ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 ரா.ரமேஷ்குமார்

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 SK

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 ayyasamy ram

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 ayyasamy ram

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 SK

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 ayyasamy ram

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 ayyasamy ram

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

View previous topic View next topic Go down

பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

Post by சிவா on Fri Jun 13, 2014 5:18 pmஈராக் நாட்டில் தீவிரவாதிகள் மேலும் 2 நகரங்களைக் கைப்பற்றி விட்டனர். அவர்கள் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் வான்வழி தாக்குதல் நடத்தலாம் என தெரியவந்துள்ளது.

ஈராக் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக தாக்குதல்கள் தொடுத்து வந்தனர். ஈராக்கிலும், சிரியாவிலும் தங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம்.

இந்த நிலையில் கடந்த 9 ந் தேதி அவர்கள் அதிரடியாக நாட்டின் 2வது பெரிய நகரமான மொசூலை தங்கள் பிடியின்கீழ் கொண்டு வந்தனர். அங்கிருந்து 5 லட்சம் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

தொடர்ந்து முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரித் நகரையும் தீவிரவாதிகள் தங்கள் வசப்படுத்தினர். மேலும் தலைநகர் பாக்தாத்தைக் குறிவைத்து அவர்கள் தெற்கு நோக்கி முன்னேறி வருகின்றனர். இந்த நிலையில், தியாலா மாகாணத்தில் சாதியா, ஜலாலா நகரங்களையும், ஹிம்ரீன் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களையும் அவர்கள் கைப்பற்றி உள்ளனர். அங்கிருந்து அரசுப் படையினர் தங்கள் நிலைகளையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அப்படியே விட்டு விட்டு ஓட்டம் பிடித்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அங்குள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக ஈரான் எல்லையில் உள்ள கானிகின் நகரை நோக்கி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி ஈராக்கில் தீவிரவாதிகளின் கை ஓங்கி வருகிற நிலையில், அந்த நாட்டின் பிரதமர் நூரி அல் மாலிக்கி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்துடன் ரகசியப் பேச்சு நடத்தியுள்ளார். இதையடுத்து ஈராக்கில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம், ஈராக்கில் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தும் யோசனை அமெரிக்காவுக்கு உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், எந்தவொரு வாய்ப்பும் இல்லை என்று கூறிவிட மாட்டேன். ஈராக்கிலும் சரி, சிரியாவிலும் சரி இந்தத் தீவிரவாதிகள் தங்களுக்கு என்று நிலையான இடத்தை உருவாக்கிவிடக்கூடாது. இது தொடர்பாக ஈராக்கியர்களுடன் கலந்தாலோசனை நடந்து வருகிறது. எனவே மிகக்குறுகிய காலத்தில் அங்கு உடனடி ராணுவ நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பதில் அளித்தார். எனவே ஈராக்கில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் வான்வழி தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

Post by சிவா on Mon Jun 16, 2014 12:00 am

ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் அதிரடி, அமெரிக்க போர்க்கப்பல் விரைகிறது

ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் அதிரடி தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இதனால் தீவிரவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி சன்னி முஸ்லிம் தீவிரவாதிகளான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர். அவர்கள் ஈராக்கில் மொசூல், திக்ரித், சாதியா, ஜலாலா, இஷாகி நகர் உள்ளிட்ட நகரங்களை பிடித்தனர். மக்களையும் விரட்டி அடித்தனர். அங்கிருந்து அரசுப் படையினர் தங்கள் நிலைகளையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அப்படியே விட்டு விட்டு ஓட்டம் பிடித்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அங்குள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக ஈரான் எல்லையில் உள்ள கானிகின் நகரை நோக்கி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து தலைநகர் பாக்தாத்தை குறிவைத்து அவர்கள் முன்னேறி வந்தனர். இந்த நிலையில், ஈராக் ராணுவம் சலாலுதீன் மாநிலத்தில் தீவிரவாதிகள் வசமிருந்து இஷாகி உள்ளிட்ட சில பகுதிகளை மீட்டு விட்டது. இதனால் பாக்தாத் நோக்கிய தீவிரவாதிகளின் நகர்தல் வேகம் குறைந்துள்ளது. இதற்கிடையே ஈராக் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பரிசீலித்து வருகிறார்.

இது தொடர்பாக ஈராக் வெளியுறவுத்துறை மந்திரியுடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், ஈராக் தலைவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, நாட்டின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு ஓரணியில் திரண்டால்தான் அமெரிக்காவின் உதவி வெற்றியில் முடியும் என கூறினார். இந்த நிலையில் அமெரிக்காவின் யுஎஸ் ஜார்ஜ் எச் டபிள்யூ புஷ் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஈராக் மீது வான்வழி தாக்குதல் நடத்த வசதியாக பெர்சியா வளைகுடா பகுதிக்கு விரையுமாறு அமெரிக்க ராணுவ மந்திரி சக் ஹேகல் உத்தரவிட்டார். அந்தக் கப்பல் தற்போது பெர்சியா வளைகுடா நோக்கி தனது பயணத்தை தொடங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

Post by சிவா on Mon Jun 16, 2014 4:34 pm

ஈராக்கில் முற்றியது தீவிரவாத தாக்குதல்: ராணுவத்தினர் படுகொலை
பாக்தாத்: ஈராக்கில், ஷியா பிரிவினர் ஆதரவுடன் ராணுவத்துக்கும்  சன்னி பிரிவினருக்கும் இடையே நடைபெறும் மோதல்  தீவிரமடைந்துள்ளது. பிடிபட்ட ராணுவ வீரர்கள் மற்றும் ஷியா  பிரிவினரை, சன்னி பிரிவு தீவிரவாதிகள் ஒட்டுமொத்தமாக சுட்டுக்  கொன்ற சம்பவம் உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஈராக் அதிபர் சதாம் உசேனின் வீழ்ச்சிக்கு பிறகு, ஷியா பிரிவு  தலைவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு அமெரிக்க ராணுவம்  வெளியேறியது. தற்போது சதாம் உசேனின் ஆதரவாளர்களான சன்னி  பிரிவினரின் கை மீண்டும் ஓங்கியுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எல் (இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட த லெவன்ட்)  என்ற படையை உருவாக்கி ஆயுதம் ஏந்தி போராடுகின்றனர். மொசுல்,  திக்ரித் உட்பட பல்வேறு நகரங்களைக் கைப்பற்றிய சன்னி பிரிவினர்  தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறினர். அதைப் கைப்பற்ற  விடாமல் தடுக்க ஷியா பிரிவினர் ஆதரவுடன் ராணுவம் தடுப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மோசூலுக்கு மேற்கே  உள்ள தல்அஃபார் நகரில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான  பீரங்கி தாக்குதல் நடைபெறுகிறது. ராணுவத்தினரிடமிருந்து பறிமுதல்  செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியபடி சன்னி  பிரிவினர் இங்கு முன்னேறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாக்தாத் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றும் முயற்சியை ராணுவம்  தடுத்தி நிறுத்தியுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட  ராணுவத்தினர் மற்றும் ஷியா பிரிவினரை, சன்னி பிரிவினர் சுட்டுக்  கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் பிரச்னையில்  மீண்டும் தலையிட்டு, மீண்டும்   ராணுவத்தை களம் இறக்க அமெரிக்க  அதிபர் ஒபாமா விரும்பவில்லை. இருந்தாலும் விமான தாக்குதல்  நடத்தலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று வளைகுடா பகுதிக்கு  செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

Post by மாணிக்கம் நடேசன் on Mon Jun 16, 2014 4:36 pm

இது ஓயவே ஓயாதா?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4230
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

Post by சிவா on Mon Jun 16, 2014 4:39 pm

@மாணிக்கம் நடேசன் wrote:இது ஓயவே ஓயாதா?

ஓய்ந்த பாடில்லையே! தினமும் குண்டு வெடிப்புகள், மரணங்கள், இப்பொழுது தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

Post by மாணிக்கம் நடேசன் on Mon Jun 16, 2014 4:41 pm

நம்ம என்ன பண்ணமுடியும்?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4230
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

Post by சிவா on Tue Jun 17, 2014 12:05 am

இராக்கின் தல் அஃபார் நகரை கைப்பற்றியது சன்னி முஸ்லிம்கள் படை

இராக் நாட்டில் வடக்கு பிராந்தியத்தில் உள்ள முக்கிய நகரான தல் அஃபாரை இன்று அதிகாலை சன்னி முஸ்லிம்களின் படை கைப்பற்றியது. இத்தகவலை அந்நகரத்தின் மேயர் அப்துல்லா அப்தோல் உறுதிப் படுத்தியுள்ளார்.

அல் தபார் நகரில் 2 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஷியா பிரிவினரும், சன்னி டர்கோமென் பிரிவினரும் அடங்குவர்.

ஏற்கெனவே முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த நகரான தெஹ்ரிக் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சன்னி முஸ்லீமகள் கைப்பற்றிய நிலையில், ஷியா முஸ்லிம்களால் நடத்தப்படும் பிரதமர் நூரி அல் மாலிக்கி தலைமையிலான அரசு முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக் கிழமை) முதல் அல் தபார் நகர் மீது சன்னி முஸ்லிம் படைகள் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இன்று அதிகாலை நகரை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பொதுமக்கள் பலர் கூட்டமாக கூட்டமாக குர்திஸ் படைகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இடங்களுக்கு இடம் பெயர்ந்து விட மேலும் பலர் பீதியில் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளதாக தெரிகிறது.

இராக் நாட்டில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. சன்னி பிரிவைச் சேர்ந்த சதாம் உசேன் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்க ஆதரவு பெற்ற ஷியா பிரிவு அரசு ஆட்சி செய்து வருகிறது.

இந்த அரசை எதிர்த்து சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த “இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அன்ட் தி லெவன்ட்' (ஐஎஸ்ஐஎல்)” என்ற அமைப்பு போரிட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு ஆதரவாக சதாம் உசேன் ஆதரவாளர்கள் மற்றும் இதர சன்னி பிரிவினர் களமிறங்கியுள்ளனர். அல்கொய்தாவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஐஎஸ்ஐஎல் படையினர் நாட்டின் 2-வது பெரிய நகரான மொசுல் உள்பட முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். மொசுல் நகரில், ஷாரியா சட்டத்தை அமல்படுத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎல் படைகள் தலைநகரான பாக்தாதுக்கு மிக அருகில் வந்துவிட்டன. இதனால், தற்போதுள்ள நிலைமையைச் சமாளிக்க முடியாமல் அங்குள்ள அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஐஎஸ்ஐஎல் அமைப்பின் இணையதளத்தில் ஈராக் படையினர் கொல்லப்பட்டு குவியல் குவியலாக குவிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிடப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

Post by சிவா on Thu Jun 19, 2014 12:39 am

இராக்கில் தொடர்ந்து முன்னேறும் தீவிரவாதிகள்: ஏராளமானோர் சுட்டுக் கொலை

இராக் அரசின் அழைப்பை ஏற்று ராணுவப் பயிற்சி பெற கைத்துப்பாக்கியுடன் செல்லும் சிறுவன். படம்: ஏ.எப்.பி.
இராக் அரசின் அழைப்பை ஏற்று ராணுவப் பயிற்சி பெற கைத்துப்பாக்கியுடன் செல்லும் சிறுவன். படம்: ஏ.எப்.பி.

இராக்கின் வடக்குப் பிராந்தியத்தில் பெரும் பகுதியை சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அங்கு அரசுப் படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் ஏராளமானோர் கொல்லப் பட்டனர். நினிவே பிராந்தியத்தின் முக்கிய நகரான தல் அபாரின் பாதிப் பகுதி தற்போது தீவிரவாதிகளின் வசம் உள்ளது.

இந்த நகரில் சுமார் 700 தீவிரவாதிகள் முகாமிட்டிருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக் கின்றனர். பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். இதனி டையே தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பொதுமக்களும் பங்கேற்க இராக் அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதை ஏற்று பெரும்பான்மை ஷியா முஸ்லிம்கள் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென் டகன் வெளியிட்டுள்ள அறிக் கையில், இராக்கில் வசிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப் புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனிடையே இராக் அரசியல் நிலவரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஈரானுடன் இணைந்து இராக் தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

Post by சிவா on Thu Jun 19, 2014 12:48 am

இராக்கில் இந்தியக் கட்டுமானத் தொழிலாளர்கள் 40 பேர் கடத்தல்

இராக்கில் உள்ள மொசூல் நகரில் துருக்கிய கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய தொழிலாளர்கள் 40 பேர் கடத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் இதனை இன்று (புதன்கிழமை) உறுதி செய்தார்.

இராக்கில் 10,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதில் 100 பேர் வன்முறை மிகுந்த, பாதுகாப்பில்லாத பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

கடத்தப்பட்ட 40 தொழிலாளர்களும் பாதுகாப்பில்லாத பகுதியில் பணியாற்றி வந்தனர். மொசூல் தவிர திக்ரித் பகுதியில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 46 இந்திய நர்ஸ்களும் பாதுகாப்பற்ற பகுதியில் வசிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.

நர்ஸ்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களை வெளியே வர வேண்டாம் என்று எச்சரித்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், கடத்தப்பட்ட தொழிலாளர்கள் பற்றிய விவரம் குறித்து தங்களுக்கு இன்னும் எந்தச் செய்தியும் வரவில்லை என்றார்.

இது குறித்து விவரங்களை அறிய மூத்த அதிகாரி ஒருவர் பாக்தாத்திற்கு இன்று அனுப்பப்பட்டுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

Post by சிவா on Thu Jun 19, 2014 12:48 am

இராக் அரசு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தீவிரவாதிகள் கைப்பற்றினர்

இராக்கின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான பாய்ஜி ஆலையின் ஒரு பகுதியை அரசுக்கு எதிரான தீவிரவாத படையினர் கைப்பற்றினர்.

தீவிரவாதிகள் மேலும் முன்னேறாத வகையில் பாதுகாப்புப் படையினர் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கே உள்ள சலாஹெய்டின் மாகாணத்தில் இருக்கிறது பாய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணியளவில் இந்த ஆலையின் ஒரு பகுதியை தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

இத்தகவலை ஆலையின், மூத்த மேலாளரும் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் தீவிரவாதிகள் முன்னேறாத வகையில் பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

இராக்கின் இரண்டாவது பெரிய நகரான மொசுல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றிய உடனேயே, பாய்ஜி ஆலையில் பணியாற்றிய பல ஊழியர்கள் வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

Post by சிவா on Thu Jun 19, 2014 12:51 am

இராக்கில் உள்ள இந்தியர்களை திரும்ப அழைப்பதில் சிக்கல்: மத்திய அரசு தகவல்

இராக்கில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அங்கு சிக்கியுள்ள இந்திய செவிலி யர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

அதேசமயம் அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வருவதற்கான சூழல் தற்போது சாதகமாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராக்கில் சன்னி முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடி வருகின்றனர். பல்வேறு முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். திக்ரித் நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப் பாட்டுக்குள் வந்துள்ளது.

இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திக்ரித் நகரிலுள்ள இந்திய செவி லியர்களை மீட்க வேண்டும் என கேரளம் உள்பட பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.

இதனிடையே, இராக்கிலுள்ள இந்திய செவிலியர்கள் நிலை தொடர்பாக, இராக் அரசுடன் பேசி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அங்குள்ள இந்தியர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்யப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் வேண்டு கோளின்பேரில், சர்வதேச செம் பிறைச் சங்கத்தின் குழு திக்ரித் நகரிலுள்ள 46 இந்திய செவி லியர்களிடம் தொடர்பு கொண்டு அவர்களின் பாதுகாப்பு நிலை குறித்து கேட்டறிந்தது. பின்னர், அவர்கள் நலமாக இருப்பதை இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.

இராக் அரசு, இராக்கிலுள்ள ஐ.நா. உதவித் திட்டம் ஆகியவற்று டனும் தொடர்பிலுள்ள இந்தியா, இராக்கிலுள்ள அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியுள்ளது.

“இராக்கிலுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மிகவும் கவலைக்குரிய விஷயம். அவர்களை திரும்ப அழைத்துவருவதற்கு உகந்த சூழல் தற்போது இல்லை. அங்கு சாலைகள் பாதுகாப்பானதாக இல்லை” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இராக்கிலுள்ள இந்தியர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரண மாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என கடந்த ஞாயிற்றுக் கிழமை தெரிவித்திருந்தது. இராக்குக்கு இந்தி யர்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.

தொலைபேசி உதவி

பாக்தாத்திலுள்ள இந்தியத் தூதரகம், அங்குள்ள இந்தியர் களுக்காக 24 மணி நேர தொலைபேசி உதவி எண்ணை அறிவித்துள்ளது.

இராக்கில் தற்போது 10 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தி யர்கள் இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.

கேரளம் உறுதி

செவ்வாய்க்கிழமை நடை பெற்ற கேரள சட்டப்பேரவை யில் இதுதொடர்பாக விவாதிக்கப் பட்டது. வெளிநாடு வாழ் கேரளத் தவர் விவகாரத்துறை அமைச்சர் கே.சி.ஜோசப் கூறுகையில், “திக்ரித் நகரிலுள்ள 44 கேரள செவிலியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. கேரள செவிலி யர்கள் பணிபுரியும் மருத்துவமனை யிலிருந்து அருகிலுள்ள விமான நிலையம் செல்லும் சாலைகளில் வெடிகுண்டுகள் அதிகம் வெடிப் பதால், அது பாதுகாப் பற்றதாக உள்ளது. ஆகவே, தற்போது நாடு திரும்புவதற்கு உகந்த சூழல் அIங்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் குறைந்த சம்பளம், பணிப்பாதுகாப்பு இல்லாதது ஆகியவற்றின் காரண மாக, கேரள செவிலியர்கள் வெளிநாடுகளுக்குச் செல் கின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

Post by ayyasamy ram on Thu Jun 19, 2014 9:27 am

The external affairs ministry (MEA) has given the following
phone numbers for those who need any assistance

-Tel. No. +964 770 444 4899; +964 770 444 4899 (Mobile),

Tel No. +964 770 484 3247; +964 770 484 3247 (Mobile).
--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

Post by சிவா on Thu Jun 19, 2014 9:51 pm

இராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்களின் இருப்பிடம் தெரிந்தது: அரசு

இராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்கள் 40 பேரின் இருப்பிடம் தெரியவந்துள்ளது என இராக் அரசு கூறியதாக, இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

மோசூல் நகரில் இருந்து கடத்தப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த 40 கட்டுமான தொழிலாளர்கள் இருக்குமிடம் குறித்து ஈராக் அரசு அவ்வப்போது தகவல்களை கொடுத்து வருவதாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சயீத் அக்பரூதீன் கூறுகையில், "இராக்கில் கடத்தப்பட்ட அனைவரும் தீவிரவாதிகளால் சிறை வைக்கப்பட்டுள்ளதாக இராக் அரசு தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்ட இந்தியர்கள் அனைவரும் தற்போது நலமுடன் இருக்கின்றனர், ஆனால் அவர்கள் பாதுகாப்பான சூழலில் இல்லை. இந்தியர்களை தவிர மற்ற நாடுகளை சேர்ந்தவர்களும் கடத்தப்பட்டுள்ளனர்" என்றார்.

கடத்தப்பட்டவர்களின் இருப்பிடம் குறித்து அவரிடம் செய்தியாளர் ஒருவர் கேட்கையில், இது குறித்த தகவலை உடனே வெளியில் பகிர முடியாது என்று அவர் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இராக்கில் கடத்தப்பட்ட பெரும்பான்மையானவர்கள், வட இந்தியர்கள் மற்றும் பஞ்சாப் மாநிலத்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இதுவரை, தீவிரவாதிகளிடமிருந்து எந்த வித கோரிக்கையும் பிணையத்தொகையும் முன்வைக்கப்படவில்லை என்றும், இந்தியர்களின் பாதுகாப்புக்கு எந்த வகையில் எல்லாம் நடவடிக்கை எடுக்க முடியுமோ அனைத்தையும் எடுத்துள்ளதாகவும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே, இராக் தலைநகர் பாக்தாத்துக்கு இந்திய வெளியுறவுத்துறையின் சார்பில், அங்கிருக்கும் இந்திய ராணுவத்தை வலுப்படுத்த முன்னாள் தூதர் சுரேஷ் ரெட்டி மத்திய அரசு ஏற்கெனவே அனுப்பியுள்ளது குறிப்பிடதக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

Post by சிவா on Sun Jun 22, 2014 4:53 pm


தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 பேரில் 39 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்

ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உள்நாட்டுப்போர் உச்சக்ட்டத்தை எட்டியுள்ள ஈராக்கில் உள்ள 40 செவிலியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களில் மொசூல் நகரில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி கொண்டிருந்த இந்தியர்கள் 40 பேரை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். இதனை மத்திய அரசும் உறுதிபடுத்தி உள்ளது. இதனை அடுத்து கடத்தபட்டவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.

இதனிடையே தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கடத்தப்பட்ட இந்தியர்கள் பணிபுரிந்த அதே கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த வங்கதேசத்ததை சேர்ந்த ஜமால்கான் என்ற ஊழியர் இந்த தகவலை கூறியுள்ளார். மொசூல் நகரம் தீவிரவாதிகள் கட்டுபாட்டுக்குள் வந்தததை அடுத்து வங்கதேசத்தை சேர்ந்த 53 ஊழியர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 40 பேரை மருத்துமனை ஒனறில் கட்டுமான நிறுவனம் தங்க வைத்ததாக ஜமால் கூறியுள்ளார்.

பின்னர் எர்ஃபில் நகருக்கு தப்பிச் செல்லும் வழியில் 39 இந்தியர்களை கொன்றுவிட்டதாக ஹர்கித் என்ற ஊழியர் கூறியதாகவும் ஜமால்கான் தெரிவித்துள்ளார். இந்த தகவலை மத்திய அரசு அதிகாரிகள் உறுதிபடுத்த மறுத்துள்ள நிலையில் கடத்தபட்டவர்கள் நலமுடன் இருப்பதாக அவர்களது உறவினர்களும் கூறியுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

Post by சிவா on Mon Jun 23, 2014 3:38 am

ஈராக்கில் மேலும் 4 நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்!

பாக்தாத்: ஈராக்கில் மேலும் 4 நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈராக்கில் ஆளும் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் போர் புரிந்து வருகின்றனர். அவர்கள் ஈராக்கிலுள்ள மொசூல், திக்ரித், கிர்குக், ஜலாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். மேலும் வடக்கு ஈராக்கில் அமைந்துள்ள பாய்ஜி என்ற இடத்தில் உள்ள பெரும்பாலான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களையும் தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

தீவிரமாக போரிட்டு வரும் திவிரவாதிகளை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈராக் அரசு படைகளும் தீவிரமாக உள்ளன. இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது.

இந்நிலையில், வடக்கு ஈராக்கில் அன்பர் மாகாணத்தில் மேலும் 4 நகரங்களை நேற்று தீவிரவாதிகள் கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அல்-குயிம், ரவா, அனா மற்றும் ஹூசேபா ஆகிய நகரங்கள் தற்போது தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிற்கு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum