ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

2014 காமன்வெல்த் போட்டிகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Sat Jul 12, 2014 1:55 am

2014 காமன்வெல்த் போட்டிக்கு 224 விளையாட்டு வீரர்களை களமிறக்குகிறது இந்தியா


2014 காமன்வெல்த் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 3 வரை கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது.


இந்த போட்டிக்கு 14 வெவ்வேறு விளையாட்டுக்களில் இருந்து 224 இந்திய விளையாட்டு வீரர்களை அரசின் சொந்த செலவில் அனுப்ப விளையாட்டு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 17 விளையாட்டுகள் அடங்கிய 261 பதக்கங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவிலிருந்து நெட்பால், ரக்பி செவன்ஸ் மற்றும் ட்ரையத்லான் விளையாட்டுகளுக்கு மட்டும் வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

இந்திய வீரர்களுக்கு பிரபல பால் உற்பத்தி நிறுவனமான 'அமுல்' ரூ.1 கோடி ஸ்பான்சர் செய்துள்ளது. சென்ற 2010 காமன்வெல்த் போட்டியில், இந்தியா 38 தங்கப் பதக்கம், 27 வெள்ளி பதக்கம், 36 வெண்கல பதக்கம் என மொத்தம் 101 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.


Last edited by சிவா on Tue Jul 22, 2014 2:42 am; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Sat Jul 12, 2014 1:59 am

இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கலுக்கு 6–வது இடம்

20–வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் வருகிற 23–ந் தேதி முதல் ஆகஸ்டு 3–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ஸ்குவாஷ் வீரர்–வீராங்கனைகளுக்கு போட்டி தர வரிசையை உலக ஸ்குவாஷ் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் போட்டி தர வரிசையில் இங்கிலாந்து வீரர் நிக் மேத்யூ முதலிடம் பிடித்துள்ளார். இந்திய வீரர் சவுரவ் கோஷல் 4–வது இடம் பெற்றுள்ளார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் மலேசிய வீரர் நிகோல் டேவிட் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் 6–வது இடம் பெற்றுள்ளார்.

ஆண்கள் மற்றும் பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய அணி கலந்து கொள்கிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Tue Jul 22, 2014 12:40 am

காமன்வெல்த் கிராமத்தில் இந்திய வீரர்களுக்கு பொது கழிப்பறை

ஸ்காட்லாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கொள்வதற்காக அங்கு சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு பொது குளியலறை வழங்கப்பட்டுள்ளது.

கிளாஸ்கோவில் வயிற்றுப்போக்கு நோய் பரவி வருவது கவலையளிப்பதாக இருந்தபோதிலும், போட்டி ஒருங்கிணைப்பாளர்களின் விருந்தோம்பல் நன்றாக இருப்பதாக இந்திய வீரர்கள் தெரிவித்தனர். எனினும், டெல்லியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது போன்று காமன்வெல்த் கிராமத்தில் கழிப்பறையுடன் கூடிய அறைகளுக்கு முன்னுரிமை அளித்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

“டெல்லியில் உருவாக்கப்பட்ட காமன்வெல்த் கிராமம் சிறப்பாக திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. அதிக அளவில் திறந்தவெளி இருந்தது. ஒட்டுமொத்த தரத்தைப் பொறுத்தவரையில், இங்கு சிறப்பாக உள்ளது. உணவும் நன்றாக இருக்கிறது. டாய்லெட்டுகளை பகிர்ந்துகொண்டுள்ளபோதிலும், இதுவரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை” என்றார் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்.

சரத் கமலின் பயிற்சியாளர் பவானி முகர்ஜி கூறுகையில், “குடிசைகள் போன்ற மிகச்சிறிய அறைகள் கொண்ட குடியிருப்பு எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் இரண்டு குளியலறைகள், 4 அறைகள் உள்ளன. இது பிரச்சினையாக இருந்தாலும், விளையாட்டு கிராமம் என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த சிறிய குறைபாடுகளை இங்குள்ள நல்ல சீதோஷ்ண நிலை சரி செய்கிறது. வயிற்றுப் போக்கு அபாயம் இருப்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கிறோம்” என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Tue Jul 22, 2014 2:39 am

மூவர்ணக் கொடியுடன் விஜய் குமார்கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டில், இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்லும் கவுரவம், துப்பாக்கிசுடுதல் வீரர் விஜய குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டு நாளை துவங்குகிறது. இதன் துவக்க விழாவில், இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏந்திக் செல்லும் கவுரவம், துப்பாக்கிசுடுதல் வீரர் விஜய குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2012ல் நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இவர், டில்லி காமன்வெல்த் (2010) விளையாட்டில், மூன்று தங்கம், ஒரு வெள்ளி உட்பட நான்கு பதக்கங்களை கைப்பற்றினார். தவிர இவர், 2010ல் நடந்த ஆசிய விளையாட்டில் ஒரு வெண்கலம் வென்றார்.

விஜய் குமாருக்கு மாற்று வீரராக, மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு, லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருவேளை விஜய் குமார் காயம் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கிக் கொண்டால் மட்டும், யோகேஷ்வர் தத் மூவர்ணக் கொடி ஏந்தி வருவார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Tue Jul 22, 2014 2:39 am

இந்திய வீராங்கனைகள் நம்பிக்கை

புதுடில்லி: ‘‘காமன்வெல்த் விளையாட்டு 4*100 மீ., தொடர் ஓட்டத்தில் பதக்கம் கிடைக்கும்,’’ என, இந்திய வீராங்கனைகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில், 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நாளை துவங்குகிறது. இதில், 4*100 மீ., தொடர் ஓட்டத்தில் பங்கேற்க இந்திய வீராங்கனைகள் நேற்று கிளாஸ்கோ சென்றனர். டில்லி காமன்வெல்த் விளையாட்டில் நடந்த 4*100 மீ., தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது. இதில் இடம் பெற்ற இந்தியாவின் ஜோதி, சர்பானி நந்தா இம்முறையும் பங்கேற்கின்றனர். இவர்களை தவிர, ஆஷா ராய், சாரதா நாராயணா, மெர்லின் கே ஜோசப், ஷாந்தினி ஆகியோரும் விளையாடுகின்றனர்.

இதுகுறித்து ஜோதி கூறுகையில், ‘‘கிளாஸ்கோ காமன்வெல்த்தில் பதக்கம் வெல்வதே இலக்கு. இம்முறை தேசிய சாதனையை (44.43 வினாடி) முறியடிக்க திட்டமிட்டுள்ளோம். தேர்வாகி உள்ள 6 வீராங்கனைகளும் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மொழியால் வேறுபட்டுள்ளோம். ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து இருப்பதால், சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது,’’ என்றார்.

இந்திய அணியின் உக்ரைன் பயிற்சியாளர் டிமிட்ரி கூறுகையில், ‘‘ஜமைக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, ஆஸ்திரேலியாவில் இருந்து வீராங்கனைகள் பங்கேற்பதால், இம்முறை 4*100 மீ., தொடர் ஓட்டம் கடினமானது. கடந்த 45 நாட்களாக நடந்த பயிற்சி முகாமில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான முறையில் தயாராகினர். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய நட்சத்திரங்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். இம்முறை தேர்வு செய்யப்பட்டுள்ள வீராங்கனைகள் மிகவும் திறமையானவர்கள்,’’ என்றார்.

இதுகுறித்து சாரதா கூறுகையில்,‘‘இம்முறை தேர்வு செய்யப்படுள்ள 6 வீராங்கனைகளுக்கும் 2 முதல் 3 வயது வித்தியாசமே உள்ளது. தினமும் 6 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், கருத்துகளை பரிமாறிக் கொள்வதில் எவ்வித சிக்கலும் இல்லை,’’என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Wed Jul 23, 2014 3:24 pm

சாதிக்குமா இந்தியா: கிளாஸ்கோவில் கடின சவால்

கிளாஸ்கோ: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காமன்வெல்த் விளையாட்டு இன்று ஆரம்பமாகிறது. தடகளம், நீச்சல், துப்பாக்கி சுடுதல், ஹாக்கி, பாட்மின்டன் என அனைத்து வகையான ஆட்டங்களையும் 11 நாட்களுக்கு உற்சாகமாக கண்டு களிக்கலாம்.  கடந்த முறை டில்லியில் நடந்த போட்டியில், இரண்டாம் இடம் பெற்ற இந்தியாவுக்கு இம்முறை கடின சவால் காத்திருக்கிறது. நமக்கு சாதகமான  டென்னிஸ், வில்வித்தை, மல்யுத்தத்தில் ‘கிரேக்கோ ரோமன்’ பிரிவு நீக்கம், துப்பாக்கி சுடுதலில் பதக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது போன்றவை பெரும் பின்னடைவு.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டு (ஜூலை 23–ஆக.,3) நடக்க உள்ளது. இதில், 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, திறமை நிரூபிக்க உள்ளனர். இந்தியா சார்பில் 14 வகையிலான போட்டிகளில் மொத்தம் 215 பேர் பங்கேற்கின்றனர்.

செய்னா, சானியா இல்லை:

டென்னிஸ் நீக்கப்பட்டதால், சானியாவை பார்க்க முடியாது. காயம் அடைந்ததால், செய்னா நேவல் ஆட்டத்தையும் காண இயலாது. இவரது இழப்பை, இளம் பாட்மின்டன் வீராங்கனை சிந்து ஈடுசெய்வார் என எதிர்பார்க்கலாம்.

இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா நம்பிக்கை தருகின்றனர்.

மல்யுத்தம் சிக்கல்:

மல்யுத்த போட்டியில் நம்மவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த ‘கிரேக்கோ ரோமன்’ பிரிவு நீக்கப்பட்டதால், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘பிரீஸ்டைல்’ பிரிவில் 2012 ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சுஷில் குமார், வெண்கலம் கைப்பற்றிய யோகேஷ்வர் தத் மற்றும் பெண்கள் பிரிவில் பபிதா குமாரி, ஜோதி உள்ளிட்ட 14 பேர் பங்கேற்பதால்,  குறைந்தது 2 தங்கம் கிடைக்கலாம்.

பிந்த்ரா எதிர்பார்ப்பு:

துப்பாக்கிசுடுதல் போட்டியில் கடந்தமுறை வழங்கப்பட்ட 44 தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை இம்முறை 19 ஆக குறைக்கப்பட்டது இந்தியாவுக்கு பேரிழப்பு. 2010ல் துப்பாக்கி சுடுதலில் 14 தங்கம், 11 வெள்ளி, 5 வெண்கலம் என, மொத்தம் 30 பதக்கங்கள் கிடைத்தன.

இம்முறை இவ்வளவு பதக்கம் கிடைப்பது சந்தேகமே. ‘ஒலிம்பிக் நாயகன்’ அபினவ் பிந்த்ரா, லண்டன் ஒலிம்பிக்கில் (2012) வெள்ளி கைப்பற்றிய விஜய் குமார், வெண்கலம் வென்ற ககன் நரங் இருப்பது நல்ல விஷயம். பெண்கள் பிரிவில் ஹீனா சித்து பதக்கத்தை நிச்சயமாக குறி வைக்கலாம்.

தீபிகா உறுதி:

ஸ்குவாஷ் போட்டியில் அசத்த, தீபிகா பல்லீகல், ஜோஷ்னா சின்னப்பா, சவுரவ் கோஷால் உள்ளதால், பதக்கம் உறுதி. குத்துச்சண்டை கோதாவில் மிரட்ட தேவேந்திரோ சிங், ஷிவா தபா, விஜேந்தர் சிங், தினேஷ் குமார்

தயாராக உள்ளனர். பெண்கள் பிரிவில், ஒலிம்பிக் நட்சத்திரம் மேரி கோமை வென்று அதிர்ச்சி அளித்த பிங்கி ஜாங்க்ரா மீது எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

பளுதுாக்குதலில் விகாஸ் தாகூர், சுகன் தேவ், சஞ்சிதா சானு, மீனா குமாரி மிரட்டலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Wed Jul 23, 2014 3:24 pm

ஹாக்கி சவால்:

குழுப் போட்டிகளில் சர்தார் சிங் தலைமையிலான ஹாக்கி அணி தான் கைகொடுக்க வேண்டும். கடந்த முறை வெள்ளி வென்ற இந்திய அணியினர் இம்முறை ஆஸ்திரேலியாவின் கடும் சவாலை சமாளித்தால், தங்கம் வெல்லலாம். 

தடகளத்தில் விகாஸ் கவுடா(வட்டு எறிதல்), டின்டு லுாக்கா, பூவம்மா, அஷ்வினி அடங்கிய பெண்கள் (4*400 தொடர் ஓட்டம்) அணியினர் பதக்கம் வெல்ல வாய்ப்பு உண்டு.

சர்வதேச அளவில், ஜமைக்காவின் ‘மின்னல் வேக’ வீரரான உசைன் போல்ட்,  4*400 மீ., தொடர் ஓட்டத்தில் மட்டும் கலந்து கொள்கிறார். இதே போல ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி–ஆன்–பிரேசர் பிரைசும் 4*100 தொடர் ஓட்டத்தில் பங்கேற்கிறார். இவர்களை தவிர, பல தடகள நட்சத்திரங்களும் தடம் பதிக்க காத்திருப்பதால், ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகள் நிகழ்த்தப்படலாம்.

கோலாகல துவக்கவிழா

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுக்கு அடுத்து மிகப்பெரிய போட்டி காமன்வெல்த். இதை இரண்டாம் ராணி எலிசபெத், இன்று முறைப்படி துவக்கி வைக்கிறார்.

மொத்தம் 2000 நடன கலைஞர்கள் பங்கேற்று அசத்த உள்ளனர். மூன்று மணி நேரம் நடக்கும் துவக்க விழாவில், கிராம்மி விருது வென்ற பிரபல பாடகர் ராடு ஸ்டீவர்ட், ஸ்காட்லாந்து பாடகி சூசன் பாய்ல் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.

காமன்வெல்த் ஜோதி

கிளாஸ்கோ காமன்வெல்த் ஜோதி ஓட்டம் கடந்த 2013, அக்., 9ல் பக்கிங்காம் அரண்மனையில் துவங்கியது. பின், 14ம் தேதி இந்தியா வந்த இந்த ஜோதி, ஆக்ரா வழியாக டில்லி இந்தியா கேட் பகுதிக்கு வந்தது.

இந்தியா இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் பங்கேற்கும் 71 நாடுகளில் 1 லட்சத்து, 90 ஆயிரம் கி.மீ., துாரம், இந்த ஜோதி பயணித்து, 288 நாட்களுக்குப் பின், துவக்கவிழா நடக்கும் கிளாஸ்கோ மைதானத்துக்கு இன்று வருகிறது.

கிளாஸ்கோவை சேர்ந்த வில்லியம் மிட்சல் என்பவரது தலைமையிலான குழு இந்த ஜோதியை வடிவமைத்தது. 2 கி.கி., எடைக்கு குறைவான இது, டைட்டானியம், கிரானைட் மற்றும் மரத்தினால் ஆனது.

 ஒளி ஊடுருவிச் செல்லும் சிலிண்டர் வடிவ மேற்பகுதியின் மையத்தில் ராணி சார்பில் வழங்கப்பட்ட செய்தி அச்சிடப்பட்டுள்ளது. இதிலுள்ள எல்.இ.டி., விளக்குகள்  ஒ ளிரும் போது தான் இந்த செய்தியை படிக்க முடியும். தவிர, துவக்க விழா நடக்கும் அந்த நிமிடம் வரை இதில் என்ன செய்தி உள்ளது என்பதை படிக்க முடியாதபடி அச்சிட்டுள்ளது கூடுதல் விஷேசம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Wed Jul 23, 2014 3:25 pm

சின்னம்

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியின் அதிகாரபூர்வ சின்னமாக கார்ட்டூன் வடிவ மனிதன் ‘கிளைடு’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை தேர்வு செய்ய போட்டி நடந்தது. இதில், 12 வயது சிறுவன் பேத் கில்மர் வடிவமைத்த ‘கிளைடு’ தேர்வானது.

லோகோ

20வது காமன்வெல்த் போட்டியின் லோகாவின் நேரம், அளவீடு மற்றும் டேட்டாவை என, மூன்று முக்கிய குறிப்புகளை உள்ளடக்கி உள்ளது.

இதன் வெளிப்புற வட்டம் (சிவப்பு) 20வது காமன்வெல்த் போட்டியை குறிக்கும். ஆரஞ்சு நிறத்தினாலான முழுமை பெறாத அடுத்த வட்டம் 17 போட்டிகள் நடப்பதையும், நீல நிறத்தில் உள்ள மற்றொரு அரை வளையம், 11 நாட்கள் போட்டி நடப்பதையும் குறிக்கிறது.

நடுவில் ‘ஜி’ வடிவம், போட்டி நடக்கும் கிளாஸ்கோவின் துவக்க எழுத்தை குறிக்கும் வகையில் உள்ளது. இந்த நகரத்தை ‘ டியர் கிரீன் பிளேஸ்’ என்றழைப்பர். அதாவது பசுமை நிறைந்த நகரம் என்பதால், இந்த ‘ஜி’ என்ற எழுத்து பச்சை நிறத்தில் இருக்கும்.

பதக்க விவரம்

காமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் தலா 100 கிராம் எடை கொண்டது.

இவற்கை ஜோனாதன் மாத்யூ போய்டு, 29, தலைமையிலான 11 பேர் கொண்ட குழு தயாரித்தது.

20வது காமன்வெல்த் போட்டியில், 261 பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில், தங்கம், வெள்ளி, வெண்கலம் என, மொத்தம் 1,380 பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Wed Jul 23, 2014 3:25 pm

கிளாஸ்கோ போவோமா

ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய நகரம்தான் கிளாஸ்கோ. இங்கு அதிகமானோர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். கட்டுமானத்துறை, கப்பல்கட்டும்துறைகள் கொடிகட்டிப்பறக்கின்றன. பிரிட்டனின் ஐந்தாவது மிகப்பெரிய விமானநிலையம் இங்குதான் உள்ளது. கிளாஸ்கோவில் அதிக வெப்பம், அதிக பனி என கலந்தே காணப்படுகிறது. சில நேரத்தில் பிரிட்டனுடன் ஒப்பிடும்போது, இங்கு வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும். ஜூலை மாதத்தில் வெப்பத்தின் தாக்கம் துவங்கும். இன்று துவங்கும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம்.

முக்கியமான இடங்கள்:

ஹன்டேரியன் அருங்காட்சியகம்:

இது 1807ல் துவங்கப்பட்ட பழமையான அருங்காட்சியகம். 16,17ம் நுாற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்கள், இங்குள்ள பல்கலைகழக மாணவர்கள் வரைந்தவை உள்ளிட்ட பல வகையானவை இங்கு இடம்பெற்றுள்ளன. கிளாஸ்கோவில் உள்ள முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று.

மிட்சல் நுாலகம்:

கிளாஸ்கோவில் உள்ள இந்த நுாலகம் 1877ல் துவங்கப்பட்டது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்த மிகப்பெரிய நுாலகம் இது. பல லட்ச கணக்கான புத்தகத்தை கொண்டுள்ளது.

லண்டன் டூ டில்லி

லண்டனில், 1934ல் நடந்த இரண்டாவது காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா அறிமுகமானது. மல்யுத்த வீரர் ரசித் அன்வர், 74 கி.கி., வெல்டர் வெயிட் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினார். இது, காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம்.

* கடந்த 1958 ம் ஆண்டு வேல்சில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில், இந்தியாவின் மில்கா சிங் (400 மீ., ஓட்டம்), லீலா ராம் சங்வான் (மல்யுத்தம், ஹெவிவெயிட்) ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். இது காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா கைப்பற்றிய முதல் தங்கமாக அமைந்தது.

* கடந்த 2010ல் நடந்த தொடரில், இந்தியாவுக்கு 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் உட்பட 101 பதக்கங்கள் கிடைத்தது. இதன்மூலம் காமன்வெல்த் வரலாற்றில், முதன்முறையாக 100 பதக்கங்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்தது. இதற்கு முன், 2002ல் 69 பதக்கங்களும், 2006ல் 49 பதக்கங்களும் கிடைத்தன.

* கடந்த 2010ல் 101 பதக்கங்கள் வென்ற இந்தியாவுக்கு அதிகபட்சமாக துப்பாக்கி சுடுதல் மூலம் 30 பதக்கங்கள் (14 தங்கம், 11 வெள்ளி, 5 வெண்கலம்) கிடைத்தது. அதன்பின், மல்யுத்தம் (19), தடகளம் (12), வில்வித்தை (8), பளுதுாக்குதல் (8), குத்துச்சண்டை (7) போட்டிகளில் அதிக பதக்கங்கள் கிடைத்தன. துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங், அதிகபட்சமாக 4 தங்கம் வென்றார். மற்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்களான ஓம்கார் சிங் (3 தங்கம், ஒரு வெள்ளி), விஜய் குமார் (3 தங்கம், ஒரு வெள்ளி) ஆகியோர் அதிக பதக்கம் வென்றனர்.

* இதுவரை 15 முறை காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்றுள்ள இந்தியா, 141 தங்கம், 123 வெள்ளி, 104 வெண்கலம் உட்பட 372 பதக்கங்கள் பெற்றுள்ளது. அதிக பதக்கம் வென்ற நாடுகள் பட்டியலில் 4வது இடம் பிடித்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Wed Jul 23, 2014 3:26 pm

துளிகள்...

* 1958 ம் ஆண்டு வேல்சில் உள்ள கார்டிப்பில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தான், முதன் முதலாக காமன்வெல்த் ஜோதி அறிமுகப்படுத்தப் பட்டது.

* 1958 ம் ஆண்டு காமன்வெல்த்தில், ஆஸ்திரேலியாவின் ஜான் கொன்ராட்ஸ், 440 யார்டு "பிரீ ஸ்டைல்' நீச்சல் போட்டியில், தங்கம் வென்றார். அதே ஆண்டு இவரது சகோதரியான இஸ்லா கொன்ராட்சும் இதே பிரிவில் தங்கம் வென்றார். அண்ணன், தங்கை இணைந்து ஒரே காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சம்பவம், இதுவரை ஒரு முறை மட்டுமே நடந்துள்ளது.

* கடந்த 1950 ம் ஆண்டு முதல் 1970 வரை நடந்த காமன்வெல்த் போட்டிகளில், வாள் சண்டையும் இடம் பெற்றிருந்தது. இக்கால கட்டத்தில் இங்கிலாந்தின் ஹென்றி வில்லியம் 9 தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

* காமன்வெல்த் நீச்சலில், 500 பதக்கங்களுக்கு மேல் வென்ற ஒரே அணி ஆஸ்திரேலியா. இதுவரை 237 தங்கம், 170 வெள்ளி, 150 வெண்கலம் உட்பட மொத்தம் 557 பதக்கங்களை வென்றுள்ளது.

* 1982 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடந்த காமன்வெல்த் 200 மீ., ஓட்டத்தில் அம்பயரின் தீர்ப்பால் சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து இங்கிலாந்தின் மைக் மெக்பெர்லேன், ஸ்காட்லாந்தின் ஆலன் வெல்ஸ் இருவருக்கும் தங்கப்பதக்கம் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

* நியூசிலாந்தின் ஆக்லாந்தில் 1990 ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில், வங்கதேசம் முதல் தங்கம் வென்றது. இந்த அணியின் துப்பாக்கி சுடும் வீரர்களான , அடீர் அர் ரஹ்மான், அப்டஸ் சட்டா ஜோடி ஏர் பிஸ்டல் பிரிவில் சாதித்தனர்.

* மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்த 16 வது காமன்வெல்த் போட்டியில் முதன் முதலாக கிரிக்கெட், ஹாக்கி, நெட் பால், ரக்பி உள்ளிட்ட அணி விளையாட்டுகள் இடம் பிடித்தன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Wed Jul 23, 2014 3:26 pm

நான்கு முறை

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை அதிக முறை (4) நடத்திய நாடுகள் வரிசையில், ஆஸ்திரேலியா (1938, 62, 82, 2006), கனடா (1930, 54, 78, 94) முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. வரும் 2018ல் நடக்கவுள்ள 21வது காமன்வெல்த் விளையாட்டை நடத்தும் வாய்ப்பு 5வது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்துள்ளது.

* நியூசிலாந்து (1950, 74, 90) மூன்று முறை நடத்தியது. ஸ்காட்லாந்து (1970, 86), இங்கிலாந்து (1934, 2002) தலா 2 முறை நடத்தின. இம்முறை வாய்ப்பு பெற்றுள்ள ஸ்காட்லாந்து 3வது முறையாக நடத்துகிறது.

* இந்தியா (2010), மலேசியா (1998), ஜமைக்கா (1966), வேல்ஸ் (19580 நாடுகள் தலா ஒரு முறை நடத்தின.

மூன்று பிரிவு

காமன்வெல்த்தில் இடம் பெற்றுள்ள விளையாட்டுகள், நிரந்தர போட்டிகள் (கோர் ஸ்போர்ட்ஸ்), விருப்ப போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட போட்டிகள் என  மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

* குத்துச்சண்டை, தடகளம், நீச்சல், பளுதுாக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நிரந்தர போட்டிகள் பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு காமன்வெல்த்திலும் இப்போட்டிகள் கட்டாயம் இடம் பெறும்.

* தொடரை நடத்தும் நாடுகள், விருப்ப போட்டிகளை சேர்த்துக் கொள்ளலாம். கடந்த முறை டில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் வில்வித்தை, டென்னிஸ், இந்தியாவின் விருப்ப போட்டிகளாக சேர்க்கப்பட்டன.

* அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளை, காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு (சி.ஜி.எப்.,) மட்டுமே முடிவு செய்யும். கிரிக்கெட்டை, சி.ஜி.எப்., அங்கீகாரம் செய்ததால், 1998ல் மலேசியாவில் நடந்த காமன்வெல்த்தில் இடம் பெற்றது. பில்லியர்ட்ஸ், கால்பந்து, கோல்ப், ரக்பி லீக், வாலிபால், வாட்டர் போலோ உள்ளிட்டவை அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளின் கீழ் உள்ளன. இதுவரை ஒரு முறை கூட இப்போட்டிகள் காமன்வெல்த்தில் இடம் பெறவில்லை.

ஆஸி., ஆதிக்கம்

காமன்வெல்த் விளையாட்டில், ஆஸ்திரேலிய நட்சத்திரங்கள் அசத்துகின்றனர். இதுவரை நடந்த 19 போட்டிகளில், 12 முறை பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது ஆஸ்திரேலியா. இங்கிலாந்து 6, கனடா ஒரு முறை முதலிடம் பிடித்தன.

* இதுவரை நடந்த 19 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், 804 தங்கம், 672 வெள்ளி, 604 வெண்கலம் உட்பட 2080 பதக்கங்களை பெற்று ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் இங்கிலாந்து (1836 = 611 தங்கம், 612 வெள்ளி, 613 வெண்கலம்), கனடா (1392 = 437 தங்கம், 461 வெள்ளி, 494 வெண்கலம்) நாடுகள் உள்ளன. இப்பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. இதுவரை 15 முறை காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்ற இந்தியா, 141 தங்கம், 123 வெள்ளி, 108 வெண்கலம் உட்பட 372 பதக்கங்கள் வென்றது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Wed Jul 23, 2014 3:27 pm

அனுபவ அணிகள்

ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் இதுவரை நடந்த 19 காமன்வெல்த் போட்டிகளிலும் பங்கேற்ற பெருமை பெற்றுள்ளன.

தங்கத்தின் தங்கங்கள்

காமன்வெல்த் விளையாட்டில் அதிக தங்கப் பதக்கங்கள் வென்ற வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் இயான்

தோர்ப் பெற்றுள்ளார். இவர் 1998 (4 தங்கம்) மற்றும் 2002 (6 தங்கம், 1 வெள்ளி) ம் ஆண்டு நடந்த போட்டிகளில் இவர் 10 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி உட்பட 11 பதக்கங்கள் வென்றுள்ளார்.

* காமன்வெல்த்தில் அதிக தங்கம் வென்ற வீராங்கனையாக திகழ்கிறார் ஆஸ்திரேலியாவின் சுசி ஓ நெயில். இவர், 1990 (1 தங்கம், 1 வெள்ளி), 1994 (3 தங்கம், 2 வெள்ளி), 1998 (6 தங்கம், 2 வெள்ளி) ம் ஆண்டில் நடந்த போட்டிகளில், 10 தங்கம், 5 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

பதக்க வேட்டை

காமன்வெல்த் போட்டிகளில் அதிக பதக்கங்கள் வென்றவர் ஆஸ்திரேலிய துப்பாக்கி சுடுதல் வீரர் பிலிப் ஆதம்ஸ். 1982 (2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம்), 1986 (1 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம்), 1990 (3 தங்கம், 2 வெள்ளி), 1994 (1 தங்கம், 2 வெள்ளி), 2002 (1 வெள்ளி) ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் 7 தங்கம், 9 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 18 பதக்கங்களை தன்வசப்படுத்தி உள்ளார்.

இளம் வீராங்கனை

குறைந்த வயதில் (14), காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், தங்கம் வென்றவர் ஆஸ்திரேலியாவின் ஜென்னி டர்ரால். இவர், கடந்த 1974 ம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த போட்டியில், 400 மீ., "பிரீ ஸ்டைல்' நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்.

* டில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் (2010) பங்கேற்ற கென்ய ஸ்குவாஷ் வீராங்கனை காலிகா நிம்ஜி (12 வயது), காமன்வெல்த் அரங்கில் மிகக் குறைந்த வயதில் பங்கேற்கும் வீராங்கனை என்ற பெருமை பெற்றார்.

‘சீனியர்’ வீரர்

ஸ்காட்லாந்தை சேர்ந்த ‘லான் பால்’ வீரர் வில்லி உட், அதிக முறை காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றக வீரர் ஆவார். இவர், இதுவரை 8 முறை (1974, 1978, 1982, 1990, 1994, 1998, 2002, 2010) பங்கேற்றுள்ளார். இவர் 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வென்றுள்ளார்.

* இவர், டில்லி காமன்வெல்த்தில் பங்கேற்றதன் மூலம், அதிக வயதில் (72 வயது) காமன்வெல்த் போட்டியில் விளையாடிய வீரர் என்ற பெருமை பெற்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Wed Jul 23, 2014 3:27 pm

இது வரலாறு...

பிரிட்டிஷ் பேரரசின் ஆட்சியின் கீழ் முன்பு இருந்த உறுப்பு நாடுகளை, ஒரு விளையாட்டின் மூலம் ஒருங்கிணைக்கும் முயற்சியாகத் தான், காமன்வெல்த் போட்டி உருவானது. முதன் முதலில் கனடாவின் ஹாமில்டனில் 1930ல் நடந்தது. மொத்தம் 11 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்றன. தடகளம், குத்துச் சண்டை, லான் பால், படகு வலித்தல், நீச்சல் மற்றும் மல்யுத்தம் உள்ளிட்ட ஆறு போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டன. அனைத்திலும் ஆண்கள் தான் பங்கேற்றனர். நீச்சல் போட்டியில் மட்டும் பெண்கள் பங்கேற்றனர். இதில், இங்கிலாந்து 60 பதக்கங்களுடன் (25 தங்கம், 22 வெள்ளி, 13 வெண்கலம்) முதலிடத்தை தட்டிச் சென்றது.

முதன் முறை

லண்டனில் (1934) 2 வது காமன்வெல்த் போட்டிகள் நடந்தன. இதில், முதன் முறையாக இந்தியா பங்கேற்றது. மல்யுத்த வீரர் ரசித் அன்வர், 74 கி.கி., வெல்டர் வெயிட் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினார். இது, காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம்.

வந்தது உலக போர்

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி, இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 46ல் நடக்கவில்லை. 1938க்கு பின் 1950ல் தான் 4வது காமன்வெல்த் போட்டி நடந்தது.

தங்கம் தந்த மில்கா

கடந்த 1958 ம் ஆண்டு வேல்சில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில், இந்தியாவின் மில்கா சிங் (400 மீ., ஓட்டம்), லீலா ராம் சங்வான் (மல்யுத்தம், ஹெவிவெயிட்) ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். இது காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா கைப்பற்றிய முதல் தங்கமாக அமைந்தது.

ஆசியாவில் ஆரம்பம்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், 1998ல் முதன்முறையாக ஆசிய கண்டத்தில் காமன்வெல்த் விளையாட்டு  நடத்தப்பட்டது. அதன்பின் 2010ல் இந்திய தலைநகர் டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு நடந்தது.

எத்தனை பெயர்

காமன்வெல்த் விளையாட்டு, பல பெயர் மாற்றங்களை கொண்டு நடத்தப்பட்டது. 1930 முதல் 1950 வரை நடந்த நான்கு போட்டிகள், பிரிட்டிஷ் பேரரசு விளையாட்டுகள் என அழைக்கப்பட்டன. அதன்பின் 1954 முதல் 1966 வரையிலான போட்டிகள், பிரிட்டிஷ் பேரரசு மற்றும் காமன்வெல்த் போட்டிகள் என அழைக்கப்பட்டன. 1970 மற்றும் 1974 ம் ஆண்டு நடந்த இரு போட்டிகள், பிரிட்டிஷ் காமன் வெல்த் விளையாட்டுகள் என அழைக்கப்பட்டன. 1978 ம் ஆண்டு முதல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என அழைக்கப்படுகிறது.

புறக்கணிப்பு

அரசியல் பிரச்னைகளின் காரணமாக காமன்வெல்த் போட்டியை, பல்வேறு நாடுகள் புறக்கணிப்பு செய்த சம்பவங்களும் நடந்து உள்ளன. நியூசிலாந்து, நிறவெறி கொண்ட தென் ஆப்ரிக்காவுடன் கொண்ட நெருக்கத்தை காரணமாகக் காட்டி, 1978ம் ஆண்டு போட்டியை, நைஜீரியா புறக்கணித்தது. முன்னாள் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த மார்க்ரெட் தாட்சர், தென் ஆப்ரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்ததை கண்டித்து, ஆப்ரிக்காவின் 32 நாடுகள், கரீபியன் தீவுகள் மற்றும் ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் 1986 ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடந்த காமன்வெல்த் போட்டியை புறக்கணித்தன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Wed Jul 23, 2014 3:28 pm

பிரதமர் மோடி வாழ்த்து

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் இன்று துவங்கும் காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்கும், இந்திய நட்சத்திரங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மோடி ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘கிளாஸ்கோவில் இன்று துவங்கும் காமன்வெல்த் விளையாட்டில், இந்திய நட்சத்திரங்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள். ஒவ்வொருவரும் முழுத்திறமையை வெளிப்படுத்தி, இந்தியாவுக்கு பெருமை தேடித்தருவார்கள் என நம்புகிறேன். காமன்வெல்த் விளையாட்டின் மூலம், பங்கேற்கும் ஒவ்வொரு நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் அதிகரிக்கும்,’’ என தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Wed Jul 23, 2014 3:41 pm

இந்தியா உள்பட 71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு இன்று தொடக்கம்

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டு கிடந்த தேசங்கள்ம் மற்றும் இங்கிலாந்தின் ஆட்சி அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து பங்கேற்கும் போட்டித்திருவிழா தான் காமன்வெல்த் விளையாட்டு. நிறைய நாடுகள் களம் இறங்கி உலகின் கவனத்தை ஈர்ப்பதில் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுகளுக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டாக இது கருதப்படுகிறது. இதுவும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடத்தப்படுகிறது. 1930–ம் ஆண்டு தொடங்கிய இந்த போட்டி கடைசியாக 2010–ம் ஆண்டு டெல்லியில் அரங்கேறியது.

இந்த நிலையில் 20–வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கா நகரில் இன்று(புதன்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 3–ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை உள்பட 71 நாடுகளை சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 17 வகையான விளையாட்டுகளுக்கு 261 தங்கப்பதக்கங்கள் வழங்கப்படுகிறது.

215 இந்தியர்

இந்திய தரப்பில் 215 பேர் கொண்ட விளையாட்டு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் தடகளம், ஆக்கி, நீச்சல், குத்துச்சண்டை, மல்யுத்தம், பேட்மிண்டன், சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, லான் பவ்ல்ஸ், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல் ஆகிய 14 வகையான விளையாட்டுகளில் கலந்து கொள்கிறார்கள். நெட்பால், ரக்பி செவன்ஸ், டிரையத்லான் ஆகிய பிரிவுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்ளவில்லை.

டெல்லி காமன்வெல்த்தில் ஊழல் பிரச்சினை தலைவிரித்தாடிய போதிலும் களத்தில் இந்திய வீரர்களின் செயல்பாடு பிரமிக்க வைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக 39 தங்கம் உள்பட 101 பதக்கங்களை அள்ளி குவித்து வரலாறு படைத்தது. ஒரு காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா சேகரித்த அதிகபதக்கங்கள் இது தான்.

முதல் 3 இடங்கள் இலக்கு

ஆனால் அதே போன்று இந்த தடவையும் பதக்கங்களை அள்ளுவது என்பது கடினமான விஷயம். ஏனெனில் இந்தியாவுக்கு சாதகமான சில பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. வில்வித்தை மற்றும் டென்னிஸ் போட்டி இந்த முறை கிடையாது. இவற்றின் மூலம் இந்தியா கடந்த காமன்வெல்த்தில் 12 பதக்கங்களை வென்றிருந்தது. மல்யுத்தம் விளையாட்டில் இந்தியர்கள் முத்திரை பதிக்கக்கூடிய ‘கிரேக்கோ–ரோமன்’ பிரிவு கழற்றிவிடப்பட்டுள்ளது. இதே போல் 2010–ம் ஆண்டு காமன்வெல்த்தில் துப்பாக்கி சுடுதலில் கடந்த முறை இந்தியா 30 பதக்கங்களை கைப்பற்றியது. இந்த முறை துப்பாக்கி சுடுதலில் 44–ல் இருந்து 19 பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. தவிர பேட்மிண்டன் புயல் சாய்னா நேவால் காயத்தால் விலகி விட்டார். இதனால் இந்த தடவை இந்தியாவின் பதக்க எண்ணிக்கை முன்பு போல் இருக்காது. என்றாலும் பதக்கப்பட்டியலில் குறைந்தது 3–வது இடத்தையாவது பிடித்து விட வேண்டும் என்று இந்தியா இலக்காக கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா(417 பேர் அணி) அல்லது இங்கிலாந்து (416 பேர் அணி) ஆகிய நாடுகள் முதல் இரு இடங்களை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

யார்–யாருக்கு வாய்ப்பு?

இந்திய தரப்பில் மல்யுத்த வீரர்கள் சுஷில்குமார், யோகேஷ்வர்தத், துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற அபினவ் பிந்த்ரா, விஜய்குமார், ககன்நரங் மற்றும் மனவ்ஜித் சிங் சந்து, ராஹி சர்னோபாத், ஹீனா சித்து, ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சவுரவ் கோஷல், டேபிள் டென்னிசில் சரத் கமல், சவும்யாஜித் கோஷ், பேட்மிண்டனில் பி.வி.சிந்து, காஷ்யப், குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங், ஷிவ தாபா, மனோஜ்குமார், சரிதாதேவி, தினேஷ் குமார், பளுதூக்குதலில் நடப்பு சாம்பியன் ரவிகுமார், சஞ்சிதா சானு உள்ளிட்டோர் பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ளது.

மற்றபடி உலக நட்சத்திரங்கள் என்று பார்த்தால், உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் ஜமைக்காவின் உசேன் போல்ட், இங்கிலாந்தின் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் மோ பாரா ஆகியோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இன்று தொடக்க விழா

இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு வண்ணமயமான தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் 288 நாட்களில் 1 லட்சத்து 90 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்த காமன்வெல்த் ஜோதி (குயின் பேட்டன்) இறுதி கட்ட தொடர் ஓட்டமாக தொடக்க விழா நடைபெறும் செல்டிக் பார்க் மைதானத்திற்குள் கொண்டு வரப்படும். இதன் பின்னர் இங்கிலாந்து ராணி எலிசபெத், வாழ்த்துரை செய்தியை வாசித்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார்.

71 நாடுகளின் அணிவகுப்பும் தொடக்க விழாவில் இடம் பெறும். இதில் இந்திய அணிக்கு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய்குமார் தேசிய கொடியை ஏந்த இருக்கிறார். தொடக்க நாள் அன்று போட்டி ஏதும் கிடையாது. 24–ந்தேதி இருந்து போட்டிகள் தொடங்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Wed Jul 23, 2014 3:41 pm

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை வென்ற பதக்கங்கள்

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இநதிய அணி இதுவரை 141 தங்கம், 123 வெள்ளி, 108 வெண்கலம் என்று மொத்தம் 372 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 1942 மற்றும் 1946–ம் ஆண்டுகளில் இரண்டாம் உலக போர் காரணமாக போட்டி நடைபெறவில்லை. 1930, 1950, 1962, 1986–ம் ஆண்டுகளில் இந்திய அணி கலந்து கொள்ளவில்லை. ஆண்டு வாரியாக இந்தியா வென்ற பதக்கங்கள் விவரம் வருமாறு:–

ஆண்டு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் பிடித்த இடம்

1934     0     0     1     1     12

1938     0     0     0     0     0

1954     0     0     0     0

1958     2     1     0     3     8

1966     3     4     3     10     8

1970     5     3     4     1    2     6

1974     4     8     3     1    5     6

1978     5     5     5     1    5     6

1982     5     8     3     1    6     6

1990     13     8     11     32     5

1994     6     11     7     24     6

1998     6     11     7     24     6

1998     7     10     8     25     7

2002     30     22     13     69     4

2006     22     17     10     49     4

2010     39     26     36     101     2
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Wed Jul 23, 2014 3:50 pm

இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம்


காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத்தந்தவர், மல்யுத்த வீரர் ரஷித் அன்வர். சுதந்திரம் அடைவதற்கு முன்பாக 1934–ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்ட ரஷித் அன்வர், மல்யுத்தத்தில் பிரீஸ்டைல் வெல்டர்வெயிட் பிரிவில் வெண்கலப்பதக்கத்தை வென்றார். 73–வது வயதில் மரணம் அடைந்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Wed Jul 23, 2014 3:50 pm

மலேசிய வீராங்கனைக்கு வந்த சோதனை

டெல்லியில் 2010–ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற மலேசிய துப்பாக்கி சுடுதல் நூர் அயூனி பர்ஹானா அப்துல் ஹலிம், ஸ்காட்லாந்து காமன்வெல்த் போட்டியிலும் சாதிக்கும் துடிப்புடன் புறப்பட்டார். ஆனால் வழியில் இப்படியொரு சோதனையை வரும் என்று அவர் எதிர்பார்த்து இருக்கமாட்டார்.

மலேசியாவில் இருந்து ஸ்காட்லாந்துக்கு புறப்பட்ட அவர் லண்டன் விமான நிலையத்திற்கு வந்த போது தனது உடைமைகளை தொலைத்து விட்டார். அதில் தான் அவர் துப்பாக்கி சுடுதலுக்கு பயன்படுத்த வேண்டிய ‘ஜாக்கெட்’ (துப்பாக்கி தோட்டா வைப்பது உள்ளிட்ட சகல வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு உடை) இருந்தது. மூன்று நாட்களாக தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. மலேசிய அணி நிர்வாகம் அவருக்கு வேறு ஜாக்கெட்டை தயார் செய்ய முயற்சித்தது. ஆனால் எதுவும் தனக்கு ஒத்து வராது. ஒரு ஜாக்கெட் எனக்கு சவுகரியமாக இருப்பதாக உணர 2 மாதங்கள் பிடிக்கும் கூறி விட்டார். போட்டிக்கான பெயரை பதிவு செய்வதற்கான கடைசி நாள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்து விட்டதால், வேறு வழியின்றி வேதனையுடன் காமன்வெல்த் போட்டியில் இருந்து விலக வேண்டியதாகி விட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Fri Jul 25, 2014 1:46 am

காமன்வெல்த் போட்டி 2014 : பளுதூக்குதலில் சஞ்சிதா குமுக்சம் தங்கப் பதக்கமும், சானு சாய்கோம் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்

ஸ்காட்லாந்து: ஸ்காட்லாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

மகளிருக்கான 48 கிலோ பளுதூக்குதலில் குமுக்சம் சஞ்சிதா தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

மகளிருக்கான 48 கிலோ ஜூடோ இறுதி போட்டியில் இந்தியாவின் சுஷீலா லிக்மாம்பம் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 60 கிலோ ஜூடோ இறுதி போட்டியில் இந்திய வீரர் நவ்ஜொட் சானா வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by பாலாஜி on Fri Jul 25, 2014 2:41 pm

வாழ்த்துகள் இருவருக்கும்  ..

இந்தொடரில் இந்தியா இன்னும் பல பதக்கங்கள் பெற்று சாதனை படைக்க வாழ்த்துகள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Sat Jul 26, 2014 1:22 am

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்: அபினவ் பிந்த்ரா அசத்தல்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். அபினவ் இறுதிச்சுற்றில் 205.3 புள்ளிகள் பெற்றார். 202.1 புள்ளிகள் பெற்ற வங்காளதேச வீரர் பாகி வெள்ளிப்பதக்கம் வென்றார். தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா இது தனக்கு கடைசி காமன்வெல்த் போட்டி என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் இந்தியாவுக்கு இன்று இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. 3 தங்கம், 4 வெள்ளி 2 வெண்கலம் என 9 பதக்கங்களை பெற்றுள்ள இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் நீடிக்கிறது.

17 பதக்கங்களுடன் இங்கிலாந்து முதலிடத்திலும், 15 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், 10 பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து 3-வது இடத்திலும் உள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Sat Jul 26, 2014 1:24 am

மகளிர் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிருக்கான பளு தூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை சந்தோஷி மட்சா வெண்கலப் பதக்கம் வென்றார்.

53 கிலோ பிரிவினருக்கான இந்த போட்டியில் பங்கேற்ற நைஜீரியாவை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி சிக்கா அமலஹா 196 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தையும், பப்புவா மற்றும் நியூ குனியா நாட்டை சேர்ந்த 2 குழந்தைக்கு தாயான டிக்கா டுவா 193 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்தோஷி மட்சா(20) 188 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதன்மூலம் இந்தியாவுக்கு இன்று இது வரை மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன. 3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களை பெற்றுள்ள இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் நீடிக்கிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Sat Jul 26, 2014 1:25 am

துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மலைக்கா கோயல் வெள்ளி வென்றார்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 2-வது நாளான இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் முதல்நிலை வீராங்கனை ஹீனா சித்து, மலைக்கா கோயல் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் மலைக்கா கோயல் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஹீனா சித்து 7-வது இடத்திற்கு பின்தங்கினார்.

இதேபோல் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் அபினவ் பிந்த்ரா, ரவிக்குமார் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இவர்களும் விரைவில் தங்கள் பதக்க வேட்டையை ஆரம்பிக்க உள்ளனர்.

முதல் நாளில் இந்தியாவுக்கு 7 பதக்கம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Sat Jul 26, 2014 1:26 am

இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் அபாரம்

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் அபாரமாக விளையாடி முன்னேறியிருக்கின்றன.

முதல் நாளில் நடைபெற்ற லீக் சுற்றில் வனுவாட்டு அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய ஆடவர் அணி இன்று இரண்டாவது சுற்றில் கயானாவை 3-0 என்ற கணக்கில் வென்றது. ஒற்றையர் பிரிவில் அந்தோணி அமல்ராஜ் கயானா வீரர் ஷாமார் பிரிட்டனை 11-4, 11-3, 11-3 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் இளம் வீரர் சவும்யஜித் கோஷ் 11-8, 11-5, 11-9 என்ற செட்கணக்கில் கிறிஸ்டோபர் பிராங்ளினை வென்றார்.

இரட்டையர் ஆட்டத்தில் சனில் சங்கர் ஷெட்டி-அமல்ராஜ் ஜோடி, பால் டேவிட்-பிராங்ளின் ஜோடியை 11-8, 11-6, 11-4 என்ற செட்கணக்கில் வீழ்த்தியது.

இதேபோல் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கென்யாவை வென்றது. பலோமி கட்டாக், மனிகா பத்ரா ஆகியோர் ஒற்றையர் பிரிவுகளிலும், அங்கிதா தாஸ்-பலோமி கட்டாக் ஜோடி இரட்டையர் பிரிவிலும் வெற்றி பெற்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Sat Jul 26, 2014 1:28 am

இந்திய ஹாக்கி அணி லீக் ஆட்டத்தில் வெற்றி

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெற்றிக் கணக்கை இன்று தொடங்கியது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் எளிதில் வென்றது.

உலகத் தரநிலையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, துவக்கம் முதலே பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வேல்ஸ் வீரர்களின் தடுப்பாட்டத்தை தவிடுபொடியாக்கிய இந்திய வீரர்கள் காமன்வெல்த் போட்டியில் முதல் புள்ளியை பெற்றுள்ளனர்.

பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் இந்திய வீரர் ரகுநாத் (20-வது நிமிடம்), ரூபிந்தர் பால் சிங் (42-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். 47வது நிமிடத்தில் குர்வீந்தர் சிங் பீல்டுகோல் அடித்தார். வேல்ஸ் தரப்பில் ஆண்ட்ரூ கார்னிக் 23-வது நிமிடத்தில் பீல்டு கோல் அடித்து அணிக்கு ஆறுதல் அளித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum