவி சம்மதத்துடன் ஜெய்குவேதனியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். அதற்கு சம்மதிக்காத ஜெய்குவேதனி, அருண்மொழிவர்மனிடம் வேலை செய்யும் எல்லனை திருமணம் செய்து கொள்ள முன்வருகிறார். அதை கேள்விப்பட்ட அருண்மொழிவர்மன், எல்லனை அடித்து கொலை செய்கிறார். கொலையாளி, ஜெய்குவேதனியின் முறைமாமன்தான் என்று இல்லாத ஒரு உறவை சொல்லி, போலீசை திசை திருப்புகிறார்.

இந்த நிலையில், தம்பி பாலாஜிக்கு ஒரு லட்சம் செலவு செய்து ஆபரேஷன் செய்தால் குணமாகி விடுவார் என்று டாக்டர் சொல்கிறார். தம்பிக்காக, அருண்மொழிவர்மனை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஜெய்குவேதனி சம்மதிக்கிறார். அவர்கள் திருமணம் நடந்ததா, இல்லையா? என்பதே படத்தின் முடிவு.

‘ஆட்டிஸம்’ பாதித்த இளைஞராக பாலாஜி வாழ்ந்திருக்கிறார். கோணல் வாயில் எப்போதும் எச்சில் ஒழுகியபடி, ஒரு கையை கோணலாக வைத்துக்கொண்டு, ஒரு காலை இழுத்து நடக்கும் அந்த ‘தெய்வா’ கதாபாத்திரத்தில் பாலாஜி, படம் பார்ப்பவர்களை உருக வைத்து விடுகிறார். அக்கா காலில் குத்திய முள்ளை எடுத்து ஆக்ரோஷமாக தீயில் போட்டு கருக்குவது; அக்கா வாங்கி கொடுத்த பிரியாணியை, ‘‘எனக்கு நீ வாங்கி கொடுப்பாய்...உனக்கு யார் வாங்கி கொடுப்பாங்க’’ என்று அக்காவுக்கும் ஊட்டி விடுவது; ‘‘என் பிள்ளைடா நீ’’ என்று உருகும் அக்கா காலில் விழுந்து வணங்குவது...என கதையுடனும், கதாபாத்திரத்துடனும் ஒன்ற வைத்து விடுகிறார்.

அக்காவாக ஜெய்குவேதனி, பொருத்தமான தேர்வு. தம்பியை காணாமல் தவித்துபோய், ‘‘உன்னை காணாமல் துடிச்சிப் போயிட்டேன்டா அக்கா. நான் பெற்றெடுக்காத பிள்ளைடா நீ’’ என்று ஜெய்குவேதனி கலங்குகிற காட்சியில், தியேட்டரில் நிறைய பேர் கண்களை துடைத்துக்கொள்கிறார்கள்.

‘பணம்’ கதாபாத்திரத்தில் அருண்மொழிவர்மன் (டிஸ்கோசாந்தியின் தம்பி) கலக்கி இருக்கிறார். அதட்டி உருட்டாமல் சிரித்தபடி இவர் செய்யும் வில்லத்தனம், படத்துக்கு கூடுதல் பலம். இவருடைய மனைவியாக ஜெனி ஜாஸ்மின் (மீராஜாஸ்மின் அக்கா), பாலாஜி–ஜெய்குவேதனியின் அப்பாவாக ராம்ராஜ், ஜெய்குவேதனியை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கும் எல்லனாக புதுமுகம் அர்ஜுன் ஆகியோரும் அந்தந்த கதாபாத்திரங்களாக மனதில் நிற்கிறார்கள்.

விவேகா எழுதிய ‘‘என் தாயே...என் தாயே...’’ பாடல் வரிகள், நெஞ்சை உலுக்கி விடுகிறது. பாடல்களில் இனிமை சேர்த்த எஸ்.பி.அபிஷேக், பின்னணி இசையில் இன்னும் கனம் சேர்த்து இருக்கலாம்.

ஆர்.டி.ஜெயவேல் டைரக்ஷனில், படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. ஜெய்குவேதனியை இரண்டாம் தாரமாக மணப்பதற்காக, ‘பணம்’ ஜோதிடரை மிரட்டி ‘செட் அப்’ செய்தபின், கதை வேகம் பிடிக்கிறது. ஒரு அக்காவுக்கும், தம்பிக்கும் இடையேயான பாசப்பிணைப்பை இந்த அளவுக்கு உயிரோட்டமாக எந்த படத்திலும் காட்டியதில்லை.

படத்தின் முடிவு, சூப்பர். பழைய பாரதிராஜா படம் பார்த்த திருப்தி.


[thanks] தினத்தந்தி [/thanks]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம்

Post by சிவா on Wed May 14, 2014 6:10 pm

மெய்யழகி – ‘தி இந்து’ விமர்சனம்

மிக அபூர்வமான படங்கள் ஆரவாரம் இல்லாமல் வெளியாகின்றன. மெய்யழகியும் அப்படித்தான். ஒப்பனையுமின்றி, ஒப்பேத்தலுமின்றி ஒரு அக்காள் - தம்பியின் பாசப்போராட்டத்தை உயிரோட்டத்துடன் முன்வைத்திருக்கும் படம். படம் முழுவதும் கதாபாத்திரங்களை மறைந்திருந்து படம் பிடித்தமாதிரி மிகைகள் குறைந்த யதார்த்தம்.

தம்பியை ஈன்ற அம்மா மரணத்தைத் தழுவ, தாயின் இடத்தை நிரப்புகிறாள் அக்கா. ஆட்டிசம் குறைபாட்டுடன் வளரும் தம்பியைக் காப்பாற்ற வாழை இலைகளை உணவுவிடுதிகளுக்கு விற்றுத் தம்பியைக் காக்கும் நேர்மையான கிராமத்துப் பெண்மை. திருமணம் செய்துகொண்டால், தம்பியைப் பார்த்துக் கொள்ள முடியாமல் போய்விடுமோ என அஞ்சி வாழும் இந்த அபலைப் பெண் மீது அந்த ஊரின் பெரிய மனுசனாக இருக்கும் பண்ணையாருக்குக் காதல். ஆனால் பண்ணையாரின் கார் ஒட்டுநராக இருக்கும் இளைஞனின் காதலை ஏற்றுக்கொள்கிறாள். ஆனால் தம்பியால் காதலனை இழக்கவேண்டிய சூழல் வரும்போது அக்காள் என்ன செய்தாள் என்பதுதான் இந்த மெய்யழகியின் வாழ்க்கை..

கதாபாத்திரங்களை மிகையில்லாமல் உருவாகியவிதம், காட்சிகளை நமக்கு அருகாமையில் நிகழ்வதுபோலச் சித்தரித்த விதம், இரண்டிலுமே நேர்த்தி காட்டியிருக்கும் அறிமுக இயக்குனர் ஆர்.டி.ஜெயவேலுவை நம்பிக்கையூட்டும் இளம் இயக்குனர்களில் ஒருவராக அடையாளம் காண முடிகிறது.

பொழுதுபோக்கை நாடிவரும் பெரும்பான்மை ரசிகர்களுக்கு, உணர்ச்சிபூர்வமான ஒரு கதையைச் சொன்னாலும், அதை விறுவிறுப்பாகச் சொல்ல முடியும் என்று திரைக்கதையிலும் தொய்வில்லாத தன்மையைக் கடைசிவரை கையாண்டிருக்கிறார் இயக்குனர். இந்தக்கதையில் நகைச்சுவையைத் தேவையில்லாமல் நுழைக்காமல் இருந்ததற்காகவே இயக்குனரைத் தனியாகப் பாராட்டலாம்.

மெய்யழகியை மணமுடிக்க, தனது மனைவியை வைத்தே காய் நகர்த்தும் பண்ணையாரும், கணவன் சொன்னால் அதில் உண்மை இருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்பும் அவரது மனைவி கதாபாத்திரமும் கதையை இழுத்துச் செல்வதில் கன கச்சிதம். தீடீர் காதலனாகும் கார் ஓட்டுனர் அர்ஜூன் கதாபாத்திரத்திலும் மிகையில்லை.

முதன்மைக் கதாபாத்திரமாக நடித்தவர்களில் அக்கா ’மெய்யழகியாக’ நடித்திருக்கும் ஆரோகணம் படப்புகழ் ஜெய்குஹானி அருமையான நட்சத்திரத் தேர்வு. துளி ஒப்பனை இல்லாமல் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். கணவனைத் திருமணம் செய்துகொண்டால் எல்லாமே கிடைக்கும் என்று சாப்பிட அழைக்கும் பண்ணையாரின் மனைவியிடம் “எச்சில் இலைல சாப்பிடக் கூப்பிடுறீங்களே... நியாயமாக்கா..?” என்று கேட்கும் இடம் உட்படக் கடைசிவரை கண்ணியம் கெடாமல் இருக்கிறது இவரது கதாபாத்திரம்.

இவர்தான் மொத்தக் கதையையும் தோளில் சுமக்கிறார் என்றால், ஆட்டிசம் தம்பியாக நடித்திருக்கும் பாலாஜி, விருதுபெறும் தகுதிக்குரிய நடிப்பை வழங்கியிருக்கிறார். 'பட்டாளம்', 'காதல் சொல்ல வந்தேன்' ஆகிய படங்களில் நடித்திருக்கும் இவர், வாயில் எச்சில் ஒழுகியபடியே கைகளை மடக்கி வைத்துக் கொண்டு.. கால்களைத் தரையில் தேய்த்தபடியே தனது கதாபாத்திரத்தை முழுமையாக உயிரூட்டியிருக்கிறார். ஒரு காட்சியில் கூட மாறுதலைக் காட்டாமல் கடைசி வரையிலும் நடிப்பில் இவர் காட்டியிருக்கும் கவனத்தையும், அர்ப்பணிப்பையும், படம் பார்த்தால் மட்டுமே உணரமுடியும்.

’எம்பேர நானே மறந்தேனடா உன்ன நெனச்சு’ பாடல் உட்பட அபிஷேக்கின் இசையில் அமைந்த மூன்று பாடல்களுமே கதையைத் தூக்கிப்பிடிக்கும் பாடல்கள். படத்தில் இருக்கும் சின்னச்சின்ன குறைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் மெய்யழகி முழுமையான படம்.

இந்து டாக்கீஸ் தீர்ப்பு

கையாண்ட கதையை அழுத்தமாகவும், யதார்த்தமாகவும் சொல்ல முயன்று வெற்றிபெற்றது, தொய்வில்லாத திரைக்கதை, கதாபாத்திரங்களாக நடித்தவர்களின் இயல்பான நடிப்பு. ஆகிய காரணங்கள் மெய்யழகியை அனைவரும் பார்க்கத் தகுதியான படமாக்கியிருக்கிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம்

Post by M.M.SENTHIL on Wed May 14, 2014 6:33 pm

நல்ல படம் ரொம்ப நாள் ஓடாதே அண்ணா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம்

Post by சிவா on Wed May 14, 2014 6:49 pm

@M.M.SENTHIL wrote:[link="/t110259-topic#1063612"]நல்ல படம் ரொம்ப நாள் ஓடாதே அண்ணா.

படம் வந்ததே யாருக்கும் தெரியாது செந்தில்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம்

Post by M.M.SENTHIL on Wed May 14, 2014 6:56 pm

@சிவா wrote:[link="/t110259-topic#1063622"]
@M.M.SENTHIL wrote:[link="/t110259-topic#1063612"]நல்ல படம் ரொம்ப நாள் ஓடாதே அண்ணா.

படம் வந்ததே யாருக்கும் தெரியாது செந்தில்!

நிஜமாய் எனக்கே இன்றுதான் தெரியும் அண்ணா. அதிர்ச்சி
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum