ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்

View previous topic View next topic Go down

குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்

Post by PROFESSORSSK on Tue Jun 24, 2014 10:56 am

அன்புள்ள இலக்கியச் சுவை அருந்தும் ஈகரை நண்பர்களே !
உங்கள் அனைவருக்கும் எனது காலை வணக்கமும் வாழ்த்துக்களும் !

இது இன்று நான் இந்த வலைத் தளத்தில் வரையும் முதல் கடிதம் !


'' குறுந்தொகையில் உள்ளுறை உவமம் '' என்பது அதன் தலைப்பு !


'' உள்ளுறை உவமம் '' என்றால் உள்ளே மறைந்து வெளியே தெள்ளெனத் தெரியாமல் கிடக்கும் உவமை  என்று

பொருள் !
'' நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறோடு
ஒத்தப் பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்ற
இத்திறத்த எட்டுத் தொகை ''


என்ற தனிப் பாடலில் உள்ள எட்டுத் தொகை நூல்கள்

1. நற்றிணை

2. குறுந்தொகை

3 .ஐங்குறுநூறு

4. பதிற்றுப் பத்து

5. பரிபாடல்

6. கலித் தொகை

7 . அகநானூறு

8 .புறநானூறு

என்ற எட்டு நூல்களில் நல்ல குறுந்தொகை என்று இது சிறப்பிக்கப்பட்டுள்ளது !சில குறுகிய அடிகளைக் கொண்ட அகத் துறைப் பாடல்கள் கொண்டதால் இது குறுந்தொகை எனப்பட்டது .

பல நீண்ட அடிகளைக் கொண்ட அகத் துறைப் பாடல்கள் கொண்ட நெடுந்தொகை என்ற நூல் பின்னால் அகநானூறு எனப் பெயர் பெற்றது .

இன்று ஒரு குறுந்தொகைப் பாடல் !

காதற்பரத்தை கூற்று :


(தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என்று அறிந்த காதற் பரத்தை அத்தலைவியின் பக்கத்திலுள்ளார் கேட்கும்படி, “தலைவன் எமக்கு வயப்பட்டான் போல இங்கே இருந்து விட்டு, தலைவிபாற் சென்றுஅவளுக்கு அடங்கி அவள் மனம்போல் ஒழுகினான்; தருக்குற்று என்னை அவள் இகழ்ந்ததற்குக் காரணம் அதுபோலும்!’’ என்று கூறியது ! )

இது ஒரு மருத நிலத்துப் பாடல் !

இந்தப் பாடலை இயற்றியவர் ஆலங்குடி வங்கனார் என்ற புலவர் !

ஒரு தலைவன் ஒரு தலைவியை மணக்கிறான் .

அவர்களுக்கு ஒரு புதல்வனும் பிறக்கிறான் .

அவனுக்கு இல்லற வாழ்வில் ஒரு மாற்றம் காண மனம் விழைகிறது !

ஒரு பரத்தையை நாடுகிறான் .

அவளும் அவனுக்கு இன்பம் நல்குகிறாள் !

'' பழகப் பழகப் பாலும் புளிக்கும் '' என்பார்களே , அது போல அவளும் புளிக்கிறாள் !

கோவலன் போல பழைய படியும் தனது மனைவியை நாடுகிறான் !

ஒரு வண்டு தேனை நாடி மலருக்கு மலர் தாவுவது போலவே ஆணின் மனமும் பல பெண்களை நாடும் போலும் !

இப்போது அந்தப் பரத்தை தனது தோழியிடம் சொல்வது போல் ஒரு பாடல் !

'' கழனி மாவத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூவும் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்மில்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடியிற் பாவை போல மேவன செய்யும்
தன் புதல்வன் தாய்க்கே ''


பாடலைக் கொஞ்சம் மாற்றி வரைகிறேன் .


'' கழனி மா அத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூவும் ஊரன்
எம் இல் பெரு மொழி கூறித் தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடியில் பாவை போல மேவன செய்யும்
தன் புதல்வன் தாய்க்கே ''

அருஞ்சொற்பதவுரை :

கழனி - வயல்

மா - மாமரம்

அத்து - அசைச் சொல்

உகு - பழுது கீழே விழுகின்ற

தீம் - இனிமையான

பழன - வயலில் உள்ள வாய்க்கால்

வாளை - பாம்பு வடிவத்தில் இருக்கும் ஒரு மீன்

கதூவும் - கவ்விப் பிடித்துக் கொள்ளும்

ஊரன் - ஊருக்கு அரசன்

எம் இல் - எமது வீட்டில்

பெரு மொழி - புகழ்ந்து சொல்லும் சொற்கள்

தம் இல் - தனது வீட்டில்

ஆடி - கண்ணாடி , முகம் பார்க்கும் கண்ணாடி , கண்ணுக்கு அணிவது தான் கண்ணாடி , முகம் பார்ப்பது ஆடி !

மேவன - அவள் விரும்புகிற


பாடலின் விளக்கம் :


வயல்களின் குறுக்கே ஓடும் வாய்க்காலில் உள்ள தண்ணீரில் வசிக்கும் வாளை மீன் அந்த வயலின் வரப்பில் இருக்கும் மாமரத்தில் காய்த்துக் கனிந்து விழும் மாங்கனியைக் கவ்விப் பிடித்து உண்ணும் மருத நிலங்களுக்கு சொந்தமான தலைவன் என்னுடன் இருக்கும் போது என்னைப் புகழ்ந்து பேசி விட்டு ,

தனது வீட்டுக்குச் சென்ற பின்பு அவன் வீட்டில் கண்ணாடி முன் நின்று கையையும் காலையும் தூக்கினால் அந்தக் கண்ணாடியில் தெரியும் பிம்பமும் தனது கையையும் காலையும் தூக்குமே , அந்தப் பிம்பத்தைப் போலத் தனது மனைவி சொல்லைத் தட்டாமல் அவளது சொற்களைக் கேட்டு வாழ்கிறான் .


பாடல் நயம் :

1. இந்தப் பரத்தை அவளாகவே தலைவனை நாடிச் செல்லவில்லை , மாறாக அவனே வந்து அவளிடம் இன்பம் துய்க்க வந்தான்

2. மாமரத்தின் மாங்கனியை நாடி வாளை மீன் போகவில்லை , மாங்கனியே தானாக வந்து வாளை மீனின் வாயில் விழுந்தது

3. இங்கு வாளை மீன் பரத்தைக்கும் , மாங்கனி தலைவனுக்கும் உவமை ஆகின்றன . இந்த உவமைக்கு உள்ளுறை உவமம் என்று பெயர் .

4. நமது வலது கையை அசைத்தால் ஆடியில் காணும் பிம்பம் தனது இடது கையை அசைக்கும் .

இதன் பொருள் என்னவென்றால் , தலைவன் தலைவியின் கருத்துக்கு மாறாகத் தான் செயல் படுகிறான் . அவள் கருத்துக்கு இசைந்து செயல் படுவதாக அவளுக்குக் காட்டிக் கொள்ளுகிறான் . குற்றம் புரிந்த நெஞ்சம் அல்லவா, அவனது நெஞ்சம் !

5. இயற்பியலில் இது LAW OF REFLECTION !

'' THE INCIDENT RAY AND THE REFLECTED RAY ARE REVERSED BY 180 DEGREES ''

6. தலைவனது மனைவியை அவள் அவனது மகனின் தாய் என்றே அழைக்கிறாள் , அவனது மனைவி என்று அழைக்க அவள் விரும்பவில்லை . ஏனெனில் மனைவிக்கு உரிய உரிமை தனக்கும் இருப்பதாக அவள் கருதுகிறாள் !
இங்கு உள்ளுறை உவமம் என்பது யாதெனில் ,

வாளை மீன் பரத்தைக்கும் , தலைவன் மாங்கனிக்கும் உவமையாக்கப்படுகிறார்கள் !

ஆனால் இந்த உவமை வெளியே தெரிவதில்லை !

உள்ளே மறைந்து கிடக்கிறது

அதனால் தான் இது உள்ளுறை உவமை ஆயிற்று !அன்பர்களே !

இது '' ஆசை பற்றி அறையலுற்ற '' கடிதம் !

தவறுகள் இருந்தால் கோடிட்டுக் காட்டுங்கள் , திருத்திக் கொள்கிறேன் !

அன்புடன்

பேராசிரியர்

PROFESSORSSK
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்

Post by மாணிக்கம் நடேசன் on Tue Jun 24, 2014 12:46 pm

அண்ணாவுக்கு உங்கள் தம்பியின் அன்பான வேண்டுகோள், உங்கள இலக்கிய படைப்பை இன்னும் படிக்கவில்லை, பச்சை நிறத்தில் உள்ளதை வேறு நிறத்திற்கு மாற்ற முடியுமா, படிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கிறது அண்ணா.  

நன்றியுடன் உங்கள் தம்பி.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum