ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
 ayyasamy ram

நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
 ayyasamy ram

‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
 ayyasamy ram

ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
 ayyasamy ram

பெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்
 SK

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
 ayyasamy ram

சவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்
 ayyasamy ram

இலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி
 ayyasamy ram

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
 பழ.முத்துராமலிங்கம்

பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
 SK

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
 SK

நானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்
 SK

மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
 SK

கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
 SK

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
 SK

காஜல் அகர்வால் கொந்தளிப்பு!-
 SK

சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
 பழ.முத்துராமலிங்கம்

`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்..!! ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..!!!
 பழ.முத்துராமலிங்கம்

வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி
 பழ.முத்துராமலிங்கம்

அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
 பழ.முத்துராமலிங்கம்

`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்!’ - டர்பனுடன் பதவியேற்றார்
 பழ.முத்துராமலிங்கம்

வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை…!
 ayyasamy ram

செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
 ayyasamy ram

அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
 SK

திண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா? நியூட்ரினோ ஆய்வா?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

நலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்
 பழ.முத்துராமலிங்கம்

மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..!
 பழ.முத்துராமலிங்கம்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04
 Raju_007

வருங்காலப் பொறியாளன்
 ayyasamy ram

கற்றுக்கொள்! – கவிதை
 ayyasamy ram

பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது
 ராஜா

வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

கன்னட மொழி படத்தில் சிம்பு!
 ayyasamy ram

ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
 ayyasamy ram

மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
 ayyasamy ram

மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
 ayyasamy ram

கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
 ayyasamy ram

பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
 ayyasamy ram

இப்படி செய்து பாருங்க... "இட்லி" பஞ்சு போல் இருக்கும்.
 பழ.முத்துராமலிங்கம்

ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும் - தொடர் பதிவு
 ayyasamy ram

​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு!
 Dr.S.Soundarapandian

பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
 Dr.S.Soundarapandian

சுஜாதா நாவல்கள்
 தமிழ்நேயன் ஏழுமலை

பதவியை ராஜினமா செய்தார் தமிழிசை!? தொண்டர்கள் அதிர்ச்சி!
 பழ.முத்துராமலிங்கம்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Go down

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Wed Jun 04, 2014 12:09 pm

First topic message reminder :

உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம்
உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்’ கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி  தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்’ ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே...

பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!

 போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!

 எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.

 போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன. 

 2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.

 போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் 32 நாடுகள்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:

ஐரோப்பா (13):

ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.

தென்அமெரிக்கா (6):

பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.

வடக்கு, மத்திய அமெரிக்கா (4).

கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.

ஆப்பிரிக்கா (5):

அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.

ஆசியா (4):

ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா


Last edited by சிவா on Fri Jun 06, 2014 5:21 am; edited 4 times in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Wed Jun 25, 2014 2:16 am

இங்கிலாந்து-கோஸ்டாரிக்கா மோதிய கால்பந்து போட்டி டிராவானது

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் கோஸ்டாரிக்கா அணிகள் மோதின. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் கோஸ்டாரிக்கா அணியின் காம்பேல் கோல் அடிக்க தவறினார். மீண்டும் 37வது நிமிடத்தில் மீண்டும் காம்பேல் கோல் அடிக்க முயற்சி செய்து தோற்றுப்போனார். முதல் பாதி ஆட்டம் முடிந்த போது இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய போது ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் கோஸ்டாரிக்காவின் காம்போவா கோல் அடிக்க தவறினார். ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் பார்க்லே பவுல் செய்தார்.

ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் இங்கிலாந்தின் பார்க்லேவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 90 நிமிடம் முடிந்தவுடன் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் போட்டி டிரா ஆனது. ஆட்டநாயகனான கோஸ்டாரிகா நாட்டின் கோல் கீப்பரான நவாஸ் தேர்ந்தெடுக்கப்படட்டார்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Wed Jun 25, 2014 2:17 am

இத்தாலியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது உருகுவே

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய முதல் ஆட்டத்தில் இத்தாலி மற்றும் உருகுவே அணிகள் மோதின. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் உருகுவேவின் கேசரஸ் அடித்த பந்தை இத்தாலியின் பபோன் லாவகமாக தடுத்தார்.

மீண்டும் ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் உருகுவேவின் சுவாரெஸ் அடித்த பந்தை இத்தாலியின் போனுக்கி அழகாக தடுத்தார். ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் உருகுவே வீரரின் தலைக்கு பாயந்து பந்தை அடிக்க முயன்ற பலடோலிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த போது இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காமல் இருந்தன.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது முதல் உருகுவே அணி ஆக்ரோஷமாக ஆடியது. ஆட்டத்தின் 46வது நிமிடத்தில் உருகுவே வீரர் ரியோசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் இத்தாலியின் மார்ச்சிஸியோ ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு போட்டியிலிருந்து வெளியேறினார். ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் உருகுவே வீரர் கோடின் அற்புதமான கோல் ஒன்றை அடித்து அந்த அணியின் கோல் கணக்கை துவக்கினார். 90வது நமிடம் வரை மேற்கொண்டு கோல் எதுவும் போடாததால் கூடுதலாக ஐந்து நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது.

அதிலும் இரு அணி வீரர்களும், எந்த கோலும் அடிக்காததால் 0-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி உருகுவே அணி வெற்றி பெற்றது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by ayyasamy ram on Wed Jun 25, 2014 11:23 am

 
-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by டார்வின் on Fri Jun 27, 2014 2:36 pm

உலகக் கோப்பையில் மூன்று உயர்ந்த ஊதியம் பெறும் பயிற்சியாளர்கள் அணி முதல் சுற்றுடன் வெளியேறியது. மிக குறைந்த சம்பளம் பெறும் பயிற்சியாளர்கள் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.


டார்வின்
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by டார்வின் on Fri Jun 27, 2014 2:38 pm

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் சுற்று லீக் ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜியார்ஜியோ செலினியின் தோள்பட்டையைக் கடித்த உருகுவே வீரர் செளரஸூக்கு ஒன்பது சர்வதேச ஆட்டங்கள் மற்றும் நான்கு மாதங்கள் கால்பந்து விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 சிரி சிரி
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Sat Jun 28, 2014 2:18 am

2-வது சுற்றுக்குள் நுழைந்து வரலாறு படைத்தது அல்ஜீரியா

20-வது உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு குரிடிபா மைதானத்தில் நடந்த கடைசி லீக்கில் அல்ஜீரியாவும், ரஷியாவும் (எச் பிரிவு) மோதின.

வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்ற நெருக்கடியில் ரஷியாவும், டிரா செய்தாலே 2-வது சுற்றை எட்டி விடலாம் என்ற சூழலில் அல்ஜீரியாவும் கோதாவில் இறங்கின.

ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் இடது பக்கத்தில் இருந்து ரஷிய வீரர் டிமிட்ரி கோம்பரோவ் தட்டிக்கொடுத்த பந்தை, சக வீரர் அலெக்சாண்டர் கோகோரின் தலையால் முட்டி சூப்பராக கோலாக்கினார். இதையடுத்து பதிலடி கொடுக்க அல்ஜீரிய வீரர்கள் ஆக்ரோஷமாக படையெடுத்தனர். 42-வது மற்றும் 43-வது நிமிடங்களில் அல்ஜீரிய முன்கள வீரர் இஸ்லாம் சிலிமானி, கம்பத்தை நோக்கி தலையால் முட்டிய ஷாட்டுகளை ரஷிய கோல் கீப்பர் இகோர் அகின்பீப் முறியடித்தார். இதனால் முதல் பாதியில் ரஷியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

பிற்பாதியில் தங்களது உத்வேகத்தை மேலும் தீவிரப்படுத்திய அல்ஜீரியாவுக்கு 60-வது நிமிடத்தில் பலன் கிட்டியது. ‘பிரிகிக்’ வாய்ப்பில், யோசின் பிராமி இடது காலால் உதைத்த ஷாட்டை, கம்பத்தின் முன்பகுதியில் நின்ற அல்ஜீரியா வீரர் இஸ்லாம் சிலிமானி, சரியான உயரத்திற்கு துள்ளி குதித்து தலையால் முட்டி பந்தை வலைக்குள் அனுப்பினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.

இதைத் தொடர்ந்து ரஷிய வீரர்கள் அடித்த சில ஷாட்டுகளை அல்ஜீரியா கோல் கீப்பர் ராய்ஸ் போலி தன்னை மிஞ்சாமல் பார்த்துக் கொள்ள, இறுதியில் 1-1 என்ற கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது.

‘டிரா’ ஆனதால் இந்த பிரிவில் 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்த ஆப்பிரிக்க கண்டத்து தேசமான அல்ஜீரியா 2-வது சுற்றுக்கு முன்னேறி புதிய சரித்திரம் படைத்தது.

உலக கோப்பையில் 32 ஆண்டுகளாக விளையாடி வரும் ‘பாலைவன நரிகள்’ என்று செல்லமாக அழைக்கப்படும் அல்ஜீரியா அணி 2-வது சுற்றுக்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு பங்கேற்ற 3 உலக கோப்பைகளிலும் அந்த அணி முதல் சுற்றை கடந்தது கிடையாது.

அதே சமயம் ரஷிய அணி (2 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து நடையை கட்டியது. ரஷியா தனிநாடாக பிரிந்த பிறகு இதுவரை உலக கோப்பையில் ஒரு முறையும் முதல் ரவுண்டை தாண்டியதில்லை. இந்த உலக கோப்பையிலும் அதே பரிதாபம் தொடருகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Sat Jun 28, 2014 2:27 am


பிரேசில் சிலி பலப்பரீட்சை

பெலோ ஹரிசான்டே, ஜூன் 28: உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பிரேசில் சிலி அணிகள் இன்று மோதுகின்றன.பிரேசில் நாட்டில் கடந்த 12ம் தேதி தொடங்கிய 20வது உலக கோப்பை கால்பந்து போட்டியில், மொத்தம் 32 அணிகள் 8 பிரிவுகளாக லீக் ஆட்டங்களில் மோதின.ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றிருந்த 4 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதியதில், புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றன.எச் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி லீக் ஆட்டங்களில் பெல்ஜியம் அணி 10 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. அல்ஜீரியா ரஷ்யா அணிகளிடையே நடந்த ஆட்டம் 11 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

அல்ஜீரியா 4 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், தென் கொரியா (1) மற்றும் ரஷ்யா (2) ஏமாற்றத்துடன் வெளியேறின. முன்னதாக ஜி பிரிவில் நடந்த லீக் ஆட்டங்களில் போர்ச்சுகல் அணி 21 என்ற கோல் கணக்கில் கானா அணியையும், ஜெர்மனி 10 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவையும் வீழ்த்தின.ஜெர்மனி 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த நிலையில், போர்ச்சுகல் மற்றும் அமெரிக்கா தலா 4 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்ததால், அடித்த/வாங்கிய கோல் எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பெற்றிருந்தும், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போர்ச்சுகல் பரிதாபமாக வெளியேற்றப்பட்டது.

லீக் சுற்று முடிவடைந்த நிலையில், ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு இன்று நாக்அவுட் சுற்று ஆரம்பமாகிறது. பெலோ ஹரிசான்டே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், ஏ பிரிவில் முதல் இடம் பிடித்த பிரேசில் அணியுடன் பி பிரிவில் 2வது இடம் பிடித்த சிலி அணி மோதுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 9.30க்கு தொடங்குகிறது. நள்ளிரவு 1.30க்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் சி பிரிவில் முதலிடம் பிடித்த கொலம்பியா அணியை டி பிரிவில் 2ம் இடம் பிடித்த உருகுவே எதிர்கொள்கிறது.

மரண போராட்டம்

உலக கோப்பையில் இனி நடக்கும் எல்லா ஆட்டங்களுமே வாழ்வா சாவா? ஆட்டங்கள் தான். அதாவது, தோற்கும் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து வெளியேற நேரிடும். கால் இறுதிக்கு முந்தைய சுற்று, கால் இறுதி, அரை இறுதி, இறுதிப் போட்டி என்று தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெறும் அணியே உலக கோப்பையை முத்தமிட முடியும்.

ஐரோப்பிய அணிகள் ஏமாற்றம்

தென் அமெரிக்க நாடுகளில் நடைபெறும் உலக கோப்பை போட்டிகளில் பெரிதாக சாதிக்க முடியாமல் ஐரோபிய அணிகள் தடுமாறுவது தொடர்கதையாக நீள்கிறது. இந்த முறையும் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, போர்ச்சுகல் உள்பட 7 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் பரிதாபமாக வெளியேறி உள்ளன. பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, கிரீஸ் அணிகள் இன்னும் நம்பிக்கையுடன் களத்தில் இருந்தாலும் பிரேசில், அர்ஜென்டினா, சிலி, உருகுவே, கொலம்பியா, கோஸ்டா ரிகா போன்ற அணிகளின் சவாலுக்கு ஈடுகொடுக்க முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Sun Jun 29, 2014 1:34 am

உலகக் கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்று: பெணாலிட்டி ஷாட்டில் பிரேசில் வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் நாக் அவுட் சுற்றில் பிரேசிலுடன் சிலி அணி மோதிய விறுவிறுப்பான ஆட்டம் இன்று போலோஹாரிசோண்ட்டில் நடைபெற்றது.

சொந்த மண்ணில் பிரேசிலை வீழ்த்தும் முனைப்புடன் சிலி அணியும், போட்டிகளை நடத்தும் நாடு என்ற முறையில் தோல்வியை தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் பிரேசில் அணியும் தத்தமது பொறுப்பை உணர்ந்து விழிப்புடன் விளையாடின.

ஆட்டத்தின் முன்பாதி நேரத்துக்குள் முதல் கோலை பிரேசில் பதிவு செய்ய, அதற்கு பதிலடியாக சிலியும் தனது கணக்கில் ஒரு கோலினை பதிவு செய்ததால் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருந்தன. பின்னிறுதி ஆட்டத்தின் இறுதி நேரம் வரை மேற்கொண்டு எந்த அணியும் கோல் ஏதும் பதிவு செய்ய முடியாமல் திணறின.

பின்னர், அளிக்கப்பட்ட 3 நிமிட உபரி நேரத்திலும் 1-1 என்ற ஸ்கோர் கணக்கை உயர்த்திக் கொள்ள முடியாமல் இரு அணிகளும் திண்டாடின. இரு அணிகளில் ஒன்று மேற்கொண்டு ஒரு கோலை அடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் மேலும் 30 நிமிட நேர நீட்டிப்பில் ஆக்ரோஷமாக மோதிய சிலி வீரர்கள் கடைசியாக அடித்த ஒரு கோலும் வலையின் கம்பியில் பட்டு திசை திரும்பியதால் பார்வையாளர்களிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது.

120 நிமிட நேர ஆட்டத்திலும் 1-1 என்ற சமநிலையே நீடித்ததால் ‘பெணாலிட்டி கிக்’ முறையில் அடுத்த கோலுக்கான வாய்ப்பு இரு அணிகளுக்கும் அளிக்கப்பட்டன.

பிரேசில் ஒரு பெணால்ட்டி அடிக்க சிலியின் பந்து பிரேசில் கோல் கீப்பரால் தடுக்கப்பட்டது. பிரேசில் இரண்டாவது கோலை பதிவு செய்ய, பெணாலிட்டியில் முதல் கோலை சிலி பதிவு செய்தது. பிரேசிலின் அடுத்த பெணாலிட்டி கோல் முயற்சியை சிலி தடுத்து ஆட்கொண்டது.

இதனையடுத்து, சிலியின் கடைசி பெணாலிட்டி கோலை தடுத்த பிரேசில் நாக் அவுட் சுற்றில் சொந்த மண்ணில் வெற்றியை சுவைத்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Sun Jun 29, 2014 3:50 am


தங்க காலணியை விட உலக கோப்பையே முக்கியம்: தாமஸ் முல்லர் உறுதி

பிரேசிலில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில், அதிக கோல் அடித்து தங்க காலணி விருதை தட்டிச் செல்ல கடும் போட்டி நிலவுகிறது. நட்சத்திர வீரர்கள் லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா), நெய்மர் (பிரேசில்) ஆகியோருக்கு சவாலாக ஜெர்மனியின் அனுபவ வீரர் தாமஸ் முல்லர் விளங்கி வருகிறார்.

லீக் சுற்றின் முடிவில் இந்த மூன்று வீரர்களுமே தலா 4 கோல் போட்டுள்ளதால், நாக் அவுட் சுற்றில் இவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உலக கோப்பையில் முல்லர் இதுவரை விளையாடியுள்ள 9 ஆட்டத்தில் 9 கோல் அடித்துள்ளார். 2010ல் அவர் 5 கோல் அடித்து தங்க காலணி விருதை தட்டிச் சென்றதுடன் சிறந்த இளம் வீரராகவும் தேர்வு செய்யபப்ட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 2014 உலக கோப்பையிலும் தங்க காலணி அவருக்கே கிடைக்கும் என்று முன்னணி வீரர்கள் மற்றும் முன்னாள் பிரபலங்கள் பலர் கணித்துள்ளனர். எனினும், தங்க காலணி விருதை விட ஜெர்மனி அணி உலக கோப்பையை வெல்வதே தனக்கு முக்கியமானது என்று முல்லர் கூறியுள்ளார். கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனி அணி நாளை அல்ஜீரியாவை எதிர்கொள்ளும் நிலையில், முல்லர் இது குறித்து கூறியதாவது: அனைத்து வீரர்களும் உற்சாகமாக உள்ளனர். நாக் அவுட் சுற்று சவாலுக்கு தயாராக உள்ளோம்.

தனிப்பட்ட முறையில் தங்க காலணி விருதை வெல்வதை விட, எங்கள் அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதிலேயே எனது முழு கவனமும் உள்ளது. அதிக கோல் சாதனையில் எனக்கு இப்போது ஆர்வம் இல்லை. என்னிடம் தான் ஏற்கனவே ஒரு கோல்டன் பூட் உள்ளதே. உலக சாம்பியன் ஆக வேண்டும் என்றே விரும்புகிறேன்.
இவ்வாறு முல்லர் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Sun Jun 29, 2014 5:19 am

2-0 என உருகுவேவை வீழ்த்தி கொலம்பியா காலிறுதிக்குத் தகுதிபெற்றது!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் நாக் அவுட் சுற்றில் உருகுவே அணியுடன் மோதிய கொலம்பியா 2-0 என்ற கோல் கணக்கில் அசத்தலான வெற்றியை பெற்றது.

ஆட்டத்தின் துவக்க நேரத்தில் இருந்தே பந்தினை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கொலம்பிய வீரர்கள், உருகுவே அணியின் கோல் கனவு நிறைவேறாத வகையில் சிறப்பாக விளையாடி இந்த வெற்றியை தங்களுடையதாக்கிக் கொண்டனர்.

இதன் மூலம், உலகக் கோப்பை போட்டிகளில் முதன்முறையாக கொலம்பியா அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று முன்னேறியது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by அருண் on Sun Jun 29, 2014 10:42 am

பிரேசில் சிலி அணி ஆட்டம் பொறுத்தவரை பிரேசில் கொஞ்சம் சொதப்பலான ஆட்டத்தை வெளிபடுத்தியது. சிலி அணி மிக அருமையாக விளையாடியது. நேற்றைய ஆட்டத்தில்
அவர்கள் தான் ஜெயிக்க வேண்டியது. லக் இல்ல தான் சொல்ல வேண்டும்.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by ayyasamy ram on Sun Jun 29, 2014 10:58 am


-
பெனால்டி ஷூட் அவுட்டின்போது சிலி வீரர்கள் பினிலா
மற்றும் அலெக்சிஸ் சான்செஸ் அடித்த பந்தை டைவ்
அடித்து தடுக்கும் பிரேசில் கோல் கீப்பர் சீஸர்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Thu Jul 03, 2014 12:30 am

ஃபிஃபா 2014-ல் கோல்கீப்பர்கள் ஆதிக்கம்: 16 கோல்களை முறியடித்து அமெரிக்காவின் ஹோவர்டு சாதனை

'இது கோல்கீப்பர்களின் உலகக் கோப்பை' என்று சொல்லும் அளவுக்கு கோல்கீப்பர்களின் ஆதிக்கம் மிகுந்த ஃபிஃபா 2014-ல் அமெரிக்காவின் ஹோவர்டு அபார சாதனை படைத்துள்ளார்.

பெல்ஜியம் அணிக்கு எதிராக சற்றும் நினைத்துப் பார்க்க முடியாத, அசாத்திய கோல் கீப்பிங் செய்த அமெரிக்க கோல் கீப்பர் டிம் ஹோவர்டு 16 முறை கோல்களைத் தடுத்திருப்பது புதிய சாதனையாகியுள்ளது. 1966 உலகக் கோப்பைப் போட்டிகளுக்குப் பிறகு இதுதான் சாதனை. அதிலும் 16 தடுப்புகளும் நேருக்கு நேர் என்று கூறப்படும் உறுதியான கோல் வகையறாவைச் சேர்ந்தவை. டிம் ஹோவர்டிற்கு வயது 35!!

கிரிக்கெட்டில் எப்படி பேட்ஸ்மென்கள், அவர்கள் அடிக்கும் சிக்சர்கள், பவுண்டரிகள், நட்சத்திர வீரர்கள் என்று கவனம் குவியுமோ கால்பந்திலும் கோல்களை அதிகம் அடிக்கும் நெய்மார், மெஸ்ஸி, வான் பெர்சி, அர்ஜென் ராபின், தாமஸ் முல்லர், கொலம்பியாவின் ரோட்ரிகஸ், சுவிட்சர்லாந்தின் ஷகீரி என்று ரசிகர்களின் கவனம் குவிய, உண்மையான ஹீரோக்கள் இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் கோல்கீப்பர்களே.

இந்த உண்மையின் முத்தாய்ப்புதான் அமெரிக்க கோல்கீப்பர் டிம் ஹோவர்டின் இந்த புதிய சாதனை. பெல்ஜியம் கேப்டன் வின்செண்ட் கொம்பெனி வெற்றி பெற்ற பிறகு தனது ட்விட்டரில் உடனடியாகப் பதிவு செய்த வார்த்தை இதுதான்: "Two words.. Tim Howard=respect".

அமெரிக்க பயிற்சியாளர் கிளின்ஸ்மென் கூறுகையில், “டிம் ஹோவர்டின் ஆட்டம் ஒரு பெருநிகழ்வு” என்றார்.

நேற்று நடைபெற்ற அர்ஜென் டீனா, சுவிட்சர்லாந்து அணிகளுக்கு எதிரான நாக்-அவுட் ஆட்டத்தில் சுவிஸ் கோல் கீப்பர் பெனாக்ளியோவின் அபார கோல்கீப்பிங் அர்ஜென் டீனாவின் கோல் போடும் முயற்சியைத் தொடர்ந்து முறியடித்து வந்தது. கடைசியில் அவரும் களைப்படைந்த நிலையில் கவனம் சிதறவே அந்த ஒரு கோலை தடுக்க முடியாது போனது. ஆனால் கடைசியில் எப்படியாவது சமன் செய்து விடும் முயற்சியில் சுவிஸ் கோல்கீப்பரே நடுக்களத்தில் வந்து நடுக்கள வீரராகக் களமிறங்கி ஆடியபோது அவரது தீவிரம் தெரியவந்தது. இந்தத் தீவிரம்தான் அவரது கோல்கீப்பிங்கிலும் பிரதிபலித்தது.

முதல் சுற்று ஆட்டத்தின்போது பிரேசில் - மெக்சிகோ அணிகள் மோதிய போட்டியில் மெக்சிகோ கோல்கீப்பர் ஒச்சா பெரிய ஹீரோவாகத் திகழ்ந்தார். அவர் அன்று குறைந்தது ஒரு 6 அல்லது 7 கோல்களையாவது முறியடித்திருப்பார்.

பிரேசில் கோல் கீப்பர் சீசர் அன்று சிலி அணிக்கு எதிரான பெனால்டி ஷூட் அவுட்டில் அனைத்து சிலி ஷாட்களையும் சரியாக கணித்தார். 3 கோல்களை அவர் தடுத்தார்.

கிரீஸிற்கு எதிராக அன்று கோஸ்டா ரிகா நாக்-அவுட் சுற்றில் ஆடும்போது கோஸ்டா ரிகா கோல் கீப்பர் கெயலர் நவாஸ் தடுத்த சில கோல்களால் அந்த ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்குச் சென்றது. கடைசியில் பெனால்டி ஷூட் அவுட்டில் ஒரு கோலை அவர் தடுத்ததே அந்த அணிக்கு காலிறுதிக்கு முன்னேற வைத்தது. இதற்காக ஆட்ட நாயகன் விருதையும் அவர் பெற்றார்.

அதே போல் நைஜீரியாவின் கோல் கீப்பர் என்யீமா பிரான்ஸிற்கு எதிராக சில கோல்களை முறியடித்தார். ஆனால் கடைசியில் அவரே செய்த தவறினால் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆனாலும் அவர் அன்று செய்த கோல்கீப்பிங் பிரான்சின் நம்பிக்கையைக் குலைத்தது என்றே கூறவேண்டும்.

ஜெர்மனி கோல் கீப்பர் நியூயர் பல அபாயங்களிலிருந்து ஜெர்மனி அணியை இந்த உலகக் கோப்பையில் காப்பாற்றியுள்ளார். கானா அணிக்கு எதிராக அவர் சில சேவ்களைச் செய்ததால் அந்த ஆட்டம் டிரா ஆனது. இல்லையெனில் ஒரு அதிர்ச்சித் தோல்வி முதல் சுற்றில் நிகழ்ந்திருக்கும்.

பிரேசிலுக்கு எதிராக மெக்சிகோ கோல் கீப்பர் ஒச்சாவ் நெய்மார் தலையால் முட்டிய பந்தை தடுத்தாட்கொண்டது இந்த உலகக் கோப்பையின் சிறந்த தடுப்பாக பேசப்பட்டது. நெய்மாரின் சக்தி வாய்ந்த தலை முட்டில் பந்து மேலாக கோல் நோக்கிச் செல்ல திடீரென ஒரு கை வந்து பந்தைச் சற்றும் எதிர்பாராதவிதமாகத் தட்டிவிட்டது. ஓச்சாவின் அந்தக் கை அன்று பிரேசிலுக்கு பெரும் அதிர்ச்சியளித்தது.

ஆனால் அதை விடவும் அமெரிக்க கோல் கீப்பர் டிம் ஹோவர்டின் 16 தடுப்பில் பல தடுப்பு நேருக்கு நேர் எதிர்கொண்ட ஷாட்களாகும், உறுதியான கோல் வாய்ப்புகளாகும் அவையனைத்தும்.

பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் நிமிடத்திலேயே பெல்ஜியம் காரனர் ஷாட்டை டிவோக் ஆரிஜி கோலாக மாற்றியிருப்பார் ஆனால் டிம் ஹோவர்ட் அதனை வெளியே தட்டி விட்டார்.

பிறகு 29வது நிமிடத்தில் எளிதாக ஒரு பந்தை தடுத்தாட்கொண்டார். 43வத் நிமிடத்தில் மீண்டும் டீ புருயின் அடித்த கார்னர் ஷாட்டை முட்டியால் தட்டி விட்டு சேவ் செய்தார் டிம் ஹோவர்ட்.

இடைவேளைக்குப் பிறகு 47வது நிமிடத்தில் கெவின் டீ புரூயின் மீண்டும் அமெரிக்க பெனால்டி பகுதிக்குள் பந்தை நுழைக்க, அங்கு டிரைஸ் மெர்டன்ஸ் அதனை கோலுக்குள் தலையால் அடித்தார். ஆனால் டிம் ஹோவ்ர்ட் பல அடி தூரம் எம்பி பந்தை பாருக்கு மேல் தட்டி விட்டார்.

76வது நிமிடத்தில் ஆரிஜி அடித்த பாஸை கெவின் மிரலாஸ் கோலாக மாற்ற முயற்சிக்க மீண்டும் ஹோவர்ட் அதனை தடுத்து விட்டார்.

78வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ஈடன் ஹசார்ட் அடித்த ஷாட்டை இடது புறம் தாழ்வாக டைவ் அடித்து ஹோவர்ட் மீண்டும் ஒரு அசாத்திய தடுப்பை நிகழ்த்தினார். கூடுதல் நேரத்திலும் சில கோல்களை முறியடித்தார் ஹோவர்ட்.

மீண்டும் 84வது நிமிடத்தில் ஆரிஜி அடித்த ஷாட்டை கோல் போஸ்டிற்கு மேல் தட்டி விட்டு கோலை முறியடித்தார். அதன் பிறகுதான் லுகாக்உ களமிறங்க சுமார் 100 நிமிட தடுப்பாட்டத்தினால் களைப்படைந்த ஹோவர்ட் 2 கோல்களை விடுகிறார்.

காலிறுதி ஆட்டங்கள் தொடங்கவுள்ள நிலையில் நாம் ஸ்ட்ரைக்கர்கள் மீதான கவனக்குவிப்பை இனி கோல்கீப்பர்கள் பக்கம் திருப்பலாமே.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Thu Jul 03, 2014 12:33 am

போராடி காலிறுதியில் நுழைந்த அர்ஜென்டீனா; ரசிகர்கள் இதயத்தை வென்ற சுவிஸ் கோல்கீப்பர்

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் நாக்-அவுட் சுற்றில், பரபரப்பு மிகுந்த த்ரில் ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டீனா காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

118-வது நிமிடத்தில் அர்ஜென்டீனாவின் ஆஞ்செல் டி மரியா அடித்த கோல் வெற்றி கோலாக அமைந்தது. சுவிட்சர்லாந்தின் இதயம் உடைந்தது.

இந்த வெற்றியைப் பற்றி நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி ஆட்டம் முடிந்தவுடன் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை: "அதிர்ஷ்டம் அர்ஜென்டீனா பக்கம் இருந்தது" என்றார் மெஸ்ஸி.

இரு அணிகளின் 2 மணி நேர, இருபக்க மோதல்கள் மற்றும் விரயமான முயற்சிகளுக்குப் பிறகு மீண்டும் லயோனல் மெஸ்ஸிதான் அர்ஜென்டீனாவின் மீட்பரானார். நடுக்களத்தில் சுவிஸ் கோல் பகுதிக்கு 40 அடி தள்ளி இருந்தார் மெஸ்ஸி.

அவருக்கு முன்னால் நிறைய இடம் இருந்ததை, அவர் தனக்கான கணமாகக் கண்டு கொண்டார். அவரது வழக்கமான சடுகுடு பாணியில் பந்தை மிக வேகமாகக் கடத்தி வந்தார். ஃபேபியன் ஸ்கார் என்ற சுவிஸ் வீரரைக் கடந்தார், மற்றொரு சுவிஸ் வீரர் ரிகார்டோ ரோட்ரிகஸிற்கு சிறிது நேரம் போக்குக் காண்பித்தார். பிறகு அவருக்குப் பின்னால் காலியாக இருந்த இடத்திற்குப் பந்தை சாதுரியமாகத் தட்டி விட்டார்.

பந்து பெனால்டி பகுதிக்குள் வந்தது. ஆஞ்செல் டி மரியா வந்தார். சுவிஸ் கோல் கீப்பர் டீகோ பெனாக்ளியோவைத் தாண்டி கோலை அடித்தார். ரசிகர்கள் எழுச்சியுற்றனர். அர்ஜென்டீன இசைவிழா தொடங்கியது.

ஆனால், உடனேயே சுவிட்சர்லாந்து சமன் செய்திருக்கும். சுவிஸ் வீரர் பிளெரிம் சீசெமெய்லி கார்னர் ஷாட்டை தலையால் அடிக்க அது கோல் பாரில் பட்டு ரீ-பவுண்ட் ஆனது. அதனை முட்டிக்காலால் கோலுக்கு வெளியேதான் அடிக்க முடிந்தது.

முன்னதாக... மெஸ்ஸிக்கு இணையாக ஷெர்தான் ஷகீரி:

1954ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பைக் கால்பந்து காலிறுதிக்கு நுழையும் கனவுடன் சுவிட்சர்லாந்து ஆட்டத்தைத் துவங்கியது.

ஆனால் இரு அணிகளுக்கும் வெறுப்பே மிஞ்சியது. மெஸ்ஸியால் தனது 4 கோல்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியவில்லை.

ஆட்டம் தொடங்கி 15வது நிமிடத்தில் இவர் பந்தை வேகமாகக் கொண்டு சென்று கோலை நோக்கி அடிக்க, சுவிஸ் கோல் கீப்பர் பெனாக்ளியோ அதனை முறியடித்தார்.

பிறகு மீண்டும் ரிகார்டோ ரோட்ரிகஸ் மற்றும் வாலன் பெஹ்ராமி ஆகியோரை இரண்டாகப் பிளந்து கொண்டு பந்தை எடுத்துச் சென்றார். ஆனால் அதற்குள் ரோட்ரிகஸ் சுதாரித்து வந்து பந்தை தட்டி விட்டார்.

கடைசியில் கோல் அடித்த ஆஞ்செல் டி மரியாவும் சுவிஸ் வீரர்களுக்கு பெரும் தொல்லைகொடுத்தார். அப்படிப்பட்ட ஒரு மூவில்தான் பெனால்டி பகுதிக்கு சற்று வெளியே சுவிஸ் வீரர் ஃபவுல் செய்ய ஃப்ரீ கிக் கிடத்தது.

அதனை மெஸ்ஸி அடித்தார். சரியாக சக வீரர் ஹிகுவேயிற்கு மெஸ்ஸி அடிக்க அவர் தலையால் கோலை நோக்கி அடித்தார். ஆனால் பந்து மேலே சென்றது.

அர்ஜென்டீனாவில் மெஸ்ஸி எப்படியோ அவருக்கு கொஞ்சமும் சளைக்காமல் சுவிஸ் வீரர் ஷெர்தான் ஷகீரியும் ஈடு கொடுத்து ஆடினார். ஷகீரி அர்ஜென்டீனாவின் மார்கஸ் ரோஜோவைச் சுற்றி பந்தை அழகாக எடுத்துச் சென்று அர்ஜென்டீனா கோல் பகுதியின் முனைக்கு பாஸ் செய்ய அங்கு கிரானிட் ஜாக்கா கோல் நோக்கிப் பந்தை அடிக்க அர்ஜென்டீனா கோல் கீப்பர் ரொமீரோ பந்தை பிடித்தார்.

இதை விட ஒரு அருமையான வாய்ப்பைக் கோட்டை விட்டது சுவிட்சர்லாந்து. இந்த முறையும் ஷகீரிதான் மூல கர்த்தா. அவர் தன்னிடம் வந்த பந்தை அருமையாக அதிவேகமாக எடுத்துச் சென்றார். பின்பு அவரை அர்ஜென்டீனா சுற்றம் சூழ அவர் பந்தை ஜோசிப் டிரிமிக் என்பவருக்கு அடித்தார். அவருக்கு முன்னால் கோல் கீப்பர் ரொமீரோ மட்டுமே நிற்கிறார். நிச்சயம் கோல்தான் என்று பார்த்துக் கொண்டிருக்கும்போது ரொமீரோ கையில் அந்த ஷாட்டை அவர் அடித்தார். இது புரிந்து கொள்ள முடியாத ஒரு ஷாட்டாகவே இருந்தது.

இரண்டாவது பாதியில் மீண்டும் ஷகீரி அர்ஜென்டீன கோல் கீப்பர் ரொமீரோவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இந்த முறை ஃப்ரீ கிக் விரயம் ஆனது. மெஸ்ஸி கூறியது உண்மைதான், "அர்ஜென்டீனாவுக்கு அதிர்ஷ்டம் இருந்தது".

மெஸ்ஸி... மெஸ்ஸி... மெஸ்ஸி:

மெஸ்ஸியிடம் பந்து வரும்போதெல்லாம் ரக்பி வீரர்கள் போல் சுவிஸ் வீரர்கள் அவரை எதிர்கொண்டனர். அர்ஜென்டீனா அணியிடம் ஒரே ஒரு உத்தியே இருந்தது. யாரிடம் பந்து வந்தாலும் மெஸ்ஸியிடம் அடிப்பது. அதாவது எப்போதும் மெஸ்ஸியிடமே அடி என்பதே அந்த அணியின் தாரக மந்திரமாக இருந்தது. மெஸ்ஸி மட்டும்தான் மெஸ்ஸியிடம் அடிக்க முடியவில்லை.

அர்ஜென்டீனா அணியின் தடுப்பு அரண் பலவீனமாக இருக்கிறது. ஸ்ட்ரைக்கர்கள் இல்லை. மெஸ்ஸிதான் அந்த அணியின் பலம் பலவீனம் இரண்டுமே.

எப்படியோ தனது அனைத்து பலவீனங்களுடன் அர்ஜென்டீனா காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. இனி மெஸ்ஸி மேஜிக் என்ன ஆகிறது என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ரசிகர்கள் இதயத்தை வென்ற சுவிஸ் கோல்கீப்பர்

இந்தப் போட்டியில் ஆரம்பம் முதல் இறுதி நொடிகள் வரை சற்றும் சோர்வையடையாமல், சுவிஸ் அணிக்கு வெற்றி தேடித்தர பாடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர், அந்த அணியின் கோல்கீப்பர் பெனாக்ளியோ. சுவிஸ் அணிக்கு அரணாகவே திகழ்ந்தார். இறுதியில், அர்ஜென்டீனா கோல் திணித்த பிறகு, இருந்த கடைசி 2 நிமிடங்களில் எப்படியேனும் சமன் செய்துவிட முடியாதா என்ற ஆவேசத்தில், ஆடுகளத்தின் நடுவிலேயே வந்து சுவிஸ் கோல்கீப்பர் விளையாடியது, அவரது முயற்சிக்கும் நம்பிக்கைக்கும் சான்றாக அமைந்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Sat Jul 05, 2014 4:32 am

பிரேசில் 2 – கொலம்பியா 1

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி கொலம்பிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.கால் இறுதி போட்டியில் கொலம்பிய அணியை 2-1 என்ற கணக்கி்ல் பிரேசி்ல் அணி வெற்றி பெற்றது. உலக கோப்பை போட்டியில் பிரேசில் அணி அரையிறுதிக்கு 11வது முறையாக முன்னேறியுள்ளது. அணியின் வீரர்கள் தியாகோஷில்வா மற்றும் டேவிட் லூயிஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழி கோலினர்.

வழக்கத்தை விட மாறாக பிரேசில் அணியினர் வெறித்தனமான ஆட்டத்தை – அதுவும் விரைந்த வேகத்தோடு வெளிப்படுத்தினர்.

எந்த நிலையிலும் பந்தை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது, கொலம்பியாவிடம் தோற்றுவிடக் கூடாது என்பது போல் அவர்களின் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில், பிரேசிலின் டேவிட் லுயிஸ் அடித்த ஃபிரி கிக் பந்து அற்புதமாக கொலம்பியா கோல் கம்பத்தில் நேரடியாக நுழைந்து கோலாக, பிரேசில் 2-0 என்ற நிலையில் தெளிவான வெற்றி வாய்ப்போடு முன்னணியில் இருந்தது.

ஆனாலும், கொலம்பியாவுக்கு கிடைத்த பினால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கொலம்பியாவின் முன்னணி ஆட்டக்காரர் ஜேம்ஸ் ரோட்ரிகுயஸ் ஒரு கோல் அடிக்க, ஆட்டம் ஏறத்தாழ பத்து நிமிடங்கள் எஞ்சியிருந்த வேளையில் 2-1 என்ற நிலைமைக்கு வந்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by அருண் on Sat Jul 05, 2014 11:47 am

நேற்றைய ஆட்டம் மிகுந்த விறுவிறுப்புடன் காணப்பட்டது! சூப்பருங்க 
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Sat Jul 05, 2014 6:13 pm

காயம் காரணமாக நெய்மார் விலகல்: பிரேசில் அணிக்கு பின்னடைவு

உலக கோப்பை கால்பந்து போட்டியில், கால் இறுதி போட்டியில் கொலம்பியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் கொலம்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தின் இறுதி நேரத்தில் முதுகெலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.

இன்னும் சில வாரங்கள் அவர் தேறி வர ஆகும் என்பதால் ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பிரேசில் அணியின் முக்கிய வீரரான நெய்மார் இந்த போட்டித்தொடரில் 4 கோல் அடித்துள்ளார். நெய்மார் காயம் காரணமாக விலகியுள்ளது பிரேசில் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது என்று பிரேசில் அணியின் மருத்துவர் ரோட்ரிகோ லாஸ்மர் தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by ayyasamy ram on Sun Jul 06, 2014 8:09 am

பிரேசில் அணி கேப்டன் நம்பிக்கை
--
பிரேசில் அணியின் கேப்டன் தியாகோ சில்வா கூறுகையில், ‘நெய்மார் எங்கள் அணியில் மிகவும் முக்கியமான வீரர். நாங்கள் அவரை அதிகம் நம்பி இருந்தோம். இந்த சூழ்நிலையிலும் கோப்பையை வெல்லும் திறமை எங்கள் அணிக்கு உள்ளது. நெய்மாருக்காக இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்ற விருப்பம் எங்கள் அணி மேலும் சிறப்பான ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உத்வேகம் அளிக்கும்’ என்று சொன்னார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36706
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Tue Jul 08, 2014 3:43 am

என் கனவு முடிந்துவிடவில்லை: உடைந்துபோன நெய்மார் உருக்கம்

முதுகில் காயமேற்பட்டு உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகிய பிரேசில் நட்சத்திரம் நெய்மார், தனது கனவு முடிந்து விடவில்லை என்று கூறியுள்ளார்.

தனது அணியினர் உலகக் கோப்பையை சொந்த மண்ணில் வெல்லும் தனது கனவை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்று கூறியுள்ளார்.

இது பற்றி பிரேசில் கால்பந்துக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

”என் கனவு முடிந்து விடவில்லை, அது விளையாட்டில் இடையூறு கண்டுள்ளது அவ்வளவே, எனது அணியினர் உலகக் கோப்பையை வெல்லும் எனது கனவை நிறைவேற்றுவார்கள் என்று நிச்சயம் நம்புகிறேன்.

உலகக் கோப்பை இறுதியில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு, ஆனால் இந்த முறை அது நடக்கவில்லை” என்று நெய்மார் கூறும்போது உணர்ச்சிவசப்பட்டார் குரலில் அழுகையுடன் கூடிய தடுமாற்றம் இருந்தது.

“கடவுளின் விருப்பம் பிரேசில் சாம்பியன் ஆவது. நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். நான் அவர்களுடன் இருப்பேன், பிரேசில் நாடே கொண்டாடும் அந்தத் தருணத்தில் நானும் அவர்களுடன் இருப்பேன்” என்றார் நெய்மார்.

குளோபோ தொலைக்காட்சி இந்த வீடியோவை ஒளிபரப்பியபோது பிரேசில் ரசிகர்கள் கண்களில் கண்ணீர் பெருகியதாக பிரேசில் கால்பந்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Wed Jul 09, 2014 6:35 pm

அதிக கோல் அடித்து உலக சாதனை படைத்தார் க்ளோஸ்உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மன் வீரர் க்ளோஸ் புதிய உலக சாதனையை படைத்தார்.

பிரேசிலுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் ஜெர்மனி வீரர் க்ளோஸ் தனது 16 கோலை அடித்தார். இதன் மூலம் உலக கோப்பை போட்டியில் ஒருவர் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார் க்ளோஸ்

பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் 15 கோல்கள் அடித்தது தான் சாதனையாக இருந்து வந்தது. க்ளோஸ் நான்காவது முறையாக உலக கோப்பை போட்டியில் விளையாடிவருகிறார் என்பது குறி்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Sat Jul 12, 2014 2:01 am

உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமை அர்ஜென்டீனா வெல்லவேண்டும்: நெய்மார் விருப்பம்

முதுகெலும்பு முறிவு ஏற்பட்டு வெளியேறிய பிரேசில் நட்சத்திரம் நெய்மார், உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமை அர்ஜென்டீனா வெல்ல வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

”விளையாட்டில் மெஸ்ஸியின் வரலாறு மிக முக்கியமானது, அவர் நிறைய கோப்பைகளை வென்றிருக்கிறார். இதையும் வெல்ல அவருக்காக நான் விரும்புகிறேன். அவர் எனது நண்பர், பார்சிலோனா அணியில் எனது சகா, கோப்பையை வெல்ல அவருக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார் நெய்மார்.

ஆனால் அந்த நாட்டு ரசிகர்கள் மற்றும் பத்திரிகைகள் அதனை விரும்பவில்லை. நெதர்லாந்தை வீழ்த்தி அர்ஜென்டீனா அணி இறுதிக்குள் நுழைந்ததை ஓ டயா என்ற செய்தித் தாள், “துர்கனவு தொடர்கிறது’ என்று வர்ணித்துள்ளது.

இறுதிப் போட்டிக்கு சுமார் 1 லட்சம் அர்ஜென்டீன ரசிகர்கள் மைதானத்திற்குப் படையெடுப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அர்ஜென் டீனா வென்றால் இது 3வது உலகக் கோப்பையாகும்.

இதற்கிடையே மெஸ்ஸியை நெதர்லாந்து அணி அன்று சாதுவாக வைத்திருந்தது. நாங்களும் அவருக்காக சில சிறப்பு உத்திகளை வைத்திருக்கிறொம் என்று ஜெர்மனி அணியின் உதவி பயிற்சியாளர் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Sat Jul 12, 2014 2:02 am

உலகக் கோப்பையை ஜெர்மனி கைப்பற்றிட 20 ஆண்டுகள் காத்திருக்கும் இந்திய ரசிகர்

ஜெர்மனி அணி உலகக் கோப்பைக் கால்பந்தில் சாம்பியன் ஆவதற்காக விஸ்கி பாட்டில் ஒன்றை 20 ஆண்டுகளாக தன் தோட்டத்தில் புதைத்து வைத்துக் காத்திருக்கிறார் இந்திய கால்பந்து ரசிகர் ஒருவர்.

புதுல் போரா என்ற அந்த 53 வயது அசாம் மாநில வர்த்தகர் 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ஜெர்மனி வெல்லும் என்ற நம்பிக்கையில் உயர்தர ஸ்காட்ச் விஸ்கியை வாங்கினார். ஆனால் காலிறுதியில் பல்கேரியாவிடம் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவ வேதனையடைந்த போரா அந்த பாட்டிலை தன் தோட்டத்தில் புதைத்து வைத்தார்.

.“இந்த முறை ஜெர்மனி அணி ஆடும் ஆட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்பாக புதைத்த விஸ்கி பாட்டிலை தோண்டி எடுக்க வைத்துள்ளது, ஆனால் எனது நண்பர்கள் அந்த விஸ்கி பாட்டிலை ஏலம் விடுமாறு கூறி வருகின்றனர்” என்று அவர் செய்தி நிறுவனம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

2002ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஜெர்மனி தகுதி பெற்றது. ஆனால் அந்த முறை பிரேசிலிடம் தோற்றது ஜெர்மனி. ஜெர்மனியின் இந்தத் தோல்விக்குப் பிறகு தான் குடிப்பதையே நிறுத்தி விட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த முறை ஜெர்மனி கோப்பையை வெல்லும் என்று கூறும் அவரது வீடு கால்பந்து வீரர்களின் போஸ்டர்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் கால்பந்து ரசிகர்கள் அவரது வீட்டில் நடப்பு உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளை ரசித்து வருகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Wed Jul 16, 2014 4:10 pm

கோப்பையை இழந்ததை மறக்க முடியவில்லை: மெஸ்சி வேதனை

உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் 1–0 என்ற கோல் கணக்கில் தோற்று அர்ஜென்டினா கோப்பை இழந்தது.

அர்ஜென்டினா கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அது நிறைவேறாததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் கோப்பை இழந்ததை மறக்க முடிய வில்லை. எந்த ஆறுதலும் என்னை தேற்றவில்லை என்று அர்ஜென்டினா கேப்டனும், தங்க பந்து விருது வென்றவருமான லியோனல் மெஸ்சி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:–

நான் பெற்ற பரிசு (தங்க பந்து) பற்றி நினைக்கவில்லை. எதையும் பற்றி சிந்திக்கும் நிலையில் இல்லை. விருதுகள் என்னை ஆறுதல் படுத்தாது. கோப்பையை இழந்ததை மறக்க முடியவில்லை.

அர்ஜென்டினா மக்களுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்புகள் இருந்தது. கோல் அடிக்க கிடைத்த 3 வாய்ப்புகள் தவற விட்டுவிட்டோம். இதனால் அதிக கோபம்தான் வருகிறது.

ஒவ்வொரு கால்பந்து வீரருக்கும் உலக கோப்பையை வெல்வது பெரிய விஷயம். சிறுவயது கனவு நனவாகும் மகிழ்ச்சியே ஆகும். அது என்றும் மனதில் இருந்து நீங்காது.

இவ்வாறு அவர் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Wed Jul 16, 2014 4:11 pm

பிரேசிலுக்கு பிபா பாராட்டு

உலக கோப்பை கால்பந்து போட்டியை சிறப்பான முறையில் நடத்தியதாக பிரேசிலை, சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) பாராட்டி இருக்கிறது. இது குறித்து சர்வதேச கால்பந்து சங்க தலைவர் செப் பிளாட்டர் கருத்து தெரிவிக்கையில்,

‘இந்த உலக கோப்பை போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த போட்டி தரமானதாகவும், உத்வேகம் மிகுந்ததாகவும் இருந்தது. இந்த உலக கோப்பை ஆட்டங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்’ என்று பாராட்டி இருக்கிறார்.

இந்த போட்டிக்கு 10-க்கு 9.25 மார்க் அளிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பிரேசில் அதிபர் டில்மா ரோசெப்பும், ‘மிகவும் அழகான உலக கோப்பை போட்டியில் இதுவும் ஒன்றாகும். பிரேசில் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Wed Jul 16, 2014 4:15 pm

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சூதாட்டம்: 5,064 பேர் கைது

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ஒரு மாதமாக நடைபெற்று வந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்தன. இந்தப் போட்டிகளுக்கான சூதாட்டப் போட்டிகளில் ஈடுபட்டதற்காக 5,064 பேரைக் கைது செய்துள்ளதாக தாய்லாந்து காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன்னால் இருந்ததைவிட இது மிகவும் அதிகம் என்று போலீஸ்தரப்பில் கூறப்பட்டது.கடந்த மாதம் 12ஆம் தேதி இந்தப் போட்டி தொடங்கியதிலிருந்து 4,679 போட்டியாளர்களுடன் 258 புக்கிகளும், 127 பந்தய சீட்டு விற்பனையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு அவர்கள் நாட்டுப் பணமதிப்பில் 2000 பாட்டும், இரண்டு ஆண்டுகள் முடிய சிறைத் தண்டனையும் கிடைக்கக்கூடும்.ஆனால் பெரும் தொகை சம்பந்தப்பட்ட குற்றங்கள் தவிர மற்றவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தண்டனை மட்டுமே அளிக்கப்படக்கூடும் என்று காவல்துறைத் தலைவர் சன்டவிட் ராம்சுத் தெரிவித்தார்.

இதுதவிர 2000க்கும் மேற்பட்ட கால்பந்து சூதாட்ட இணையதளங்கள் மூடப்பட்டன என்றும் அவர் கூறினார். கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளின்போது 3,800 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.

தாய்லாந்தில் தற்போது ஆட்சிப் பொறுப்பை நடத்திவரும் ராணுவம் சமூக ஒழுங்கை மேம்படுத்தும்விதமாக அங்கு நடைபெற்றுவந்த பல சூதாட்டங்களை ஏற்கனவே தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum