ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன?
 SK

ஓர் அழகான கதை !
 SK

ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
 krishnaamma

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 krishnaamma

பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

குறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...!!
 krishnaamma

பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
 SK

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!
 SK

எக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...!!
 krishnaamma

கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
 krishnaamma

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 krishnaamma

`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
 krishnaamma

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
 krishnaamma

சவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்
 krishnaamma

பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
 பழ.முத்துராமலிங்கம்

என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
 T.N.Balasubramanian

ஐ.பி.எல் -2018 !!
 T.N.Balasubramanian

3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
 ayyasamy ram

நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
 ayyasamy ram

‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
 ayyasamy ram

ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
 ayyasamy ram

பெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்
 SK

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
 ayyasamy ram

இலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி
 ayyasamy ram

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
 SK

நானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்
 SK

மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
 SK

கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
 SK

காஜல் அகர்வால் கொந்தளிப்பு!-
 SK

சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்..!! ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..!!!
 பழ.முத்துராமலிங்கம்

வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி
 பழ.முத்துராமலிங்கம்

அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
 பழ.முத்துராமலிங்கம்

`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்!’ - டர்பனுடன் பதவியேற்றார்
 பழ.முத்துராமலிங்கம்

வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை…!
 ayyasamy ram

செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
 ayyasamy ram

அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
 SK

திண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா? நியூட்ரினோ ஆய்வா?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

நலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்
 பழ.முத்துராமலிங்கம்

மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..!
 பழ.முத்துராமலிங்கம்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04
 Raju_007

வருங்காலப் பொறியாளன்
 ayyasamy ram

கற்றுக்கொள்! – கவிதை
 ayyasamy ram

பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது
 ராஜா

வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

கன்னட மொழி படத்தில் சிம்பு!
 ayyasamy ram

ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
 ayyasamy ram

மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
 ayyasamy ram

மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
 ayyasamy ram

கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
 ayyasamy ram

பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Wed Jun 04, 2014 12:09 pm

First topic message reminder :

உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம்
உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்’ கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி  தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்’ ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே...

பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!

 போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!

 எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.

 போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன. 

 2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.

 போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் 32 நாடுகள்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:

ஐரோப்பா (13):

ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.

தென்அமெரிக்கா (6):

பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.

வடக்கு, மத்திய அமெரிக்கா (4).

கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.

ஆப்பிரிக்கா (5):

அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.

ஆசியா (4):

ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா


Last edited by சிவா on Fri Jun 06, 2014 5:21 am; edited 4 times in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Fri Jun 06, 2014 2:59 am

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி இதுவரை அதிகபட்சமாக 7 முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. இதில் 5 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கு அடுத்தபடியாக இத்தாலி 6 முறை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்று, அதில் 4 முறை சாம்பியன் ஆகியுள்ளது. நடப்பு சாம்பியனான ஸ்பெயின் 2010-ம் ஆண்டுதான் முதல்முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. அப்போது உலகக் கோப்பையையும் வென்றது.

1958 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்

மொத்த ஆட்டங்கள் - 35
மொத்த கோல்கள் - 126
ஒரு போட்டிக்கு சராசரி கோல் - 3.60

மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 8,68,000

டாப் ஸ்கோர்

ஜஸ்ட் பான்டெய்ன் (பிரான்ஸ்) - 13 கோல்கள்
பீலே (பிரேசில்) - 6 கோல்கள்
ஹெல்முட் ரான் (மேற்கு ஜெர்மனி) - 6 கோல்கள்
பீட்டர் மெக்பார்லெண்ட் (வடக்கு அயர்லாந்து) - 5 கோல்கள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Fri Jun 06, 2014 5:20 am

உலகக் கோப்பை: ரஷிய அணி அறிவிப்பு

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடவுள்ள 23 பேர் கொண்ட ரஷிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த தடுப்பாட்டக்காரர் செர்ஜி இக்னேஷேவிச், மிட்பீல்டர் ரோமன் ஷிரோகோவ், முன்கள வீரர் அலெக்சாண்டர் கெர்ஸாகோவ் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அணி விவரம்:

கோல் கீப்பர்கள்: இகர் அகின்பீவ், யூரி லோடிஜின், செர்ஜி ரிஷிகோவ்.

பின்களம்: வேஸிலி பெரேஸுட்ஸ்கை, செர்ஜி இக்னேஷேவிச், ஜார்ஜ் ஷென்னிகோவ், விளாடிமிர் கிரானாட், அலெக்ஸி கோஸ்லோவ், ஆன்ட்ரேய் யெஸ்சென்கோ, டிமிட்ரி கோம்பரோவ், ஆன்ட்ரேய் செமினோவ்.

நடுகளம்: இகர் டெனிசோவ், யூரி ஷிர்கோவ், ஆலன் ஷேகோவ், ரோமன் ஷிர்கோவ் டெனிஸ் குளூஷாகோவ், விக்டர் பெய்ஸுலின், ஓலெக் ஷாடோவ்.

முன்களம்: அலெக்சாண்டர் கெர்ஸாகோவ், அலெக்ஸி இயோனோவ், அலெக்சாண்டர் கோகோரின், மேக்ஸிம் கனுன்னிகோவ், அலெக் சாண்டர் சமேதோவ்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Sun Jun 08, 2014 8:22 am

அசத்தல் ‘கீப்பர்’ அன்டோனியோ

உலக கோப்பை அரங்கில் சாதனை வீரராக திகழ்ந்தார் மெக்சிகோ அணியின் அன்டோனியோ கார்பஜல், 85. கடந்த 1950ல் நடந்த உலக கோப்பை தொடரில், பிரேசில் அணிக்கு எதிராக இளம் கோல்கீப்பராக களமிறங்கினார். பின் 1962ல் செக்கோஸ்லோவாக்கியா அணிக்கு எதிராக இவரது துடிப்பான செயல்பாடு கைகொடுக்க, மெக்சிகோ அணி உலக கோப்பை அரங்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. தொடர்ச்சியாக ஐந்து உலக கோப்பையில்(1950, 54, 58, 62, 66) விளையாடிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இந்த சாதனையை 32 ஆண்டுகளுக்கு பின், ஜெர்மனி வீரர் மத்தாயஸ்(1982–98) சமன் செய்தார். மெக்சிகோ அணிக்காக 48 போட்டியில் விளையாடிய கார்பஜல், உலக கோப்பை அரங்கில் 11 போட்டியில் பங்கேற்றார். கடந்த 1966ல் ஓய்வு பெற்ற இவர், பல்வேறு கிளப் அணிகளுக்கு மானேஜராக செயல்பட்டார்.

‘சீனியர்’ அணி

பிரேசிலில் நடக்க உள்ள 20வது உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளில் மூத்த வீரர்களை கொண்ட அணியாக அர்ஜென்டினா உள்ளது. இந்த அணி வீரர்களின் சராசரி வயது 28.

இத்தொடரில் பங்கேற்கும் அணிகளில், இளம் அணியாக கானா உள்ளது. இந்த அணி வீரர்களின் சராசரி வயது 24.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Sun Jun 08, 2014 9:09 am

கால்பந்து தரவரிசை ஸ்பெயின் தொடர்ந்து முதலிடம்

சர்வதேச கால்பந்து தரவரிசையில் உலக சாம்பியன் ஸ்பெயின் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் 12-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிபா) புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஸ்பெயின் 1,485 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஜெர்மனி அணி 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 1300 புள்ளிகள் பெற்றுள்ளது. 3-வது இடத்தில் இருந்த போர்ச்சுகல் ஓரிடம் பின்தங்கி 4-வது இடத்துக்கு வந்துள்ளது. இதுவரை 4-வது இடத்தில் இருந்த பிரேசில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிரேசிலில்தான் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது.

ஆர்ஜெண்டீனா 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்துக்கு வந்துள்ளது. ஸ்விட்சர்லாந்து அணியும் இரு இடங்கள் முன்னேறி 6-வது இடம் பிடித்துள்ளது.உருகுவே அணி 7-வது இடத்தில் உள்ளது. கொலம்பியா 3 இடங்கள் பின்தங்கி 8-வது இடம் பிடித்துள்ளது. இத்தாலிக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து ஓரிடம் முன்னேறி 10-வது அணியாக உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Mon Jun 09, 2014 12:10 am

உலககோப்பை கால்பந்தில் வெல்லும் அணிக்கு ரூ.210 கோடி பரிசு

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 12–ந் தேதி பிரேசிலில் தொடங்குகிறது.

ஜூலை 13–ந் தேதி வரை இந்த கால்பந்து திருவிழா அங்குள்ள 12 நகரங்களில் நடக்கிறது.

இந்த போட்டியில் மொத்தம் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இத்தாலி, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், பிரான்ஸ் போன்ற முன்னணி அணிகள் உள்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.

ஒவ்வொரு பிரிவில் உள்ள அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றான 2–வது சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து கால்இறுதி, அரை இறுதி, இறுதிப்போட்டிக்கு அணிகள் முன்னேறும்.

உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.210 கோடி பரிசு தொகை வழங்கப்படும். கடந்த முறை உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு வழங்கப்பட்ட பரிசு தொகையை விட இது 17 சதவீதம் கூடுதலாகும்.

சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு 4927 கிராம் எடை கொண்ட தங்க கோப்பையும் வழங்கப்படும்.

2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.150 கோடியும், 3–வது இடத்தை பிடிக்கும் நாட்டுக்கு ரூ.132 கோடியும், 4–வது இடத்துக்கு ரூ.120 கோடியும் பரிசு தொகையாக வழங்கப்படும்.

கால் இறுதியில் வெளியேறும் 4 அணிகளுக்கு தலா ரூ.84 கோடியும், 2–வது சுற்றில் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.54 கோடியும், முதல் சுற்றில் வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.48 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3456 கோடியாகும். கடந்த உலக கோப்பையில் (2010) வழங்கப்பட்ட பரிசு தொகையில் இருந்து 37 சதவீதம் கூடுதலாகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Tue Jun 10, 2014 4:42 pm

களைகட்டியது உலக கோப்பை கால்பந்து முக்கிய அணிகள் பிரேசில் வருகை

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசில் நாட்டில் நாளை மறுநாள் கோலாகலமாக தொடங்குகின்றன. ஒரு மாதம் நடக்க உள்ள கால்பந்து திருவிழாவில் பங்கேற்கும் பெரும்பாலான அணிகள் ஏற்கனவே பிரேசிலுக்கு வந்து விட்டன. வெளிநாடுகளில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வந்த அணிகளும் நேற்று பிரேசிலுக்கு வந்து சேர்ந்தன. ஒரே குரூப்பில் இடம் பெற்றுள்ள ஈக்வடார், பிரான்ஸ் அணிகள் நேற்று மதியம் பிரேசில் நாட்டில் போர்டோ அலெக்ரே, சாவா போலோ நகரங்களுக்கு வந்து சேர்ந்தன. பிரான்ஸ் அணி ரிபைரோ பிரெடோ பகுதிக்கும், ஈக்வடார் அணி வியாமோ பகுதிக்கும் சென்றன. அங்கு இரு அணிகளும் பயிற்சியில் ஈடுபட உள்ளன. முன்னாள் உலக சாம்பியன்களான அர்ஜென்டினா, உருகுவே அணிகள் நேற்று மாலை பிரேசில் வந்தன. 1930, 1950 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பையை வென்ற அணியான உருகுவே, 1978, 1986 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிகள் பெலோ ஹரிசாண்டே நகருக்கு வந்து சேர்ந்தன. இந்த இரு அணிகளும் போட்டியை நடத்தும் நாடான பிரேசில் அணிக்கு பரம எதிரியாக கருதப்படுபவை. உருகுவே அணி வரும் 14ம் தேதி தங்களது துவக்க போட்டியில் கோஸ்டாரிகாவை எதிர்த்து விளையாடுகிறது.

பிரான்ஸ், ஈக்வடார், அர்ஜென் டினா அணிகள் மறுநாளான 15ம் தேதியன்று முறையே ஹோண்டுராஸ், போஸ்னியா ஹெர்சகோவினா, சுவிட்சர்லாந்து அணிகளுடன் மோதுகின்றன. மொத்தத்தில், உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகளில் 25 நாடுகளின் தேசிய அணிகள் இதுவரை பிரேசில் வந்து சேர்ந்து விட்டன. முக்கிய அணிகள் பிரேசில் வந்து சேர்ந்துவிட்டதால், பிரேசில் கால்பந்து ரசிகர்கள் தங்களது விருப்ப வீரர்களைக் காண அவர்கள் பயிற்சி செய்யும் ஊர்களில் குவிந்து வருகின்றனர். இதனால், இப்போதே பிரேசிலில் கால்பந்து திருவிழா களைகட்டி விட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Tue Jun 10, 2014 4:47 pm

உலகக் கோப்பைக் கால்பந்து: லண்டனிலிருந்து பிரேசிலுக்கு ஸ்கூட்டரில் சென்ற ரசிகர்


உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணியின் ஆட்டத்தைப் பார்க்க லண்டனிலிருந்து பிரேசிலுக்கு வெஸ்பா ஸ்கூட்டரிலேயே சென்றார் இங்கிலாந்து ரசிகர்.

கிறிஸ் ஹாலெட் என்ற இந்த நபருக்கு வயது 44. லண்டனிலிருந்து வெஸ்பா ஸ்கூட்டரில் புறப்பட்ட இவர் சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு பிரேசில் வந்து சேர்ந்துள்ளார்.

24,000 கிமீ தூரத்தை இவர் 4 மாதங்களில் கடந்துள்ளார்.

தனது இந்தப் பயணம் முதுகைப் பதம் பார்த்தது என்றாலும் விமானத்தில் செல்வதை விட இன்பமாகவே இருந்தது என்கிறார் ஹாலெட்.

உலகக் கோப்பைக் கால்பந்தில் பங்குபெறும் 32 நாடுகளில் 18 நாடுகளை இவர் தனது ஸ்கூட்டரில் கடந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Tue Jun 10, 2014 5:12 pm

இத்தாலியில் 2-வது உலகக் கோப்பை

1990 உலகக் கோப்பை கால்பந்து போட்டி இத்தாலியில் ஜூன் 8 முதல் ஜூலை 8 வரை நடைபெற்றது. இதன்மூலம் மெக்ஸிகோவுக்கு அடுத்தபடியாக இருமுறை உலகக் கோப்பையை நடத்திய நாடு என்ற பெருமையைப் பெற்றது இத்தாலி.

இந்தப் போட்டியின் தகுதிச்சுற்றில் 6 கண்டங்களைச் சேர்ந்த 116 அணிகள் பங்கேற்றன. அதில் இருந்து 22 அணிகள் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றன. போட்டியை நடத்திய இத்தாலி, நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா ஆகியவை நேரடித் தகுதி பெற்றன.

இந்தப் போட்டியின் இறுதியாட்டத்தில் மேற்கு ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவைத் தோற்கடித்து 3-வது முறையாக சாம்பியன் ஆனது. கடந்த உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவிடம் கண்ட தோல்விக்கு இந்த வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்தது ஜெர்மனி. பெனால்டி ஷூட் அவுட் முறையில் அரையிறுதியில் தோல்வி கண்ட இங்கிலாந்தும், இத்தாலியும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மோதின. இதில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

பெரிய அளவில் கோலின்றி அமைந்த உலகக் கோப்பை போட்டிகளில் இதுவும் ஒன்று. இந்த உலகக் கோப்பையில் சராசரியாக ஒவ்வொரு ஆட்டத்திலும் (2.21) குறைவான கோல்கள் அடிக்கப்பட்டதோடு, மொத்தம் 16 ரெட் கார்டுகளும் வழங்கப்பட்டன. அதில் ஒன்று இறுதியாட்டத்தில் வழங்கப்பட்டதாகும். உலகக் கோப்பை வராற்றில் இறுதியாட்டத்தில் ரெட் கார்டு வழங்கப்பட்டது முதல்முறையாகும். எனினும் அதிக ரசிகர்களால் கண்டுகளிக்கப்பட்ட போட்டியாக இது அமைந்தது. சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருது, அதிக கோலடித்தவருக்கான விருது என இரண்டையும் இத்தாலியின் சால்வடார் ஷிலாச்சி தட்டிச் சென்றார்.

1990 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்

மொத்த ஆட்டம் - 52
மொத்த கோல் - 115
ஓன் கோல் - 0
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 2,517,348
கோலடிக்கப்படாத ஆட்டம் - 5
டிராவான ஆட்டம் - 12

டாப் ஸ்கோர்

சால்வடார் ஷிலாச்சி (இத்தாலி) - 6
டோமஸ் ஸ்குராவி (செக்.குடியரசு) - 5
மைக்கேல் (ஸ்பெயின்) - 4
ரோஜர் மில்லா (கேமரூன்) - 4
கேரி லினிகெர் (இங்கிலாந்து) - 4
லோதார் மட்ஹஸ் (ஜெர்மனி) - 4
ரெட் கார்டு - 16
யெல்லோ கார்டு - 169
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Tue Jun 10, 2014 5:14 pm

ஆர்ஜென்டீனா 2-வது முறையாக சாம்பியன்

1986 உலகக் கோப்பை கால்பந்து போட்டி மெக்ஸிகோவில் மே 31 முதல் ஜூன் 28 வரை நடைபெற்றது. முன்னதாக இந்த உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்கு கொலம்பியா தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் பொருளாதாரச் சிக்கல் காரணமாக உலகக் கோப்பையை நடத்த முடியாது என அந்நாடு தெரிவித்துவிட்டது.

இதையடுத்து மெக்ஸிகோவில் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இதன்மூலம் இரு உலகக் கோப்பையை நடத்திய முதல் நாடு என்ற பெருமை மெக்ஸிகோ வசமானது.

ஆர்ஜென்டீனா, இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், பிரேசில், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, மெக்ஸிகோ ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. காலிறுதியில் ஆர்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும், பெல்ஜியம் 5-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினையும், பிரான்ஸ் 4-3 என்ற கோல் கணக்கில் பிரேசிலையும், மேற்கு ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவையும் தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

ஆர்ஜென்டீனா சாம்பியன்

அரையிறுதியில் ஆர்ஜென்டீனா 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தையும், மேற்கு ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸையும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றின் முதல் பாதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவின் ஜோஸ் பிரௌன் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஜார்ஜ் வல்டானோ கோலடிக்க, ஆர்ஜென்டீனா 2-0 என்ற கோல் கணக்கில் வலுவான நிலையை எட்டியது. 73-வது நிமிடம் வரை இதே நிலை நீடிக்க, 74-வது நிமிடத்தில் மேற்கு ஜெர்மனி எழுச்சி பெற்றது. மேற்கு ஜெர்மனியின் கார்ல் ஹெய்ன்ஸ் முதல் கோலை அடிக்க, 80-வது நிமிடத்தில் ரூடி வாலர் அடுத்த கோலை அடித்து ஸ்கோரை சமன் செய்தார்.

இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. ஆட்டம் முடிய கடைசி 7 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது மரடோனா அழகான கோல் வாய்ப்பை ஏற்படுத்தினார். அதை சரியாகப் பயன்படுத்திய ஜார்ஜ் புருசாஹா கோலடிக்க, ஆர்ஜென்டீனா 2-வது முறையாக சாம்பியன் ஆனது.

உலகக் கோப்பையில் 5 கோல்களை அடித்ததோடு, 5 அழகான கோல் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்த மரடோனா சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கோல்டன் பால் விருதும், அதிக கோலடித்தவரான இங்கிலாந்து வீரர் கேரி லினிகெருக்கு கோல்டன் பூட்ஸ் விருதும் வழங்கப்பட்டன.

மரடோனாவின் மாயாஜாலம்

இந்த உலகக் கோப்பையின் காலிறுதியில் இங்கிலாந்தும், ஆர்ஜென்டீனாவும் மோதின. அதில் ஆர்ஜென்டீன கேப்டன் டீகோ மரடோனா தலையால் முட்டி முதல் கோலை அடித்தார். அவர் தலையால் பந்தை முட்டியபோது அவருடைய கையும் பந்தின் மீது பட்டதை கவனிக்கத் தவறிய நடுவர் அதை கோல் என அறிவித்தார்.

இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த கோலை கடவுளின் கையால் கிடைத்த கோல் என மரடோனா கிண்டலாகக் கூறினார். இன்று வரை அந்த கோல் “ஹேன்ட் ஆப் காட்” கோல் என்றே அழைக்கப்படுகிறது.

இதே ஆட்டத்தில் மரடோனா மற்றொரு கோலும் அடித்தார். அப்போது இங்கிலாந்தின் 5 வீரர்களை பின்னுக்குத்தள்ளி பந்தை எடுத்துச் சென்ற மரடோனா, கடைசியாக கோல் கீப்பரையும் வீழ்த்தி கோலடித்தார். இந்த கோல், பின்னாளில் நூற்றாண்டின் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டது.

1986 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்

மொத்த ஆட்டம் - 52
மொத்த கோல் - 132
ஓன் கோல் - 1
மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 2,407,431
ஓர் ஆட்டத்தில் அதிக கோல், புட்ராகினோ (ஸ்பெயின்) - 4 கோல்கள்
கோலடிக்கப்படாத ஆட்டம் - 4
டிராவான ஆட்டம் - 14

டாப் ஸ்கோர்

கேரி லினிகெர் (இங்கிலாந்து) - 6 கோல்
டீகோ மரடோனா (ஆர்ஜென்டீனா) - 5 கோல்
எமிலியோ புட்ராகினோ (ஸ்பெயின்) - 5 கோல்
கரேகா (பிரேசில்) - 5 கோல்
ரெட் கார்டு - 8
யெல்லோ கார்டு - 137
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by முனைவர் ம.ரமேஷ் on Tue Jun 10, 2014 6:26 pm

இந்த ஆண்டு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்...
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by டார்வின் on Tue Jun 10, 2014 7:15 pm

avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சம்பத் on Tue Jun 10, 2014 7:52 pm

சிறப்பான கோர்வையான விவரங்கள்..   சூப்பருங்க அருமையிருக்கு 

சம்பத்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Wed Jun 11, 2014 12:41 am

நாளை உலக கோப்பை ஆரம்பம்

பேலோ ஹரிஜாண்டே: உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே உள்ளிட்ட 25 அணிகள், பிரேசில் மண்ணில் களமிறங்கின.

பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து தொடர் நாளை துவங்குகிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.

போட்டியை நடத்தும் பிரேசில் அணிக்கு அடுத்து, கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி அர்ஜென்டினா. கடந்த 1978, 1986 என, இருமுறை சாம்பியன் ஆன இந்த அணி, இம்முறை மெஸ்சி தலைமையில் சாதிக்க களமிறங்கியுள்ளது.

இதற்கான அர்ஜென்டினா அணி வீரர்கள் நேற்று பிரேசிலின் பெலோ ஹரிசாண்டே வந்தடைந்தனர். இந்த அணி இங்குள்ள வெஸ்பாசியானோவில் தங்கி பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். இதேபோல உருகுவே, பிரான்ஸ் மற்றும் ஈகுவடார் அணிகளும் நேற்று பிரேசில் சென்றன.

இதுகுறித்து பிரேசில் பயிற்சியாளர் டிசாம்ப்ஸ் கூறுகையில்,‘‘ பிரேசிலில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இத்தொடருக்காக அனைத்து வீரர்களும் நல்லமுறையில் தயாராகி உள்ளோம். எங்களது மூன்றாவது லீக் போட்டியில் ஈகுவடார் அணியை ரியோ டி ஜெனிரோவில உள்ள மரகானா மைதானத்தில் சந்திக்கவுள்ளது இப்போதிருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,’’ என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Wed Jun 11, 2014 12:42 am

துவக்க விழாவில் இரும்பு மனிதன்

சாவ் பாலோ: உலக கோப்பை துவக்க விழாவில், ‘இரும்பு மனிதனை’ போன்று உடை அணிந்த ஒருவர் பந்தை உதைத்து போட்டியை துவக்கி வைக்கிறார்.

உலக கோப்பை தொடர் பிரேசிலில் ஜூன் 12ல் துவங்குகிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் துவக்கவிழா சாவ் பாலோ நகரில் நடக்கிறது. 25 நிமிடங்கள் நடக்கும் இதில் மொத்தம் 600 நடன கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதைக்காண 60 ஆயிரம் பேர் மைதானத்தில் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ஒரு புதுமை நிகழ்த்தப்படவுள்ளது. அதாவது, பல்வேறு நிகழ்ச்சிகள் முடிந்த பின், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர், ரோாபோ போன்று இரும்பு உடை அணிந்து, பந்தை உதைத்து போட்டியை துவக்கி வைக்கிறார். இதனை பிரேசில் டாக்டர் மிக்குயல் நிகோலெலிஸ் வடிவமைத்துள்ளார். இதன்படி மனித மூளையில் இருந்து கிடைக்கப்பெறும் சிக்னலுக்கு ஏற்ப, செயற்கையாக வடிவமைக்கப்பட்ட இந்த உடையில் இருந்து வெளியாகும் எலக்ட்ரானிக் சிக்னல் மூலம், பந்தை உதைக்க வைக்கின்றனர்.

இதுகுறித்து பிரேசில் டாக்டர் மிக்குயல் நிகோலெலிஸ் கூறியது:

மனித உடல் சம்பந்தப்படாத ஒரு புறக்கூடு ஒன்று, மனித மூளையின் உதவியால் இயக்கப்படுவது இது தான் முதன் முறை. கடந்த 2009ல் பிரேசிலுக்கு உலக கோப்பை நடத்தும் வாய்ப்பு கிடைத்தவுடன், புதிதாக ஏதாவது செய்யும் படி எங்களிடம் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து தான் இந்த ‘ஐடியா’ உருவானது. இதற்காக பிரேசில் அரசிடம் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 82 கோடி வரை பெற்றுள்ளோம். இது அமெரிக்கா அரசு இயந்திர கைகள் உருவாக்க செலவு செய்யும் பணத்தை விட, ஐந்து மடங்கு குறைவு தான். மற்றபடி அதிகமான தொகை பெற்றதாக கூறுவது தவறு.

இவ்வாறு மிக்குயல் நிகோலெலிஸ் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Wed Jun 11, 2014 2:18 am

@சம்பத் wrote:சிறப்பான கோர்வையான விவரங்கள்..   சூப்பருங்க அருமையிருக்கு 

போட்டி முடியும்வரை செய்திகள் இத்திரியில் தொடர்ந்து தொகுத்து வழங்கப்படும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

பிரேசில் கால்பந்து போட்டியை தொடங்கி வைக்கும் முடக்குவாத நோயாளி

Post by soplangi on Wed Jun 11, 2014 2:08 pm

32 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் 12ம் தேதி (நாளை) பிரேசில் நாட்டில் தொடங்குகிறது. இந்த போட்டியை நடத்த அந்நாட்டு அரசு ரூ.84 ஆயிரம் கோடி செலவழித்து உள்ளது. வேறு எந்த உலக போட்டியிலும் இவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டது இல்லை. இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3450 கோடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தியுள்ள பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் வரலாற்று சிறப்பு மிக்க இந்த கால்பந்து போட்டியை தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'மீண்டும் நடக்க தொடங்குங்கள்' (வாக் அகைய்ன்) என்ற திட்டத்துக்காக உலகின் தலைசிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் 'எக்ஸோ ஸ்கெலிட்டன்' என்ற செயற்கை கால்களை உருவாக்கியுள்ளனர்.

மூளையின் கட்டளைக்கேற்ப செயல்படும் வகையில் மிக நுட்பமான மெல்லிய செயற்கை தோலையும் இணைத்து இந்த மாற்றுக் கால்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வகை செயற்கை கால்களை பொருத்திய ரோபோக்களின் மூலம் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் தோன்றும் உணர்வுகளின்படி இந்த அதிநவீன செயற்கை கால்கள் செயல்படுகின்றன.

இவ்வகையிலான செயற்கை கால்களை பொருத்திய பிரேசில் நாட்டை சேர்ந்த சிலருக்கு வழங்கப்பட்ட நீண்ட கால பயிற்சியின் பலனாக, மூளையின் கட்டளைக்கேற்ப செயற்கை கால்கள் துல்லியமாக செயலாற்றுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாளை தொடங்கவிருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியை இவர்களில் ஒருவர் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.

இதைப்போன்ற வரலாற்று சிறப்புமிக்க ஒரு போட்டியை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் முதல் பந்தை உதைத்து தொடங்கி வைப்பதன் மூலம், அறிவியலின் ஆற்றலை விளங்க வைப்பதுடன் மட்டுமின்றி, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு தன்னம்பிக்கையை விதைக்கவும் முடியும் என்று பிரேசில் அரசு நம்புகிறது.
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Thu Jun 12, 2014 12:50 am

பிரேசில் , குரோஷியாவுடன் பலப்பரீட்சை

சாவ் பாலோ: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலக கோப்பை கால்பந்து தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் சொந்த மண்ணில் களமிறங்கும் பிரேசில் அணி, குரோஷியாவை சந்திக்கிறது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சார்பில் நடத்தப்படும் உலக கோப்பை போட்டி, பிரேசிலில் இன்று துவங்குகிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும், இத்தொடரின் போட்டிகளில் 11 நகரங்களில் நடக்கவுள்ளன.

சர்வதேச தரவரிசையில் 3வது இடத்திலுள்ள 5 முறை உலக சாம்பியன் பிரேசில் அணி, 18வது இடத்தில் இருக்கும் குரோஷியாவை எளிதாக வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், உலக கோப்பை தொடர்களில், போட்டியை நடத்தும் நாடு, துவக்க போட்டிகளில் இதுவரை தோற்றதே கிடையாது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற போதும், சொந்த மண்ணில் சாதிக்கும் நோக்கத்துடன் களமிறங்கும் பிரேசில் அணிக்கு, நட்சத்திர வீரர் நெய்மர் கைகொடுப்பார் என்று தெரிகிறது.

இதுகுறித்து டேனி ஆல்வ்ஸ் கூறுகையில்,‘‘ குரோஷியாவுக்கு எதிரான முதல் போட்டி கடினமானது. இதில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். எங்களால் முடிந்தவரை சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்,’’ என்றார்.

குரோஷியா எப்படி:

குரோஷிய அணியை பொறுத்தவரையில் கடந்த நவம்பர் மாதம் ஐஸ்லாண்டு அணிக்கு எதிராக ‘ரெட் கார்டு’ பெற்ற மரியோ மாண்ஜூகிச் பங்கேற்க முடியாதது சோகம் தான். இருப்பினும் கேப்டன் கொவாசிச், இவான் ராகிடிச் உள்ளிட்டோர், பிரேசிலை சமாளிப்பர் என்று நம்பலாம்.

தவிர, கடந்த 13 உலக கோப்பை போட்டிகளில் இந்த அணி, மொத்தம் 11 கோல்கள் தான் எதிரணியை அடிக்கவிட்டுள்ளது. இது பிரேசிலிடம் எடுபடுமா என இன்று பார்க்கலாம்.

துவக்க விழாவில் ஜெனிபர்

உலகக் கோப்பை துவக்கவிழா சாவ் பாலோ நகரில் இன்று நடக்கிறது. 25 நிமிடங்கள் நடக்கும் இவ்விழாவில் 600 கலைஞர்கள் திறமை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். இவர்கள் அந்தரத்தில் பறப்பது, ஜிம்னாஸ்டிக்ஸ், பாரம்பரிய நடனம், பிரேசில் டிரம்ஸ் இசை உள்ளிட்ட பல திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.

இந்திய நேரப்படி இரவு 11.45 மணி என்றாலும், பிரேசில் நேரப்படி மதியம் 3.15 மணி என்பதால், வாணவேடிக்கை, ‘லேசர் ஷோ’ போன்றவை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, அமெரிக்காவின் பிரபல பாடகி ஜெனிபர் லோபஸ், பாடகர் பிட்புல் மற்றும் பிரேசில் பாப் பாடகி கிளாடியா லெய்ட்டே இணைந்து, ‘ வி ஆர் ஒன்...’ எனத் துவங்கும் ‘பிபா’ தொடரின் அதிகாரப் பூர்வ பாடலை பாடவுள்ளனர்.

இதன் உச்சபட்சமாக, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர், ரோபோ போன்று இரும்பு உடை அணிந்து, பந்தை உதைத்து போட்டியை துவக்கி வைக்கிறார்.

வெற்றி உறுதி

கடந்த 1950ல் சொந்தமண்ணில் நடந்த முதல் உலக கோப்பை தொடரில் பிரேசில் அணி, தனது முதல் போட்டியில் மெக்சிகோவை 4–0 என, வீழ்த்தியது.

* 1998ல் நார்வே அணிக்கு எதிரான லீக் போட்டியில் 1–2 என, தோற்றது பிரேசில். இதன் பின் பங்கேற்ற உலக கோப்பை தொடர்களில், 9 லீக் போட்டிகளில், 8ல் வென்றது. ஒரு போட்டி ‘டிரா’ ஆனது.

யார் ஆதிக்கம்

பிரேசில், குரோஷிய அணிகள் 2006 உலக கோப்பை தொடரில் லீக் போட்டியில் மோதின. இதில் 1–0 என, பிரேசில் வென்றது.

* 2005ல் இரு அணிகள் மோதிய ‘நட்பு’ போட்டி 1–1 என்ற கணக்கில் ‘டிரா’ ஆனது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Thu Jun 12, 2014 1:09 am

இன்று FIFA 2014 உலகக் கோப்பை துவக்கவிழா!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Thu Jun 12, 2014 6:57 pm

முதல் ஆட்டத்தில் பிரேசில்-குரேஷியா மோதல்

சாவோ பாவ்லோவில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் பிரேசிலும், குரேஷியாவும் மோதுகின்றன.

சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் களமிறங்கும் பிரேசில் அணி, குரேஷியாவை வீழ்த்தி வெற்றியோடு போட்டியை தொடங்குவதில் தீவிரமாக உள்ளது. சர்வதேச தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் குரேஷியா, சர்வதேச தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் பிரேசிலுடன் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

பிரேசில் அணி எவ்வித சிரமமுமின்றி எளிதாக வெற்றி கண்டு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப் படுகிறது. பிரேசில் அணிக்கு முன்கள வீரர்கள் நெய்மர், பிரெட், மிட்பீல்டர்கள் ஆஸ்கர், வில்லியன், கேப்டன் தியாகோ சில்வா ஆகியோர் மிகப்பெரிய பலமாகத் திகழ் கின்றனர். குரேஷிய அணியைப் பொறுத்த வரையில் லூகா மோட்ரிக், இவான் மோசினிச் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர்.

போட்டி நேரம்: அதிகாலை 1.30

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Thu Jun 12, 2014 6:58 pm

சாதனையை நோக்கி மிராஸ்லாவ் க்ளோஸ்

ஜெர்மனியின் ஸ்டிரைக்கர் மிரோஸ்லாவ் க்ளோஸ் இதுவரை 2002, 2006, 2010 ஆகிய 3 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 14 கோல்களை அடித்துள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் பிரேசிலின் ரொனால்டோவுக்கு (15 கோல்கள்) அடுத்தபடியாக 2-வது இடத்தில் மிராோஸ்லாவ் க்ளோஸ், இந்த உலகக் கோப்பையோடு விடைபெறவுள்ளார். கடைசி உலகக் கோப்பையில் விளையாடும் 36 வயது க்ளோஸ் இரு கோல்களை அடித்து ரொனால்டோவின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Thu Jun 12, 2014 6:59 pm

ரூ.3,400 கோடி பரிசுத் தொகை

உலகக் கோப்பை போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.3,400 கோடியாகும். சாம்பியனாகும் அணிக்கு ரூ.207 கோடியும், 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.148 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Thu Jun 12, 2014 6:59 pm

பிரேசிலின் கனவு நனவாகுமா?

பிரேசில் இதுவரை 5 முறை உலகக் கோப்பையை வென்றுவிட்டாலும், சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் உலக சாம்பியன் ஆனதில்லை. இதற்கு முன்னர் 1950-ல் உலகக் கோப்பை போட்டியை நடத்திய பிரேசில், அதில் இறுதிச்சுற்று வரை முன்னேறி உருகுவேயிடம் தோல்வி கண்டது. எனவே சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்லாத குறையை இந்த முறை தீர்த்துவிட வேண்டும் என்பதில் பிரேசில் அணி தீவிரமாக உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Thu Jun 12, 2014 7:00 pm

சென்னையில் மாதிரி உலகக் கோப்பை

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு அதேபோன்று மாதிரி உலகக் கோப்பை போட்டி சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

பச்சையப்பாஸ் ஹாரிங்டன் கால்பந்து அகாடமி மற்றும் சென்னை கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெறும் இந்த போட்டியில் உலகக் கோப்பை போட்டியின் சின்னத்தைக் குறிக்கும் வகையிலான 15 கிலோ எடை கொண்ட கேக் வெட்டப்படுகிறது. அதைத்தொடர்ந்து பிரேசில்-குரேஷியா என பெயர் சூட்டப்பட்ட இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது. பிரேசில் அணிக்காக பச்சையப்பாஸ் அகாடமி வீரர்கள் ஆடுகின்றனர். இந்த அணிக்கு நடிகர் ஆர்யா கேப்டனாக உள்ளார். குரேஷிய அணிக்காக ஊடக அணியினர் ஆடுகிறார்கள். இதுதவிர உலகக் கோப்பையைக் குறிக்கும் வகையில் 4 அஞ்சல் தலைகள் வெளியிடப்படுவதோடு, பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்களும் கௌரவிக்கப்படுகிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Thu Jun 12, 2014 7:00 pm

இதுவரை சாம்பியன்கள்:

1930: உருகுவே

1934: இத்தாலி

1938: இத்தாலி

1950: உருகுவே

1954: மேற்கு ஜெர்மனி

1958: பிரேசில்

1962: பிரேசில்

1966: இங்கிலாந்து

1970: பிரேசில்

1974: மேற்கு ஜெர்மனி

1978: அர்ஜென்டீனா

1982: இத்தாலி

1986: அர்ஜென்டீனா

1990: மேற்கு ஜெர்மனி

1994: பிரேசில்

1998: பிரான்ஸ்

2002: பிரேசில்

2006: இத்தாலி

2010: பிரேசில்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by சிவா on Fri Jun 13, 2014 12:15 am

கோலாகலமாகத் துவங்கிவிட்டது உலகக்கோப்பை!

இன்னும் ஒரு மணி நேரத்தில் முதல் ஆட்டம் ஆரம்பம்!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum