புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_c10நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_m10நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_c10 
32 Posts - 51%
heezulia
நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_c10நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_m10நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_c10நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_m10நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_c10நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_m10நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_c10 
74 Posts - 57%
heezulia
நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_c10நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_m10நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_c10நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_m10நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_c10நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_m10நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!


   
   

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 21, 2014 9:45 pm

First topic message reminder :




நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 6-2-na11 பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு
பாராளுமன்ற கட்சி கூட்டம்

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

மோடி, பிரதமராக தேர்வு

அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.

பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.

ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு

அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.

தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.

நன்றி தெரிவித்தார் மோடி

எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.

இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி கட்சிகள் கூட்டம்

தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு

அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.

ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு

இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு

இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.

அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

26–ந் தேதி பதவி ஏற்பு

பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழா எங்கே?

பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.

வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:26 am

புத்த கயா செல்லும் பிரதமர் மோடி

பீகார் மாநிலத்தில் உள்ள புத்தர்களின் புனித தலமான புத்த கயாவுக்கு பிரதமர் மோடி நாளை செல்லவிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் சர்வதேச இந்து புத்த மத மாநாடு நடைபெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடி பீகார் மாநிலத்தில் உள்ள மகாபோதி கோவிலுக்கு செல்ல இருக்கிறார். மேலும் அங்கு கண்காட்சி ஒன்றையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.

மேலும் நாளை பிரதமர் மோடி பாட்னாவில் நடைபெறும் வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜூலை 25ம் தேதி பாட்னாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மோடியும் நிதிஷூம் ஒரே மேடையில் ஒன்றாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 18, 2018 9:09 pm

பிரதமர் மோடிக்கு ரூ.2 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளது என்றும் சொந்தமாக கார் கிடையாது என்றும் பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.


பாராளுமன்ற எம்.பி.க்கள் ஆண்டுதோறும் தங்களின் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் பிரதம அலுவலகம் பிரதமர் மோடியின் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி வரையிலான சொத்து மதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் ரொக்கமாக கையிருப்பு கடந்த ஆண்டு ரூ.1.49 லட்சம் இருந்த நிலையில், இவ்வாண்டு ரூ. 50 ஆயிரத்திற்கு குறைவாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் ரூ. 48 ஆயிரத்து 944 ரொக்கமாக கையிருப்பு இருக்கிறது.

காந்திநகர் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.11 லட்சத்து 29 ஆயிரத்து 690 டெபாசிட் செய்துள்ளார். மற்றொரு எஸ்பிஐ வங்கிக்கணக்கில் ரூ.1.7 கோடிக்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு சொந்தமாக காரோ, பைக்கோ கிடையாது. 2002-ம் ஆண்டு காந்திநகரில் ரூ.1.30லட்சத்துக்கு நிலம் வாங்கியுள்ளார். இப்போது அதனுடைய சந்தை மதிப்பு ரூ.1.கோடியாகும். மற்றவகையில் பரம்பரை சொத்துக்கள் ஏதும் மோடிக்கு இல்லை இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியிடம் ரூ.1.38 லட்சம் மதிப்புடைய் 4 தங்க மோதிரங்கள் உள்ளன. முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் என மொத்தமாக அவருடைய சொத்து மதிப்பு ரூ. 2.28 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.



நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 18, 2018 10:23 pm

இமயம் போல் உயர்ந்த நிற்கும்
இந்தியபிரதமர் கருணை உள்ளங்கொண்ட நரேந்திர மோடி.

உயர்பதவியான,,பிரதம மந்திரியாக இருந்தாலும்  தமிழ்நாட்டில் பிறந்த கலைஞருக்கு
அளித்த உயர்ந்த மரியாதை பாராட்டுக்குறியதே!!!!

முன்னாள் முதலமைச்சர்,
இப்போது சாதாரண சட்டமன்ற உறுப்பினர் கலைஞரை சந்திக்க இல்லம் தேடிவருகிறார்.
வாருங்கள் என்னுடன் என் இல்லம் செல்லலாம் என அழைக்கிறார்.

உடல் நலமில்லாமல் காவேரியில்
இருக்கிறார் கலைஞர்.

குடியரசுதலைவர்
துணைகுடியரசுதலைவர்
மத்திய அமைச்சர்களை
அனுப்பி வைக்கிறார்.

கலைஞரின் உயிருடல் ஊசலாடுறது...!

பாராளுமன்ற மாநிலங்கள் அவையில் ஒருமுறைகூட உறுப்பினர் இல்லாத ஒரு அரசியல்  தலைவனின் பூத உடலுக்கு
முப்படையுடன் முழு
#இந்தியஅரசுமரியாதை....!அறிவிக்கிறார்!

மத்திய அரசு விடுமுறை..
மத்திய அரசு அலுவலகங்களிலும்,
இந்திய அரசு அலுவகங்களில்
#தேசியகொடிஅரசு அரைக்கம்பத்தில் பறக்க உத்திரவு இடுகிறார்...

7நாட்கள் துக்கம் அறிவிக்கிறார்.

இந்த உத்தரவுக்கு பிறகே
26 மாநில அரசாங்கத்தின்
மாநில அரசு விடுமுறை....

*இந்தி திணிப்பை எதிர்த்தும், கடவுளை மறுத்தும் வாழ்ந்த* கலைஞர் அவர்களுக்கு

வட இந்தியர்கள் இந்தியில் எழுதபட்டிருந்த அவருடைய படத்தை தாங்கி பிடித்து கங்கையில் கங்கா ஆர்த்தியும்,மோட்ச தீப வழிபாடும் நடந்துள்ளது.

இந்தி தினசரிகளின் முதல் பக்கத்தையும் கலைஞர் ஆக்ரமிக்கிறார்

உலகெங்கும் உள்ள இந்திய தூதரகங்களில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கிறது.. ஏன் இவரின் உத்தரவால் தானே!!!

ஐ.நா முன் பட்டொளி வீசும் பன்னாட்டு கொடிகளில் நேற்று
தமிழக அரசியல் தலைவனுக்காக அரைகம்பத்தில் பறக்க இந்த உத்தரவே காரணம்.

மெரினாவில் இடமில்லையென்ற செய்தி நாடு சுற்றுகிறது.
நாடு கொந்தளித்து விடுமென்ற அச்சம்.

(ஒர் வரலாற்று உண்மை :
அண்ணாவின்  உடலை கலைஞர் தமிழக அரசின் கட்டுபாட்டில் வருகின்ற கூவம் நதி நிலத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் அமைத்துள்ளார்.
மற்ற இரண்டு பேரின் சமாதியும் மத்திய அரசின் #கடற்படைக்கு சொந்தமான நிலத்தில் வருகிறது)

இறுதி அஞ்சலி செலுத்த வருகிறார்

உடல் அருகே வருவதற்குள் நீதிமன்றதீர்ப்பு....!!!!
அரசுதரப்பில் மேல்முறையீடு இல்லை.

தன கால் செருப்புகளை கழற்றி வைத்துவிட்டு ( எத்தனை பேர் கவனித்தார்களோ தெரியாது ) உடலுக்கு மரியாதை செலுத்தி விட்டு கண்கலங்குகிறார்..

மலர்வளையம் வைத்து காலை தொட்டு வணங்கி உடலை ஒர் முறை வலம் வந்து வணங்குகிறார்...

புறப்படுகிறார்...
நாடாளுமன்ற இரு அவையும் ஒத்திவைப்பு..!
நாடளுமன்ற இரு அவைகளிலும் இரங்கல் தீர்மானம்..!

இத்தனையும் செய்தவர்
பாரத பிரதமர் #மோடிஜி
உயர்ந்த அவர் உருவம் போன்றே
உயர்ந்து நிற்கிறார்...

இறுதி மரியாதையில்
இமயம் போல் உயர்ந்து நி்ற்கிறார்
இந்திய பிரதமர்.

இன்னும்  அவரிடம் என்னென்ன நல்ல பண்புகள் இருக்கிறதோ??? அதிசய மனிதர் எம் மோடி நீ பல்லாண்டு வாழ்க.!

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 18, 2018 10:24 pm

அருமையான திரி சிவா.....தொடருங்கள் ! நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 3838410834 நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 3838410834 நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 02, 2018 10:06 pm

பிரதமர் மோடிக்கு ’பூமியின் சாம்பியன்’விருது: நாளை வழங்குகிறார் ஐ.நா.பொதுச் செயலாளர் குட்டரஸ்

டெல்லி: டெல்லியில் நாளை நடைபெறும் விழாவில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கு வித்திட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு ’பூமியின் சாம்பியன்’ விருதினை ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் வழங்கி கவுரவிக்கிறார். சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக பாடுபடுவர்களை ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்‘ என்ற உயரிய விருதை வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு உலகின் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளிட்ட 6 பேரை ஐக்கிய நாடுகள் சபை தேர்வு செய்து உள்ளது. சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கு தலைமை ஏற்று வழிநடத்துவதற்காகவும், 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிப்பது என்று உறுதி ஏற்று செயல்பட்டு வருவதற்காகவும் இந்த விருதுக்கு பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் நாளை நடைபெறும் விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் அவருக்கு ‘சாம்பியன் ஆப் தி எர்த்‘விருதினை வழங்கி கவுரவிக்கிறார். இதற்கிடையே டெல்லியில் உள்ள விக்யான் பவனில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதல் கூட்டத்தை இன்று மாலை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

மின் உற்பத்தியுடன் மின் சேமிப்பும் முக்கியமானது என்றும் பாரிஸ் ஒப்பந்த குறிக்கோளை நிறைவேற்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்த நடவடிக்கை தேவை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுனர் என்பது குறிப்பிடத்தக்கது.



நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2018 12:09 pm



பிரதமர் மோடிக்கு 2018-ம் ஆண்டுக்கான சீயோல் அமைதி விருதுக்கு பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக அமைதிக்காக பிரதமர் மோடி ஆற்றிய பங்களிப்புக்காகவும், மனித மேம்பாடு மற்றும் இந்தியாவில் ஜனநாயகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விருதை பெரும் 14-வது நபராக பிரதமர் மோடி உள்ளார்.



நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 08, 2023 7:56 pm

நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Modi_810 லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரசையும், அக்கட்சி எம்.பி., ராகுலையும் கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பினர். பதிலுக்கு பா.ஜ., எம்.பி.,க்கள் ' #மோடி, மோடி' என கோஷம் எழுப்ப லோக்சபாவில் விவாதம் அனல் பறந்தது. மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

#பிரதமர் பேசியதாவது: ஒவ்வொரு உறுப்பினரும் விவாதத்தில் கலந்து கொண்டு, தங்களது வாதங்களை முன்வைத்தனர். எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் பேச்சு அவர்களின் தரத்தை காட்டுகிறது. பார்லிமென்டில் ஒவ்வொருவரும் தங்களது குணநலனுக்கு ஏற்பட உரையாற்றினர்.

சிலரின் பேச்சு அவர்களை மக்களிடையே அம்பலப்படுத்தியது. சிலர் பேசியதை கூர்ந்து கேட்ட போது அவர்களுக்கு திறனும் புரிதலும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. நேற்று பேசியதை கேட்ட மகிழ்ச்சியில் சிலர் நன்கு உறங்கிவிட்டனர். அவர்களால் உரிய நேரத்தில் எழுந்து அவைக்க வரமுடியவில்லை.

ஒருவர் கூட ஜனாதிபதி உரை பற்றி குறிப்பிடவில்லை. இதற்கு பின்னால் உள்ள காரணத்தை மக்கள் புரிந்து கொண்டனர். ஆனால், ஜனாதிபதி உரையை அனைவரும் ஏற்று கொண்டனர். ஜனாதிபதி உரையை சிலர் புறக்கணித்தனர். பெரிய தலைவர் ஒருவர் ஜனாதிபதியை அவமதித்தார். இது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது. நேற்று முழக்கமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய எம்.பி.,க்களில் பலர் அவைக்கு வரவில்லை என ராகுலை மறைமுகமாக விமர்சித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்

ஐ.மு., கூட்டணி ஒவ்வொரு வாய்ப்புகளையும் பிரச்னையாக மாற்றியது. நாட்டில் பெரும்பான்மையான ஊழல், கடந்த 2004 முதல் 2014 வரையே நடந்தது. ஊழலுக்கான சகாப்தமாக இருந்தது. காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல் காரணமாக நமது வீரர்களால் சாதனை படைக்க முடியவில்லை.

இந்த தசாப்தம் இந்தியாவிற்கான தசாப்தம். நெருக்கடியில் உள்ள சிலர், இந்தியாவின் வளர்ச்சி பாதையை கண்டு சிலருக்கு வருத்தம். நிர்பந்தத்திற்காக எந்த சீர்திருத்தங்களையும் நாங்கள் செய்யவில்லை. ஜனநாயக நாட்டில் விவாதம் என்பது முக்கியமான விஷயம்.

பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல் சிலர் ரிசர்வ் வங்கி குறித்து குற்றம்சாட்டுகின்றனர். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்காக அரசு நிறுவனங்கள் அவமானப்படுத்தப்பட்டன. துணிச்சலுடன் இருந்ததற்காக பாதுகாப்பு படைகள் மீது அவதூறு பரப்பப்பட்டன.

நீதிமன்ற தீர்ப்புகள் சாதகமாக இல்லாத போது நீதிமன்றங்களையும் அவதூறு செய்தனர்.தேர்தலில் தோற்ற போது தேர்தல் ஆணையத்தையும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தையும் அவதூறு செய்தனர். எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தும் பசையாக அமலாக்கத்துறை உள்ளது. இதற்காக அந்த அமைப்புக்கு எதிர்க்கட்சிகள் நன்றி தெரிவிக்க வேண்டும்.

வருங்காலத்தில் காங்கிரசின் வீழ்ச்சி குறித்து ஹர்வர்டு பல்கலை ஆய்வு செய்யும்.நாடு வளர்ந்து வரும் நேரத்தில் பிற நாடுகளை தாழ்த்தி பேசுவதாக சிலர் புகார் கூறுகின்றனர்.வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடையாதவர்கள், தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

மோடியை விமர்சித்தால் மட்டுமே தங்களால் பிழைக்க முடியும் என சிலர் நினைக்கின்றனர். 22 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் என்னை விமர்சித்து வருகின்றனர். மோடி மீதான நம்பிக்கை பத்திரிகை தலைப்பு செய்திகள் மூலமோ, டிவிக்களில் முகம் காட்டியதாலோ கிடைக்கவில்லை.

எனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நாட்டிற்காகவும், நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காகவும் அர்ப்பணித்துள்ளேன். விமர்சனங்களில் இருந்து என்னை காக்கும் கவசமாக மக்களின் ஆதரவே இருந்தது. மோடி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எதிர்க்கட்சிகளின் புரிதலுக்கு அப்பாற்பட்டது.

காஷ்மீருக்கு சென்ற நீங்கள் எவ்வளவு உலா வந்தீர்கள் என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள். தங்களின் குடும்பத்திற்காக சிலர் நாட்டிற்கு பாதிப்பு ஏற்பட செய்தனர். எதிர்க்கட்சிகளின் விமர்சன அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள். எதிர்க்கட்சிகளின். லால்சவுக்கில் இதற்கு முன்னர் யாரும் தேசியக்கொடி ஏற்றியதில்லை. புல்லட் புரூப் ஜாக்கெட் இல்லாமல் நானும் காஷ்மீருக்கு ஜன.,26ல் காலை 11 மணிக்கு செல்வேன். எங்களின் திரிரங்க யாத்திரையில் ராகுலும் கலந்து கொள்ளலாம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

காங்., எதிர்ப்பு



பிரதமர் மோடி பேச துவங்கியதும், காங்கிரஸ் எம்.பி.,க்கள் கோஷம் போட்டனர். அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் பேசிகொண்டிருந்த போதும் கோஷம் போட்டனர். காங்கிரசின் ஊழல் குறித்து மோடி பேசியதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டு வெளிநடப்பு செய்தனர். பிறகு உள்ளே வந்தனர். காங்கிரஸ் எம்.பி.,க்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ., எம்.பி.,க்கள் 'மோடி... மோடி' என கோஷம் போட்டனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2023 1:56 am

நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Tamil_News_large_3237599

பிரதமர் மோடி நேற்று, இளம் நீல நிறத்திலான, 'சாத்ரி' எனப்படும் கையில்லாத 'ஜாக்கெட்' அணிந்திருந்தார்.

இது குறித்து, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளில் இருந்து ஆடைகளை தயாரித்து வருகிறது. தன் ஊழியர்களுக்கான சீருடைகளை, அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.

அவ்வாறு பிளாஸ்டிக் கழிவில் இருந்து தயாரிக்கப்பட்ட ஜாக்கெட், சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியின்போது, பிரதமருக்கு வழங்கப்பட்டது. இதையே அவர் பார்லிமென்டுக்கு அணிந்து வந்துள்ளார்.

இதன் வாயிலாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தான் அளிக்கும் முக்கியத்துவத்தை அவர் உணர்த்திஉள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2023 2:12 am

நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 Picsar21
நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 ZSizj5p



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 10, 2023 3:13 am

நரேந்திரமோடி - பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 7 M7xoYaB



Sponsored content

PostSponsored content



Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக