ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
 SK

`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
 SK

சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
 ayyasamy ram

திண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா? நியூட்ரினோ ஆய்வா?
 பழ.முத்துராமலிங்கம்

வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்..!! ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..!!!
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

நலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்
 பழ.முத்துராமலிங்கம்

மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..!
 பழ.முத்துராமலிங்கம்

`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்!’ - டர்பனுடன் பதவியேற்றார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04
 Raju_007

வருங்காலப் பொறியாளன்
 ayyasamy ram

கற்றுக்கொள்! – கவிதை
 ayyasamy ram

பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது
 ராஜா

வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

கன்னட மொழி படத்தில் சிம்பு!
 ayyasamy ram

கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
 ayyasamy ram

காஜல் அகர்வால் கொந்தளிப்பு!-
 ayyasamy ram

ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
 ayyasamy ram

மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
 ayyasamy ram

மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
 ayyasamy ram

கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
 ayyasamy ram

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
 ayyasamy ram

மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
 ayyasamy ram

பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
 ayyasamy ram

பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
 ayyasamy ram

இப்படி செய்து பாருங்க... "இட்லி" பஞ்சு போல் இருக்கும்.
 பழ.முத்துராமலிங்கம்

ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும் - தொடர் பதிவு
 ayyasamy ram

​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு!
 Dr.S.Soundarapandian

பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
 Dr.S.Soundarapandian

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள்
 தமிழ்நேயன் ஏழுமலை

பதவியை ராஜினமா செய்தார் தமிழிசை!? தொண்டர்கள் அதிர்ச்சி!
 பழ.முத்துராமலிங்கம்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
 பழ.முத்துராமலிங்கம்

நானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்
 ayyasamy ram

கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
 பழ.முத்துராமலிங்கம்

அடிபட்டதில் நீலமாகி விட்டதா..?
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..
 பழ.முத்துராமலிங்கம்

ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க!
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
 ayyasamy ram

எல்லாம் விதி
 Dr.S.Soundarapandian

காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
 ayyasamy ram

குறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...!!
 Dr.S.Soundarapandian

வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
 பழ.முத்துராமலிங்கம்

கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன
 பழ.முத்துராமலிங்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

அரவிந்தரின் சாவித்திரி
 ayyasamy ram

மகப்பேறு தரும் மகரந்தம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை!

View previous topic View next topic Go down

இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை!

Post by சிவா on Sun May 25, 2014 1:09 am'மும்பையின் இரவு நேர விடுதி ஒன்றிலிருந்து, ஒரு பெண்ணைக் கடத்திச் சென்ற 5 குண்டர்கள், அவளை பாலியல் பலாத்காரம் செய்து வீதியில் வீசிச் சென்றுவிட்டனர்' என்று சமீபத்தில் ஒரு வழக்கு பதிவானது. பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரித்தபோது, 'என்ன நடந்தது என்பது சிறிதளவுகூட என் நினைவில் இல்லை’ என்றார். ஆனால், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது.

'அந்தப் பெண்ணுக்கே தெரியாமல், இது எப்படி நடந்திருக்க முடியும்? என்று அதிர்ந்த மருத்துவர்கள்... மேற்கொண்டு அந்தப் பெண்ணை பரிசோதித்ததில், ஒரு மயக்க மருந்தை குளிர்பானத்தில் கலந்துகொடுத்து, சீரழித்துள்ளனர் என்பது தெரிந்தது.

'ஃபேஸ்புக்'கில் சுழன்றுகொண்டிருக்கும் இந்தச் செய்தியை... சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் புகழேந்தியிடம் சொன்னபோது, ''இது மும்பையில் மட்டும் நடந்திருக்கும் கொடுமையல்ல... எல்லா இடங்களிலும் இந்த வகை குற்றம் தற்போது பெருகி வருகிறது'' என்று அதிரவைத்தார்.

தொடர்ந்தவர், ''தற்போது விதம்விதமான மயக்க மருந்து மற்றும் மாத்திரைகள் சந்தைக்கு வருகின்றன. இவற்றில் சில, மிக எளிதில் கிடைக்கக் கூடியனவாக இருக்கின்றன. குளிர்பானம், ஐஸ்க்ரீம் என எதில் வேண்டுமானாலும் இவற்றை எளிதில் கலந்துவிட முடியும். மூடி போடப்பட்டிருக்கும் குளிர்பானங்களில்கூட ஊசி மூலம் கலக்கலாம். அவை எவ்வித சுவை, வண்ண மாற்றமும் ஏற்படுத்தாமல், கண்டுபிடிக்க முடியாதபடி உணவுப் பொருளோடு முற்றிலும் கலந்துவிடும்.

சதிகாரர்கள் இதை பெண்களை உட்கொள்ளச் செய்து, சிறிது நேரத்தில் போதையேற்றி, தன்னிலை மறக்கச் செய்து, 10, 12 மணிநேரம் வரை என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாத அளவுக்கு மயக்க நிலைக்குத் தள்ளுகிறார்கள். மிக எளிதில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகிறார்கள். இப்படி பலியாகும் பெண்களுக்கு, தங்களை யார் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர் என்பதுகூடத் தெரியாது. இம்மருந்துகளை சாப்பிட நேரிடும் பெண்கள், கருவுறமுடியாமல் போவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் பல பக்கவிளைவுகளையும் வாழ்நாள் முழுக்க எதிர்கொள்ள நேரிடலாம்'' என்று எச்சரிக்கையாகச் சொன்னார் டாக்டர்.

இரவு நேர கொண்டாட்டங்களுக்குச் செல்லும் பெண்கள், ஆண் நண்பர்களுடன் அவுட்டிங் செல்லும் பெண்கள் மட்டுமல்ல, எல்லா வயதுப் பெண்களுமே உஷாராக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. எல்லாவற்றையுமே சந்தேகப்பட வேண்டும் என்பதைத் தவிர, வேறெதையும் சொல்லத் தோன்றவில்லை.

விகடன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை!

Post by T.N.Balasubramanian on Sun May 25, 2014 3:40 am

பெண்கள் இதை உணர்ந்து அவர்களே ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் இது போன்ற அவலங்கள் நிச்சயம் நடைபெறும் .பெண்களின் பெற்றோர்களும் இதை உணர்ந்து பெண்களுக்கு சரியான அறிவுரை வழங்குவதில் முக்கிய பங்குகள் உண்டு .
நான் மிகவும் புத்திசாலி , யாரும் எப்போதும் என்னை என் விருப்பமின்றி அணுகமுடியாது என்று சில பெண்கள் அதீத நம்பிக்கையில் இருக்கிறவர்களும்
இதை உணரவேண்டும் .

சிறந்த மறு பதிவு , நன்றி சிவா .

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21930
மதிப்பீடுகள் : 8232

View user profile

Back to top Go down

Re: இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை!

Post by கோ. செந்தில்குமார் on Sun May 25, 2014 10:00 am

@T.N.Balasubramanian wrote:[link="/t110479-topic#1065664"]பெண்கள் இதை உணர்ந்து அவர்களே ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் இது போன்ற அவலங்கள் நிச்சயம் நடைபெறும் .பெண்களின் பெற்றோர்களும் இதை உணர்ந்து பெண்களுக்கு சரியான அறிவுரை வழங்குவதில் முக்கிய பங்குகள் உண்டு .
நான் மிகவும் புத்திசாலி , யாரும் எப்போதும் என்னை என் விருப்பமின்றி அணுகமுடியாது என்று சில பெண்கள் அதீத நம்பிக்கையில் இருக்கிறவர்களும்
இதை உணரவேண்டும் .

சிறந்த மறு பதிவு , நன்றி சிவா .

ரமணியன்

சரியாக சொன்னீர்கள் அய்யா...! எச்சரிக்கை செய்பவர்களை ஏளனம் செய்யும் ஆணவ பெண்கள் இதைப் படித்த பின்னராவது திருந்த வேண்டும்.

avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை!

Post by ராஜா on Sun May 25, 2014 10:30 am

@T.N.Balasubramanian wrote:[link="/t110479-topic#1065664"]பெண்கள் இதை உணர்ந்து அவர்களே ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் இது போன்ற அவலங்கள் நிச்சயம் நடைபெறும் .பெண்களின் பெற்றோர்களும் இதை உணர்ந்து பெண்களுக்கு சரியான அறிவுரை வழங்குவதில் முக்கிய பங்குகள் உண்டு .
நான் மிகவும் புத்திசாலி , யாரும் எப்போதும் என்னை என் விருப்பமின்றி அணுகமுடியாது என்று சில பெண்கள் அதீத நம்பிக்கையில் இருக்கிறவர்களும்
இதை உணரவேண்டும் .

சிறந்த மறு பதிவு , நன்றி சிவா .

ரமணியன்
மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள் ஐயா , வம்பை விலைகொடுத்து வாங்கி மாட்டிகொள்பவர்கள் தான் அதிகம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30909
மதிப்பீடுகள் : 5595

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை!

Post by murugesan on Sun May 25, 2014 11:57 am

அவங்க அந்த மாதிரி இடங்களுக்கு எதற்க்காக செல்லவேண்டும்.. பின்னர் அய்யாயோ போச்சே என ஏன் கதற வேண்டும்.. உப்பு தின்ன ஆசைபட்டால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்.. நாகரீக உடைகள் என்பதை பெண்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.. அதன் விளைவுகள் தான் இப்படிப்பட்ட அசம்பாவிதங்களும் ஏமாற்றங்களும்.. தவறு என்று தெரிந்தும் இதுபோன்ற பார் களுக்கும், போககூடாத இடங்களுக்கும் செல்லவேண்டும் என்ற ஆசை பெண்களுக்கு எப்படி, எங்கிருந்து உருவாகிறது..?
avatar
murugesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 320
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை!

Post by அருண் on Sun May 25, 2014 12:34 pm

நாகரீகம் என்ற போர்வையில் பெண்கள் சுற்றினால் இப்படிதான் பாதிக்க படவேண்டும்..
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை!

Post by குழலோன் on Sun May 25, 2014 1:06 pm

தீதும் நன்றும் பிறன்தர வாரா!!
avatar
குழலோன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 60
மதிப்பீடுகள் : 49

View user profile

Back to top Go down

Re: இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை!

Post by krishnaamma on Thu Sep 18, 2014 6:52 pm

@murugesan wrote:அவங்க அந்த மாதிரி இடங்களுக்கு எதற்க்காக செல்லவேண்டும்.. பின்னர் அய்யாயோ போச்சே என ஏன் கதற வேண்டும்.. உப்பு தின்ன ஆசைபட்டால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்.. நாகரீக உடைகள் என்பதை பெண்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.. அதன் விளைவுகள் தான் இப்படிப்பட்ட அசம்பாவிதங்களும் ஏமாற்றங்களும்.. தவறு என்று தெரிந்தும் இதுபோன்ற பார் களுக்கும், போககூடாத இடங்களுக்கும் செல்லவேண்டும் என்ற ஆசை பெண்களுக்கு எப்படி, எங்கிருந்து உருவாகிறது..?

@அருண் wrote:நாகரீகம் என்ற போர்வையில் பெண்கள் சுற்றினால் இப்படிதான் பாதிக்க படவேண்டும்..

@குழலோன் wrote:தீதும் நன்றும் பிறன்தர வாரா!!

ரொம்ப சரி நண்பர்களே ! இதையல்லாம் சொன்னால், பெண்விடுதலைக்கு எதிராக பேசரோம்பா சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை!

Post by M.Saranya on Fri Sep 19, 2014 5:05 pm

பெண்களை தனியாக படிக்க அனுப்பும் பெற்றோர்கள் மிகவும் கவனிப்புடன் இருக்க வேண்டும் .
அதோடு மட்டுமின்றி பணத்தை இப்படித்தான் செலவு செய்ய வேண்டுமா பணக்கார பெற்றோர்களே?? கோபம்

பெண்களுக்கு கட்டுப்பாடு மிகவும் முக்கியம் அதை பெண் விடுதலை அல்லது சுதந்திரத்தோடு ஒப்பிடாதீர்கள். இத்தகைய நிகழ்ச்சிகளில் பெண்கள் ஈடுபட தடை விதிக்க வேண்டும்.
நல்லதை அரசு செய்யும் வரை காத்திருப்பதை விட பெண்களே நீங்கள் தான் சிந்தித்து செயல் பட வேண்டும்.
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: இது எல்லாப் பெண்களுக்குமான எச்சரிக்கை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum