ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

தமிழ்த்துறை வாழ்த்து
 VEERAKUMARMALAR

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Wed May 21, 2014 9:45 pm

First topic message reminder :

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்புபாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

பாராளுமன்ற கட்சி கூட்டம்

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

மோடி, பிரதமராக தேர்வு

அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.

பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.

ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு

அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.

தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.

நன்றி தெரிவித்தார் மோடி

எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.

இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி கட்சிகள் கூட்டம்

தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு

அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.

ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு

இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு

இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.

அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

26–ந் தேதி பதவி ஏற்பு

பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழா எங்கே?

பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.

வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக


Last edited by சிவா on Wed May 21, 2014 9:50 pm; edited 2 times in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by பிளேடு பக்கிரி on Wed Aug 20, 2014 12:42 am

நல்ல தலைமையின் கீழ் இந்தியா .. மீண்டும் ஒளிரும் என்ற நம்பிக்கையில்avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Thu Aug 21, 2014 10:32 pm

கடமை தவறாத 50,000 டெல்லி போலீஸாரை நெகிழ்ச்சியுறச் செய்த பிரதமர் மோடி

டெல்லி காவல்துறையில் விடுமுறை நாள், பண்டிகை நாள் என்று பார்க்காமல் கடமையாற்றிய 50,000 காவலர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

நாட்டின் 68வது சுதந்திர தினத்திலிருந்து புதிய நடைமுறை ஒன்றைப் பிரதமர் அலுவலகம் அறிமுகம் செய்தது. அதன் படி, விடுமுறை, பண்டிகை நாட்கள் என்று பார்க்காமல் கடமையாற்றிய காவல் ஊழியர்கள் பட்டியலைத் தயாரித்து பிரதமருக்கு அனுப்பியுள்ளது.

இதனையடுத்து பிரதமர் மோடி அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை மெசேஜ் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முயற்சியை வாழ்த்துக்களைப் பெற்ற காவல்துறையினர் நெகிழ்ந்து போய் மிகவும் பாராட்டியுள்ளனர்.

டெல்லி காவல்துறை இணை ஆணையர் திபேந்திர பதக் சுதந்திர தினத்தன்று மோடியின் வாழ்த்துச் செய்தியை வரப்பெற்றார். இது பற்றி அவர் கூறும்போது, “இம்மாதிரி ஒவ்வொரு முறையும் பிரதமரிடமிருந்து வாழ்த்துகள் வரப்பெற்றால், காவல்துறையினரை அது மேலும் உத்வேகப்படுத்தும், இரவு பகல் பாராமல் மேலும் அவர்கள் கடமையாற்ற இந்த முயற்சி உதவும்” என்றார்.

இதற்காக சுதந்திர தினத்திற்குச் சில நாட்கள் முன்பே டெல்லி காவல்துறைக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் எழுதியிருந்தது. அதாவது கடமை தவறாத காவலர்களைப் பற்றிய தரவுகளை தயாரிக்கக் கோரப்பட்டிருந்தது.

இதனையடுத்து 60% தரவுகள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்தி சென்றடைந்துள்ளது. மேலும் 80,000 காவல்துறை ஊழியர்களின் தரவுகளும் திரட்டப்படவுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Mon Oct 20, 2014 4:54 pm

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் மோடி

ஆஸ்திரேலியாவுக்கு நவம்பரில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்தப் பயணத்தின்போது ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் என்று பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Mon Oct 20, 2014 4:54 pm

@Aathira wrote:இது பயனுள்ள பதிவு. அப்படியே அவரது வரலாறு பதிவு செய்யுங்கள் சிவா

நிச்சயம் பதிவிடுவேன் அக்கா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Fri Jan 16, 2015 8:42 am

குஜராத் கலவரம்: மோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்த அமெரிக்கா!

நியூயார்க்: பிரதமர் மோடி மீது அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில், அப்போதைய குஜராத் முதல்வரும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும், நரேந்திர மோடிக்கு விசா வழங்கவும் அமெரிக்கா மறுத்து வந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி மீதான வழக்கை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனாலிசா டோரஸ், ''நட்புறவை பேணும் ஒரு சிறந்த அண்டை நாட்டு தலைவர் மோடி. இந்த வழக்கில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Sun Mar 01, 2015 12:39 am

எனது அரசின் ஒரே ஒரு மதம் 'முதன்மை இந்தியா' - பிரதமர் மோடி

மக்களவையில் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "எனது அரசின் ஒரே ஒரு மதம் 'முதன்மை இந்தியா' என்பது, எனது ஒரே ஒரு மதப் புத்தகம் இந்திய அரசியலமைப்புச் சட்டம், எனது ஒரே ஒரு பிரார்த்தனை அனைவரின் நலம்" என்று கூறினார்.

மேலும், பேசுகையில், நிலம் கையகப்படுத்துவதற்கான வரையறை அவசர சட்ட திருத்தத்தில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அம்சம் இருந்தால் அதனை மாற்றி அமைக்க தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Sat Apr 25, 2015 2:25 pm

முதன் முறையாக மெட்ரோ ரயிலில் பயணித்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, முதன் முறையாக இன்று (சனிக்கிழமை) மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.

டெல்லி தவுலா கான் பகுதியில் இருந்து துவாரகா வரை அவர் மெட்ரோ ரயிலில் பயணித்தார். தேசிய நுண்ணறிவு மையத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் மெட்ரோ ரயிலில் சென்றார். பிரதமருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சென்றார்.

தனது சாலை வழிப் பயணத்தின்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணத்தை ரசித்தேன்...

டெல்லி மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடி தனது அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். ட்விட்டரில் அவர், "டெல்லி மெட்ரோவில் பயணித்துப் பாருங்கள் என ஸ்ரீதரன் என்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறார். இன்று அந்த அனுபவத்தைப் பெற்றேன். மகிழ்ச்சியடைந்தேன். நன்றி டெல்லி மெட்ரோ. நன்றி ஸ்ரீதரன் அவர்களே" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீதரன், டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தின், மேலாண்மை இயக்குனராக இருந்தவர். 'மெட்ரோ மனிதர்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Tue Apr 28, 2015 10:30 pm

டுவிட்டரில் அதிக பாலோவர்களை கொண்ட உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 3-வது இடம்

டுவிட்டரில் உலகில் அதிக பாலோவர்களை கொண்ட தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது இடத்தில் உள்ளார். டுவிட்டர்களில் அதிக பாலோவர்களை கொண்டுள்ள வெளிவிவகார மந்திரிகளில் சுஷ்மா சுவராஜ் முதல் இடத்தில் உள்ளார்.

2015 டிவிப்ளமோசி ஆய்வு அறிக்கை படி வெளி விகாரத்துறை மந்திரிகளில் அதிக பாலோவர்களை கொண்டுள்ளவர் சுஷ்மா சுவராஜ். அவருக்கு 24,38,228 பாலோவர்கள் உள்ளனர். இவரை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்டின் வெளிவிவகார துறை மந்திரி அப்துல்லா பின் சயித் 16,08,831 பாலோவர்களை கொண்டுள்ளார். துருக்கியை சேர்ந்த மேவ்லட் கவுசோகுலு 3,76,429 பாலோவர்களை கொண்டு உள்ளார்.

இந்த ஆய்வு பிப்ரவரி 24 ந்தேதி வரை கணக்கிடப்பட்டு உள்ளது. உலக தலைவர்களில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 5,69,33,515 பாலோவர்கள் கொண்டுள்ளார். போப் பிரான்சிஸ் 1,95,80,910 பாலோவர்கள் கொண்டுள்ளார்..இவருக்கு 9 பல்வேறு மொழிகளில் டுவிட்டர் கணக்கு உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 1,09,02,510 பாலோவர்கள் உள்ளனர்.தேர்தல் மே 2014 க்கு பிறகு மோடி டுவிட்டர் பாலோவர்கள் எண்ணிக்கை உலக தலைவர்கள் வரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.என டிவிப்ளமோசி மத்தியாஸ் லூயிப்கென்ஸ் கூறி உள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Sat Sep 05, 2015 12:12 am

ஆடை வடிவமைப்பாளர் இருக்கிறார் என்பது வதந்தியே: பிரதமர் மோடி

நாடு முழுவதும் ஆசிரியர் தினம் (செப்.5) சனிக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி முறையில் கலந்துரையாடினார்.

குடியரசு முன்னாள் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி, ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு, தில்லியில் உள்ள மானேக்ஷா கலையரங்கில் இன்று காலை 10 மணிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 800 மாணவர்களுடனும், 60 ஆசிரியர்களுடனும் அவர் காணொலி முறையில் பிரதமர் மோடி நேரில் கலந்துரையாடினார்.

உரையாடலின் போது மாணவர் ஒருவர் பிரதமர் மோடியின் ‘ஆடைகள் பற்றிய தனித்துவமான கவனம்’ பற்றி கேட்டதற்கு பதில் அளித்த அவர், “எனக்கென பிரத்யேக ஆடை வடிவமைப்பாளர் இருக்கிறார் என்பது வெறும் வதந்தியே. நான் எளிமையாகவே ஆடை அணிகிறேன்.

நான் ஒரு சாதாரணமான பின்னணியிலிருந்து வந்தவன், குஜராத்தில் தட்பவெப்ப நிலை குளிராக இருக்காது, அதனால் குர்தா-பைஜாமா அணிகிறேன். எனது துணிகளை நானே துவைத்துக் கொள்கிறேன். இதனால் முழுக்கை குர்தாவாக இருந்தால் நேரம் பிடிக்கும், இதனால் அரைக்கை குர்தா அணிகிறேன்.

வளரும் காலங்களில் என் ஆடையை இஸ்திரிக்கு கொடுக்கும் அளவுக்கு பணம் இருந்ததில்லை இதனால் லோட்டாவில் கரித்துண்டுகளை இட்டு நானே இஸ்திரி போட்டுக் கொள்வேன்.

பள்ளி நாட்களில் வகுப்புகள் முடிந்த பிறகு சாக்பீஸ்களைத் திரட்டி எடுத்துக்கொண்டு எனது வெள்ளை ஷூவுக்கு பாலீஷ் போடுவேன். இவ்வளவுதான் நான் செய்தது. எனக்கு ஆடை வடிவமைப்பாளர் கிடையாது. ஆனால், நிகழ்ச்சிக்கேற்றவாறு நாம் உடையணிவது அவசியம்” என்றார் மோடி.

இந்த நிகழ்ச்சியின்போது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் உடனிருப்பார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Sat Sep 05, 2015 12:13 am

சேவை என்பது என்ன? நெல்லை மாணவி கேட்ட கேள்விக்கு பிரதமர் அளித்த பதில்

தேசத்துக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பது குறித்து மாணவிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதில் அளித்தார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் இருந்து வெப்கேமரா மூலமாக மாணவ, மாணவியருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

அப்போது, நெல்லை மாணவி ஒருவர், நான் நாட்டுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். அவ்வாறு சேவை செய்ய எனக்கு வழிகாட்டுங்கள் என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, நாட்டுக்கு சேவை செய்வது என்றால் அரசியல் தலைவராகவோ, முக்கிய நபராகவோ ஆகவேண்டிய அவசியம் இல்லை. மாணவ, மாணவிகள் சின்ன சின்ன விஷயங்கள் மூலமாகக் கூட நாட்டுக்கு சேவையாற்றலாம்.

அதாவது, வீட்டில் மின் சிக்கனத்தைக் கடைபிடித்து, ரூ.100 மின் கட்டணத்தை ரூ.50 ஆகக் குறைப்பதே நாட்டுக்கு செய்யும் சேவைதான்.

தேவைக்கேற்ப உண்டு வாழ்வதும் நாட்டுக்கு செய்யும் செயலாகும் என்று மோடி தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Sat Sep 05, 2015 12:26 am

புத்த கயா செல்லும் பிரதமர் மோடி

பீகார் மாநிலத்தில் உள்ள புத்தர்களின் புனித தலமான புத்த கயாவுக்கு பிரதமர் மோடி நாளை செல்லவிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் சர்வதேச இந்து புத்த மத மாநாடு நடைபெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடி பீகார் மாநிலத்தில் உள்ள மகாபோதி கோவிலுக்கு செல்ல இருக்கிறார். மேலும் அங்கு கண்காட்சி ஒன்றையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.

மேலும் நாளை பிரதமர் மோடி பாட்னாவில் நடைபெறும் வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜூலை 25ம் தேதி பாட்னாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மோடியும் நிதிஷூம் ஒரே மேடையில் ஒன்றாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum