ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

புதிய சமயங்கள்
 SK

ஒரு சந்தேகம்??
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது

View previous topic View next topic Go down

சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது

Post by ayyasamy ram on Sat Jun 28, 2014 8:40 pm

சென்னை:
சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
-
இவர்களில் மதுரையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 30 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
-
சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் புதிதாக 11 மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இன்னமும் இதன் கட்டுமான பணிகள் முழுமையடையவில்லை. இந்த நிலையில் இன்று மாலை சென்னையில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த கட்டிடம் அப்படியே இடிந்து தரைமட்டமானது.
-
இந்த இடிபாடுகளில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையை சேர்ந்தவர் பலி கட்டிடம் முழுவதும் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளதால் அங்கு மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக 10 பேர் மீட்கப்பட்டு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மதுரையை அடுத்த டி. கல்லுப்பட்டியைச் சேர்ந்த மருதுபாண்டி (வயது 25) உயிரிழந்தவர் என்று தெரியவந்துள்ளது.
-
தற்போது 30 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இடிவிழுந்ததா? கட்டிடத்தின் அடித்தளம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இடி தாக்கியே விபத்து நிகழ்ந்ததாக கட்டிடத்தை கட்டிவரும் கட்டுமான நிறுவனம் கூறுகிறது. போரூர் ஏரி இருந்த பகுதியில் கட்டிடம் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த பகுதியைச் சுற்றிலும் 5 மாடிகளைத் தவிர வேறு எந்த கட்டிடமும் இல்லை என்று கூறப்படுகிறது. இதுதான் முதன்முறையாக 11 மாடி கட்டிடம் ஆகும்.
-
இருள் சூழ்ந்ததால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க ராட்சத விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழு சென்னைக்கு விரைந்துள்ளது.
-
-----------------------------
--

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது

Post by சிவா on Sun Jun 29, 2014 1:28 am

கட்டிட இடிபாடு: காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா உத்தரவு

சென்னை போரூரில் 11 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்துத் தரைமட்டமானது. இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் இன்று (28.6.2014) மாலை இடிந்து விழுந்ததில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்ற செய்தி அறிந்து மன வேதனை அடைந்தேன்.

இந்தத் தகவல் கிடைக்கப்பெற்றவுடன், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்டெடுத்து, தக்க மருத்துவ சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எனது உத்தரவினையடுத்து, மீட்புப் பணிகளை கண்காணிக்க ஏதுவாக, மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. டி.கே.எம். சின்னையா, வருவாய் நிருவாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை ஆணையர் திரு. டி.எஸ். ஸ்ரீதர், இ.ஆ.ப., சென்னை மாநகர காவல் ஆணையர் திரு. எஸ். ஜார்ஜ், இ.கா.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கே. பாஸ்கரன், இ.ஆ.ப., ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டெடுக்க ஏதுவாக, 12 தீயணைப்பு வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீட்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில், 12 ஆம்புலன்ஸ் வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

எனது உத்தரவின் பேரில், மீட்புப் பணியை விரைந்து முடிக்க ஏதுவாக, அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிடும் வகையில், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, சென்னை மெட்ரோ இரயில், சென்னை மாநகராட்சி ஆகியவற்றிலிருந்து தேவையான உபகரணங்களுடன் தொழில்நுட்ப பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

இரவு நேரங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, தேவையான மின் விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது

Post by சிவா on Sun Jun 29, 2014 3:48 am

மெட்ரோ அதிகாரிகள் குற்றச்சாட்டு: தரம் குறைந்த கம்பியே கட்டிடம் இடிந்ததுக்கு காரணம்

சென்னை: மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில்,‘‘இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஏரிப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. ஒரு தளத்துக்கு 4 வீடுகள் என 11 மாடிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஏரிப்பகுதியில் கட்டப்படுவதால் அஸ்திவாரம் அமைக்க பயன்படுத்தப்பட்ட கான்கிரீட்டில் தடிமன் கூடிய இரும்பு கம்பிகள் பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த கட்டிடத்தில் தரம் குறைந்த இரும்பு கம்பிகளே பயன்படுத்தப்பட்டுள்ளது’’ என்றனர். அருகிலிருந்த கட்டிடமும் சரிந்தது: இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகில் இருந்த சிறிய வீட்டின் மீதும் கட்டிட இடிபாடுகள் விழுந்துள்ளன. இதில், அந்த வீடும் இடிபாடுகளில் புதைந்தது. வீட்டில் இருந்த நபர்களும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். கட்டிட விபத்தில் ஈடுபட்டுள்ள மீட்பு குழுவினர் இவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வீட்டில் உள்ளவர்களில் யார் யார் வீட்டில் இருந்தார்கள்? அவர்களது நிலை என்ன என்பது தெரியவில்லை கட்டுமான நிறுவன பணிகள்: மதுரையை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. கடந்த 20 ஆண்டுகளாக நிறுவனம் இயங்கி வருகிறது.

மதுரை பிபி குளம் பகுதியில் ‘கீதா அப்பார்ட்மென்ட்’, கே.கே.நகரில் ‘ராஜ்கமல் அப்பார்ட்மென்ட்’ ‘லேக் வியூ ஓட்டல்’ ‘லேக் வியூ ஹோம்ஸ்’ போஸ்டல் அண்டு டெலிகிராப் காலனியில் ‘தத்துவா தர்ஷன்’ ஆகிய கட்டிடங்களை கட்டியுள்ளனர். சென்னையில் தற்போதுதான் முதல் முறையாக கட்டியுள்ளனர். கட்டுமானத்தில் சந்தேகம் சிஎம்டிஏ அதிகாரி பேட்டி: கட்டிட அனுமதியில் சட்ட மீறல் இல்லை. கட்டுமானத்தில்தான் சந்தேகம் உள்ளது என சிஎம்டிஏ அதிகாரி கட்டுமானத்தின் மாதிரியை சோதனையிட்டு இன்றே அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மவுலிவாக்கத்தில் நேற்று நடந்த விபத்து பற்றி கருத்து தெரிவித்த சிஎம்டிஏ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த கட்டிடம் கட்டுவதற்காக முறையான அனுமதியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாலமுருகன் மற்றும் மனோகரன் பெயரில் பெற்றுள்ளனர். இதில் சட்டவி ரோதமான செயல் எதுவும் நடைபெறவில்லை. ஆனால், கட்டுமானத்தில் சந்தேகம் உள்ளது. எங்களுடைய அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்று மாதிரிகளை சேகரித்து விரிவான அறிக்கையை அரசுக்கு அளிக்க உள்ளோம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது

Post by சிவா on Sun Jun 29, 2014 3:48 am


சென்னையில் இடிந்த கட்டிடத்தின் மதிப்பு ரூ.54 லட்சம் முதல் ரூ.94 லட்சம் வரை

இடிந்த கட்டிடம் தரை தளத்தில் இருந்து 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தரை தளத்தில் இருந்து 11 மாடி கட்டிம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 44 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இடிந்த கட்டிடம் 2 படுக்கை அறைகளை கொண்டது. ஒரு வீட்டின் மதிப்பு ரூ.54 லட்சம் முதல் ரூ.94 லட்சம் வரை விலை நிர்ணயமிக்கப்பட்டிருந்தது. பெரும்பான்மையான வீடுகள் விற்பனை செய்யப்பட்டு விட்டன. அருகில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடம் 3 படுக்கை அறை கொண்டது. 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்டிடப் பணிகள் துவங்கின. தற்போது கட்டும் பணிகள் முடிந்து விட்டன. பூச்சு பூசும் பணிகள் மட்டுமே நடந்து வருகிறது.

20 ஆழத்தில் தண்ணீர்

கட்டிடம் இடிந்த இடம் போரூர் ஏரிக்கு அருகாமையில் இருப்பதால், அந்த பகுதியில் 20 அடிக்கு பள்ளம் தோண்டினாலே தண்ணீர் வந்துவிடும். அதனால் அந்த பகுதியில் 4 மாடிகளுக்கு மேல் கட்டிடங்கள் கட்டப்படுவதில்லை. ஆனால் இந்த கட்டிடம் மண் பரிசோதனைகளை முறைப்படி நடத்தாமல் சட்டத்திற்கு புறம்பாக 12 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கட்டிட இடிபாடுகளில் ஆக்சிஜன் வசதி

காஞ்சிபுரம் கலெக்டர் பாஸ்கர் கூறுகையில், ‘‘அடுக்குமாடி குடியிருப்பு சரியாக 5.30மணிக்கு இடிந்து விழுந்துள்ளது. தேசிய மேலாண்மை பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 80 பேர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுவரை 13 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் யாராவது உயிரோடு இருந்தால், அவர்களை காப்பாற்றும் வகையில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் 125 பெட்டுகள் தயார் நிலையில் உள்ளது. மீட்கப்படுபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

பீதி குறித்து சிதம்பரம் முத்து

நாங்கள் கட்டிட பணியில் 2 மாதங்களுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறோம். 4.30 மணி முதல் கடுமையான மழை பெய்தது. 5 மணியளவில் இடிபாடு ஏற்பட்ட கட்டிடத்திலிருந்து பெரும் சத்தம் கேட்டது. சென்று பார்த்த போது கட்டிடம் இடிந்து விழுந்து மலை போல் குவிந்திருந்தது. இடிபாடு ஏற்பட்ட அரை மணி நேரத்திற்கு போலீசார் யாரும் மீட்பு பணிக்கு வரவில்லை. போலீசார் வந்த பிறகே நாங்கள் எங்களது கட்டிடத்திலிருந்து நாங்கள் வெளியில் வந்தோம். அதுவரை பீதியில்தான் இருந்தோம். எங்களுடன் வேலைபார்த்த 130க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சுகிறோம் என்றார்.

வெல்டிங், ட்ரில்லர் மிஷன்கள்

கட்டிட வேலையில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். இவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் கமாண்டோ படை உள்ளிட்ட பல்வேறு மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டிருந்தாலும், கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்ட செங்கல், சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளுக்கிடையே ஊழியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க வெல்டிங் மிஷன், கட்டிங் மிஷன் மற்றும் ட்ரில்லர் மிஷன்களின் உதவி தேவைப்பட்டது. இதையடுத்து, அருகில் மற்றொரு கட்டிட வேலைக்குப் பயன்படுத்தப்பட்ட வெல்டிங் மிஷன் மற்றும் டிரில்லர் மிஷன்கள் கொண்டுவரப்பட்டன.

இதுதவிர அருகில் உள்ள வெல்டிங் பட்டறைகளில் இருந்தும், கட்டிட இடிபாடுகளை அகற்ற வெல்டிங் மிஷன்கள் கொண்டுவரப்பட்டன. கட்டிடம் இடிந்ததில் கட்டிடத்தின் பாகங்கள் மளமளவென சரிந்து விழுந்ததால், ட்ரில்லர் மிஷன் உதவியோடு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது

Post by சிவா on Sun Jun 29, 2014 5:21 am

கட்டிட உரிமையாளர் மற்றும் மகன் கைது

சென்னை போரூர் அருகே உள்ள மவுலிவாக்கத்தில் தனியாரால் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடம் நேற்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் மீட்பு பணியை பார்வையிட்டார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

மீட்பு பணி தீவிரமாகவும் முழு முயற்சியுடனும் நடந்து வருகிறது. இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் 40 முதல் 50 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த கட்டுமான பணி சட்டப்படி நடைபெற்றதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விதிமீறல் இருந்தால், கட்டிட உரிமையாளர், கட்டுமான பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் உட்பட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக, கட்டிட உரிமையாளர் மனோகரன், அவருடைய மகன் முத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது

Post by T.N.Balasubramanian on Sun Jun 29, 2014 7:29 am

சென்னையிலே  கருணாநிதியும் ஜெயலலிதாவும் இருவரும் சந்தித்து தமிழ்நாட்டின் நன்மைக்கு இருவரும் கூட்டாக செயல்படுவோம் என்று கூட்டறிக்கை வந்தால் கூட நிச்சயம் நான் நம்புவேன் .
சென்னை மழையினால்11 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததாக சொன்னா நம்ப முடியுமா  ? பு   (நாலு ) மாடி கட்டடதிற்கு அனுமதி வாங்கி அந்த நாலின் அடிக்கோடை அழித்து விட்டு நாலை பதினொன்று ஆக்கி எல்லோரையும் முட்டாள் ஆக்கிவிட்டார்கள் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21514
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது

Post by ayyasamy ram on Sun Jun 29, 2014 12:30 pm


இதுவரை 27 பேர் இடிபாடுகளுக்குள் இருந்து மீ
ட்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்தில் பலி
எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
-
கட்டட இடிபாடுகளில் 40 முதல் 50 பேர் வரை
சிக்கியிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்
என அஞ்சப்படுகிறது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது

Post by சிவா on Sun Jun 29, 2014 3:22 pm

சென்னை கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு; தகவல்கள் அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மாலை 4 மணி அளவில் சென்னை புறநகர் பகுதிகளில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. அப்போது கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிட விபத்தில் ஏற்கனவே 9 பேர் பலியாகி இருந்த நிலையில் இன்று மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டது. கட்டிடம் இடிந்து அருகிலிருந்த வீட்டின் மீதுவும் விழுந்திருந்தது. அங்கு இடிபாடுகளில் சிக்கி மண்ணில் புதையுண்ட ஒருவரது உடலும் மீட்கப்பட்டது. 2 உடல்கள் மீட்கப்பட்டநிலையில் பலி 11 ஆக உயர்ந்துள்ளது.

விபத்து நிகழ்ந்தபோது, கட்டிடத்தில் 50 க்கும் மேற்படோர் இருந்ததாக கூறப்படுவதால், எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகள் முடிய இரண்டு நாட்களுக்கு மேலாகும் என கூறப்படுகிறது.

இதனிடையே, இடிந்து தரைமட்டமான கட்டிடத்தின் உரிமையாளர்கள் இருவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கட்டிட விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

11 மாடி கட்டடம் இடிந்த சம்பவத்திறகு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணிகளை விரைவுபடுத்துமாறும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கட்டிட விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில், தெலங்கானாவை சேர்ந்த 14 தொழிலாளர்கள் சிக்கியிருக்கககூடும் என அஞ்சப்படுகிறது. விஜயநகரம் பகுதியை சேர்ந்த அவர்கள் பற்றிய தகவல்களை அறிய, உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை அந்த மாவட்ட ஆட்சியர், சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய தெலங்கானா தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை 94910 12021, 94910 12012 ஆகிய இரண்டு கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விஜய நகரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் 08922 -236947 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது

Post by சிவா on Tue Jul 01, 2014 4:17 pm

மவுலிவாக்கம் கட்டிட விபத்து பலி 28 ஆக அதிகரிப்பு: 3 பேர் உயிருடன் மீட்பு

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. தரை தளம் மற்றும் 3-வது தளத்தில் 29 பேர் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

மீட்புப் பணிகள் இன்று (திங்கள்கிழமை) 4-வது நாளாக தொடர்ந்த நிலையில், நள்ளிரவு முதல் காலை வரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 3 பேர் இன்று காலை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுவரை, கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது என பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்தார். இன்று காலை மீட்கப்பட்ட மூவரில் இருவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்று காலை மீட்கப்பட்ட மகேஷ் என்பவர் கட்டிட இடிபாடுகளுக்குள் தனது மனைவி உள்ளிட்ட பலர் உயிருடன் சிக்கிக் கொண்டிருப்பதாக கூறியதையடுத்து மீட்பிப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் உயிருடன் மீட்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மீட்கப்பட்டவர்கள் அளித்த தகவலின்படி தரை மற்றும் இரண்டாம் தளம் முழுமையாக சேதமடையவில்லை என தெரிகிறது. அதனால் அங்கு சிக்கிக் கொண்டிருப்பவர்கள் உயிருடன் மீட்கப்பட வாய்ப்பிருக்கிறது என்றார்.

மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக முந்தையச் செய்தித் தொகுப்பு:

தரை தளம், 3-வது தளத்தில் சிக்கிய 29 பேரின் கதி என்ன?

சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் சனிக்கிழமை மாலையில் இடிந்து விழுந்தது. இடிந்தபோது கட்டிடத்திற்குள் 72 பேர் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிவிட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை 21 பேரை உயிருடன் மீட்டனர், 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

3–வது நாளாக திங்கள்கிழமை தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பின்னர் 7 மற்றும் 8-வது தளத்தில் துளையிட்டு அங்கிருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. 7-வது தளத்தை துளையிட்டபோது 2 பெண்கள் இருப்பது தெரிந்தது. அவர்களில் ஒருவர் ஆந்திர மாநிலம் திருச்சக்குளத்தைச் சேர்ந்த மீனம்மாள் (35). மயங்கிய நிலையில் இருந்த மற்றொரு பெண்ணின் பெயர் தெரியவில்லை. அவர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

10.30 மணியளவில் 7-வது தளத்தின் கட்டிட இடிபாடுகளின் ஒரு பகுதியில் இருந்து இளைஞர் ஒருவர் எழுப்பிய சத்தம் கேட்டது. சத்தம் வந்த இடத்தை நோக்கி கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புக் குழுவினர் முன்னேறி சென்றனர். அங்கு வடமாநில இளைஞர் ஒருவர் சிக்கியிருப்பது தெரிந்தது. அவரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். அவரது பெயர் கோவிந்தராஜ். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருடன் சேர்த்து திங்கள்கிழமை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கட்டிடம் இடிந்து தரை மட்டமானபோது அதில் மொத்தம் 72 பேர் இருந்தனர். 20 பேர் இறந்த நிலையிலும், 23 பேர் காயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 29 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் தரை தளத்திலும், 3-வது தளத்திலும் உள்ளனர். அந்த தளங்கள் மீதுதான் மற்ற தளங்களின் இடிபாடுகள் கிடக்கின்றன. கட்டிடம் இடிந்து விழுந்து இரு நாட்கள் கடந்த நிலையில் அவர்களில் பலர் இறந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை உறுதி செய்வதுபோல அந்த இடம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கிவிட்டது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையே மேலும் சிலர் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது என்று மீட்புக் குழுவினர் நம்புகிறார்கள். இதனால் தொடர்ந்து மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர்.

வழக்கு விசாரணை

பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் சுப்பிரமணி தலைமையிலான காவல் துறையினர் கட்டிடம் இடிந்தது தொடர்பான வழக்கு விசாரணையை நடத்தி வருகின்றனர். இடிந்துபோன கட்டிடத்தை கட்டிய பிரைம் சிருஷ்டி கட்டுமான நிறுவன உரிமையாளர் மனோகரன், அவரது மகன் முத்துகாமாட்சி, இன்ஜினீயர்கள் சங்கர ராமகிருஷ்ணன், துரைசிங்கம், வெங்கடசுப்பிரமணியம், கட்டிட வடிவமைப்பாளர் விஜய் மல்கோத்ரா ஆகிய 6 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் மனோகரன், முத்துகாமாட்சி, வெங்கடசுப்பிரமணியம், சங்கர ராமகிருஷ்ணன் ஆகியோர் மதுரையை சேர்ந்தவர்கள். துரைசிங்கம் தஞ்சை அருகே திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர். விஜய் மல்கோத்ரா சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர். கைதான 6 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கட்டிட உரிமையாளர் மனோகரனுக்கு கட்டுமானத்துறை தொடர்பாக எந்த அனுபவமும் இல்லை. வங்கியில் ஊழியராக வேலை செய்த அவர் விருப்ப ஓய்வு பெற்று எந்தவித அனுபவமும் இல்லாமல் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் விதி மீறலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது

Post by Aathira on Tue Jul 01, 2014 4:21 pm

கலங்க வைக்கும் சோகம். கொடுக்கும்போது அனுமதி கொடுத்து விட்டு இப்போது கட்சி கட்டினால் எப்ப்டி. இதற்கெல்லாம் மாற்றம் எப்போது வரும்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது

Post by சிவா on Tue Jul 01, 2014 4:27 pm

@Aathira wrote:கலங்க வைக்கும் சோகம். கொடுக்கும்போது அனுமதி கொடுத்து விட்டு இப்போது கட்சி கட்டினால் எப்ப்டி. இதற்கெல்லாம் மாற்றம் எப்போது வரும்

மனித உயிர்களைவிட பணத்தை மதிக்கும் கேவலமான அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் அழிந்தால் ஒழிய மாற்றம் என்பது மாயையாகத்தான் இருக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது

Post by Manik on Tue Jul 01, 2014 5:54 pm

உயிரிழந்த அனைவரின் ஆன்மாவும் இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன்..............

avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum