ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
Ideas on changing Government rules and regulations for easing lives of citizens
 T.N.Balasubramanian

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ஊர காணோம்
 ayyasamy ram

என் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை – கீர்த்தி சுரேஷ்
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 T.N.Balasubramanian

ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
 ayyasamy ram

பென்குவின் பறவைகள்
 ayyasamy ram

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
 ayyasamy ram

காதல் என்பது…..
 ayyasamy ram

மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
 ayyasamy ram

உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
 ayyasamy ram

மாற்றம் என்பது...
 ayyasamy ram

ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
 ayyasamy ram

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
 ayyasamy ram

பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
 ayyasamy ram

'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
 ayyasamy ram

எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
 ayyasamy ram

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 03
 shruthi

Youtube. வீடியோ டவுண்லோட் செய்ய சிறந்த ஆப்
 Meeran

இந்த வார இதழ்கள் சில
 Meeran

மே 25 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 02 - தவறவிடாதீர்கள்
 தமிழ்நேசன்1981

கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
 vighneshbalaji

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 vighneshbalaji

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 sudhagaran

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 T.N.Balasubramanian

2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
 ayyasamy ram

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
 ayyasamy ram

தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
 ayyasamy ram

மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குதிரை பேர வரலாறு
 ayyasamy ram

புறாக்களின் பாலின சமத்துவம்
 ayyasamy ram

போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
 ayyasamy ram

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 பழ.முத்துராமலிங்கம்

மாறுவேடப் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
 ayyasamy ram

தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)
 ayyasamy ram

ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
 ayyasamy ram

விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
 ayyasamy ram

சினிமா -முதல் பார்வை: செம
 ayyasamy ram

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 கோபால்ஜி

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

செட்டிநாடு செந்தமிழுக்கு ஈந்த திருக்கவி, முத்தப்பர்!

View previous topic View next topic Go down

செட்டிநாடு செந்தமிழுக்கு ஈந்த திருக்கவி, முத்தப்பர்!

Post by சாமி on Fri Jun 20, 2014 8:24 pm

நினைத்த நேரத்தில் தாம் நினைத்தவற்றைப் பாடலாக்கிப் பாடிய மறுகணமே, அவ்வண்ணம் நிகழ்த்திக்காட்டும் தெய்வீக ஆற்றல் தமிழுக்கு உண்டு என்று நிறுவிய புலவர்களைப் பெற்ற பெருமைக்குரியது தமிழகம். அத்தகையோரை, அறம்பாடும் புலவர்கள், ஆசுகவிகள் என்று மக்கள் போற்றினர். தன்னலத்தை விடவும், பொதுநலம் பேணவும், தீயவர்களைச் சாடவும், தெய்வத்தைப் போற்றவும் தீந்தமிழைத் துணையாகக் கொண்டவர்கள் இத்தகைய புலவர்கள். அந்த வகையில் செட்டிநாடு செந்தமிழுக்கு ஈந்த திருக்கவி, முத்தப்பர் ஆவார்.

சிவகங்கை மாவட்டத்தில் 1750}ஆம் ஆண்டு பிறந்தவர். மருதுபாண்டியர் காலத்தில் வாழ்ந்தவர். முத்தப்பரின் கவிபாடும் ஆற்றலையும், வாக்குப்பலிதம் ஆகும் வல்லமையும் உணர்ந்த கோவிலூர்த் திருமடம் அவருக்கு, "பாடுவார்' என்னும் பட்டம் அளித்துச் சிறப்பித்தது. அன்றிலிருந்து அவர் "பாடுவார் முத்தப்பர்' ஆனார்.

இளம்வயதில் தன் தாயிடம் பணம்பெற்று உப்பு வாணிகம் செய்யக் கிளம்பியபோது வழிமறித்துத் தொல்லை செய்த ஆயக்காரனைப் பார்த்து,

"ஆயக்காரன் அவன் இல்லம்
அடியோடு எரிந்து அழிந்திடவே''

என்று அறம் பாடினார். அவருக்கு முன், இதுபோல் எத்தனை பேருக்குத் தொல்லை கொடுத்துச் சேர்த்த பணத்தில் ஆயக்காரன் கட்டிய வீடோ என்னவோ, உடனே எரிந்து சாம்பலானது. இதனால், முத்தப்பர் புகழ் பரவத்தொடங்கியது. இதுவே அவர் பாடிய முதல் பாடல் என்பர்.

வறட்சி நீக்கவும், வான்மழை பொழியவும் பாடிய இவர், ஒருமுறை குன்றக்குடி விழாப்போதில் மக்கள் வேண்ட, மழைக்காக ஒரு பாடல் பாடினார். பாடலை முடித்த அக்கணமே, கருமேகங்கள் கூடிப் பெருமழையைக் கொட்டி, அனைத்து நீர் நிலைகளையும் நிரப்பின; நிற்காது தொடர்ந்தன. பொறுக்கமுடியாது மக்கள் மீண்டும் வேண்ட,

"வந்து மழைபொழியும் வானேவெஞ் சூர்தடிந்த
கந்தர் திருவிழாக் காலத்தில் - தொந்தரையாய்
நீர்த்துளியை ஊற்றிவிடல் நேர்த்தியல; மாற்றிவிடு
கீர்த்திவரும்; நாட்டன்மொழி கேள்''
என்று பாடிய உடனே நின்றது வான்மழை.

இவ்வாறு பிறர் துயர்நீக்கல், தன்னுணர்வு சுட்டல், உணவிட்டவரைப் போற்றுதல், இகழ்ந்தோரை வசைபாடல், குறுநிலமன்னர் முதலான வசதியுடையாரிடத்து உதவி கேட்டல், நன்றி பாராட்டல் முதலான நிலைகளில் முத்தப்பரின் தனிப்பாடல்கள் அமைகின்றன. அவற்றுள் வெண்பாப்புலிக் கவிராயரோடு நிகழ்ந்த வாதப்-பிரதிவாதங்கள் இலக்கியச்சுவை வாய்ந்தவை.

திண்ணைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றுக்கொண்ட முத்தப்பர், தமது சொந்த முயற்சியில் தமக்குக் கிட்டிய தமிழ் இலக்கண, இலக்கியப் படைப்புகளை உள்வாங்கிக் கொண்டவர்.

முத்தப்பர் இயற்றியவையாக அறியக் கிடைப்பன தனிப்பாடல்கள் மற்றும் சிற்றிலக்கியங்கள். அவற்றுள் முதலாவதான திருமுகவிலாசம், 96 வகையான சிற்றிலக்கியப் பிரிவுகளுள் அடங்காதது; தனித்தன்மை கொண்டது. அதுபோல், இராங்கியம் கருப்பர் குதிரையடியும் எனலாம். இவை தவிர, நகரவாழ்வு, ஜெயங்கொண்டார் சதகம், உச்சினி மாகாளியம்மன் கும்மி, தல்லாகுளம் கருப்பர் அகவல், மருதம் பிள்ளையார் பதிகம், கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் பதிகம், குன்றக்குடி முருகன் பதிகம், பழனியாண்டவர் பதிகம் ஆகியனவும் அவர் பாடியுள்ளார்.

இவற்றுள், ஜெயங்கொண்டார் சதக நூலைப் பதிப்பித்த வித்துவான் நா.கிருஷ்ணசாமி நாயுடு, ""இப்புலவர் பெருமான் அவ்வவ்வமையங்களிற் பாடிய தனிப்பாடல்கள் இன்னும் நூற்றுக்கணக்காய் உள்ளன. இவையன்றி, ஜெயங்கொண்ட சோழீசர் பிள்ளைத்தமிழ், பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறையந்தாதி, நேமநகர்க் கலம்பகம், ஜெயங்கொண்ட சோழீசர் ஊசற்றிருநாமம் முதலிய பிரபந்தங்களும் நம் வித்வப்பெம்மானால் இயற்றப்பெற்றனவாமென்ப'' என்கிறார். இவர் பாடிய, திட்டாணிக்கருப்பர் குளுவ நாடகம் ஏட்டுப்பிரதியாகவே உள்ளது என்கிறார் இவரைப் பற்றி ஆய்வுசெய்த தே.சொக்கலிங்கம்.

வாழ்நாள் முழுதும் பாடிப் புகழ்பெற்ற, பாடுவார் முத்தப்பர், தம் மறைவு குறித்தும் பின்வரும் பாடலை எழுதித் தமிழிடம் இருந்து விடைபெற்றார்.

"தொகுதிபெறு சர்வசித்து வருடந் தன்னில்
துலாமாதம் தேதிபத்து சுக்ரவாரம்
பகுதிபெறு செயங்கொண்ட சோழீசர்தம்
பாதமதிற் சேர்ந்துவெகு பலம்பெற் றேனே"

இப்பாடலைக் கொண்டு, அவரது நிறைவுக்காலம், 21.10.1823 என்று வரையறுப்பதுண்டு. இவர் பாடிய ஒரு மங்கலப் பாடலை நகரத்தார் இன்றும் துதிக்கின்றனர். திருவுருவச்சிலையோடு கீழச்சிவல்பட்டி, சந்நிதி வீதியில் எழில்மாடமும் அமைத்து அவர் மரபினோர் ஆண்டுதோறும் அன்னாருக்குக் குருபூசை நடத்தி வருகின்றனர். (கிருங்கை சேதுபதி - தினமணி)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: செட்டிநாடு செந்தமிழுக்கு ஈந்த திருக்கவி, முத்தப்பர்!

Post by Dr.S.Soundarapandian on Fri Jun 20, 2014 8:43 pm

சாமி அவர்களுக்கு நன்றி !

‘பாடுவார் முத்தப்பச் செட்டியார்’ பற்றிச் செட்டிநாட்டுப் பெரியவர்கள் கூறி மெய்ம்மறந்த காட்சிகளுக்குச் சாட்சி நான் !

  
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4545
மதிப்பீடுகள் : 2410

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum