புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram

32 Posts - 33%
mohamed nizamudeen

4 Posts - 4%
லதா மெளர்யா
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

prajai

Ratha Vetrivel

2 Posts - 2%
manikavi

Kavithas

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10 
214 Posts - 42%

187 Posts - 37%
Dr.S.Soundarapandian
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10 
52 Posts - 10%

18 Posts - 4%
sugumaran
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Poll_c10 
16 Posts - 3%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 21, 2014 9:45 pm

First topic message reminder :

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 6-2-na11 பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு
பாராளுமன்ற கட்சி கூட்டம்

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

மோடி, பிரதமராக தேர்வு

அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.

பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.

ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு

அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.

தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.

நன்றி தெரிவித்தார் மோடி

எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.

இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி கட்சிகள் கூட்டம்

தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு

அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.

ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு

இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு

இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.

அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

26–ந் தேதி பதவி ஏற்பு

பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழா எங்கே?

பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.

வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 31, 2014 11:24 pm

Quote.
மேலும், முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்படும் போது, பிரதமர் அலுவலகமும், மத்திய செயலகமும் தகுந்த உதவி செய்யும் எனவும், இந்த அமைச்சரவை குழுக்கள் மற்றும் அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழுக்கள் கலைக்கப்படுவதால் அமைச்சகங்களும், துறைகளும் அதிகாரம் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. quote.

"எடுக்கின்ற முடிவிற்கு" பொறுப்பை (accountability.) தனதுடமை ஆக்குதல் நல்லதே . விதிமுறைக்கு உட்பட்டு செய்தல் அவசியம் . நேர்மை நிச்சயம் வெளிப்படும்
நல்ல முடிவு
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 05, 2014 3:51 am

தைரியமாக முடிவெடுங்கள்: செயலாளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடில்லி: நிர்வாகத்திற்கு இடையூறு செய்யும் பழமையான விதிகளை ஒதுக்கி வைக்க வேண்டும் அரசுத்துறை செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தைரியமாக முடிவெடுக்க வேண்டும் எனவும், அவர்கள் பின்னால் நான் இருப்பேன் எனவும் உறுதியளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தனது இல்லத்தில் 77 அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு சுமார் இரண்டரை மணி நேரம் நடந்தது. இந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகளின் கருத்துக்களை மோடி கேட்டறிந்தார். மேலும், தற்போதைய சூழ்நிலையில், தங்களின் உண்மையான திறனை யாரும் கண்டறியாதது குறித்து அதிகாரிகள் மனவேதனை தெரிவித்ததையும் மோடி கவனத்தில் கொண்டார்.

அதிகாரிகள் மத்தியில் பேசிய மோடி, அதிகாரிகள் தன்னை தொலைபேசி, இமெயில் மூலம் தொடர்பு கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும், பல்வேறு விவகாரங்களில் தலையிட வேண்டும் என்றாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என கூறினார். நாட்டின் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்க அதிகாரிகளின் பொறுப்புணர்வு மற்றும் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், நிர்வாக விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை பொது மக்களுக்கு உதவும் வகையில் எளிதாக்க வேண்டும் என கூறினார்.

மேலும் அவர் பல்வேறு விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள், தற்போது உதவாத வகையில் இருக்கலாம். அவை சிறந்த நிர்வாகத்திற்கு உதவும் வகையில் இருக்காமல், அவை தவிர்க்கக்கூடிய குழப்பத்திற்குகொண்டு செல்லலாம். அது போன்ற விதிமுறைகளை கண்டறிந்தும், பழமையான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை ஒதுக்கி வைக்க வேண்டும். அதிகாரிகள் தங்களது கருத்துக்கள் மற்றும் தகவல்களுடன் தன்னை அணுகலாம் என்றும், அதிகாரிகள் தைரியமாக முடிவெடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கிய பிரதமர், அவர்களது முடிவுக்கு பின்னால் தான் நிற்பேன் எனவும் கூறினார்.

சிறந்த மற்றும் திறமையான நிர்வாகத்திற்கு தொழில்நுட்பம் பயன்படுத்த வேண்டும் எனக்கறிய பிரதமர், ஜனநாயகத்தில் பொது மக்களின் பிரச்னைகளை தீர்ப்பது மிகவும் முக்கியம் எனவும், இதற்கு தகவல் தொழில்நுட்பம் மிகவும் உதவும் என கூறினார். ஒரு குழுவாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக்கூறிய பிரதமர், செயலாளர்கள் அந்த குழுவிற்கு செயல்பட வேண்டும் எனவும், ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான், விரைவான முடிவு எடுக்க முடியும் என கூறினார்.

அதிகாரிகளின் செயல்பாட்டிற்கு மதிப்பளிப்பதாக கூறிய பிரதமர், தனது அரசின் செயல்பாடு, பல்வேறு அமைச்சகங்களை ஒழுங்கு படுத்தியும், வேலை பார்க்கும் இடங்களை மேம்படுத்தியும் இருக்கும் எனவும், இதன் மூலம் சிறந்த பணி மற்றும் திறமையான முடிவுகள் மக்களுக்கு கிடைக்கும் எனவும், தொழில்நுட்பம் மற்றும் துறைகள், நிர்வாகங்கள் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டால், அனைத்தும் ஒரே புள்ளியில் இணையும் வாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.

இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி தனது பேச்சுக்கு பின், பிரச்னைகள் பற்றி பேசுமாறு செயலாளர்களை கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் 25 துறை செயலாளர்கள், தங்களது துறை பிரச்னைகள் பற்றி விரிவாக பேசினர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 05, 2014 4:07 am

அமெரிக்கா வர மோடிக்கு ஒபாமா அழைப்பு:ஒபாமாவின் கோரிக்கையை ஏற்றார் மோடி

புதுடில்லி: இரு தரப்பு உறவு குறித்து விவாதிக்க செப்டம்பர் மாதம் அமெரிக்கா வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். ஒபாமாவின் கோரிக்கையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

மோடி-ஒபாமா இடையிலான சந்திப்பை செப்டம்பர் 30ம் தேதி வைத்துக்கொள்ளலாம் என அமெரிக்கா நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் ஐ.நா.,வில் மோடி உரையாற்றும் நேரத்தில், செப்டம்பர் 26ம் தேதி இந்த சந்திப்பை வைத்துக்கொள்ளலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 05, 2014 4:10 am

பல்வேறு துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் தொடர்ந்து அதிரடியாக செயல்பட்டு வருகிறார். ஆட்சியின் முதல் 100 நாட்களில் நிறைவேற்றுவதற்கான திட்டத்தை வகுத்து, செயல்படுத்துமாறு தனது மந்திரிசபை சகாக்களுக்கு உத்தரவிட்டார். குறைவான எண்ணிக்கையிலான மந்திரிகளைக் கொண்டு, நிறைவான நிர்வாகத்தை நடத்தி, மக்களுக்கு அரசின் திட்டங்கள் சரியானபடிக்கு போய்ச்சேருவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று அவர் விருப்பம் கொண்டுள்ளார்.இது தொடர்பாக அவர் 10 அம்சத் திட்டம் ஒன்றையும் தீட்டி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், முதல் முறையாக மத்திய அரசின் பல்வேறு துறை அமைச்சகங்களின் செயலாளர்களை அவர் சந்தித்து, திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக கலந்து உரையாட விரும்பினார். இந்த சந்திப்பு நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி கோபிநாத் முண்டே சற்றும் எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்கி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சந்திப்பு இனறு நடந்தது. இந்த சந்திப்புக்கு நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம், உள்துறை செயலாளர் அனில் கோசுவாமி, ராணுவ செயலாளர் ராதாகிருஷ்ண மாத்தூர், வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங் உள்ளிட்ட 77 மூத்த அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் திட்டங்களை செயல்படுத்துவதில் தனது விருப்பங்களையும், முன் உரிமைகளையும் பிரதமர் மோடி விளக்கினார் என்றும், அதிகாரிகளிடம் தனக்கு உள்ள எதிர்பார்ப்புக்களையும் அவர் தெரிவித்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 06, 2014 3:20 am

பிரதமராக பொறுப்பேற்ற பின் முதலில் பூடான் செல்லும் மோடி

பாரதப் பிரதமராக மோடி பதவியேற்ற பின் முதல் அரசு முறைப் பயணமாக அண்டை நாடான பூடானுக்கு இம்மாத இறுதியில் செல்கிறார்.

மோடி பூடான் செல்ல முடிவெடுத்தது இரு நாடுகளுக்கிடையேயான உறவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இமயமலைப்பகுதி நாடான பூடான் அதிபருடன் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்தும், பிராந்திய விவகாரங்கள் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். முன்னதாக கடந்த மே 26ந் தேதி நடைபெற்ற பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பூடான் பிரதமரான ஷெரிங் டாப்கே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு விழாவுக்கு பின் பூடான் அதிபருடன் மோடி ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வரும் ஜூலை மாத மத்தியில் பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றிருக்கும் பிரேசில் நாட்டுக்கு மோடி செல்வார் என தெரிய வந்துள்ளது.

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 08, 2014 7:58 am

மூன்று நிமிடங்களில் முடிவு எடுக்கும் பிரதமர் மோடி

பாட்னா: ''பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு, மூன்று நிமிடங்களில், முடிவுகளை எடுக்கிறார். தன் முடிவுகளால், எவ்வளவு மக்கள் பயனடைவர் என்பதிலேயே, அவர் அதிக அக்கறை காட்டுகிறார்,'' என, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த, பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,யான ரவிசங்கர் பிரசாத், மத்திய சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சராக பதவியேற்ற பின், முதல் முறையாக, பாட்னா நகர் சென்ற அவருக்கு, பா.ஜ., தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த, நரேந்திர மோடி பிரதமரானது மற்றும் அவரின் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சிறப்பான செயல்பாடுகளைப் பார்த்து, உலகில் பெரிய மற்றும் சக்தி வாய்ந்த நாடுகளான, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் பிரேசிலும், ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளும் வியப்படைந்துள்ளன.

மோடி பிரதமரான பின், டில்லியில் உள்ள, மத்திய அரசு அலுவலகங்களில், புதிய பணி கலாசாரம் துவங்கியுள்ளது. காலை, 9:00 மணிக்கு அலுவலகம் வந்து விடும் அவர், எப்போது வீடு திரும்புவார் என்பதை, யாரும் சொல்ல முடியாது. அவருக்கு சனி, ஞாயிறு விடுமுறை என்பது எல்லாம் கிடையாது. எந்த விஷயத்திலும் முடிவெடுக்க, அவருக்கு இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு மேலாவதில்லை. முடிவு எடுக்கும் போது, அதனால், எவ்வளவு மக்கள் பயன் அடைவர் என்பதை கருத்தில் கொண்டே எடுக்கிறார்.

கடந்த, மே, 26ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, பிரதமர் மோடியிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது, குஜராத் பவனுக்கு வரும்படி கூறிய அவர், 'மாலையில், நாமெல்லாம் அமைச்சர்களாக பதவியேற்க வேண்டும்' என, தெரிவித்தார். அப்போது தான், யாரெல்லாம், மத்திய அமைச்சர்கள் ஆகின்றனர் என்ற விவரமே, எனக்கு தெரியவந்தது. முந்தைய காங்கிரஸ் அரசில் எல்லாம், அமைச்சர்கள் தேர்வில், ஆதரவாளர்கள் மற்றும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. ஆனால், இந்த அரசில், ஒவ்வொருவரின் தகுதி அடிப்படையில், அவர்களை, பிரதமர் மோடி அமைச்சராக நியமித்துள்ளார். நான் இப்போது, மத்திய அமைச்சராக இருப்பதால், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசியல் சட்டத்தின், 370வது பிரிவு பற்றி, தனிப்பட்ட முறையில் எதுவும் சொல்ல மாட்டேன். அரசு தான் இதுபற்றி சொல்லும். இவ்வாறு, ரவிசங்கர் பிரசாத் கூறினார். பீகார் மாநிலத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், அங்கு ஆளும் கட்சியாக உள்ள, ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது. மொத்தமுள்ள, 40 தொகுதிகளில், இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜ., 22 இடங்களைப் பிடித்தது. அதனால், மோடியின் எதிர்ப்பாளரான, முதல்வராக இருந்த நிதிஷ்குமார் பதவி விலகினார். புதிய முதல்வராக, ஜிதன்ராம் மஞ்சி பதவியேற்றார்.

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 08, 2014 8:25 am

நரேந்திர மோடியின் பேஷனை பாராட்டும் அமெரிக்க ஊடகங்கள்

அமெரிக்காவுக்குள் நுழைய மோடிக்கு தடை இருந்திருந்தாலும், இப்போது அந்நாட்டில் புதிய பேஷன் அவதாரமாக பார்க்கப்படுகிறார் மோடி.

ஆம், நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்ற பின்னர் அவரது உடை அலங்காரம் அமெரிக்காவின் டைம், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் ஆகிய முன்னணி ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அங்கு, 'மோடி குர்தா' மிகவும் பிரபலமாகியுள்ளது.

‘A Leader Who Is What He Wears’ என்ற தலைப்பில் 'தி நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ள கட்டுரையில், 'உலக அளவில் மிச்செல் ஒபாமா, பிரான்கோயிஸ் ஹோலண்டே, டில்மா ரூசோப், மண்டேலா உள்ளிட்ட பலரது உடை அலங்காரம் குறித்து தனிப்பட்ட வலைப்பூக்களே உருவாக்கப்பட்டிருந்தாலும், நரேந்திர மோடியின் உடை அலங்காரம் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருக்கிறது.

சர்வதேச தலைவர்களை ஒப்பிடும்போது இந்திய தலைவர்கள் தங்கள் உடை அலங்காரத்தையே தங்கள் எண்ணங்களை உணர்த்தும் உபகரணமாக பயன்படுத்துவார்கள். ஆனால் மோடி அவர்களையும் விஞ்சிவிட்டார். அவரது உடை நிறையவே உணர்த்துகிறது.' என குறிப்பிட்டுள்ளது.

மோடியின் பேஷன் குறித்து 'தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை, 'மிச்செல் ஒபாமாவே தள்ளியிருங்கள் இந்த உலகிற்கு புதிய பேஷன் நாயகர் கிடைத்துவிட்டார்' என புகழாரம் சூட்டியுள்ளது.

நேற்று, 'டைம்' பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில், 'இந்திய பேஷன் உலகில் நரேந்திர மோடிக்குத்தான் அடுத்த பெரிய இடம்' என குறிப்பிட்டிருந்தது.

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 08, 2014 8:27 am

அவரது உடைகளை வடிவமைக்கும் சகோதர்கள் தங்களுக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று மோடி பதவி ஏற்ற அன்றே பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளனர்.

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Aபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Aபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Tபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Hபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Iபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Rபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Aபிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 10, 2014 5:10 pm

மத்திய அமைச்சர்கள் சொத்து பட்டியல்

புதுடில்லி: மத்தியில், அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளவர்களின் தற்போதைய சொத்து மதிப்பு குறித்த விவரங்களை, இந்த மாத இறுதிக்குள் பிரதமர் நரேந்திரமோடியிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 5:19 pm

பிரதமர்மோடி - ராணுவ தளபதி சந்திப்பு; எல்லை விவகாரம் குறித்து ஆலோசனை

புதுடில்லி: இந்திய - பாக்., எல்லையில் இன்று நடந்த தாக்குதல் தொடர்பாக ஏற்பட்டுள்ள நிலை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து ராணுவ தளபதி பிக்ராம்சிங் விளக்கினார். மேலும் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடமும் பிரதமர் மோடி எடுத்த, எடுக்கப்பட வேண்டிய விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். இன்று காலையில் இந்திய - பாக்., எல்லையில் ரஜோரி, பூஞ்ச் (காஷ்மீர் ) பகுதியில் பாக்., படையினர் இந்திய எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சந்திப்பில் உள்நாட்டு பாதுகாப்பு நிலை மற்றும் எல்லையில் ஏற்பட்டுள்ள நிலைகள் குறித்து ராணுவ தளபதி பிக்ராம்சிங்கிடம் கேட்றிந்தார். 3 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் முதன்முதலாக ராணுவ தளபதியுடன் இந்த சந்திப்பு நடந்தது. பிரதமர் மோடி தளபதிக்கு சில யோசனைகளை கூறியுள்ளார். வட கிழக்கு மாநிலங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் அனுப்பிய கடிதத்திற்கு பிரதமர் மோடி இன்று பதில் கடிதம் அனுப்பினார். இதில் தாங்கள் விரும்பியபடி இருநாட்டு வளர்ச்சிக்கு இணைந்து செயலாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தாக்குதலுக்கு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக