ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழரின் தொன்மை
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

புதிய சமயங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 ரா.ரமேஷ்குமார்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

ஒரு சந்தேகம்??
 மூர்த்தி

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பூவரசம் பீப்பீ - விமர்சனம்

View previous topic View next topic Go down

பூவரசம் பீப்பீ - விமர்சனம்

Post by சிவா on Thu Jun 05, 2014 4:18 amநடிகர் : கௌரவ், பிரவீன், வசந்த்
நடிகை : வர்ஷினி
இயக்குனர் : ஹலிதா சமீம்
இசை : அருள்தேவ்
ஓளிப்பதிவு : மனோஜ் பரமஹம்சா


பசங்க, கோலிசோடா படங்களின் வரிசையில் மீண்டும் பசங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் பூவரசம் பீப்பீ.

ஆறாம் வகுப்பு முடித்துவிட்டு ஆண்டு விடுமுறையை ஜாலியாக பொழுதை போக்குகிறார்கள் மூன்று நண்பர்கள்(கபில்தேவ், ஆண்டனா, வேணுக்கண்ணா). ஒருநாள் திடீரென்று ஊரில் அடை மழை பெய்கிறது. இந்த நேரத்தில் சலவை தொழிலாளியின் மனைவியை சில அடையாளம் தெரியாத நபர்கள் பலாத்காரம் செய்வதை இந்த சிறுவர்கள் தொலைவில் இருந்து பார்க்கிறார்கள். மறுநாள் அந்த பெண் ஆற்றங்கரையில் பிணமாக கிடக்க, உண்மை தெரியாத ஊர் மக்கள் ஆற்று வெள்ளத்தில் சிக்கி இறந்துவிட்டதாக நம்பி விடுகிறார்கள். ஆனால், அந்த பெண் கொலை செய்யப்பட்டதை அறிந்த மூன்று சிறுவர்கள் கொலையாளிகளைக் கண்டுபிடித்து, உண்மையை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? இதனால் சிறுவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு வருகிறதா? என்பதே படத்தின் மீதிக் கதை.

தேவையற்ற பரபரப்பை கூட்டாமல் போதுமான படபடப்புடன் இடைவேளை வரை சீட்டின் நுனிக்கு நம்மை கொண்டு செல்கிறது இந்த கில்லி பயல்களின் சாகசங்கள். ஆனால் அதற்குப்பிறகு எப்.எம். ரேடியோ சீன்கள் அதிகம் ஆக்ரமிப்பதால் விறுவிறுப்பு குன்ற துவங்குகிறது. மற்ற தமிழ் படங்களைப்போலவே பள்ளிக்கால காதலை காட்டி இருப்பது திருஷ்டி. அதே சமயம் தனது தோழிக்காக மரத்தில் காத்தாடிகளை கட்டும் வேணுவின் அன்பு ரசனை.

படத்தின் கதாநாயகர்களாக வலம்வரும் கௌரவ் (வேணுகண்ணா), பிரவீன் (ஆண்டனா), வசந்த் (கபில்தேவ்) மூன்று பேரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படி இருக்கிறது. சிறுமியாக வரும் வர்ஷினி (லாலிபப்) முகபாவனைகளில் பெரிய நடிகளை மிஞ்சிவிட்டார் அப்படி ஒரு எக்ஸ்பிரஷன்.

மற்றும் காளி, சாய்ஹரி, சுந்தர், கார்த்திக் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்கள்.

மனோஜ் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒவ்வொரு காட்சியும் ரசிக்க முடிகிறது. குறிப்பாக மழை காட்சிகளிலும் இறுதிகட்ட காட்சிகளிலும் பிரமிக்க வைக்கிறார் கேமரா மேன் மனோஜ். அருள்தேவின் இசையில் பாடல்களும், பிண்ணனி இசையும் படத்திற்கு வலுசேர்க்கிறது.

புதுமுக இயக்குனராக வந்திருக்கும் ஹலிதா சமீம்மின் கதையும், திரைக்கதையும் ஒரு அனுபவசாலியை போல் காட்சியளிக்கிறது. ஆனால் வசனத்தில் சற்று கவனம் செலுத்திருக்கலாமா என தோன்றுகிறது, முகத்தை சுளிக்க வைக்கும் ஒரு சில வசனங்கள்.

மொத்ததில் இன்றைய குழந்தைகளின் அறிவுத்திறமையும், தவறை தட்டி கேட்க வயது முக்கியமல்ல என்பதையும் அருமையாக சொல்லியிருக்கும் படம் இந்த பூவரசம் பீப்பீ.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பூவரசம் பீப்பீ - விமர்சனம்

Post by சிவா on Thu Jun 05, 2014 4:19 am

பூவரசம் பீப்பீ விமர்சனம் - இந்து டாக்கீஸ் குழு

வளரிளம் பருவச் சிறுவர்களை வயதுக்கு மீறிய குணங்களைக் கொண்டவர்களாக, பிஞ்சில் பழுத்தவர்களாகச் சித்தரிப்பது அதிகரித்துவருகிறது. க்ரைம் த்ரில்லர் படமான ‘பூவரசம் பீப்பீ’யும் இந்த வகைக்குள் அடங்கும் படம்தான்.


கோவை மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த ஒரு கிராமம். இங்கிருந்து நகரில் சென்று படிக்கும் ஐந்து பேர் கோடை விடுமுறையைக் கொண்டாட்டமாகக் கழிக்கிறார்கள். இவர்கள் அனைவருமே பத்து, பன்னிரெண்டு வயதினர். இவர்களில் முதல் மூன்று சிறுவர்களும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் கொட்டும் மழையில் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு பாலியல் வன்முறைக் குற்றத்தை நேரடியாகப் பார்க்கிறார்கள். மிருகத்தனமான இந்தச் செயலால் அந்தப் பெண் இறந்துவிடுகிறாள். ஆனால், ஆற்று வெள்ளத்தில் அந்தப் பெண் பலியாகிவிட்டதாக ஊர் நம்புகிறது. ஆனால் அது ஆற்றின் குற்றமல்ல, குற்றத்தை இழைத்தவர்கள் அதே ஊரைச் சேர்ந்த நான்கு பேர் என்பது அவர்களுக்குத் தெரியவருகிறது. சரியான ஆதாரத்துடன் அவர்களை போலீஸில் சிக்க வைக்க இந்தக் குழு என்ன செய்தது என்பதுதான் திரைக்கதை.

குற்றப் பின்னணி கொண்ட கதையைக் குழந்தைகளுடன் இணைத்து அதை த்ரில்லராக திரைக்கதை அமைத்த விதத்தில் இயக்குநர் கவனத்தைக் கவர்கிறார். தங்களிடம் கிடைக்கும் பழைய ராணுவ ரேடியோ ஒன்றை வைத்துக்கொண்டு அவர்கள் இந்தக் குற்றத்தை அம்பலப்படுத்தும் திட்டமும் அதைத் திரையில் காட்டியிருக்கும் விதமும் புதுமை, விறுவிறுப்பு. சிறார்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று சித்தரித்த விதத்தைப் பாராட்டலாம். கூகிள் உட்படப் பல அம்சங்களும் திரைக்கதையில் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

குடிகாரரின் பையன் படும் வேதனையைச் சித்தரித்த விதம் மனதைத் தொடுகிறது. +2 மாணவன் பீர் பாட்டிலை வாங்கி வயிற்றில் மறைத்து எடுத்துவரும்போது, அவன் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வயிற்றைக் கிழித்துக்கொள்ள, “நான் செத்தாலும் பரவாயில்லை... பாட்டில் குத்திச்சுன்னு சொல்லிடாதீங்கடா, எங்க அப்பாவுக்கு பெரிய அவமானம்” என்று அவன் கெஞ்சும் காட்சியில் யதார்த்தம் முகத்தில் அறைகிறது. அதேபோல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கவனமாகக் காய் நகர்த்திச் சமூக விரோதிகளை போலீஸில் சிக்க வைப்பதில் படம் சுவையாக நகர்த்தப்படுகிறது.

பதின்பருவத்தின் தொடக்கத்தில் காலடி வைக்கும் சிறார்கள் குழந்தைப் பருவத்துக்கும் இளமைப் பருவத்துக்கும் இடையிலான ஊடாட்டத்தில் நிற்பவர்கள். இவர்களைத் திரைப்படங்களில் முதன்மைக் கதாபாத்திரங்களாகக் கையாளும்போது ஒரு இயக்குநர் மிகுந்த கவனத்தோடும் பொறுப்புணர்வோடும் செயல்பட வேண்டும்.

விடலைப் பருவக் குறுகுறுப்பு என்பதைத் தாண்டி, வயது வந்தவர்களுக்கான காதல் உணர்ச்சிகளைக் கொண்டவர்களாகவே இந்தப் படத்தில் சிறுவர்கள் காட்டப்படுகிறார்கள். வயது வந்தவர்கள் காதல் விவகாரங்களில் நடந்துகொள்ளும் விதத்தையே இவர்களும் பின்பற்றுவதாகக் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநரான ஹலிதா ஷமீம். இப்படி முழுக்க முழுக்க வயதுக்கு வந்தவர்களின் பார்வையுடன் விடலைச் சிறுவர்களைச் சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.

கதையுடன் கொஞ்சமும் தொடர்பற்ற இந்து - இஸ்லாமியக் கலவரம் ஒன்றை அனிமேஷன் குறும்படம்போல சித்தரித்திருப்பதும் தேவையற்ற திணிப்பு. அனாவசியமான பல காட்சிகளால் படம் தொய்வடைவதைத் தவிர்த்திருக்கலாம்.

விறுவிறுப்பான திரைக்கதை, மனோஜ் பரமஹம்சாவின் தரமான ஒளிப்பதிவு, சிறுவர்களின் முதிர்ச்சியான நடிப்பு, புத்துணர்ச்சியுடன் ஒலிக்கும் அருள்தேவின் இசை, பின்னணி இசை ஆகியவற்றைப் பாராட்டத் தக்க அம்சங்களாகக் குறிப்பிடலாம். திரைக்கதையைக் கையாண்ட விதமும் நன்று. ஆனால், பெண் இயக்குநருக்கான தனி அடையாளம் எதையும் பார்க்க முடியவில்லை.

திரைக்கதை உள்ளிட்ட பல அம்சங்கள் கவர்ந்தாலும் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளில் சிறுவர்களைப் பொருத்தியிருப்பதால் பூவரசம் பீப்பீயின் ஒலியை ரசிக்க முடியவில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பூவரசம் பீப்பீ - விமர்சனம்

Post by சிவா on Thu Jun 05, 2014 4:46 am

பூவரசம் பீப்பீ - தினத்தந்தி விமர்சனம்

சிறுவர்களை முக்கிய கதாபாத்திரங்களாக கொண்ட கதை.


கவுரவ், பிரவீன், வசந்த் ஆகிய மூன்று பேரும் பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் நண்பர்கள். மூன்று பேரும் ஒரு மழை பெய்யும் மாலைப்பொழுதில் ஆற்றில் குளித்து விளையாடுகிறார்கள். அப்போது, தூரத்தில் நான்கு பேர் ஒரு பெண்ணை பலவந்தமாக மறைவான இடத்துக்கு தூக்கி வருகிறார்கள். அங்கு அவளை கற்பழித்து கொன்று, உடலை ஆற்றில் வீசி விடுகிறார்கள். இதை மூன்று சிறுவர்களும் பார்த்து விடுகிறார்கள். மறுநாள் காலை போலீஸ் வருகிறது. அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, நடந்தது ஒரு விபத்து என்று வழக்கை முடித்து விடுகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட பெண், ஒரு சலவை தொழிலாளி. அவளுடைய கணவர் ஊனமுற்றவர். ஒரு மகள் இருக்கிறாள். கொலையாளிகள் நான்கு பேரையும் போலீசில் சிக்க வைக்க மூன்று சிறுவர்களும் ஆதாரங்களை தேடுகிறார்கள். அவர்களை பயமுறுத்தினால், குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள்.

முதலில், ஒரு பெண்ணின் சடலம் போல் பொம்மையை தயார் செய்து ஆற்று வெள்ளத்தில் மிதக்க விடுகிறார்கள். அதைப்பார்த்து கொலையாளிகள் மிரளுகிறார்கள். அடுத்து, அந்த நான்கு பேரையும் பேய் துரத்துவது போல் ‘செட்–அப்’ செய்து பயமுறுத்துகிறார்கள். இதன் மூலம் கொலையாளிகள் யார்–யார்? என்ற உண்மை வெளிப்படுகிறது.

அடுத்தகட்டமாக, மூன்று சிறுவர்களும் ‘பீப்பீ எப்.எம்.’ என்ற ரேடியோ மூலம் கொலையை பற்றியும், கொலையாளிகள் பற்றியும் போலீசுக்கு தகவல் கொடுக்கிறார்கள். கொலையாளிகள் நான்கு பேரும் கைது செய்யப்படுகிறார்கள்.

கவுரவ், பிரவீன், வசந்த் மூன்று பேரும் பொருத்தமான தேர்வு. இவர்களுக்குள் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகளும், பிறகு சமாதானமாகி நட்பு மேலும் இறுகுவதும் ரசிக்கும்படி இருக்கிறது. அவர்களின் காதல்தான் முகம் சுளிக்க வைக்கிறது.

சிறுவர்கள் மூன்று பேரும் பொம்மையை கயிற்றில் கட்டி, பேய் போல் நடக்க வைப்பதும், அதைப்பார்த்து கொலையாளிகள் நான்கு பேரும் மிரண்டு ஓட்டம் பிடிப்பதும், திகில். சலவை தொழிலாளியின் அடையாள குறியீடை வைத்து குற்றவாளியை கண்டுபிடிப்பதும், ரிமோட்டில் இயங்கும் ஹெலிகாப்டரை பயன்படுத்தி குற்றவாளிகளை படம்பிடிப்பதும், அவர்களின் பேச்சை பதிவு செய்வதும், சூப்பர் டெக்னிக்.

மிலிட்டரி தாத்தா ராணுவ ரேடியோவை எப்படி தன் வீட்டுக்குள் கொண்டுவர முடியும்? என்ற ‘லாஜிக்’ இடித்தாலும், அந்த ரேடியோதான் கதைக்கு திருப்பமாக அமைகிறது.

கவுரவ், பிரவீன், வசந்த் ஆகிய சிறுவர்களுடன் வர்ஷினி, அகல்யா என்ற சிறுமிகளும் நடித்து இருக்கிறார்கள். வில்லன்களில், காளி ஒருவரை தவிர மற்றவர்கள் புதுமுகங்கள்.

இடிமுழக்கத்துடன் கூடிய பெருமழையை பதிவு செய்த விதத்தில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும், இசையமைப்பாளர் அருள்தேவும், பளிச். ஹலிதா ஷமீம் டைரக்டு செய்து இருக்கிறார். மூன்று சிறுவர்கள் மூலம் ஒரு குற்ற பின்னணி கதையை விறுவிறுப்பாக சொல்லியிருப்பதுடன், சிறுவர்களின் பிரச்சினைகளையும் மிக தெளிவாக அலசி இருக்கிறார், டைரக்டர்.

சிறுவர்களின் காதலும், அவர்கள் சம்பந்தப்பட்ட காதல் பாடலும் தேவையா? அந்த காட்சிகளை கத்தரித்து இருந்தால், படத்தின் நீளமும் குறைந்திருக்கும். ஒரு கருத்துள்ள படத்தை பார்த்த திருப்தியும் கிடைத்திருக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பூவரசம் பீப்பீ - விமர்சனம்

Post by ரா.ரா3275 on Thu Jun 05, 2014 10:40 am

ஒளிப்பதிவுதான் இந்தப் படத்தின் ஆகப்பெரிய அசாத்திய-அசத்திய தூண்...மிக மிக சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்டாலும் பெரிய படம்போல காட்டியிருந்தனர்...மெனக்கெடல்தான் அந்தக் குழுவின் ஆதார ஸ்ருதி...
    
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பூவரசம் பீப்பீ - விமர்சனம்

Post by சிவா on Fri Jun 06, 2014 3:13 am

@ரா.ரா3275 wrote:ஒளிப்பதிவுதான் இந்தப் படத்தின் ஆகப்பெரிய அசாத்திய-அசத்திய தூண்...மிக மிக சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்டாலும் பெரிய படம்போல காட்டியிருந்தனர்...மெனக்கெடல்தான் அந்தக் குழுவின் ஆதார ஸ்ருதி...
    


படம் என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டது ரா.ரா!
பெரிய பட்ஜெட்டில் படங்களெல்லாம் இதுபோன்ற சாதாரண பட்ஜெட் படங்களிடம் தோற்றுப் போவது மக்களின் ரசனை மாற்றத்தைக் குறிக்கிறது. பாராட்டப்பட வேண்டிய மாற்றம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பூவரசம் பீப்பீ - விமர்சனம்

Post by ரா.ரா3275 on Fri Jun 06, 2014 4:03 pm

@சிவா wrote:
@ரா.ரா3275 wrote:ஒளிப்பதிவுதான் இந்தப் படத்தின் ஆகப்பெரிய அசாத்திய-அசத்திய தூண்...மிக மிக சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்டாலும் பெரிய படம்போல காட்டியிருந்தனர்...மெனக்கெடல்தான் அந்தக் குழுவின் ஆதார ஸ்ருதி...
    


படம் என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டது ரா.ரா!
பெரிய பட்ஜெட்டில் படங்களெல்லாம் இதுபோன்ற சாதாரண பட்ஜெட் படங்களிடம் தோற்றுப் போவது மக்களின் ரசனை மாற்றத்தைக் குறிக்கிறது. பாராட்டப்பட வேண்டிய மாற்றம்!
மேற்கோள் செய்த பதிவு: 1067825

கண்டிப்பாக சிவா.மணிவண்ணன் சார் சின்னப்படம் பெரியபடம்கறது பட்ஜெட்ல இல்ல.சப்ஜெக்ட்ல இருக்குன்னு.அது உண்மைதான்.
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பூவரசம் பீப்பீ - விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum