ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன்
 T.N.Balasubramanian

கனி...!
 ந.க.துறைவன்

அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்!
 T.N.Balasubramanian

மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களுக்கு சங்கம் தொடங்க தடை ஏன் விதிக்கக்கூடாது?
 சிவனாசான்

புதுவையில் இருந்து சென்னைக்கு ஆகஸ்டு மாதம் முதல் கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்து தொடங்கும்
 சிவனாசான்

சுய அறிமுகம்--கேசவன்
 பாலாஜி

ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
 பாலாஜி

ருத்ரவீணை  பாகம்  3 & 4 pdf  கிடைக்குமா ?
 karthikeyan M

  தனியாக வளர்ந்த மரம் – கவிதை
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ரொம்ப அஹிம்சா வாதி...
 ayyasamy ram

மருத்துவம் படிக்க விண்ணப்ப வினியோகம் கடைசி நாள் ஜூலை 8-ந்தேதி
 ayyasamy ram

'செட்-டாப் பாக்ஸ்' ஒரு மாதம் அவகாசம்
 ayyasamy ram

மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
 ayyasamy ram

6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
 ayyasamy ram

வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
 ayyasamy ram

சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
 ayyasamy ram

எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
 ayyasamy ram

அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
 ayyasamy ram

பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் விளக்கு எரிவது ஏன்?
 ayyasamy ram

ரேஷன் கார்டு கதைகள்…!
 பாலாஜி

பிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம்.
 பாலாஜி

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
 பாலாஜி

காலண்டர் பொன்மொழிகள்
 சிவனாசான்

ஷீரடி பாபா – ஆன்மிக சிந்தனை
 சிவனாசான்

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 சிவனாசான்

தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
 சிவனாசான்

ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி மே.வங்க ஆளுநருக்கு நீதிபதி கர்ணன் மனு
 சிவனாசான்

தஞ்சையின் பழைய புகைப்படங்கள்
 sugumaran

திடுக்கிட வைக்கும் `டெக்னாலஜி’ பயங்கரம்
 ayyasamy ram

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
 ayyasamy ram

தமிழ்நாட்டில் கூகுள்?
 T.N.Balasubramanian

நாவல்கள்தலைப்பு
 raja_krmgroups

விகடன் சிறுகதைகள் 2011 மற்றும் 2012
 raja_krmgroups

தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
 ayyasamy ram

என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
 ayyasamy ram

நடிகை அம்பிகாவின் மகன் சினிமாவில் நடிக்கிறார்
 ayyasamy ram

கற்பூர வள்ளி’னு பெயர் வெச்சுட்டார்...!!
 ayyasamy ram

தூக்கத்திலும் தனியா புலம்பறாரா..?!
 ayyasamy ram

செல்லம்….சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி! –
 ayyasamy ram

ஆன்மீக அமுதம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
 ayyasamy ram

கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
 ayyasamy ram

ரன் குவிப்பில் இந்திய கிரிக்கெட் அணி புதிய உலக சாதனை
 ayyasamy ram

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 karthikeyan M

ரமலான் நல் வாழ்த்துக்கள்!
 அ.இராஜ்திலக்

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 senbills

ஆண்களின் வாழ்க்கை தேடல்..
 ayyasamy ram

படமும் செய்தியும்!
 ayyasamy ram

அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
 ayyasamy ram

இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.
 ayyasamy ram

லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ஹரி சேதுபதி

ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம்
 T.N.Balasubramanian

பஜ்ஜிக்கு உப்பு பத்தலை...!
 ayyasamy ram

சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
 ayyasamy ram

கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
 ayyasamy ram

திரைத் துளிகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இணையத்தில் இரசித்த,சிந்திக்க வைத்த காணொளிகள்.
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கிரிக்கெட் செய்திகள்

View previous topic View next topic Go down

கிரிக்கெட் செய்திகள்

Post by சிவா on Tue Jun 10, 2014 4:47 pm

முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸை வாட்டி வதைத்த நியூசிலாந்து

கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 508 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் 2ஆம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.

2ஆம் நாளான நேற்று 240/2 என்று துவங்கியது நியூசிலாந்து. கேன் வில்லியம்சன் 105 ரன்களுடனும், டெய்லர் 34 ரன்களுடனும் துவங்கினர்.

வில்லியம்சன் 113 ரன்கள் எடுத்து சுலைமான் பந்தில் பவுல்டு ஆனார். 55 ரன்கள் எடுத்த ராஸ் டெய்லர் ஷில்லிங்போர்ட் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

கேப்டன் மெக்கல்லம் இறங்கி 7 ரன்களில் சுலைமான் பென்னிடம் வீழ்ந்தார். 279/5 என்று ஆனது நியூசீலாந்து.

அதன் பிறகுதான் வெஸ்ட் இண்டீஸுக்கு தலைவலி துவங்கியது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் சதம் எடுத்த ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் மற்றும் விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆகியோர் இணைந்தனர்.

மட்டைக்குச் சாதகமான ஆட்டக்களத்தில் இவர்கள் இருவரும் அபாரமாக ஆடினர். இதில் யாராவது ஒருவரை உடனடியாக வீழ்த்தியிருந்தால் 350 ரன்களுக்குள் நியூசீலாந்தை அடக்கியிருக்கலாம். ஆனால் விதி யாரை விட்டது.

அடுத்த 60 ஓவர்களுக்கு விக்கெட்டே விழவில்லை. ஜேம்ஸ் நீஷம் 107 ரன்களை விளாச, வாட்லிங் 89 ரன்களை எடுத்தார். இருவரும் இணைந்து 6வது விக்கெட்டுக்காக 201 ரன்களைச் சேர்க்க ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் கையை விட்டுச் சென்றது.

கிறிஸ் கெய்ல் விளையாடும் 100வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் இனி வெல்வது கடினம். மேலும் தோற்காமல் இருந்தால் சரி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தன் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் கண்ட 8வது வீரர் என்ற பெருமையை எட்டினார் ஜேம்ஸ் நீஷம். மொத்தம் 174.3 ஓவர்கள் வீசி நொந்து நூலானது வெஸ்ட் இண்டீஸ். கடைசியில் டிம் சவுதீ இறங்கி 7 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க மெக்கல்லம் டிக்ளேர் செய்து வெஸ்ட் இண்டீஸுக்கு பரிவு காட்டினார்.

அதன் பிறகு கெய்ல், போவெல் ஜோடி இறங்கி 9 ஓவர்களைத் தாக்குப் பிடித்து விக்கெட் இழக்காமல் 19 ரன்கள் எடுத்தனர்.

கெய்ல் 100வது டெஸ்ட்டில் சதம் எடுப்பாரா இன்று என்பதே இந்த டெஸ்ட் போட்டியில் எஞ்சியுள்ள ஒரே சுவாரசியம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by சிவா on Tue Jun 10, 2014 4:49 pm

ஐசிசி-யை பிசிசிஐ மிரட்டியதாகக் கூறியது பெரிய நகைச்சுவை என்கிறார் முன்னாள் ஐசிசி தலைவர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் சஞ்சய் படேல் ஐசிசியை தங்கள் வழிக்குக் கொண்டுவர இன்னொரு ஐசிசி-யை அமைப்போம் என்று மிரட்டியதாகக் கூறியிருப்பது பெரிய நகைச்சுவை என்று முன்னால் ஐசிசி தலைவர் ஈஷான் மானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் கூறுகையில்,

“நான் எனது சொந்த அனுபவத்திலிருந்து ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறேன். நான் ஐசிசி தலைவராக இருந்தபோது ஒரு நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐசிசி நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டோம் என்று அச்சுறுத்தியது. நான் அப்போது ஐசிசி-யின் மற்ற வாரிய உறுப்பினர்களை ஒன்று சேர்த்தேன், இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் நாட்டு வாரியங்களும் உண்டு. இவர்களிடம் நிலைமை பற்றி பேசினேன், அதன் பிறகு இவர்களே அந்த குறிப்பிட்ட கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி-யின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்க முடியும் என்றும் உங்கள் இஷ்டத்திற்கு முறித்துக் கொள்ள முடியாது என்றும் அறிவுறுத்தினர்.

மற்ற உறுப்பினர்கள் இவ்வாறு திட்டவட்டமாகக் கூறியவுடன் ‘அந்தக் குறிப்பிட்ட நாட்டு கிரிக்கெட் வாரியம்’தன் நிலையை உணர்ந்து கொண்டது” என்றார்.

மேலும், இப்போது தான் ஐசிசி தலைவராக இருந்திருந்தால், பிசிசிஐ மிரட்ட்லை எப்படி எதிர்கொண்டிருப்பார் என்று கூறினார் அவர். முதலில் அதன் நிலைப்பாடு என்ன என்பதை எழுத்தில் கேட்டிருப்பார் என்றும், மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் உறுதியாக இருக்கச் செய்து பிசிசிஐ-யின் மிரட்டலை ஒன்றுமில்லாதது என்று அவர் உலகிற்கு எடுத்துக் காட்டியிருப்பார் என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வாரியங்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மிரட்டியதை உண்மையென நினைத்து பதட்டம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆட்டத்தின் நன்மையையே பெரிதாகக் கருதியிருக்க வேண்டும். மாறாக அவர்களும் சேர்ந்து கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மோசமான ஒன்றைச் செய்துள்ளனர்.

இந்திய மக்கள் பிசிசிஐ-யின் இந்தச் செயல்பாட்டை ஏற்கப்போவதில்லை. கிரிக்கெட் உலகிற்கு நிறைய வருவாயை இந்திய கிரிக்கெட் ஈட்டித் தருகிறது என்பது உண்மைதான், ஆனால் உலக கிரிக்கெட்டின் அந்த வருவாய்களுக்கு பிசிசிஐ தங்களை ஏதோ முதலாளிகள் போல் கருதுவதை இந்திய மக்கள் ஏற்கமாட்டார்கள். இந்தியா ஒரு மிகப்பெரிய நாடு. இந்தியா நன்றாக விளையாட வேண்டும் என்றே அவர்கள் விரும்புவர்.

இந்திய கிரிக்கெட்டிற்கு ஸ்பான்சர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் பெரிய வருவாயை ஈட்டித் தருகின்றனர். இதற்கும் பிசிசிஐ-க்கும் என்ன தொடர்பு? இந்திய கிரிக்கெட் பெரிய அளவுக்கு வருவாயைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்பதை நான் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறேன், ஆனால் அது பிசிசிஐ-யின் பணம் அல்ல.

70% வருவாய் இந்தியா மூலம் வருகிறது என்று கூறுகிறார் சஞ்சய் படேல் ஆனால் இந்தியா தொடர்ந்து ஜிம்பாவே, வங்கதேசம், நியூசீலாந்திலாந்து ஆகிய அணிகளுடன் ஆடினால் வருவாய் வந்து விடுமா? ஆகவே உயர்மட்ட அணிகளுக்கிடையே போட்டிகள் நடந்தால்தான் வருவாயும் குவியும். ஆகவே இந்திய கிரிக்கெட் அதிக வருவாயைக் கொண்டு வருகிறது என்றால் அது ஒருவழிப்பாதையல்ல அது இருவழிப்பாதை.

இவ்வாறு கடும் விமர்சனப்பார்வையை முன் வைத்துள்ளார் ஈஷான் மானி.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by சிவா on Sat Jun 14, 2014 2:57 am

இந்திய-வங்கதேச ஒருநாள் தொடரை தொலைக்காட்சியில் பார்க்க முடியுமா?

ஜூன் 15ஆம் தேதி தொடங்கும் இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சியில் நேரலையாகக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த 3 போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை வங்கதேசத்தின் காஸி டிவி வாங்கியுள்ளது. இவர்கள் எந்த ஒரு இந்தியத் தொலைக்காட்சி நிறுவனத்துடனும் ஒளிபரப்பு ஒப்பந்தத்தில் இதுவரை ஈடுபடவில்லை.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மட்டும் ஆர்வம் காண்பித்தது. ஆனால் அது ரூ.5 கோடி மட்டுமே 3 போட்டிகளுக்கும் அளிப்பதாகக் கூறியுள்ளது.

இந்தத் தொகை நிச்சயம் குறைவானது என்று காஸி டிவி கருதுகிறது. சோனி தொலைக்காட்சி நிறுவனம் இந்தத் தொடரில் ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் அது ஃபீபா உலகக் கோப்பை கால்பந்து ஒளிபரப்பு உரிமைகளை வாங்கியுள்ளது. அதனால் இந்தக் கிரிக்கெட் தொடர் நேரடி ஒளிபரப்பிற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறிவிட்டது.

இது குறித்து காஸி தொலைக்காட்சி அதிகாரி சலாஹுதீன் சவுத்ரி கூறுகையில், “ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மிகக் குறைந்த தொகைக்கு கேட்கிறது. பிசிசிஐ-க்கும் நியோ ஸ்போர்ட்ஸ் மற்றும் டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கும் பிரச்சனைகள் இருப்பதால் அவர்களுக்கு உரிமைகளை நாங்கள் விற்க முடியாது. ஆகவே அடுத்த 2 நாட்களில் ஏதாவது நடந்தால்தான் இந்திய ரசிகர்கள் இந்தப்போட்டிகளை நேரலையாகக் காண முடியும்”என்கிறார்.

உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் நாங்கள் ஒளிபரப்பாளர்களை முடிவு செய்துவிட்டோம், இந்தியாவில் மட்டும் இன்னும் முடியவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by சிவா on Sat Jun 14, 2014 2:57 am

200 ரன்கள் அடித்தார் ஜோ ரூட்; இங்கிலாந்து 575 ரன்கள் குவிப்பு

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 575 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

அந்த அணியின் இளம் வீரர் ஜோ ரூட் 200 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இரட்டைச் சதம் எடுக்கும் 3வது இளம் இங்கிலாந்து வீரர் ஆவார் இவர்.

மேலும் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸில் எடுக்கும் அதிகபட்ச ரன்கள் இது என்பது குறிப்பிடத் தக்கது.

முதல் நாளில் எடுத்த 344/5 என்ற ரன்களுடன் இன்று துவங்கியது இங்கிலாந்து. முதலில் 400 ரன்களை எட்டியது. சுமார் 27 டெஸ்ட் இன்னிங்ஸ்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி 400 ரன்களைப் பார்த்துள்ளது.

உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து ஆக்ரோஷமாக அதிரடியாட்டம் ஆடியது. இலங்கை பந்து வீச்சை மெதுவாக்கினாலும் 24 ஓவர்களில் 129 ரன்களை உணவு இடைவேளை வரை அடித்து நொறுக்கியது.

ஸ்டூவர்ட் பிராட் 38 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். இதில் 9 பவுண்டரிகள். பிளன்கெட் 39 ரன்களை எடுத்தார். ஜோ ரூட் உணவு இடைவேளைக்கு சற்று முன்னர் 150 ரன்களை எட்டினார்.

பெல் விக்கெட்டை நேற்று வீழ்த்தும்போது இங்கிலாந்து 120/4 என்று தட்டுத் தடுமாறியது. அதிலிருந்து ஆட்டத்தின் பிடியை இழந்தது இலங்கை. பிரையரை 86 ரன்கள் அடிக்கவிட்டது பெரும் தவறாக முடிந்தது. பிரையரும், ஜோ ரூட்டும் இணைந்து 40 ஓவர்களில் 171 ரன்களைச் சேர்த்தனர்.

இன்று 402/7 என்று ஆன போதும், பின்கள வீரர்களை விரைவில் வீழ்த்தமுடியாமல் இலங்கைத் திணறியது. அதன் பலன் ஜோ ரூட்டின் இரட்டைச் சதம் மற்றும் கடைசி 3 விக்கெட்டுகள் சேர்ந்து 173 ரன்களைச் சேர்த்ததும் ஆகும்.

இலங்கை தரப்பில் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, எரங்கா 163 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இடது கை ஸ்பின்னர் ரங்கன்னா ஹெராத்திற்கு நேரம் சரியில்லை. அவர் 37 ஓவர்களில் 136 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இலங்கை முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது. கருணரத்னவும், ஜே.கே.சில்வாவும் களமிறங்கியுள்ளனர்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by சிவா on Sat Jun 14, 2014 2:58 am

எங்களுக்கு நெருக்கடி ஒன்றுமில்லை-சுரேஷ் ரெய்னா

வங்கதேசத்திற்கு எதிராக நடைபெறும் 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் இந்திய அணிக்கு எந்த ஒரு நெருக்கடியும் இல்லை என்று கேப்டன் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இன்று கொல்கத்தா வந்த சுரேஷ் ரெய்னா தி டெலிகிராப்பிற்கு கூறுகையில், “ஒரு நெருக்கடியும் இல்லை, நாங்கள் உண்மையில் மகிழ்ச்சியுடன்தான் வங்கதேசத்தை எதிர்கொள்கிறோம், சில வீரர்களுக்குத் தங்களை நிரூபிக்க இந்தத் தொடர் ஒரு அருமையான சந்தர்ப்பம்.

சிறிது உடற்பயிற்சியில் ஈடுபடவுள்ளதாகக் கூறிய ரெய்னா, சவுரவ் கங்கூலியை சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

ஐபிஎல் போட்டிகள் முடிந்தவுடன் குடும்பத்துடன் காஷ்மீர் சென்றதாகவும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே சென்றதாகவும் அவர் கூறினார். இது புத்துணர்வுட்டுவதாக உள்ளது என்கிறார் சுரேஷ் ரெய்னா.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by சிவா on Sat Jun 14, 2014 2:59 am

2015 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறும் 2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளது.

2015 உலகக்கோப்பை ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி ஜான் ஹார்ன்டென் இது குறித்துக் கூறியதாவது:

பிப்ரவரி 15ஆம் தேதி அடிலெய்டில் நடைபெறும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

ஆஸ்திரேலியா ஒரு பெரிய பன்முகக் கலாச்சார நாடு. எப்போதுமே நான் இந்தியா, பாகிஸ்தான் விளையாடும் ஆட்டத்தை நேரில் காண்பேன்.

அதுபோலவே இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அவர்கள் சொந்த நாட்டில் இந்தப் போட்டியைப் பார்ப்பது போன்ற சூழலை உருவாக்குவோம்.

உலகின் சிறந்த போட்டித் தொடரான உலகக் கோப்பையை நடத்துகையில் நகரங்களை உயிரோட்டமாகச் செய்ய வேண்டியது எங்கள் கடமை. என்றார் அவர்.

2015, பிப்ரவரி 14ஆம் தேதி தொடக்கப் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியையும், நியூசிலாந்து, இலங்கையையும் எதிர்கொள்கிறது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by பாலாஜி on Sat Jun 14, 2014 7:36 pm

கலக்குங்க தல .....

இங்கே கிரிக்கெட் ,அங்கே கால்பந்து பற்றிய திரி அருமை தல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19753
மதிப்பீடுகள் : 3922

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by சிவா on Sun Jun 15, 2014 11:55 pm

ரஹானே, உத்தப்பா அபாரம்: வங்கதேசத்தை வென்றது இந்தியா

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி 273 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால், வெற்றி இலக்கு 26 ஓவர்களில் 150 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

ரஹானே மற்றும் உத்தப்பாவின் அபார ஆட்டத்தின் துணையுடன், இந்திய அணி 24.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சுரேஷ் ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணிக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி இது.

துவக்க ஆட்டக்காரர் உத்தப்பா 44 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். ரஹானே 70 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். புஜாரா ரன் ஏதும் எடுக்கவில்லை. ராயுடு ஆட்டமிழக்காமல் 16 ரன்களும், சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 15 ரன்களும் எடுத்தனர்.

முன்னதாக, இந்திய - வங்கதேச அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தின் மிர்பூரில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்தது.

ரஹீம், ஹசன் ஆகியோரின் அரைசதங்களின் துணையுடன், இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் 272 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், இந்தியாவுக்கு 273 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க வீரர் தமீம் இக்பால் ரன் ஏதும் எடுக்காத நிலையில், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான அனாமுல் ஹக்-குடன் ஜோடி சேர்ந்த மொமினுல் ஹக் 6 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர், அனாமுல் ஹக் - கேப்டன் முஷ்திவிகர் ரஹீம் இணை நிதானமாக பேட் செய்து, அணியை சரிவில் இருந்து மீட்டது. அனாமுல் ஹக் 44 ரன்களையும், ரஹீம் 59 ரன்களையும் எடுத்தனர்.

ஷாகிப் அல் ஹசனும் சிறப்பாக பேட் செய்து 52 ரன்கள் எடுத்து, வங்கதேச அணிக்கு உறுதுணை புரிந்தார். நாசர் ஹுசைன் 22 ரன்களைச் சேர்த்தார். ஜியாஹுர் ரஹ்மான் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். முஷாரப் மோர்டஸா 18 ரன்களில் அவுட் ஆனார். அப்துல் ரஸாக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 16 ரன்கள் எடுத்தார்.

இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரெசூல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அக்‌ஷர் படேல் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

கேப்டன் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட 7 முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் சுரேஷ் ரெய்னா தலைமையில் களமிறங்கியிருக்கிறது இந்திய அணி.

ராபின் உத்தப்பா, மனோஜ் திவாரி, பர்வீஸ் ரசூல், அக்ஷர் படேல், கேதார் ஜாதவ் ஆகியோர் தங்களின் திறமையை நிரூபிக்க இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பை போட்டியில் கழற்றி விடப்பட்ட ரெய்னா, ஐபிஎல் போட்டி யில் அபாரமாக ஆடியதன் மூலம் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிக ரன் குவித்தவரான உத்தப்பா இந்தத் தொடரில் சிறப்பாக ஆடும்பட்சத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷிகர் தவண் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by சிவா on Tue Jun 17, 2014 12:20 am

91 பந்துகளில் 295 ரன்கள்: அயர்லாந்தில் ராய் சில்வா சாதனை

அயர்லாந்து உள்நாட்டு அணிக்கு விளையாடிய இலங்கையைச் சேர்ந்த ராய் சில்வா 40 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 91 பந்துகளில் 295 ரன்கள் விளாசியுள்ளார்.

ராய் சில்வா, இவருக்கு வயது 34. கடந்த ஆண்டு வரை இவர் கொழும்பு கிரிக்கெட் கிளப் அணிக்கு விளையாடியவர். இவர்தான் 40 ஓவர் போட்டி ஒன்றில் 91 பந்துகளில் 295 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

அயர்லாந்து உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ஓ’நீல்ஸ் அல்ஸ்டர் ஷீல்ட் தொடரில் கிளெண்டர்மாட் அணிக்கு ராய் சில்வா விளையாடினார்.

கிளிஃப்டன்வில் அணிக்கு எதிராக இவர் ஆடிய இந்த ஆட்டத்தில்தான் 91 பந்துகளில் 295 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 11 பவுண்டரிகள், 34 சிக்சர்கள் அடங்கும். அதாவது 248 ரன்களை இவர் பவுண்டரி வாயிலாக எடுத்துள்ளார்.

இவரது அணியான கிளெண்டர்மாட் 40 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 462 ரன்கள் எடுத்தது. சதத்தை 27 பந்துகளில் எடுத்த இவர் அடுத்த 64 பந்துகளில் 195 ரன்களை விளாசியுள்ளார்.

இவர் 13 ஆண்டுகளாக முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கதுசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by சிவா on Tue Jun 17, 2014 10:00 pm

வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட்: இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டிக்கான இந்திய அணியில் பர்வேஸ் ரசூல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்ற வங்கதேச அணி இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. அதன் படி துவக்க வீரர்களாக உத்தப்பாவும், ரகானேவும் களமிறங்கினர். முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்து ரகானே வெளியேற மூன்றாவது விக்கெட்டுக்கு புஜாரா களமிறங்கினார். இருவரும் வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை சந்திக்க சிரமப்பட்டனர். இந்த நிலையில் 6வது ஓவரின் போது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.

மழை நின்ற பின் ஆட்டத்திற்கான ஓவர்கள் 41 ஆக குறைக்கப்பட்டது. பின்னர் ஆட்டத்தின் 8வது ஓவரில் 14 ரன்களை எடுத்திருந்த உத்தப்பா டஸ்கின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

பின்னர் நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ராயுடு வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். இதனால் ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டன் ரெய்னா களமிறங்கினார். அவர் மட்டுமே வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை அடித்து ஆடினார். இந்த நிலையில் ஆட்டத்தின் 14வது ஓவரில் புஜாரா டஸ்கின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழக்க கேப்டன் ரெய்னா மட்டும் 27 ரன்கள் குவித்து ரன் அவுட்டானார். கடைசியாக களமிறங்கிய உமேஷ் யாதவ் மட்டும் சற்று ஆறுதல் தரும் வகையில் ஆட்டத்தின் ஒரே ஒரு சிக்சர் அடித்து 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 25.3 ஓவர்களிலேயே இந்திய அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

106 ரன்கள் என்ற இலக்குடன் வங்கதேச அணி ஆட்டத்தை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பாலும், அனாமுல் ஹக்கும் களமிறங்கினர். முதல் ஓவரின் 2வது பந்தில் அவுட்டாகி தமிம் நடையை கட்டினார். 3வது ஓவரில் அனாமல்லும் டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய மிதுன் அலியும், முஷ்பிக்குர் ரஹிமும் சிறிது நேரம் பொறுமையாக விளையாடினார். எனினும் மிதுன் அலி 26 ரன்களுக்கும், ரஹிம் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க வங்கதேச அணி 58 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் ஸ்டூவர்ட் பின்னி 28 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சாளர் மோகித் ஷர்மா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by சிவா on Thu Jun 19, 2014 12:46 am

வங்கதேச கிரிக்கெட் வீரர் மொகமட் அஷ்ரஃபுல்லுக்கு 8 ஆண்டுகள் தடை

வங்கதேச பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதற்காக நட்சத்திர பேட்ஸ்மென் மொகமட் அஷ்ரபுல் விளையாட 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

அவர் மேல் சுமத்தப்பட்ட 4 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை 8 ஆண்டுகள் தடை செய்கிறோம் என்று இதனை விசாரிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் இஸ்லாம் சவுத்ரி தெரிவித்தார்.

இவர் மேலும் தனது தீர்ப்பில் ஒரு மில்லியன் டாக்கா, அதாவது 12,280 அமெரிக்க டாலர்கள், அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி டாக்கா கிளேடியேட்டர்ஸ் அணிக்கும் சிட்டகாங் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் தனது அணி தோற்க அஷ்ரபுல் ஒரு மில்லியன் டாக்கா தொகையை லஞ்சமாகப் பெற்றதாக புகார் எழுந்தது.

பிறகு 10 நாட்கள் கழித்து பரிசால் பர்னர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியையும் அஷ்ரபுல் பிக்ஸ் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஜூன் 4, 2013 அன்று வெளியான செய்திகளின் படி அவர் ‘தேசத்திற்கு நான் இத்தகைய அநீதியைச் செய்திருக்கக்கூடாது, என்னை மன்னித்து விடுங்கள்’ என்றும் கூறியிருந்தார்.

நியூசிலாந்து முன்னாள் வீரர் லூ வின்சென் ட்டிற்கு 3 ஆண்டுகள் தடையும், இலங்கையின் கவுஷல் லொகுராச்சிக்கு ஒன்றரை ஆண்டுகளும் தடை விதிக்கப்பட்டது.

அஷ்ரபுல் விளையாடிய டாக்கா கிளேடியேட்டர்ஸ் அணியின் உரிமையாளர் ஷிகாப் ஜிஷன் சவுத்ரிக்கு 10 ஆண்டுகள் தடையும், 2 மில்லியன் டாக்கா தொகையும் அபராதம் விதிக்கப்பட்டது.

மொகமட் அஷ்ரபுல் 17 வயதில் டெஸ்ட் சதம் எடுத்து 2001ஆம் ஆண்டு வங்கதேசத்தின் இளம் சத வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். மேலும் பல சிறப்பான இன்னிங்ஸ்களை இவர் ஆடியதையும் மறக்க முடியாது. 2007 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இவரது ஆட்டம் இன்றும் பலரது நினைவுகளில் நிற்கும்.

வங்கதேசத்தினால் கொண்டாடப்பட்ட இவர் வங்கதேச பிரீமியர் லீக் இரண்டாவது தொடரில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதோடு சூதாட்டக்காரர்களுக்கும் உதவியிருக்கிறார். இதனை இவரே ஒப்புக் கொண்டும் விட்டார்.

தடை செய்யப்பட்ட இலங்கை வீரர் லொகுராச்சி 31 வயது வீரர். இலங்கைக்காக 4 டெஸ்ட் போட்டிகளிலும் 21 ஒரு நாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by சிவா on Thu Jun 19, 2014 11:22 pm

3-வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து: ஸ்டூவர்ட் பின்னி தொடர் நாயகன்

டாக்காவில் நடைபெற்ற இந்திய, வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. தொடர் நாயகனாக ஸ்டூவர்ட் பின்னி தேர்வு செய்யப்பட்டார்.

டாஸ் வென்ற சுரேஷ் ரெய்னா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். இந்தியா 34.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டது.

மீண்டும் ஆட்டத்தைத் தொடங்க வாய்ப்பு ஏற்படவில்லை. எனவே ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தியா இந்தத் தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

இன்று மீண்டும் பந்துகள் ஸ்விங் ஆகி எழும்பியது. மோர்டசா, அல் அமின் ஹுசைன் மற்றும் இளம் புயல் தஸ்கின் அகமட் ஆகியோர் இந்திய பேட்ஸ்மென்களுக்கு அதிக தொல்லைகளைக் கொடுத்தனர். ராபின் உத்தப்பா 5 ரன் எடுத்து மோர்டசாவின் மிகவும் வெளியே சென்ற பந்தை டிரைவ் ஆட முயன்று ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அல் அமின் ஹுசைன், ரஹானேயிற்கு இங்கிலாந்தில் அவருக்கு என்ன காத்திருக்கிறது என்பதை அறிவுறுத்தும் விதமாக வீசினார். ஒரே ஓவரில் தொடர்ந்து 4 முறை பந்து அவரது மட்டையைக் கடந்து சென்றது. கடுமையாகத் தடுமாறினார் ரஹானே. இவர் வீசிய எழும்பிய பந்து ஒன்று லேசாக வெளியே ஸ்விங் ஆகி பவுன்ஸ் ஆக ரஹானே லெக் திசையில் திருப்பி விட முயன்றார் ஆனால் பந்தோ மட்டையின் வெளி விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது. 18 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த ரஹானேயின் துன்பம் முடிவுக்கு வந்தது.

ராயுடுவுக்குத் துன்பம் கொடுக்க இளம் புயல் தஸ்கின் அகமட் வந்தார். பந்து உள்ளே வந்து எழும்பியது. அவரோ எளிதாக தேர்ட்மேன் திசையில் தட்டிவிடலாம் என்று ஆடினார் ஆனால் கூடுதல் பவுன்ஸினால் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு முஷ்பிகுரிடம் கேட்ச் ஆனது.

மனோஜ் திவாரி வந்தார், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் 2 ரன்களில் அல் அமின் ஹுசைன் பந்தை தேவையில்லாமல் தொட்டு 2வது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 10 ஓவர்கள் முடிவில் இந்தியா 17/4.

கேப்டன் ரெய்னா இறங்கி அல் அமின் ஹுசைனின் ஒரே ஒவரில் 3 பவுண்டரிகளை அடித்து நம்பிக்கை ஊட்டினர். புஜாரா திணறியபடியே அவுட் ஆகாமல் இருந்தார் 37/4 என்ற நிலையில் மீண்டும் மழை வந்தது. பிறகு ஆட்டம் 40 ஓவர்களுக்குக் குறைக்கப்பட்டது.

ரெய்னா 25 ரன்கள் எடுத்து ஷாகிப் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று பந்து கையுறையில் பட்டு லெக் திசையில் கீப்பரிடம் செல்ல முஷ்பிகுர் அபாரமாக கேட்ச் பிடித்தார். புஜாரா கடைசியாக மோர்டசா பந்தை பவுண்டரி அடித்தார். சாஹா இறங்கி இரண்டு பவுண்டரிகளுடன் புத்துயிர் கொடுத்தார். இவரும் 16 ரன்களில் ஷாகிப் பந்தை கட் செய்ய முயன்று பவுல்டு ஆனார்.

அடுத்ததாக 63 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த புஜாரா வேதனை முடிவுக்கு வந்தது. ஷாகிப் பந்து ஒன்று நன்றாகத் திரும்ப புஜாராவின் பின்னங்காலில் பட எல்.பி. ஆகி வெளியேறினார். கடைசியில் அன்று பவுலிங்கில் கலக்கிய ஸ்டூவர்ட் பின்னி இன்று 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இந்தியா 119/9 என்று முடிந்தது.

தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஸ்டூவர்ட் பின்னி கூறுகையில், “எனக்கு இந்த வாய்ப்பை அளித்த எனது அணிக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை, ஆனால் இளம் வீரர்களாக இங்கு வந்து நிரூபித்துள்ளோம். இந்த ஆட்டத்தில் 140 ரன்களுக்குத் திட்டமிட்டோம், 140 ரன்கள் எடுத்தால் சவால் அளிக்கலாம்” என்றார்.

கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறுகையில், “அணியின் ஆட்டம் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன், குறிப்பாக ஸ்டூவர்ட் பின்னி. இவர் மோகித் சர்மா, உமேஷ் யாதவுடன் இணைந்து சிறப்பாக வீசினார். இங்கு ஆசியக் கோப்பை கிரிக்கெட்டிற்கு ஆட வந்தபோது வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமட் எங்களுக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசுவார். இப்போது அவரது பந்து வீச்சைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. உலகக் கோப்பை நெருங்கும் சமயத்தில் வீரர்கள் நல்ல திறமையைக் காண்பித்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by சிவா on Thu Jun 19, 2014 11:23 pm

10 சிறந்த பந்து வீச்சு வரிசையில் என் பெயர் இருப்பது ஆச்சரியமளிக்கிறது - ஸ்டூவர்ட் பின்னி

4 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திச் சாதனை புரிந்த ஸ்டூவர்ட் பின்னி உலகின் முதல் 10 சிறந்த பந்து வீச்சு வரிசையில் இடம்பெற்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

வெற்றி இலக்கான 106 ரன்களை எடுக்க முடியமல் வங்கதேசம் நேற்று 58 ரன்களுக்குச் சுருண்டது. மோகித் சர்மா, பின்னி ஆகியோர் முறையே 4 மற்றும் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பவுலிங் கிரீஸில் வைடாகச் சென்று பந்தை உட்புறமாக ஸ்விங் செய்ததில் நேற்று ஸ்டூவர்ட் பின்னிக்கு விக்கெட்டுகள் விழத்தொடங்கின. ஒரு சில பந்துகள் அதே கோணத்தில் உள்ளே வந்து பிறகு நேராகும் அல்லது வெளியே ஸ்விங் ஆகும். மனோஜ் பிரபாகர் வீசும் முறையை ஒத்திருந்தது பின்னி வீசிய முறை.

அவர் கூறியதாவது:

நேராக வீசி ஸ்விங் செய்வதே எனது பலம். அங்கு சூழ்நிலையும் ஸ்விங்கிற்குச் சாதகமாக இருந்தது. எனவே நான் சிறப்பாக வீசியதில் ஆச்சரியமில்லை, ஆனால் உலகின் முதல் 10 சிறந்த பந்து வீச்சு வரிசையில் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமளிக்கிறது.

105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதினால் துவண்டு போய் விடவில்லை. ஆட்டத்தில் நாம் இல்லை என்ற உணர்வு வரவேயில்லை. இடைவேளையின் போது பேசினோம், குட் லெந்த்தில் வீசி சுலபமான ரன்களை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் போதும் என்று ஆலோசனை செய்தோம் என்று கூறினார் ஸ்டூவர்ட் பின்னி.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by சிவா on Thu Jul 03, 2014 12:32 am

இந்தியாவில் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் 6வது தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் மற்றும் தேதிகள் விரைவில் இறுதி செய்யப்படும் என்று பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி போட்டிகள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை எவ்வாறு அமையும் என்று தெரியாததால் அதனைக் கணக்கில் கொண்டு மைதானங்கள் தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

முன்னதாக ஐபிஎல் முதற்கட்ட போட்டிகள் நடைபெற்ற யு.ஏ.இ.யில் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளை நடத்தலாம் என்று கூறப்பட்டிருந்தது.

சுனில் கவாஸ்கரும் யு.ஏ.இ.-யில் போட்டிகளை நடத்த தனது தனிப்பட்ட விருப்பத்தை ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by பாலாஜி on Thu Jul 03, 2014 1:54 pm

சாம்பியன்ஸ் லீக் 20 தொடரா ... வரட்டும் எவ்வளவு மேட்ச் ஃபிக்சிங் புகார் வந்தாலும் ... நாங்க மேட்ச் பார்ப்பதை விட போவதில்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19753
மதிப்பீடுகள் : 3922

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by சிவா on Tue Jul 22, 2014 12:43 am

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி அபார வெற்றி

லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 295 ரன்களும், இங்கிலாந்து 319 ரன்களும் எடுத்தன. 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி 342 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 319 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், பந்து சூப்பராக ‘ஸ்விங்’ ஆனதால், அதை கணித்து ஆட முடியாமல் சிரமப்பட்டனர். 4-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. அணியின் வெற்றிக்கு இன்னும் 214 ரன்கள் தேவை என்ற சூழலில் இங்கிலாந்து அணி இன்று பேட்டிங் செய்துவிளையாடியது. இந்திய வீரர் இஷாந்த் சர்மாவின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை லார்ச்சில் மைதானத்தில் வீழ்த்தியது. இந்திய வீரர் இஷாந்த் சர்மா 7 விக்கெட்டை வீழ்த்தினார். முகமது சமி மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் சார்பில் ஜோ ரூட் மட்டும் அதிகபட்சமாக 66 ரன்களில் எடுத்தார்.

1932-ம் ஆண்டில் இருந்து 17-வது முறையாக லார்ட்சில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய இந்திய அணி இங்கு ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே (1986-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில்) வெற்றி பெற்றிருந்தது. தற்போது,
லார்ட்சில் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by சிவா on Tue Jul 22, 2014 12:44 am

வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா ஆவேசமாகப் பந்து வீச இங்கிலாந்து 223 ரன்களுக்குச் சுருண்டு 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி தழுவியது. இந்திய வீரர் இஷாந்த் சர்மா 7 விக்கெட்டை வீழ்த்தினார். முகமது சமி மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் சார்பில் ஜோ ரூட் மட்டும் அதிகபட்சமாக 66 ரன்களில் எடுத்தார். 1932-ம் ஆண்டில் இருந்து 17-வது முறையாக லார்ட்சில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய இந்திய அணி இங்கு ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே (1986-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில்) வெற்றி பெற்றிருந்தது. தற்போது, லார்ட்சில் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.

லார்ட்சில் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டூவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி " லார்ட்சில் நடைபெற்ற டெஸ்டில் அற்புதமான வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். சிறந்த செயல்பாட்டால் நாம் மிகவும் மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைந்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by பாலாஜி on Tue Jul 22, 2014 12:39 pm

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19753
மதிப்பீடுகள் : 3922

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by சிவா on Tue Aug 19, 2014 9:33 pm


இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரையும் கேப்டனையும் நீக்க வேண்டும்: வலுக்கிறது எதிர்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பிளட்சர், கேப்டன் டோனி ஆகியோரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 1–3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

4 ஆவது மற்றும் 5ஆவது டெஸ்டில் இந்திய அணி 3 ஆவது நாளுக்குள் இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது. லண்டன் ஓவலில் நடந்த கடைசி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்கள் வித்தியாசத்தில் படு மோசமான நிலையில் தோல்வியடைந்தது.

கடந்த 40 ஆண்டுகளில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் கண்ட கேவலமான தோல்வி இது. இதற்கு முன்னர் 1958 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 336 ரன்கள் வித்தியாசத்திலும், 1974 ஆம் ஆண்டில் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 285 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்வியும் இந்திய அணியின் மிகவும் மோசமான டெஸ்ட் தோல்விகளாகும்.

இந்திய அணி தற்போது அடைந்துள்ள அவமானகரமான தோல்விக்கு முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் கூறுகையில், “கடினமான லார்ட்ஸ் பிட்ச்சில் இந்திய அணி வென்ற பிறகு பயிற்சியாளர் பிளட்சர் என்ன செய்தார். அணியின் பிரச்சினையை தீர்க்கும் திறமை அவரிடம் இல்லை. பிளட்சர் பயிற்சியாளர் பதவியில் இருந்து செல்ல வேண்டும் என்பது தான் எனது கருத்தாகும்.

டோனி தனது பேட்டிங் நுணுக்கத்தை மாற்றி நன்றாக பேட்டிங் செய்தாலும், கேப்டன் பதவியில் ஏன்? அவர் ஆட்ட நுணுக்கத்தை மாற்றி செயல்படவில்லை. பீல்டிங்கில் ‘தேர்டு மேனை’ நிறுத்தாததால் அந்த இடத்தில் பாதிக்கு மேல் ரன்கள் சென்றன.

அணி தேர்விலும் கேப்டன் சரியாக முடிவு எடுக்கவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் இருந்தே அஸ்வினை அணியில் சேர்த்து இருக்க வேண்டும். அப்படி செய்யாதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் குண்டப்பா விஸ்வநாத் கூறுகையில், “கீப்பிங் மற்றும் கேப்டன் பதவியில் டோனியில் செயல்பாடு எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.

அவர் எப்பொழுதும் அதிசயம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறார். அதிசயங்கள் எப்பொழுதும் நடக்காது. எப்போதாவது ஒரு நேரம் தான் அதிசயம் நடக்கும்“ என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரசன்னா கூறுகையில், “இந்திய அணிக்கு பயிற்சியாளர் பிளட்சரின் பங்களிப்பு பெரிய ஜீரோ என்று நான் அடித்து சொல்வேன்“ என்று கூறியுள்ளார்.

முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், “பிளட்சர் அணிக்கு எந்தவித பங்களிப்பையும் செய்யவில்லை“ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்து ஊடகங்கள் இந்திய அணியையும், வீரர்களையும் ஏளனம் செய்துள்ளன. இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய அணியை கடுமையாக கிண்டல் செய்துள்ளார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by பாலாஜி on Tue Aug 19, 2014 9:49 pm

தொடரின் ஓபனிங் நல்லா இருந்தது ஆனா பினிஷிங் சரியில்லையே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19753
மதிப்பீடுகள் : 3922

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by சிவா on Mon Jan 19, 2015 12:37 am

இந்தியாவை தடுமாறி வீழ்த்தியது ஆஸ்திரேலியா

முத்தரப்பு ஒருநாள் தொடரின் 2-வது போட்டியில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. வெற்றி இலக்கான 268 ரன்களை அந்த அணி 49 ஓவர்களில் சற்று தடுமாறியே எட்டியது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் - ஃபின்ச் ஜோடி சிறப்பான துவக்கத்தைத் தந்தனர். 9-வது ஓவரிலேயே ஆஸி. 50 ரன்களை எட்டியது. ஆனால் 10-வது ஓவரில் வார்னர் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வாட்சனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வேகமாக ரன் குவித்து வந்த வாட்சன் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த ஃபின்ச் 80 பந்துகளில் அரை சதம் எட்டினார்.

தொடர்ந்து ஆடிய ஸ்மித் - ஃபின்ச் ஜோடி பார்ட்னர்ஷிப்பில் 101 ரன்களைக் குவித்தது. ஆஸி. அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்து கொண்டே வந்தது. 40-வது ஓவரில் ஷமியின் பந்தில் ஸ்மித் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ஃபின்ச் 96 ரன்களுக்கு உமேஷ் யாதவ்வின் வேகத்தில் வீழ்ந்து சதத்தை தவறவிட்டார்.

அஸ்வினின் சுழலில,் வந்த வேகத்திலேயே 5 ரன்கள் மட்டுமே எடுத்து பெய்லி பெவிலியன் திரும்ப, ஆஸி. 230 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து களத்தில் இணைந்த ஹாட்டின், மேக்ஸ்வெல் ஜோடியே ஆஸி. வெற்றி வழிவகுக்க வேண்டும் என்ற நிலையில், மேக்ஸ்வெல் அஸ்வின் வீசிய ஓவரில் 11 ரன்கள் குவித்தார்.

36 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உமேஷ் யாதவ் வீசிய 45-வது ஓவரில் 1 ரன் மட்டுமே வந்தது. அடுத்த அக்சர் படேல் ஓவரில் 6 ரன்கள் வர புவனேஸ்வர் குமார் வீசிய 47-வது ஓவரில் முதல் 2 பந்துகளில் ரன் எடுக்க முடியாமல் போன மேக்ஸ்வெல், 3-வது பந்தில் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு அந்த ஓவரில் ரன் ஏதும் வராமல் போக 18 பந்துகளில் 20 ரன்கள் தேவை என்று நிலை மாறியது

அக்சர் படேல் வீசிய 48-வது ஓவரிலும் ஆஸி. வீரர்கள் ரன் சேர்க்க திணறினர். மேலும் 5 ரன்கள் மட்டுமே வர 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. 6 பந்துகளை சந்தித்தும் ரன் ஏதும் எடுக்காமல் இருந்த ஃபால்க்னர், 49-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். முக்கியமான 4 ரன்களை ஃபால்க்னர் சேர்க்க, அடுத்த இரண்டு பந்துகளில் ஹாட்டின் ஒரு பவுண்டரி எடுத்தார். 8 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட, ஆஸ்திரேலியா வெற்றிக்கு அருகில் சென்றது.

49-வது ஓவரின் கடைசி பந்தில் ஃபால்க்னர், பந்தை மீண்டும் பவுண்டரிக்கு விரட்ட, ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கைக் தாண்டியது. இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸி. எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையில் இருந்து, கடைசி ஓவர்களில் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு உருவானது. ஆனால் இந்திய அணியால் அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனது. கடைசி ஓவர்களில் இருந்த சிறப்பான பந்துவீச்சு ஆரம்பத்திலேயே இருந்திருந்தால் கண்டிப்பாக இந்தியா இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கலாம் என்பது கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்து.

இந்த முத்தரப்புத் தொடரின் அடுத்த ஆட்டத்தில் இந்திய இங்கிலாந்தை ஜனவரி 20-ஆம் தேதி சந்திக்கிறது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by சிவனாசான் on Mon Jan 19, 2015 5:04 am

ஏன் சடுகுடு கபடி செய்திகள் காணாமல் போனது..........அப்படி என்ன கிரி கெட்(ட) செய்தி...?????
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2686
மதிப்பீடுகள் : 965

View user profile

Back to top Go down

Re: கிரிக்கெட் செய்திகள்

Post by ayyasamy ram on Mon Jan 19, 2015 5:16 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29932
மதிப்பீடுகள் : 8397

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum