ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 T.N.Balasubramanian

லூயி பாஸ்டர்
 ayyasamy ram

மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
 ayyasamy ram

பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தபெ போறாராம்...!!
 ayyasamy ram

புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
 ayyasamy ram

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
 ayyasamy ram

ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
 ayyasamy ram

நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
 ayyasamy ram

arimugam
 T.N.Balasubramanian

சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்
 T.N.Balasubramanian

ஹைக்கூ கவிதைகள்
 M.Jagadeesan

விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
 ayyasamy ram

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 ayyasamy ram

துன்ப காலங்களில் கடவுள்
 T.N.Balasubramanian

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
 ayyasamy ram

ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
 ayyasamy ram

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 இ.பு.ஞானப்பிரகாசன்

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
 ayyasamy ram

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 anuradhamv

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட
 velang

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 T.N.Balasubramanian

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
 T.N.Balasubramanian

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!
 T.N.Balasubramanian

ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?
 T.N.Balasubramanian

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
 T.N.Balasubramanian

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
 SARATHI NEGAMAM

நாடி அடிப்படையில் திருமண காலங்கள்
 SARATHI NEGAMAM

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
 soplangi

தமிழ்நேசன் அவர்களுக்கு
 Thamaraimanalan

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Thamaraimanalan

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
 T.N.Balasubramanian

உலக யோகா தினம்
 சரவணன்

வேலன்:- வால்பேப்பர் கேலரி.
 velang

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
 ayyasamy ram

தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
 ayyasamy ram

உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
 ayyasamy ram

நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
 ayyasamy ram

இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
 ayyasamy ram

எதை விட்டுக் கொடுப்பது? - தென்கச்சி கோ. சுவாமிநாதன்
 ayyasamy ram

மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன்
 T.N.Balasubramanian

இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்
 T.N.Balasubramanian

துணிவே துணையாகும்!
 T.N.Balasubramanian

இனிய தந்தையர் தினம் 
 ராஜா

நீண்ட ஆயுள் வேண்டுமா?
 M.Jagadeesan

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (4 )
 T.N.Balasubramanian

ஓங்கி அடிச்சா...!
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!
 ayyasamy ram

தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி
 ayyasamy ram

கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் 23–ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
 ayyasamy ram

பசங்களுக்குத்தான் பெரிய மனசு
 T.N.Balasubramanian

சர்க்கரையை வெல்லலாம்
 T.N.Balasubramanian

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும்.
 T.N.Balasubramanian

சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!
 மூர்த்தி

முனைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.
 ராஜா

பேலியோ டயட்
 ராஜா

ஆளை விட்றா சாமி...!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Wed Jun 04, 2014 12:09 pm

First topic message reminder :

உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம்
உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்’ கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி  தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்’ ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே...

பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!

 போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!

 எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.

 போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன. 

 2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.

 போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் 32 நாடுகள்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:

ஐரோப்பா (13):

ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.

தென்அமெரிக்கா (6):

பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.

வடக்கு, மத்திய அமெரிக்கா (4).

கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.

ஆப்பிரிக்கா (5):

அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.

ஆசியா (4):

ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா


Last edited by சிவா on Fri Jun 06, 2014 5:21 am; edited 4 times in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Thu Jun 19, 2014 6:41 am

தள்ளாடிய மரகானா மைதானம்

ரசிகர்கள் எடையை தாங்காமல், மரகானா மைதானத்தின் மாடிப்படிக்கட்டுகள் தள்ளாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரேசிலில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதற்காக மொத்தம் பல மைதானங்கள் புதிதாக கட்டப்பட்டன. ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா உள்ளிட்ட பல மைதானங்கள் புதுப்பிக்கப்பட்டன.

இங்கு கடந்த வாரம் அர்ஜென்டினா, போஸ்னியா அணிகள் மோதிய போட்டி நடந்தது. இதைக்காண 74,738 பேர் திரண்டனர். அப்போது ரசிகர்கள் சென்றுவர அமைக்கப்பட்டிருந்த மாடிப்படிக்கட்டுகள், பாரம் தாங்காமல் தள்ளாடியது.

பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்தவர்கள், மரத்தினால் ஆன இந்த படிக்கப்பட்டுகள் எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்துடன் காணப்பட்டனர்.

இதுகுறித்து மெக்சிகோவை சேர்ந்த ஜார்ஜ் மார்டினஸ் கூறுகையில்,‘‘ ஆயிரக்கணக்கான மக்கள் இதில் நடந்து சென்ற போது, எப்படியும் விபத்து ஏற்பட்டு விடுமோ என்று பயந்தேன்,’’ என்றார்.

வேலை முடியலை:

சிலியை சேர்ந்த மிரண்டா கூறுகையில்,‘‘ ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டிக்கு டிக்கெட்டுகள் பெற, மரத்தினால் ஆன, படிக்கட்டுகளில் உட்கார்ந்து இருந்தேன். அப்போது, கட்டுமான பணியாளர்கள், ஆடிக்கொண்டிருந்த படிகளை ‘வெல்டிங்’ வைத்துக் கொண்டிருந்ததை பார்த்தேன்,’’ என்றார்.

மீண்டும் சோதனை:

அதேநேரம், இம்மைதானத்தில் உள்ள முக்கிய நபர்கள் வந்து செல்லும் பகுதி, கான்கிரீட் தளத்தினால் இருந்தது. இதுகுறித்து ரியோ டி ஜெனிரோ மாநில அரசு வௌியிட்ட அறிக்கையில்,‘ எங்களுக்கு வந்த புகார்கள் அடிப்படையில் இவைகள் ஆய்வு செய்யப்பட்டன. ரசிகர்கள் பாதுகாப்பு கருதி, மறுபடியும் சோதனை செய்துள்ளோம்,’ என, தெரிவித்துள்ளது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Thu Jun 19, 2014 11:20 pm

கேமரூனை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெளியேற்றியது குரேஷியா

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் கேமரூன் அணியை குரேஷியா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தத் தோல்வியின் மூலம் கேமரூன் அணி வெளியேறியது.

இடைவேளைக்குப் பிறகு குரேஷிய ஸ்ட்ரைக்கர் மரியோ மண்ட்சூகிக் 2 கோல்களை அடித்தார். பிரிவு ஏ-யில் இப்போது மெக்சிகோ அணிக்கும் குரேஷிய அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏனெனில் பிரேசில் அணி நிச்சயம் கேமரூனை வீழ்த்திவிடும்.

குரேஷியாவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையே நடைபெறும் ஆட்டம் நிச்சயம் ஒரு இறுதிப்போட்டி போல் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஃபவுல் ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கேமரூன் அணி இந்த ஆட்டத்தில் கடைசி 50 நிமிடங்கள் 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டது. காரணம் குரேஷிய ஸ்ட்ரைக்கர் மண்ட்சூகிக்கை கேமரூன் வீரர் அலெக்சாண்டர் சாங் மோசமான முறையில் ஃபவுல் செய்தார். இதன் பலனாக சிகப்பு அட்டைக் காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் பெரிசிச் அனுப்பிய பந்தை ஓலிக் கோலாக மாற்றினார். 48வது நிமிடத்தில் இவான் பெரிசிச் 2வது கோலை அடிக்க இடைவேளைக்குப் பிறகு மரியோ மண்ட்சூகிக் 61 மற்றும் 73ஆம் நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Thu Jun 19, 2014 11:21 pm

நடப்பு சாம்பியன் ஸ்பெயினை வெளியேற்றியது சிலி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணி, சிலி அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவி வெளியேறியது.

முதல் போட்டியில் நெதர்லாந்திடம் 1-5 என்ற கோல் கணக்கில் தோற்க, இன்றைய போட்டியில் சிலி அணி 2-0 என்று அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நெதர்லாந்து மற்றும் தற்போது சிலி அணிகள் அடுத்த சுற்றுக்குத்தகுதி பெற்றுவிட்டது.

மரகனாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிலி அணி முழு ஆதிக்கம் செலுத்தியது. ஸ்பெயின் அணி நிறைய இடைவெளிகளை ஏற்படுத்திக் கொடுத்தது.

எடுபடாத ஸ்பெயின் உத்தி

அதன் மூகோண வடிவ பாஸ் முறை இந்த உலகக் கோப்பையில் எடுபடாமல் போனது. முக்கோணம் நகர்ந்தால்தானே? அதனை சிலியும் முறியடித்தது. உத்தியை மாற்றியிருக்க வேண்டும்.

மாற்றாமல் அதே ஷார்ட் பாஸ் உத்தியைக் கடைபிடித்தது. இதனால் பந்தின் கட்டுப்பாட்டை அடிக்கடி இழந்ததோடு தங்கள் கோல் பகுதியில் நிறைய இடைவெளிகளை ஏற்படுத்திக் கொடுத்தது.

உலக சாம்பியன் மற்றும் இரட்டை ஐரோப்பிய சாம்பியன்கள் ஓர் உலக அளவிலான தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறுவது 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளது.

4 ஆண்டுகளுக்கு முன்பாக கோப்பையைக் கையில் பிடித்துத் தூக்கிய கேப்டன் கேசிலாஸ் முகத்தில் ஈயாடவில்லை. பிரேசிலை விடுத்து ஸ்பெயினுக்கு ஆடிய கோஸ்டாவினால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ரசிகர்களின் வசைக்கு ஆளானார்.

சிலிர்க்க வைத்த சிலி

ஸ்பெயின் அணியின் பொற்காலம் உடைக்கப்பட்டது. அதன் வலி ஆட்டம் முடியும்போது அவர்கள் கண்களில் தெரிந்தது. துவக்கத்தில் சுமாராக ஆடிய ஸ்பெயின் ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் இடைவெளிகளை உருவாக்கியது.

சிலி வீரர்கள் அலெக்சிஸ் சான்சேஸ், ஆர்ச்சூர்ரோ வைடால், அராங்விஸ் ஆகிய மூவர் கூட்டணி வலதுபுறத்தில் தங்களிடையே பாஸ்களுடன் வேகமாக முன்னேறினர்.

அராங்விஸ் சாதுரியமாக வார்கஸிடம் பந்தை அளித்தார். அவர் ஒரு டச்சில் கேசிலாஸைக் கடந்து எடுத்துச் சென்று கோலுக்குள் அடித்தார். இந்த ஒரு கோல் சிலியின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியது. வேகம், ஆக்ரோஷம், திறன் என்று ஆட்டம் சிலிக்கு சாதகமாக சூடுபிடிக்கத் தொடங்கியது.

இதற்குப் பதிலாக சவால் கொடுக்க முடியாமல் ஸ்பெயின் ஃபவுல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நிறைய ஃபவுல்கள் செய்தது. அப்படிப்பட்ட ஒரு எதிர்மறை அணுகுமுறைக் கணத்தில்தான் சிலிக்கு ஃப்ரீ கிக் கிடைக்க 2-வது கோல் அடிக்கப்பட்டது. இதுவே பின்பு வெற்றி கோலாகவும் மாறியது.

அற்புத கோல்

2வது கோல் ஸ்பெயின் அணியின் போதாமைகளை பறை சாற்றியது. ஸ்பெயின் அணியின் கோலை நோக்கி சிலி முன்னேற வலது புறத்த்தில் சிலி வீரர் சான்சேசிடம் பந்து அளிக்கப்படுகிறது. அவர் ஒரே அடியில் கோலாக மாற்றிவிடுவாரோ என்ற அச்சத்தில் ஸ்பெயின் வீரர் சாபி அலான்சோ (ஸ்பெயினின் ஒரே கோலை அன்று நெதர்லாந்துக்கு எதிராக அடித்தவர்) சான்சேசை முறை தவறி இடையூறு செய்ததாக சிலிக்கு ஃப்ரீ கிக் வழங்கப்பட்டது. சான்சேஸெ ஃப்ரீ கிக்கை எடுத்துக் கொண்டார். ஒரே அடி அடித்தார். பந்து வளைந்து கோல் கீப்பர் கேசிலாஸிடம் செல்ல, அதனை அவர் பிடித்து வைத்துக்கொள்வதற்கு பதிலாக முன்பக்கமாக தள்ளி விட்டுத் தவறு செய்தார். பந்து நேராக சிலி வீரர் அராங்விஸிடம் வர அதனை அபாரமான கோலாக மாற்றினார்.

இதுதான் ஸ்பெயினை வெலியேற்றிய அந்தக்கணத்தின் அற்புத கோல். கேசிலாஸ் செய்த தவறு பந்தை பிடிக்காமல் தள்ளிவிட்டது. அதுவும் தள்ளி விடும்போது குறிபார்த்து சிலி வீரரிடம் தள்ளிவிட்டது!

அதன் பிறகு ஸ்பெயின் சில பல மூவ்களைச் செய்தாலும் ஆட்டம் கைவிட்டுப் போனதை அவர்கள் அறிந்தனர். அவர்களே எப்போது இறுதி விசில் ஊதப்படும் என்று காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்.

ஆதிக்கத்தை முடித்த விசில்

ஸ்பெயினின் வலியைக் குறைக்கும் அந்த இறுதி விசிலும் ஊதப்பட்டது. அது ஸ்பெயினின் வெளியேற்றத்தை அறிவிக்கும் விசில் என்பதோடு ஸ்பெயினின் ஆதிக்கத்தை முடிக்கும் விசிலாகவும் அமைந்தது.

4 ஆண்டுகளுக்கு முன்பு சாவி (Xavi) வளர்த்தெடுத்த அணி, ஆனால் இன்று அவர் விளையாட முடியாமல் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு தன் அணி வெளியேறியதை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அவல நிலை ஏற்பட்டது. அவரது காயமும் ஸ்பெயின் அணியின் இத்தகைய நிலைமைக்கு ஒரு வகையில் காரணமானது.

ஸ்பெயினின் சரிவை ஆங்கில ஊடகங்கள் "ஒரு ஆதிக்கத்தின் முடிவு" என்று கேட்பதற்கு வருத்தம் காண்பிப்பது போன்ற, ஆனால் உள்ளுக்குள் மகிழ்ச்சியுடன் எழுதி வருகின்றன.

ஏதோ இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்ல ஸ்பெயின் மட்டுமே இடையூறாக இருந்ததுபோல் அவர்களுக்கு ஒரு நினைப்பு.

எது எப்படியிருந்தாலும் சிலி அணி ஓர் அபாயகரமான அணியாக மாறியுள்ளதை மற்ற அணிகள் அடுத்த சுற்று ஆட்டங்களின் போது கவனத்தில் கொள்வதே நல்லது.

ஸ்பெயின் ரசிகர்கள் கண்களில் கண்ணீரும் அதிர்ச்சியும் இரண்டறக் கலந்து வெளிப்பட்டது. ஸ்பெயின் வீரர்கள் உடல்மொழி உண்மையான தோல்விகளைச் சந்தித்த இயலாமையை வெளிப்படுத்தியது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Thu Jun 19, 2014 11:24 pm

பிரேசில் செல்கிறார் விளாடிமிர் புதின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தைக் காண்பதற்காக அடுத்த மாதம் பிரேசில் செல்கிறார். உலகக் கோப்பை பரிசளிப்பு விழாவிலும் அவர் பங்கேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ரஷ்யா நடத்தவுள்ளது. பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பை பரிசளிப்பு விழாவின்போது, 2018 உலகக் கோப்பை நடத்துவதற்கான பொறுப்பை விளாடிமிர் புதினிடம் பிரேசில் அதிபர் தில்மா ரௌசப் வழங்குவார் என செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இது தொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.-பிடிஐசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by Manik on Fri Jun 20, 2014 2:43 pm

ஓரளவுக்கு இப்ப எல்லாரும் நல்லாதான் விளையாடுறாங்க..........

இதுல யார்தான் ஜெயிப்பாங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 870

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Sun Jun 22, 2014 4:16 pm

கானா - ஜெர்மனி த்ரில் டிரா: ரொனால்டோ உலக சாதனையை சமன் செய்தார் க்லோஸ்

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் பிரிவு ஜி போட்டியில், பலமான ஜெர்மனி அணிக்கு எதிராக கானா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இரு அணிகளும் 2 கோல்கள் அடிக்க ஆட்டம் சமன் ஆனது.

இந்த ஆட்டத்தில் பிரேசில் வீரர் ரொனால்டோவின் 15 கோல்கள் சாதனையைச் சமன் செய்தார் ஜெர்மனி வீரர் மிராஸ்லாவ் க்லோஸ். இடைவேளைக்கு முன்பாக இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இடைவேளைக்குப் பிறகு ஜெர்மனி வீரர் மரியோ கூட்சீ 51வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். ஆனால் கானா அணியின் ஆந்ரே அயூ 54வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தார்.

63வது நிமிடத்தில் கானாவின் அசமோ கியான் ஒரு கோல் அடித்த்து கானாவை 2- 1 என்று முன்னிலைக்கு இட்டுச் சென்றவுடன் இன்று ஒரு பெருந்தோல்வி காத்த்திருக்கிறது என்றே பலரும் நினைத்தனர். ஆனால் 36 வயது மிராஸ்லோவ் க்லோஸ் 71 வது நிமிடத்தில் அபாரமான கோல் ஒன்றை அடித்து ரொனால்டோவின் உலக சாதனையைச் சமன் செய்ததோடு ஜெர்மனி டிரா செய்யவும் உதவினார்.

இடைவேளைக்குப் பிறகு ஜெர்மனியின் அன்றைய ஹேட்ரிக் சாதனை வீரர் தாமஸ் முல்லர் அருமையாக ஒரு பாஸை அளிக்க கூட்சீ அதனை கோலாக மாற்றினார். இந்த முன்னிலையை நீண்ட நேரம் ஜெர்மனியினால் தக்க வைக்க முடியவில்லை. கானா வீரர் ஹாரிசன் அஃபுல் வலது புறமிருந்து ஒரு அபாரமான ஷாட்டை ஆட ஆந்ரே அயூ கோலுக்கு 6 அடி முன்னால் இருந்து எம்பி தலையால் முட்டி கோலுக்குள் தள்ளினார் கானா சமன் செய்தது.

இதற்கு சரியாக 9 நிமிடங்கள் கழித்து, சல்லே மன்டாரி ஜெர்மனியின் தடுப்பட்ட வீரர்களை இரண்டாகப் பிளது பந்தைக் கடத்திச் சென்று அசமோ கியானுக்கு அருமையாக பாஸ் அடிக்க அவருக்கு அதிசயமாக நிறைய இடைவேளி இருந்தது. விடுவாரா வாய்ப்பை? நேராக ஜெர்மனி கோல் கீப்பர் மானுயெல் நியூயரைத் தாண்டி கோல் அடித்தார், ஜெர்மனி அதிர்ச்சி அடைந்தது. காரணம் 2- 1 என்று கானா முன்னிலைப் பெற்றது.

பிறகே ஜெர்மனிக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உலக சாதனையை சமன் செய்யக் காத்திருக்கும் மிராஸ்லோவ் க்லோஸிற்கு வாய்ப்புக் கிடைத்தது. கார்னர் ஷாட்டை நெரிசலான கானா வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி கோலாக மாற்றினார். அதுவே ஜெர்மனி சமன் செய்த கோல் மற்றும் க்லோஸ், பிரேசில் நட்சத்திரம் ரொனால்டோவின் உலக சாதனை கோலை சமன் செய்த கோல்!!

இந்த ஆட்டம் டிரா ஆனதைத் தொடர்ந்து பிரிவு ஜி-யில் ஜெர்மனி ஒரு வெற்றி ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. யு.எஸ். அணி கானாவை வீழ்த்தியதன் மூலம் 3 புள்ளிகள் பெற்றுள்ளது. கானா போர்ச்சுக்கல் அணியையும், ஜெர்மனி யு.எஸ். அணியையும், யு.எஸ் அணி போர்ச்சுகல்லுடன் விளையாட வேண்டியிருப்பதால் இந்தப் பிரிவும் இழுபறி நிலையில் உள்ளது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Sun Jun 22, 2014 4:18 pm

மீண்டும் மெஸ்ஸி மேஜிக்: ஈரானை வீழ்த்தப் போராடிய அர்ஜென்டீனா!

ஈரான் அணியை கடைசி நிமிட கோலினால் வீழ்த்தி, அர்ஜென்டீனா அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மீண்டும் லயோனல் மெஸ்ஸியின் மேஜிக் கோல்தான் அர்ஜென்டீனாவை டிரா என்ற சங்கடத்திலிருந்து காப்பாற்றியது.

இடைவேளைக்குப் பிறகு ஈரானின் 3 கோல் முயற்சிகளை அர்ஜென்டீனா கோல் கீப்பர் செர்ஜியோ ரொமேரோ தடுத்தார். இல்லையெனில் மெஸ்ஸி மேஜிக் என்று பேச இடமில்லாது போயிருக்கும்.

ஆனால், இந்த வெற்றியை ஈட்டப் படாத பாடுபட்டது உலகப் புகழ் பெற்ற மெஸ்ஸியை தன் வசம் வைத்திருக்கும் அர்ஜென்டீனா. ஈரான் தன் பங்கிற்கு தைரியமாக ஆடியது அவ்வளவே. ஆனால் 'கோல் போட முடியாது உங்களால்' என்று அர்ஜென்டீனாவிடம் சவால் விடுத்தது போல் இருந்தது அதன் தடுப்பு உத்தி.

மெஸ்ஸியை பெரும்பகுதி ஈரான் சாந்தமாக வைத்திருந்தது. அவருக்கென்று பிரத்யேகமாக வீரர்களை நியமித்தது ஈரான், அதனால் அவர் கடைசி நிமிடம் அந்த கோல் அடிக்கும் வரை சாதுவாகவே காணப்பட்டார்.

ஆனாலும் எப்படித் தடுப்பு உத்தி செய்தாலும் ஒரு கோல் அடிக்க அர்ஜென்டீனா இவ்வளவு போராடும் என்று ஒருவரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் ஒரு சமயத்தில் அர்ஜென்டீன வீரர் பேபியோ சபலேட்டா ஈரான் வீரர் அஸ்கான் தேஜகாவை பெனால்டி பகுதிக்குள் பவுல் செய்ததாக பெனால்டி கொடுக்க ஈரான் தரப்பிலிருந்து பெரும் முறையீடு எழுந்தது. நடுவர் ஏன் அதனை ஏற்கவில்லை என்பது சர்ச்சைக்குரிய ஒன்று.

முதல் பாதியில் அர்ஜென்டீனாவிடமே பந்து அதிகம் இருந்தது. ஆனாலும் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட ஈரான் பாதுகாப்பு அரணை உடைக்க முடியவில்லை. முதல் கோல் வாய்ப்பு அர்ஜென்டீன வீரர் ஹிகுவேயிற்கு வந்தது. பெர்னாண்டோ காகோ அளித்த பாஸை கோலாக மாற்ற முயற்சித்தார். ஆனால் ஈரான் கோல் கீப்பர் மிக தைரியமாக ஹிகுவே காலடியில் பந்தை பிடித்தார்.

அதன் பிறகு மெஸ்ஸி மற்றும் ஏஞ்சல் டி மரியா இருவரும் இரண்டு ஃப்ரீ கிக் வாய்ப்புகளை ஈரான் கோல் போஸ்டிற்கு மேல் அடித்து விரயம் செய்தனர். பிறகு மெஸ்ஸி அதிசயமாக சில பாஸ்களை செய்தப் போதிலும் அர்ஜென்டீனா கோல் வாய்ப்பு கை கூடவில்லை.

மாறாக இடைவேளைக்கு சற்று முன் ஈரான் ஸ்ட்ரைக்கர் ஜலால் ஹொசைனி ஏறக்குறைய கோலை அடித்திருப்பார். அது ஈரானின் வலியை அதிகரிக்கும் விதமாக கோல் போஸ்டிற்கு மேலே சென்றது.

அதன் பிறகு ஈரான் வீரர் ரேசா தலையால் ஒரு பந்தை கோலை நோக்கி அடிக்க அர்ஜெடீன கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார். இதற்கு அடுத்த படியாக பெனால்டி முறையீடு எழுந்தது. ஆனால் நடுவர் சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில் ஒரு புகழ்பெற்ற டிரா நோக்கி ஆட்டம் சென்றது. குறித்த 90 நிமிட ஆட்டம் முடிவடைய காயத்திஆல் நிறுத்தப்பட்ட ஆட்ட நேரத்தை ஈடுகட்டும் நேரத்தில் மெஸ்ஸி மேஜிக் நிகழ்ந்தது.

வலது புறம் ஒரு பாஸை வாங்கிய மெஸ்ஸி சில பல உத்திகளைக் கையாண்டு பந்தை தான் அடிக்க முடியக்கூடிய இடைவெளி கிடைக்குமாறு செய்து கடைசியில் இடது காலால் ஒரே உதை உதைக்க பந்து ஈரான் கோலுக்குள் சீறிப்பாய்ந்தது. உண்மையில் அபாரமான கோல் இது. அவரது இத்தகைய கோல்களை நிறைய சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களில் பார்த்திருக்கலாம். ஆனால் வெகு அரிதாகவே சர்வதேச ஆட்டங்களில் இத்தகைய கோலை அவர் அடிப்பது வழக்கம்.

மெஸ்ஸி 2வது கோலை இந்த உலகக் கோப்பையில் அடித்துள்ளார். இரண்டுமே வெற்றி கோல்கள்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Sun Jun 22, 2014 4:19 pm

மலேரியாக் காய்ச்சல் மாத்திரைகள் தீர்வதற்கு முன்னரே வெளியேறிய இங்கிலாந்து

உருகுவேயிற்கு எதிராக தோல்விக்குக் காரணமான இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ஜெரார்ட். | கோப்புப் படம்
உருகுவேயிற்கு எதிராக தோல்விக்குக் காரணமான இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ஜெரார்ட். | கோப்புப் படம்

பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடரில் நீண்ட நாட்களுக்குத் தாக்குப் பிடிக்க வேண்டி வரும் என்று இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் மலேரியாக் காய்ச்சல் தாக்காமல் இருக்க மாத்திரைகளை உட்கொண்டு வந்தனர்.

ஆனால் அவ்வளவு நாட்கள் பிரேசிலில் தங்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. கோஸ்டா ரிகா, இத்தாலியை வீழ்த்திய போது இங்கிலாந்து வெளியேற்றப்பட்டது. மலேரியாக்காய்ச்சல் மாத்திரைகள் தீர்வதற்கு முன்னரே இங்கிலாந்து பிரேசிலில் இருந்து கிளம்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் அந்த அணியின் ஆட்டத்தை கடுமையாக கேலி பேசியுள்ளன.

இங்கிலாந்து தோல்விக்கு ஏகப்பட்ட காரணங்களை அவரவர் தங்கள் மூளைக்கு உதித்த விதத்தில் கூறிவந்தாலும் ஏ.எஃப்.பி. செய்தி ஏஜென்சி இங்கிலாந்தின் பரிதாப வெளியேற்றத்திற்கு பிரதானமாக 5 காரணங்களை அலசியுள்ளது:

1. இங்கிலாந்து மேலாளர் ராய் ஹாட்க்சன் இளம் வீரர்களையும் கற்பனை சக்தி படைத்த வீரர்களையும் தேர்வு செய்ததாக பாராட்டப்படுகிறார். ஆனால் இத்தாலி மற்றும் உருகுவே ஆட்டங்களில் இங்கிலாந்து அணியில் ஒரு பேலன்ஸ் இல்லை. தாக்குதல் ஆட்டக்காரர்களான ரஹீம் ஸ்டெர்லிங், டேனி வெல்பெக், வெய்ன் ரூனி ஆகியோரை இடது புறத்தில் கொண்டு சென்று நிறுத்தி அணியின் தடுப்பு உத்தியில் ஓட்டை விழச்செய்தது முதல்படி தவறு. இந்தத் தவறு, அன்று இத்தாலி வீரர் பாலோடெல்லி கடைசியில் அடித்த வெற்றி கோல் நிரூபிக்கிறது. இத்தாலியின் ஆண்டனியோ காண்ட்ரீவா, லெய்டன் பெய்ன்சை சுலபமாகக் கடந்து சென்று பாலோடெல்லிக்கு பந்தை அளிக்க முடிந்தது. அதே போல் இத்தாலிக்கு எதிராக முக்கிய பங்காற்றிய ஸ்டெர்லிங் உருகுவே அணிக்கு எதிராக கிடுக்கிப்பிடியிலிருந்து மீள முடியவில்லை. மேலும் பதிலி வீரர் ராஸ் பர்க்ளி இரண்டு ஆட்டங்களிலும் சொல்லிக் கொள்ளும் விதமாக எதையும் செய்து விடவில்லை.

2. மேலாளர் ஹாட்க்சனின் நன்கு நிறுவப்பட்ட உத்தியான 4-2-3-1 என்ற களவியூகம் பிரேசில் உலகக் கோப்பையில் போதவில்லை. இத்தாலிக்கு எதிராக ரூனி, ஸ்டெர்லிங், வெல்பெக், டேனியல் ஸ்டரிட்ஜ் ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டாலும், உருகுவே அணிக்கு எதிராக இவர்களது ஆட்டத்தில் ஒரு முறையாக வகுத்தெடுக்கப்பட்ட உத்தியை பின்பற்றாமல் இருந்தது. பந்து வந்தவுடன் ஏதோ அவசரகதியில் எடுத்துச் சென்று தடுக்கப்பட்டனரே தவிர ஆட்டத்தில் தீர்மானமான திட்டம் எதுவும் இல்லை.

3. இங்கிலாந்து வாங்கிய அனைத்துக் கோல்களும் அடிப்படையான பாதுகாப்பு தவறுகளே. கார்னர் ஷாட்டில் கவனமின்மையால் இத்தாலி வீரர் கிளாடியோ மர்சிசோ முதல் கோலை அடித்தார். பாலோடெல்லி அடித்த வின்னர் கோலின் போது இங்கிலாந்து வீரர் பெய்ன்ஸின் திறன் போதாமையாகவே இருந்தது. உருகுவே அணிக்கு எதிராக 6 வீரர்கள் அரணாக இருந்தும் உருகுவே வீரர் எடின்சன் கவானி, மிகச்சரியாக சுவாரேஸுக்கு பந்தை அளிக்க முடிந்தது. இதனால் முதல் கோல் விழுந்தது. இரண்டாவது கோலையும் சுவாரேஸ் எந்த வித இடையூறுமின்றி அடித்தார். இந்தத் தற்காப்பு உத்தியை முன்னாள் இங்கிலாந்து வீரர் ரியோ ஃபெர்டினாண்ட் “பள்ளிச்சிறுவர்களின் ஆட்டத்திற்கு ஒப்பானது” என்று வர்ணித்தார்.

4. உருகுவே அணிக்கு எதிராகவும் இத்தாலி அணிக்கு எதிராகவும் இங்கிலாந்து பந்தைத் தங்கள் வசம் வைத்திருந்ததில் முன்னிலை வகித்தது, ஆனால் திட்டமிடல் இல்லாததாலும் தேவையில்லாத அவசரம் காட்டியதாலும் கோல் போட முடியவில்லை. உருகுவே அணிக்கு எதிராக 1-1 என்று சமனிலையில் இருந்தபோது இங்கிலாந்து வெகு சுலபமாக ஆட்டத்தின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தோல்வி அடைந்தது.

5.இங்கிலிஷ் பிரிமியர் லீகில் லிவர் பூல் அணிக்காக ஆடிய ஸ்டீவன் ஜெரார்ட் களைப்படைந்தார். அவரது ஆட்டத்தில் போதிய வேகமோ, சாதுரியமோ இல்லை. உருகுவே அணிக்கு எதிராக சுவாரேஸ் அடித்த 2 கோல்களுக்கும் மூல காரணம் ஜெரார்ட்தான். முதலில் தன் வசம் இருந்த பந்தை எளிதில் உருகுவே வீரருக்கு விட்டுக் கொடுத்தார். இதனால் முதல் கோல் விழுந்தது. இரண்டாவதாக தலையால் முட்டிப் பந்தை சுவாரேஸிடமே அளித்தார் இதுவே 2வது கோலாகவும் மாறியது. அவர் எழுச்சியடையாமல் சோர்வாக, களைப்பாக ஆடியது இங்கிலாந்தின் பின்னடைவைத் தீர்மானித்தது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Sun Jun 22, 2014 4:20 pm

@Manik wrote:ஓரளவுக்கு இப்ப எல்லாரும் நல்லாதான் விளையாடுறாங்க..........

இதுல யார்தான் ஜெயிப்பாங்க


நெதர்லாந்து, பிரேசில், ஜெர்மனி இவற்றில் ஒரு அணி கோப்பையை வெல்லும்!சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Sun Jun 22, 2014 4:42 pm

மிகக் குறுகிய நேரத்தில் போடப்பட்ட கோல்

உலக கோப்பை போட்டியில் மிக குறுகிய நேரத்தில் ‘கோல்’ பதிவு செய்த நாடு, துருக்கி.

2002-ல் தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் துருக்கி வீரர் ஹக்கன் சுக்குர், ஆட்டம் தொடங்கிய 11 வினாடிகளில் முதல் கோலை பதிவு செய்தார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Sun Jun 22, 2014 4:42 pm

அதிக முறை வென்ற நாடுகள்

அதிகபட்சமாக பிரேசில் அணி 5 முறையும், இத்தாலி 4 முறையும், ஜெர்மனி 3 முறையும் இப்போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

இந்த முறை சீன நாட்டு ஜோசியங்களின்படி உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள நாடாக ஜெர்மனி கணிக்கப்பட்டுள்ளது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by ayyasamy ram on Sun Jun 22, 2014 4:53 pm


-
  
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29825
மதிப்பீடுகள் : 8392

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Sun Jun 22, 2014 5:10 pm

போஸ்னியாவின் அறிமுக உலகக் கோப்பைத் தொடர் சோகத்துடன் 'ஓவர்'!

குயாபா, பிரேசில்: போஸ்னியா ஹெர்ஸகோவினா அணியின் முதல் உலகக் கோப்பைத் தொடர் ஒரு வழியாக முடிந்து விட்டது. அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவை நைஜீரியா அணி ஒரே ஒரு கோலில் தடுத்து நிறுத்தி விட்டது. பெரும் ஏமாற்றத்துடன் தனது முதல் தொடரை முடித்துள்ளது போஸ்னியா.

நைஜீரியாவுக்கு எதிரானது போட்டியில் நைஜீரிய அணியின் பீட்டர் ஓடெம்விங்கி போட்ட ஒரே ஒரு கோல் காரணமாக போஸ்னியா தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியா வென்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

நைஜீரியா கடைசியாக 1998 கோப்பைப் போட்டியில்தான் வேன்றிருந்தது. அதன் பிறகு தொடர்ந்து தோல்விகள்தான். இந்த நிலையில் தற்போது 98க்குப் பிறகு முதல் முறையாக வென்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்குள் அர்ஜென்டினாவுடன் இணைந்து செல்லும் வாய்ப்பை நைஜீரியா பிரகாசப்படுத்தியுள்ளது.

தற்போது எப் பிரிவில் அர்ஜென்டினா 6 புள்ளிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விட்டது. அடுத்த இடத்தில் 4 புள்ளிகளுடன் நைஜீரியா உள்ளது.

அடுத்த போட்டியில் அர்ஜென்டினாவை நைஜீரியா எதிர்கொள்ளவுள்ளது. இதில் வென்றால் அடுத்த சுற்றுக்கு நைஜீரியா தகுதி பெறும். மேலும் 7 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தையும் பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் டிரா ஆனாலும் கூட அதற்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போஸ்னியா அணி தான் கலந்து கொண்ட முதல் இரு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி விட்டது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Mon Jun 23, 2014 3:21 am

ரஷ்யாவை வீழ்த்தியது பெல்ஜியம்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று பெல்ஜியம் அணியும் ரஷ்ய அணியும் மோதிக்கொண்டன. ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே பெல்ஜியத்தின் மெர்டன்சுக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை அவரால் கோலாக மாற்ற தவறினார். மறுபடியும் நான்காவது நிமிடத்தில் மெர்டன்ஸ் கோலை நோக்கி அடித்த பந்தை ரஷ்யாவின் இக்னாஷெவிச் சாதுர்யமாக தடுத்தார். ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் ரஷ்யாவின் க்ளுஷாகோவுக்கு நடுவர் மஞ்சள் அட்டையை காண்பித்தார்.

முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. முதல் பாதி ஆட்டத்தில் 53 சதவிகித நேரம் பந்து பெல்ஜியத்தின் வசம் இருந்தபோதும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய பின்னும் இரு அணிகளும் கோல் அடிக்க திணறின. இந்நிலையில் ஆட்டம் முடிவடைய இரண்டு நிமிடங்கள் இருந்த போது பெல்ஜியம் அணி வீரர் ஓரிகி அருமையான கோல் அடித்து தங்கள் அணியின் கோல் கணக்கை துவக்கினார்.

இரண்டாவது பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் கோல் அடிக்க ஏதுவாக மூன்று நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இருந்த போதும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் பெல்ஜியம் அணி ரஷ்யாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக பெல்ஜியத்தின் நடுக்கள ஆட்டக்காரரான ஹசார்டு தேர்வு செய்யப்பட்டார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Mon Jun 23, 2014 3:23 am

கோல் மழையில் வெற்றி பெற்ற அல்ஜீரியா

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் கொரிய அணியும் அல்ஜீரிய அணியும் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே கொரிய அணியின் சி. ஒய். பார்க் பவுல் செய்தார். ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் அல்ஜீரியாவின் ஸ்லிமானி முதல் கோலை அடித்து தங்கள் அணியின் கோல் கணக்கை துவக்கினார்.

அடுத்த 2வது நிமிடத்திலேயே அல்ஜீரியாவின் ஹாலிச்சி மற்றொரு கோலை அடித்தார். மீண்டும் ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் அல்ஜீரியாவின் ட்ஜாபாவ் தன் பங்குக்கு ஒரு கோல் அடித்து அசத்தினார். முதல் பாதி ஆட்டம் முடிந்த போது அல்ஜீரியா மூன்று கோல்களையும் கொரியா கோல் எதுவும் அடிக்காமலும் களத்தில் இருந்தன. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் கொரிய அணியின் சன் ஒரு கோல் அடித்து அந்த அணிக்கு ஆறுதல் கொடுத்தார்.

ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் அல்ஜீரியாவின் பிராஹிமி மீண்டும் ஒரு கோல் அடித்து தனது அணியின் கோல் கணக்கை 4 ஆக உயர்த்தினார். 72வது நிமிடத்தில் கொரியாவின் கூ அடித்த கோலால் அந்த அணியின் கோல் கணக்கு 2 ஆக உயர்ந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தின் முடிவில் கொரியா மேலும் எந்த ஒரு கோலும் அடிக்காததால் 4-2 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியா வெற்றி பெற்றது. அல்ஜீரியாவின் முன் கள ஆட்டக்காரரான ஸ்லிமானி ஆட்ட நாயனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Mon Jun 23, 2014 3:45 am

உலக கோப்பை கால்பந்தில் நைஜீரியா அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றியை ருசித்தது.

ஒரு கோலில் முடிவு

உலக கோப்பை கால்பந்தில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ‘எப்’ பிரிவு லீக் ஆட்டத்தில் நைஜீரியாவும், போஸ்னியாவும் மோதின.

உலக கோப்பையின் அறிமுக அணியான போஸ்னியா தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியது. 21–வது நிமிடத்தில் அந்த அணிக்கு முதல் கோல் கிடைத்திருக்க வேண்டியது. அந்த அணி வீரர் எடின் ஜிகோ அடித்த கோல் ‘ஆப்–சைடு’ என்று அறிவிக்கப்பட்டதால் ஏமாற்றத்திற்குள்ளானார்கள். இதன் பின்னர் 23–வது நிமிடத்தில் போஸ்னியாவின் ஹாஜ்ரோவிச் அடித்த ஷாட்டை, நைஜீரியா கோல் கீப்பர் வின்சென்ட் என்யேமோ தடுத்து விட்டார்.

இப்படி போஸ்னியாவை துரதிர்ஷ்டம் துரத்த, 29–வது நிமிடத்தில் நைஜீரியாவின் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசியது. சக நாட்டவர் எமானுவேல் எமானிக் கடத்தி கொடுத்த பந்தை, நைஜீரியாவின் பீட்டர் ஓடம்விங்கி கோலாக்கினார். இதன் மூலம் அதிக வயதில் உலக கோப்பையில் கோல் அடித்த நைஜீரிய வீரர் என்ற சிறப்பை ஓடம்விங்கி பெற்றார். அவருக்கு இப்போது வயது 32 ஆண்டு 341 நாட்கள் ஆகிறது.

பிற்பாதியில் இரு அணி வீரர்களும் வரிந்து கட்டி நின்ற போதிலும் கோல் ஏதும் விழவில்லை. கடைசி 3 நிமிடங்களில் போஸ்னியாவின் எடின் ஜிகோ அடுத்தடுத்து இலக்கை நோக்கி அடித்த ஷாட்டுகளை நைஜீயா கீப்பர் என்யேமா கச்சிதமாக முறியடித்து நைஜீரியாவின் வெற்றியை 1–0 என்ற கணக்கில் உறுதிப்படுத்தினார்.

16 ஆண்டுகளுக்கு பிறகு...


‘சூப்பர் ஈகிள்ஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஆப்பிரிக்க தேசமான நைஜீரியா உலக கோப்பையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு (அதாவது 1998–ம் ஆண்டுக்கு பிறகு) பதிவு செய்த முதல் வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் ஈரானிடம் டிரா செய்த நைஜீரியா தற்போது 4 புள்ளிகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. நைஜீரியா தனது கடைசி லீக்கில் அர்ஜென்டினாவுடன் (25–ந்தேதி) மோதுகிறது. இதில் டிரா செய்தாலே 2–வது சுற்றை எட்டி விடலாம்.

புதுமுக அணியான போஸ்னியா தொடர்ந்து 2–வது தோல்வியை சந்தித்ததன் முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டிருக்கிறது. போஸ்னியா கடைசி லீக்கில் ஈரானுடன் 25–ந்தேதி மோதுகிறது.

முன்னதாக இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி 1–0 என்ற கோல் கணக்கில் ஈரானை தோற்கடித்து 2–வது வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி கடைசி நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Mon Jun 23, 2014 3:46 am

* அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி, அரசு முறைப்பயணமாக எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவுக்கு போய் சேர்ந்துள்ளார். அங்கு அந்த நாட்டின் அதிபர் அப்துல் பட்டா அல் சிசியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது ஈராக் உள்நாட்டுப்போர் நிலவரம் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

* மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இட்ஜ்வி தீவில் இருந்து ஹோமா என்ற இடத்தை நோக்கி பயணிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. மோசமான வானிலை, சூறாவளி காற்று காரணமாக இந்த படகு கிவு ஏரியில் கவிழ்ந்தது. இதில் 30 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 15 பேர் பலியாகி விட்டனர்.

* ஆப்கான் ஜனநாயகத்தில் நிலைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், அந்த நாட்டுக்கான பாராளுமன்ற கட்டிடத்தை இந்தியா கட்டி தருகிறது. இந்த கட்டிடம் மொகலாய கட்டிடக்கலை மற்றும் நவீன கட்டிடக்கலையின் கலவையாக உருவாகி வருகிறது. கட்டுமான பொருட்கள் பற்றாக்குறை காரணமாக கட்டிட பணி தாமதம் ஆகிறது. எனவே இந்த கட்டிடம் அடுத்த ஆண்டு டிசம்பரில்தான் முடியும் என தெரிய வந்துள்ளது.

* ஹாங்காங், 1997–ம் ஆண்டு முதல் சீனாவின் தன்னாட்சி பிரதேசமாக விளங்குகிறது. இங்கு ஜனநாயக சீர்திருத்தம் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் பொதுவாக்கெடுப்பு கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில் 6 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Tue Jun 24, 2014 1:13 am

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒளிபரப்பு செய்ய 400 இணையதளங்களுக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. இணையதளங்களில் கால்பந்து போட்டியின் காட்சிகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு சோனி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கால்பந்து போட்டியை ஒளிபரப்பு செய்யும் 400 இணைய தளங்களுக்கு தடைவிதிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் எம்.எஸ்.எம்.(மல்டி ஸ்கிரீன் மீடியா) தனியார் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவில் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய தங்களுக்கு மட்டுமே அதிகாரப்பூர்வ உரிமை உள்ளது. ஆனால் இணையதளங்கள் மூலம் வரம்பு மீறப்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஐகோட்டின் விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி காமேஷ்வர் ராவ், எம்.எஸ்.எம். நிறுவனம் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் ஒளிபரப்பு செய்ய தடை விதித்துள்ளார். மேலும், இந்தியாவில், அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு உரிமைகளை மீறும் விதமாக மற்ற இணையதளங்கள் எதுவும் ஒளிபரப்பு செய்வதை கண்டுபிடித்தால் அதனை தடை செய்ய, இணைய சேவை வழங்குபவர்களுக்கு(ஐ.எஸ்.பி.) ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் நகலை தொலைத்தொடர்பு துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அனுப்ப பதிவாளருக்கு ஐகோட்டு உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறிய இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இத்தகைய துறைகளே, இணைய சேவை வழங்குநர்களுக்கு உத்தரவிடமுடியும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இணையதளம் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை போட்டிகளை சோனி நிறுவனம் தனது 6 சேனல்களில் ஒளிபரப்பு செய்து வருகிறது. போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பு செய்ய சோனி நிறுவனம் முழு உரிமையும் பெற்றுள்ளது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Tue Jun 24, 2014 1:18 am

போர்ச்சுக்கல்- அமெரிக்கா இடையிலான போட்டி டிரா

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் – அமெரிக்கா அணிகள் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. ஜி- பிரிவுக்கான முதல் லீக் ஆட்டத்தில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்த போர்ச்சுகலும், கானாவை வீழ்த்திய அமெரிக்காவும் மனஸ் நகரில் இன்று அதிகாலை விளையாடின. தோல்வி அடைந்தால், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் நிலையில் இருந்த போர்ச்சுகல் அணிக்கு, நம்பிக்கை அளிக்கும் வகையில் போர்ச்சுகல் அணி முதல் பாதியின் முடிவில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 64 மற்றும் 81-வது நிமிடங்களில் அமெரிக்கா கோல் அடித்து முன்னிலை பெற்றது.

அமெரிக்காவிடம் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் போர்ச்சுகல் இருந்தது. ஆனால் கடைசி 30 வினாடிகள் இருந்த நிலையில், வாரெலா கோல் அடித்து, ஆட்டத்தை சமன் செய்ததுடன், நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பில் போர்சுக்கல் அணியை நீடிக்கச் செய்தார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Tue Jun 24, 2014 1:25 am

எங்களுடையது சிறந்த அணி அல்ல: கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒப்புதல்

அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-2 என்று சமன் செய்ய மட்டுமே முடிந்த போர்ச்சுக்கல் உலகக் கோப்பையை வெல்லும் அணியாக ஒரு போதும் சொல்ல முடியாது என்று அந்த அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றதே பெரிய விஷயம் என்று கூறியுள்ளார் ரொனால்டோ. தகுதிச் சுற்று காலபந்தாட்டத்தில் ரொனால்டோ ஹேட்ரிக் கோல்களை அடித்து ஸ்வீடன் அணியை 3-2 என்று வீழ்த்தினார். இதனால்தான் நடப்பு உலகக்கோப்பைக்கு போர்ச்சுக்கல் அணி தகுதி பெற்றது.

அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி தருணத்தில் ரொனால்டோ அளித்த அபாரமான பாஸ் மூலம் தான் சில்வஸ்டர் வரேலா கோலை அடித்து சமன் செய்தார்.

இந்த நிலையில் தன் அணி குறித்து ரொனால்டோ கூறியதாவது:

நாங்கள் உலக சாம்பியன்களாவோம் என்று ஒரு போதும் நினைத்துப் பார்த்தது கூட கிடையாது, நாம் நமது எல்லைகளை வரையறை செய்து கொள்ளவேண்டும். சில விஷயங்களை நம்மால் செய்ய முடியாது, வேகமாக ஓடுவது, இன்னும் தரத்தைக் கூட்டுவது போன்றவற்றை எங்களால் செய்ய முடியவில்லை. இப்போதைக்கு என்ன கூற விரும்புகிறேன் எனில், எங்களை விட சிறந்த அணிகளும் சிறந்த வீரர்களும் உள்ளனர்.

இவ்வாறு கூறியுள்ளார் ரொனால்டோ.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Tue Jun 24, 2014 1:26 am

அல்ஜீரியா, பெல்ஜியம் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு அல்ஜீரியா, பெல்ஜியம் அணிகள் தகுதி பெற்றன.

ரஷ்யாவை பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி-16 சுற்றுக்குத் தகுதி பெற அல்ஜீரியா அணி 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.

பெல்ஜியத்தைச் சேர்ந்த 19வயது வீரர் டிவோக் ஆரிகி 88வது நிமிடத்தில் இந்தக் கோலை அடித்தார். இதன் மூலம் எச்-பிரிவில் 6 புள்ளிகளுடன் பெல்ஜியம் முதலிடம் பிடித்தது.

ரஷ்யா முதலில் கோல் அடிக்க வேண்டிய வாய்ப்பை கோட்டைவிட்டது. பிறகு விக்டர் ஃபைசுலின் பெனால்டி பகுதியிலிருந்து அடித்த ஷாட்டை பெல்ஜியம் கோல் கீப்பர் தடுத்தார்.

கோல் அடித்த ஆரிகியைக் களமிறக்க பெல்ஜியம் ஸ்ட்ரைக்கர் ரொமேலு லகாகு திரும்ப அழைக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் பயிற்சியாளர் மார்க் வில்மாட்ஸ் நோக்கி கோபமாக ஏதோ சத்தம் போட்டார்.

ஆனால் ஆரிகி கோல் அடித்து லகாகுவின் கோபம் நியாயமற்றது என்பதை நிரூபித்தார்.

தென் கொரியாவை ஊதித்தள்ளியது அல்ஜீரியா:

போர்ட்டோ அலிக்ரேயில் நடைபெற்ற ஆட்டத்தில் அல்ஜீரியா அணி தென் கொரியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஒரு ஆப்பிரிக்க அணி முதன்முறையாக உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் 4 கோல்களை அடிக்கிறது. இடைவேளைக்கு முன்பாக அல்ஜீரிய வீரர்கள் இஸ்லாம் ஸ்லிமானி, ரஃபீக் ஹாலிச்சே, ஆப்தெல்மூமே ஜாபவ் ஆகியோர் 3 கோல்களை அடித்து பலவீனமான தென் கொரியாவை மேலும் நொறுக்கினர். பிறகு இடைவேளை முடிந்து யாசின் பிராஹிமி 4வது கோலை அடித்தார்.

தென் கொரியா அணியில் ஹியூங் மின் சன் என்பவர் ஒரு கோலை அடிக்க இன்னொரு கோலை 72வது நிமிடத்தில் ஜா-சியோய் கூ அடித்தார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Tue Jun 24, 2014 1:37 am

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஸ்பெயின்

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்று நடந்த இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை 0-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது.

ஆட்டம் தொடங்கிய பத்து நிமிடங்களில் இரு அணி வீரர்களும் பவுல் செய்ய தவறவில்லை. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் ஸ்பெயினின் அலோன்சோவும், 6வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜேடினாக்கும் பவுல் செய்தனர். 12வது நிமிடத்தில் மீண்டும் ஸ்பெயினின் டேவிட் வில்லா பவுல் செய்தார். ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஸ்பெயினின் காசரோலா அடித்த பந்தை ஆஸ்திரேலியாவின் ஸ்பிரானோவிக் கோல் விழாமல் லாவமாக தடுத்தார்.

ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் ஸ்பெயினின் டேவிட் வில்லா தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். இரு அணிகளும் மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்காத சூழலில் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. மீண்டும் ஆட்டம் தொடங்கியவுடன் ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹல்லோரன் பவுல் செய்தார். ஆட்டம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில் 56வது நிமிடத்தில் ஸ்பெயினின் டேவிட் வில்லாவுக்கு பதிலாக மாட்டா களமிறங்கினார்.

ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் ஸ்பெயினின் டோரஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து தங்கள் அணியின் கோல் கணக்கை இரண்டாக உயர்த்தினார். மீண்டும் ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் ஸ்பெயினின் மாட்டா மேலும் ஒரு கோல் அடிக்க அந்த அணியின் கோல் கணக்கு மூன்றாக உயர்ந்தது. இரண்டாவது பாதியின் முடிவில் 0-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை ஸ்பெயின் வீழ்த்தியது. ஆட்டநாயகனாக ஸ்பெயினின் டேவிட் வில்லா தேர்ந்தெடுக்கப்பட்டார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Tue Jun 24, 2014 1:37 am

சிலியை வீழ்த்தியது நெதர்லாந்து

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் சிலி அணியும் நெதர்லாந்து அணியும் மோதின. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே நெதர்லாந்தின் லென்ஸ் பவுல் ஆனார். மறுபடியும் ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் மீண்டும் லென்ஸ் பவுல் ஆனார்.

ஆட்டத்தின் 25வது ஓவரில் சிலி அணியின் சில்வா பவுல் செய்தார். முதல் பாதி ஆட்டம் முடிந்தபோது இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. ஆட்டத்தின் 46வது ஓவரில் சிலியின் அலெக்சிஸ் பவுல் ஆனார். ஆட்டத்தின் 64வது ஓவரில் நெதர்லாந்து வீரர் ப்ளைண்ட்டிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்டத்தின் 69வது ஓவரில் நெதர்லாந்து அணியில் லென்சுக்கு பதிலாக மெம்பிஸ் களமிறங்கினார்.

எனினும் ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் நெதர்லாந்தின் பெர் அசத்தலான கோல் அடித்து தங்கள் அணியின் ஸ்கோர் பட்டியலை 1 ஆக உயர்த்தினார். இந்நிலையில் ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் நெதர்லாந்தின் மெம்பிஸ் அழகான கோல் அடித்து தனது அணியின் ஸ்கோர் கணக்கை இரண்டாக உயர்த்தினார். ஆட்டம் முடியும் வரை சிலி வீரர்கள் கோல் அடிக்காததால் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக நெதர்லாந்தின் முன்கள ஆட்டக்காரரான ராபென் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Tue Jun 24, 2014 6:47 pm

உன் தலையைக் கொய்து விடுவேன்: பத்திரிகையாளரை மிரட்டிய ஸ்பெயின் வீர்ர்

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆறுதல் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணியின் ஜோர்டி ஆல்பா என்ற வீரர் பத்திரிகையாளர் ஒருவரை மிரட்டியுள்ளார்.

தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 3-0 என்று வீழ்த்தியது ஸ்பெயின். அப்போது ஆட்டம் முடிந்து மைதானத்தை விட்டு வெளியேறுகையில் ஜேவியர் கோம்ஸ் மடலனாஸ் என்ற பத்திரிகையாளரை நோக்கி ஜோர்டி ஆல்பா, “அடுத்த முறை உன் தலையைக் கொய்து விடுவேன் என்று கூறியதோடு தொடர்ந்து ஆம்... ஆம்... அடுத்த முறை நிச்சயம்... நான் உன்னை எச்சரிக்கிறேன்..” என்று கூறியுள்ளார்.

அங்கு கூடியிருந்த மற்ற பத்திரிகையாளர்கள் இது பற்றி கூறுகையில், ஸ்பெயின் விமானம் ஏறும் போது கூட சண்டை நீடித்தது என்று தெரிவித்தனர். மேலும் அந்தப் பத்திரிக்கையாளரை கெட்ட வார்த்தையால் வசை பாடியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது பற்றி பத்திரிகையாளர் மடலனாஸ் கூறுகையில், ”எனக்கு ஒன்றும் புரியவில்லை, நான் அவரைப்பற்றி ஒன்றும் எழுதிவிடவில்லை, அவரைப்பற்றி எப்போதாவது ஏதும் எழுதியிருக்கிறேனா என்பதும் எனக்கு நினைவில் இல்லை” என்றார்.

உலக சாம்பியன் என்ற தகுதியில் நடப்பு உலகக் கோப்பைக்கு பெரும் எதிர்பார்ப்புடன் வந்த ஸ்பெயின் அணி படுதோல்விகளைச் சந்தித்து வெளியேறியது ஸ்பெயின் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Tue Jun 24, 2014 6:57 pm

சிலியுடன் மோதல்: பிரேசில் பயிற்சியாளர் ஸ்கொலாரி அச்சம்

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் முதலில் சிலி அணியை எதிர்கொள்வதன் பிரச்சனைகளை பிரேசில் பயிற்சியாளர் அலசியுள்ளார்.

பிரேசிலியாவில் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் நெய்மாரின் இரட்டைக் கோல்களின் உதவியுடன் கேமரூன் அணியை பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் ஊதியது.

பிரிவு பி-யில் நெதர்லாந்து அணி சிலியை நேற்று 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் சிலி அந்தப் பிரிவில் 2ஆம் இடம் பிடித்தது. நெதர்லாந்து அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று தோற்கடிக்க முடியாத அணி என்ற நிலைக்குச் சென்றுள்ளது.

இந்த நிலையில் நாக் அவுட் சுற்றில் எடுத்த எடுப்பில் சிலி அணியை எதிர்கொள்வது பற்றி பிரேசில் பயிற்சியாளர் ஸ்கொலாரி கூறியதாவது:

நான் சிலி அணிக்கு எதிராக இருமுறை விளையாடியுள்ளேன், அவர்கள் எவ்வளவு கடினமான அணியினர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும், சிலர் நாங்கள் சிலியை எளிதில் வீழ்த்தி விடுவோம் என்று கருதுகின்றனர், ஆனால் சிலி தரமான வீரர்களையுடைய அணி, எந்த அணியை எதிர்த்து விளையாட விருப்பம் என்று என்னைக் கேட்டால் நான் சிலி என்று நிச்சயம் கூறமாட்டேன்.

எங்கள் அணியின் ஆட்டத்த்தில் நாளுக்கு நாள் மெருகு ஏறி வருகிறது. ஆனால் சிலியை வீழ்த்த இன்னும் ஒரு படி முன்னேற்றம் தேவை. சில வேளைகளில் மிகவும் நன்றாக விளையாட வேண்டும் என்று சில தவறுகளைச் செய்து விடுகிறோம், ஆனால் சிலிக்கு எதிராக தவறுகள் நிகழக்கூடாது.

அர்ஜென்டீனா எப்படி லயோனல் மெஸ்ஸியை நம்பியிருக்கிறதோ, அதேபோல் பிரேசில் நெய்மாரை நம்பியிருக்கிறது, நாங்கள் களத்தில் செய்யும் ஒவ்வொன்றிலும் நெய்மாரின் பங்களிப்பு இருக்கிறது.

என்று கூறினார் ஸ்கொலாரி.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum