ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 Dr.S.Soundarapandian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 Dr.S.Soundarapandian

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 ayyasamy ram

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

ஆதார் காட்டுங்க....!!
 SK

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நாட்டின், 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்

View previous topic View next topic Go down

நாட்டின், 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்

Post by சிவா on Tue May 27, 2014 1:25 am


நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அவரைத் தொடர்ந்து, பிரதமர் பதவியேற்ற நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய இணையமைச்சர்களாக பதவியேற்றனர்.

மத்திய அமைச்சர்களாக 23 பேரும், மத்திய இணையமைச்சர்களாக 22 பேரும் என மொத்தம் 45 பேர் பதவியேற்றனர்.

பதவியேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு நவாஸ் ஷெரீப், ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக, ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த நரேந்திர மோடிக்கு, சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்பு அளித்தனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த விழாவில், சுமார் 4,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.

பதவி விலகும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா சிங் பாட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து இக்கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றது.

நாட்டின் 18-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடியுடன் அவரது முதல் அமைச்சரவையும் பொறுப்பேற்றனர்.

சார்க் நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பு

இவ்விழாவில் பங்கேற்க சார்க் நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

பூடான், நேபாள பிரதமர்கள், மாலத்தீவு அதிபர் உள்ளிட்ட எட்டு அண்டை நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர். சுமார் 4,000 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நரேந்திர மோடியின் விருந்தினர்களாக அவரது தாய் ஹீராபாய் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்றனர்.

பலத்த பாதுகாப்பு

மோடி பதவியேற்பு விழாவையொட்டி, டெல்லி போலீஸார், துணை ராணுவப் படையினர், ஆயுதம் ஏந்திய போலீஸார் மூன்றடுக்காக பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் உள் வளையம், அதிகாரிகள் அடங்கிய வெளி வளையம், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் வளையம் என மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

என்.எஸ்.ஜி. பாதுகாப்புப் படையினர், அதிரடி தாக்குதல் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். உயர் கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டனர்.


Tags: #மோடி #பதவியேற்பு #பிரதமர்


[thanks]தி இந்து[/thanks]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டின், 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்

Post by சிவா on Tue May 27, 2014 1:27 am

புதிய அமைச்சரவையில் மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு

பிரதமர் பதவியேற்ற நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய இணையமைச்சர்களாக பதவியேற்றனர்.

மத்திய அமைச்சர்களாக 23 பேரும், மத்திய இணையமைச்சர்களாக 22 பேரும் என மொத்தம் 45 பேர் பதவியேற்றனர்.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நரேந்திர மோடியுடன் பதவியேற்ற அமைச்சர்களின் விவரம்:

1) ராஜ்நாத் சிங்
2) சுஷ்மா ஸ்வராஜ்
3) அருண் ஜேட்லி
4) வெங்கையா நாயுடு
5) நிதின் கட்கரி
6) சதானந்த கவுடா
7) உமா பாரதி
8) டாக்டர் நஜ்மா ஹேப்துல்லா
9) கோபி நாத் ராவ் முண்டே
10) ராம்விலாஸ் பாஸ்வான்
11) கல்ராஜ் மிஷ்ரா
12) மேனகா காந்தி
13) ஆனந்த் குமார்
14) ரவி சங்கர் பிரசாத்
15) அசோக் கஜபதி ராஜூ
16) அனந்த கீதி
17) ஹர்சிம்ரத் கவுர் பாதல்
18) நரேண் சிங் தோமர்
19) ஜூவல் ஓராம்
20) ராதா மோகன் சிங்
21) தாவர் சந்த் கேஹலோத்
22) ஸ்மிரிதி இராணி
23) ஹர்ஷவர்தன்

மத்திய இணையமைச்சர்கள்

1) வி.கே.சிங் (தனிப் பொறுப்பு)
2) இந்திரஜித் சிங்
3) சந்தோஷ் குமார் கங்வார்
4) ஸ்ரீபாத் எசோக் நாயக்
5) தர்மேந்திர பிரதான்
6) சரபானந்த சோனோவால்
7) பிரகாஷ் ஜவ்தேகர்
8) பியூஷ் கோயல்
9) டாக்டர். ஜித்தேந்திர சிங்
10) நிர்மாலா சீதாராமன்
11) ஜி.எம். சித்தேஷ்வரா
12) மனோஜ் சின்ஹா
13) நிஹால் சந்த்
14) உபேந்திர குஷ்வா
15) பொன்.ராதாகிருஷ்ணன்
16) கிரண் ரிஜிஜூ
17) கிருஷ்ணன் பால்
18) டாக்டர் சஞ்ஜீவ் குமார் பால்யான்
19) மன்சூக்பாய் தன்ஜிவாய் வசாவா
20) ராவ் சாஹெப் தாதா ராவ் தான்வே
21) விஷ்ணு தியோ சாய்
22) சுதர்ஷன் பகத்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டின், 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்

Post by சிவா on Tue May 27, 2014 1:29 am

வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்: பிரதமர் நரேந்திர மோடியின் முதல் செய்தி

எல்லோரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என்று மக்களுக்கு விடுத்த முதல் செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றவுடன், பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (http://pmindia.nic.in) புதுப்பிக்கப்பட்ட நிலையில் அப்டேட் செய்யப்பட்டது. அதில், மக்களுக்கு தனது செய்தியை மோடி வெளியிட்டார். அதன் விவரம்:

என் இனிய இந்திய மக்களுக்கும், உலகக் குடிமக்களுக்கும்,

வணக்கம்!

இந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு வரவேற்கிறேன்.

மே 16, 2014 அன்று இந்திய மக்கள் தங்களது தீர்ப்பை வழங்கினார்கள். முன்னேற்றத்திற்கான, நிலையான நல்ல அரசுக்கான தீர்ப்பை அளித்தனர். இந்தியாவின் முன்னேற்றத்தைப் புதிய தளத்திற்கு எடுத்துச் செல்ல நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ள வேளையில், உங்களது ஆதரவும், ஆசிர்வாதமும், முன்னேற்றத்தில் உங்களது பங்கையும் எதிர்பார்க்கிறோம்.

நாம் ஒன்றாக இணைந்து இந்தியாவிற்கு பிரகாசமான ஓர் எதிர்காலத்தை உருவாக்குவோம். ஒன்றாக இணைந்து வலிமையான, முன்னேற்றமடைந்த, எல்லோரையும் உள்ளடக்கிய, உலக மக்களோடு தீவிரமாக இணைந்து செயல்பட்டு, உலக அமைதியை பலப்படுத்தும் இந்தியாவை உருவாக்கும் கனவை நிறைவேற்றுவோம்.

இந்தத் தளத்தை உங்களுக்கு எனக்குமான நேரடித் தொடர்புக்கு முக்கியமான ஊடகமாக நான் கருதுகிறேன். உலகெங்கிலும் உள்ள மக்களிடம் தொடர்புகொள்ள சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தையும், சமூக ஊடகத்தையும் நான் வெகுவாக நம்புகிறேன். எனவே, இந்தத் தளம் வேண்டியவற்றை கேட்க, தெரிந்துகொள்ள, பார்வைகளை பகிர்ந்துகொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தும் இடமாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்தத் தளத்தின் மூலமாக எனது சமீபத்திய உரைகள், தினசரி அலுவல் அட்டவணை, வெளிநாட்டு சுற்றுப்பயணம் உள்ளிட்ட பலவற்றையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். மேலும், இந்திய அரசு மேற்கொள்ளும் புதுமையான முயற்சிகளையும் இந்தத் தளத்தில் உங்களுக்கு நான் தொடர்ந்து தெரிவிப்பேன்.

தங்கள்,
நரேந்திர மோடி


இவ்வாறு அந்தச் செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டின், 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்

Post by சிவா on Tue May 27, 2014 1:37 am

மிகச்சிறிய மந்திரிசபை

நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி மந்திரிசபை நேற்று பதவி ஏற்றது. இது அளவில் மிகச்சிறிய மந்திரிசபை என்ற பெயரைப் பெறுகிறது.

இதில் நரேந்திர மோடியுடன் சேர்த்து 24 கேபினட் மந்திரிகள், 10 தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 12 ராஜாங்க மந்திரிகள் என மொத்தம் 46 பேர் இடம் பெற்றுள்ளனர்.

பதவி விலகிய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி மந்திரிசபையில் மன்மோகன் சிங் உள்பட 32 கேபினட் மந்திரிகள், 12 தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 33 ராஜாங்க மந்திரிகள் என மொத்தம் 77 பேர் இடம் பெற்றிருந்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டின், 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்

Post by சிவா on Tue May 27, 2014 1:49 am


நரேந்திர மோடிக்கு ஒபாமா வாழ்த்து

நாட்டின் 15-வது பிரதமராக இன்று பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, நட்புறவை வலுப்படுத்துவதற்கு இந்தியாவின் புதிய தலைமையுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருப்பதாக கூறியுள்ளார்.

மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சீன பிரதமர் லி கெகியாங், இந்தியாவுடனான உறவை புதிய நிலைக்கு எடுத்துச்செல்ல உறுதி பூண்டுள்ளார். இந்தியாவை இயற்கை கூட்டுறவு நாடாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி நல்லாட்சி தருவார் என்று மத்திய மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ஆனந்த் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்தும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாததற்கு வருத்தம் தெரிவித்துள்ள ராவத், மத்தியில் அமைந்துள்ள புதிய அரசிடம் இருந்து தொடர்ந்து ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டின், 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்

Post by சிவா on Tue May 27, 2014 1:54 am

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நட்சத்திரங்கள்

நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றுக்கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள், தேசிய தலைவர்கள், மத தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்களான சல்மான் கான், தர்மேந்திரா, அனுபம் கெர் மற்றும் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த ஹேமமாலினி, சத்ருகன் சின்கா, கிரன் கெர், விவேக் ஓபராய், ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.

வினோத் கன்னா, போஜ்பூரி பாடகர்-நடிகர் மனோஜ் திவாரி, பாலிவுட் தயாரிப்பாளர் மதுர் பண்டார்கர், இசையமைப்பாளராக இருந்து அரசியலுக்கு வந்த பாபி லகிரி, பூனம் தில்லான் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், மெலடி குயின் லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக விழாவில் லதா மங்கேஷ்கர் பங்கேற்கவில்லை. இதற்காக வருந்துவதாக அவர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். புதிய பயணத்தை தொடங்கும் உங்களுடன் ஒட்டுமொத்த நாடே இருக்கும் என்றும் லதா மங்கேஷ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டின், 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்

Post by சிவா on Tue May 27, 2014 1:55 am

நரேந்திர மோடிக்கு பீகார் முன்னாள் முதல் மந்திரி நிதிஷ் குமார் மீண்டும் வாழ்த்து

ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர்களில் ஒருவரும் பீகார் மாநில முன்னாள் முந்திரியுமான நிதிஷ் குமார், இன்று பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும் சிறப்பு நிதியை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மோடியை பிரதமர் வேட்பாளரக அறிவிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து விட்டு, பின்னர் அறிவிக்கப்பட்டதால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து, ஐக்கிய ஜனதா தளம் விலகி, லோக்சபா தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று பீகார் மாநில முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டின், 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்

Post by சிவா on Tue May 27, 2014 1:59 amஇந்தியாவின் போபால் நகரின் வீதியொன்றில் வைக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சியின் வழி மோடியின் பதவியேற்பை கண்டு ரசிக்கும் மக்கள்! விநியோகத்திற்காக காத்திருக்கும் லட்டுகள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டின், 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்

Post by சிவா on Tue May 27, 2014 2:00 am


பிரதமராக பதவி ஏற்ற நரேந்திரமோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர் காந்தி சமாதியை வலம் வந்த போது எடுத்தபடம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டின், 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்

Post by சிவா on Tue May 27, 2014 2:01 am

நரேந்திர மோடிக்கு சீன பிரதமர் வாழ்த்து ‘‘இரு நாடுகளின் உறவையும் புதிய எல்லைக்கு எடுத்துச்செல்வோம்’’

பீஜிங்,

பிரதமராக பதவியேற்று கொண்ட மோடிக்கு சீன பிரதமர் லீ கேயாங்க் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அதிகாரப்பூர்வ வாழ்த்து

இந்திய பிரதமராக நரேந்திர மோடி நேற்று மாலை டெல்லியில் பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு சீன பிரதமர் லீ கேயாங்க் அதிகார பூர்வமான முறையில் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–

முன்னணி நாடுகள்

இந்தியாவின் 15–வது பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டுள்ள தங்களை வாழ்த்துகிறேன். சீனாவும், இந்தியாவும் அருகருகே அமைந்துள்ள முக்கியமான நாடுகள். இரண்டுமே ஒன்றுக்கொன்று உலக சந்தையில் தங்களை முன்னணி நாடுகளாக வெளிப்படுத்தி வருபவை.

தங்களுக்கு இடையே நட்புறவு என்பதையும் கடந்து உலக அளவிலும், கொள்கை ரீதியாகவும் முக்கிய பங்காற்றுபவை.

புதிய எல்லைக்கு கொண்டு செல்வோம்

நாம் ஒன்றாக இணைந்து செயலாற்றுவதன் மூலம் அமைதி, கூட்டுறவு, பொது வளர்ச்சி ஆகியவற்றில் இரு நாடுகளின் மக்களுக்குமே பலன் கிடைக்கும். அதுமட்டும் இன்றி அமைதி, ஸ்திரத்தன்மை, சுபிட்சம் ஆகியவற்றிலும் ஆசியாவுக்கு அப்பால் நமது பங்களிப்பை தர முடியும். எனவே கொள்கை ரீதியான விஷயங்களில் ஒத்துழைப்புடன் செயல்பட்டு அமைதி மற்றும் செழிப்பை புதிய எல்லைக்கு நாம் எடுத்து செல்வோம்.

முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு அமைதியும், செல்வ செழிப்பும் நிலவிட ராஜ்ஜீய ரீதியாக ஒருங்கிணைந்து அதனை விரிவு செய்வோம். சீனா எப்போதுமே இந்தியாவின் இயற்கையான ஒத்துழைப்பு பங்குதாரராக இருந்து வந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியால் சீனாவுக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

பகிர்ந்து கொள்வோம்

சீனாவும் இந்தியாவும் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்வது, பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வது, மக்களின் வாழ்வியல் சூழ்நிலையை உயர்த்துவது போன்ற மிகப்பெரிய வரலாற்று திட்டத்தை தற்போது மேற்கொண்டுள்ளன. எனவே, உள்நாட்டு வளர்ச்சியை மட்டுமின்றி அமைதியான வெளிப்புற சூழலையும் ஏற்படுத்தும் வகையிலான நாம் லட்சியத்தையும் பகிர்ந்து கொள்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டின், 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்

Post by சிவா on Tue May 27, 2014 2:02 am

ஜெர்மனி தூதர் வாழ்த்து

புதுடில்லி:பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜெர்மனி சார்பாக அந்நாட்டு தூதர் மிச்செல் ஸ்டீனர் வாழ்த்து தெரிவித்தார்.முன்னதாக அவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவரது செய்தி தொடர்பாளர் கூறுகையில், பிரதமர் மோடிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் இந்தியாவிற்கு உற்ற ஆதரவளிப்பதாகவும் தூதரகத்தில் இன்று இரவு தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டின், 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்

Post by ராஜா on Tue May 27, 2014 11:15 am

வாழ்த்துகள் பிரதமர் மோடி அவர்களே
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாட்டின், 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்

Post by பாலாஜி on Tue May 27, 2014 1:18 pm

வாழ்த்துகள் பிரதமர் மோடி ஜி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நாட்டின், 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum