ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 T.N.Balasubramanian

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 SK

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 SK

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 பழ.முத்துராமலிங்கம்

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குமரி மாவட்டத் தமிழ் ...

View previous topic View next topic Go down

குமரி மாவட்டத் தமிழ் ...

Post by bparthasarathi on Sun Jul 06, 2014 6:18 pm

குமரி மாவட்டத் தமிழ்
(நண்பர்களே... சில திருத்தங்கள் செய்து மீண்டும் பதிவிட்டிருக்கிறேன்... நன்றி..!)

குமரி மாவட்டத் தமிழ் (நாஞ்சில் நாட்டுத் தமிழ்) என்பது தமிழின் வட்டார வழக்குகளுள் ஒன்றாகும். தமிழகத்தின் வேறு பகுதிகளில் வழங்காத சொற்களெல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ளன. இப்பகுதி மலையாள நாட்டின் வாயிலாகவும் இருப்பதால் மலையாளச் சொற்களும் இலக்கணமும் இப்பகுதியின் பேச்சு வழக்கில் கலந்திருக்கும். இன்றைய குமரி மாவட்டத் தமிழ் மூன்று வகைப்படுகிறது.

1 தோவாளை, அகத்தீஸ்வரம் வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய நாஞ்சில் நாட்டின் தமிழ்
2 கல்குளம், விளவங்கோடு வட்டங்களை உள்ளடக்கிய பண்டைய இடை நாட்டின் தமிழ்.
3 கடலோர கிராமங்களை உள்ளடக்கிய மீனவர்த் தமிழ்

இதில் இடை நாட்டின் தமிழிலேயே, மலையாள மொழியின் தாக்கம் தென்படும். மற்ற இரு வகைகளிலும் மலையாளம் அவ்வளவாக கலந்திராது, தமிழ் சொற்களின் / இலக்கணத்தின் மருவலே அதிகம் காணப்படும்.

கீழ்க்காணும் விளக்கங்களில், "மலையாள வழக்கு" என்பது "மலையாளத்தில் இருந்து மருவியது" என்று பொருள் படாது. மாறாக, "இந்த சொல் பிற வட்டார வழக்கில் (அவ்வளவாக) பயன்படுத்தப்படாமல், குமரி மாவட்டத் தமிழிலும் மலையாளத்திலும் (மட்டுமே) வழக்கத்தில் உள்ளது" என்றே பொருள் படுகிறது. அச்சொற்கள் அடிப்படையில் தமிழ் வேர் கொண்ட சொற்களாகவோ, சமற்கிருத வேர் கொண்ட சொற்களாகவோ, மலையாள வேர் கொண்ட சொற்களாகவோ இருக்கலாம்.

வட்டாரச் சொற்கள்

குமரி மாவட்டத் தமிழ் பொதுத் தமிழ் விளக்கம்

அங்கணம் -உள்முற்றம், கழிவுநீர் மடை திருக்குறள்: "அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொள"

அங்கன -அங்கே "மோனே, அங்கன போவாதே" - "மகனே அங்கே போகாதே"

அங்கோடி- அந்த வழியாக "அவ அங்கோடி பேயிட்டிரிக்யும்போது பாம்பு ஒண்ணு குறுக்கால போச்சாம்."

இங்கு 'பேயிட்டிரிக்யிம்போது' (போய்க்கொண்டிருக்கும்போது) இல் 'போ'க்குப்பதிலாக 'பே' என்றும், 'இருக்கும்' என்பது 'இரிக்கும்' அல்லது 'இரிக்யிம்' என்றே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கேரள எல்லை வட்டங்களில் இவ்வழக்கு உள்ளது

அடிச்சு மாத்துவது- திருடுவது

அண்டிப் பருப்பு -முந்திரிப் பருப்பு

அத்தாழை -அந்தி உணவு, அற்றாலம் அத்தாழப் பட்டினி - அந்தி உணவு இல்லாதவர்

அல்லா-அல்லவா

அல்லாம -அல்லாமல், இல்லாமல் மருவல்

அலட்டல் -பேசிக்கொண்டே இருப்பது பொதுத்தமிழிலும் உள்ளது

அவிய இவிய / எவிய அவர்கள் / இவர்கள் / எவர்கள் பொதுத்தமிழிலும் உள்ளது

அற்றம் / அத்தம் கடைசி, இறுதி, முடிவு, கரை "தெருவுக்க அத்தத்துல தான் அந்த கடை இருக்கு" - "தெருவின் கடைசியில் தான் அந்த கடை உள்ளது".

அய்யம் / ஐயம் கெட்டது, கெட்டுப்போனது "அய்யே, அது அய்யப் பழம்", அழுகிய என்பதன் மருவல்.

அய்யா / ஐயா தகப்பன்

அரங்கு வீடு -சேமிப்பு அறை, பூசை அறை

அரதி -துன்பம், விருப்பமின்மை

அரிஷ்டம் -போலிச் சாராயம் அடிப்படையில் 'அரிஷ்டம்' என்பது ஆயுர்வேத மருத்துவ முறையில் தயாரிக்கப்படும் ஒரு திரவ மருந்தின் வகை. சில காலம் முன்பு, இந்த மருந்தான அரிஷ்டத்தை தயாரிக்கும் உரிமத்தை வைத்துக்கொண்டு சில சமூக விரோதிகள் சாராயம் தயாரிக்கலானர். இப்போது மக்களின் போராட்டங்களின் பயனாக அவ்வுரிமைகள் அரசால் திரும்பப்பெறப்பட்டு, அரிஷ்டம் தயாரிப்பிற்கும் தடை உள்ளது.

அளி / அழி கம்பி போட்ட பெரிய சாளரம் அளிபோட்ட வீடு

அறுப்பு -திட்டு, வசை, திட்டுதல், அறுவடை "எங்கையா இன்னிக்கி ஒரே அறுப்பு" - "என் தந்தை இன்று என்னை நன்றாக திட்டினார்"

அன்னா -அதோ, அங்கே "அன்னா நிக்காம்லே" - "அங்கே நிற்கிறான் டா"

அனக்கம் -சத்தம், அசைவு, இயக்கம் "என்ன அனக்கமே இல்லை!" - "என்ன அமைதியாக இருக்கிறது!"

ஆக்கத்தி- சிறிய வகை அரிவாள் மலையாள வழக்கு. குறிப்பாக தென்னை ஓலை அரிய பயன்படுத்தப்படுகிறது.

ஆக்கர் கடை -காயலான் கடை

ஆட்டும் -சரியென ஆமோதித்தல், ஆகட்டும் ஆகட்டும் என்பதன் மருவல்

ஐனிச் சக்கை / ஆயினி சக்கை ஈரப்பலா பலாப்பழத்தில் ஒரு சிறிய வகை

இங்கன -இங்கே

இங்கோடி -இந்த வழியாக

இஞ்ச -இங்கே "லேய், இஞ்ச வால" - "ஏய், இங்க வாடா"

இஞ்சோத்திருங்கோ- இங்கே வந்து உக்காருங்கள்

இணிஞ்சு / இனிஞ்சி பிய்த்து / பறித்து, பிடுங்குதல், கொய்தல், 'அடத்து' எடுத்தல்,'கிள்ளி' எடுத்தல் "மட்டிப்பளத்த தார்ல இருந்து இணிஞ்சு தின்னு" - "மட்டிப்பழத்தை தாரில் இருந்து உரித்து உண்". "நடுத்தெங்கிலிரிந்து நாலு கருக்கு இணிஞ்சுப் போடு" - "நடுத்தென்னை மரத்திலிருந்து நான்கு இளநீர் தேங்காய்கள் பறித்துப் போடு"

இரி -இரு, உட்கார்

இலையப்பம் -தென்னை, பனை, பலா, பூவரசு, வாழை, பாதாம், தேரளி இலையில் அரிசி மாவு, வெல்லம் அல்லது உப்புக்காரம், தேங்காய், எள், இஞ்சி/சுக்கு சேர்த்து வேகவைத்து சமைக்கும் அப்பம்

இவிய -இவர்கள் பொதுத்தமிழிலும் உள்ளது

இன்னா -இதோ, இங்கே

ஈக்கல் -தென்னை ஓலையின் நடுநரம்பு

உச்சி / உச்சை மதியம் உச்சிவேளை என்பது நண்பகலைக் குறிக்கும். மலையாள வழக்கு

உத்திப்போல -மிகச்சிறிய அளவு, கொஞ்சம் "பாயாசத்துல உத்திப்போல ஏலம் போட்டாப் போரும்" - "பாயாசத்தில் மிகச்சிறிய அளவு ஏலம் இட்டால் போதும்"

உணக்கு / ஒணக்கு காயவை "மருதாணி எலைய நல்லா ஒணக்கி அப்பறம் பொடிக்கணம்". திருக்குறள்: "தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்"

உழக்கு, பக்கா, மரக்கால் அரிசி அளவைகள் பொதுத் தமிழில் உள்ளது.

உரியாடல் -உரையாடல், பேச்சு "அவிய ரெண்டுவேரும் ஒடக்காச்சே, இப்போ உரியாடல் உண்டா?" - "அவர்கள் இருவருக்கும் இடையில் மனக்கசப்பாயிற்றே. இப்போது பேசிக்கொள்கிரார்களா?"

உருமா- திருமணத்தின் போது மணமகனின் தலையின் கட்டும் துணி

உளுக்கு -சுளுக்கு பொதுத்தமிழிலும் உள்ளது

ஊச்சாளி- மற்றவர்களை விட தகுதியில் உயர்ந்தவன் என ஏளனமாகச் சொல்லுதல் மலையாள வழக்கு. "அவரு பெரிய ஊச்சாளி. நம்மட்ட எல்லாம் பேசமாட்டாரு"

எங்கோடி -எந்த வழியாக

எத்து- உதை

எரப்பாளி -இழிச் சொல் / வசைச் சொல், இரந்து உண்பவர் மலையாள வழக்கு

எவிய- எவர்கள் பொதுத்தமிழிலும் உள்ளது

ஏசுதல் -திட்டுதல் பொதுத் தமிழில் உள்ளது

ஏம்பக்கம்- ஏப்பம்

ஒக்கல் -இடுப்பு "எப்போ பாத்தாலும் கொளந்தைய 'ஒக்கல்லயே' ஒக்காத்தி வெச்சிரிக்கியே.. அத கீளத்தான் உடேன்" - "எப்போது பார்த்தாலும் குழந்தையை இடுப்பிலேயே வைத்துக்கொண்டிருக்கிராயே.. அதனை கீழத்தான் விடேன்"

ஒக்கும் / ஒக்காது முடியும் / முடியாது மலையாள வழக்கு

ஒட்டாங்க்கண்ணி- உடைந்த மண்பானையின் ஒரு துண்டு

ஒடக்கு / உடக்கு சண்டை, மனக்கசப்பு "சந்தைல அவிய ரெண்டுவேருக்கும் ஒடக்காயிப்போச்சு" - "சந்தையில் அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை வந்துவிட்டது"

ஒடுக்கம் -பிறகு, கடைசியில் மலையாள வழக்கு. "ஒடுக்கம், என்ன ஆச்சி?" - "அப்புறம், என்ன ஆயிற்று?"

ஒண்ணி- ஒன்றாக்கு (அஸெம்பிள்) ஒண்ணிசது - ஒன்றாகியது (அஸெம்பிள்ட்)

ஒருபாடு / ஒருவாடு நிறைய மலையாள வழக்கு

ஒலுங்கு- கொசு பொது வழக்கிலும் உள்ளது

ஒறச்சு -உரக்க மலையாள வழக்கு. "லேய், அந்த மூணாவது பாடத்த ஒறச்சு படி பாப்பம்" - "ஏய், அந்த மூன்றாவது பாடத்தை உரக்கப் படி பார்ப்போம்"

ஓட்டன்காய் பிஞ்சு -புளியங்காய்

ஓர்மை / ஓற்மை நினைவு-ஞாபகம் மலையாள வழக்கு. "ஓர்மை இருக்கா?"

கக்குமடி -வேட்டியை மடித்துக் கட்டுதல் மீனவர் வழக்கு

கச்சவடம் -வியாபாரம் மலையாள வழக்கு

கசேரி (சாய்வு)- நாற்காலி மலையாள வழக்கு

கஞ்சித்தாள் -ஈகநார் காகிதம் (பாலிதின் பேப்பர்)

கட்டை- குட்டை

கடலாசு -காகிதம் மலையாள வழக்கு

கடவப் பெட்டி- பனை ஓலையால் செய்யப்பட பெட்டி

கடுவன் -ஆண் மிருகம் "கடுவன் பூனை" - "ஆண் பூனை"

கதம்பல் / கதம்ப தேங்காய் மட்டை

கம்புக் கூடு- கைக்குழி, அக்குள், கக்கம், கழக்கட்டு

கயறு / கேறு ஏறு மலையாள வழக்கு

கசேரி- நாற்காலி

கரச்சி அழுகை "நேத்து எம்பையன் மிட்டாஸ் வேண்டித்தரணம்னு ஒரே கரச்சி" - "நேற்று என் மகன், மிட்டாய் வாங்கித்தரவேண்டும் என ஒரே அழுகை"

கருக்கு- இளநீர், இளம் தேங்காய்

கல்சான் -கால்சட்டை மீனவர் வழக்கு

கறுக்கு / கறுக்கல் இருளாகும் மாலை பொழுது, அந்தி, முன்னிரவு

கழச்சி -கோலி குண்டு

கழஞ்சி- தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சோறு

கழனி / கழநி கழுநீர், மாடுகள் குடிக்கும் ஒரு வகையான கலவை. சமையலில் வடி கட்டிய தண்ணீர், பழத்தோல்கள் எல்லாம் சேர்ந்தது

கழைக் / களைக் கம்பு மரங்களிலிருந்து காய்கனிகள் பறிப்பதற்காக உதவும் நீண்ட கம்பு

கன்யாரி / கன்யாமாரி கன்னியாகுமரி என்பதன் கொச்சை வடிவம் கன்னியாகுமரி

கஷண்டி -தலை வழுக்கை மலையாள வழக்கு.

காஞ்ச வெள்ளம்- வெந்நீர், சுடுதண்ணீர்

காத்தாடிக் மரம் -சவுக்கு மரம்

காந்தல்- எரியும் உணர்வு பொதுத்தமிழிலும் உள்ளது

காணாம் -கொள்ளு மலையாள வழக்கு

கிண்ணி கரண்டி, வாயகண்ட சிறு கிண்ணம்

கிறங்கு / கெறங்கு / கறங்கு சுற்று "வெயில்ல கடந்து கறங்காதே" - "வெயிலில் சுற்றாதே"

கிளாத்தி / க்ளாதி கெளுத்தி மீன்

கீழ / கீழ் கிழக்கு

குங்குவப் பச்சை -சுடலை மாடன் சிலைக்கு சார்த்தப்படும் சிகப்பான ஒரு கலவை

குட்டுவம், குத்துப்போணி பெரிய, வாய் அகன்ற பாத்திரம்

குண்டனி -கோள் சொல்லுதல், புறம் சொல்லுதல் பொதுவாக கோள்-சொல்லும் / கெட்ட-எண்ணம் கொண்ட பெண்களைக் குறிக்கும் சொல்

குன்னிமுத்து- குந்துமணி / குன்றிமணி / குண்டுமணி

குப்பி -புட்டி பொதுத் தமிழில் உண்டு.

கும்பிளி- (நீர்) குமிழி

குருசு- சிலுவை மலையாள வழக்கு. க்ராஸ் என்பதன் மருவல்.

குழை / கொழை ஆடு மாடுகளுக்கு உணவாக வைக்கப்படும் இலை தழை

குழை இறக்கம்- மரத்தில் இருந்து உபரி இலைகளை வெட்டுதல்

குளிவு -சிறு கிண்ணம்

குளியை / குளிகை மாத்திரை மலையாள வழக்கு

குளுவன் / குளுவத்தி குறவன்/குறத்தி போன்ற நாடோடிகள்

குறுக்கு- பின் இடுப்பு, கீழ் முதுகு

கூந்தை / கூந்த உண்டு முடித்த நுங்கின் எஞ்சிய பகுதி கூந்த வண்டி - இரு கூந்தைகள் வைத்து சிறுவர்கள் விளையாடும் வண்டி

கூனி- உருவத்தில் சிறியதாய் இருக்கும் ஒருவகை இறால் (ஷ்ரிம்ப்)

கைலேஞ்சி / கைலேஞ்ச் கைக்குட்டை

கெளிறு -மீசை வைத்த குளத்து மீன் வகை

கொச்சங்காய் -குரும்பைத் தேங்காய் மலையாளத்தில் 'கொச்சு' என்றால் 'சிறியது' என்று பொருள்

கொச்சு முறி- சிறிய அறை மலையாள வழக்கு.

கோடி -புதுத்துணி பொதுத்தமிழிலும் உள்ளது

கொண்டி -கதவு மற்றும் சாளரங்களை இறுக்கிச் சார்த்தப் பயன்படும் கொக்கி போன்ற அமைப்பு

கொதம்பு -தென்னம் பாளை

கொப்பன் -தகப்பன் 'உங்கப்பன்' அல்லது 'எங்கப்பன்' என்பதன் மருஉ

கொம்மை -தாயார் 'உங்கம்மை' அல்லது 'எங்கம்மை' என்பதன் மருஉ

கொமை- ஏளனம் செய், கிண்டல் செய் "சும்மா எப்ப பாத்தாலும் அவள கொமைக்யாதே டெ, அழுதுருவா" - "அவளை ஏளனம் செய்யாதே, அழுதுவிடுவாள்"

கோம்பை- பித்தன், அசடு, கிறுக்கன்

கோயில்கொடை -கோயில் திருவிழா

கோரி குடி- மொண்டு குடி

கொல்லாம் முந்திரி -கொல்லாங் கோட்டை - முந்திரிப் பருப்பு, கொல்லா மரம் - முந்திரி மரம், கொல்லாம் பழம் முந்திரிப் பழம்

கொள்ளாம்- நன்று / நன்றாக-உள்ளது மலையாள வழக்கு.

கோளாம்பி -துப்புக் கிண்ணம் "லெய், அங்கன இரிக்கில்லா அந்த 'கோளாம்பிய' எடுல.. எச்சி துப்பனு"

சக்கரம் -பணம்

சக்கரை -வெல்லம்

சக்கைப் / சக்கப் பழம் பலாப் பழம் மலையாள வழக்கு.

சக்கோளி- அரிசிமாவு, தேங்காய் மற்றும் இரால் / இறைச்சியால் தயாரிக்கப்படும் காரமான அசைவ உணவு

சட்டம்பி- கேடி, தாதா, ரவுடி மலையாள வழக்கு

சட்டவம்- வாய் அகன்ற பெரிய பாத்திரம்

சட்டுவம் தட்டையான கரண்டி தோசைச் சட்டுவம் - தோசைக் கரண்டி

சடவு -சோம்பல், உடல் உளைச்சல்

சத்தி -வாந்தி ஸ்ரத்தி எனும் மலையாளச் சொல்லின் திரிபு

சப்பட்டை- கெட்டுப்போன, கெட்டவர் "அந்த வானொலிப்பெட்டி சப்பட்டையாப் போச்சு" - "அது வானொலிப்பெட்டி கெட்டுவிட்டது/பழுதாகிவிட்டது"; "அந்த ஆள் ஒரு சப்பட்டை" - "அந்த ஆள் கேட்ட குணமுள்ளவர்". ஆனால், 'சப்பட்டை' என்னும் வழக்குச்சொல் தமிழகத்தின் நடு மற்றும் வட மாவட்டங்களில் "சப்பையான" அல்லது "நசுங்கிய" எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

சமுட்டுதல் / சமுண்டு / சவுட்டுதல் / சவட்டுதல் மிதித்தல்

சருவம் -சிறிய பாத்திரம்

சள்ளை- தொல்லை "அவன் ஒரு சள்ளையக்கும், கேட்டியா" - "அவன் ஒரு தொல்லை தருபவனாக்கும்"

சளம் -வஞ்சகன், வீணானவன், உருப்படாதவன் (சரியான பொருளா?)

சறக்குதல் -சறுக்குதல், வழுக்குதல்

சாடுதல்- தாவுதல், குதித்தல் "மக்களே, அங்கெல்லாம் தொளியா இருக்கு, சாடிச்சாடி வராதே டெ, சறக்கி விளுந்துருவெ". என்றாலும், பொதுவழக்கில், சாடுதல் என்றால் திட்டுதல் என்று பொருள்.

சாணாங்கி -சாணம்

சாப்பு / சேப்பு சட்டை பை

சாயிப்பு- இஸ்லாமியர் சாகிப் என்பது பொதுவான இசுலாமியப் பெயர். இதைக் கொண்டு இசுலாமியரைக் குறிக்கலாயினர்.

சாரம்- லுங்கி

சிங்ஙன் பழம் -வாழைப்பழத்தில் ஒரு நீண்ட வகை

சிவீந்திரம்- சுசீந்திரம் என்பதன் கொச்சை வடிவம் ஊரின் பெயரின் மருஉ

சின்ன உள்ளி / ஈருள்ளி சின்ன வெங்காயம்

சீணம் / ஷீணம் சோர்வு, உடல் உபாதை பொதுவழக்கிலும் உள்ளது

சீனிக் கிழங்கு -சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சீனிவரக்காய் -கொத்தவரங்காய் / சீனி அவரைக்காய் பொதுவழக்கிலும் உள்ளது

சுண்டு -உதடு மலையாள வழக்கு.

சும்மை- சும்மா

சுருக்கா -ஒரு வகை பலகாரம்

சூடு அடித்தல்- போர் அடித்தல்

சூரம்பாடு -சூரன் போர், சூரன் திருநாள்

செத்தோல சிறிது "கடைக்காரரே செத்தோல சுண்ணாம்பு குடுமே!" - "கடைக்காரரே சிறிது சுண்ணாம்பு கொடுங்களேன்!", செத்த என்பது சிறிதே என்பதன் மருவல். பிற தமிழ் வழக்குகளிலும் காணப்படும்

செல்லி -தென்னை மரத்தைத் தாக்கும் ஒருவகை வண்டு

செவிட், செவிடு கன்னம்+காது சேர்ந்த பகுதி, மீன்களுக்கு செவுள் இருக்கும் பகுதி "அவன் செவிட்ல பொளீர்னு அறஞ்சான்".

செறை- தொல்லை, எரிச்சல்

செறுத்தல்- தடுத்தல் பொதுவழக்கிலும் உள்ளது

செறுப்பம் / சிறுப்பம் சிறு வயது

சொக்காரன், சொக்காரி சொந்தக்காரன், சொந்தக்காரி / சகோதரன், சகோதரி / ஒன்று விட்ட பெரியப்பா சித்தப்பா பிள்ளை

சொளவு / சொளகு முறம்

சோறு வைப்பு -திருமணத்தின் முந்தைய தின விருந்து

டப்பர் வாளி -ஞெகிழி வாளி, பிளாஸ்டிக் வாளி

டப்பி -சிறு டப்பா பொது வழக்கிலும் உள்ளது

தட்டு -மாடி

தடியங்காய் -சாம்பற் பூசணிக்காய் மலையாள வழக்கு

தடுக்கு -பனை ஓலையால் செய்யப்பட்ட சிறு பாய்

தள்ளை -தாய்

தாக்கோல் -சாவி

தாமிரபரணி ஆறு குழித்துறை ஆறு நெல்லை மாவட்டத்தில் ஓடும் தாமிரபரணிக்கும் இதற்கும் தொடர்பு

தாளி- இலைச்சாறு, ஒரு வசைச்சொல்

தாறா- வாத்து ஈழத்தமிழ் வழக்கு, மலையாள வழக்கு.

துட்டி வீடு- துக்க வீடு

துண்டு -குற்றாலந்துண்டு, சுட்டித் துவர்த்து, ஓணத்துண்டு

துப்புநீ- உமிழ்நீர் "மடையா, துப்புநீ தெளிக்யாம ஒனக்கு பியாசத் தெரியாதா?". துப்புநீர் என்பதன் மருவல்.

துவரன் -பொரியல் மலையாள வழக்கு

துவற்து / தொவற்து துடைப்புத் துண்டு

துளுவன் பழம் -வாழைப்பழத்தில் ஒரு தடித்த வகை பொதுவழக்கிலும் உள்ளது

துறையல்- சாவி

தூப்பு -துடைப்பம்

தீட்டம் -மலம் மலையாள வழக்கம்

தெங்கு / தெங்ஙு தேங்காய் / தென்னை மலையாள வழக்கு. ஔவையாரின் மூதுரை: "நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி; என்று தருங்கொல் எனவேண்டா - நின்று; தளரா வளர்`தெங்கு` தாள்உண்ட நீரைத்; தலையாலே தான்தருத லால்"

தெண்டல்- ஓணான்

தெரளி இலை -பிரிஞ்சி இலை

தெறி -இளகிய மணல்மேடு, கெட்டவார்த்தை மலையாள வழக்கு.

தெறி மண்- செம்மண்

தேரடு- இறுகிய மண்மேடு

தேழி / தேளி மீசை வைத்த குளத்து மீன் வகை

தொட்டி ஒரு இழிச்சொல் / வசைச்சொல், வெட்டி / ஊதாரி / நாகரீகம்-இல்லாதவர் தண்ணீர் தொட்டி போன்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. "அவனா, அவன் ஒரு தொட்டிப் பய". தொட்டியர் என்போரும் உளர்.

து/தொவர்த்து தலைதுடைக்க பயன்படும் துண்டு, துவட்டுவது

தொரப்ப, து/தொறப்பை துடைப்பம், விளக்குமாறு

தொலி -தோல் "பளத்த தின்னிட்டு தோலிய தொட்டீல போடு மக்கா, செரியா"

தொளவடை -துளையிட்ட வடை தொள - துளை என்பதன் மருவல்

தொளி- சேறு

தோளி உழவு -மழைக்கால/பனிக்கால உழவு

தோண்டி -பனை ஓலையில் செய்யப்படும் ஒரு தண்ணீர் சுமக்கும் குழிந்த பாத்திரம் பொதுத்தமிழில் 'தோண்டி' என்பது மண்ணால் செய்யப்படும் பாத்திரம்.

நடூஸ் -நடுவில், மையத்தில்

நளி (செல்லமாக) கேலி செய்தல் "தாத்தா சிறுவர்களிடம் நளி அடித்து அவர்களை மகிழ்வித்தார்" - "தாத்தா சிறுவர்களை கேலி செய்து அவர்களை மகிழ்வித்தார்"

நாயடி -ஒரு பழங்குடியினத்தின் பெயர்

நாரோயில் / நாறோல் நாகர்கோவில் என்பதின் கொச்சை வடிவம் நாகர்கோவில்

நிக்கர்- அரைகால்சட்டை நிக்கர் (knicker) என்றால் பெண்களின் உள்ளாடை என்று பொருள்.
நிக்கான் / நிக்கா/நிக்கிறாள் நிற்கிறான்/ நிற்கிறாள், வேலை செய்கிறான் / வேலைசெய்கிறாள் "அவ துணிக்கடைல நிக்கா" - "அவள் துணிக்கடையில் வேலைசெய்கிறாள்". நிற்கிற என்பதன் மருவல்

நுள்ளல் -கிள்ளல் "மகன்: அம்மா, இவன் என்ன நுள்ளுகான், ரெம்ப வலிக்யு; தாய்: மோனே ரொம்ப நோவுகா?" - "மகன்: அம்மா, இவன் என்னை கிள்ளுகிறான், ரொம்ப வலிக்கிறது; தாய்: மகனே வலிக்கிறதா?"

நிழல் தங்கல் -ஒரு அய்யாவழி வழிபாட்டுத் தலம்

நெட்டி- கஞ்சி அல்லது கூழ் குடிப்பதற்கு சிலவகை இலைகளால் (மா, பலா, தென்னை) செய்யப்படும் கரண்டி போன்ற அமைப்பு

நேரியல்- நீண்ட துண்டு

நோவு / நோகல் வலி பொதுத்தமிழிலும் உள்ளது

பக்கரா -சுருக்குப் பை

பக்கி -வண்ணத்துப்பூச்சி

பசியாறல்- உணவு உண்ணல், சாப்பிடல் பொதுத்தமிழிலும் உள்ளது

படக்கு -பட்டாசு

படிக்கம்- துப்புச் செட்டி, எச்சில் உமிழ்வதற்கு பயன்படும் அகண்ட வாய் கொண்ட பாத்திரம்

பண்டு- முன்பு, பழைய காலம் மலையாள வழக்கு

பத்தாயம் -தானியங்கள் பாதுகாக்கும் அறை, குதிர் பொதுத் தமிழில் உண்டு.

பதி -ஒரு அய்யாவழி வழிபாட்டுத் தலம்

பய்ய / பைய மெதுவாக, மெல்ல "ஏல பைய பேயிட்டு வா என்னா" - "அடெ, மெதுவாக போய்விட்டுவா, சரியா". திருக்குறள்: "அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் `பைய` நகும்.". இரண்டாவது அடியில் தலைவி மெதுவாக சிரிக்கிறாள் என்பதை "பைய நகும்" என்கிறார் வள்ளுவர்.
பயறுவது பயம் கொள்வது "நான் இருட்ல நின்னிட்ரிந்தேன்லா.. என்ன பியாய்னி நெனச்சு அவன் பயறிட்டான்.. லே.. பயறாதே டே" - "நான் இருட்டில் நின்றுகொண்டிருந்தேன் அல்லவா, என்னை பேய் என எண்ணி அவன் பயந்துவிட்டான்.. ஏய். பயந்து விடாதே"

பயினி -பனை பதனீர்

பல்லாரி- உள்ளி பெரிய வகை வெங்காயம் பல்லாரி என்னும் ஊரில் விளையும் வெங்காயம்.

பலவஞ்சனம் -மளிகை, பலசரக்கு மலையாள வழக்கு

பலிசை- வட்டி மலையாள வழக்கு

பறதி- அவசரம், பதற்றம் போதுவழக்கிலும் உள்ளது

பாச்சா -கரப்பான்பூச்சி

பாஞ்சுப் பழம் -சீதாப் பழம் "அன்னா செபஸ்டியான் வீட்ல பாத்தியா, பாஞ்சுப்பழம் கொத்துகொத்தா
காச்சுக் கெடக்கு"

பாம்பிரி- திண்ணை, வராந்தா தேங்காய்ப்பட்டண வழக்கு

பாம்பு குடிகாரன் "அவன் ஒரு பாம்பு, லேய்" - "அவன் ஒரு குடிகாரன்"

பாறக்கோல் / பாரைக்கோல் கடப்பாரை

பின்னல்லாம? / பின்னல்லாதக்கி? எரிச்சலொடு ஆமோதித்தல், "அந்த பதிலைத் தவிர வேறென்னவாக இருக்கமுடியும்?" "நபர்1: எல்லா சோத்தையுமா சாப்டுட்டெ? நபர்2: பின்னல்லாதக்கி? அவ்ளோ பசி" - "நபர்1: சோற்றை முழுவதுமாக நீயா உண்டாய்? நபர்2: எனக்கு அவ்வளவு பசி. அதைத் தவிர வேறு என்ன என்னால் செய்திருக்கமுடியும்?"

பீயாத்தி -கத்தி 'பிச்சாத்தி' எனும் மலையாள வழக்கின் மருஉ

புள்ளியோ -சிறு பிள்ளைகள் ஆம்புள்ளியோ, பெம்புள்ளியோ.. "ஆண் பிள்ளைகள், பெண்பிள்ளைகள்"

புள்ளோ -மகனே / மகளே, செல்லமாக யாரையும் அழைப்பது

புளியமுத்து- புளியம்பழ கொட்டை

புளியாணம் -ரசம் இசுலாமியர்களிடையே பிரபலமான ஒருவகையான சுவை, மணம் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட ரசம். காயல்பட்டினம், தேங்காய்பட்டினம் மக்களிடையே இந்த ரசம் மிகப் பிரபலம்.

புறத்தால / புறத்தோடி / பொறத்தால / பொறத்தோடி பின்னால், வெளியே "இந்த குப்பைய பொறத்தால இருக்ய குப்பத்தொட்டீல போய் கொட்டு" - "இந்த குப்பையை வீட்டிற்கு பின்னால் இருக்கும் குப்பைத்தொட்டியில் போய் கொட்டு"; புறம் - வெளி

பூஞ்சட்ட / பூஞ்சட்டை துடப்பம் செய்ய பயன்படும் ஒருவகை மெல்லிய புல், மெல்லிய மயிர்

பூவெண்ணெய் நறுமணம் சேர்த்த கூந்தல் எண்ணை

பெனஞ்சு -பிசைந்து

பெர / பெரை அறை மலையாள வழக்கு

பெஹளம் -அமைதியின்மை / கொந்தளிப்பு / குழப்பம் மலையாள வழக்கு.

பேடு -பூச்சி அரித்த ஒரு மரத்தின் கெட்டுப்போன பகுதி, முதிராமல் கெட்டுப்போன தேங்காய் "அந்த மரத்துல பேடு விளுந்துருக்கு"

பேயன் பழம் -வாழைப்பழத்தில் ஒரு தடித்த வகை பொதுவழக்கிலும் உள்ளது

பொடி உழவு -வெயில் கால உழவு

பொத்தை- உடல்பருத்த, குண்டு, தடித்த

பொழி- தட்டல் / மறம் அடித்தல் விளை நிலத்தை சமன்படுத்துதல்

பொறவு- பிறகு, அப்புறம் "பொறவு, அந்த கதைல என்னாச்சினி செல்லு" - "பிறகு, அந்த கதையில் என்ன ஆயிற்று என்று சொல்லு"

பொறத்தால -பின்னால் "அந்த போட்டோல அந்த வளத்தியான ஆளுக்க பொறத்தால ஒருத்தன் நிக்க்யானில்லா, அது நானாக்கும்"

போஞ்சி -எலுமிச்சை பழரசம்

போட்டு -அது போகட்டும், கவலை கொள்ளாதே

போடதி- பின் மண்டை

போணி- வாய் அகன்ற உயரம் குறைந்த பாத்திரம்

மக்கா / மக்களே மகனே / மகளே, செல்லமாக யாரையும் அழைப்பது "மக்கா, ஒங்க வீட்ல எல்லாரும் சௌக்கியமா?"

மஞ்சணாத்தி -மல்பரி பொதுவழக்கில் மஞ்சணாறி என அழைக்கப்படுகிறது

மஞ்சு -கூரையை இரு பக்கத்திலிருந்தும் தாங்கிப்பிடிக்கும் முக்கோண வடிவிலான சுவர் அமைப்பு

மட்டுப்பாவு / மட்டுப்பா மாடி, உப்பரிகை, மொட்டை மாடி

மட்டிப் பழம்- வாழைப்பழத்தில் ஒரு சிறிய வகை குமரி மாவட்டத்தில் மட்டுமே கிடைக்கிறது.

மண்ணாந்தை- அறிவிலி; முட்டாள்

மணக்கா சோப்பு -சவக்காரம், சலவை சோப்பு

மணி மேடை- மணிக் கூண்டு

மயினி -மச்சினி(மச்சினன்), கொழுந்தி, கொழுந்தியாள், மாப்பிளையின் தங்கை, அத்த பொண்ணு, மாமன் பொண்ணு, மனைவியின் அக்கா "மதினி" என்பதின் மரூஉ

மரக்கறி -காய்கறி ஈழத்தமிழ் வழக்கு, மலையாள வழக்கு.

மரச்சீனிக் கிழங்கு -மரவள்ளிக் கிழங்கு

மல்லாரி -ஆர்பரிப்பு, ஆர்ப்பாட்டம் செய்தல், உரத்த ஓசையோடு பேசுதல் "நடு ரோட்ல நின்னிட்டு மல்லாரி வெச்சிட்டிருந்தான்" - "சாலையின் நடுவில் நின்றுகொண்டு ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தான்"

மலத்து -கவுத்து "அடிமுறை தெரிஞ்சா மட்டும் அவன மலத்தித் தள்ளீருவேறு!" - "அடிமுறை
(தற்காப்புக்கலை) தெரிந்தால் மட்டும் அவனை அடித்து கவுத்தி தள்ளிவிடுவேராக்கும்!", மலத்து - கவிழ்த்து என்பதை விட நிமிர்த்து என்பது உசிதம். மலந்து கிடந்தான் என்பது காண்க. போட்டு மலத்திட்டான் என்பதூஉம்.

மற்றவன் / மத்தவன் / மற்றவள் / மத்தவள் / மற்றது / மத்தது / மற்றவரு / மத்தவரு இங்கு இல்லாத இன்னொருவர், மூன்றாமவர் "அதோ, மத்தவரு வறாரு"

மனசிலாகுதல் / மனசிலாவுதல் புரிதல் "என்னா, நான் சொன்னது மனசிலாச்சா?" - "என்ன, நான் சொன்னது புரிந்ததா". 'மனசிலாகுதல்' என்பது ஒரு மலையாள வழக்குச் சொல்

மாப்பிள்ளைக்கு இருந்தாச்சா? பெண்ணுக்கு திருமணம் நடந்துவிட்டதா? இசுலாமியர் வழக்கு

மாறி -அதற்கு பதிலாக, அதற்கு மாறாக, ஆனால் "நேத்து நல்ல மழை பெய்யும்னு நெனச்சென், மாறி நல்ல வெயில்" - "நெற்று நல்ல மழை பெய்யும் என நினைத்தேன், அதற்கு மாறாக நல்ல வெயில் அடித்தது"

மிட்டாசு / மிட்டாஸ் / மிட்டாசி மிட்டாய் பொது வழக்கிலும் உள்ளது

முக்கு -மூலை

முக்குவர்- மீனவர்

முந்திரி கொத்து பயத்தம்பருப்பால் செய்யப்படும் ஒரு இனிப்புப் பலகாரம்

முட்டாசு / முட்டாஸ் / முட்டாசி மிட்டாய் பொது வழக்கிலும் உள்ளது

முடுக்கு -சந்து

முடை / மோடை பின்னு "கூடைய மோடை" - "கூடையைப் பின்னு"

முண்டு- வேட்டி மலையாள வழக்கு.

முறி -அறை

முத்தம்- முற்றம் /முற்றம்

மூடு -மரத்தின் வேரின் மேலே தெரியும் கனமான பகுதி

மேல / மேல் மேற்கு

மொந்தன் பழம்- வாழைப்பழத்தில் ஒரு தடித்த வகை

மொளவுக்கா- மிளகாய் மிளகாய் என்பதன் மருவல்

மொளுதிரி- மெழுகுத்திரி என்பதின் திரிபு

மோந்தி -அந்தி, சாயுங்காலம்

மோட்டுவளை- வீட்டுக் கூரையின் உச்சிச் சேர்க்கைக்கு ஆதாரமாகவைக்கும் மரத்துண்டு

மோளே- செல்லமாய் மகளே

மோனே -செல்லமாய் மகனே

ரஸகதலிப் பழம் -வாழைப்பழத்தில் ஒரு சிறிய வகை

லாமடி உலை -மூடி மீன்கறி வைக்கும் மண்சட்டியின் மூடி மீனவர் வழக்கு

லாறி -லாரி

லெட்டு -பந்துமுனை பேனா "லெட்டு இருக்கா?" - உங்களிடம் பேனா (ரீபில்) இருக்கா?

வச்சூத்தி -புனல் வைத்து ஊற்றி என்பதன் திரிபு

வட்டி -பனை ஓலையால் ஆன பாத்திரம்

வட்டிலு- தட்டு

வண்ணம் -உடல்பருத்த, குண்டு, தடித்த "அவ என்னா வண்ணம்!" - "அவள் உடல்பருத்து காணப்படுகிறாளே!"

வத்தல் / வற்றல் காய்ந்த மிளகாய் "அண்ணே ஒரு கிலொ வத்தல் கொடுங்க" - இங்கு "வத்தல்" என்பது காய்ந்த மிளகாயையே குறிக்கிறது

வாரியல் -துடைப்பம் வாரிக்கட்டை - துடப்பக்கட்டை

வாலாமடை -பொறுக்கி, சுட்டி, ரவுடி

வழுதலங்காய் / வழுதனங்காய் நீண்ட கத்தரிக்காய், வழுதுணைக் காய் மலையாள வழக்கு. என்றாலும், மலையாளத்தில் எல்லாவகையான கத்தரிக்காய்களையும் வழுதலங்காய் என்றே அழைக்கின்றனர். ஆனால், குமரிமாவட்டத்தில், உருண்டை கத்தரிக்காய்களை 'கத்தரிக்காய்' என்றே அழைக்கின்றனர்.

விசர்ப்பு -வியர்வை மலையாள வழக்கு

விரவி- பிசைந்து / கலந்து

விலக்கு -ஊரின் எல்லை

விளம்பு -பரிமாறு

விளை, வெளை விளைநிலம் / தோப்பு

விறவு- விறகு என்பதன் திரிபு

வீட்டு நடை- வீட்டு வாசற் படி

வீடி- பீடி

வீச்சம் -துர்நாற்றம், கெட்ட வாடை ஒரு சில பொதுவழக்கிலும் உள்ளது

வெக்கை -சூடு பொதுவழக்கிலும் உள்ளது

வெட்டோத்தி- வெட்டுக்கத்தி

வெடலை- இளநீர் விடலை என்பதன் மருவல். பொதுவாக, இளமை என்று பொருள்.

வெப்ராளம் -மனப்புழுக்கம் மலையாள வழக்கு. "லெய், வெப்ராளப்படாதே!" - "மனப்புழுகம் கொள்ளாதே"

வெள்ளுள்ளி / வெளுத்துள்ளி பூண்டு மலையாள வழக்கு

வேண்டுதல்- வாங்குதல் மீனவர் வழக்கு. "திங்கள்சந்தைக்கு போறேன், ஏதாவது வேண்டணுமா?" - "திங்கள்சந்தைக்கு போகிறேன், ஏதாவது வாங்க வேண்டுமா?". "புது சைக்கிளா? எங்க வேண்டினீரு?" - "புதிய மிதிவண்டியா? எங்கே வாங்கினீர்கள்?"

வேளம் பேச்சு "இந்த ஒரு மாதிரி ஆளுவள மெனெக்கெடுத்துற வேளம் செல்லக்கூடாது" - "இந்த மாதிரி நேரத்த வீணடிக்கும் பேச்செல்லாம் பேசக்கூடாது"

றோஸ் -ரோஜா

நன்றி ... விக்கிப்பீடியா இணையம்...
avatar
bparthasarathi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 165
மதிப்பீடுகள் : 60

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum