ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 M.Jagadeesan

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

வெறுப்பா இருக்கு!
 ayyasamy ram

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உன் சமையலறையில் - திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

உன் சமையலறையில் - திரை விமர்சனம்

Post by சிவா on Tue Jun 10, 2014 4:55 pm


நடிகர் : பிரகாஷ் ராஜ்
நடிகை : சினேகா
இயக்குனர் : பிரகாஷ்ராஜ்
இசை : இளையராஜா
ஓளிப்பதிவு : ப்ரீதா
சமையலில் இருக்கும் பேரார் வத்தால் உருவாகும் காதல், வாழ்க்கையின் யதார்த்தங்களுடன் பயணித்து எப்படி இணைகிறது என்பது தான் உன் சமையல் அறையில். மலை யாளத்தில் ஆஷிக் அபு இயக்கத்தில் 2011-ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘சால்ட் அண்ட் பெப்பர்’ படத்தின் ரீமேக் கான இந்தப் படத்தை பிரகாஷ்ராஜ் இயக்கியிருக்கிறார்.

தொல்பொருள் ஆய்வாளரான காளி தாசன் (பிரகாஷ்ராஜ்) நடுத்தர வய தைக் கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். தூரத்து உறவுக்காரரான வைத்தியுடன் (இளங்கோ குமரவேல்) வசித்துவரும் காளிதாசன், பயங்கரமான சாப்பாட்டுப் பிரியர். எந்த அளவிற்கு என்றால் திரு மணத்திற்காகப் பெண் பார்க்கச் சென்ற வீட்டின் சமையல்காரர் கிருஷ்ணா (தம்பி ராமைய்யா) சுவையாக சமைக் கிறார் என்பதற்காகத் தன் வீட்டிற்கு அழைத்து வரும் அளவிற்கு உணவு மீது காதல்.

ஒரு தவறான தொலைபேசி அழைப் பால் காளிதாசிற்கு டப்பிங் கலைஞரான கௌரி (ஸ்நேகா) அறிமுகமாகிறார். ஆரம்பத்தில் படுமோசமாகச் சண்டை யிட்டுக்கொள்பவர்கள், உணவு மீது இருக்கும் அதீத ஆர்வத்தால் பேசத் தொடங்குகிறார்கள். தொலைபேசியில் மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர்கள், ஒரு கட்டத்தில் நேரில் சந்திக்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.

ஆனால், திருமண வயது என்று கருதப்படும் வயதைக் கடந்துவிட்ட இருவருக்குமே தங்கள் தோற்றத்தினால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. இதனால் காளிதாசன் தன் அக்கா மகன் நவீனையும் (தேஜஸ்), கௌரி தன் அறைத் தோழி மேக்னாவையும் (சம்யுக்தா) முதல் சந்திப்பிற்கு அனுப்புகிறார்கள். இதனால் குழப்பம் ஏற்படுகிறது.

குழப்பம் தீர்ந்து காதலர்கள் இணைந் தார்களா, நவீனும் மேக்னாவும் என்ன ஆனார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

முகம் சுளிக்காமல் அனைவரும் பார்க் கும்படியான படங்களை மட்டுமே கொடுப்பேன் என்பதை மீண்டும் ஒரு முறை காட்டியிருக்கிறார் பிரகாஷ் ராஜ். உணவு சார்ந்த ரசனையை மையமாக வைத்து மென்மையான ஒரு காதல் கதையைச் சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால் படத்தின் முதல்பாதி திரைக்கதையில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைகிறது. திரைக்கதைக்குத் தொடர்பு இல்லாத பழங்குடிகளின் பிரச்சினை யைக் கையில் எடுத்திருப்பது, ஊர்வசி, ஐஸ்வர்யா என முக்கியத்துவம் கொடுக்கப்படாத ஏகப்பட்ட கதாபாத்தி ரங்கள் என பிரகாஷ்ராஜ் தன் சமையலைச் சொதப்பியிருக்கிறார்.

நவீன்-மேக்னா காதல் காட்சிகளில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. படத்தின் இரண்டாம் பாதி தொய்வடைந்ததில் இவர்கள் இருவரின் நடிப்பிற்கும் பெரும் பங்கிருக்கிறது. இரண்டாம் பாதி யில் வரும் இரண்டு பாடல்கள் தேவையில்லாத வேகத் தடைகள்.

இந்தப் படத்தில் உணவு ஒரு முக்கியக் கதாபாத்திரம் என்று சொல்லு மளவுக்கு உணவுக்கான இடம் அழுத்த மாகவும் ரசனைக்குரியதாகவும் இருக் கிறது. பெண்களுக்குத் திருமணம் தாமதமானால், சுற்றி இருப்பவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை சினேகாவின் அழுகை உணர்த்துகிறது.

மலையாளத்தின் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ ஹிட்டானதற்கு முக்கியக் காரணம் அந்தப் படத்தின் திரைக்கதையி லும் நடிப்பிலும் இருந்த யதார்த்தம். அதைத் திரையில் கொண்டுவருவதில் பிரகாஷ் ராஜுக்கு வெற்றி கிடைத்திருப்ப தாகச் சொல்ல முடியவில்லை.

படத்தோடு ஒன்றிவிடச் செய்கிறது ப்ரீத்தாவின் ஒளிப்பதிவு. சமையல் செய்யும் போதும், முதல் பாடலிலும் ஒளிப்பதிவு அற்புதம். நம் வீட்டு சமயலறையில் நம்மை அமரவைத்து விதவிதமாகப் பரிமாறுகிறது இவரது ஒளிப்பதிவு.

பெண் பார்க்கப் போகும் இடத்தில் வடையை ருசிப்பது, கேக் செய்து ருசித்து சாப்பிடுவது என விளம்பரங்களில்கூட யாரும் இவ்வளவு நடித்திருக்க மாட் டார்கள். அந்தளவிற்குச் சாப்பிடும் முகபாவனைகள், சாப்பாட்டை ருசிக் கும் தன்மை எனப் பாத்திரத்திற்குப் பொருந்தியிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

கண்ணாடி அணிந்த சினேகா, கௌரி பாத்திரத்தில் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். வசனங்கள் பல இடங்களில் பளிச்சிட்டாலும், சில இடங் களில் சகிக்க முடியவில்லை. குறிப் பாக காளிதாசன்-கௌரியின் முதல் தொலைபேசி உரையாடலில் வரும் வசனங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். அந்த உரை யாடலே செயற்கையாக இருந்தாலும், “வா, உன்னை மாங்காய் தின்ன வைக்கி றேன்” என்ற வசனம் எந்த வகையி லும் படத்திற்கு வலுசேர்க்கவில்லை. வரவர, பெண்களை இழிவு செய்யும் வசனங்களைப் படங்களில் இருந்து நீக்குவதற்காகவே தனி தணிக்கைக் குழு அமைக்க வேண்டும் போலிருக்கிறது.

இளையராஜாவின் பின்னணி இசை மட்டுமே படத்தின் ஆறுதலான விஷயங்களில் ஒன்று. கைலாஷ் கெர்ரின் குரலில் ‘இந்த பொறப்புதான்’ பாடல் முணு முணுக்க வைக்கிறது. ‘ஈரமாய் ஈர மாய்’, ‘தெரிந்தோ தெரியாமலோ’ பாடல்களும் காதுகளுக்கு இதமளிக்கின்றன. நடிக்கத் தெரிந்த நடிகர்கள் பலரை அஞ்சறைப் பெட்டியில் வைத்துக் கொண்டு, அவர்களைச் சமையலில் சரியான அளவில் சேர்ப்பதற்கு மறந்திருக்கிறார் இயக்குநர் பிரகாஷ்ராஜ்.

இந்து டாக்கீஸ் குழு


Last edited by சிவா on Tue Jun 10, 2014 9:44 pm; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உன் சமையலறையில் - திரை விமர்சனம்

Post by சிவா on Tue Jun 10, 2014 4:56 pm

உன் சமையலறையில் - மாலைமலர் விமர்சனம்

தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பிரகாஷ் ராஜ், திருமண வயதை தாண்டியும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து வருகிறார். இவர் ருசியான சமையல் மீது ஆர்வம் உடையவர். அதேபோல், திருமண வயதை தாண்டிய சினேகா டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிந்து கொண்டு ஊர்வசி மற்றும் சம்யுக்தா உடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

ஒருநாள் ஊர்வசி, சினேகாவிடம் ஒரு ஓட்டல் போன் நம்பரை கொடுத்து உனக்கு ஏதாவது சாப்பிட வேண்டுமென்றால், இந்த நம்பருக்கு போன் பண்ணி ஆர்டர் பண்ணிக்கொள் என்று சொல்கிறார். சினேகாவும் டப்பிங் பேசிவிட்டு, பசிக்கிறதே என்று ஊர்வசி கொடுத்த நம்பருக்கு போன் செய்கிறார். ஆனால், நம்பர் மாறிப்போய் பிரகாஷ் ராஜூக்கு சென்றுவிடுகிறது. சினேகாவும், ஓட்டல்தான் என்று எண்ணி மளமளவென்று தனது ஆர்டரை சொல்லிவிட்டு போனை கட் பண்ணி விடுகிறார்.

சினேகாவின் இந்த செயலால், செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்கும் பிரகாஷ் ராஜுக்கு, தான் கொடுத்த ஆர்டர் இன்னும் வரவில்லையே என்று சினேகா மறுபடியும் போன் செய்கிறார். இந்த முறை பிரகாஷ்ராஜ் இது ஓட்டல் இல்லை என்று அவரிடம் விளக்க, அதற்கு சினேகா இதை முதலிலேயே சொல்லவேண்டியதுதானே என அவரிடம் சண்டைக்கு போக, இருவருக்கும் வாக்குவாதம் வந்து அது சண்டையில் போய் முடிகிறது.

இந்நிலையில் பிரகாஷ் ராஜ் வீட்டிற்கு அவரது அக்கா பையன் தேஜஸ் வருகிறார். அவரிடம் நடந்த விஷயத்தை பிரகாஷ்ராஜ் விளக்க, பிரகாஷ் ராஜூக்கு தெரியாமலேயே அவருடைய செல்போனில் இருந்து சினேகாவிற்கு ஸாரி என்று மெசேஸ் அனுப்புகிறார் தேஜஸ். இதைபார்க்கும் சினேகாவின் தங்கையான சம்யுக்தா, பதிலுக்கு சினேகாவை பிரகாஷ்ராஜிடம் பேசி சமாதானமாகுமாறு வற்புறுத்துகிறார். அதற்கு சினேகாவும் ஒப்புக்கொண்டு பிரகாஷ் ராஜிடம் போனில் பேசி தான் நடந்துகொண்ட விதத்திற்கு மன்னிப்பு கேட்கிறார். பதிலுக்கு பிரகாஷ் ராஜூம் சினேகாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்.

அதன்பிறகு இருவரும் போன் மூலமாக இவர்கள் காதலை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒருநாள் இருவரும் நேரில் சந்திக்க ஆசைப்படுகின்றனர். இருந்தாலும், ஒருத்தரை ஒருத்தர் தங்கள் வயதையும், தோற்றத்தையும் கருத்தில் கொண்டு நேரில் சந்திக்க பயப்படுகின்றனர். அதற்காக பிரகாஷ் ராஜ் தனது அக்கா பையனான தேஜஸையும், சினேகா தனது தங்கை சம்யுக்தாவையும் அனுப்பி வைக்கிறார்கள்.

சம்யுக்தாவை நேரில் சந்திக்கும் தேஜஸ், அவள்தான் பிரகாஷ்ராஜிடம் இவ்வளவு நாள் பேசியவள் என்று நினைத்துக் கொள்கிறார். அதேபோல், தேஜஸ்தான் இதுநாள்வரை சினேகாவிடம் பேசிக் கொண்டிருந்தவர் என நினைத்துக் கொள்கிறாள் சம்யுக்தா. இருவரும் சந்தித்து பேசிவிட்டு, பிறகு பிரகாஷ் ராஜிடம் சென்று தேஜஸ் உன்னைவிட அவள் வயதில் சிறியவள் என்று கூறுகிறார். அதேபோல், சம்யுக்தாவும் சினேகாவிடம் சென்று அவர் உன்னைவிட வயதில் சிறியவர் என்று கூறுகிறாள்.

இருவரும் தவறுதலாக ஜோடியை தேர்ந்தெடுத்துவிட்டோமா? என மனசுக்குள்ளே எண்ணி புழுங்குகிறார்கள். இதற்கிடையில், இவர்களுக்காக தூதுபோன தேஜஸும், சம்யுக்தாவும் காதலிக்க தொடங்கிவிடுகிறார்கள். ஒருகட்டத்தில், என்ன ஆனாலும் பரவாயில்லை என்று பிரகாஷ்ராஜ் சினேகாவை சந்திக்க நினைக்கிறார். இருவரும் சந்தித்தார்களா? ஒருவரையொருவர் சந்தித்து வாழ்க்கையில் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் பிரகாஷ்ராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் அருமை. தனது அனுபவ நடிப்பால் ஒவ்வொரு காட்சியிலும் மிளிர்கிறார். சினேகா கோபம், விரக்தி, சோகம் என நம்மையும் பரிதாபப்பட வைக்கிறார். திருமண வயதை தாண்டிய பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்திய அமைக்கப்பட்ட காட்சியமைப்புகள் அருமை.

ஆபாசம் இல்லாமல் படத்தை எடுத்ததற்காக இயக்குனர் பிரகாஷ்ராஜூக்கு சலாம் போடலாம். ஆனால், ரசிக்கும்படியான காட்சிகள் இல்லாதது கொஞ்சம் சோர்வாக இருக்கிறது. படத்தின் காட்சிகளில் பெரிய சுவாரஸ்யம் இல்லை. கதையிலும் பெரிய திருப்பங்கள் இல்லாமல் எடுத்திருப்பதும், கதையை மெதுவாக நகர்த்தியிருப்பதும் கொஞ்சம் போரடிக்க வைத்திருக்கிறது.

ஊர்வசி, தம்பி ராமையா, குமரவேல் என காமெடி நடிகர்கள் இருந்தாலும் காமெடி காட்சிகள் இல்லாதது கொஞ்சம் ஏமாற்றமே. தேஜஸ், சம்யுக்தா ஆகியோரின் காதல் காட்சிகளிலும் அழுத்தம் இல்லை.

இளையராஜாவின் பின்னணி இசை படத்தோடு நம்மை ஒன்ற வைத்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம். ப்ரீத்தாவின் ஒளிப்பதிவு காட்சிகள் அமைக்கப்பட்ட விதம் அருமை.

மொத்தத்தில் ‘உன் சமையலறையில்’ சாப்பாட்டில் ருசி கம்மி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உன் சமையலறையில் - திரை விமர்சனம்

Post by krishnaamma on Tue Jun 10, 2014 6:53 pm

ஒ...மோகன் லாலின் 'பெப்பர் அண்ட் சால்ட் ' சக்கை போடு போட்டதாக சொல்லறாங்க, இவங்க ரீ மேக்கில் எங்கே கோட்டை விட்டாங்களோ ? சோகம்
.
பிரகாஷ் ராஜ் என்றதும் பார்க்கணும் என்று நினைத்தேன், ரொம்ப நல்ல நடிகர் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: உன் சமையலறையில் - திரை விமர்சனம்

Post by ரா.ரா3275 on Tue Jun 10, 2014 10:50 pm

@krishnaamma wrote:ஒ...மோகன் லாலின் 'பெப்பர் அண்ட் சால்ட் ' சக்கை போடு போட்டதாக சொல்லறாங்க, இவங்க ரீ மேக்கில் எங்கே கோட்டை விட்டாங்களோ ? சோகம்
.
பிரகாஷ் ராஜ் என்றதும் பார்க்கணும் என்று நினைத்தேன், ரொம்ப நல்ல நடிகர் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1068430

அது மோகன்லால் இல்லை...டைரக்டர்-நடிகர் லால்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: உன் சமையலறையில் - திரை விமர்சனம்

Post by ரா.ரா3275 on Tue Jun 10, 2014 10:55 pm

இயக்கம் வேறு;நடிப்பு வேறு...இரண்டும் எல்லோருக்குமே எம்.ஜி.ஆரைப் போல எல்லா காலத்திலும் வெற்றி அடையாது...
கமலே தோற்றதுதான் அதிகம் இயக்குனராக...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: உன் சமையலறையில் - திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum